இராமன் ஹனுமன் சந்திப்பு:  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்: ஓர் ஆய்வு  – 8 (Post.15,539)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,539

Date uploaded in London –  27 March  2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்: ஓர் ஆய்வு  –  8

(ஆர், சேஷாத்ரிநாதன்)

சர்கம் 2

இராமன் ஹனுமன் சந்திப்பு 

இராகவனும் இலக்ஷ்மணனும் கிஷ்கிந்தாவில் உள்ள ரிஷ்யமுக மலையை நோக்கி முன்னேறிச் செல்கிறனர். 

आगें चले बहुरि रघुराया। रिष्यमूक पर्बत निअराया॥

तहँ रह सचिव सहित सुग्रीवा। आवत देखि अतुल बल सींवा॥1

अति सभीत कह सुनु हनुमाना। पुरुष जुगल बल रूप निधाना॥

धरि बटु रूप देखु तैं जाई। कहेसु जानि जियँ सयन बुझाई॥2

இப்போது அந்தப் பகுதி வாலிக்குப் பயந்து  சுக்ரீவன் தனது அமைச்சர்களுடன் மறைந்து வாழும் இடம். இங்கு துளசி தாசர் सचिव सहित என்று கூறுகிறார்.  பொதுவாக ஒரு அரசன் என்பவன் ஏழு அங்கங்களை உடையவன்,  அரசன், அமைச்சர், நண்பர், செல்வம், தேசம், கோட்டை மற்றும் சேனை.  இதைப் பற்றி துளசி தாசர் அயோத்யா காண்டத்தில் தெளிவாகக் கூறி உள்ளார்

 सचिव सत्य श्रद्धा प्रिय नारी। माधव सरिस मीतु हितकारी॥

चारि पदारथ भरा भँडारू। पुन्य प्रदेस देस अति चारू॥

छेत्रु अगम गढ़ु गाढ़ सुहावा। सपनेहुँ नहिं प्रतिपच्छिन्ह पावा॥

सेन सकल तीरथ बर बीरा। कलुष अनीक दलन रनधीरा॥

சுக்ரீவனிடம் வெறும் இரண்டு அங்கங்கள் மட்டுமே மீதி இருந்தது. வாலி அவனை கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தி விட்டான், ஆனால் இன்னும் அவன் அரசனே. அவனிடம்  நான்கு மந்திரிகள் இருந்தனர். ஆனால் அவர்களில் அவன் ஹனுமனைத்தான் மிகவும் நம்பினான். காரணம் ஹனுமன் தான் எல்லா வேலைகளையும் திறம்பட முடித்துக் கொடுப்பதில் வல்லவன் என்று அனுபவத்தில் சுக்ரீவன் அறிந்திருந்தான். ஹனுமன் ஒரு விதிவிலக்கான புத்திசாலி. எந்தவித அறிவுறுத்தல்களும் இல்லாமல் பிரச்சனைகளை அந்த இடத்திலேயே சமாளித்து  தீர்க்கவும் செய்வார். ஹனுமன் நம்பகமாவனவர்; நேர்மையானவர்; உண்மையுள்ளவர்; எதற்கும் அஞ்சாதவர்; அச்சமற்றவர்; விவேகமுள்ளவர்; எந்தவித பாதகமான சூழ்நிலையும் எதிர்கொள்ளும் துணிச்சலானவர்; இந்த விஷயத்தில் ஹனுமனுடன் யாரையும் ஒப்பிடமுடியாது என்பதை சுக்ரீவன் அறிந்திருந்தான். 

ஹனுமனின் பெருமை

  ஹனுமன் பிரச்னைகளை எப்படி நேர்மறையாக அணுகிறார்? பயத்தில் நடுங்கும் சுக்ரீவனுக்கு எவ்வாறு ஆறுதல் வழங்குகிறார் என்பதை வால்மீகியின்  கிஷ்கிந்தா காண்டத்தின் இரண்டாவது சர்கத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் மூலம் வால்மீகி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

 ततस्तं भयसंविग्नं वालिकिल्बिषशङ्कितम् ।

उवाच हनुमान्वाक्यं सुग्रीवं वाक्यकोविदः ॥ १३ ॥

सम्भ्रमस्त्यज्यतामेषः सर्वैर्वालिकृते महान् ।

मलयोऽयं गिरिवरो भयं नेहास्ति वालिनः ॥ १४ ॥

यस्मादुद्विग्नचेतास्त्वं प्रद्रुतो हरिपुङ्गव ।

तं क्रूरदर्शनं क्रूरं नेह पश्यामि वालिनम् ॥ १५ ॥

यस्मात्तव भयं सौम्य पूर्वजात् पापकर्मणः ।

स नेह वाली दुष्टात्मा न ते पश्याम्यहं भयम् ॥ १६ ॥

अहो शाखामृगत्वं ते व्यक्तमेव प्लवङ्गम ।

लघुचित्ततयाऽऽत्मानं न स्थापयसि यो मतौ ॥ १७ ॥

बुद्धिविज्ञानसम्पन्नः इङ्गितैः सर्वमाचर ।

न ह्यबुद्धिं गतो राजा सर्वभूतानि शास्ति हि ॥ १८ ॥

सुग्रीवस्तु शुभं वाक्यं श्रुत्वा सर्वं हनूमतः ।

ततः शुभतरं वाक्यं हनूमन्तमुवाच ह ॥ १९ ॥ 

பின்னர், வாலியால் செய்யப்பட்ட பாவத்தை நினைத்து மிகழ்ந்து, மிகுந்த பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம், பேச்சில் மிகத் திறமைசாலியான ஹனுமான் இவ்வாறு கூறினான்:

“இந்த மிகப் பெரிய பதற்றத்தையும் பயத்தையும் எல்லோரும் விட்டுவிடுங்கள்! இது மலைய மலை (ரிஷ்யமூக பர்வதம்) – இங்கு வாலிக்கு யாரும் பயம்படத் தேவை  இல்லை, அதாவது வாலியே இங்கு வரவே முடியாது! அவனுக்கு இங்கு வர அஞ்சுதல் உண்டு.”

“நீ முன்பு மிகுந்த பயத்துடன் ஓடி வந்ததற்குக் காரணமான அந்தக் கொடூரமான முகமும் கொடூரச் செயலும் உடைய வாலியை இங்கே நான் காணவில்லை.”

 “எந்தப் பாபியான அண்ணனால் உனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதோ, அந்தத் துஷ்ட ஆத்மாவான வாலி இங்கு இல்லை. ஆகவே, சௌம்யா! உனக்கு இங்கு எந்தப் பயமும் இல்லை.”

“ஐயோ! நீ ஒரு குரங்கு என்றாலும் இவ்வளவு சின்ன மனசு உடையவனாக இருக்கிறாயே! எளிதில் பயந்து, தைரியத்தை இழந்து, தன் மனதை ஒரு நிலையில் நிறுத்தாமல் தத்தளிக்கிறாயே!” 

“நீ அறிவும், விஞ்ஞானமும், புத்தி கூர்மையும் கொண்டவன். எல்லாவற்றையும் அடையாளங்களை வைத்து (இங்கித ஞானத்தால்) செயல்படு.ஏனெனில், புத்தியில்லாதவன் ஒருநாளும் அரசனாகி எல்லா உயிர்களையும் ஆள முடியாது.”

பயம் வேண்டாம் சுக்ரீவா! பதறாதே வானரா!

மலைய மலையில் வாலிக்கு மரண பயம் உண்டடா 

அவன் கால் இங்கு வைக்கவே அஞ்சுவான் அஞ்சுவான்

அவன் முகம் இங்கு தெரியவே முடியாது முடியாது!

சின்ன மனசு வேண்டாம் சிங்கக் குஞ்சே!

சீறி எழு! சிம்மாசனம் உனக்கே உரியதடா!

அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, அடக்கம் உண்டு

அரசன் நீ! அசைவிலா மனம் வேண்டும்!

ராமன் வந்தான், லட்சுமணன் வந்தான்

ரிஷ்யமூகம் இன்று வெற்றி முகம் கொண்டான்!

எழு சுக்ரீவா! எழு கிஷ்கிந்தா குமாரா!

இன்று முதல் உன் பயம் எல்லாம் மடியட்டும் மடியட்டும்!

இதன் மூலம் ஹனுமன் எப்படிப்பட்டவர் என்பது முதலிலேயே நமக்குத் தெரிய வருகிறது. மேலும் நாற்பத்தி நாலாவது சர்கத்தின் கீழ்க்கண்ட சுலோகங்களின் மூலம் அதை வால்மீகி உறுதிப்படுத்துகிறார். அதாவது சுக்ரீவன் ஹனுமானைப் புகழ்ந்து சொல்வது போல வால்மீகி எழுதுகிறார்.

विशेषेण तु सुग्रीवो हनूमति अर्थम् उक्तवान् |

स हि तस्मिन् हरि श्रेष्ठे निश्चितार्थो अर्थ साधने || ४-४४-१

तेजसा वापि ते भूतं समं भुवि न विद्यते ।

तद्यथा लभ्यते सीता तत्त्वमेवोपपादय ॥ ६ ॥

त्वय्येव हनुमन्नस्ति बलं बुद्धिः पराक्रमः ।

देशकालानुवृत्तिश्च नयश्च नयपण्डित ॥ ७ ॥

ततः कार्यसमासङ्गमवगम्य हनूमति ।

विदित्वा हनुमन्तं च चिन्तयामास राघवः ॥ ८ ॥

 “வானர ஸ்ரேஷ்டனே! பூமி அந்தரிக்ஷத்திலும், சித்தர்கள், வித்தியாதரர்கள் சஞ்சரிக்கும்  ஆகாயத்திலும், நீரிலும் உனக்குத் தடையில்லை.  உன் தந்தையான வாயு தேவனைக் காட்டிலும் உனக்கு அதிக ப்ராக்ரமங்கள் உண்டு. உனக்குள்ள பிரதாபம் இந்தப் பூலோகத்தில் ஒருவருக்கும் இல்லை. ஆகையால் எந்த விதத்திலாவது சீதையைக் கண்டறியும் கடமை உன்னுடையதே. நியாயம் அறிந்தவேனே,  பலமும், அறிவும், பராக்ரமும்  தேச காலங்களுக்கேற்றபடி நடந்து கொள்வதும்  வினயமும் உன்னிடத்திலே இருக்கின்றன. ஆகவே நீயே இந்தக் காரியத்தை முடிக்கவேண்டும்” என்று சுக்ரீவன் ஹனுமனிடம் கூறினான். 

வலிமை அறிவு வீரமுடன் 

வானரன் ஹனுமன் மேன்மை பெரிது 

சுக்ரீவன் நம்பினான் சீதைத் தேடல் 

தருமம் நிறைவேற்றும் தெய்வம் அவனே.

சுக்ரீவனின் அச்சம்

நிகரில்லா வலிமை கொண்ட இராமன் வருவதைப் பார்த்ததும் சுக்ரீவன் மிகுந்த அச்சமுற்றான் . சுக்ரீவன் பயந்த விதத்தை வால்மீகி விரிவாகக் கூறியிருந்தார். 

तौ तु दृष्ट्वा महात्मानौ भ्रातरौ राम लक्ष्मणौ |

वर आयुध धरौ वीरौ सुग्रीवः श्ङ्कितोऽभवत् || ४-२-१

उद्विग्न हृदयः सर्वा दिशः समवलोकयन् |

न व्यतिष्ठत कस्मिन् चित् देशे वानर पुङ्गवः || ४-२-२

नैव चक्रे मनः स्थातुम् वीक्षमाणो महाबलौ |

कपेः परम भीतस्य चित्तम् व्यवससाद ह || ४-२-३

तौ ऋष्यमूकस्य समीप चारी चरन् ददर्श अद्भुत दर्शनीयौ |

शाखा मृगाणाम् अधिपः तरस्वी वितत्रसे नैव चिचेष्ट चेष्टाम् || ४-१-१२८

स तौ महात्मा गज मन्द गामि शखा मृगः तत्र चिरन् चरन्तौ |

दृष्ट्वा विषादम् परमम् जगाम चिन्ता परीतो भय भार मग्नः || ४-१-१२९

அந்த இரு மகாத்மாக்களான இராம–லட்சுமணரை, சிறந்த ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களாகக் கண்டவுடன், சுக்ரீவன் சந்தேகத்துடன், அச்சமடைந்தான்.அவனது மனம் கலங்கிப் போய், எல்லாத் திசைகளையும் கவலையுடன் நோக்கினான். எந்த இடத்திலும் அமைதியாக நிற்க முடியாமல், வானரர்களில் சிறந்தவனான சுக்ரீவன் அலைந்தான்.அந்த இரு பெரும் வீரர்களை நோக்கிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவனின் மனம் நிலைபெறவில்லை. மிகுந்த பயத்தால் அவனது சிந்தனை சிதறிப் போனது.

இராமன் லட்சுமணன் வீரர் இருவரை 

சுக்ரீவன் கண்டனன் அஞ்சிக் கலங்கினன் 

திசை திசை நோக்கினன் திடமின்றி நின்றிடா 

மனமெல்லாம் பயமுற்று மயங்கினன் தானே.

வால்மீகி இத்தனை சுலோகங்களில் சொன்ன விஷயத்தை துளசி தாசர் अति सभीत  என்ற இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டார். 

இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை  செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார். 

इङ्गितानाम् प्रकारैः  रूपव्या भाषणेन 

लक्षयस्व तयोः भावम्

शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |

व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || २७

                                    **            

                 தொடரும்

Leave a comment

Leave a comment