லிப்டில் போகும் போது உங்கள் எடை கூடுகிறதா? குறைகிறதா? விண்வெளியில் உடலின் எடை பற்றிய மர்மம்! (Post.15,528)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,528

Date uploaded in London – 24 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி 22-3-26 இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை! 

லிப்டில் போகும் போது உங்கள் எடை கூடுகிறதாகுறைகிறதாவிண்வெளியில் உடலின் எடை பற்றிய மர்மம்! 

ச. நாகராஜன்  

புவி ஈர்ப்பு விசை பற்றிய புதிரான பல உண்மைகளை சாதாரணமாக நாம் அறிவதில்லை. அந்த அதிசய உண்மைகளைப் பற்றி சற்று அறிந்து கொள்வோமா?

லிப்டில் ஏறியவுடன் அது மேலே கிளம்பும் போது உங்கள் கால்களில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. லிப்ட் மேலே செல்லச் செல்ல நீங்கள் அந்த அழுத்தத்திலிருந்து விடுபட்டு சற்று லேசாக உணர்கிறீர்கள். 

எடை பார்க்கும் மெஷினை லிப்டில் வைத்து இதைச் சரி பார்க்கலாம். லிப்ட் மேலே ஏறத் தொடங்குகையில் உங்கள் எடை சற்று கூடும். ஆனால் மேலே ஏற ஆரம்பித்தவுன் எடை மெஷினில் உங்கள் எடை குறைந்து பழைய நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.

68 கிலோ எடை என்பது 75 கிலோ வரை உயரலாகும். இந்த அதிசயம் எதனால்? 

இதே போலவே விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் எடையற்ற நிலையில் இருப்பதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மை என்ன? அவர்கள் எடை மாறுவதே இல்லை. பூமிக்கு மேலே 250 மைல் உயரத்தில் உள்ள இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் பூமியின் புவி ஈர்ப்பு விசை 90 சதவிகிதம் என்ற அளவுக்கு வலிமை உள்ளதாகவே இருக்கிறது. 

ஆனால் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் விண்வெளி நிலையம் அதனுள் இருக்கும் விண்வெளிவீரர்களுடன் ஃப்ரீ பால் எனப்படும் இயல்வீழ்வினால் பூமியை நோக்கி வருகிறது.

அந்த நிலையம் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியின் வளைவினால் அது பூமியின் மீது மோதுவதில்லை. அது மோதலைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறது. 

பூமியில் இருக்கும் நாமோ தரையானது நம்மை எப்போதும் மேலே தள்ளிக் கொண்டே இருப்பதால் நாம் கீழே விழுவதே இல்லை. 

விண்வெளி வீரர்களுக்கு புவி ஈர்ப்பு விசையின் செல்வாக்கு உண்டு என்றாலும் விண்கலத்தை மேலே செலுத்தும் அழுத்தம் அங்கு இல்லாததால் அவர்கள் எடையற்ற தன்மையை உணர்கிறார்கள். 

இந்த அன்றாட லிப்ட் அனுபவம் நமக்கு ஒரு மாபெரும் உண்மையை உணர்த்துகிறது. உடல் எடை எப்போதும் மாறுவதே இல்லை. புவி ஈர்ப்பு விசையும் பூமிக்கு அருகில் எப்போதுமே மாறுவதில்லை. மாறுவது என்னவென்றால் லிப்ட் மேலே செல்லும் போது ஏற்படும் அழுத்தம் தான். அதன் காரணமாகத் தான் அப்போது அங்குள்ள எடை பார்க்கும் மெஷின் உங்களின் எடையைக் கூட்டுகிறது.

இதைத் தான் ஐன்ஸ்டீன் முதலில் உணர்ந்தார். அவரது தியரி ஆஃப் ரிலேடிவிடி தத்துவம் கண்டுபிடிக்க முனைந்த போது அவர் இதைக் கண்டார். காலமும் இடமும் கொண்ட வளைவுத் தன்மையினாலும் விரைவு படுத்தும் வேகத்தினாலும் அவர் இந்த (Equivalance Principle) ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். 

அடலிப்டில் ஏறிப் போவதில் இவ்வளவு பெரிய உண்மை அடங்கி இருக்கிறதா என்று பிரமிப்போடு அடுத்த முறை லிப்டில் ஏறலாமே!

**

Leave a comment

Leave a comment