Nageswar Temple , Kumbakonam; London swaminathan picture
Post No. 15,505
Date uploaded in London – 17 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய பதிவு Previous PostHinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)
Post No. 15,405
Date uploaded in Sydney, Australia – 8 February 2026
சப்தமாதர்
சிந்து சமவெளியில் சப்த மாதர் முத்திரை

சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!
எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர்.
சப்த மாதவைத் தவிரவுள்ள ஒரு முக்கிய தேவதைக்கு ஒருவன் மனிதனின் தலையைக் கொண்டுவந்து வைத்து நரபலி கொடுக்கும் காட்சி சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ளது.
பிரம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு தேவதைகள் அந்தகாசுரனை வதம் செய்ய சிவனால் உருவாக்கப்பட்ட சப்தமாதர்கள் ஆவர். சோழர் காலக் கோவில்கள், குறிப்பாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காணப்படும் இவர்களின் நுணுக்கமான சிற்பக்கலை சக்தி வழிபாட்டின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
சப்த மாதா வாகனங்கள்
சப்த மாதாக்களின் வாகனங்கள் பின்வருமாறு:
பிராம்மி (Brahmi): அன்னம்
மகேஸ்வரி (Maheshwari): ரிஷபம் (காளை)
கௌமாரி (Kaumari): மயில்
வைஷ்ணவி (Vaishnavi): கருடன்
வாராஹி (Varahi): சிம்மம் (சிங்கம்) அல்லது கருடன் (சில வழிபாடுகளில்)
இந்திராணி (Indrani): ஐராவதம் (வெள்ளை யானை)
சாமுண்டேஸ்வரி (Chamundeshwari): பிரேதம் (உடல்) அல்லது சிம்மம்
குறிப்பு: இந்த தேவியர் அம்பிகையின் சக்திகளாக போற்றப்படுகின்றனர்.
ஏழு கன்னிமார் கோவில்
ஏழு கன்னிமார் கோயில் (சப்த கன்னியர்) என்பது பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களை வழிபடும் வழிபாட்டுத் தலங்களாகும். இக்கோயில்கள் தமிழகம் முழுவதும், குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில், ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களாக பெரும்பாலும் ஆலமரத்தடி அல்லது ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. ஊரைக்காக்கும் காவல் தெய்வங்கள்; மாசி மகம் திருவிழா பிரபலம்.
வழிபாடு: ஏழு கன்னிமார்கள் சிவபெருமானை வழிபட்டதாக தஞ்சை பகுதியில் 7 இடங்கள் கூறப்படுகின்றன.
சிலை வடிவம்: இந்தச் சிலைகள் பொதுவாக 7 கன்னியர்களை வரிசையாகவோ அல்லது வட்ட வடிவிலோஇருப்பார்கள்.
பிரபல ஏழு கன்னிமார் கோயில்கள்:
தஞ்சை மண்டலம்: சக்கர மங்கை, அரியமங்கை, சூலமங்கை உள்ளிட்ட 7 சிவ ஆலயங்களில் கன்னிமார் வழிபாடு.
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே எழுவரை முக்கியில் உள்ள சப்த கன்னியர் கோயில்.
கரூரில்: திருமாநிலையூர் ஸ்ரீ திருமாலீஸ்வரர் கோவிலில் சப்தகன்னிமார்.
மேல்ஒலக்கூர்: பாறை மீது அமைந்துள்ள கன்னிமார் கோவில்.
இந்த ஆலயங்களில் பெரும்பாலும் சிவபெருமான் அல்லது மாரியம்மன் ஆலயங்களின் உட்பகுதியிலோ அல்லது அருகிலோ கன்னிமார் சன்னதிகள் இருக்கும்.
தை மாதம் மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல் அன்று ஏழு பெண்கள் அருள் கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். மாசி மாதம் பௌர்ணமி அன்று கன்னிக் கோவில் அலங்காரம் செய்யப்படும். கன்னிப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.
சப்தமாதர் பட்டியல்:
பிராம்மி (Brahmi): படைப்புத் தொழிலுக்குத் துணையாக, பிரம்மனின் அம்சமாகத் திகழ்கிறாள்.
மகேசுவரி (Maheshwari): சிவனின் அம்சமானவள்.
கௌமாரி (Kaumari): முருகனின் அம்சமாக, வீரத்தின் வடிவமாகத் திகழ்பவள்.
வைஷ்ணவி (Vaishnavi): விஷ்ணுவின் அம்சமானவள்.
வராகி (Varahi): வராக மூர்த்தியின் அம்சம்; எதிர்ப்புகளை முறியடிப்பவள்.
இந்திராணி (Indrani): இந்திரனின் அம்சமானவள்.
சாமுண்டி / நரசிம்ஹி (Chamundi/Narasimhi): தீயவற்றை அழிக்கும் சக்தியாக, சண்டி அல்லது நரசிம்மரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
சிலப்பதிகாரம் முதல் தமிழ் இலக்கியங்களிலும், பல்லவர், சோழர் காலக் கோயில்களின் கோஷ்டங்களிலும் சப்தமாதர் சிற்பங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
கிராம தேவதைகளாகவும், அதீத சக்தி வாய்ந்தவர்களாகவும், குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
கன்னியாக வழிபடும்போது சப்தகன்னியர் என்றும், பேரிளம் பெண்ணாக (தாய்) வழிபடும்போது சப்தமாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அம்பிகையின் அம்சமான இவர்கள், பக்தர்களின் சங்கடங்களைப் போக்கி, சகல நன்மைகளையும் அருளும் வல்லமை படைத்தவர்களாக நம்பப்படுகிறார்கள்.
சிவ பெருமான் கோவில்களிலோ அல்லது தனியாகவோ சப்தமாதர் சிலைகள் இருக்கும். இவர்களுடைய உருவங்கள் வாகனங்கள், நிறங்கள், கைகளின் எண்ணிக்கை, ஆயுதங்கள் கொடிகள் , புனித மரங்கள் ஆகியவற்றை சம்ஸ்க்ருதத்தில் உள்ள சில்ப சாஸ்திர நூல்கள் விரிவாகப்பேசுகின்றன

Human sacrifice in Indus Valley seal
Sapta Mata Seal
The Saptamata seal from the Indus valley is interpreted in various ways. Some people see Seven Matas (seven mothers) as in Hindu scriptures and others see Seven Demons as described in Babylonian clay tablets. A man is offering a head, probably human sacrifice, in the Indus seal.
Sapta Mata in Hindu temples are: Vaishnavi, Kaumari, Maheswari, Brahmani, Chamunda, Varahi, Aindri (Indrani).
We find Sapta Matas/ seven Goddesses in many Saivite temples
Description of saptamaatrikaas in silpasastra books
Picture by A Nrayanan
Brahmi
Has four faces and six arms and the swan/hamsa vahana. Her colour is yellow.
Maaheswari or Bhairavi
Rides on a bull, has five faces, three eyes and ten arms; decorated with the crescent.
Kaumari
She has six faces and twelve arms, rides on a peacock
Vaishnavi
She is of blue colour and rides on Garuda/eagle, has six arms and a garland of flowers called vanamaalaa.
Vaaraahi has the face of a sow, is black in colour, has a big protruding belly and rides on a a buffalo
Maahendri or indraani has a 1000 eyes, is of pleasing appearance and of golden hue, rides on an elephant.
She has six arms and displays symbols of Varada, noose, and thunderbolt in her right arms and the Abhaya, vessel and lotus in her left.
Chaamundaa is black and fearful with protruding teeth, long tongue, erect hair, emaciated body, sunken eyes and a withered belly. She can change her appearance at will. She rides on a corpse, wears a garland of skull and has jewels of serpents. in her ten arms she holds the shield, noose, bow, spear and staff on her left side and the pestle, disc, fly whisks, goad and the sword on the right.
The Mayamata adds she wears a tiger’s skin, red hair glowing like fire and the banner of a kite. She may have 4 , 8 or 10 hands.
These seven mothers are to be flanked by Virabhadra and Vinayaka on either side. In front of the saptamatrikas, god Siva may be seated on a lotus flower under a banyan tree.
Seven mothers have sacred trees as well;
Kaumari – fig tree/udumbara
Vaishnavi- the pipal
Varahi- karanja
Indrani- kalpadruma
Chamunda – banyan
These goddesses are found in a separate temple or siva temples.
The Selliamman temple in Alambakkam possesses an important temple . the order in which the seven mothers’ images are cut on stone differs according to the circumstances. For the destruction of enemies and safety to villages Brahmi must be made to occupy the centre. If Chamunda is placed in the centre, the village will grow in population.
At the entrance to the shrines of Saptamata two guardian deities are found. Daily worship and periodical festivals are done like in big temples.
***
Seven Sisters in Australia- Pleiades- Kartika Nakshatras
Australia
Depending on the language group or clan, there are several Aboriginal stories regarding the origins of the Pleiades. Some Indigenous Australian peoples believed the Pleiades was a woman who had been nearly raped by Kidili, the man in the moon.
In a legend told by the Wurundjeri people of south-eastern Australia, the Pleiades were represented by the seven Karatgurk sisters. These women were the first to possess the secret of fire and each one carried live coals on the end of her digging stick. Although they refused to share these coals with anybody, they were ultimately tricked into giving up their secret by Crow, who subsequently brought fire to mankind. After this, the Karatgurk sisters were swept into the night sky. Their glowing fire sticks became the bright stars of the Pleiades cluster.
Another version, often painted by Gabriella Possum Nungurayyi as this is her dreaming (or creation story), daughter of the late Clifford Possum Tjapaltjarri from the Central desert art movement of Papunya, depicts the story of seven Napaltjarri sisters being chased by a man named Jilbi Tjakamarra. He tried to practice love magic to one of the sisters but the sister did not want to be with him, and ran away from him together with her sisters. They sat down at Uluru to search for honey ants but when they saw Jilbi, they went to Kurlunyalimpa and with the spirits of Uluru, transformed into stars. Jilbi transforms himself into what is commonly known as the Morning Star in Orion’s belt, thus continuing to chase the seven sisters across the sky.
–Subham—
Tags- Sapta mata, Sapta matrikas, Seven Mothers, Indus Valley, Village Goddesses, Saivite temples, Vahanas, description, Varahi, Brahmi, Chamunda, Australia, Seven Sisters