Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்பியை நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8
வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!
World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.
சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.
புதிர் என்ன?
பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ? அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை? அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை
இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஏனெனில் மாணிக்கவாசகருடைய காலம் நமக்குத் தெரியவேண்டும் .
ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle ஜிக் சா பசில் போன்றது; ஒரு சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !
இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .
பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை –கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் நம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.
இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?
அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் ! கி பி 75 CE வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.
Goddess Meenakshi of Madurai Temple.
பரிபாடல் போன்ற சங்க நூல்கள் மதுரை, தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர் என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள் சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.
கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32 திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது
நம்பி என்ன தப்பு செய்தார் ?
தொடரும்…………………… to be continued
Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை நம்பாதே, Part One
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்!
ச. நாகராஜன்
தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு:9-9-1899 மறைவு 5-12-1954) மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.
கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம் 10-12-1878 மறைவு 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்..
பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.
திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.
விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.
கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.
டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.
ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.
சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.
ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.
ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.
ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளி வந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.
அவற்றில் சில கருத்துக்கள்:
ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:
இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.
திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.
“மனனக மலமற மலர்மிசை
எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.
நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:
மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை ‘அழகுமல்ல புகழுமல்ல’ என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.
அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:
“கவலைக்கு மருந்திது பயமின்றி
அருந்தென்று தருவது பாபமாச்சே
நண்பனாகச் சொல்லுகிறேன்
நல்லதுக்குச் சொல்லுகிறேன்
பாபத்தைச் செய்யாதே!”
ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.
அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:
கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.
அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்
மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:
“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும் என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.
கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:
“தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன…. அவற்றில் ஒன்று ….
எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”
தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில் ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
“ரம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்
1. –பெண்களுக்கு மிகவும் பிடித்தது;
2. –,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்;
3. — ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4. அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; ,
5. — முத்து மாலை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்;
6. தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்;
7. –அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு;
8. ஷேவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கி ருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும்
1.அலங்காரம் –பெண்களுக்கு மிகவும் பிடித்தது; 2.அம்பாரம்–,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்; 3.ராமேஸ்வரம்– ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4.சங்காரம்– அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; , 5.முக்தஹாரம்– முத்து மாலைஎன்ற ஸம்ஸ்க்ருதச் சொல்; , 6.கா ந் தாரம்– தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்; , 7.அதிமதுரம்–அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு; 8.படிகாரம்– ஷேவ் ஹீவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கிருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும் .
—subham—
Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,3152025
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 49
Stamps posted today include 1997 STAMPS,
Pictures of 2500 Indian Stamps,
BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL
–subham—
Tags– BHATI VEDANTA PRABHUPADA, KAVI SUDERDAS, MEDICINAL PLANTS, SARPAGANDHA, TULSI, HARIDRA, GHRITKUMARI, GOA BEACH, RAMARAO, LAWRENCE SCHOOL, MARATHA 200, SWAMI BRAHMANAND, PENTOXYLON, SCINDIA SCHOOL, EXTINCT PLANTS, INTERPOL, RONALD ROSS, RURAL WOMEN OF INDIA, LADAKH, ARUNACHAL PRADESH, GUJARAT, ORISSA, INTERNATIONAL PHILATELIC EXHIBITION, FIRAQ GOEAKHPURI, WILLIAM JONES, G S DHILLON, SHAW NAVAZ KHAN, P K SAGHAL, 1997 STAMPA, PART 49
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாதாபி கணபதிம் என்ற கர்நாடக சங்கீதப் பாடலை அறியாத இசை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது . அதில் வரும் ஒரு வரியை எல்லா பாடகர்களும் பத்து முதல் முப்பது முறை வரை திரும்பத் திரும்பப் பாடுவார்கள் ; அதுதான் பிள்ளையாரை அல்லது யானையை இந்துக்கள் வணங்குவதற்கு காரணம்..
அது என்ன வரி ?
வக்ர துண்டம் பிரணவ ஸ்வரூபம் என்னும் வரியாகும். அடுத்த முறை இந்தப் பாடலை கேட்கும்போது ஒவ்வொரு பாடகரும் எத்தனை முறை இந்த வரியைச் சொல்கிறார்கள் என்று கணக்குப் போடுங்கள் அப்போது தெரியும் ஏன் யானை முகத்தோனை முதலில் வழிபடுகிறார்கள் என்று.
இந்தப் பாடல், திருவாரூரில் உள்ள மூலாதார கணபதியின் பேரில் பாடப்பட்டது. அந்த கணபதியை ‘வாதாபி கணபதி’ என்றும் அழைப்பார்கள் .சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இந்தப் பாடலை இயற்றினார்.
பிள்ளையாரின் வளைந்த துதிக்கை பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்தின் வடிவத்தில் இருக்கிறது. அந்த ஓம்தான் எல்லா வேத மந்திரங்களுக்கும் முதல் எழுத்து; அந்த எழுத்தைப் பிரித்துப் பார்த்தால் அ +உ+ ம என்று வரும் இதனால்தான் பகவத் கீதையில் கண்ணன் நான் எழுத்துக்களில் ‘அ’ என்னும் எழுத்தாக இருக்கிறேன் என்கிறார் ; அதையே வள்ளுவரும் முதல் குறளில் ‘அ’கர முதல எழுத்து எல்லாம் என்று தமிழில் சொன்னார் ஆக உலகமே ஓம் என்னும் எழுத்தில் இருக்கிறது!
அது மட்டுமல்ல உலகமே பிக் பேங் BIG BANG என்னும் ஒலியில் துவங்கியதாக விஞ்ஞானிகள் சொல்வார்கள்; அது உபநிஷதம் சொல்லும் உண்மை. இந்தப் பிரபஞ்சமே ஓம்கார ஒலியிலிருந்து துவங்கியது என்று நமது உபநிஷதங்கள் சொல்கின்றன இவ்வளவு பெருமை உடைய இந்த ஒரு ஸப்தத்தைத் தியானம் செய்தே இறைவனை அடையலாம் என்பதால் இந்தியாவில் உதித்த சனாதன மதம் முதல் சீக்கிய மதம் வரை எல்லோரும் ஓம்காரத்தைப் போற்றுகின்றனர் இதனால்தான் பிள்ளையாரை முதலில் வணங்குகிறோம்.அடுத்த முறை பிள்ளையார் சிலைக்கு முன்னால் நிற்கும்போது இந்த ஓம்காரத்தையும் மனதில் தியானியுங்கள்
****
திருவாரூர் வாதாபி கணபதி– ஷோடச கணபதி கீர்த்தனை
இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்வார்.
‘ஷோடச கணபதி கீர்த்தனை’ என்றும் அந்தக் கீர்த்தனைக்குப் பெயர் என்று அருட்சக்தி என்ற ஒரு பெரியவர் எழுதியுள்ளார்.
பழைய கதையைச் சுருக்கமாகக் காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நரசிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற கமாண்டரின் (படைத் தளபதி)
தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது. எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.
திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.
****
எனது மொழியியல் ஆராய்ச்சி
கட்டுரையை முடிப்பதற்கு முன்னதாக கொஞ்சம லிங்குஸ்டிக்ஸ் / LINGUISTICS மொழியியல் ஆராய்ச்சியையும் காண்போம்.
வாதாபி என்னும் பெயரே பாதாமி என்று திரிந்தது
வா + தா+ பி = பா +தா+ மி
வ என்பது ப ஆக மாறும் என்பது சங்கத் தமிழில் உள்ளது; சபை என்பதை அவை என்று எழுதுவர். இது அவஸ்தன் முதல் ஸ்லாவ்
மொழிவரை உலகம் முழுதும் உளது வருணன் என்னும் தெய்வத்தை ஸ்லாவ் மொழி பேசுவோர் பருண் என்று கும்பிட்டார்கள் இன்றும் வங்காளி, மொழி, அஸ்ஸாமிய மொழிபேசுவோர் நாம் ப என்று சொன்னால் வ என்பர்; நாம் வ என்று சொன்னால் ப என்பார்கள் சிவ சாகர் என்ற ஊரின் பெயரை சிப் சாகர் என்றுதான் சொல்வார்கள் அதே போல மி , ம
என்பதும் வி , வ ஆக மாறும் நாமே பேச்சு வாக்கில் விழி என்பதை முழி என்கிறோம். இதற்கும் நிறைய ஆதாரம் உள்ளது ஆக வாதாபி என்பதே சரி; பாதாமி என்பது அதன் திரிபு; அதாவது பேச்சு வழக்கு.
இன்னும் ஒரு உதாரணம்
சா + ம+ ரி என்ற மானை வள்ளுவர் கவரி என்று சொன்னார்; இதிலும் ம என்னும் எழுத்து வ என்னும் எழுத்தாக மாறுகிறது. இந்த மானின் முடியை மன்னருக்கும் கடவுளுக்கும் வீசும்போது கவரி ஏந்தினர் அல்லது சாமரம் வீசினர் என்போம். இந்த மாற்றமும் உலகம் முழுதும் உள்ளது.
காரணம்?
உலகில் ஆதிகாலத்தில் சிவ பெருமானிடம் தோன்றிய தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும் மட்டுமே இருந்தன.
இந்துக்கள் உலகம் முழுதும் கலாசார தீபத்தை ஏந்திக்கொண்டு சென்று நாகரீகத்தைப் பரப்பியதால் இந்த மொழியியல் விஷயங்கள் உலகின் எல்லா பழைய மொழிகளிலும் இருப்பதைக் காண்கிறோம்.
–சுபம்-
TAGS –வாதாபி கணபதிம் பாடல், பாதாமி, வாதாபி, வக்ர துண்டம் , பிள்ளையார் , முதல் வணக்கம், ஏன், மொழியியல் ஆராய்ச்சி கவரிமான் சாமரம்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
பாம்பிடமிருந்து பக்தரைக் காத்த ஷீர்டி சாயிபாபா!
ச. நாகராஜன்
ஒரு நாள் நாக்பூரிலிருந்து பாபாவின் பக்தரான பூடி (G.M.Buty) என்பவர் ஷீர்டிக்கு வந்தார். (ஷீர்டி சாயிபாபா அவதாரம்: 28-9-2835 சமாதி:15-10-1918)
நானா சாஹப் டெங்க்லே (Nana Saheb Dengle) என்ற பக்தர் ஜோதிடத்தில் வல்லவர். அவர் பூடியைப் பார்த்து, அன்று அவரது உயிருக்கு ஆபத்து என்றும் பெரிய கண்டம் ஒன்று வருகிறது என்றும் கூறினார்.
சற்று நேரம் கழித்து இருவரும் ஷீர்டி பாபாவிடம் சென்று அமர்ந்தனர்.
பூடியைப் பார்த்த பாபா பேசலானார்.
பாபா – நானா என்ன சொன்னார்? உனக்கு சாவு வரும் என்று சொன்னாரா? பயப்படவே பயப்படாதே. அடி! எப்படி நீ அடித்து அதைக் கொல்கிறாய் என்று நான் பார்க்கிறேன்.
அன்று மாலை சற்று ஓய்வாக ஒதுக்குப்புறமாகச் சென்றார் பூடி. அங்கே அவர் அருகே ஒரு பாம்பு வந்தது. அதை அடிக்க தடியை எடுக்க பூடியும் அவரது வேலைக்காரரும் ஓடினர். ஆனால் அதற்குள் அது அங்கிருந்து சென்று விட்டது.
கண்டம் உண்மையிலேயே வந்தது. ஆனால் பாபாவின் அருளால் அது அகன்றது.
பூடி பாபாவிற்காக இன்னும் ஏகப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும். ஆகவே அவரை பாபா சாவதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குப் பின்னர் பல ஆண்டுகள் வரை -1921-ம் ஆண்டு வரை – அவர் உயிருடன் இருந்தார்.
சரி ஒரு கேள்வி எழுகிறது. பூச்சிகள், பாம்பு, தேள் ஆகியவற்றை அடித்துக் கொல்லலாமா?
துகாராம் மஹராஜ் கூடவே கூடாது; அவை கடவுளின் உருவமே என்கிறார். பரமஹம்ஸரும் பாம்பு, புலி பற்றி அப்படியே தான் சொல்கிறார். ஆனால் மூட்டைபூச்சிகளைக் கொல்லலாம் என்றார் அவர்.
ஶ்ரீமத் பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் வரும் ஒரு வாக்கியமானது பாம்பையும் தேளையும் அடிப்பதைப் பார்த்து ஒரு மகான் கூட சந்தோஷப்படுவார் என்கிறது.
இதையெல்லாம் படித்த பாபாவின் பக்தரான ஹெச்.எஸ். தீக்ஷித் என்பவர் பாபாவிடமே இது பற்றிக் கேட்டு விட்டார்.
தீக்ஷித்: தங்களை விஷப்பாம்புகளிடமிருந்து காத்துக் கொள்ள மக்கள் பாம்புகளைக் கொல்கிறார்களே, இது சரியா?
பாபா: கூடாது. ஒரு பாம்பானது கடவுளின் ஆணையின்றி ஒருவரைக் கடிக்காது; கொல்லாது. விதி அப்படி இருக்கும் போது ஒரு மனிதனால் பாம்பை அடிப்பதோ தன் உயிரைக் காத்துக் கொள்வதோ முடியாது.
ஷீர்டியில் ஏராளமான பக்தர்கள் பாம்புகளை மிக அருகில் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பாம்பு கடிப்பதுமில்லை; அவர்கள் பாம்பை அடிப்பதுமில்லை! அவர்கள் பாம்புகளை பாபாவாகவே பார்த்தார்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1. – Largest story collection first written by Gunadhya and then by Kshemendra.
2. – The king who brought Ganga River to earth; symbol of perseverance; the fact is he diverted River Ganges into the plains of North India; he succeeded where previous engineers failed.
3. Goddess worshipped by Hindu Emperor Shivaji; also the name of a river and town in Tamil Nadu.
4. – The River that enters India from China and merges with Ganga River.
5. – Famous for its Lingaraja Temple in Odisha.
6. – Lord Krishna’s brother; anti war hero in Mahabharata; went on pilgrimage against Mahabharata war; also associated with strength, agriculture, and the plough.
7. – means earth; common name of Hindu women in India.
8. – He and his family of students were the authors of Mandala 6 in the Rigveda. His name is a Gotra name. He studied Veda for over 300 years; probably in three births.
1
2
8
7
B
3
6
5
4
ANSWER
1.BRHATKATHA – Largest story collection first written by Gunadhya and then by Kshemendra.
2.BAGHEERATHA- The king who brought Ganga River to earth; symbol of perseverance; the fact is he diverted River Ganges into the plains of North India; he succeeded where previous engineers failed.
3.BHAVANI- Goddess worshipped by Hindu Emperor Shivaji; also the name of a river and town in Tamil Nadu.
4.BRAHMAPUTRA- The River that enters India from China and merges with Ganga River.
5.BHUBANESWAR- Famous for its Lingaraja Temple in Odisha.
6.BALARAMA- Lord Krishna’s brother; anti war hero in Mahabharata; went on pilgrimage against Mahabharata war; also associated with strength, agriculture, and the plough.
7.BHUVANA- means earth; common name of Hindu women in India.
8.BHARADWAJA – He and his family of students were the authors of Mandala 6 in the Rigveda. His name is a Gotra name. He studied Veda for over 300 years; probably in three births.