அபூர்வமான நல்ல குணாதிசயங்கள் பதிமூன்று! (Post No.15,517)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,517

Date uploaded in London – 21 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அபூர்வமான நல்ல குணாதிசயங்கள் பதிமூன்று!

ச. நாகராஜன்

அபவித்ரமானவை ஐந்து

உச்சிஷ்டம் சிவநிர்மால்யம் வமனம் சவகர்பட: |                காகவிஷ்டாசமுத்பன்னா: பஞ்சைத்ஹேத்ஹ்யபவித்ரகா ||

மீதமாக விடப்பட்ட ஐந்து விஷயங்கள் அபவித்ரமானவை.

1.       சிவபூஜை செய்த பின்னர் மீதம் விடப்பட்டவை (சிவ நிர்மால்யம்)

2.       வாந்தி எடுத்தது

3.       சவத்தை மூடிய துணி

4.       சாப்பிட்ட மீதி

5.       காகம் எச்சம் இடும் இடங்களில் தயாரிக்கப்படுபவை

அபூர்வமான நல்ல குணாதிசயங்கள் பதிமூன்று

மானுஷம் வரவம்ஷஜன்ம விபவோ தீர்காயுராரோஜ்யதா

சன்மித்ரம் சசுதா சதி ப்ரியதமா பக்திஷ்ச நாராயணோ |

வித்வத்வம் சுஜனத்வாமிந்த்ரியஜய: சத்பாத்ரதானே ரதி:

தே புண்யேன வினா த்ரயோதஷ: குணா: சம்சாரிணாம் துர்லபா: ||

 உலக வாழ்க்கையில் கீழ்க்கண்ட பதிமூன்று குணங்கள் ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய அமைவது மிகவும் அரிதே.

1)      மனிதத் தன்மை

2)      நல்ல குடிப் பிறப்பு

3)      திறமை

4)      ஆயுள்

5)      ஆரோக்யம்

6)      நல்ல நண்பன்

7)      குணவதியான மனைவி

8)      நல்ல குழந்தைகள்

9)      நாராயணன் மீது பக்தி

10)   கல்வி

11)   பிரபுத்வம்

12)   இந்திரியங்களின் மீது கட்டுப்பாடு

13)   நல்லவர்களுக்குத் தானம் கொடுக்கும் மனப்பான்மை

உயிர் இருந்தாலும் இறந்தவனே!

மாதரம் பிதரம் வ்ருத்தம் பார்யா சாத்வீம் சுதம் சிசும் |                 குரும் விப்ரம் ப்ரயன்னம் ச கல்போபிப்ரச்சவசன்ம்ருத: ||

தாய், தந்தை, வயதானவர்கள், மனைவி, மகன், குழந்தை, குரு, பிராமணர், உதவி வேண்டுவோர் ஆகியோருக்கு உதவி செய்யாமல் இருக்கும் ஒருவன் உயிரோடிருந்தாலும் செத்தவனுக்குச் சமம் தான்!

மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?

வித்வானேவ ஹி ஜானாதி வித்வஜ்ஜனபரிஸ்ரமம் |                     நஹி வந்த்யா விஜானாதி குர்வீம் ப்ரசவவேதனாம் ||

ஒரு வித்வானுக்கே இன்னொரு வித்வானுடைய கடும் உழைப்பு தெரியும். ஒரு மலடிக்கு பிரசவத்தின் போது ஏற்படும் பிரசவ வேதனை தெரியாது

**

Leave a comment

Leave a comment