கர்நாடக பயணத்தில் கண்ட விநோதங்கள் (Post No.15,335)

மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்

Written by London Swaminathan

Post No. 15,335

Date uploaded in London –  14 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜனவரி 2026 முதல் வாரத்தில் பெங்களூரில் காரில் பயணம் செய்தோம். ஒரு பஸ் டிரைவர் மொபைலில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டினார் . பஸ்ஸில் முழு அளவு பயணிகள் இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச தூரம் பயணம் செய்தோம்; ஒரு பள்ளிக்கூட மாணவர் பஸ் அது. அதன் பின்னால் எதிர்காலத் தலைவர்கள் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள் என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தது. FUTURE LEADERS ON BOARD.  அதாவது பள்ளிச் சிறுவர்கள் பயணம் செய்கிறார்கள்! அதிக கவனம் தேவை! என்பது அதன் பொருள்; ஆனால் அந்த பஸ்ஸின் டிரைவரும் மொபைலில் பேசிக்கொண்டே இருந்தார். பஸ்சிலுள்ள எதிர்காலத் தலைவர்களுக்கு என்ன ஆகப்போகிறதோ என்று எண்ணி வியந்தோம்!

 நல்லவிஷயங்களும் உண்டு.!

பெரும்பாலான ஹோட்டல்களில் நாம் கேட்காமலேயே வெந்நீர் கொண்டு வைக்கிறார்கள் இட்லி கேட்டோம்; தட்டு இட்லியுடன் மூன்று வடைகளுடன் நான்கு வகை சாம்பார் சட்னிகளுடன் வந்தது. நல்ல சுவை டிரைவருக்கும் சேர்த்து  மூன்று பேருக்கு 400 ரூபாய்தான் ஆயிற்று .

மூன்று நாட்கள் செய்த  பயணத்தில் மேலும் இரண்டு ஹோட்டல்களில் சாப்பிட்டோம் ஓரிடத்தில் பூரி, மசால், சோறு , ஆறுவகைக் கறி, கூட்டுடன் , சுவீட்டுடன் நல்ல சாப்பாடு விலை ரூ.175; இன்னும் ஒரு இடத்தில்  200  ரூபாய்

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் சரவணபவனில் 80 ரூபாய்க்குச் சாப்பாடு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

***

நாங்கள் சென்ற இடங்கள்

1.வைரமுடி சார்த்தப்படும், ஜெயலலிதா குடும்பம் வணங்கிய மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்,

2ஆதிரங்கம் என அழைக்கப்படும் காவிரிக்கரை ஸ்ரீரங்கப் பட்டணம், 3.கர்நாடக ராஜ குடும்பத்தின் தெய்வம் சாமுண்டீஸ்வரி கோவில், 4.ஹோய்சாள கட்டிடக் கலைக்குப் புகழ் பெற்ற சோமனாதபுரம்,

 5.மைசூர் மஹாராஜா அரண்மனை .

செய்யக் கூடாதது!

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போகக்கூடாது ; நல்ல கூட்டம்; ஒரு கோவிலில் ஆளுக்கு 50 ரூபாய் டிக்கெட்; சாமு ண்டீஸ்வரி கோவிலில் ஆளுக்கு 200 ரூபாய் டிக்கெட்; அப்படியும் முக்கால் மணி நேரம் வரிசையில் காத்திருந்தோம்..

நல்ல வேளையாக ஐயப்ப கும்பல் இல்லை ; ஒரு பத்து கருப்பு வேட்டிகளைத்தான் பார்த்தோம் .

ஒவ்வொரு கோவில்,சுற்றுலா இடம் பாற்றியும் தனித்தனியே காண்போம்.

***

மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்

மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்

மாண்டயாவிலிருந்து 30 கி.மீ . தொலைவிலுள்ள செலுவ நாராயணர் கோவிலில்  நடக்கும் வைரமுடி உற்சவம் மிகவும் புகழ் படைத்தது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமானுஜர் 12 ஆண்டுகள் வசித்த ஊர் இது..

Sri Cheluvanarayana Swamy Temple, Pandavapura, Taluk, Melukote, Karnataka 571431     

மைசூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஊருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் உண்டு .

உற்சவ மூர்த்தி விக்ரகம் செல்வப்பிள்ளை. இதற்கு ராமப்ரியா என்ற பெயரும் உண்டு . ராமரால் கிருஷ்ணராலும் வணங்கப்பட்ட விக்ரகம் என்பது ஐதீகம் .

காவிரி நதியையும் யதுகிரியையும் நோக்கி அமைந்த கோவில்.

டில்லியிலுள்ள முஸ்லீம் மன்னர் முகமது ஷாவிடம் பறிபோன விக்ரகத்தை ராமானுஜர் மீட்டு வந்தார். விக்கிரகத்தின் மீது அன்பு பூண்ட அவரது மகள் கோவிலுக்கு வந்தபோது இறந்ததாகவும் ஆகையால் அவரும் இங்கு வணங்கப்படுவதாகவும் சொல்லுவர். பீபி நாச்சியார் என்ற அந்த முஸ்லீம் பெண்ணின் உருவமும் கோவிலில் உளது.

கோவிலின் கோபுரம் மிகவும் அழகானது. ஆழ்வார்கள், ராமானுஜர் யதுகிரியம்மா சந்நிதிகள், சிலைகளும் இருக்கின்றன. தங்க கருட வாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா வரும் நாள் மிகவும் பக்தர் கூட்டத்தைக் கொண்டுவருகிற்து .மாலையில் துவங்கும் விழா இரவு முழுதும் நீடிக்கும்

 ***

வைர முடி விழா  

வீதி உலா வருகையில் பெருமாள் அணிவது வைர முடி. ஏனைய காலங்களில் அவர் அணிவது ராஜ முடி. அதிலும் ரத்தினைக் கற்கள் இருக்கும்.

வைரமுடி பற்றி சுவையான கதைகளும் பு ழ க்கத்தில் உள்ளன. பெருமாள் உறங்கும்போது அது திருடு போனதாகவும் கருடன் அதை மீட்டு வருகையில் அதன் தலையிலுள்ள நீலக் கல் தமிழ்நாட்டில் நாச்சியார் கோவிலில் விழுந்ததாகவும் பின்னர்  அது மணிமுத்தாறு மூலம் மீண்டும் மேலுகோட்டைக்கு வந்ததாகவும் கதை சொல்லுவார்கள் (நெல்லை ஜில்லா மணிமுத்தாறு வேறு).

Xxxx

பேய்களை விரட்டும் தடி !

47.Yoga Narasimha Temple, Melkote யோக நரசிம்ம சுவாமி கோவில்

Yoga Narasimha Temple, Melkote Main Road, District Mandya, Melukote, Karnataka 571431 

மைசூரிலிருந்தது 50 கிமீ தொலைவு.

1777 மீட்டர் உயர குன்றின் மீது மேலுகோட்டை யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது . யோக பட்டையுடன் நரசிம்மர் அமர்ந்த நிலை யில் இருக்கிறார் 365 படிகள் ஏறி  சென்றால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நரசிம்மரின் வலப்புறத்தில் ஒரு தடி / தண் டம்  வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பேய் பிடித்தவர்களின் தலையில் அடித்தால் பேய்கள் ஒடி விடும்.

மேலுகோட்டையில் ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் சமணர்களும் மோதல் ஏற்பட்டது . பிட்டிதேவன் என்னும் சமண சார்பு மன்னன் மகளை பிரம்மராக்ஷஸி பேய் பிடித்த பொழுது 1000 சமணர்களால் பேயை விரட்ட முடியவில்லை. இறுதியில் ராமானுஜர் அந்தப் பேயை விரட்டினார். மந்திரம் சொல்லி ஒரு குச்சியால் பெண்ணின் தலையில் தட்ட பேய் பறந்தோடிப்போனது ; பொறாமை கொண்ட சமணர்கள் மதுரையில் ஞான சம்பநதரை அனல்வாதம், புனல்வாதம் போட்டிகளுக்கு  அழைத்தது போலவே ராமாநுஜரையும் போட்டிக்கு அழைத்தனர். ஆயிரம் பேரும் 1000 கேள்விகள் கேட்போம். நீர் ஒரே பதிலில் திருப்திகரமான பதில் சொல்ல வேண்டும் என்று ராமானுஜருக்கு நிபந்தனை விதித்தனர். அவர் ஒரு திரை மறைவில் சென்று ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உருக்கொண்டு ஒரே பதிலில் விடை சொன்னார் ; சமணர்கள் திரையை விலக்கியபோது ஆயிரம் தலை கொண்ட ஆதி சேஷனைக் கண்டு மூர்ச்சித்து  விழுந்தனராம் .

See More Temples in my book :கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்

 யோக நரசிம்ம சுவாமி கோவில்

–SUBHAM—

Tags- கர்நாடக பயணம்,  விநோதங்கள்,  யோக நரசிம்ம சுவாமி கோவி

Leave a comment

Leave a comment