என்னை ஏமாற்றிய வாதாபி கணபதி கோயில்! (Post No.15,533)

Written by London Swaminathan

Post No. 15,533

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan in the Temple

மதுரையிலுள்ள ஆறு அடி உயர முக்குறுணிப் பிள்ளையார், திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களில் உள்ள குடைவரைக்  கோயில் கணபதி ஆகியோரையெல்லாம் கணக்கற்ற முறை தரிசனம் செய்த எனக்கு பல்லவ ஆர்மி கமாண்டர் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் பாதாமியிலிருந்து (வாதாபி நகரம்) கொண்டுவந்த கணபதியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக இருந்தது அந்த ஆவல் 2026 மார்ச் ஆறாம் தேதி பூர்த்தியானது .

முத்து சுவாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் பஜே பாடலை உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாடியிருப்பதைக் கேட்டதால்  இந்த ஆர்வம் பெருகியது ஆயினும் கோயிலுக்குள் இருக்கும் சின்ன மண்டபத்தில் கணபதியைத் தரிசித்த பொது பெரிய ஏமாற்றமே மிஞ்சியது

கோயிலில் என்னையும் கணபதியைத் தவிர யாரும் இல்லை சிறிய மண்டபத்தில் இருந்த கணபதிக்கு ஆடையோ அலங்காரமோ பூ மாலையோ இல்லை! சின்ன மண்டபத்தில் இருள்  வேறு !

சிவன் சந்நிதியில் இருந்த குருக்கள் விபூதி பிரசாதம் கொடுத்தார் ; ;பிரகாரத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி நடந்த அபிஷேக ஆராதனையைக் காணவந்த சுமார் ஐம்பது பேர் பிரசாதம் வாங்கிய பின்னர் நழுவிவிட்டனர்

கோவில் மிகவும் பழைய நிலையில் வறண்டு துவண்டு போய் கிடாக்கிறது கும்பாபிஷேகம் செய்வது மிகவும் அவசியம்.

கணபதியின் வீர பிரதாபங்களை விளக்கும் சில படங்கள் கோவில் சுவற்றில் வரையப்பட்டிருந்தன. அவைகளைப்  புகைப்படம் எடுத்தேன் .

திருச்செங்காட்டங்குடி கோயில்

புராண பெயர்(கள்):    மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி

பெயர்:     திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்

மூலவர்:   கணபதீஸ்வரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்

தாயார்:    சூளிகாம்பாள், திருக்குழலம்மை

தல விருட்சம்:  ஆத்தி

தீர்த்தம்:   ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்

தேவாரம் பாடியவர்கள்:    திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர்,  பரணதேவ நாயனார்,  சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர்.

திருவாரூர் – திருமருகல் சாலையில், ‘செங்காட்டங்குடி’ என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக வந்து, திருமருகல் கால்நடை மருந்தகத்தைத் தாண்டி, பாதை வழியே  சென்றால் தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன

***

இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது – கிழக்கு நோக்கியது. கோயில் வாயிலில் உள்ள திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். குளக்கரையில் ‘மங்களவிநாயகர்’ எழுந்தருளியுள்ளார். ராஜகோபுரத்தின் உட்பக்கம் ஆத்திமரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம் – கவசமிட்ட கொடிமரம் தாண்டி, உட்பிராகாரத்தில் பிட்சாடனர் கல்லில் வடித்துள்ள கோலத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும், அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம்.

பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபிகணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி, அவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுடையவை – இம் மண்டபத்தில் உள்ளன. நடராஜ சபை உள்ளது. நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

திண்டி, முண்டி எனும் துவாரபாலகர்களைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் – கணபதீச்சரமுடையார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனி கொண்டுள்ளார். இவருக்கு நாடொறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகதலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) . துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசர் சந்நிதி எதிரிலுள்ளது.

கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த விழா நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர் உத்ராபதீஸ்வரர் திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் ‘வேண்டும் விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். உற்சவக்காலங்களில் iஉலாவரும் நாதர் உத்தராபதியாரே.

சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் (BADAMI) கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்

“உத்ராபதியார் ” திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது – ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், “இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்” என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் – கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், “உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்” என்றனர். சிவயோகியார், “நல்லது; அதையே ஊற்றுங்கள்” என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் – உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து – கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் – கோயில் வரலாறு.)

Read more at: https://shaivam.org/hindu-hub/temples/place/228/thiruchengattankudi-uthiraapateeswarar-temple/#gsc.tab=0

***

கன்னி மேரியா ஏசு கிறிஸ்துவ சிவா பெருமானா ?

கோவிலுக்குள் சாண்டோ ராமசாமி என்பவர் வரைந்த ஓவியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இது என்னடா கிறிஸ்தவ ஓவியத்தை வரைந்துள்ளார் என்று பயந்து போனேன். வினோதமான ஓவியம்! அருகில் போய்ப் பார்த்தால் கிறிஸ்தவ உடைக்குள் சிவபெருமான்!

திருச்செங்காட்டங்குடி (Tiruchengattankudi) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் பெற்ற சிவத்தலம் . இங்குள்ள உத்தராபதீசுவரர் கோயில் (கணபதீச்சரம்) மிகவும் புகழ்பெற்றது, மேலும், இது சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகவும் விளங்குகிறது. 

திருச்செங்காட்டங்குடி சிறப்பம்சங்கள்:

  • தல வரலாறு: கஜமுகாசூரனை வதம் செய்த விநாயகர், தான் செய்த பழி நீங்க சிவனை வழிபட்ட இடமாக இது கருதப்படுகிறது. விநாயகர் அசுரனைக் கொன்றபோது சிந்திய குருதியால் நிலம் செக்கச் சிவந்திருந்ததால், ‘செங்காட்டங்குடி’ (செங்கருதி) எனப் பெயர் பெற்றது.
  • கோயில் அமைப்பு: இங்குள்ள மூலவர் உத்தராபதீசுவரர், அம்பாள் வாள்நெடுங்கண்ணி. இத்தலத்தில் விநாயகர் ‘வாதாபி கணபதி’ என்று அழைக்கப்படுகிறார்.
  • சிறுத்தொண்ட நாயனார்: அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) பிறந்த தலம். இவர் தன் மகனையே அமுதாகப் படைத்த ‘பிள்ளைக் கறி’ இட்டுச் சிவனுக்குப் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்.
  • இறைவன்: இத்தல இறைவன் தேவாரப் பாடல் பெற்றவராவார் (திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடியுள்ளனர்).
  • அமைவிடம்: திருவாரூர் – திருமருகல் சாலையில், நாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ளது

***

தேவாரசப்பாடல்

“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைநாள் பயப்பூரச்

சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.” (சம்பந்தர்)

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தைப்

பேணிநினைந் தெழுவார்தம் மனத்தேமன்னி

இருந்தமணி விளக்கதனை நின்றபூமேல்

எழுந்தருளி யிருந்தானை எண்தோள்வீசி

அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை

அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்

திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. (அப்பர்) 

அஞ்சல் முகவரி –

அருள்மிகு. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்

திருச்செங்காட்டங்குடி – திருக்கண்ணபுரம் அஞ்சல்

நாகப்பட்டினம் வட்டம் – மாவட்டம் 609 704

***

வாதாபி கணபதிம் பஜே

முத்து சுவாமி தீட்சிதர் கிருதி

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம்

வாரணாஸ்யம்  வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம் ஸேவித சரணம்

பூத பெளதிக பிரபஞ்ச பரணம்

வீத ராகிணம் வினத யோகினம்

விஸ்வ காரணம் விக்ன வாரணம்

…வாதாபி

சரணம்

புரா கும்ப ஸம்பவ  முனிவர  ப்ரபூஜிதம்

திரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்

மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம் 

நிரந்தரம் நிதல சந்த்ர கண்டம்

நிஜ வாமகர வித்ருதேக்ஷு தண்டம்

கராம்புஜ பாச பீஜாபூரம்   

கலுஷவிதூரம் பூதாஹாரம்

ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்

ஹம்சத்வனி பூஷித ஹேரம்பம்

… வாதாபி

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் .

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்ற

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .

Ganesh in Madurai Temple

vaathaapi

raagam: hamsadwani 

taaLam: aadi

Composer: Muttuswaamee Dikshitar

Language: Sanskrit 

pallavi 

vaataapi gaNapatim bajEham |

vaaraNaasyam varapradam shree ||

anupallavi

bootaadi sam sEvita caraNam |

boota bowdika prapanca baraNam ||

veetaraagiNam vinata yOginam (shree) |

vishva kaaraNam vigna vaaraNam ||

(vaathapi)

caraNam

puraa kumba sambhava munivara prapoojitam |

trikONa madya gatam |

muraari pramukaat yupaasitam |

moolaadhaara kshEtraa stitam |

paraadi sattvaari vaakaatmagam |

praNava svaroopa vakratunDam |

nirandaram niDala candra kaNDam |

nija vaamakara vidrutEkshutanDam |

karaambuja paaSa beejaapooram |

kaloosha vidhooram bootaahaaram |

haraadi guruguha tOshita bimbam |

hamsadhwani booshita hErambam ||

(vaathapi)

–subham—

Tags- திருச்செங்காட்டங்குடி,உத்தராபதீஸ்வரர், திருக்கோயில், வாதாபி கணபதி , சிறுத்தொண்டர், கணபதீச்வரம், பிள்ளைக் கறி யமுது , வாதாபி கணபதிம் பஜே

Leave a comment

Leave a comment