சிவ ரகசியம்! (Post No.15,418)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,418

Date uploaded in London – 12 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹா சிவராத்திரி (15-2-2026)

சிவ ரகசியம்! 

ச.நாகராஜன்

சிவராத்திரி மஹிமை 

1.       சிவனும் சக்தியும் இணைந்த புனித தினம்.

2.       சிவ – பார்வதி திருமண தினம் இது.

3.       சிவன் லிங்கமாக புவியில் அவதரித்த இரவு.

4.       மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய பூஜிக்க உகந்த நாள்.

5.       மணமான மங்கையர் மாங்கல்ய பாக்யத்துடன் சகல சௌபாக்கியமும் பெற பூஜிக்க உகந்த நாள் இது.

6.       அனைவரும் தங்கள் பாவத்தைப் போக்கி சகல நலன்களையும் அடைய உகந்த நாள் இது. இரவு விழித்து விரதம் இருந்தால் தீய எண்ணங்கள் விலகும். கோபம், பொறாமை, பேராசை உள்ளிட்டவை அகலும்.

7.       சிவலிங்க அபிஷேகம், சிவ பூஜை உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உகந்த நாள்.

சிவனின் ஐந்து முகங்கள்

1)       சத்யோஜாதம் மேற்கு முகம்

2)       வாம தேவம் – வடக்கு முகம்

3)       அகோரம் – தென் முகம்

4)       தத்புருஷம் – கிழக்கு முகம்

5)       ஈசானம் – ஊர்த்துவ முகம் 

சிவனின் ஐந்து தத்துவங்கள்

லிங்கத்தினுடைய கீழ்ப்பாகம் பிரம பீடமானது, பிரம்ம தத்துவம். கீழ் ஆவுடையார் மற்றும் மேல் ஆவுடையார் விஷ்ணு தத்துவம். சோம சூத்திரம் என்று தீர்க்கமாக உள்ளது இது.

ஆவுடையாரைக் கட்டிக் கொண்டு மேலே லிங்காகாரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் வரிசையில்

கீழ்ப்பாகம் ருத்திரன்

நடுப்பாகம் ஈசுவரன்

மேல்பாகம் சதாசிவம்

ஆக பிரம்ம தத்துவம், விஷ்ணு தத்துவம், உருத்திர தத்துவம், ஈசுவரன், சதாசிவம் என ஐந்து தத்துவம் கொண்டது லிங்கம்.

ஐந்து அக்ஷரம்

 ஐந்து தத்துவம் கொண்ட லிங்கத்திற்காக ‘நமசிவாய என்னும் பஞ்சாக்ஷரம் ஏற்பட்டுள்ளது. –

பஞ்சாமிர்தம்

       சிவனுக்கு உகந்த அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம். இதில் உள்ள    

       ஐந்து பொருள்கள் பால்,தயிர்,நெய்,தேன்,சர்க்கரை .

பஞ்சபூத ஸ்தலங்கள்

பிருதிவி (நிலம்) – திருவாரூர், கச்சி

அப்பு (நீர்) – திருவானைக்கா

தேயு (நெருப்பு) – திருவண்ணாமலை

வாயு (காற்று) – காளஹஸ்தி

ஆகாசம் (ஆகாயம்) – சிதம்பரம்

விராட்புருஷனின் அங்க ஸ்தலங்கள்

காளத்தி  – கழுத்து

சிதம்பரம் – இதயம்

அருணாச்சலம் – வயிறு

திருவானைக்கா – நாபி

திருவாரூர்  – மூலாதாரம்

சிவனும் சக்தியும்

அம்பிகையின் கையில் லிங்கம் உள்ள தலம் கேதாரம்

அம்பிகை கட்டிக் கொண்டு அவயவங்கள் லிங்கத்தில் அழுந்தி இருக்கும் தலம் காஞ்சிபுரம்.

மார்க்கண்டேயரது ருத்ராக்ஷம் அழுந்தி இருக்கும் தலம் திருவீழிமலை.

***

Leave a comment

Leave a comment