Post No. 15,472
Date uploaded in London – 8 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
எவையெல்லாம் நற்குணங்கள்? பர்த்ருஹரியின் பட்டியல் இதோ!
ச. நாகராஜன்
நல்லவர்களுடன் பழகினால் நாளும் நலமும் வளமும் பெருகும்.
ஆனால் அவர்களிடம் உள்ள குணங்கள் யாவை?
அதை எப்படி அறிவது/
கவலையே வேண்டாம், கவிஞர் பர்த்ருஹரி ஒரு பட்டியலையே தருகிறார்- தனது சுபாஷித த்ரிசதியில்!
அதைப் பார்த்தால் போதும், நல்லவர்கள் யார் என்று இனம் கண்டு விடலாம்.
வாஞ்சா ஸஜ்ஜன சங்கதௌ
பரகுணே ப்ரீதி குரௌ நம்ரதா
வித்யாயாம் வ்யஸனம் ஸ்வயோஷிதி
ரதி: லோகாபவாதாத் பயம் |
பக்தி: சூலிநி சக்தி ராத்ம தமநே
ஸம்ஸர்க முக்தி: கலை:
ஏதே யேஷு வஸந்தி நிர்மல குணா:
தேப்யோ மஹத்ம்யோ நம: |\
சுபாஷித த்ரிசதி – நீதி சதகம் – 51ம் ஸ்லோகம்
இதன் பொருளை விரிவாகப் பார்ப்போமா?
ஸஜ்ஜன சங்கதௌ – நல்லவர்களுடன் சேர்க்கையில்
வாஞ்சா – ஆசையும்
பரகுணே – பிறர் குணத்தில்
ப்ரீதி – நட்பும்
குரௌ – குருவிடத்தில்
நம்ரதா – வணக்கமும்
வித்யாயாம் – கல்வியில்
வ்யஸநம் – ஆஸக்தியும்
ஸ்வயோஷிதி – தான் உரிமை கொண்ட பெண்ணிடத்தில் (மட்டும்)
ரதி – காமமும்
லோகாபவாதாத் – உலகின் அபவாதத்தில்
பயம் – பயமும்
சூலினி – ஈஸ்வரனிடத்தில்
பக்தி: – பக்தியும்
ஆத்ம தமனே – தன்னை அடக்கிக் கொள்வதில்
சக்தி: – சாமர்த்தியமும்
கலை: – துஷ்டர்களுடன்
ஸம்ஸர்க்க முக்தி: – பழகுவதை விடுவதும்
நிர்மல குணா: – ஆகிய இந்த அழுக்கற்ற குணங்களானவை
யேஷு – எவர்களிடம் இருக்கின்றனவோ
தேப்ய: மஹத்ப்ய: – அந்தப் பெரியோர்களின் பொருட்டு
நம: – நமஸ்காரம்.
நல்லவர்களின் சேர்க்கையில் ஈடுபாடு,
பிறருடைய குணங்களை மதிக்கும் குணம்,
குருவிடத்தில் விநயம்,
தன் மனைவியிடத்தில் காமம், (செக்ஸ் உறவு)
லோக அபவாதத்தில் பயம்,
ஈஸ்வரனிடத்தில் பக்தி,
தன்னை அடக்கிக் காத்துக் கொள்ளும் சக்தி,
கெட்டவர்களுடனான பழக்கத்தை விடுதல்,
ஆகிய இந்த குணங்கள் அனைத்தும் எவரிடம் இருக்கின்றனவோ அந்த மஹான்களுக்கு (நமது) நமஸ்காரம்!
வாழ்க்கையில் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக் கூடாது, இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும், கடவுளிடம் பக்தி, குருவிடம் மரியாதை என்று இன்ன பிற நல்ல குணங்கள் அனைத்தையும் சுட்டிக் காட்டி விடுகிறா கவிஞர் பர்த்ருஹரி!
அவருக்கு முதலில் நமது நமஸ்காரம் உரித்தாகுக!
**