Post No. 15,362
Date uploaded in Sydney, Australia – 26 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் திருப்புகழ்)
Brahma, Somnathpur, Karnataka
படைப்பவனும் துடைப்பவனும்!
படைக்கப் பங்கயன் … படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்
தாமரைமலர் மேவும் பிரமன்,
துடைக்கச் சங்கரன் … அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,
புரக்கக் கஞ்சைமன் … காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் – திருமால்
***
முருகன் = திரு ஞான சம்பந்தர்
செந்தமிழ் …… அங்கவாயா
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா
மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண் கழு மிசைக்கு
இடும் செம் தமிழ் அங்க வாயா … மிக்கு வந்த, வலிய சமணர்களை
பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே,
***
முருகனின் கொஞ்சும் தமிழ்
கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்
தமிழைப் பகர்வோனே … கொன்றை மலர் அணிந்த சடையுடைய
சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்
தெரியும்படி கொஞ்சு ம் தமிழில் கூறியவனே,
***
அகஸ்தியன் = சிவபெருமான்
சிவனைநிகர் … சிவனுக்கு ஒப்பான
பொதியவரை முனிவன் … பொதியமலையைச் சார்ந்த முனிவன்
(அகத்தியன்)
அகமகிழ … உள்ளம் மகிழ
இரு செவிகுளிர … அவனது இரண்டு செவிகளும் குளிர,
இனியதமிழ் பகர்வோனே … இனிய தமிழை ஓதியவனே
***
கயிலை மலை = திருச்செந்தூர்
கயிலைமலை யனைய செந்தில் … திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில்
***
அலரிமதி,மகபதி,நிருதி, நிதிபதி
அலரிமதி நடுவன் … சூரியன், சந்திரன், யமன்,
மகபதி முளரி … இந்திரன், அக்கினி,
நிருதி நிதிபதி … நிருதி, குபேரன்,
கரிய வனமாலி … கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,
நிலவுமறை … நிலைத்த பிரமன்,
***
நாரதர் புகழ்ந்த வள்ளி
நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் … புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்
புகல் குற மாதை … முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை
****
நஞ்சுமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் = பிள்ளையார்
மூஷிகம் உந்திய ஐங்கர … மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து
கரத்தாரும்,
கணராயன் மம விநாயகன் … கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும்,
நஞ்சுமிழ் கஞ்சுகி அணி … விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த
கஜானன விம்பன் … யானை முகத்தை உடையவரும்,
ஒர் அம்புலி மவுலியான் … பிறைச் சந்திரனைத் தலைமுடியில்
தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி
உறு சிந்தை யுகந்தருள் இளையோனே … மிகவும் மனமகிழ்ந்து
அருளத் தக்க இளைய பெருமானே,
***
சங்கரன், சங்கரி, கங்கை–க்குப் புதல்வன்
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய் … உலகங்களை
எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு
இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே,
***
கண்ணன் குழல் இசைத்தால் புலியும் பசுவும் நட்பு பாராட்டும்! மலை உருகும்!!
Venu Gopala ,Somnathpur, Karnataka
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை
முலை அமுது உ(ண்)ண … குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி
குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,
நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்
உருகா … பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்
பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,
நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட … நீண்ட
காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,
மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்
பறவைகள் நிலம் வர … மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,
விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய …
தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்
(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற
இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்
நெடியவன் மனமகிழ் மருகோனே … இசைகளால் பற்பல
நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்
பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,
***
பம்பரம் போல ஆடும் தேவி!
Dancing Devi, Somnathpur, Karnataka
பம்பரமேபோல ஆடிய சங்கரி … பம்பரம் போலவே சுழன்று
நடனம் ஆடும் சங்கரி,
வேதாள நாயகி … வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
தலைவி,
பங்கய சீபாத நூபுரி கரசூலி … தாமரை போன்ற திரு நிறைந்த
பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
தரித்தவள்,
பங்கமி லாநீலி மோடிபயங்கரி … குற்றமில்லாத கருநீல
நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்)
மாகாளி யோகினி … மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
அன்னை பார்வதி,
To be continued…………………………..
Tags- திருப்புகழில், அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளம்- Part 1 ,திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருப்புகழ்