Post No. 15,323
Date uploaded in London – 30 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சென்னை ஸர்வகலாசாலைத் தமிழ் ஆராப்ச்சித்துறைத் தலைவர் 1930-1046 பேராசிரியர் எஸ். வையாபுரிப் பின்னை
இலக்கிய உதயம் (இரண்டாம் பகுதி) நூலில் கூறுவதாவது :
* பெரிய திருமொழியில்,
சந்தோகா பெளழியா தைத்திரியா
சாம வேதியனே நெடுமாலே
என வந்துள்ளது. நச்சினர்க்கினியரும் தொல்காப்பியப் பாயிர
உரையில், ‘நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடைமையால்
நான்மறை என்றார். அவை, தைத்திரியமும், பெளடியமும், தலவ
காரமூம், சாம வேதமுமாம், இனி, இருக்கும், யசுவும், சாமமும்,
அதர்வணமும் என்பாரும் உளர்; அது பொருந்தாது. இவர் இந்
நூல் செய்த மின்னர் வேத வியாசர் சில்வாழ் காட் சிற்றறிவினோர்
உணர்தற்கு நான்கு கூறுச் செய்தாராகலின்’ என்று எழுதி
யுள்ளார்.
சந்தோகம் சாம வேதத்தின் ஒரு சாகையையும், பெளழியம்
ரிக் வேதத்தையும், தலவகாரம் சாமவேதத்தின் ஜைமினீய சாகை
யையும், தைத்திரீயம் கிருஷ்ண எஜுர் வேதத்தையும் குறிக்
இன்றன. பெளழியத்தைக் குறித்து ஆசிரியர் வின்டர்நிட்ஸ்
கூறுவது இங்கு மனங்கொளத்தக்கது.
***
1609 பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி *
பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் * என் மனத்தே மன்னி நின்றாய் *
மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா **
சந்தோகா பௌழியா தைத்திரியா *
சாம வேதியனே நெடுமாலே *
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் *
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
—திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி. 7.7.2.
***
பெளழியம்
Tamil dictionary
— Pauliyacaranam in Tamil glossary
Pauḻiyacaraṇam (பௌழியசரணம்) [pauḻiya-caraṇam] noun < பௌழியம் [pauzhiyam] +. See பௌடியம்¹. [paudiyam¹.] (inscription)
பவிழியம் – இருக்குவேதம் என்று 1935-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியும் கூறுகிறது
****
காஞ்சி சங்கராசார்யார் சுவாமிகளும் இதை தனது உரையில் எடுத்துக் காட்டியுள்ளார்
தமிழ் தவிர, மலையாளம், சீன மொழியில் மாண்டரின் பிரிவு ஆகியவற்றில் இந்த ஒலி உள்ளது; பிரெஞ்சு மொழியில் R ஆர் என்னும் எழுத்தினை இது போல உச்சரிக்கிறார்கள் .
நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்பித்தபோது நான் பழம் என்று எழுதச் சொன்னால் அவர்கள் பற்ற்ம் என்றுதான் எழுதுவார்கள் . நம்முடைய ழ’ – காரத்துக்கு இணையான– அல்லது மிக நெருங்கிய ஒலி –அந்த ரோலிங் ஆர் ROLLING R என்பது புரிகிறது.
***
திருமங்கை ஆழ்வார் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ரிக் வேதத்திற்குப் பயன்படுத்தியதும் பின்னர் கல்வெட்டுகளில் காணப்படுவதும் இது பழமையானது என்பதைக் காட்டுகிறது.
இன்னொரு பாசுரத்திலும் திருமங்கை ஆழ்வார், ரிக்வேதத்தைப் படுகிறார், இதனாலும் நால் வேதத்திற்கு ஒவ்வொரு பாடலிலும் அவர் கொடுக்கும் சிறப்பு அடை மொழியாலும் அவருக்கு வேதங்கள் பற்றிய தெள்ளிய அறிவு இருந்தது புலப்படுகிறது
1453 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
***
இருக்கினில் இன் இசை ஆனவனே – என்பது மிகவும் முக்கியமான வரி; ஏனெனில் சாம வேதம் என்பது பெரும்பாலும் ரிக்வேதத்தின் பகுதியே; அதை இன்னிசை வடிவில் இசைக்கும்போது அது சாமவேதம் எனப்பெயர் பெறுகிறது. இந்த அரிய தகவலையும் அவர் நமக்கு அளிக்கிறார் ; தெய்வத்தின் குரலில் ரிக் வேதமே சாம வேதம் என்பதை காஞ்சிப் பெரியவரும் எடுத்துரைக்கிறார்.
—subham—
Tags– சம்ஸ்க்ருத்தில் ‘ழ’ கரம், பெளழியம், திருமங்கை ஆழ்வார், சாந்தோகா, பெளழியா