எட்டு விஷயங்களில் வெட்கப்படாதே! (Post No.15,531)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,531

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்!

எட்டு விஷயங்களில் வெட்கப்படாதே! 

ச. நாகராஜன் 

வெட்கப்படக் கூடாத எட்டு விஷயங்கள்!

கீதே நாட்யே படே வாதே சங்க்ராமே ச சுராக்ருஹே |

ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத் ||

எட்டு விஷயங்களில் நீங்கள் வெட்கப்படக் கூடாது.

எந்த எட்டு விஷயங்கள் அவை?

1)      பாடும் போது

2)      நடனமாடும் போது

3)      படிக்கும் போது

4)      விவாதத்தின் போது

5)      போர் செய்யும் போது

6)      மதுபானக் கடையில் மது அருந்தும் போது

7)      சாப்பிடும் போது

8)      வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது

ஒருவர் வெட்கப்படக் கூடாது.

படிப்பதில் உள்ள ஆறு குறைகள்!

கீதி ஷீக்ரி சிரகம்பி ததா லிகிதபாடக: |

அனர்தக்ஞ்ல்பகண்டஸ்ய படேத் பாடகாதமா: ||

ஒருவர் படிக்கும் போது ஆறு விதமான குறைகள் இல்லாமல் படிக்க

வேண்டும்.

என்ன குறைகள் அவை?

1)      பாட்டுப் பாடுவது போல படிக்கக் கூடாது

2)      வெகு வேகமாகப் படிக்கக் கூடாது

3)      தலையை ஆட்டிக் கொண்டு படிக்கக் கூடாது

4)      எழுதியதைப் பார்த்துப் படிக்கக் கூடாது (அதில் இருக்கும் தவறைத் திருத்தாமல்)

5)      என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது

6)      கம்மிய குரலில் பேசக் கூடாது. (கணீரென்று கம்பீரமாகப் பேச வேண்டும்.)

தன்னம்பிக்கை வேண்டிய விஷயங்கள்!

கீதே வாத்யே ச ந்ருத்யே ச சக்தி சாதாரணோ குண: |

சா சேதஸ்தி கிமன்யேன தூஷகேன குகேன ச ||

பாடும் போதும் வாத்தியங்களை வாசிக்கும் போதும் நடனமாடும் போதும் தன்னம்பிக்கை என்பது ஒரு முக்கியமாக இருக்க வேண்டிய குணமாகும். இது ஒருவரிடம் இருக்கும் போது  மற்ற குணங்களைப் பற்றியோ குறைகளைப் பற்றியோ எதற்குக் கவலை?

சொல்லாமல் செய்வர் பெரியர்! 

கர்ஜதி ஷரதி ந வர்ஷதி வர்ஷதி வர்ஷாஸு நிஸ்வனோ மேக: |

நீசோ வததி ந குருதே ந வததி சாது: கரோத்யேவ ||

சரத் காலம் வரும் போது மேகங்கள் கர்ஜிக்கின்றன. ஆனால் மழை பெய்வதில்லை. மழைக் காலத்தின் போதோ இடி இடிக்காமலேயே மழை பொழிகிறது. நீசர்கள் அதிகமாகப் பேசுவார்கள்; ஆனால் செயலில் காட்டமாட்டார்கள். நல்லவர்களோ பேசவே மாட்டார்கள்; செயலில் செய்து காட்டுவார்கள்!

**

Leave a comment

Leave a comment