மனு நீதி சாஸ்திரம் பற்றி அருணகிரிநாதர் தரும் புதிய தகவல்! (Post No.15,301)

Written by London Swaminathan

Post No. 15,301

Date uploaded in London –  23 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சரஸ்வதி நதி தீர வயிரவி வனம் முருகன் கோவில் பற்றி அருணகிரிநாதர் பாடினார் ; இதுவரை நம்மால் அந்த ஊரினைக் கண்டுபிடிக்க முடியவில்லை ; திருப்பதி மலை மீது முருகன் இருப்பது  பற்றியும் பாடினார்; அது பாலாஜி கோவிலா அல்லது வேறு ஒரு முருகன் கோவில் இருந்ததா என்றும் தெரியவில்லை ; பழனி பற்றிய கதையில் மாம்பழம் பற்றி நாம் அறிவோம் ; ஆனால் அருணகிரியோ மாதுளம் கனி பற்றிப் பாடுகிறார் அந்தப் புதிரும் விடுபடவில்லை இப்போது சிதம்பரம் திருப்புகழில் முருகப்பெருமான்தான் மனு ஸ்ம்ருதி நூலினைக் கொடுத்தார் என்று பாடி மேலும் ஒரு புதிர் போடுகிறார்! 

****

சந்திரவோலைகுலாவ -சிதம்பரம் திருப்புகழ்

சந்திர வோலைகு லாவ கொங்கைகள்

     மந்தர மாலந னீர்த தும்பநல்

          சண்பக மாலைகு லாவி ளங்குழல் …… மஞ்சுபோலத்

தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை

     விண்புரு வாரிதழ் கோவை யின்கனி

          தன்செய லார்நகை சோதி யின்கதிர் …… சங்குமேவுங்

கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்

     சந்தன சேறுட னார்க வின்பெறு

          கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய …… ரம்பையாரைக்

கண்களி கூரவெ காசை கொண்டவர்

     பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு

          கண்களி ராறுமி ராறு திண்புய …… முங்கொள்வேனே

இந்திர லோகமு ளாரி தம்பெற

     சந்திர சூரியர் தேர்ந டந்திட

          எண்கிரி சூரர்கு ழாமி றந்திட …… கண்டவேலா

இந்திரை கேள்வர்பி தாம கன்கதி

     ரிந்துச டாதரன் வாச வன்தொழு

          தின்புற வேமனு நூல்வி ளம்பிய …… கந்தவேளே

சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு

     பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்

          செந்தினை வாழ்வளி நாய கொண்குக …… அன்பரோது

செந்தமிழ் ஞானத டாக மென்சிவ

     கங்கைய ளாவும காசி தம்பர

          திண்சபை மேவும னாச வுந்தர …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

(By Sri Gopalasundaram in kaumaram.com)

சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர்

……….., அவர்களுடன்

மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு

கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன்.

இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர்

நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா …

இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர

சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில்

இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே,

இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன்

தொழுது இன்புறவே மனு நூல் விளம்பிய கந்த வேளே …

லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச்  சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே,

மனு நூல் (தரும சாஸ்திரத்தை) எடுத்து ஓதிய கந்த வேளே.

சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகா மணி

மோக வஞ்சியர் செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக … செங்

குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு

பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த

வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த

வள்ளிக்கு நாயகனே,

ஒண் குக அன்பர் ஓதுசெந்தமிழ் ஞான தடாகம் என் சிவ

கங்கை அளாவும் மகா சிதம்பர திண் சபை மேவும் ம(ன்)னா

சவுந்தர தம்பிரானே. … செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை

என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில்,

திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.

* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.

***

மனு நூல் என்பதை பொதுவில் தர்ம சாஸ்திரம் என்று திரு கோபால சுந்தரம் எழுதியுள்ளார் . மனு முதலான தர்ம சாஸ்திரங்கள் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் இந்துக்கள் காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு சட்ட விதிகள் மாறும் என்று எண்ணி மனுவுக்குப் பின்னர் சுமார் 20 ஸ்ம்ருதிகளை/ சட்டப்  புஸ்தககங்களை எழுதியுள்ளனர்; இப்போது இந்தியர்கள் பின்பற்றுவது இந்திய அரசியல் சட்டம் எனப்படும் சட்டம் ஆகும் . அதையும் கூட நாம் அவ்வப்போது திருத்தி வருகிறோம். சங்க காலம் முதல் மஹாத்மா காந்தி காலம் வரை மனு ஸ்ம்ருதியைப் பாராட்டியதால் நாமும் மனு நீதி சோழனுக்குப்  பல இடங்களில் சிலை வைத்தோம்.

கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும், மன்னர்கள் மனு நீதிப்படி ஆட்சி செய்ததாகப் புகழ்ந்துரைத்துள்ளனர் . அருணகிரிநாதரும் அவ்வாறே கருதி முருகன் மீது மனு தர்ம நூலை ஏற்றிவிட்டார் போலும்!

–subham—

Tags– மனு நீதி சாஸ்திரம்,முருகன் கொடுத்தது, அருணகிரிநாதர், புதிய தகவல்

Leave a comment

Leave a comment