Post No. 15,382
Date uploaded in Sydney, Australia – 1 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செட்டியார் ஜாதி ருத்ரஜன்மன் கதை
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தின்
உதித்து அருள் வித்தக ருத்ர ஜன்மப் பெயர் செப்பி இட
பரிவாலே சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சனக் குமரர்க்கும்
அநுக்ரக … சடை மகுடத்தவனாகிய சிவபெருமானின் ஆணையின்படி மேன்மையான குலத்தில் ஒரு செட்டி இடத்தே தோன்றி, அருளும் ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன்* என்னும் பெயருடன் திகழ்ந்து, அன்புடனே சநகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர் ஆகியோர்களுக்கு அருள் பாலித்தவனே,
மெய்ப் பலகைச் சது பத்து நவப் புலவர்க்கும் விபத்து இல்
ஞான படலத்து உறு லக்கண லக்ய தமிழ்த் த்ரயம் அத்தில்
அகப் பொருள் வ்ருத்தியினைப் பழுது அற்று உணர்வித்து
அருள்வித்த வித்தக சற்குருநாதா … சங்கப்பலகையில்
வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத
முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய)
அகப்பொருள் விளக்கத்தை குற்றமின்றி உணர்வித்து அருளிய
வித்தகனே, சற்குரு நாதனே,
பவளக் கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில்
பல முத்து உதிர் செய்ப் பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
பெருமாளே. … பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின்
உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே.
*(மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இடையே போட்டியும் பொறாமையும் வெடித்தது . ஒவ்வொரு புரும் தன்னுடைய கவிதையே சிறந்தது என்று சொன்னபோது விவாதம் ஏற்பட்டது , அப்போது சிவபெருமான் சொன்னபடி, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது பாடலையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் பாடல்களைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் கவிதையே சிறந்தவை என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.- திருவிளையாடல் புராணம்.)
***
ரஷ்ய விண்வெளி வீரர் யுரி ககாரினை விட வேகமாக முதன் முதலில் பூமியைச் சுற்றியது முருகன்தான் !
கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு
நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,
விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*
நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு
இளையவனே,
வடவரையின் முகடு அதிர … வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா … ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,
***
சுக்ரீவன் 11 ருத்திரர்கள் பற்றி
இரவி குலத்தி ராசத மருவி … சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு
எதிர்த்து வீழ்கடு ரணமுக … (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,
சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு … சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,
நீண்முடி அரசது பெற்று வாழ்வுற … அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு
இதமொடளித்த ராகவன் மருகோனே … அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை …
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்
பரிவொடு நிற்கும் ஈசுர … அன்போடு எழுந்தருளியிருக்கும்
ஈஸ்வரனே,
(11 ருத்திரர்கள் பின்வருமாறு: மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.)
***
திருமாலின் பெருமை
பரிவு சேர் கமல ஆலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி
நாரணர் பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே …
அன்பு கொண்டு தாமரைக் கோயிலில் வாழ்கின்ற லக்ஷ்மியின்
மார்பைத் தழுவுகின்றவராகிய திருமால், பாவங்களைப் போக்கும்
நாராயணர், பழமை வாய்ந்த, மாயையில் வல்லவரும், பெரிய
தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே.
***
சமணர்கள் பற்றி
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த
பெருமாளே. … தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய
சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து,
பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(சம்பந்தர், அப்பர் , அருணகிரிநாதர் பாடல்களில் குண்டர்களென்று வசைபாடப்படும் ஜைனர்கள் , அரசியலில் ஈடு பட்ட சமணர்கள் ஆவர். சமண மத்திலுள்ள பாமரர்கள் உலக மஹா சாதுக்கள் )
***
திருப்புகழின் பெருமை
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை
செயித்தருளும் இசைப் பிரிய திருத்த மாதவர் புகழ்
குருநாதா … திருப்புகழை உரைப்பவர்களுடையவும்
படிப்பவர்களுடையவும் வறுமையும் பகைமையும் தொலைந்து
வெற்றி தந்தருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய சிறந்த
தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே,
***
சம்பந்தர், சுந்தரர் கதை
விருதுகவி ராஜ சிங்க … வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த
மூர்த்தியாக)
உறைபுகலி யூரில் … சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில்
அன்று வருவோனே … அன்று வந்து தோன்றியவனே
பரவை மனை மீதி லன்று … பரவை நாச்சியார் வீட்டுக்கு
(சுந்தரருக்காக) அன்று
ஒருபொழுது தூது சென்ற … ஒரு காலத்தில் தூது நடந்த
பரமனருளால் … பரம சிவனுடைய அருளால்
வளர்ந்த குமரேசா … வளர்ந்த குமரேசப் பெருமானே
***
சொல் அழகு
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா …
இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி
மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே,
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே. … மயில் வாகன
தேவனே, தேவர்களின் பெருமாளே.
***
முஸ்லீம்கள் பற்றி
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் …… உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க …… ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான …… வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ …… தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய …… முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை …… விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு …… மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் …… உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க …… ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான …… வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ …… தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய …… முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை …… விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு …… மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய … தாம்
கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான
கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும், முகமதியர்களும், மாயாவாதிகளும்,
கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர் … கபில முனிவர் நிறுவிய
சாங்கியர்களும், கணாதரின் வைசேஷிகத்தைப் பின்பற்றுவோரும் , (நாத்திகம் பேசும்) உலகாயதர் போன்ற
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு … கலகம்
புரியும் தர்க்கவாதிகளும் , வாம மதத்தினரும், பைரவர்களும்,
தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன்
கலகல என மிக்க நூல்கள் அதனாலே சிலுகி எதிர் குத்தி
வாது செயவும் … சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற்
கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும்,
ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் …
ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான,
வீடு தரும் பொருளான உபதேசத்தை,
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி
எனக்கு நேர்வது ஒரு நாளே … யான் அறியும்படி விளக்கி ஞான
தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத்தந்தருளும் நாள் உண்டோ?
(கணாதர் பற்றியும், கலகம் செய்யும் நாஸ்தீக வாதிகள் /லோகாயதர் பற்றியும் நான் சேர்த்துள்ளேன் )
***
பழனி = சிவமலை
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சிக் குறத்தி மகள் உமை
மருமகள் கொங்கைச் சிலைக்குள் அணை குக சிவ மலை
கந்தப் பெருமாளே. … சிறந்த அழகு பொருந்திய லக்ஷ்மியின்
புதல்வியும், வஞ்சிக் கொடி போன்ற குறமகளும், உமா தேவியின்
மருமகளுமாகிய வள்ளி நாயகியின் மார்பாகிய மலையைத் தழுவும்
குகனே, சிவ மலையில் (* பழநியில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
(இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த சிவ மலை, சக்தி மலைகளுள்,முருகன் வீற்றிருக்கும் பழனி மலை, சிவமலை எனப்படும் – பழனி புராணம்).
***
மூன்று பழனிமலைக்கும் வெவ்வேறு பொருள் (யமகம்)
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக விசாகா …
பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே,
நான்கு பரவு (யமகம்)
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர்
பெருமாளே. … பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி
அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும்,
தேவர்களின் பெருமாளே.
To be continued……………………………….
Tags– அருணகிரிநாதர் , அரிய செய்திகள் -7, முஸ்லீம்கள், சமணர்கள், யமகம், சுந்தரர், செட்டியார் ஜாதி