WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,455
Date uploaded in London – 25 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (42)
ராமாயணத்தில் வரங்கள் (42) விஸ்வகர்மா நளனுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’
என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் விஸ்வகர்மா நளனுக்கு அளித்த இன்னொரு வரம் பற்றிய குறிப்பையும் காண்கிறோம்.
சமுத்திரராஜன் வானர சேனையில் இருந்த நளன் என்பவனைச் சுட்டிக் காட்டி ராமரிடம் கூறலானான்:
அயம் சௌம்ய நளோ நாம தனுஜோ விஸ்வகர்மண: |
பித்ரா தத்தவர: ஶ்ரீமான்ப்ரதிமோ விஸ்வகர்மணா ||
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண் 44
சௌம்ய – சாந்தமூர்த்தியே!
அயம் – இந்த
நள: – நளன் என்ற
நாம – பெயருடையவன்
விஸ்வகர்மண: – விஸ்வகர்மாவினுடைய
தனுஜ: – புதல்வன்
பித்ரா – தந்தையால்
தத்தவர: – வரத்தைப் பெற்ற
ஶ்ரீமான் – பாக்கியசாலி
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவிற்கு
ப்ரதிம: – சமமானவன்
“இதோ இருக்கும் இவன் நளன் என்ற பெயரை உடையவன். இவன் விஸ்வகர்மாவினுடைய புதல்வன்.தந்தையால் வரம் பெற்ற பாக்கிய சாலி. இவன் விஸ்வகர்மாவிற்குச் சமமானவன்”
இந்த நளன் என் மீது அணையைக் கட்டட்டும். நான் அதை ஜாக்கிரதையாகப் பாதுகாப்பேன். தந்தை எப்படியோ அப்படியே தான் இவனும்!”
இப்படிக் கூறி விட்டு சமுத்திரராஜன் மறைந்தான்.
உடனே நளன் ராமரிடம், “நான் அணையைக் கட்டுவேன்” என்று உற்சாகமாகக் கூறினான்.
அணை எழுந்தது. ராமர் வானரப் படையுடன் லங்கைக்குச் சென்றார்.
இந்த வரம் எப்படி எப்போது எதற்காக விஸ்வகர்மாவினால் நளனுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை.
நளன் வரம் பெற்ற செய்தி மட்டும் குறிப்பிடப்படுகிறது.
**