ராமாயணத்தில் வரங்கள் (38)  அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,426)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,426

Date uploaded in London – 15 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (38)    

ராமாயணத்தில் வரங்கள் (38) அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன் 

அடுத்து சுந்தரகாண்டத்தில் அங்கதனுடையவும் ஜாம்பவந்தருடையுவம் ஸம்வாதம் என்ற அறுபதாவது அத்தியாயத்தில் அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.

லங்கையிலிருந்து மீண்டு வந்த ஹனுமார் அங்கு நடந்ததனைத்தையும் விவரமாக வானரர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

இதைக் கேட்ட அங்கதன்,  மைந்தன் மற்றும் த்விவிதனைப் பற்றியும் அவர்களின் வல்லமையையும் பற்றி இப்படிக் கூறுகிறான்.

அஸ்விபுத்ரௌ மஹாபாகாவேதௌ ப்லவகசத்தமௌ |

ஏதயோ: ப்ரதியோத்தாரம் ந பஷ்யாமி ரணாஜிரே || 

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 13 

ஏதௌ – இவ்விருவர்கள்

அஸ்விபுத்ரௌ – அச்வினீதேவகுமாரர்களாய்

மஹாபாகௌ  – மஹாபாகர்களான

ப்லவகசத்தமௌ- வானரோத்தமர்கள்

ஏதயோ: – இவ்விருவர்களுடன்

ரணாஜிரே – யுத்தகளத்தில்

ப்ரதியோத்தாரம் – எதிர்த்துப் போர்புரிய வல்லவனொருவனை

ந பஷ்யாமி – நான் அறியேன்

பிதாமஹவரோத்சேகாத் பரமம் தர்பமாஸ்திதௌ |

அம்ருதப்ராஷினாவேதௌ சர்வவானரசத்தமௌ ||

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 14

ஏதௌ – இவ்விருவர்கள்

பிதாமஹவரோத்சேகாத் – பிரம்மாவினுடைய வரத்தின் பெருமையால்

பரமம் – அதிக

தர்பம் – கர்வத்தை

ஆஸ்திதௌ – அடைந்தவர்கள்

அம்ருதப்ராஷினௌ – அமுதத்தை அருந்தினவர்கள்

சர்வவானரசத்தமௌ – எல்லா வானரர்களிலும் மேலானவர்கள் 

அஸ்வினோர்மானனார்தே ஹி சர்வலோகபிதாமஹ: |

சர்வாவத்யத்வமதுலமனயோர்தத்தவான் புரா || 

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 15 

புரா – முன்பு

சர்வலோகபிதாமஹ: – உலகங்களுக்கெல்லாம் பிதாமஹர்

அஸ்வினோ: – அச்வினீதேவர்களின்

மானனார்தம் – கௌரவத்திற்காக

அனயோ: – இவ்விருவர்களுக்கும்

சர்வாவத்யத்வம் – எவராலும் அழிவில்லாமையை

தத்தவான் ஹி – அளித்திருக்கிறார் அன்றோ!

இவ்வாறு கூறிய அங்கதன் ஹனுமாரிடம் நாமே லங்கை சென்று அதை அழித்து விட்டு சீதையை மீட்டுக் கொண்டு வருவோம் என்று வீர மொழி புகல்கிறான்.

இங்கு பிரம்மாவிடமிருந்து எப்போது எதற்காக எப்படி மைந்தனும் த்விவிதனும் வரத்தைப் பெற்றார்கள் என்ற செய்தி தரப்படவில்லை.

அழியா வரம் பெற்றதை மட்டும் வால்மீகி இங்கு குறிப்பிடுகிறார்.

          **        தொடரும் 

Leave a comment

Leave a comment