Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38 (Post.15,363)

Written by London Swaminathan

Post No. 15,363

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Last Post-Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37 (Post.15,324);  Date uploaded in London –  30 December 2025)

சாமரமும் சடாரியும் Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

(English matter follows Tamil write up)

சாமரமும் சடாரியும்

பெருமாள் கோவில்களுக்குச் சென்றால் இரண்டு விஷயங்களைக் காணலாம் . ஒன்று சடாரி, இரண்டு சாமரம் ; இவைகளில் சாமரம் என்பது பொதுவானது. அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் இருபுறமும் சேவகர்கள் நின்று சாமரத்தை வீசுவார்கள் . சடாரி என்பது பெருமாள் கோவில்களில் பெருமாளைச் சேவித்த பின்னர் பக்தர்களின் தலையில் அர்ச்சகர்கள் வைப்பார்கள் .

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை வேண்டும்போது இறைவனின் திருப்பாதம் தங்கள் தலையின் மேல் பட வேண்டும் அல்லது பக்கதர்களின் காலிலிருந்து வரும் தூசி பாட வேண்டும் என்று வேண்டுகிறார்கள்; பக்தர்கள் காலில் உள்ள தூசி பாத தூளி எனப்படும்.

அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார் :

(அடியார்கள் தொழும் உன் பாதம் என் மீது பட வேண்டும்)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்

கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்

பதம் தந்து உனது அருள் தாராய்

***

ஆழ்வார்களில் நம்முடையவர் என்று நாம் உரிமை கொண்டாடும் ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். அவருடைய  உண்மைப் பெயர் சட கோபன் என்பதாகும்; இவரைத் தொடர்பு படுத்திச் சடாரிக்கு விளக்கம் தருகிறார்கள் ஆன்றோர்கள்.

சடாரி என்னும் உலோகத்தினால் ஆன கிரீடத்தில் பெருமாளின்/ விஷ்ணுவின் திருப்பாதங்கள் இருக்கின்றன . கோவிலில் பெருமாளின் தரிசனம் முடிந்து துளசியையும் தீர்த்தத்தையும் நாம் பெற்ற பின்னர், இந்த சடாரி என்னும் திருப் பாதத்தைத் நம் தலை மீது பட்டர்கள் வைக்கும்போது நாம் பய பக்தியுடன் நம் வாயையும் மூக்கினையும் கையால் மறைத்து தலையைக் குனிந்து காட்டவேண்டும். நம்முடைய வாயிலிருந்தும் மூக்கிலிருலிருந்தும் வரும் காற்றும் எச்சிலும் சடாரி என்னும் கிரீடத்தின் மீது படாமலிருக்க இப்படிச் செய்கிறோம். சங்கராசார்யார்கள், ஜீயர் போன்றோரை வணங்கும் போதும் இப்படிச் செய்யவேண்டும்.

இறைவனின் பாதங்களுக்கு தனி மதிப்பு உண்டு; உலகம் முழுதும் இந்துக்கள் வணங்கும் இடங்களில் பாத சுவடுகள் பதித்திருப்பதைக் காண்கிறோம். அவைகளை சிவன் பாதம் அல்லது விஷ்ணு பாதம் என்கிறோம். சில இடங்களில் ஆஞ்சனேயர் பாதம் இருப்பதாகவும் சொல்கிறோம். இமயம் முதல் இலங்கை வரை இதைக் காணலாம் இத்தகைய பாதங்களை ராமனிடம் பெற்ற பரதன் அவைகளைத் தலைமேல் சுமந்து சென்று 14 ஆண்டுகள் பூஜித்ததை நாம் ஓவியங்களிலும் பாடல்களிலும் சிற்பங்களிலும் காண்கிறோம். . இவ்வளவு மகிமை வாய்ந்தது இறைவனின் திருப்பாதங்கள்

இந்தப் பாதங்கள் உடைய கிரீடத்துக்குப் பெருமாள் கோவில்களில் சடாரி என்று சொல்வதற்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது; சடம் என்றால் நமது பிறப்பு , உயிர்வாழ்தல் என்று பொருள்; கருப்பையில் இருக்கும்போதும் அதை ஜடம் என்கிறோம் . இதை பஜ கோவிந்தம் முதலிய துதிகளில் காணலாம்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே .21

—பஜ கோவிந்தம் துதி

ஜடமாகப் பிறந்த நம்மாழ்வார் அந்த ஜடத்துக்குப் — பிறப்புக்கு எதிரியாக — அரி– ஆக ஆனார் . அரி என்றால் எதிரி, விரோதி என்று பொருள் . அவரை நினைவு படுத்தும் வகையில் சடாரி வைக்கப்படுகிறது என்பது ஒரு விளக்கம்.

ஆயினும் தமிழ் அல்லது சம்ஸ்க்ருத இலக்கணப்படி இது சரியாகத் தோன்றவில்லை ; எது எப்படியாகிலும் பெருமாளின் பாதங்கள் நம் தலை மீது படுவதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் . இது நம் தலையின் மீது படும்போது நாம் நினைக்கும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை

நம் நாட்டின் வடக்கில் விஷ்ணு கோவில்களில் இந்த வழக்கம் இல்லை . இது தமிழ் நாட்டு வைணவர்களின் கண்டுபிடிப்பு! அதுவும் நம்மாழ்வாரைத் தொடர்பு படுத்துவதால் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத்தான் வழக்கில் இருந்திருக்க வேண்டும் . இறைவனின் பாதங்கள் பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும் சடாரி பற்றிய பாடல்களோ கல்வெட்டுக் குறிப்புகளோ இருக்கிறதா என்பதை ஆராய்வது நமது கடமை.

***

சாமரம்

சாமரம் என்பது கவரிமான் அல்லது இமயமலை மாடுகளின் முடியிலிருந்தது தயாரிக்கப்படுகிறது. அரசர்கள் அல்லது தெய்வங்களுக்கு இரு புறமும் நின்று இதை வீசுவார்கள், அத்தோடு விசிறியையும் வீசுவார்கள் . மன்னர்களுக்கு வியர்க்காமல் இருக்கவும் கொசு அல்லது ஈ மொய்க்காமல் இருக்கவும் இந்த வழக்கம் தோன்றியிருக்க வேண்டும் . இப்போதும் அமெரிக்காவில் கால்பந்து முதலிய போட்டிகளில் சியர் லீடர்ஸ் Cheer Leaders இது போல சாமரம் வீசுவதைக் காணலாம்.

கவரிமான் என்பதை சாமரி என்றும் சொல்வார்கள். திருவள்ளுவரும் இந்த மானைக் குறிப்பிடுகிறார்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.   ( 969)

***

Cataari and Caamaram (chaamaram)

Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

Catari is shaped like a metal crown with two feet figures on it. The two feet figures represent Lord Vishnu’s feet. Vaishnavite temples have this and bless the devotees with it. After worshipping God in the Garbhagriha Mandapa, the Bhattacharyas or priests serve Tulsi and Theertham (holy water) and then bless the devotees by placing it on the head of the devotees.

 This custom has been in vogue from the days of Nammalvar , a famous Tamil Vaishnavite saint. Scholars say he was the enemy (ARI) of Jatam (catam in Tamil) and hence it is called Catari . Though Tamil or Sanskrit grammar do not support it, this explanation is accepted by the devotees.

The meaning of Jatam/ catam is as follows:

According to Vedanta, Jatam is a term that signifies the material world or physical existence. We come across Jata in Bhaja Govindam too.

पुनरपि जननं पुनरपि मरणं

पुनरपि जननी जठरे शयनम् |

इह संसारे बहु दुस्तारे

कृपयाऽपारे पाहि मुरारे ‖ 22 ‖

punarapi jananaṃ punarapi maraṇaṃ

punarapi jananī jaṭhare śayanam |

iha saṃsāre bahu dustāre

kṛpayā’pāre pāhi murāre ‖ 22 ‖

Birth again, death again, again resting in the mother’s womb! It is indeed hard to cross this boundless ocean of saṁsāra (cycle of repeated birth and death). O Murāri! by your causeless mercy please protect me (from this transmigratory process).

***

CAMARAM

Caamaram is fly whisk. It is used in the royal assemblies and temples. It is made up of the hair from a special type of deer or Tibetan Yak. Even Tiru Valluvar used it in his Tirukkural Couplet.

The yak, sheared of its hair, does not survive. The noble, stripped of their honour, prefer death – Tirukkural 969

or

Hair lost, the yak lives not. Honour lost, noble men leave their life-

Kural 969

On either side of a King on the throne or the god in the temple servants or devotees shake or show the fly whisks. Maybe it is to drive away the flies and mosquitoes. Even in America, we see cheer leaders showing something like fly whisks in sports matches.

In Hindu temples pair of Caamarams or fly whisks are used particularly during festival time. When the gods ae taken in procession, the devotees honour the god with the fly whisks.

–subham—

Tags -38Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38, சாமரம், நம்மாழ்வார், சடாரி, Catari, Caamaram, Fly whisk, Nammalvar,  

Leave a comment

Leave a comment