


Post No. 15,357
Date uploaded in Sydney, Australia – 24 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)
சென்ற இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில் நான்டியன் புத்தர் கோவில் முதலியவற்றைத் தரிசித்து எழுதினேன். இப்போதைய விஜயம் மூன்றாவது விஜயம் ஆகும் . புதிய இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் நேற்று சிட்னி சக்தி கோவிலுக்கும் அதற்கு முதல் நாள் லிஸ்கார் கார்ட்னஸ் என்னும் தோட்டத்துக்கும் சென்று வந்தோம் . இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள்; அந்த இடத்தை அடைந்துவிட்டால் அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதுமானதாகும் .

Lisgar Gardens லிஸ்கர் கார்ட்ன்ஸ்

லிஸ்கார் கார்ட்ன்ஸ் என்பது ஆறரை ஏக்கர் பரப்புள்ள மரங்கள், புதர்கள் நிறைந்த பகுதி ஆகும் . பெரிய ஷாப்பிங் மால் உள்ள இடத்திற்கு அருகில் இருந்தாலும் காட்டுப் பகுதி போலவே உள்ளது
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் மாக்ஸ் காட்டன் என்பவர் இந்த நிலத்தை வாங்கினார் அவருக்கு கமில்லியா மலர்களை மிகவும் பிடிக்கும் ஆகையால் 70 வகை கமில்லியா மலர்ச் செடிகளை வளர்த்தார். இந்த இடம் சம தரை இல்லாமல் மேடும் பள்ளமும் நிறைந்தது; கீழே ஓடைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன சிறிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது .
இந்த இடத்தின் சிறப்பு வெறும் மலர்ச் செடிகள் மட்டுமல்ல. பல்லி , ஒணான் வகைகளில் ஒன்று நீரில் வசிக்கும் வகை ஆகும். இதை கிழக்கத்திய வாட்டர் டிராகன் என்பார்கள் மூன்று அடி நீளம் வரை வளரும் ராட்சதப் பல்லி இது. நாங்கள் போனபோது குட்டிகளை மட்டும் கண்டோம்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சுற்றிப்பார்த்து விடலாம் கானக நடைப் பயணம் செய்ய விரும்புவோருக்கு புதர் வழிப் பாதைகளும் உள்ளன.
***


சிட்னி சக்தி கோவில் மிகவும் சிறியது ; 150 பேர்தான் கோவிலுக்குள் எந்த ஒரு நேரத்திலும் இருக்கலாம். மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் கோவில் இருப்பதால் காலையிலும் மாலையிலும் இரண்டு மணி நேரம்தான் கோவிலைத் திறக்க வேண்டும் என்று நகர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. விழா நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடுதல் நேரம் திறந்திருக்கும்
***
பிஜி என்னும் நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் 1990 முதல் பிரார்த்தனைக்காக சந்தித்தனர் . 2010- ம் ஆண்டு முதல் தற்போதைய இடத்தில் கோவில் இருந்து வருகிறது .
இதை துர்கா கோவில் என்றும் அழைப்பார்கள் ; முக்கிய சந்நிதியில் சக்தி தேவியும் இரு புறமும் பிள்ளையார், முருகன் சந்நிதிகளும் உள்ளன . சக்திக்கு முன்னால்,மீனாட்சி , சிவலிங்கம் ஆகிய மூ ர்த்திகளும் இருக்கின்றனர் ; இவை உள்ள மண்டபத்துக்கு வெளியே நவக்கிரக சந்நிதி , சிவலிங்கம், அனுமார் சிலைகள் இருக்கின்றன.
பெரிய ம ண் டபம் ஒன்று அய்யப்பன் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது கோவிலின் சுவர்களில் எல்லா தேவிமார்களும் சுதை உருவத்தில் காட்சி தருகின்றனர்
கோவில் திறக்கும் நேரம் குறைவானபோதும் பக்தர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டேன்; பலரும் அர்ச்சனைத் தட்டுகளுடன் வந்து அர்ச்சனையும் செய்தனர் ; ஒரே ஒரு குருக்கள் இருந்தார்.
எல்லா முக்கியத் திருவிழாக்களையும் கோவில் கொண்டாடுகிறது .
கோவிலின் விலாசம் கீழே உள்ளது:
Sydney Shakti Temple
271, Old Windsor Road, Old Toongbbie, NSW 2146.
Telephone- o2 9636 1171
Website – www.sydneyshakti.org
–subham—
Tags- ஆஸ்திரேலியா, பார்க்க வேண்டிய இடங்கள், சிட்னி நகர சக்தி கோவில், லிஸ்கார் கார்ட்ன்ஸ்,