SYDNEY TEMPLE, AUSTRALIA
Post No. 15,495
Date uploaded in Kumbakonam, India – 14 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 44
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 44
PICTURES BY A NARAYANAN, SYDNEY, AUSTRALIA
புரத்தார் வரத்தார் … திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும்
சரச்சேகரத்தார் … அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக
பொரத்தான் எதிர்த்தே வருபோது … சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது
பொறுத்தார் பரித்தார் … முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார்,
சிரித்தார் எரித்தார் … பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்,
பொரித்தார் நுதற்பார்வையிலே … பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே.
பினகரித்தோ லுரித்தார் … பின்பு (கஜமுகாசுரனான) யானையின்தோலை உரித்தார்,
விரித்தார் தரித்தார் … அதனை விரித்து ஆடையாக அணிந்துகொண்டார்.
கருத்தார் … (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு
மருத்தூர் மதனாரை … தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்தமன்மதனைகரிக்கோல மிட்டார் … சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின்
கணுக்கான முத்தே … கண்மணியான முத்தையனே,
கதிர்க்காம முற்றார் முருகோனே. … கதிர்காமம் என்ற தலத்தில்சென்று விளங்கிய முருகனே.
****
இடும்பன் காவடி கதை
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று …
யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள்
நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி
மடிபிடிய தாக நின்று தொடர்போது … மடியில் கை போட்டுப்
பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது
மயலதுபொலாத வம்பன் … (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய
பொல்லாத வம்புக்காரன் என்றும்,
விரகுடையனாகுமென்று … வஞ்சனைக்காரன் என்றும்,
வசைகளுடனேதொடர்ந்து அடைவார்கள் … வசைச் சொற்கள்
கூறி என்னை நெருங்குவார்கள்.
கருவியதனாலெ றிந்து … ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை
செய்து,
சதைகள்தனையே யரிந்து … என் சதைகளைத் துண்டுதுண்டாகச்
சேதித்து,
கரியபுனலேசொ ரிந்து விடவேதான் … இரும்பை உருக்கிய கரு
நீரை என் வாயிலே விட்டு,
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் … கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி,
அ(வ்) வேளை கண்டு … என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில்
என் இடரைக் கண்டு,
கடுகிவர வேணு மெந்தன்முனமேதான் … அடியேன் முன்
விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும்.
பரகிரியுலாவு செந்தி மலையினுடனே … திருப்பரங்குன்றத்திலும்,
திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும்,
இடும்பன் பழநிதனிலேயிருந்த குமரேசா … இடும்பனால்*
கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே,
* சூரர்களின் போர்ப் பயிற்சி குரு இடும்பன். அவன் ஒரு சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.
***
ரிஷிகள் பட்டியல்
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி
இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்
வரு முருகோனே … வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,
நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை
தலத்து … அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்
ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வருவோனே … விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்
கொ(ண்)டு பொடி தூளதா எறி … நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும்
கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,
நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. …
நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும்
பெருமாளே.
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று – திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை. கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.
***
காசித் தலத்தில் முருகன்
பூரணச்சிவ ஞான காவியம் … பரிபூரணமான சிவஞான நூல்களை
ஓதுதற்புணர்வான நேயர்கள் … ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள
அன்பர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை … பூசுகின்ற மகிமை
வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய
(புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை
பூசி மெய்ப்பதமான சேவடி … திருநீற்றைப் பூசவைத்து,
உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை
காண வைத்தருள் ஞான மாகிய … தரிசனம் செய்வித்து
திருவருள்மயமான ஞானம் என்ற
போத கத்தினையேயு மாறருள் புரிவாயே … தூய அறிவும்
எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக.
வாரணத்தினையே கராவுமுனே … கஜேந்திரன் என்ற யானையை
முதலை முன்னொருநாள்
வளைத்திடு போதுமேவிய … வளைத்து இழுத்த போது அங்கு வந்து
உதவிய
மாயவற்கு இதமாக வீறிய மருகோனே … மாயவன் திருமாலுக்கு
மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே,
வாழு முப்புர வீற தானது … பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின்
பொலிவெல்லாம்
நீறெழப்புகையாக வேசெய்த … சாம்பலாகப் போகுமாறு புகை எழச்
செய்த
மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே … சிறந்த
திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே,
காரணக்குறி யான நீதியர் … யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,
இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான்
ஆனவர்க்கு முனாகவே … சிவபிரானது சந்நிதிகளில்
நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா … அறநெறியை
ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே,
கானகக்குற மாதை மேவிய … காட்டில் குறப்பெண் வள்ளியை
விரும்பி அடைந்த
ஞான சொற்குமரா பராபர … ஞான மொழி பேசும் குமரனே,
யாவர்க்கும் மேலானவனே,
காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே. … காசித்தலத்தில்*
பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.
* காசி என்ற ‘வாரணாசி’ கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
–subham—
Tags- இடும்பன் காவடி கதை, ரிஷிகள் பட்டியல், காசி , ‘வாரணாசி’, சிவன்:சிரித்தார் எரித்தார் பொரித்தார் உரித்தார் , திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,Part 44