Moon
Post No. 15,546
Date uploaded in London – 28 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நவக்கிரகங்கள் தொடர்ச்சி………………………………………..
ஒவ்வொரு கிரகத்துக்கும் உண்டான வாஹனங்கள், ஹோமத்தில் போடப்படும் தானியங்கள், உரிய நவரத்தினக் கல் முதலிய விவரங்கள் முந்திய கட்டுரையில் உள்ளன
***
சந்திரன் / திங்கள் MOON
பெற்றோர்கள் -அத்திரி மகரிஷி, அனசூயை.
மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் : சோமன், துர்வாசர், தத்தாத்திரேயன்.
சந்திரனின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்கள் 27 பேரும் சந்திரனையே மணந்தனர்.அந்த 27 பேர்களில் ரோகிணியிடம் மிக அன்பாக நடந்தான் சந்திரன்
அரிஸ்டாட்டில் கூறுவது- “சந்திரன் மனித உடலில் மிகுதியாக ஆதிக்கம் செலுத்துகிறது”.
சூரியனின் மாற்றத்தைப் பொறுத்தே மாதங்கள் பிறக்கின்றன.ஆனால் மாதங்களின் பெயர்களோ பௌர்ணமி எந்த நட்சத்திரத்தின் அருகில் சந்திரன் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம் விளங்குகிறது.
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே ! சந்திரன் ஒரு பெரும் யாகம் நடத்தினான்.எல்லா முனிவர்களும், தேவர்களும் கலந்து கொண்டனர்.தேவ குருவின் மனைவி தாரையும் கலந்து கொண்டாள். யாகம் முடிந்து குருவுடன் திரும்பாமல் சந்திரனிடையே தங்கிவிட்டாள் தாரை. கர்ப்பமானாள் தாரை!தேவர்களனைவரும் சந்திரனைக் கண்டித்து தாரையை திருப்பி அனுப்புமாறு கேட்டனர்.
வில்லெடுத்தார் சிவன். பயந்த பிரும்மா ஒரு வழியாக “ பஞ்சாயத்து” பண்ண தாரையை அனுப்பினான் சந்திரன். குரு ஏற்றக்கொள்ள மறுத்தார்.சாபம் கொடுத்தார். அழகான குழந்தையான“ புதனை“பெற்றெடுத்தாள்.சந்திரனின் மனைவி ரோகிணியே புதனை வளர்த்தாள்.ந்தினுக்கு
“மதி”என்றும் MIND பெயர்…..இந்த மதிக்கதிபதி சந்திரனே!!!
சந்திரனுக்கு “ஔஷதி” எனப்பெயருண்டு. மருத்துவ செடிகளுக்கும். கொடிகளுக்கும், இரவில் அல்லி பூப்பதற்கும் சந்திரனே காரணம்.
சஎல்லா நாட்டினருக்கும் இதுவே காதல் தெய்வம்!
ஆங்கிலத்தில் “LUNA “ என்பார்கள் இந்த மதி கெட்டால் தமிழில் “கிறுக்கன்”என்றும் “பைத்தியம்” ஆங்கிலத்தில் “LUNATIC” என்றும் கூறுகிறார்கள்.
சந்தரனின் வேறு பெயர்கள்:
இந்து, விது,அம்புலி,பதி, நிசாகரன்,திங்கள், அலவன்,சோமன், குமுத, நண்பன்,உடுபதி, ரஜினிபதி,சசி,ஆலோன்,சகி, முயிலன்கூடு, சுதாகரன்,களங்கன்,பிறை உடுவின் வேந்தன், கலாநிதி,சுகுபராக.
சந்திரனுக்குரிய தலங்கள் :திங்களூர், திருப்பதி , நவ திருப்பதிகளில் ஒன்றான வர குண மங்கை, நவ கைலாசங்களில் ஒன்றான சேரன் மா தேவி, சென்னை அருகில் உள்ள சோமங்கலம்.
***
செவ்வாய்,அங்காரகன் MARS
உஜ்ஜைனி என்ற நகரத்தில் அந்தகாசுரன் என்ற ஒருவன் சிவனை் நோக்கி தவம் புரிந்து என் இரத்தம் பூமியில் விழுந்தால், ஒவ்வொரு சொட்டிலிருந்தும், என்னை மாதிரி அசுரர் தோன்ற வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அன்றிலிருந்து அந்த நாட்டிலிருந்த
முனிவர்களுக்கும், மக்களுக்கும் பிடித்தது பீடை. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட்டனர். சிவபிரான் சண்டையிடும்போது அவர் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி அந்த அசுரன் உடலிலிருந்து விழுந்த ரத்தத்தை குடிக்க, அசுரனைக் கொன்றார் சிவன். அந்த வியர்வைத்துளியை அவர் பூமா தேவியிடம் ஒப்படைத்தார். அதுவே குழந்தையாக வளர்ந்தது. குஜன் எனப் பெயர் பெற்றது.
செவ்வாய் பற்றிய மற்றொரு கதை: பரத்வாஜ முனிவர் நர்மதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகையின் மீது மோகம் கொண்டதால் ஒரு குழந்தை பிறந்தது. அதை பூமா தேவி எடுத்து வளர்த்தள் ;கு- என்றால் பூமி. ஜன்- என்றால் புத்திரன். ஆகையினால் குஜன். பூமியின் புதல்வன் செவ்வாய் என்பதன் விஞ்ஞான ரகசியத்தை இனிமேல்தான் மேலை உலகம் எழுதும். தவத்தின் மகிமையால் உடல் நெருப்பான காரணத்தால் “அங்காரகன்” எனவும் பெயர் பெற்றார்.
வேறு பெயர்கள்
செந்தீ வண்ணன்,சேய், குருதி, வக்ரன்,பௌமன்,நில மகன், ஆரல், உதிரோன், மங்களன், உக்கிரன், மகா காயன், அர்த்தன், சக்தி தரன்,த னப்ரதன், லோகிதாங்கன் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இவரை “GOD OF வார்ஸ்” என்றும் கூறுகிறார்கள்.
செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்,ராணுவத்தில் உள்ள பெரிய அதிகாரிகள்,
காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரிகள்,
முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆவர்.
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அதை “சசி மங்கள யோகம்” எனக் கூறுவார்கள்.
***
mars/ mangal/kujan/angarakan
BUDHA/MERCURY
GURU/BRIHASPATI/JUPITER/VIYAAZAN
வித்யாகாரகன், கல்விக்குஅதிபதி அதாவது அறிவுச் சுரங்கம் ஞான காரகன் விவேகத்தின் வேந்தன்,புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஆதாரமாக இருப்பவன், கதைகளுக்கும், கவிதைகளுக்கும் உரியவன், வரும் காலத்தை கணக்கிட்டுக் கூறும் ஜோதிடத்தின் அதிபதி லாஜிக், பேச்சு, பத்திரிக்கை, போன்றவற்றுக்கு அதிபதி; ரோமானியர்கள் இவரை “தூதுக் கடவுள்” அதாவது “மெர்குரி” என்று அழைத்தனர்.
புதனின் வேறு பெயர்கள்
கணக்கன், அறிஞன், சௌம்யன், விகட கவி, புத்தி தாதா, மதிமகன், தேர்பாகன்,அருணன், தூதுவன், சிந்தை கூரியன், சாமன், தனப்ரதன், கொம்பன்.
புதனின் வரலாறு- சந்திரன் கிரகம் பற்றிய பகுதியில் இக்கதை கொடுக்கப்பட்டுள்ளது.
புதனுக்கு சாபம்
இமய மலையில் கௌரிதடாகம் என்ற ஒரு இடத்தில் ஆஸ்ரமம்அமைத்து கொண்டு தவ வாழ்க்கையை மேற் கொண்டார். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அழகாக இருந்த அவரை தேவ கன்னிகை தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்பறுத்தினாள். புதன் அவளுக்கு இணங்க மறுத்தான்.
அத் தேவகன்னிகை புதனை அலியாக மாறுமாறு சபித்தாள். புதன், நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாராயணன் தோன்றி சிவனை நோக்கி தவம்செய்யச் சொன்னார். சிவன் தோன்றி அலி சாபத்தை மாற்றி மீண்டும் ஆணுருவாக திரு வெண் காடு என்னும் ஸ்தலத்திற்கு போய் அங்குள்ள மூன்று குளங்களில் குளித்து தன்னை வழிபட்டால் அலித்தன்மை நீங்கும் என்றார். புதனும் அவ்வாறு செய்து தன் அலித்தனமை நீங்கப் பெற்றார். மீண்டும் கௌரி தடாகம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார். சூரியனின் புதல்வனான வைவஸ்வத மனு, பத்து புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் மூத்த புத்திரனான இளன் புதன் ஆஸ்ரமத்தின் சற்று தூரத்தில் உள்ள கௌரிதடாகத்தில் குளித்தான்,
புதன் பற்றிய மற்ற விவரங்கள்
மனைவியின் பெயர்- இளா என்ற ஞான தேவி
மகன். புரூரவன்
அதி தேவதை – விஷ்ணு
கோத்திரம் – ஆக்னேய கோத்ரம்
தேசம் – மகத தேசம்
வாகனம் – குதிரை
திக்கு – வட கிழக்கு
ரத்தினம் – மரகதம்
மலர் -வெண் காந்தள்
தானியம்- பச்சைப் பயறு
சமித்து – நாயுருவி
உலோகம் – பித்தளை
வேதம் – ரிக் வேத த்தின் 5-ம்பகுதி
***
குரு/ வியாழன்/ பிருஹஸ்பதி / ஜூபிட்டர் / தேவ குரு
தனது படைப்புத்தொழிலைச் செய்ய பிரும்மா, உதவிக்கு 9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள் பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!! இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான் குரு பகவான்..
இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.
ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும், நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும் வழிபடுவதுண்டு.
இவரது வேறு பெயர்கள்:
குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான், சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி, பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்..
மனைவி. தாரை
மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.
நிறம் – பொன்னிறம்
வஸ்திரம் மஞ்சள் பட்டு
ஜாதி – அந்தணர்
அதி தேவதை – இந்திரன்
திசை – வட கிழக்கு
தேசம் – சிந்து தேசம்
வாகனம் – யானை
பிறந்த தேசம் – அவந்தி
பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்
கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்
நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
தானியம் – கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை
நிவேதனம்- தயிர் சாதம்
சமித்து – அரசு
ரத்தினம் – புஷ்ப ராகம்
உலோகம் – தங்கம்
ஸ்தலங்கள் – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை
மதுரை அருகில் உள்ள குருவித்துறை, திருவலி தாயம் ( பாடி).
***
SUKRA/ VENUS/ VELLI ON CROCODILE
சுக்கிரன் , வீனஸ் VENUS , அசுரர் குரு
மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம்
எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன் என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன். வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது, கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது. அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்!
சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால்
பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை,
வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி,
பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு
மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி
ஜாதி – பிராமணர்
கோத்திரம் – பார்க்கவ
நிறம் – வெண்மை
அதி தேவதை – இந்திரன்
திசாதிபதி – தென் கிழக்கு
வாகனம் – கருடன்
தானியம் – மொச்சை
சமித்து – அத்தி
புஷ்பம் – வெண் தாமரை
ரத்தினம் – வைரம்
உலோகம் – வெள்ளி
தேசம் – காம்போஜம்
பரிகார ஸ்தலங்கள்
சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்)
கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம், நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை
நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம்; சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர்.
Line drawings shown above are taken from this beautiful book on Navagrahas

TO BE CONTINUED…………………
TAGS- Hinduism through 500 Pictures in Tamil and English 48; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்–48, நவக்கிரகங்கள் தொடர்ச்சி, சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி , பிருஹஸ்பதி ,கிரகங்கள் , குரு