
தாய்லாந்து கோவில் படங்கள்
Hindu Girls taking video film
Sri Kannappa Kurukkal of Vedaranyam in Bangkok Temple திருமறைக்காடு கண்ணப்ப குருக்கள்
Post No. 15,348
Date uploaded in Sydney, Australia – 20 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Maha Mariamman Temple, Silom Road, Bangkok
எந்த நாட்டுக்குப் போவதற்கு முன்னரும் அந்த நாட்டிலுள்ள இந்து சமயக் கோவில்களைக் கூகிள் செய்து கண்டு பிடிப்பேன். தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் நகரில் மூன்று இரவு தங்குவதற்கு ஹோட்டல் அறை எடுத்திருந்தோம்; ஏமாற்றமளிக்கும் விஷயம் டாக்சி, ஆட்டோ டிரைவர்களுக்குச் சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் ஆங்கிலம் பேசுகின்றனர். எங்கள் டாக்சி டிரைவர் அவரது மொபைல் போனில் ஆங்கிலத்தில் கேள்வியைப் பதிவு செய்தார். அடுத்த நொடியில் அது தாய்லாந்து மொழியில் வந்தவுடன் பதிலையும் அவரது போனில் பதிவு செய்யவே அதை நாங்கள் படித்தோம் பயனுள்ள பணி.
முதல் காட்சி !
ஒருவழியாக நகரின் நடுவில் சிலான் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலை அடைந்தோம். வாசலில் முதல் அதிசயச் காட்சி! மூன்று இளம் பெண்கள் கோவிலின் பெயருள்ள போர்டு எழுதப்பட்டதை பின்னணியாக வைத்துக்கொண்டு ஆடியும் பாடியும் வீடியோ எடுத்தனர்; நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டு; ஆகையால் கோவில் பக்தர்கள் என்று தெரிகிறது வெள்ளைச் சீருடை. அருகில் செல்லத் தயங்கியதால் தொலைவிலிருந்து அவர்களை போட்டோ எடுத்தேன்
***
இரண்டாவது காட்சி!
கோவிலுக்குள் நுழைந்தோம் இரண்டாவது அதிசயக் காட்சி! சீனர் போன்ற மகோலாய்ட் Mongoloid முகம் உடையவர்கள் தாய் மக்கள்; பத்து அல்லது 15 தாய்லாந்து மாணவ மாணவியர் ஊதுபத்தி ஏற்றி பய பக்தியுடன் வணங்கினார்கள். பள்ளிக்கூட சீரு டையில் இருந்ததால் பரீட்சைக்கு முன்னாலு;ள்ள பக்தி போலும். ஏனெனில் அவர்களை ஒரு தாய் ஆசிரியை புகைப்படம் எடுத்தார் அதைப் பார்த்து நானும் போட்டோ எடுத்தேன்
தமிழர்களை விட அதிகமான தாய்லந்து பக்த்ர்கள் ; தட்டு தட்டாக பூ பழம் வாங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்தனர் அவர்ருடைய தீவாராதனைத் தட்டில் நிறைய தாய் கரன்சி நோட்டுகள் ஆனால் அத்தனையும் கோவில் உண்டியலுக்குள் போய்விடுமாம்.
***
திருமறைக்காடு கண்ணப்ப குருக்கள்
வேலூர் கல்யாணா சுந்தர சிவாச்சார்யார் உதவியால் நான் மாயவரம் வேத பாடசாலை அதிபர் சுவாமிநாதன் மூலம் பெற்ற கண்ணப்பர் என்ற பெயருடைய குருக்களை சந்த்தித்தோம் அவர் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் எல்லா கடவுள் சந்நிதிகளும் அழைத்துச் சென்று தக்க மரியாதை செய்தார் . கொடுத்த தட்சிணையைத் தொட மறுத்து உண்டியலுக்குள் போட்டுவிடுங்கள் என்றார்
கோவில் சுமார் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மலேசியத் தொழிலாளர்களால் துவங்கப்பட்டது. வைத்தி படையாச்சி என்பவர் 1879 ஆம் ஆண்டில் கோவிலை நிர்மாணித்தார்; பின்னர் அவருடைய மகன் இதை பெரிய அளவில் விரிவாக்கினார். மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் வேத பாட சாலையில் படித்த பிரம்மச்சாரிகள் கோவிலில் ஒவ்வொரு சந்நிதியிலும் பணியில் உள்ளனர்.
கோவிலுக்குள் இல்லாத தெய்வம் இல்லை; பிரம்மாவுக்குக்கூட தங்க வர்ண சிலை உள்ளது ; பார்வதி/ உமா, சிவன், முருகன், கணபதி மஹா மாரியம்மன், காத்தவராயன், சரஸ்வதி, லெட்சுமி ஆகியோர் முக்கிய சந்நிதிகள் ஆகும். கோவிலில் புத்தரும் இருக்கிறார்
***
கோவிலில் காலை நேரத்தில் 9 மணிக்கு இவ்வளவு கூட்டம் வருவது எப்படி? என்று கேட்டபோது அன்னை மஹா மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தேவி என்று கண்ணப்ப குருக்கள் விளக்கினார் . கோவிலுக்குள் மிகப்பெரிய சக்கரம் தமிழ் எழுத்துக்களுடன் பெரிய உருவத்தில் வரையப்பட்டுள்ளது. அதுதான் ஆகர்ஷண சக்திக்கும் காரணம் போலும். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று போர்டு உள்ளதால் அதைப் படம் எடுக்கவில்லை.
தமிழ் வெஜிட்டேரியன் உணவு பற்றிக் கேட்டபோது அருகில் சென்னை உணவகம் இருப்பதாகச் சொன்னார்.
****
தாய்லாந்து கோவில் படங்கள்


மஹா மாரியம்மன் கோவில்



மாணவிகள் வழிபாடு


மாணவிகள் வீடியோ படம் எடுக்கும் காட்சி


தங்க வர்ண புத்தர் கோவில்
நாங்கள் சென்ற இரண்டாவது பெரிய கோவில்- தங்க வர்ணமுள்ள புத்தர் சிலை உள்ள கோவில். பிரம்மண்டமான கோவில்;
நாங்கள் தங்கிய VILLA DE KHAOSAN அருகில் இருபுறமும் தெரு ஒரக் கடைகள் உள்ள Street Market, உணவு விடுதிகள், ஏராளமான மசாஜ் கடைகள் (Massage Parlours) உள்ளன. எதிர்த்தாற்போல ஒரு பெரிய புராதன புத்தர் கோவில் உள்ளது.
Address
Buddhist Temple,Wat Thepthidaram, Samran Road, Bangkok பாங்காக்.
பெரிய புத்தர் சிலைக்கு முன்னால் ஐம்பது , அறுபது புத்த துறவிகள் பாலி மொழியிலுள்ள புத்த சமயக் கிரந்தங்களை வேத முழக்கம் போல படித்துக்கொண்டிருந்தார்கள் . பெரிய புத்தர் விக்ரகமுள்ள மண்டபத்தில்ன் இரு புறங்களிலும் ஏராளமான தங்க நிற புத்தர் சிலைகள்! வெளியே தாழ்வாரத்தில் ஐந்து ஆறு பக்தர்கள் மட்டுமே இருந்தனர். மிகவும் அமைதியான, மனோரம்யமான சூழ்நிலை. தியானம் என்பதையே அறியாதவர்களும் தியானத்தில் ஈடுபடச் செய்யும் சூழ்நிலை! கிராமப்புற வேத பாடசாலைகளில் வேத முழக்கம் கேட்பதைப் போல ஒரு தெய்வீகக் காட்சி ; அனைவரும் பார்க்க வேண்டிய தலம்.
மன்னர் மூன்றாவது ராமா அவருடைய மூத்த புதல்வி சுதா தேப்- ஜக் கெளரவிக்க இந்த கோவிலை நிர்மாணித்தார்; பாங்காக் நகரின் மத்தியில் இருந்தாலும் உள்ளே சென்றால் கிராமீய சூழ்நிலை நிலவுகிறது . 52 பெண் துறவிகளின் சிலைகள் தியானம் செய்யும் நிலையில் இருப்பது கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். ஒருகாலத்தில் தாய்லந்தின் புகழ்பெற்ற புலவர் சுந்தரன் புது வசித்த இடம் இது
சுவர்களில் புத்தரின் வாழ்க்கைச் சரிதக் காட்சிகளை பெரிய ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதன் அடியில் ஆங்கிலத்தில் விளக்கத்தையும் எழுதியுள்ளனர்





***
தாய் மொழி பக்தி
தாய்லாந்து மக்கள் அவர்களின் மொழி மீது மிகவும் பற்று கொண்டவர்கள் பெரும்பாலான போர்டுகளும் அறிவிப்புகளும் அவர்களுடைய மொழியிலேயே உள்ளன.
—-Subham—
Tags- தாய்லாந்து நாட்டுக் கோவில்கள், மஹா மாரியம்மன் கோவில், பாங்காக் நகரம், நான் கண்ட அதிசயக் காட்சிகள் , பாங்காக் புத்தர் கோவில், புத்தமத துறவிகள், தங்க புத்தர்