London Swaminathan in Srirangapatna
கோவில் படங்கள் ,
Srirangapatna Temple pictures
Post No. 15,339
Date uploaded in Sydney – 16 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆதிரங்கம்- ஸ்ரீரங்கபட்டணம் தலத்தில் பெருமாள் தரிசனம் ! (Post.15,339)
தமிழ்நாட்டில் வைணவர்களுக்கு கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று பொருள்; சைவர்களுக்குச் சிதம்பரம் என்று பொருள். அவ்வளவு புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .
Srirangapatna Temple tower
ஏன் ஆதிரங்கம் என்ற பெயர் ? காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கங்கையினும் புனிதமான காவிரி
கங்கை நதியைவிட காவிரி புனிதமானது என்று அப்பர் போன்ற பெரியார்கள் பாடிப் பரவியதற்குக் காரணம் இப்போது புரிகிறது. 1500 மைல் நீளமுள்ள கங்கையின் கரையிலுள்ள புனிதத் தலங்களைவிட மிகவும் அருகருகே சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் நிறைந்தது காவிரி நதிதான் .
திப்புசுல்தான் வரலாறு
Tippusultan Palace
கோட்டை படங்கள்
மைசூருக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மேலும் ஒரு சிறப்பு– வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் சண்டைபோட்டு அவர்களைத் திணறடித்த பூமி இது. இறுதியில் குள்ள நரித் தந்திரத்தால் திப்பு சுல்தானைக் கொன்றனர்; அத்தோடு அவனுடைய கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கி அங்கிருந்த தங்கம் ரத்தினக் கற்களை பிரிட்டனுக்கு கொண்டு சென்றனர் , விலைமதிப்புக் குறைவான பொருள்களை லண்டன் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸியத்தில் காட்சிக்கு வைத்துவிட்டு, விலையே சொல்ல முடியாத அரிய பொருட்களை ரகசியமாகப் பங்கு போட்டுக்கொண்டனர். திடீர் திடீரென்று கொள்ளைக்கார ஏல நிறுவனபிகளுக்கு அவை ஏலத்து க்கு வரும்போது அவை பற்றிய செய்திகள் வரும்; பெரும்பாலாவை திரைக்குப்பின்னால் விற்கப்படுகின்றன.
Tippu Sultan Grave
வெள்ளைக்காரனைக் குதறும் ஒரு புலி பொம்மையை திப்பு சுல்தான் வைத்திருந்தான். அதை இன்றும் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸிடத்தில் காணலாம். படை வீரர்களுக்குச் சம்பளம் போடும் நாளன்று காவலர் இல்லாமல் திப்புசுல்தான் தனியாக இருப்பான் என்ற செய்தியை ஒரு துரோகி வெள்ளைக்கற்களுக்குத் துப்புக் கொடுத்தான். அப்போது அவனைத் தாக்கி அழித்தனர் வெள்ளைக்காரர்கள்; இப்போது பாழடைந்த கோட்டையில் அவன் நினைவுச் சின்னம் உள்ளயது. அவன் சும்மா இறக்கவில்லை நூற்றுக்கனக்கான வெள்ளையர்களைக் கொன்று குவித்து இறந்தான். அந்த வெள்ளைக்கார கல்லறைகளும் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ளன. வெள்ளைக்காரர்களை அவன் சிறைவைத்த இருட்டுச் சிறைச்சாலைகளும் உள்ளன.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு திப்புசுல்தான் பல மானியங்களை அளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது
Watergate in Srirangapatna
பெருமாளின் புகழ்
நாங்கள் ஸ்ரீரங்கபட்டணத்துக்குப் போனபோது ஜனவரி (3-1-2026) மாத விடுமுறைக் காலமாதலால் நல்ல கூட்டம் இருந்தது .ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கியும் கூட, நீண்ட வரிசையில் முக்கால் மணி நேரம் நின்ற பின்னர் தான் பெருமாளைச் சேவிக்க முடிந்தது. கர்நாடக மாநில ஸ்ரீரங்கபட்டணம் கோவிலும் காவிரி நதி சூழ்ந்த தீவுப் பகுதியில் உள்ளது. இங்குள்ள வெளிநாட்டுப் பறைவைகள் வந்து தங்கும் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப்பயணிகளை இயற்கை ஆர்வலர்களையும் கவர்ந்து இழுக்கிறது
மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி.
பாஞ்சராத்ர ஆகமத்தைக் கடைப்பிடிக்கும் கோவில் இது.
மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட திருக்கோலம்.
.தனித்தனி சந்நிதிகளில் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா , ஆழ்வார்களும் உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது; கங்க வம்சத்தினர், ஹோய்சால வம்சத்தினர் தானம் செய்த செய்திகள் கிடைக்கின்றன .
12-ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார். கெளதம முனிவருக்கு பெருமாள் காட்சி தந்த தலமும் ஆகும் .
இதன் இன்னுமொரு சிறப்பு பஞ்சரங்க தலங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து அரங்கத் தலங்களில் ஒன்று ஆகும் ; ஏனைய நான்கு: மாயூரம் பரிமளரங்கநாதர், கோவிலடி பெருமாள், ஸ்ரீரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கள்.
***
From my Old Article
என்னுடைய புஸ்தகத்தில் முன்னர் எழுதியது கீழே உள்ளது
From my book :கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள்

37. ஸ்ரீரெங்கப்பட்டண ரங்கநாத சுவாமி கோவில் Ranganathaswamy Temple, ,Srirangapatna
மைசூரிலிருந்து 15 கி மீ தூரம். மிகவும் புகழ்பெற்ற பஞ்ச ரங்க, ஆதிரங்க க்ஷேத்ரம் .
காவிரி நதியின் கரையில் ஐந்து புகழ்பெற்ற ரங்கநாதர் ஆலயங்கள் உள . அந்த பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இதுவே முதலில் இருப்பதால் ஆதி ரங்கம் என்று வைஷ்ணவர்கள் அழைப்பர். அடுத்த நான்கு தலங்களும் தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ளன.
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)
நீண்ட நெடும் பாம்பான ஏழுதலை நாகத்தில் ரங்கநாதர் எனும் விஷ்ணு படுத்திருக்க, லெட்சுமி அருகில் அமர்ந்து இருக்கிறார் . பெரிய சிலை .
கோவிலில் இடம்பெறும் ஏனைய சந்நிதிகள் : ரெங்கநாயகி, ராமர், நரசிம்மர், சுதர்சனர் பஞ்ச முக ஆஞ்சனேயர் , கோபால கிருஷ்ணர்
கிபி (பொது ஆண்டு) 894 முதல் வரலாறு இருப்பினும் அதற்கு முன்னரே கோவில் இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு வம்ச மன்னர்களும் கட்டிடங்களை எழுப்பி கோவிலைப் பெரிதாக்கினார்கள் .
நுழை வாயிலில் இருக்கும் 4 பெரிய தூண்களில் விஷ் ணுவின் 24 வடி வங்கள் அலங்கரிக்கினறன.
ஹொய்சாள பாணி கலை அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன .
பிரகாரத்தில் புராணக்கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன ரங்கநாத சுவாமியின் ரத சிற்பம் அற்புதமாக இருக்கிறது . காவிரி நதியானது அதன் போக்கில் மூன்று தீவுப் பகுதிகளை உண்டாக்கியது. சிவ சமுத்திரம், ஸ்ரீரங் கப்பட்டணம் , திருச்சி/ ஸ்ரீரங்கம் .மூன்று இடங்களில் உள்ள கோவில்களையும் ஒரே நாளில் பார்ப்பதில் கர்நாடக வைஷ்ணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .
–subham—
Tags- ஸ்ரீரங்கபட்டணம், ஆதிரங்கம், பெருமாள் , திப்பு சுல்தான் கோட்டை, காவிரி நதி, கர்நாடகம் , லண்டன் சுவாமிநாதன், பஞ்சரங்க தலங்கள், கோவில் படங்கள் , கோட்டை படங்கள்