
Great Hindu Saint born in Tamil Nadu
Post No. 15,293
Date uploaded in London – 21 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வள்ளுவர் கண்டுபிடித்த சொல் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் !
பிறவிப்பிணி , பிறவிப் பெருங்கடல் என்ற சொற்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருத்திலிருந்து தமிழுக்கு வந்தவை; பவ சாகரம்,பவ ரோகம் என்பனவெல்லாம் கீதை, மஹாபாரதம் ஆதிசங்கரர் துதிகள், சங்கீத மும்மூர்த்தி கிருதிகள், கீர்த்தனைகளில் காணக்கிடக்கின்றன . ஆனால் பக்கா இந்துவான , சம்ஸ்க்ருத மன்னனான திருவள்ளுவன் கண்டுபிடித்த ஒரு சொல்லை நான் இதுவரை சம்ஸ்க்ருதத்தில் காணவில்லை ;உங்களில் எவரேனும் கண்டால் எனக்கு எழுத அன்புடன் வேண்டுகிறேன் . அது என்ன சொல்?
பிறப்பு அறுத்தல்
அதாவது பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு -பிறப்பு- இறப்பு – என்று நாம் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறோம்; இதை ஒரே வெட்டு வெட்டாக — அல்லது துண்டு துண்டாக- அறுக்க வேண்டும் என்கிறார் . இப்படி அறுத்தல், துண்டித்தல், வெட்டுதல் என்ற பொருளில் பிறவிப்பிணியை வள்ளுவர் ஒருவர்தான் அணுகியிருக்கிறார் .பிற்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதை மீண்டும் மீண்டும் பாடுகின்றனர். குறிப்பாக மாணிக்க வாசக ரின் திருவாசக சிவ புராணப் பாடலில் மாயப்பிறப்பு அறுப்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.
***

முதலில் வள்ளுவர் சொன்னதைக் காண்போம்.
துறவு அதிகாரம் திருக்குறள்
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.-345
பொருள்
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ
English Couplet 345:
To those who sev’rance seek from being’s varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.
Couplet Explanation:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
***
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்.-349
பொருள்
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும்.
English Couplet 349:
When that which clings falls off, severed is being’s tie;
All else will then be seen as instability.
Couplet Explanation:
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

Tamil Hindu Tiru Valluvar in Mauritius.
***
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலில் இந்தச் சொல் காணப்படுகிறது . ஆயினும் வள்ளுவர், அதற்கும் முன்னால் திருக்குறளை எழுதினார் என்று நம்புகிறோம்.
***
1. சிவபுராணம்- மாணிக்கவாசகர்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
……………………………
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
என்று ஒரே பாட்டில் 4 முறை சொல்லிவிட்டார் மாணிக்கவாசகர்
***
திருஞான சம்பந்தர் பாடிய முதல் திருமுறையில் திருவாரூர் பதிகத்தில்
1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள்
சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1.91.1
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 1.91.2
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 1.91.3
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ, நையும் வினைதானே. 1.91.4
பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே. 1.91.5
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே. 1.91.6
இதில் வியத்தகு ஒற்றுமை, இதையும் குறள் வடிவிலேயே சம்பந்தர் பாடியிருப்பதாகும் ; அவர் திருக்குறளை நன்கு அறிந்திருக்க வேண்டும்..
துறவறம் என்ற பகுதியில் வள்ளுவர் பிறப்பு அறுத்தல்
பற்றிப் பாடினார் சம்பந்தரும் துறவி என்றும் சொல்கிறார் .
****

திருமழிசை ஆழ்வார் பாசுரம்
காணிலும்மு ருப்பொலார்செ
விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி
டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும்
ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும் பிறப்பெனும்பி
ணக்கறுக்க கிற்றிரே. (69)
****
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்
நைமிசாரண்யம்
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன் பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1
**
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. (2) 1.8.9
****
பிறப்பு என்று சொல்லாவிடினும் பழவினையை அறுத்தாய் என்கிறார் திருநாவுக்கரசர்,
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 6
– திருப்பழனம் அப்பர்- நாலாம் திருமுறை

VALLUVAR AND HIS WIFE VASUKI.

இது போல ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் பாடி இருக்கிறார்கள். படித்தும் சிந்தித்தும் அவனருள் பெறுவோமாக!
–subham—
tags பிறப்பு அறுத்தல், மாயப் பிறப்பு அறுக்கும், திருவள்ளுவன், திருமழிசை ஆழ்வார், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கை ஆழ்வார்