Post No. 15,529
Date uploaded in London – 24 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 54
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 54
முக்தி தரும் தலங்களின் பட்டியல்
திறல்பூண்ட சுப்ர மணிய ஷண்முகவேலா … பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே,
திரைபாய்ந்த பத்ம தடவயலியில்வேந்த … அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே,
முத்தி யருள்தரு திருவாஞ்சியத்தில் … க்தித்தலமாகிய**
திருவாஞ்சியத்தில்*** வீற்றிருக்கும்
அமரர்கள் பெருமாளே. … தேவர்கள்தம் பெருமாளே.
** முக்தித்தலங்கள் பின்வருமாறு:
தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம்.
*** திருவாஞ்சியம் திருவாரூர் தலத்துக்கு வடமேற்கில் நன்னிலத்துக்கு மேற்கில் 7 மைலில் உள்ளது.
***
யோகிகள் உணரும் பத்து நாதங்கள் !
சங்கோதை நாதமொடு கூடி … யோகவழியில் கிடைக்கும்
தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து,
வெகு மாயையிருள் வெந்தோட … மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக
மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி … மூலாக்கினி
வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி,
இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச்
சேரும்படியான திருவருளைத் தந்தருள்க.
………………………………………
ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை … ஒப்பற்ற
பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச்
சென்று அந்த வள்ளிநாயகியின்
இன்பான தேனிரச மார்முலைவிடாதகர மணிமார்பா …
இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு
நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே,
எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு … எட்டுத்
தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை
உண்ணப்புகுந்த**
செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு …
திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும்
மயில் மீது அழகோடு அமர்ந்து,
என்காதல் மாலைமுடி ஆறுமுகவா … எனது ஆசையால் எழுந்த
இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே,
அமரர் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.
* சங்கோதை நாதம் – யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:
கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம்
ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும்,
குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது – பெரிய புராணம்.
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.
***

மனு நீதிச் சோழன் கதை
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி
மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி
பட வினவுமின் அதி தீது … பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து
அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ
நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல,
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர
சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட
நடுவாகப் பரவி … நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து,
அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு
பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள்
ஆரூர்ப் படியில் அறுமுக … அந்தப் பசுவுக்கு துயரத்தைத்
தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே,
சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண பரவை
முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே. … சிவபெருமானின்
மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
*****
மனுநீதிச் சோழன் கதை

திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell) உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!
மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு (007 James Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.
“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய் இங்கே வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.
மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்; 70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.
உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.
***
மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன் ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி
மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை– நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 559
நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையும் தொக்கு – குறள்
தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.
–subham
Tags- முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! மனுநீதிச் சோழன் கதை