Post No. 15,385
Date uploaded in Sydney, Australia – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 8
இவை அனைத்தும் பழனி மலை முருகன் பற்றிய பாடல்களில் உள்ளவை!
சென்னை வசவு கஸ்மாலம் !
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு … சிறு குடிலாகிய
இந்த வீடு – உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட
வழுவழுப்பான கொழுப்பும்,
எலும்பு அணி சரி தசை இரல் குடல் … எலும்பும், அடுக்காகச்
சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும்,
நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு … முறையின்றி
சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன்,
இவை பல கசுமாலம் … இவற்றோடு கெட்ட அழுக்குகள்
நிறைந்ததுமான,
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலுள்ள கஸ்மலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பிற்காலத்தில் சென்னை வணிகர்கள் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயன்படுத்தும் வசை மொழியாக மாறிவிட்டது .
श्रीभगवानुवाच ।
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २-२॥
கஸ்மலம் – மதிமயக்கம், தீய எண்ணம்
śrībhagavānuvāca
kutastvā kaśmalamidaṃ viṣame samupasthitam
anāryajuṣṭamasvargyamakīrtikaramarjuna 2-2
The Blessed Lord said: Whence is this perilous condition come upon thee, this dejection, un-Aryan-like, heaven-excluding, disgraceful, O Arjuna?
śrībhagavānuvāca = the Supreme Personality of Godhead said; kutaḥ = wherefrom; tvā = unto you; kaśmalaṃ = dirtiness; idaṃ = this lamentation; viṣame = in this hour of crisis; samupasthitaṃ = arrived; anārya = persons who do not know the value of life; juṣṭaṃ = practiced by; asvargyaṃ = which does not lead to higher planets; akīrti = infamy; karaṃ = the cause of; arjuna = O Arjuna.;
Sanskrit dictionary
[«previous (K) next»] — Kashmala in Sanskrit glossary
Kaśmala (कश्मल).—a. [Uṇ 1.16.] Foul, dirty, disgraceful, ignominious;
தவறான , அழுக்கான, அவமானத்தை உண்டாக்கும், அசிங்கமான
मत्सबंधात्कश्मला किंवदन्ती स्याच्चेदस्मिन्हन्त धिङ् मामधन्यम् (matsabaṃdhātkaśmalā kiṃvadantī syāccedasminhanta dhiṅ māmadhanyam) Uttararāmacarita 1.42.
-lam 1 Dejection of mind, lowness or depression of spirits; delusion (moha); यदाश्रौषं कश्मलेना- भितन्ने (yadāśrauṣaṃ kaśmalenā- bhitanne) Mahābhārata (Bombay) 1.1.181. कश्मलं महदाविशत (kaśmalaṃ mahadāviśata) Mb; कुतस्त्वा कश्मल- मिदं विषमे समुपस्थितम् (kutastvā kaśmala- midaṃ viṣame samupasthitam) Bhagavadgītā (Bombay) 2.2.
***
துயரம் அழிய, வினைகள் ஒழிய மனம் பக்குவம் அடைய
மனது துயரற வினைகள் சிதறிட … மனத்தின் துன்பங்கள்
ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும்,
மதன பிணியொடு கலைகள் சிதறிட … காமநோயும் அவைகளை உண்டாக்கும் கலைகளும் என்னிடமிருந்து நீங்கவும்
மனது பதமுற வெனது தலைபதம் அருள்வாயே … என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக.
****
மதுரையில் விபூதி செய்த அற்புதம் !
பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் அசட்டு
உருக்கள் இடைப் பழுக்கள் உகக் கழுக்கள் புகத் திரு நீறு
பரப்பிய தத் திருப்பதி புக்கு … ரோமத்தை விலக்கிய தலையையும் கள்ள நெஞ்சத்தையும் உடைய சமணக் குருக்களாகிய அறிவில்லாதவர்களின் விலா எலும்புகள் முறிந்து விழ, (அவர்கள்), கழு மரங்கள் ஏறும்படி விபூதியைப் பரவ வைத்த அந்த மதுரையம்பதிக்குச் சென்று,
அனல் புனலில் கனத்த சொ(ல்)லைப் பதித்து எழுதிப்
புக(வி)ட்ட திறல் கவி ராசா … நெருப்பிலும் நீரிலும் பெருமை
வாய்ந்த (தேவாரத்) திருப் பதிகத்தைப் பொறித்து எழுதப்பட்ட
ஏடுகளைப் புகவிட்ட ஞான வலிமையுடைய (சம்பந்தராக வந்த)
கவியரசனே,
(அனல் வாதம், புனல்வாதம் என்ற இரண்டு போட்டிகளிலும் சம்பந்தர் வென்ற திரு விளையாடல் புராண கதைகள்)
செறித்த சடைச் சசித் தரி அத் தகப்பன் மதித்து உகப்பன்
எனச் சிறக்க எழுத்து அருள் கருணைப் பெருவாழ்வே …
நெருங்கி அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த அந்தத்
தந்தையாகிய சிவ பெருமான் பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும் வகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய கருணைச் செல்வமே,
திகழ்ப் படு செய்ப்பதிக்குள் எனைத் தடுத்து அடிமைப்
படுத்த அருள் திரு பழநிக் கிரிக் குமரப் பெருமாளே. …
விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு
அடிமை ஆக்கிய அருளாளனே, அழகிய பழனி மலையில்
உறையும் குமரப் பெருமாளே.
***
கும்பு பம்பு சொம்பு தெம்பு
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு
தொழில் வினை புரிபவர் … கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும்
செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் (விலை) மாதர்.
விரகாலும் கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர்
தரு கொடியவர் கடியவர் … சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள்.
***
கலிசை பக்தர் யார்?
வீறு கலிசை வரு சேவகனது* இதயம் மேவும் முதல்வ …
விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே,
வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்
வளர் பெருமாளே. … வயல்களும் குளங்களும் பக்கங்களில்
பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
(மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்).
***
சிவன் செய்த ஐந்து வீரச் செயல்கள்
பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்
இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு
அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு
ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே … சூரியனின்
பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,
***
கண்ணன் செய்த செயல்கள்
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்
அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்
கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி …
இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில்
(இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி,nஅவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய*அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும்,
செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு
தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே … செம்மையான
குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே,
(பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன்
ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.)
***
விருதா ! = வெட்டிப்பயல், உதவாக்கரை
சிவனார் மனங்குளிர … சிவபிரானது மனம் குளிரும்படியாக
உபதேச மந்த்ரம் … ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை
இருசெவிமீதி லும்பகர்செய் … அவரது இரு செவிகளிலும் சொன்ன
குருநாதா … குருநாதனே,
சிவகாம சுந்தரிதன் … சிவகாம சுந்தரியாம் பார்வதியின்
வரபால கந்த … மேன்மையான மைந்தனே, கந்தனே,
நினசெயலேவி ரும்பி … உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி
உளம் நினையாமல் … உள்ளத்தில் நினைக்காமல்,
அவமாயை கொண்டு … கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி,
உலகில் விருதாவ லைந்துழலும் … உலகிலே வீணாக அலைந்து
திரியும்
அடியேனை அஞ்சலென வரவேணும் … அடியேனை அஞ்சாதே
எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும்.
அறிவாக மும்பெருக … அறிவு மனத்திலே பெருகி வளரவும்,
இடரான துந்தொலைய … துன்பங்களெல்லாம் தொலையவும்,
அருள்ஞான இன்பமது … நின்னருளால் பெறக் கூடிய ஞான
இன்பத்தை
புரிவாயே … தந்தருள்வாயாக.
***
நவரத்தினமும் நவநதிகளும் !
நவ நதிகள் குமு குமு என வெற்புத் திரள் சுழல … ஒன்பது
நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள்
சுழற்சி உறவும்,
அகில முதல் எழு புவனம் மெத்தத் திடுக்கிடவும் … பூலோகம்
முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும்,
நவ மணிகள் உரகன் உடல் கக்கத் துரத்தி வரும்
முருகோனே … பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள்
வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே,
* ஒன்பது நதிகள்:
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி,
காவேரி, சோணை, துங்கபத்திரை.
* ஒன்பது மணிகள்:
வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
***
அனுமன், விபீஷணன்
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து …
சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து
பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய
விபீஷணன் … (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும்
அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று,
பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்
***
ஐந்து வகைச் சக்திகள்
ஒருமாது சேர்பஞ்ச வடிவி … ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச*
சக்திகளின் கலவையான வடிவழகி,
மோகி யோகங்கொள் மவுன ஜோதி … சிவத்தின் காதலி,
சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி
வடிவினாள் ஆகிய உமா தேவியார்
சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா … சேர்ந்திருக்கிற
இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப்
பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே,
(* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.)
To be continued …………………………………
Tags- நவ மணிகள் பஞ்ச, ஐந்து சக்திகள், நவ நதிகள், விபூதி, கலிசை, விருதா, கஸ்மாலம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் -Part 8, சொல் அழகும், பொருள் வளமும், திருப்புகழ்