தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345)

London swaminathan in Bangkok, in front of palace.

Written by London Swaminathan

Post No. 15,345

Date uploaded in Sydney, Australia –  19 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345)

லண்டன் சுவாமிநாதன் நேரில் கண்டவை

ஜனவரி 2026 ஐந்தாம் தேதி பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஆறு ஏழு தேதிகளில் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் நகரில் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் . அங்குள்ள கண்கவரும் இடங்களில் ஒன்று பிரமாண்டமான அரண்மனை ஆகும். நாங்கள் தங்கிய வில்லா  தி  கசோன் VILLA DE KHAOSAN  ஹோட்டலிலிருந்து  15  நிமிடத்தில் நடந்தே சென்றோம் . அரண்மனைக்குள் நுழைவதற்கு டிக்கெட் உண்டு . டிக்கெட் கட்டணம் 500  பாட் BAHT (தாய் கரன்சி ; சுமார் 13 பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது 1500 ரூபாய் ). பாட் என்னும் பணம் நூறு சதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரண்மனைஅருகில் சாலைகள் அமைக்க பூமியைத் தோண்டியபோது பல சிலைகள் கிடைத்தன அவை சீனாவிலிருந்து வந்தவையென்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர் அவைகளும் நுழைவு வாசலிலேயே வைக்கப்பட்டுள்ளன

***

மரகத புத்தர்

அங்குள்ள மிக முக்கியமான புனிதமான சிலை மரகத புத்தர் ஆகும். உண்மையில் அது ஜேட் JADE என்னும் பச்சைக் கல்லினால் ஆனதுதான். மரகதக் கல் அளவுக்கு விலை மதிப்பில்லை என்றாலும் மிகப்பெரிய வரலாறு உடையது; இதன் உயரம் பீடம் உள்பட 66  செ..மீ  இதைப் பற்றிய இரண்டு செய்திகள்

1.இது தாய்லாந்தில் 15  ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக ஒரு செய்தி;

2.இன்னும் ஒரு செய்தி இது இந்தியாவில் செய்யப்பட்டது.

மிகவும் சுவையான விஷயம்- அது இந்தியாவிலிருந்து இலங்கை சீனா, லாவோஸ், கம்போடியா என்று பல நாடுகளுக்குச் சென்ற பின்னர், தாய்லாந்து அதைக் கைப்பற்றியதாகும். இப்போது பாங்காக் அரண்மனையில் உள்ளது அந்த மண்டபத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுக்கலாம்.

***

ஒரு நல்ல விஷயம் உடலின் பல பாகங்கள் தெரியும் படி உடை அணிந்தவர்களுக்கும், பேஷனுக்காக கிழிந்த டிரவுசர் போட்டுவரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அனுமதி இல்லை; வெளியே உடைகளை மாற்றிய பின்னர்தான் உள்ளே வரலாம் மைசூர் அரண்மனையிலும் இந்த விதி உண்டு. தாய்லாந்து அரண்மனையிலாவது செருப்பு அணிந்து செல்லலாம் மைசூர் அரண்மனையில் காலணிகளையும் கழட்டிய பின்னர்தான் உள்ளே செல்ல முடியும்

***

தாய்லாந்து (பாங்காக் ) அரண்மனை முழுதும் வேலூர் ஸ்ரீபுரம் தங்க  கோவில் போல தங்க நிறத்தில் ஜொலிக்கிறது ஆனால் வேலூர் ஸ்ரீபுரம் கோவிலில் இருப்பது சொக்கத் தங்கம் ; பாங்காக் அரண்மனையில் இருப்பதோ இத்தாலியில் செய்யப்பட தங்க நிற மொசைக் கல்தான் ; இருந்த போதிலிலும் ஜொலிப்பதில் குறைவில்லை!

நிறைய புத்தர் சிலைகள் ஆங்காங்கே உள்ளன; தங்க நிறத்தில் கருடன்கள், நாகங்கள் ஆகியனவும் உண்டு. எல்லோரையும் கவர்வது தங்க நிறத்தில் ஆளுயரம் உள்ள அசுர பக்ஷி, அப்சரஸ், கின்னர கந்தர்வ உருவங்கள்; எல்லாம் தங்க வர்ண சிலைகள் .

***

Grand Palace Entrance, Bangkok, Thailand

ராமாயணக் காட்சிகள் 

சுவர் முழுதும் ராமாயணக் காட்சிகள்

இந்த அரண்மனை நீண்ட வரலாறு உடையது அல்ல; சுமார் 250  ஆண்டு வரலாறு உடையதுதான். என்னை மிகவும் கவர்ந்தது- சுவர் முழுதும் தீட்டப்பட்டுள்ள ராமாயணக் காட்சிகள்தான் ; சுமார் 180 ராமாயணக் காட்சிகளை ஓவியங்களாக தீட்டியுள்ளனர் காரணம் என்னவெனில் தாய் மன்னர்கள் அனைவரும் ராம பக்தர்கள் இப்போது ஆளுபவரா பத்தாவது ராமன் கடந்த 250 ஆண்டுகளில் ராமன் 1 முதல் ராமன் பத்து வரை  மன்னர்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர் இதற்கு முன்னர் இருந்த தலைநகர் அயோத்யா ; இது பாங்காக்கிலிருந்து சுமார் இரண்டு மணி தொலைவில் இருக்கிறது; பர்மாவுக்கும் சயாமுக்கும் நடந்த சண்டையில் பழைய அரண்மனை சேதமானது. சயாம் என்பது இந்த நாட்டின் பழையபெயர். அதற்குப் பின்னர் சாவோ பிரயா நதிக்கரையில் உள்ள பாங்காக் நகருக்கு மன்னர் முதலாம் ராமா 1782 – ஆம் ஆண்டில் இந்த அரண்மனையைக் கட்டி, குடியேறினார் ; பின்னர் ஆண்ட ராமக்கள் ஒவ்வொரு பகுதியாகக் கட்டி அரண் மனையை விரிவுபடுத்தினார்கள்.

இப்போது நாட்டை ஆளும் மன்னர் பத்தாவது ராமா ஆவார்

அரண்மனையில் கோல்டன் காபி கடை உள்ளது மிகவும் அருமையான காப்பி அங்கே கிடைக்கிறது

அரண்மனைக்குள் சின்ன மியூசியங்களும் உள்ளன இதில் நாட்டின் ஜவுளி, கைத்தறி முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

***

இந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் படுத்த நிலையிலுள்ள நீண்ட மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது அதைப்  பார்ப்பதற்கு தணிக் கட்டணம் கொடுக்க வேண்டும்.

மரகத புத்தருக்கு பல விலை உயர்ந்த, தங்கத்தினால் செயப்பட்ட பலவகை அங்கிகள் உள்ளன. இந்துக்கள் கோவிலில், தேவி சிலைகளுக்கு வெவ்வேறு அங்கிகளை சார்த்துவது போல மரகத புத்தருக்கும் ஆண்டில் குறிப்பிட்ட தினங்களில் உடைகளை மாற்றுகிறார்கள் அதில் வைரம் முதலிய ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடக்கும் அரசர் நிலத்தை உழும் தினத்தில் பிராமண புரோகிதர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள் . திருவெம்பாவை ஓதப்படுவது பற்றி பல அறிஞர்கள் முன்னரே எழுதியுள்ளனர்.

***

எங்கும் சம்ஸ்க்ருதம்

தாய்லாந்தில் சாலை மார்க்கமகாப் பயணம் செய்தால் ஸ்ரீநகர், இந்திரா, மஹா , ராஜ போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை நிறையவே காணலாம்.

அரண்மனையில் நடைபெறும் விழாக்கள்:

ஏப்ரல் மாதம் – புத்தாண்டு ; தமிழ்ப் புத்தான்டு தினத்தில்;

இது தவிர மன்னர்கள் பதவி ஏற்ற தினங்கள்

***

அப்சரஸ் அழகிகள் 

ஐந்து தலை நாகம் 

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் மாடல்/மாதிரி 

தாய்லாந்து அரண்மனையில் லண்டன் சுவாமிநாதன் 

மரகத புத்தர் உள்ள மண்டபம் 

கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் MODEL மாதிரி ஒன்று இங்கே உள்ளது

அரண்மனைக்குள் நுழையும் போது அது பற்றிய துண்டுப் பிரசுரத்தை வாங்கிவைத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

—subham—

TAGS– ராமாயணக் காட்சிகள் ,சம்ஸ்க்ருதம், தாய்லாந்து மன்னர், பாங்காக், அரண்மனை, சுவையான தகவல்கள்,பத்தாவது ராமா, மரகத புத்தர்

விமானத்திற்குள் வந்த மின்னல் பந்து! (Post No.15,344)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,344

Date uploaded in London – 19 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 2025 நவம்பரில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை! 

விமானத்திற்குள் வந்த மின்னல் பந்து! 

ச. நாகராஜன் 

விஞ்ஞானிகளையே திகைக்க வைத்த ஒரு சம்பவம் நியூயார்க்கிலிருந்து பறக்க ஆரம்பித்த ஒரு விமானத்தில் ஏற்பட்டது.

நடந்தது இது தான்: 

தேதி : 1963ம் வருடம் மார் மாதம் 19ம் நாள். 

நள்ளிரவு 12.05 மணிக்கு ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் நம்பர் 539 நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. 

ஆகாயம் இருள் மயம். சந்திரனைப் பார்க்க முடியாதபடி இருள். ஒரே இடி மின்னல். திடீரென்று விமானத்தை ஒரு மின்சக்தி தாக்கியது. 

கெண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ரோஜெ ஜென்னிஸன் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று எட்டு அங்குலம் குறுக்களவு உள்ள ஒரு பந்து விமானத்தின் பைலட் காபினில்லிருந்து வெளியே வருவதைப் பார்த்தார்.

சுமார் முப்பது அங்குல உயரத்தில் அந்தப் பந்து மின்னியவாறே பயணிகள் நடக்கும் நடைபாதையில் மெதுவாக வந்தது. அந்தப் பந்தின் வண்ணம் வெள்ளையும் நீலமும் கலந்த கலவையாக இருந்தது. 

நல்ல வேளையாக அது யாரும் மீதும் மோதவில்லை. ஒரு அசம்பாவிதமும் நேரவில்லை.

 விமானம் ஒருவழியாக வாஷிங்டனில் வந்து இறங்கியது. 

விஞ்ஞானிகள் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு தங்கள் ஆய்வைத் தொடங்கினர். இதை பால் லைடனிங் (Ball Lightening) – மின்னல் பந்து – என்று கூற ஆரம்பித்தனர். 

இயற்பியல் வல்லுநர்களுக்கு இந்தப் பந்தின் தோற்றம் சவாலாக இருந்தது. 

கொலொரோடாவில் பவுல்டரில் இருந்த நேஷனல் செண்டர் ஃபார் அட்மாஸ்பெரிக் ரிஸர்ச் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.டி. அத்ஷுலெர், எல். ஹூஸ், ஈ.ஹில்ட்னர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் ஒரு கருத்தை முன்வைத்தனர்.

 இடியுடன் கூடிய மின்னல்கள் ஒரு பிரம்மாண்டமான இயற்கையான பார்டிகிள் ஆக்ஸிலரேட்டராக இருந்து புரோடான்களை மிகப் பெரும் ஆற்றலுடன் வெளியிட்டிருக்க வேண்டும்.  இந்த புரோடான்கள் வளிமண்டலத்தில்  உள்ள அணுக்கூறுகளுடன் மோதி ஆக்ஸிஜனையும் ஃப்ளோரினையும் உருவாக்கி இருக்க வேண்டும். இவை போஸிட்ரான் மற்றும் காமா கதிர்களை ஆற்றலுடன் வெளிப்படுத்தவே ,மின்னல் பந்துகள் உருவாகி இருக்கின்றன.

 இது சரிதானா என்று இதர விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்தனர். இது உண்மை தான் என்றால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இனி ஏற்பட்டால் மனிதர்களைக் கொல்லுகின்ற ஒரு சிறிய கதிர் இயக்கத்தை நாம் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

 அபூர்வமான ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கதிர் இயக்கம் பற்றிய ஒரு புதிய சிந்தனை ஏற்பட்டு விட்டது என்னவோ உண்மை தான்! 

**

மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு! (Post No.15,343)


Written by London Swaminathan

Post No. 15,343

Date uploaded in Sydney, Australia –  18 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரில் அமைந்துள்ள அரண்மனை தசரா என்னும் விஜய தசமி பண்டிகை மூலம் உலகப் புகழ் பெற்றது; வருடத்தில் பல நாட்களுக்கு ஜகஜ்ஜோதியாக மின்சார விளக்கு அலங்காரத்துடன் ஜொலிக்கும் கட்டிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜால்ரா அடித்த’ உடையார் வம்சத்தின் வசிப்பிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜே’ போட்டதால் இந்த அரண்மனை தப்பித்தது; திப்பு சுல்தான், வீர பாண்டிய கட்டபொம்மன் போன்று வெள்ளைக்காரர்களை எதிர்த்து இருந்தால் இது எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் .

இந்த அரண்மனைக்கு மூன்றாவது முறையாக ஜனவரி (4-1-2026)  நான்காம் தேதி செல்லும் வாய்ப்பு கிட்டியது . உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் வராகசாமி கோவில் கோபுரம், இதன் புனிதத்துவத்தை அதிகரிக்கிறது .

உள்ளே நுழைய கட்டணம் ரூ 120.

இது மூன்று மாடி கருங்கல் கட்டிடம்; பொது மக்கள் சில பகுதிகளை மட்டுமே காண முடியும்.

காலணிகளை கழற்றி வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல முடியும்; காசு வாங்காமலே அவர்களே இந்த காலணிகளைப் பாதுகாக்கும் சேவையை அளிக்கிறார்கள்; சென்ற முறை போலவே இந்த முறையும் மேல் மாடிக்குச் செல்ல அனுமதி இல்லை; அது ராஜ குடும்பத்தின் வசிப்பிடம். ஆனால் பிரம்மாண்டமான கட்டிடங்களுடனும், சுற்றிலும் பரந்த தோட்டங்களுடனும் அமைந்த அரண்மனை பார்ப்போரின் மனதைவிட்டு அகலாது ; நடக்கும் இடமெல்லாம் ரத்தினக் கம்பளம் விரித்தாற்போல வழ வழப்பான மொசைக் தரை . மிகப்பெரிய ஹால்/ மண்டபங்களில் வர்ண, வர்ண தூண்கள் . . இது ஆங்கிலேய மற்றும் இஸ்லாமிய கலைகளின் கல ப்புடன் சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . ராஜஸ்தான், மஹாராஷ்டிர , டில்லி அரண்மனைகளைப்  போல பழமையோ வரலாறோ கிடையாது ; காரணம் முந்தைய அரண்மனை மரத்தால் ஆனதால் ஒரு விபத்தில் எரிந்து அழிந்துபோனது.

***

மனதை விட்டு அகலாத காட்சிகள்

ஒரு பெரிய வெள்ளிக் கதவு , இறந்து போன யானையின் முகத்துடன் தந்தங்களுடன் உள்ள சுவரில் பதித்த யானை , இவை தவிர யானைந் தந்தங்கள், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாமுண்டீஸ்வரி, காயத்ரி படங்கள், ராம லட்சுமண, பரத, சத்ருக்னரின் பெரிய கொலு பொம்மைகள், அதே போல சரஸ்வதி, லெட்சுமி தேவி பொம்மைகள் , வரிசையாக வைக்கப்பட்டுள்ள சிம்மாஸனங்கள், ராஜ தர்பார் மண்டபம், மல்யுத்த மைதானம் , சுவர் முழுதும் ராஜ வம்ச ஓவியங்கள், இளவரசனின் பூணுல் /உபநயனம் கல்யாண படம், ராஜ வம்சப் பெண்கள் புடவை அணிந்து மிகவும் சாதாரண குடும்பப் பெண்கள் போலக் காட்சி தரும் வரைபடங்கள்.– இவை போன்றவை நமக்கு வியப்பை உண்டாக்கும் .

திரைப்படங்களில் , டெலிவிஷன் தொடர்களில் நாம் காணும் படாடோப மஹாராணிகளைப் போல ஆடம்பரத்தைக் காணவில்லை!

உடையார் வம்ச மன்னர்கள்  சாமுண்டீஸ்வரி தேவியின் பக்தர்கள்; ஒரு காலத்தில், யானை மீது தங்க அம்பாரியில் அவர்கள் பவனி வந்தனர் ; இப்போதெல்லாம் அந்த இடத்தில் தசாரா பண்டிகையில் தேவிதான் வலம்  வருகிறாள்.

மஹாபாரத கால தங்க சிம்மாசனம் கூட இந்த அரண்மனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .

இவர்களுடைய செல்வ வளத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். புகழ்பெற்ற பழைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா . அவருடைய நகைகள் அப்படியே ஜெயலலிதாவாவுக்குக் கிடைத்தன ; கோர்ட்டில் அளவுக்கு அதிகமான நகைகள் இருப்பது பற்றிக் கேள்வி எழுந்தபோது அவை மைசூர் மஹாராஜா தனது தாயார் சந்தியாவுக்கு கொடுத்தவை என்று அவரே கூறினார் . இதைப் பார்க்கையில் ராஜ வம்சத்திட்டம் உள்ள நகைகளின் அளவினை நாமே யூகித்தறியலாம்.

***

, இளவரசர் உபநயனம், படங்கள் ,

 லண்டன் சுவாமிநாதன்

வெள்ளிக் கதவு, 

புல்லட் பாயிண்ட்டில் அரண்மனை புள்ளி விவரங்கள்

கட்டப்பட்ட ஆண்டு -1912

கட்டுவதற்கு ஆன காலம் – 15 ஆண்டு

அரண்மனைக்கு வடிவம் கொடுத்த கட்டிடக் கலை வல்லுநர்- ஆங்கிலேயர் ஹென்றி இர்வின் Henry Irwin

மொத்தமுள்ள வாசல்கள் -3

மிக உயர்ந்த கோபுரம்- 145 அடி

அரசின் குறிக்கோள் சம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது: “न बिभॆति कदाचन” ( ந பிபேதி கதாசன = ஒருபோதும் பயப்பட வேண்டாம்).

அறைகளின் எண்ணிக்கை -175

***

யோகாவும் ராஜாவும்

மைசூர் மகாராஜாவின் வேண்டுகோளின்   பேரில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல யோகா ஆசிரியர் கிருஷ்ணமாசார்யா , அரண்மனைக்குள் யோகா கற்பித்தார் . பி.கே எஸ் அய்யங்கார், பட்டாபி ஜோஷி அவரிடம் மாணவர்களாக இருந்தனர் . முன்காலத்தில் ஒரு மைசூர் மஹாராஜா 112  ஆசன படங்களுடன் ஒரு புஸ்தகத்தை எழுதி வெளியிட்டதே இதற்கு மூல காரணம். 

***

ஒலி-ஒளிக் காட்சி Sound and Light Show

வாரத்தில் சில நாட்கள் ஆங்கிலத்திலும், சில நாட்கள் கன்னடத்திலும் அரண்மனை பற்றிய  ஒலி-ஒளிக் காட்சி நடைபெறுகிறது ; அவைகளை அரண்மனை ‘வெப்சைட்’டிலிருந்து அறியலாம் ; வாசலில் ஒலிபெருக்கி மூலமும் இதை அறிகின்றனர் .

இருப்பிடம் – மைசூர் நகரின் நடுப்பகுதி; பெங்களூருரிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் மைசூருக்கு வரலாம் .

***

யானைத் தந்தம், 

மைசூர் நகரில் மேலும் நிறைய குட்டி அரண்மனைகள் உண்டு ;அவை எல்லாம் இப்போது அரசாங்கத்துறை கட்டிடங்களாக மாறிவிட்டன .

எங்களுக்கு கார் ஓட்டிவந்த டிரைவர் எந்த, எந்த இலாகா இப்போது எந்த,எந்த க் கட்டிடங்களில் இருக்கின்றன என்று காட்டிக்கொண்டே வந்தார்; போலீஸ் அதிகாரிகள் ஒய்வு பெறும் முன்னால் கடைசி இரண்டு மாதங்கள் தங்கி அனுபவிக்கும் பெரிய அரண்மனைக் கட்டிடத்தைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தையும் சொன்னார்; ஒரு போலீஸ் அதிகாரிக்கு கார் ஓட்டியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

—subham—

Tags– மைசூர் அரண்மனை , மஹாராஜா, உடையார் வம்சம் , வெள்ளிக் கதவு, யானைத் தந்தம், இளவரசர் உபநயனம், படங்கள் , லண்டன் சுவாமிநாதன்

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post No.15,342)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,342

Date uploaded in London – 18 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

11-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

ச. நாகராஜன் 

ஒரு நாள் சுபத்ரையிடம் அர்ஜுனன் போர்க்கலை பற்றியும் பத்மவியூகம் பற்றியும் கூற ஆரம்பித்தான். அவள் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் அபிமன்யுவை கர்ப்பத்தில் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை. சுபத்ரையின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை, அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கிருஷ்ணர் சுபத்திரை கர்ப்பிணியாக இருக்கிறாள் என்றும் அவன் கூறுவது குழந்தையின் மீது பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

பாரதத்தில் கர்ப்பமாக உள்ள பெண்மணிகளிடம் வீரரர்கள், மகான்களைப் பற்றிச் சொல்வது பண்டைய கால வழக்கமாகும். இதனால் அந்த நல்ல கதைகளினால் நல்ல அதிர்வுகளைப் பெறும் தாயிடமிருந்து அவற்றை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளும் பெறுவார்கள். இதை பழங்கால ரிஷிகள் நன்கு அறிந்திருந்தனர்.

மார்க்கண்டேயர், துருவன், ப்ரஹ்லாதன் போன்ற அருமையானவர்களைப் பற்றி கர்ப்பிணிகளிடம் சொல்வது வழக்கம்.

.இன்று என்ன நடக்கிறது? கர்ப்பிணிகள் டெலிவிஷன்,, சினிமா மற்றும் அபத்தமானவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குற்றங்களும் செக்ஸும் தான் இருக்கின்றன.  இதனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தேவையற்ற போக்கைக் கொள்கிறார்கள்.

இன்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் மஹாபாரதம் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறார்கள்.  அமெரிக்காவில் கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் அண்ட் ஹ்யூமன் டெவலப்மெண்ட் குழந்தைகள் எதனால் செல்வாக்குக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது.  அந்தோணி கேஸ்பர் (Anthony Casper)

என்னும் ஒரு திறமையான விஞ்ஞானி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். அவர் கிருஷ்ணர் சொன்னது அனைத்தும் உண்மை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். கிருஷ்ணரின் உபதேசங்களை நமது கெட்ட வாசனைகளைக் கொண்ட மனங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

அந்தோணி கேஸ்பர் 1984ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி தனது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளின் மாநாட்டில் அறிவித்தார்.  ஒரு கர்ப்பிணி உண்ணும் உணவும் அவள் கேட்கும் வார்த்தைகளும், எண்ணும் எண்ணமும் அவள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள உண்மைகளை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய முன்வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

இதற்கு நேர் மாறாக பெரும் பண்பாட்டைக் கொண்ட இந்த மாபெரும் தேசத்தில் பிறந்தவர்கள் இந்த இலட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டு தங்கள் வாய்ப்புகளை வீணடிக்கிறார்கள்.

 அமெரிக்க விண்வெளிவீரரான  மிட்செல் (Mitchell)  சந்திரனில் இறங்கியவுடன் அங்கிருந்து பூமியைப் பார்த்தார். அவர் பூமியை நீல வெல்வெட் கம்பளத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜொலிக்கும் பெரிய வைரமாகக் கண்டார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவர் உணர்ச்சி வசப்பட்டார்.

“இந்த அற்புதமான பூமியில் பிறந்தோர் ஏன் இப்படி ஒன்றும் அறியாமல் கெட்ட மனதுடன் இருக்கிறார்கள்? ஒரு வைரத்திலிருந்து தான் இன்னொரு வைரம் உருவாகும். ஒரு கல்லிலிருந்து அல்ல. புனிதமான மண்ணைக் கொண்ட அன்னை பூமியிடமிருந்து ஏன் இப்படி கெட்ட மனிதர்கள் உருவாக வேண்டும்”  என்று இப்படி அவர் கேட்டார்.

 அவர் தனது கேள்விக்கான விடையை மனிதர்கள் நல்ல பண்புகளைக் கொள்ளாமல் உலோகாயத வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதே காரணம் என்று அறிந்து கொண்டார்.

எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, தர்மத்துடன் கூடிய நடத்தை வேண்டும். இல்லையேல் மற்ற அனைத்தும் வீண் தான்.

உண்மையான கல்வி நல்ல இதயத்தைப் பண்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்க்கையைக் கொண்ட மனிதர்களே இந்த தேசத்தின் இன்றைய தேவையாகும்.

** 

22-11-1985 அன்று ஶ்ரீ சத்யசாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் லேர்னிங்-இல் நான்காவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழக வேந்தரான ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரையின் ஒரு பகுதி.

சோமநாத்பூரில் நான்  கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341)

London Swaminathan standing with a bag , Somnathpur

Written by London Swaminathan

Post No. 15,341

Date uploaded in Sydney, Australia –  17 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 சோமநாத்பூரில் நான்  கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341)

Lodon Swaminathan in Somnathpur

1

சோம்நாத்பூர் எங்கே உள்ளது ?

கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரிலிருந்து 35  கிலோமீட்டர் தொலைவில் சோம்நாத்பூர் இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு அரை நாள் போதும் .

2

அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ?

ஹொய்சாளர் கட்டிடக்  கலையை ஒரே இடத்தில் கண்டுகளிக்க முடியும் . ஹலபேடு , பேலூர் போன்ற இடங்களில் பரந்த வெளியில்  காணும் சிற்பங்களை இங்கே ஒரே கட்டிடத்தில் காண முடியும். ஏனெனில் அவைகளை ஒப்பிடும்போது சின்னது.

இது சென்ன கேசவர் கோவில் ஆகும்; ஆயினும் இப்போது வழிபாடு இல்லை ; தெய்வங்களுடைய சந்நிதிகள் வழி பாடில்லாமல் உள்ளன  கோவில் என்பதால் காலணிகளை வெளியே  வைத்துவிட்டு உள்ளேசெல்ல வேண்டும்.

நட்சத்திர வடிவ மேடையில் அமைக்கப்பட்டுள்ள கோவிலை வலம் வருவதற்கு பாதை உள்ளது; அதில் நடந்து சென்று வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து தெய்வங்களைக் காணலாம் .

கேசவர், ஜனார்த்தனர்,  வேணுகோபாலர் என்ற மூன்று சந்நிதிகள் உள்ளன; கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இராமாயண, மஹாபாரத பாகவத புராணக் கதைகளை சித்தரித்துள்ளனர்  . கோவில் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது

ராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாக வடித்துள்ளார்கள்; அங்கு என்ன இருக்கிறது என்பதைப் படிக்காமல் போனால் எல்லா சிற்பங்களும் ஒன்று போலவே தெரியும் .ஆகையால் படித்துவிட்டுப் போவது நல்லது. அல்லது அங்குள்ள கைடுகளுக்குக் காசு கொடுத்து அமர்த்திக்கொள்ள வேண்டும்.

3

நான் ஏன் சென்றேன் ?

ஏறமுடியாத சிரவணபெலகொலா மலை, பேலூர், ஹளபேடு போன்ற இடங்களை பார்த்துவிட்ட எனக்கு மைசூருக்கு மிக அருகிலுள்ள சோம்நாத்பூரினைக் காணாதது ஒரு குறையாக இருந்தது .நான் பார்த்த மதுரை மீனாட்சி கோவிலையே நூறு முறைக்கும் மேலாகப் பார்த்த எனக்கு இனிமேல் ஒவ்வொரு தடவை ஒரு ஊருக்குப் போகும்போதும் புது இடங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது ; அவ்வாறே  சங்கல்பம் செய்துகொண்டேன் . இந்த முறை கர்நாடக மாநிலத்துக்குச் சென்றபோது மேலுக்கோட்டை , ஸ்ரீரங்கப்பட்டணம் (3-1-2026), சோம்நாத்பூர் (4-1-2026) என்ற இடங்களை முதல் முறையாகக் கண்டேன்; ஏற்கனவே பார்த்த மைசூர் அரண்மனையையும் சாமுண்டீஸ்வரி கோவிலையும் மீண்டும் மூன்றாவது முறையாகப் பார்த்தேன்.

4

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன?

எந்த இடத்துக்குப்  போகும் முன்னர் திறக்கும் நேரம், மூடும் நேரத்தை அறிய வேண்டும் . சோம்நாத்பூர்  சிற்பக் களஞ்சியம், தொல்  பொருட் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால் காலை   பத்து மணிக்குத்   திறந்து மாலை ஐந்து மணிக்குப்  பூட்டி விடுவார்கள்.

 5

கட்டணம் எவ்வளவு ?

உள்ளே நுழைவதற்கு கட்டணம் இருபது ரூபாய் தான் . ஆனால் Google Pay கூகுள் பே மூலம் கொடுக்க வேண்டும் என்பதால் கொஞ்சம்  கஷ்டப்பட்டோம். வெளிநாட்டுப் போன்களில் அந்த வசதி இல்லை. பின்னர் பிறரிடம் பணத்தைக் கொடுத்து கூகுள்  பே  செய்தொம் ; இரண்டு மணி நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து போட்டோ எடுத்துத் திரும்பினோம்.

6

வரலாறு என்ன ?

ஹொய்சாள மன்னர் மூன்றாவது நரசிம்மன் பிராமணர்களுக்கு கொடுத்த நிலத்தில் அமைக்கப்பட்ட  விஷ்ணு கோவில் இது ; சுமார் 750 ஆண்டுகள் பழமையானது.

கோவிலுக்கு வெளியே மிக உயரமான கருட ஸ்தம்பம் இருக்கிறது அதன் உச்சியில் கருடன் உருவம் இப்போது இல்லை .

மாலிக்காபூர், முகமது பின் துக்ளக் போன்ற மத வெறி பிடித்த முஸ்லீம்கள் இதைச் சுற்றியுள்ள பல கோவில்களை இடித்துத் தள்ளிவிட்டனர். இது தப்பிப் பிழைத்தது அதிசயமே.

மூன்றாவது நரசிம்மரின் படைத்தளபதி சோமநாத தண்டநாயக அமைத்த  அக்ரரஹாரம் (பிராமணர் குடியிருப்பு) இது.

முக்கியக் கோவிலுக்கு வெளியே தூண்களுள்ள பிரகாரங்கள் உள்ளன. அதில் இந்து மத, சமண மத சந்நிதிகளில் பல தெய்வங்களைக் காணலாம்.

பேலூர் , ஹளபேடு ஆகிய கோவில்களுடன் இதையும் யுனெசுகோ உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.

7

சுவர்களில் காண வேண்டிய சிற்பங்கள்:

ராமாயண காட்சிகளில் சில:

தசரதர் செய்த புத்ர காமேஷ்டி யாகம், குழந்தைகள் பிறந்து தொட்டிலில் ஆட்டியது, , தாடகை வதம், சீதை திருமணம்,  விராடன், சூர்ப்பனகை , மாய பொன் மான் சம்பவங்கள், ஹனுமான், ஜடாயு சுக்ரீவன் உருவங்கள் .

***

பாகவத புராண காட்சிகளில் சில:

பாற்கடலில் பள்ளிகொண்ட விஷ்ணு, கிருஷ்ண ஜனனம், யமுனை நதியைக் கடத்தல்,  கிருஷ்ணரின் பால்ய லீலைகள்

கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்தது, பூ தனை, கம்சன் போன்றோரை வதம் செய்தது

**

மஹாபாரதக் காட்சிகள்

திருதராஷ்டிரன் சபை, பாண்டவர் வனவாசம், பீமன்- ஹிடும்பி திருமணம், கடோத்காஜன் பிறப்பு,

அர்ஜுனன் அம்பு விட்டு மீனை அடித்தல்; திரெளபதி திருமணம் , சூதாட்டம், போர்க்களக் காட்சிகள், பாண்டவர் வெற்றி.

**

பொது சிற்பங்கள்

தாண்டவமாடும் கணேசர்,

நடனம் ஆடும் சரஸ்வதி

கிருஷ்ணரின் பல வடிவங்கள்

தசாவதாரங்கள்

லட்சுமி நடனம் ஆடுதல்

பிரம்மா

ஹரிஹரன் (சிவன் +விஷ்ணு)

துர்கா

மஹிஷாசுரமர்த்தனி i

நடனம் ஆடும் விஷ்ணு

8

தூண்களும் கூரையும்

கோவிலுக்குள் உள்ள குடை வடிவக் கூரைகள் அற்புத வேலைப்பாடுகள் உடையவை . அவைகளை அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டும்.

தூண்கள் ‘லேத்’ என்னும் கடைசல் எந்திரக்  கருவிகள் மூலம் கடைந் தெடுக்கப்பட்டவை.

ஒவ்வொரு சிலை மீதுள்ள நகைகளையும் கவனிக்க வேண்டும்; யானை மீது கூட அலங்காரம் இருக்கிது சிலைகளின் கைகளில் உள்ள பொருட்களும் அவை யாருடையவை என்பதைக் காட்டும்

9

கன்னட கல்வெட்டு 

அருமையான அற்புதக் கல்வெட்டு!

பழைய கன்னட மொழியில் 2 மன்னர் செய்த தானங்கள் மற்றும் பணிகளைக் கூறும் கல்வெட்டு கோயிலுக்குள் நுழைந்தவுடன் தென்படும்; ஆங்கிலத்திலும் விளக்கம் உள்ளது.

கல்வெட்டுப் பலகையின் உயரம் சுமார் மூன்று மீட்டர் ; இதில் நான்கு செய்திகள் உள்ளன மூன்றாவது நரசிம்மர் கால தானங்கள் இரண்டும் மூன்றாவது வல்லாள மன்னனின் தானங்கள் இரண்டும் உள்ளன கல்வெட்டின் மேல்புறத்தில் கோவிலின் மூன்று தெய்வங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டில் 91  வரிகள் பழைய கன்னட லிபியில் செதுக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள மொழி கன்னடமும் சம்ஸ்கிருதமும் ஆகும் .கோவிலிலுள்ள தெய்வங்களின் வழிபாட்டிற்காக மூன்றாவது நரசிம்ம மன்னன்  3000  பொற்காசுகள் அளித்தையும் சோமைய தண்ட நாயக்கன்பேரில் அக்ரஹாரம் அமைக்கப்பட்டதையும் இது தெரிவிக்கிறது. அவனுடைய உறவினர்கள் மல்லிதேவ, சிக்க கேடய தண்ட நாயகர்கள் கோவிலின் பராமரிப்புக்கு நிதி  உதவிய செய்தியும் உளது. கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 1268 CE  மற்றும் 1276  CE.

அடுத்த கல்வெட்டில் 42 வரிகள் அதன் காலம் 1281 . ஆசார்யர்கள், வைஷ்ண வர்கள் நம்பிகள்  ஆகியோருக்கு மூன்றாவது நரசிம்ம மன்னன் கொடுத்த நிலங்கள் , கிராமங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் பலன்களை , வருவாய்களை கோவிலுக்குச் செலவழித்தது போக மீதியுள்ளவற்றை அவர்கள் அனுபவிக்கலாம் என்ற செய்தி உள்ளது.

கன்னட மொழியிலுள்ள மூன்றாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 52 ; அதன் காலம் 1300 CE . சோமநாதபுர மக்கள் அங்குள்ள வைஷ்ணவ , சைவ கோவில்களில் எவ்வித வழிப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரச  கட்டளை இது .ஒவ்வொரு கோவிலுக்கும் ஒதுக்கப்பட்ட நிலபுலன்கள், செலவழிக்க வேண்டிய நிதி முதலிய விவரங்களை இது தெரிவிக்கிறது.

கன்னட மொழியிலுள்ள நாலாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 34 ; அதன் காலம் 1326 CE. இந்தக் கல்வெட்டு ஆறு தட்டின மஹாஜனங்களுக்கும் வைஷ்ணவ மஹாஜனங்களுக்கும் இடையேயுள்ள உடன்பாட்டினைக் கூறுகிறது; கால்வாய் மற்றும் குளத்தினைப் பராமரிக்க வைஷ்ணவ மஹாஜனங்கள் ஆண்டுக்கு ஆறு பொற்காசுகளை அளிக்க வேண்டும் என்பது உடன்படிக்கை.

இரண்டு மன்னர்களின் நான்கு செய்திகளை இப்படி ஒரே கல்வெட்டில் காண்பது ஒரு அதிசயமே . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேதி உடையவை என்பதும் குறிப்பிட்ட தக்கது.

–subham—

Tanks–சோமநாதபுரம், கர்நாடகம், ஹொய்சாளர் கலை, நரசிம்ம மன்னன், வல்லாள மன்னன், கல்வெட்டுச் செய்திகள்  , கன்னட கல்வெட்டு சென்ன கேசவர் கோவில் , ப டங்கள், சோம்நாத்பூர், London Swaminathan 

உலகையே மாற்றும் மனித ரொபாட்! (Post No.15,340)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,340

Date uploaded in London – 17 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-10-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

உலகையே மாற்றும் மனித ரொபாட்!

ச. நாகராஜன் 

நாளுக்கு நாள் உலகில் அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இளைஞர்கள் கவலைப்படுகின்றனர்.

“இடைவிடாமல் எங்களுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார்கள்?” என்று முதியவர்களும் கவலைப்படுகிறார்கள். 

இதற்கு ஒரு தீர்வு தான் என்ன?

வேலைப் பளு தாங்காமல் வேலைக்குப் போகும் பெண்மணிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதற்கும் தீர்வு உண்டா? 

இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் மனித ரொபாட் என்பது தான்.

 ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் மனிதர்களுக்கு வீட்டில் உதவி செய்ய சின்னச் சின்ன இயந்திரங்கள் வர ஆரம்பித்தன.

 இன்றோ மலைக்க வைக்கும் அளவிற்கு மனித ரொபாட் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்.

 மனிதனைப் போலவே அதே உயரம், அதே அழகிய அமைப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்து, “இதோ, காப்பி” என்று காப்பி கோப்பையைத் தரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி தானே

உலகில் ஜப்பானிய கம்பெனிகளும், பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இப்போது விதவிதமான மனித ரொபாட்டுகளைத் தயார் செய்ய ஆரம்பித்து விட்டன.

வீட்டு உதவி ரொபாட்டுகள், வாக்குவம் க்ளீனரில் ஆரம்பித்து பெப்பர் என்ற பர்ஸனல் கம்பேனியன் ரொபாட் நம்முடன் ஜாலியாகப் பேசி நமது அன்றாட ஷெட்யூல்களில் உதவி செய்கிறது. இதை சாஃப்ட் பேங்க் ரொபாடிக்ஸ் என்ற நிறுவனம் தயார் செய்திருக்கிறது.

 மெடிகல் ரொபாட்டுகள் அறுவைச் சிகிச்சையில் உதவி செய்கின்றன. ரொபாட்டின் கரங்கள் நுட்பமாகச் செயல்படுகின்றன.

 வயதானவர்களுக்கு பெப்பர் ரொபாட் உதவி செய்வதோடு அவர்களின் நேரத்தை இனிமையாகப் போக்க அரட்டை அடிக்கவும் செய்கிறது!

 தொழிலகங்களை எடுத்துக் கொண்டால் ஆடோமேடட் கைடட் வெஹிகிள் இப்போஒது தயார். குகா என்ற நிறுவனம் இதை இப்போது தயார் செய்கிறது. தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட சாலை வழிகளில் இது பத்திரமாக உங்களைச் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும்.

 கல்வித் துறையிலோ ஹ்யூமனாய்ட் ரொபாட்டுகள் மாணவர்களுக்கு பலவித புதிய உத்திகளைக் கற்றுத் தருகின்றன.

 விவசாயத்துறையில் அறுவடைக்கு ரொபாட்டுகள் தயார்.

 ட்ரோன்கள் கல்யாண வீடுகளில் உயரப் பறந்து கண்காணிப்பதையும் போட்டோ எடுப்பதையும் அனைவரும் பார்த்து வருகிறோம்            ட்ரோன்கள் டெலிவரி செய்யும் விதமே தனி. ஒவ்வொரு வீட்டிற்கும் இனி டெலிவரி ட்ரோன்களினால் தான்!

 இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்ட குண்டுகள் முழுதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. இப்போது பாம் டிஸ்போஸல் ரொபாட் ரெடி. இவை பயமில்லாமல் வெடி குண்டுகளை அகற்றி விடும்.

அடுத்து நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதா என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்து விட்டது. மனிதர்கள் முகத்தைச் சுளிக்கும் வேலைகளில் ரொபாட்டுகள் இறங்கி நொடியில் கழிவுகளை அகற்றி விடும்!

 முதுகெலும்பில் அடி,  பக்கவாதம் – நடக்கவே முடியவில்லை. கவலை வேண்டாம். ரீ ஹாபிலிடேஷன் ரொபாட்டுகள் இப்படி அங்கங்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும். அவர்களை நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். எக்ஸோ பயானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த வகை ரொபாட்டுகளைத் தயார் செய்கிறது.

 சுற்றுப்புறச்சூழலையும் காலநிலையையும் கண்காணித்து உதவ மரைன் ரொபாட்டுகள் ரெடி.

 கடைகளில் சென்று சாமான்களை வாங்குகிறீர்களா? அசோனொமஸ் ஷாப்பிங் கார்ட் என்னும் வண்டிகள் உங்கள் சாமான்களைச் சேகரித்து பில் கவுண்டரில் கொடுத்து விடும். உங்கள் கார் வரைக்கும் வந்து சாமான்களை பத்திரமாக இறக்கி விடும்.

அன்றாட ரொடீன் வேலைகளுக்கு உதவி செய்ய ஸ்மார்ட் ஹோம் ஹப்ஸ் என்ற ரொபாட்டுகள் ரெடி. இவை அன்றாட வேலைகளை நிகழ்ச்சி நிரலாக்கி உங்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி உதவும்.

 இன்னும் தானே டிரைவ் செய்யும் கார்கள், ஹோட்டலில் பரிமாறும் ரொபாட்டுகள், திருடர்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் விசேஷ ரொபாட்.. அடடா…. பட்டியல் நீளமாகப் போகிறது….

 எதிர்கால உலகம் இனிமையான உலகம். சோம்பேறிகளாக மனிதர்கள் ஆகி விடாமல் இருந்தால் சரி தான்!

எல்லாம் ரொபாட்டே பார்த்துக் கொள்ளும் என்றால் மனிதனுக்கு இனி என்ன தான் வேலை!

***

ஆதிரங்கம்- ஸ்ரீரங்கபட்டணம் தலத்தில் பெருமாள் தரிசனம் ! (Post.15,339)

London Swaminathan in Srirangapatna 


கோவில் படங்கள் ,

Srirangapatna Temple pictures

Written by London Swaminathan

Post No. 15,339

Date uploaded in Sydney –  16 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஆதிரங்கம்- ஸ்ரீரங்கபட்டணம் தலத்தில் பெருமாள் தரிசனம் ! (Post.15,339)

தமிழ்நாட்டில் வைணவர்களுக்கு கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று பொருள்; சைவர்களுக்குச் சிதம்பரம் என்று பொருள். அவ்வளவு புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .

Srirangapatna Temple tower

ஏன் ஆதிரங்கம் என்ற பெயர் ? காவிரி நதியின் கரையில்  அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கங்கையினும் புனிதமான காவிரி

கங்கை நதியைவிட காவிரி புனிதமானது என்று அப்பர் போன்ற பெரியார்கள் பாடிப் பரவியதற்குக் காரணம் இப்போது புரிகிறது. 1500  மைல் நீளமுள்ள கங்கையின் கரையிலுள்ள புனிதத் தலங்களைவிட மிகவும் அருகருகே சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் நிறைந்தது காவிரி நதிதான் .

திப்புசுல்தான் வரலாறு

Tippusultan Palace

 கோட்டை படங்கள் 

மைசூருக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மேலும் ஒரு சிறப்பு– வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் சண்டைபோட்டு அவர்களைத் திணறடித்த பூமி இது. இறுதியில் குள்ள நரித் தந்திரத்தால் திப்பு சுல்தானைக் கொன்றனர்; அத்தோடு அவனுடைய கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கி அங்கிருந்த தங்கம் ரத்தினக் கற்களை பிரிட்டனுக்கு கொண்டு சென்றனர் , விலைமதிப்புக் குறைவான பொருள்களை லண்டன் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸியத்தில் காட்சிக்கு வைத்துவிட்டு, விலையே சொல்ல முடியாத அரிய பொருட்களை ரகசியமாகப் பங்கு போட்டுக்கொண்டனர். திடீர் திடீரென்று கொள்ளைக்கார ஏல நிறுவனபிகளுக்கு அவை ஏலத்து க்கு வரும்போது அவை பற்றிய செய்திகள் வரும்; பெரும்பாலாவை திரைக்குப்பின்னால் விற்கப்படுகின்றன.

Tippu Sultan Grave

வெள்ளைக்காரனைக் குதறும் ஒரு புலி பொம்மையை திப்பு சுல்தான் வைத்திருந்தான். அதை இன்றும் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸிடத்தில் காணலாம். படை வீரர்களுக்குச் சம்பளம் போடும் நாளன்று காவலர் இல்லாமல் திப்புசுல்தான் தனியாக இருப்பான் என்ற செய்தியை ஒரு துரோகி வெள்ளைக்கற்களுக்குத் துப்புக் கொடுத்தான். அப்போது அவனைத் தாக்கி அழித்தனர் வெள்ளைக்காரர்கள்; இப்போது பாழடைந்த கோட்டையில் அவன் நினைவுச் சின்னம் உள்ளயது. அவன் சும்மா இறக்கவில்லை நூற்றுக்கனக்கான வெள்ளையர்களைக் கொன்று குவித்து இறந்தான். அந்த வெள்ளைக்கார கல்லறைகளும் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ளன. வெள்ளைக்காரர்களை அவன் சிறைவைத்த இருட்டுச் சிறைச்சாலைகளும் உள்ளன.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு திப்புசுல்தான் பல மானியங்களை அளித்துள்ளார்  என்றும் சொல்லப்படுகிறது

Watergate in Srirangapatna

பெருமாளின் புகழ்

நாங்கள் ஸ்ரீரங்கபட்டணத்துக்குப் போனபோது ஜனவரி (3-1-2026) மாத விடுமுறைக்  காலமாதலால் நல்ல கூட்டம் இருந்தது .ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கியும் கூட, நீண்ட வரிசையில் முக்கால் மணி நேரம் நின்ற பின்னர் தான் பெருமாளைச் சேவிக்க முடிந்தது. கர்நாடக மாநில ஸ்ரீரங்கபட்டணம்  கோவிலும் காவிரி நதி சூழ்ந்த  தீவுப் பகுதியில் உள்ளது. இங்குள்ள வெளிநாட்டுப்   பறைவைகள்  வந்து தங்கும் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப்பயணிகளை இயற்கை ஆர்வலர்களையும் கவர்ந்து இழுக்கிறது

 மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி.

பாஞ்சராத்ர ஆகமத்தைக் கடைப்பிடிக்கும் கோவில் இது.

மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட திருக்கோலம்.

.தனித்தனி சந்நிதிகளில் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா , ஆழ்வார்களும் உள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது; கங்க வம்சத்தினர், ஹோய்சால வம்சத்தினர் தானம் செய்த செய்திகள் கிடைக்கின்றன .

12-ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார். கெளதம முனிவருக்கு பெருமாள் காட்சி தந்த தலமும் ஆகும் .

இதன் இன்னுமொரு சிறப்பு பஞ்சரங்க தலங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து அரங்கத் தலங்களில் ஒன்று ஆகும் ; ஏனைய நான்கு:  மாயூரம் பரிமளரங்கநாதர், கோவிலடி பெருமாள், ஸ்ரீரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கள்.

***

From my Old Article

என்னுடைய புஸ்தகத்தில் முன்னர் எழுதியது கீழே உள்ளது

From my book :கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள்

37. ஸ்ரீரெங்கப்பட்டண ரங்கநாத  சுவாமி கோவில் Ranganathaswamy Temple, ,Srirangapatna

மைசூரிலிருந்து 15 கி மீ தூரம். மிகவும் புகழ்பெற்ற பஞ்ச ரங்க, ஆதிரங்க க்ஷேத்ரம் .

காவிரி நதியின் கரையில் ஐந்து புகழ்பெற்ற ரங்கநாதர் ஆலயங்கள் உள . அந்த பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இதுவே முதலில் இருப்பதால் ஆதி ரங்கம் என்று வைஷ்ணவர்கள் அழைப்பர். அடுத்த நான்கு தலங்களும் தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ளன.

ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)

மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)

அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)

சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில்கும்பகோணம் (தமிழ்நாடு)

பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்மாயவரம் (தமிழ்நாடு)

நீண்ட நெடும் பாம்பான ஏழுதலை நாகத்தில் ரங்கநாதர் எனும் விஷ்ணு படுத்திருக்க, லெட்சுமி அருகில் அமர்ந்து இருக்கிறார் . பெரிய சிலை .

கோவிலில் இடம்பெறும் ஏனைய சந்நிதிகள் : ரெங்கநாயகி, ராமர், நரசிம்மர், சுதர்சனர் பஞ்ச முக ஆஞ்சனேயர்  , கோபால கிருஷ்ணர்

கிபி (பொது ஆண்டு) 894 முதல் வரலாறு இருப்பினும் அதற்கு முன்னரே கோவில் இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு வம்ச மன்னர்களும்  கட்டிடங்களை எழுப்பி கோவிலைப் பெரிதாக்கினார்கள் .

நுழை வாயிலில் இருக்கும் பெரிய தூண்களில் விஷ் ணுவின் 24 வடி வங்கள் அலங்கரிக்கினறன.

ஹொய்சாள பாணி கலை அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன .

பிரகாரத்தில் புராணக்கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன ரங்கநாத சுவாமியின் ரத சிற்பம் அற்புதமாக இருக்கிறது . காவிரி நதியானது அதன் போக்கில் மூன்று தீவுப் பகுதிகளை உண்டாக்கியது. சிவ சமுத்திரம், ஸ்ரீரங் கப்பட்டணம் , திருச்சி/ ஸ்ரீரங்கம் .மூன்று இடங்களில் உள்ள கோவில்களையும் ஒரே நாளில்  பார்ப்பதில் கர்நாடக  வைஷ்ணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் . 

–subham—

Tags- ஸ்ரீரங்கபட்டணம், ஆதிரங்கம், பெருமாள் , திப்பு சுல்தான் கோட்டை,  காவிரி நதி, கர்நாடகம் , லண்டன் சுவாமிநாதன், பஞ்சரங்க தலங்கள், கோவில் படங்கள் , கோட்டை படங்கள் 

ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரைப் புரிந்து கொள்ளலாம்! (Post 15,338)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,338

Date uploaded in London – 16 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-10-25 தீபம் இதழில் வெளியான கட்டுரை!

ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரைப் புரிந்து கொள்ளலாம்! 

ச. நாகராஜன் 

புத்தரின் வாழ்க்கையில் அவரது அணுக்கத் தொண்டராக அணுவளவும் பிசகாது அவரது உபதேசத்தின் படி வாழ்ந்தவர் ஆனந்தர்.

அவரது வாழ்க்கை ஒரு பெரிய கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிவானது; சுவையான சம்பவங்களைக் கொண்டது.

ஆனந்தரைப் படித்தால், புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.

புத்தருக்கு அன்றாட கைங்கரியம் செய்ய நாகஸாமளா, நாகிதா, உபவாணா, சுனக்கத்தா, சுந்தா, சாகதா, ராதா, மெஹியா உள்ளிட்ட பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் புத்தர் ஞானம் பெற்ற பிறகு இருபது ஆண்டுகள் சேவை செய்து வந்தனர்.

ஆனால் இவர்களின் சேவையில் புத்தர் பரிபூரண திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ஆனந்தர் தன் மனம், மெய், மொழி, செயல் ஆகிய எல்லாவற்றையும் புத்தருக்கே அர்ப்பணித்து அவரின் அபிமானத்தைப் பெற்றார்.   

ஒரு முறை புத்தரும் நாகஸாமளரும் ஒரு சாலை வழியே சென்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது.

புத்தர் ஒரு வழியைச் சுட்டிக் காட்ட நாகஸாமளர் இன்னொரு வழியைச் சுட்டிக் காட்டினார். புத்தர் வேண்டாம் என்று தடுத்த போதும் பிடிவாதமாக அந்த வழியில் தான் போகவேண்டும் என்றார் நாகஸாமளர்.

தனது திருவோட்டையும் ஆடையையும் புத்தரின் காலடியில் வைத்த அவர், “ஐயனே! இதோ திருவோட்டையும் ஆடையையும் உங்கள் காலடியில் வைத்து விட்டேன்.” என்று கூறி விட்டு தான் தேர்ந்தெடுத்த பாதை வழியே செல்லலானார்.

ஆனால் சிறிது தூரத்திலேயே அங்குள்ள வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கித் துன்புறுத்தினர்.

உடனே அவர் ஓடோடி வந்து புத்தரைச் சரணடைந்தார். புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

அவரது சேவை பின்னர் நிறுத்தப்பட்டது.

புத்தரின் சீடரான நாகிதாவுக்கு நகர வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. புத்தர் அனைத்தையும் விட்டு விட்டு காட்டில் வசிக்க வேண்டுமென்று உபதேசித்தார்.

ஆனால் நாகிதாவோ நகரத்தில் ஆடம்பர வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

உபவாணர் ஒரு சமயம் புத்தருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பில் அவருக்கு சேவை செய்ய முன் வந்த போது வெந்நீரையும் மருந்துகளையும் தயார் செய்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் புத்தரின் சமிக்ஞைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

சுனக்கத்தா வைசாலி நகர இளவரசர். அவர் புத்தருக்கு சேவை செய்ய முன் வந்தார். ஆனால் அவர் புத்தரின் உபதேசங்களை விட்டு விட்டு கோரகத்தீய சம்பிரதாயத்தில் பற்று கொண்டார்.

அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

சுந்தா ஒரு இளைஞர். புத்தர் ஒரு சமயம் இரு அற்புதங்களை நிகழ்த்த முன் வந்த போது அவரை முந்தி தானே அவற்றை நிகழ்த்துவதாகச் சொன்னார். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

சாகதா தினசரி பிட்சைக்காக நகருக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு வீட்டில் அவருக்கு விதவிதமான அமுது படைத்து கூடவே குடிக்கவும் பானம் தந்தனர். அதைக் குடித்த அவர் சுய நினைவை இழந்து ஆடிக் கொண்டே புத்தர் இருந்த விஹாரத்தின் வாசலில் வந்து விழுந்தார். இதர துறவிகள் அவரைத் தூக்கி எடுத்து புத்தரின் பாதாரவிந்தங்களில் தலை இருக்குமாறு படுக்க வைத்தனர். ஆனால் அவரோ திரும்பி தன் கால்களை புத்தருக்கு எதிரே வைத்தார். மறுநாள் சுய நினைவு திரும்பவே தனது தவறை உணர்ந்த அவர் புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். புத்தரும் மன்னித்தார். ஆனால் மீண்டும் அதே தவறை அவர் செய்யவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

ஒன்றுமே தெரியாத ராதா புத்தருக்கும் சேவை செய்தார்; சரிபுத்தருக்கும் சேவை செய்தார். ஆனால் அவரோ ஒரு குடும்பஸ்தர்.

அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

மெஹியா குறுகிய காலமே புத்தருக்கு சேவை செய்தார். ஜந்துகாமர் என்பவரின் வீட்டிற்கு பிட்சைக்காக சென்ற அவர் திரும்பி வரும் போது ஒரு மாந்தோப்பின் வழியே  வந்தார். அதன் அழகில் மயங்கிய அவர் கிமிகாலா நதியின் கரையில் இருந்த அந்த மாந்தோப்பிலேயே தியானம் செய்வேன் என்று கூறு புத்தரிடம் அனுமதி கேட்டார்.

இருமுறை அவரது வேண்டுகோளை நிராகரித்த புத்தர் மூன்றாம் முறை சரி என்று அனுமதி கொடுத்தார். மாந்தோப்பில் தியானம் செய்யச் சென்ற மெஹியா அங்கு கெட்ட எண்ணங்களால் பாதிக்கப்படவே மீண்டும் புத்தரிடம் ஓடோடி வந்தார். புத்தருக்குச் சேவை செய்யும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.

ஆக இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் சேவை செய்ய முடியாமல் போனது.

ஐம்பது வயதான போது ஒரு நாள் புத்தர் அனைத்து சீடர்களையும் அழைத்து, வயதானதால் வரும் தளர்ச்சி எனக்கு வந்து விட்டது. எனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய நல்ல ஒருவர் வேண்டும்” என்றார்.

ஒவ்வொருவராக முன் வந்த போது அவர்களை தகுந்த காரணம் சொல்லி நிராகரித்தார் புத்தர்.

இறுதியில் ஆனந்தர் முன் வந்தார். உடனே அவரை அணைத்து ஏற்றுக் கொண்டார் புத்தர்.

அந்தக் கணமே அவர் புத்தரின் உபதேசங்களில் ஐக்கியமானார்.

இறுதி வரை அவர் புத்தபிரானுடன் கூடவே இருந்தார். ஒரு கணமும் அவரை விட்டுப் பிரியவில்லை.

அதனால் புத்தரின் வாழ்க்கையோடு அவரது வாழ்க்கையும் ஒன்றி விட்டது.

ஆகவே ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஆனந்தரின் வாழ்வை ஆனந்தமாகப் படிப்போம்; புத்தரின் போதனைகளை உள்ளபடி புரிந்து கொள்வோம்!

***

ஆதாரம், நன்றி:  ஆஷா தாஸ், கல்கத்தா 1992ல் எழுதியுள்ள Ananda : The Man and the Monk புத்தகம்

 நான் கண்ட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் (Post No.15,337)

 சாமுண்டீஸ்வரி கோயில் படங்கள் 

Written by London Swaminathan

Post No. 15,337

Date uploaded in London –  15 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 நான் கண்ட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் (Post No.15,337)

கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று மைசூர் நகரத்துக்கு மிகவும் அருகிலுள்ள சாமுண்டீஸ்வரி கோயில் ஆகும். மைசூர் நகரத்துக்கு பெயர் கொடுத்ததே இந்தக் கோவில்தான் . மகிஷாசுரன் என்ற அசுரனை தேவி வதம் செய்த காட்சி மஹாபலிபுரம் போன்ற பல இடங்களில் இருந்தாலும் மைசூர் நகரமே அந்த அரக்கனின் பெயரைத் தக்க வைத்துக்கொண்டது.

மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது.

மூன்றாவது முறையாக இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் ஜனவரி 2026 (3-1-2026) முதல் வாரத்தில் கிடைத்தது . இந்த முறை காரில் கோவில் அருகே சென்றதால் பெரிய மகிஷாசுரன் சிலையையும் பெரிய  நந்தி  சிலையையும் பார்க்கச் செல்லவில்லை இப்போது கண்ட மிகப்பெரிய மாற்றம் போகும் வழி  முழுதும் கடைகள் , கடைகள், கடைகள்! அங்குள்ள கூட்டத்தில் முட்டி மோதி மேலே சென்றால் கோவிலிலும் கூட்டம் 200 ரூபாய் டிக்கெட் வாங்கியும் முக்கால் மணிநேரம் காத்திருந்தோம்,  சில நிமிட தரிசனத்துக்காக; ஆயினும் அந்த தரிசனத்தில் ஒரு மனத் திருப்தி.

சக்தி தேவியின் தலங்களில் மக்களைக் கவர்ந்திழுக்கும் க்ஷேத்திரங்களில் இது தனிச் சிறப்பு வாய்ந்தது; ஏனெனில் அருகில் மகாபலேஷ்வர் என்ற சிவத்தலமும் நாட்டின் மிகப்பெரிய நந்தி களில் ஒன்றும் மஹிஷாசுரனின் மிகப்பெரிய உருவமும் ஒருங்கே அமைந்துள்ள மலை இது

புல்லட் பாய்ண்டுகளில் சுவையான விஷயத்தைக் காண்போம்

1

மஹிஷாசுரனுரு என்பதே மருவி மைசூர் ஆனது

2

இது மைசூர் உடையார் வம்ச அரசர்களின் குல தெய்வம். முன் காலத்தில் விஜயதசமி/ தசரா பண்டிகையின் போது பெரிய யானை மீதுள்ள அம்பாரியில் மன்னர் பவனி வந்தார்; இப்போது அந்த தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி பவனி வருகிறாள் . இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் நவராத்ரி முடியும் தசரா  நாளில் வருகின்றனர்.

3

தேவியால் வதம் செய்யப்பட மஹிஷாசுரனின் பிரம்மாண்டமான சிலை கோவிலிலிருந்து சற்று தொலைவில் உள்ளது அவன் கையில் வாளும் பாம்பும் இருக்கிறது .

4

தஞ்சாவூர் பெரிய கோவில், லெபாக்ஷி போன்ற இடங்களில் உள்ளது போன்ற பெரிய நந்தி ; யாரும் மறக்க முடியாத பெரிய உருவம். மேலும் நந்தியின் உடலில் அலங்கார வேலைப்பாடுகள்.  இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தைச் சுற்றி பெரிய மணிகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றது.

 5

இவ்வளவையும் காண, 3500 அடி உயரமுள்ள மலை ஏற வேண்டும். தற்காலத்தில் காரில் சென்று கோவில் வாசலில் இறங்கலாம்; மலை ஏறும் வழக்கம் மலை ஏறிவிட்டது.

6

கோவிலின் வரலாறு ஹோய்சாள, விஜயநகர, மைசூர் உடையார் வம்ச அரசர்களால் ஆராதிக்கப்பட்ட அம்மன் சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையவள்.

அசுரனை வதம் செய்ததால் அஷ்ட புஜ துர்க்கை வடிவம் கொண்டுள்ளாள் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.  அன்னையின் கீழ், மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் இருக்கிறான். திரிசூலத்தால் அன்னை இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள்.

8

கர்ப்பக்கிரகம் எனப்படும் கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார். இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டதாக ஐதீகம்.

9

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள்  நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, கன்னட மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

முக்கிய திருவிழா நவராத்திரி ஆகும். நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். ஏழாவது நாளன்று மைசூர் மஹாராஜா தானம் செய்த  நகைகளைக்கொண்டு  அம்பாளுக்கு அலங்காரம் செய்வார்கள்.

நந்தி சிலை

மகிஷாசுரன் சிலை 

10

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் படிகளை, உடையார் மன்னர்கள் செதுக்கினார். மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது மூன்று ராணிகளான ராமவிலாசா, லட்சுமிவிலாசா மற்றும் கிருஷ்ணவிலாசா ஆகியோரின் ஆறடி சிலை வைக்கப்பட்டுள்ளது.

11

Address

Chamundeshwari Temple Address: Chamundi Hill Rd, Mysuru, Karnataka, 570010, India

—subham—Tags- மைசூர், சாமுண்டீஸ்வரி கோயில் , நந்தி சிலை, மகிஷாசுரன் சிலை, படங்கள்,  லண்டன் சுவாமிநாதன் 

ஏஐ (AI) மாப்பிள்ளை! (Post No.15,336)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,336

Date uploaded in London – 15 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

23-12-2025 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கதை!

ஏஐ (AI) மாப்பிள்ளை!

ச.நாகராஜன் 

எங்க அம்மாவுக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! ஏஐ மாப்பிள்ளை தான் வேணுமாம்” என்று சிவாவிடம் கவலையோடு சொன்னாள் தேவி.

 “என்ன?” என்று திகைப்புடன் கேட்ட சிவா,  எப்படி இந்த பிடிவாதம் உங்க அம்மாவுக்கு வந்தது? அப்ப நம்ம காதல் என்ன ஆகும்?” என்றான்.

 “எங்க அம்மாவோட பிரெண்டெல்லாம் தங்கள் பெண்களுக்கு ஏஐ வெப்சைட்டில் மாப்பிள்ளை பார்க்கறாங்களாம்! ஏஐ இருக்கே, அது எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து தகுந்த மாப்பிள்ளையை செலக்ட் பண்ணிடுமாம். எல்லா அம்மாமார்களுக்கும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் யுகத்திலே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எங்க அப்பாவோட பேச்சையும் கேட்கறதில்லை. இப்ப என்ன செய்யறது?”

 “இதோ பார் தேவி! நமக்குள்ளே ஜாதி பிரச்சினை இல்லை. ஒரே ஜாதி. அந்தஸ்து பேதமும் இல்லை. இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் நல்ல சம்பளத்திலே தான் வேலை பார்க்கிறோம். என் கிட்ட கார் இருக்கு, சொந்த வீடும் இருக்கு. வயசும் சரியா அமைஞ்சிருக்கு. இப்படி இருக்கும் போது என்ன பிரச்சினை வரும்னு நீ நினைக்கிறே. அம்மாவிடம் சொல்லி விடேன், நம்மைப் பத்தி!:

 “இதோ பாரு சிவா! நைஸா உன்னோட தகுதி, அந்தஸ்து, அழகு எல்லாத்தையும் உன் பேரைச் சொல்லாம சொல்லிப் பார்த்தேன். எங்க அம்மா, “இதெல்லாம் தகுதியே இல்லை. ஏஐ செலக்ட் பண்ணி இருக்கா? அதனோட அப்ரூவல் இருக்கான்னு கேக்கறா. நான் பாட்டுக்கு உன்னைப் பத்தியும் நம்ம காதலைப் பத்தியும் சொல்லி ஒரேயடியா முடியாதுன்னு பதில் வந்தா அப்பறம் பேச்சையே எடுக்க முடியாது, அதான் யோசிக்கிறேன்”

“கரெக்ட்! முதல் தடவை ரிஜக்‌ஷன் ஆனா அத்தோட அவ்வளவு தான்!.

சரி, கவலைப் படாதே! என் ஃபிரண்ட் சரத் கிட்ட இதைப் பத்திப் பேசறேன்” ஆறுதலாகச் சொல்லி விட்டுக் காரில் ஏறினான் சிவா.

கவலை படிந்த முகத்தோடு ஸ்கூட்டரில் ஏறிச் சென்றாள் தேவி.

 “பூ! இவ்வளவு தானா சிஸ்டர்? இந்த முட்டாள் தான் உங்க ஹஸ்பெண்ட். இதுக்கு நான் காரண்டி” என்று தேவியைப் பார்த்து சிவாவின் நண்பன் சரத் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை.

“எப்படி அண்ணா, இவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?” என்றாள் தேவி.

“தேவி! சரத்தைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்லே ரொம்ப அட்வான்ஸ்ட் மாடலை வச்சிருக்கான்.” என்ற சிவா, சரத்தைப் பார்த்து, “டேய், உன் ஐடியாவைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன்” என்றான்.

ஒரு நிமிடத்திலே வரேன் என்று தனது ஆபீஸ் ரூமுக்குள் சென்ற அவன் திரும்பி வந்த போது கையில் சில பேப்பர்களைக் கொண்டு வந்தான்.

“தேவி! இதோ பேப்பர்கள்! இந்த லூஸை நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்கணும்னா இதை ஃபில் அப் செய்! அது போதும்” என்ற சரத் பேப்பர்களை தேவியிடம் நீட்டினான்.

தேவி அதைப் படித்துப் பார்த்து முகம் மலர்ந்தாள். சிரிக்கவும் செய்தாள்!

“எங்கே, பேப்பரைத் தா! இந்த அட்வான்ஸ்ட்  ஏஐ இடியட் அப்படி என்ன தான் ஐடியா தந்திருக்கான்னு நானும் பாக்கறேன்!”

 தேவியிடமிருந்து பேப்பர்களை வாங்கிப் படித்த சிவா ஹாஹா என்று சிரித்தான்.

தேவியிடம், “அதான் நான் சொன்னேனே! சரத்தைப் போல ஒரு பெர்ஃபெக்ட் இடியட்டை இனி மேலே பார்க்கவே முடியாதுன்னு” என்று சொன்ன சிவா, “இதை உடனே ஃபில் அப் செய்” என்றான்.

 தேவி விறுவிறு என்று எழுதலானாள்.

 “இந்தாடி! இவன் தான் உனக்கு மாப்பிள்ளை” என்று அதிரடியாக தேவியின் அம்மா லலிதா சொன்ன போது அவள் அரண்டே போனாள். அவளது அப்பாவும் திகைப்புடன் தன் மனைவி காண்பிக்கும் போட்டோவைப் பார்க்க விரைந்தார்.

“அம்மா! நீ சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறது தான் என் ஒரே வேலை. ஆனால் இந்த விஷயத்திலே எனக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு” என்று கலக்கத்துடன் சொன்ன தேவி அப்பாவைப் பார்த்தாள்.

“ஐ ஃபுல்லி அக்ரீ வித் யூ. நீ தான் பைனலா முடிவைச் சொல்லணும்” என்று கூறிய தேவியின் அப்பா போட்டோவை வாங்கி தேவியிடம் கொடுத்தார்.

போட்டோவைப் பார்த்த தேவி பயங்கர ஆச்சரியத்திற்குள்ளானாள்.

அது சிவாவின் போட்டோவே தான்!

இருந்தாலும் தன் ஆச்சரியத்தை அவள் உடனடியாக காட்டிக் கொள்ளவில்லை.

 “யாராம், இவன்? இவனை எப்படி நீ செலக்ட் செய்தாய்?” என்று சற்று கடுப்புடன் கேட்டாள் தேவி.

 “அடீ முட்டாள்! அடிமுட்டாள்டி நீ!! இவன் பார்க்க அழகா இருக்கான். வயசு, ஜாதி எல்லாம் பொருத்தமா இருக்கு. கார் வச்சிருக்கான். சொந்த வீடு வேற! ஐடி கம்பெனியில் தான் வேலை. உன் கம்பெனி பேரே போட்டிருக்கு. விசாரித்துத் தான் பாரேன். இவன் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை.ஏஐ-யே அப்ரூவ் பண்ணி செலக்ட் பண்ண பிறகு வேற பேச்சே இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன லலிதா, “நாளைக்கே பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கேன். ரெடியா இரு” என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டாள்.

 மறுநாள் பெண் பார்க்கும் வைபவம் நன்றாக நடந்து முடிந்தது. சிவா உடனடியாக சம்மதம் தெரிவிக்க அவனது பெற்றோர் முகூர்த்த தேதியைப் பற்றி லலிதாவிடம் பேச ஆரம்பித்தனர்.

 லலிதாவிடம்  எந்த வித ரீ ஆக் ஷனையும் காட்டாமல், “அம்மா பெண்ணாக” சரி என்று சொல்லி விட்டாள் தேவி.

“எப்படிடா இதை சாதிச்சே? “என்று சரத்திடம் சிவா கேட்டான். 

“அண்ணா! ஆயிரம் கோடி நன்றிகள்! எப்படி இதை ஃபிக்ஸ் பண்ணீங்க”” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கேட்டாள் தேவி.

 “அடி, அம்மாடி, அரை லூஸே! உன் கிட்ட கொடுத்த பேப்பரிலே உங்க அம்மாவுக்கு எதெல்லாம் பிடிக்கும் எதெல்லாம் பிடிக்காதுன்னு கேட்ட கேள்விக்கெல்லாம் நீ தானே பதில் கொடுத்தே! புடவை கலர், ஜரிகை பார்டர்னு எல்லாம் தான் அத்துபடி ஆயிடுச்சே. அதுக்கு தகுந்த மாதிரி தான் உங்க வீட்டையும் சிவா அம்மா, அப்பாவையும் நான் தயார் செய்தேன். உங்க அம்மா பார்க்கிற அதே சைட்டிலே தான் சிவாவின் ஜாதகம், டீடெய்ல்ஸை ரெஜிஸ்டர் செய்தேன். உடனே உங்க அம்மாவுக்கு அனுப்ப வச்சேன். முடிவை பார்த்தயா,” – சரத் கூறி முடித்தவுடன் அவன் காலில் விழுந்தாள் தேவி.

“ஆசீர்வாதம்” என்று கூறிய சரத், “ஒண்ணு புரிஞ்சுக்கணும். மனித மூளை தர டேட்டாவைத்தான் – தரவுகளைத்தான்- ஏஐ அனைலைஸ் பண்ணும். எப்பவுமே மனித மூளை தான் ஒசத்தி. என் டேட்டாவைப் பார்த்து தான் அது முடிவு செஞ்சது. ஏஐ என்பது கோடிக்கணக்கான டேட்டாக்களை ஒரு நொடியில் அனலைஸ் செய்யும். அதிலே அது ஒசத்தி. மற்றதுலே…”

 “இடியட் சரத் தான் ஒசத்தி” என்று முடித்தான் சிவா.

மூவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்!

**