

Sahasralingam in Bihar
Post No. 15,379
Date uploaded in Sydney, Australia – 31 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் முருகப்பெருமானுக்கு அவர் விடுத்த வேண்டுதல்கள் என்ன, என்ன என்று காண்போம்:
பண்டிகைகள்
1-தைப்பூசம்; வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்;15- மஹா சிவராத்திரி
01-02-2026 – ஞாயிறு, பவுர்ணமி
17-02-2026 – செவ்வாய், அமாவாசை
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 13, 27
முகூர்த்த நாட்கள்
06-02-2026 – வெள்ளி; 08-02-2026 – ஞாயிறு; 15-02-2026 – ஞாயிறு,;
16-02-2026 – திங்கள்; 20-02-2026 – வெள்ளி
(திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்ப் பாடல்கள்)
பிப்ரவரி 1 ஞாயிற்றுக் கிழமை
(யமதூதர் எருமையின் மீது வரும்போது )
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து
நைந்து அல முறுபொழுது அளவைகொள் கணத்தில்
என்பய மற மயில் முதுகினில் வருவாயே.
***
பிப்ரவரி 2 திங்கட் கிழமை
(பிறவித் துன்பம் அகல வேண்டுகோள்)
பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் …… புரிவாயே
***
பிப்ரவரி 3 செவ்வாய்க் கிழமை
(அடியார்கள் தொழும் உன் பாதம் என் மீது பட வேண்டும்)
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்
கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்
பதம் தந்து உனது அருள் தாராய்
***
பிப்ரவரி 4 புதன் கிழமை
சந்ததம் பந்தத் …… தொடராலே
சஞ்சலந் துஞ்சித் …… திரியாதே
கந்தனென் றென்றுற் …… றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ
***
பிப்ரவரி 5 வியாழக் கிழமை
(இனிமேலாவது உன் பாத கமலங்களைப் பணியவேண்டும்)
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் …… அடைவேனோ
***
பிப்ரவரி 6 வெள்ளிக் கிழமை
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் …… டருள்வாயே
***
பிப்ரவரி 7 சனிக் கிழமை
(ஆசை மயக்கம் நீங்க அருள்புரிவாயாகுக)
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் …… றருள்வாயே
***
பிப்ரவரி 8 ஞாயிற்றுக் கிழமை
(விலைமாதர் வசம் வீழாதிருக்க அருள்புரி )
இங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா …… தருள்வாயே
***
பிப்ரவரி 9 திங்கட் கிழமை
(இரவு ம் பகலும் ஆசையில் அமிழாமல் உன்னைப்பட்ட அருள்புரி)
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் …… றருவாயே
***
பிப்ரவரி 10 செவ்வாய்க் கிழமை
(கடைக் கண்காட்டி அருள்புரி )
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் …… றருளாயோ
***
பிப்ரவரி 11 புதன் கிழமை
(சிவ யோக ஞானத்தில் உருகும் நிலை வேண்டும் )
தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து உருகு ஞான
பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பணி
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே
***
பிப்ரவரி 12 வியாழக் கிழமை
(தினமும் அதிகமாக அருள வேண்டும் )
வடிப்பம் தான் எனவே எனை நாள் தொறும் அதிக்கம் சேர்
தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்
***
பிப்ரவரி 13 வெள்ளிக் கிழமை
(உன் திருப்புகழ் பெருமை தெரியும்படி அருள வேண்டும்)
கோடு ஆர் செம்பொற் றோளா
நின்சொற் கோடாது என்கைக்கு அருள்தாராய்
***
பிப்ரவரி 14 சனிக் கிழமை
(பிறவிப் பிணியை அகற்று)
அம் திண் செகத்து அஞ்சும் கொடு மாயும் தியக்கம் கண்டு
உயக் கொண்டு
என் பிறப்(பு) பங்கம் சிறைப் பங்கம் சிதைத்து உன்றன்
பதத்து இன்பம் தருவாயே
***

Mrtyunjaya Mantra from Yajur Veda
பிப்ரவரி 15 ஞாயிற்றுக் கிழமை
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் …… திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் …… வரவேணும்
***
பிப்ரவரி 16 திங்கட் கிழமை
(உண்டு களித்திருக்கும் என்னைக் காப்பாற்று )
உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங் …… குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் …… சடிசேராய்
***
பிப்ரவரி 17 செவ்வாய்க் கிழமை
தந்து இலன் விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து
அன்புறாதோ ..
***
பிப்ரவரி 18 புதன் கிழமை
உம்பர்கள் ஸ்வாமி நமோநம எம்பெருமானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம எனநாளும் உன்புகழேபாடி
நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட
வீணாள்படாதருள் புரிவாயே
***
பிப்ரவரி 19 வியாழக் கிழமை
செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே
***
பிப்ரவரி 20 வெள்ளிக் கிழமை
(கண்டவர்களைப் புகழாமல் உன்னையே துதிபாட அருள்புரி)
உலகோரை துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ
என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே …
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை
தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே
***
பிப்ரவரி 21 சனிக் கிழமை
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே
துன்புறாமே
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில்
ஆள்வாய்
***
பிப்ரவரி 22 ஞாயிற்றுக் கிழமை
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை
அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே
***
பிப்ரவரி 23 திங்கட் கிழமை
வன்கானம்போய் அண்டா முன்பே … கொடும் சுடுகாட்டுக்கு
அருகில் நெருங்குவதற்கு முன்பாக
வந்தே நின்பொற்கழல்தாராய் … என்முன் தோன்றி உன் அழகிய
திருவடிகளைத் தந்தருள்வாயாக.
***
பிப்ரவரி 24 செவ்வாய்க் கிழமை
(எருமை மீதேறி எமன் வருகையில் அஞ்சாதே என்றும் என்னை உனக்கு வேண்டியவன் FRIEND என்றும் சொல்லவேண்டும் )
ஒருமகிட மிசையேறி அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில்
அஞ்ச லெனவலிய மயில்மேல் நீ அந்த மறலியொடு உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய வருவாயே
XXX
பிப்ரவரி 25 புதன் கிழமை
(தேவர்கள் தொழும் உன் பாதங்களை தொழ அருள் புரி)
உம்பர் தொழும்பத கஞ்சம் தம் தஞ்ச மெனும்படி
என்றென்றுந் தொண்டு செயும்படிஅருள்வாயே .
***
பிப்ரவரி 26 வியாழக் கிழமை
இனிமையில் ஒன்றாய்ச் சென்று உட்படும் மனம் உன் தாட்கு
அன்பு உற்று இயல் இசை கொண்டு ஏத்து என்று உள்
தருவாயே … இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக.
***
பிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை
யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுக உயிர் மங்கு பொழுது
கடிதே மயிலின்மிசை வரவேணும்
***
பிப்ரவரி 28 சனிக் கிழமை
நிந்தைப் புலையேனை … நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை,
காரண காரிய லோகப்ரபஞ்சச் சோகமெலாம் அற … காரண,
காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும்,
வாழ்வுற நம்பிற் காசறு வாரி … நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன் குற்றமற்ற செல்வமாகிய
மெய்ஞ் ஞான தவஞ்சற்றருளாதோ … உண்மை ஞானமான
தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ?
–SUBHAM—
TAGS- அருணகிரிநாதர் வேண்டுதல்கள், பிப்ரவரி 2026 காலண்டர்