மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 (Post No.15,292)

House of Lords in London

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,292

Date uploaded in London –   21 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள்! – 1 

ச. நாகராஜன் 

பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களது வஞ்சகம், தந்திரம், பொய், புரட்டு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

 ஆனால் அவர்களது வஞ்சக புரட்டு புத்திமதியும் போலியான வாதங்களும் இன்னும் நீங்கியபாடில்லை.

இது பற்றி சுப்ரீம் கோர்ட் அட்வகேட் திரு டாக்டர் ஹரிபன்ஷ் மிஸ்ரா

Dupliticy of the West – Did you Know? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு நமது விழிப்புணர்வைத் தூண்டுகிறது.

அது அப்படியே கீழே தரப்படுகிறது. 

32 ஐரோப்பிய நாடுகள் அப்படியே வெவ்வேறு நிலைகளில் கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கின்றன. ஒன்று அதிகாரபூர்வமான அரசின் மதமாக அரசியல்சட்டபூர்வமாகவோ அல்லது வடிகனுடனான ஒரு சமய உடன்பாட்டின்படியோ இந்த அங்கீகாரம் உள்ளது. வட்டிகனுடனான பல நாடுகளின் சமய உடன்பாடுகள் அல்லது ஒப்பந்தங்கள் சர்ச்சுகளை நிர்வகிக்கவும் சர்ச்சின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவைகளாகும்.

இங்கிலாந்திற்கு அதிகாரபூர்வமான மதம் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கிறிஸ்தவ மதமே. அது ஏசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என்கிறது.

“இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏன் இன்னும் கிறிஸ்தவ நாடாகவே இருக்கிறது?” என்று  “பரந்த மனமுடைய” ஒரு மேலை நாடும் இங்கிலாந்தைக் கேட்கவில்லை. ஆனால் நான்கு உலக மதங்களைக் கொண்டுள்ள போதிலும் இந்தியா மட்டும் காலனி ஆட்சியின் எச்சமான செகுலரிஸத்தை – மதச் சார்பின்மையைக் கொண்டிருக்க வேண்டுமாம்!

சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் பிஷப்புகளுக்காக யுனைடெட் கிங்டமின் பாரளுமன்றத்தின் 26 சீட்டுகள் ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு முடிய சுமார் நானூறு ஆண்டுகாலம் அந்தப் பாராளுமன்றத்தில் ஒரு பெண் பிஷப் கூட இடம் பெற்றிருக்கவில்லை. நான்கு நூற்றாண்டுகளாக வெள்ளை கிறிஸ்தவ ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக இடம் பெற்ற போது இங்கிலாந்தின் ஜனநாயகப் பண்பு பாதிக்கப்படவே இல்லை!!

 இந்தியாவில் சமயாசார்யர்களுக்கு இடங்கள் ரிஸர்வ் செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் யோசியுங்கள். மோடி அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது அவர்களின் கண்களை உறுத்துகிறது – அவர்கள் நாட்டில் சர்ச்சின் 26 பிஷப்புகள் நேரடியாக ரிஸர்வ் செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களின் தேசீய சட்டங்களை உருவாக்கும் போது!

என்ன ஒரு நேர்மையான வாதம் அவர்களுடையது?! செகுலரிஸம் என்ற சுமை இந்தியர்களுக்கு மட்டும் தானோ, என்னவோ!

 யுகே பாராளுமன்றத்தில் 92 சீட்டுகள் பரம்பரை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆமாம், பிறப்பின் அடிப்படையில் தான்! இந்த பரம்பரை சீட்டுகளின் பெயர் “Peers” என்பதாகும். இது யுகேயின் அரச பரம்பரையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதாகும். இந்திய ஜனநாயகத்திலோ ஒரு வார்டு கவுன்சிலர் சீட் கூட பிறப்பின் அடிப்படையில் சீட்டைப் பெற முடியாது. என்றாலும் கூட யுகே தான் முற்போக்கானது. இந்தியா பிற்போக்கானது!

–    தொடரும்

**

ஆதாரம், நன்றி கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ்

TRUTH -VOLUME 90 – ISSUE NUMBER 13

(8-7-2022)

Leave a comment

Leave a comment