Post No. 15,478
Date uploaded in Kumbakonam, India – 9 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மயூரநாதர் மஹிமை
காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்தின் இறைவனை சம்பந்தரும் அப்பரும் பாடியுள்ளனர். இதனால் இது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பை அடைந்துவிட்டது தெளிவாகிறது அதற்குப் பின்னர் அருணகிரிநாதரும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
பார்வதி தேவி மயில் வடிவில் (மயூரம்) சிவனை வழிபட்டு சாபம் நீங்கிய தலம். 165 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரத்துடன், சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பழமையான கோயில், திருவாடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது
கோவிலில் உள்ள விநாயகருக்கு அகஸ்திய விநாயகர் என்று பெயர் .
கோவிலின் விமானம் த்ரிதள விமானம் ஆகும். இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளார் .
சுவாமி பெயர்- மயூர நாதர்
அம்மன் பெயர் – அபயாம்பிகை
முக்கிய சந்நிதியில் உள்ள மூர்த்தி தானாகாத் தோன்றிய சுயம்பு லிங்கம் ஆகும் . அம்மையானவர் மயில் உருவத்தில் இறைவனை வணங்கிய இடம்
தல விருட்சம் – மாமரம்
கோவிலில் ஆதி மயூரநாதர் சந்நிதியும் உள்ளது . அங்கு மயில் வடிவத்தில் அம்மனைக் காணலாம்
இங்குள்ள நடராஜருக்கு பெருமை உண்டு. அவர் ஆடும் நடனம் கெளரி தாண்டவம் என்றும் மயூர தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது . தனி சந்நிதியில் அவரைத் தரிசிக்கலாம் .
தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்றதால் பார்வதியை மெய்யில் கப் போகுமாறு சபித்ததாகவும் அவர் மயில் வடிவத்தில் கணவனைத் தொழுது கரை ஏறினார் என்பதும் புராணக் கதை
கோவிலின் உள்ளே செல்லும் போது குளம் இடது புறத்தில் அமைந்துள்ளது.
· இங்குள்ள இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்றும், நடனத்தில் தேர்ச்சி பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
· புராண பெயர்: சக்ராபுரி, பிரம்மவனம், சக்ராண்டபுரம், சத்யாபுரம் (மயிலாடுதுறை).
· விழாக்கள்: ஐப்பசி மாத காவேரி துலா முழுகு (முழுக்கு) விழா இங்கு மிகவும் பிரபலமானது.
வரலாறு மற்றும் கட்டிடக்கலை:
- இக்கோயில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது, பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கப்பட்டது.
- இக்கோயிலில் 16 க்கும் மேற்பட்ட சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.
பிரகாரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
கோவிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் காகத்துடன் கூடிய சனி பகவானைத் தவிர தலையில் தீச் சுவாலையுடன் டிய தேஜஸ் சனி பகவானும் இருக்கிறார் துர்க்கை தேவியும் காலடியில் அரக்கர்களுடன் காட்சி தருகிறார் . ஒவ்வொரு சந்நிதியிலும் ஏதேனும் ஒரு புதுமை உள்ளது .
அபயாம்பிகை சந்நிதி தனியே உள்ளது
நிலைமை சொல்லு நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாய நல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின் மேலும், மனத்துளும் தங்கவே
– திருநாவுக்கரசர் தேவாரம்
மயிலாடுதுறை துலா ஸ்நானம் மிகவும் பிரசித்தமானது ஐப்பசி மாதம் முழுதும் காலையில் பக்தர்கள் நீராடி, கார்த்திகைமாத முதல் நாளில் அதைப்பூர்த்தி செய்வார்கள் .
***
மயிலாடுதுறை தேவாரம் :சம்பந்தர் பாடியது
கரவின் றிநன்மா மலர்கொண்டு1
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே. 1.38.1
***
எனது விஜயம்
Lo ndo Swamiathan in front of Mayuram Temple
நீண்டகாலத்துக்குப் பின்னர் மாயவரம் மயூரநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும்( 5-3-2026 )பாக்கியம் கிடைத்தது . சுமார் 60 வருடங்களுக்கு முன்னால், குல தெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க மதுரையிலிருந்து வந்து மாயவரம் மஹாதானத் தெருவிலுள்ள சித்தப்பா வீட்டில் ஒரிரு நாள் தங்குவோம் . வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பஸ்ஸில் சென்று தரிசனம் முடித்துவிட்டு மயிலாடுதுறைக்குத் (மாயவரத்துக்கு) திரும்புவோம். மாலை நேரத்தில் சித்தப்பா மகன்களுடன் சென்று மயூர நாதரைத் தரிசித்துவிட்டுக் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம் . இப்போதெல்லாம் நேரடியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போவதால் மயிலாடுதுறையில் தங்குவதில்லை . இந்த முறை கும்பகோணம் ஸ்ரீவத்சம் டிவைன் இன் ஹோட்டலில் தங்கியதால் மாயூரத்துக்குச் சென்று சிவபுரம் வேத பாடசாலையில் பெரியவர் ஏ வி சுவாமிநாத சிவாச்சார்யாவைபச் சந்தித்துவிட்டு அவர் அனுப்பிய வேத பாடசாலை மாணவருடன் கோவிலுக்குச் சென்றோம். தரிசனத்தோடு மாலை போட்டு கெளரவிக்கும் பாக்கியமும் பெற்றேன்.
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது என்ற வழக்கு மொழி ஒன்றே மாயவரத் தலம் பற்றிய சிறப்பை நன்கு விளக்கும்.
***
மயிலாடுதுறை தேவாரம் :சம்பந்தர் பாடியது
கரவின் றிநன்மா மலர்கொண்டு1
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே. 1.38.1
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. 1.38.2
ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே. 1.38.3
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே. 1.38.4
தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே. 1.38.5
தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. 1.38.6
அணங்கோ டொருபா கம்அமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே. 1.38.7
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே. 1.38.8
ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே. 1.38.9
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே. 1.38.10
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 1.38.11
–subham-
Tags – மாயவரம் , மயிலாடுதுறை , மயில், மயூரநாதர் , எனது விஜயம், தேவாரம்