முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

Written by London Swaminathan

Post No. 15,430

Date uploaded in Sydney, Australia –  17 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 23

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 23

***

திருமால் முருகனின் யானை வாகனம் ஆனார் !

அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்துப்

பலம் ஈவாய் … அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்றயானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப்போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம் அளித்தவனே,

அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை தத்திக்குச் செச்சைத்

தொடை சூழ்வாய் … வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே,

கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக் கைத்தச் சத்திப்

படை ஏவும் … ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும்,

கற்பச் சத்திப் பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே. …

கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.

நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள் ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் – திருமுருகாற்றுப்படை.

** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு இருந்த பெருங் காதலை விளக்கும் – கந்த புராணம்.

****

வல்லினப்ப பாடல் – சொல் வளம் !

கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக்

கொத்து உற்று … கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள

சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து,

உக்குப் பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல்

தத்து உற்றுக் கழல … மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி

செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய,

கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித்

திக்கிக் குளறிச் செப்பி … இழிவான சொற்களைக் கற்று

உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச,

தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை

பேணும் சிக்கு அற்று … தவறுதலான வழியில் சென்று, குப்பை

நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை

விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று,

உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப்

புகலப் பெறுவேனோ … உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம்

வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப்பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு

எதிரிட்டு … அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து,

அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன் … ஆயுதங்களைச்

செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன்

அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள்

புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக … உடம்பு கெட்டுப் போய்,

ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர

உருவத்தை அடைந்து நிற்க,

தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண் …

அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற,

கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட,

கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி …

கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு,

சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய் … சக்தியாகிய

வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே,

சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே. … சக்தியாகிய காமாட்சி தங்கும்

காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.

வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள் மிகுதியாக அமைந்த பாடல்.

***

WORLD’S FIRST MIGRATION AND POPULATION EXPLOSION ANECDOTES

உலகின்  முதல் மைக்ரேஷன்= பாபுலேஷன் எக்ஸ்ப்ளோசன் நிகழ்ச்சி

புயல் அத்தைக் குயில் தத்தைக் கிளை புக்குத் தொளை

பச்சைப் புன முத்தைப் புணர் சித்ரப் புய வீரா … புயலை*

வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே,

புரவிக் கொட்பு இரத அற்றத்து இருள் திக்கிப் படி மட்கப்

புகல் பொன் குக்குட வெற்றிக் கொடியோனே … குதிரைகள்

சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு

தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக்

கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே,

கயில் அச்சுத் தர தத்துச் சயிலத்து உத்தர நிற்கக் கரணிச்

சித்தர் உள் கச்சிப் பதியோனே … பூமியை சமநிலையில்

வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான

நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்து சமமான

நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்*

தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே,

கடலில் கொக்கு அடல்கெட்டுக் கரம் உட்கத் தரம் உட்கப்

பொரு சத்திக் கர சொக்கப் பெருமாளே. … (சூரனாகிய) மாமரம்

வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக,

மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த

சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே.

இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள்

தேவயானைக்கும் வாகனம்.

** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது. சிவபெருமான் ஆணையின்படிஅகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.

வட நாட்டிலிருந்து அகத்தியர் 18  குடிகளுடன் தென்னாட்டிற்கு வந்த நிகழ்ச்சிஉலகின் முதல் குடிப் பெயரேற்றம் ஆகும்.மேலும் உலகத்தின் முதல் ஜனத் தொகைப் பெருக்க நிகழ்ச்சியும் இதுதான்.பைபிளில் உள்ள யூதர் (EXODUS) குடியேற்றத்துக்கும் முந்தியது இது !

****

திருப்புகழில் பஞ்ச பாண்டவர் பெயர்கள்

கருமமான பிறப்பற … வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு

ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும் … ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும்,

கலக காரண துற்குண சமயிகள் … குழப்பத்தை விளைவிக்கும்

பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின்

நானா வர்க்கக் கலைநூலின் … பலவிதமான சாஸ்திர நூல்களில்

வரும் அநேக விகற்ப விபரித … சொல்லப்பட்ட அனேக

மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான

மனோபாவத்துக்கு அரிதாய … மன உணர்ச்சிக்கு எட்டாததான,

மவுன பூரித சத்திய வடிவினை … மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை

மாயா மற்குப் புகல்வாயே … நான் இறப்பின்றி விளங்குவதற்காக

உபதேசித்து அருள்வாயாக.

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி … தருமன்,

வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி,

சமர பூமியில் விக்ரம வளைகொடு … போர்க்களத்தில் வெற்றிச்

சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி,

நாளோர் பத்தெட்டினிலாளும் … நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில்

குரு மகீதல முட்பட … குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக,

உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள … தனது திருவுள்ளம்

கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும்,

குலவு தேர்கடவு அச்சுதன் மருக … (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற

தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே,

குமாரா கச்சிப் பெருமாளே. … குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப்

பெருமாளே.

—-SUBHAM—

TAGS- திருமால், முருகனின், யானை வாகனம் , திருப்புகழில் அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part -23, பஞ்ச பாண்டவர்

Leave a comment

Leave a comment