அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

ஹனுமார் படங்கள் 

Written by London Swaminathan

Post No. 15,359

Date uploaded in Sydney, Australia –  25 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359)

திருப்புகழ் பாடலில் அனுமன் பற்றி நாம்  அறியாத விஷயம் ஒன்றை   அருணகிரிநாதர் சொல்கிறார். மேலும் அந்தப் பாடலில் வானர இனத்தின் ஒவ்வொரு தலைவரும் யார் என்ன அம்சம் உடையவர் என்ற தகவலையும் நமக்கு அளிக்கிறார் . இதோ திருப்பரங்குன்றத்தில் பாடிய திருப்புகழ் :

ஹனுமான் சிவ பெருமானின் அம்சம் உடையவர் என்பது புலவரின் துணிபு !

 : கருவடைந்து பத்துற்ற திங்கள்

     வயிறிருந்து முற்றிப்ப யின்று

          கடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

     முலையருந்து விக்கக்கி டந்து

          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து …… வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று …… பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் …… நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து …… புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் …… மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து

     உலகமும்ப டைத்துப்ப ரிந்து

          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த …… பெருமாளே.

***

கெளமாரம். காம் – இல் பொருள் எழுதியவர் திரு கோபால சுந்தரம் 

சூரியன் (ரவி)- சுக்ரீவன்

இந்திரன் – வாலி

பிரம்மன் – ஜாம்பவான்

நீலன்- அக்கினி

அனுமன் – ருத்திரன்

ஹரி, முகுந்தன் – ஸ்ரீ ராமன்

தேவர்கள்- வானர சேனை

***

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த

பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)

ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

***

பாடலின் முதல் பகுதி

பாடலின் முதல் பகுதியிலும் இப்போது வழக்கொழிந்த தகவலைத் தருகிறார் அருணகிரி;

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையைக் குளிப்பாட்டி காது குத்தி காதில் தோடும்/ கடுக்கனும்  இடுப்பில் ஐம்படைத் தாலி உடைய அரைஞாணும் கட்டுவது வழக்கம்; இப்போதெல்லாம் பிறந்தது முதல் ‘நாப்பி’யும் பின்னர் ‘ஜட்டி’யும் போடுவது வழக்கமாகிவிட்டது!

ராமாயணம், மஹாபாரதம் தொடர்பான பல அபூர்வ செய்திகளை நிறைய பாடல்களில் அள்ளித் தெரித்து இருக்கிறார் அருணகிரிநாதர்! !

–subham—

Tags- அனுமன் , அருணகிரிநாதர், அரிய தகவல், ஹனுமார் படங்கள் 

Leave a comment

Leave a comment