தமிழ் மொழியின் மந்திர சக்தி -4 (Post No.14,523)

Written by London Swaminathan

Post No. 14,523

Date uploaded in London –  17 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-4

தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி பற்றி பரஞ்சோதி முனிவர் சொன்ன செய்தி திருவிளையாடல் புராணத்தில் உள்ளது ; ஒவ்வொன்றுக்கும் பின்னல் ஒரு கதையும் உளது.

தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை

உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்

கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்

தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். —திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவருக்குத் தமிழ் மொழி மீது தீராக்காதலுண்டு; இதனால் தமிழ் மொழிக்கு நிகரான மொழி வேறு உண்டா? என்று சவால் விடுக்கிறார் . தமிழின் மந்திர சக்தியைத் தேவாரமும் திருவாசகமும் காட்டியபடி அவர் பாடினார்

****

TIME TRAVEL, PARALLELUNIVERSE, SPACE TRAVEL , ALBERT EINSTEIN

சுந்தரர், சம்பந்தர் தொடர்பான இந்த இரண்டு சம்பவங்களிலும் டைம் டிராவல் எனப்படும் காலப்cபயணம் , பாரலல் யூனிவெர்ஸ் எனப்படும் இணை உலகம்  கருத்துக்கள் , விஞ்ஞான உண்மைகள் இருப்பதை முன்னரே விளக்கியுள்ளேன் . மேலும் நம்மாழ்வார் பாசுரத்தில்,  இறந்த பிராமணச் சிறுவர்களை மீட்க ஒரே நாளில் விண்வெளிப்பயணம் செய்த ஸ்பேஸ் டிராவல் பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். இவை அனைத்தும் ஐன்ஸ்ட்டின் சொன்ன விசயங்களைப் பொய்யாக்கியதையும் கண்டோம்.

****

 “சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவை நாச்சியார்பால் தூது நடந்தான். முதலை வாய்ப்புகுந்த மகன் உயிர் பிழைத்து மீளவும் இத்தமிழே காரணமாக அமைந்தது. மயிலாப்பூரில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணின் எலும்பிலிருந்து, மீண்டும் ஒரு மகள் உயிர் பெற்று எழுவதற்குத் திருஞானசம்பந்தரின் தமிழே காரணமாயிற்று.     வேதங்கள் பூசித்து அடைத்திருந்த திருமறைக்காட்டுச் சிவாலயக் கோபுர வாயில் கதவைத் திருநாவுக்கரசரின் தமிழே திறக்கச் செய்தது. இத்தகு ஆற்றல் தமிழைத் தவிர பிற மொழிகளுக்கு உண்டா? (திருவிளையாடல் புராணம்) என்று பரஞ்சோதி முனிவர் கேட்கிறார்.

****

தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி

உலகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் மந்திர சக்தி உண்டு ; ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இறந்தவர்களையும் உயிர் பெறச் செய்த ஏராளமான சம்பவங்கள் இந்துசமய நூல்களில் இடம்பெற்றுள்ளன.  ஏழைப்  பெண்மணிக்கு இரங்கி ஆதிசங்கரர் கனகதாரா துதியைப் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்ததையும் சம்ஸ்க்ருத மொழியில் கீர்த்தனைகளை இயற்றிய முத்துசாமி தீட்சிதர் வறட்சியைக் கண்டு மனம் இரங்கி அமிர்த வர்ஷனி ராகத்தில் பாடியவுடன் மழை கொட்டியதையும் எல்லோரும் அறிவர். இத்தகையை மந்திர சக்தி துதிகள் அதர்வண வேதத்திலும் ருக் வேதகித்தலும் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணருக்காக யமுனை நதி வழிவிட்டதுபோல வசிஷ்டருக்காக சிந்து நதி வழிவிட்ட பாடல் ரிக்வேதத்தில் உள்ளது .

****

  1

  ந மு வேங்கடசாமி நாட்டார் உரை தரும் செய்திகள் :

     முதலையுண்ட பாலனை அழைத்த வரலாறு : – தம்பிரான்

றோழ ராகிய நம்பியாரூரர் சேரமான் பெருமாளைக் காணணும்

விருப்பினால் திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சோணாடுகடந்து

கொங்கு நாட்டிலே திருப்புக்கொளியூர் அவிநாசியை அடைந்த

காலையில், ஓரில்லத்தில் மங்கலவொலியும், அதற்கெதி ரில்லத்தில்

அழுகையொலியும் நிகழக்கேட்டு, அதன் காரணத்தை விசாரித்தனர்.

ஐந்து வயதினரா யிருந்த இரண்டு பார்ப்பனச்சிறார்கள், ஏரிக்குச்

சென்று விளையாடும் பொழுது ஒருவனை முதலை விழுங்கிவிட்ட

தென்றும், தப்பி வந்தானுக்கு இப்பொழுது உபநயனவிழா

நடக்கிறதென்றும், மகனை யிழந்ததோர் துயரத்தால் அழுகின்றன

ரென்றும் அறிந்துகொண்டு, அப்பொழுது தம் வரவினையறிந்து,

அழுகையை விடுத்துவந்து மெய்யன்புடன் வணங்கிய

பெற்றோர்களுக்கு, அச்சிறுவனை அழைத்துத் தருவதாகத் துணிந்து,

ஏரிக்கரையை யெய்திப் பதிகம்பாட, முதலை அச்சிறுவனைக்

கரையிலுமிழ்ந்து சென்றது என்பது.

“உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்

அரைக்கா டரவா வாதியு மந்தமு மாயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளைத ரச் சொல்லு கானையே”

என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு.

2

     என்பு பெண்ணுருவாக் கண்ட வரலாறு : – திருமயிலாப்பூரிலே

செல்வத்திற் சிறந்த சிவநேயர் என்னும் வணிகரொருவர், கபாலீசர்

திருவருளால் ஓர் புதல்வியைப் பெற்று, அந் நங்கையை ஆளுடைய

பிள்ளையார்க்கு உரிமையாக்கத் துணிந்து வளர்த்துவருங் காலத்தில்

அவர் சேடியருடன் மலர் கொய்யச் சென்று அரவுதீண்டி இறந்தனர். சிவநேயர் மிகுந்த துயரத்துடன் அவ்வம்மையின் உடலைத் தகனஞ்

செய்து, பிள்ளையாரிடம் ஒப்புவித்தற்பொருட்டாக அச்சாம்பரையும்

என்பையும் ஒரு குடத்திலிட்டுக் கன்னிமாடத் திருத்தி, அவ்வம்மை

உயிர்த்திருக்கும் பொழுதிற்போலச் சேடியர் உபசரித்து வருமாறு

செய்வித்தனர். அப்பொழுது திருஞானசம்பந்தப்பெருமான் அடியார்

கூட்டங்களுடன் பல திருப்பதிகளும் தரிசித்துக்கொண்டு

திருவொற்றியூரை அடைந்திருந்தனர். சிவநேயர் அதனைக்

கேய்வியுற்றுத் திரு மயிலையிலிருந்து திருவொற்றியூர் காறும்

பந்தரிம் டலங்கரித்து ஞான சம்பந்தரை இறைஞ்சி அழைத்துவந்து

நிகழ்ந்த செய்தியைத் தெரிவிக்க, சம்பந்தப் பெருமான்

அக்குடத்தினைக் கபாலீசர் திருமுன் வருவித்துப், பதிகம்பாடியருள,

அவ்வென்பானது அங்கே கூடியிருந்த எண்ணிறந்தோரும் கண்டு

அதிசயிக்கும்படி பெண்ணுருவெய்திப் பன்னிரண்டாண் டளவு நிரம்பி

வெளியே வர, ஆளுடைய பிள்ளையார் தம்மால் உயிர்ப்பிக்கப்பெற்ற

அவ்வம்மையை அங்கேயே இருக்கச் செய்து கபாலீசரை

வணங்கிக்கொண்டு எழுந்தருளினர் என்பது.

“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்,

ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்னும் அத்திருப்பதிகத் திருப்பாட்டு.

3

     மறைக்கதவினைத் திறந்த வரலாறு : – திருஞானசம்பந்தரும்,

திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டுக்கு எழுந்தருளிய காலத்தில்,

ஞான சம்பந்தர் நாவுக்கரசரைப் பார்த்து, ‘நாம் வேதங்கள் பூசித்துத்

திருக் காப்பிட்ட நேர் வாயில்வழியே சென்று இறைவரை

வழிபடவேண்டும் ஆகலின், நீர் திருக்கதவம் காப்புநீங்கப்

பாடியருளும்’ என்று கூற அரசுகளும் பதிகம்பாடிக் கதவு திறக்கச்

செய்தனர் என்பது.

“அரக்களை விரலா லடர்த் திட்டநீர்

இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே

சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ

சரக்க விக்த வந்திறப் பிம்மினே”

என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு. இவ்வரலாறுகளின்

விரிவினைத் திருத்தொண்டர் புராணத்திற் காண்க. (58)

******

மதுரையில் நிகழந்த பல அற்புதங்களை பரஞ்சோதி முனிவர்  பாடியிருக்கிறார் . யாக குண்டத்திலிருந்து மீனாட்சி அம்மை தோன்றிய செய்தியை அடுத்துக் காண்போம்

To be continued………………..

Tags- தமிழ் மொழியின் மந்திர சக்தி ,திருவிளையாடல் புராணம் ,ஆராய்ச்சிக் கட்டுரை-4

வியப்பில் ஆழ்த்தும்  விசாகப்பட்டினம்! (Post No.14,522)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,522

Date uploaded in London – –17 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர் 26-4-25 இதழில் வெளியான கட்டுரை!

வியப்பில் ஆழ்த்தும் விசாகப்பட்டினம்! 

ச. நாகராஜன் 

ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அழகிய காஷ்மீர் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கடற்கரைகள், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள், அருமையான ஆலயங்கள் உள்ள இடமாகும். குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி தரும் இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்க்ள் உள்ளன: அவற்றில் சில இதோ:

 கைலாஸ கிரி 

நூறு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா 360 அடி உயரத்தில் ஒரு குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.

இங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள முக்கியமான ஈர்ப்பு வெண்மை வண்ணத்தில் உள்ள சிவ பார்வதியின் அழகிய சிலைகளாகும். நாற்பது அடி உயரம் உள்ளவை இந்தச் சிலைகள்.

இங்கு ரோப் கார் வசதி உள்ளது. ஆகவே அதிக உயரத்திலிருந்து கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

ஆர்.கே.பீச்

ராமகிருஷ்ணா கடற்கரை என்பதன் சுருக்கமே ஆர்.கே.பீச். இதன் அருகே தான் டால்பின் நோஸ் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. மக்கள் விரும்பி வரும் கடற்கரை இது.

 சப்மரீன் மியூஸியம்

இந்த அருங்காட்சியகம் நிஜமாகவே ஒரு சப்மரீனுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐஎன்எஸ் குருசுரா என்ற இந்த சப்மரீன் இந்தியாவின் ஐந்தாவது சப்மரீன் ஆகும்.

இந்த மியூஸியம் ஆர் கே கடற்கரை அருகில் வார் மெமோரியல் அருகே உள்ளது. நமது வலிமை, தேசபக்தி, வீரர்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் இங்கு உள்ளன.

 டால்பின் நோஸ்

விசாகப்பட்டிணத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியிலிருந்து வங்கக் கடலில் அழகைப் பார்த்து மகிழலாம்.1175 அடி உயர்ததிலிருந்து சூர்யாஸ்தமனத்தையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

 ரிஷிகொண்டா கடற்கரை

வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய கடற்கரை இது. 15 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. பெயருக்கேற்றபடி இது கிழக்குக்கடற்கரையின் மணிமகுடமே தான்!

கடலில் பல்வேறு நீர் விளையாட்டுக்களை விளையாட விரும்புவோர் இங்கு அவற்றை விளையாடி மகிழலாம்

 போர்ரா குகைகள்

 விசாகப்பட்டினத்திலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது போர்ரா குகைகள்

சுமார் 2600 அடி உயரத்திலிருந்து 4300 அடி உயரம் வரை உள்ள . அனந்தகிரி மலைத்தொடரில் 2310 அடி உயரத்தில் அமைந்துள்ளது பொர்ரா குகைகள்.

இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. பசுக்களை மேய்க்கும் சிறுவன் பசு ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த போது அது அங்கிருந்த துளை ஒன்றின் வழியே கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிச் சென்றவர்கள் இந்த குகைகயைக் கண்டு அதிசயித்தனர். அங்கு ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. சிவபிரானே பசுவைக் காப்பாற்றியதாக ஐதீகம் நிலவுகிறது. இங்கு பின்னர் ஒரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பெரிய குகைகளுள் இதுவும் ஒன்று.

 யாரடா கடற்கரையில் சூர்யாஸ்தமனக் காட்சி

யாரடா கடற்கரை விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கங்காவரம் கடற்கரை மற்றும் துறைமுக, டால்பின் மூக்கு, ஆகியவை இதன் அருகிலேயே உள்ளன.

இந்தக் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி அழகிய காட்சி என்பதால் இங்கு ஏராளமானோர் திரள்வது வழக்கம்.

இங்கு படிந்துள்ள வண்டல் மண் பற்றிய ஆய்வில் இந்த மண்ணானது அருகில் உள்ள புறா மலை அமைந்திருப்பதன் விளைவால் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டல்கள் சேர்வதும் பின்னர் அரிமானத்தால் அவை நீங்குவதுமாக இருக்கின்றன!

 விசாகப்பட்டிணம் மிருகக்காட்சி சாலை

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இது.

இங்கு அழகிய மான்கள், யானைகள், இமயமலைக் கருங்கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் பட்டாம்பூச்சிகளையும் ஏராளமான பறவைகளையும்  பார்த்து மகிழலாம். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். மூன்று பக்கம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் இருக்க நான்காவது பக்கம் வங்கக் கடல் திகழ 625 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இது.

  சிம்மாச்சலம் கோவில்

 விசாகப்பட்டினத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிம்மாசலம் மலையில் ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வராக நரசிம்மர் எழுந்தருளி அருளும் இந்தத் தலம் 32 நரசிம்மத் தலங்களில் ஒன்றாகும். ஐந்து வாயில்களுடன் அமைந்துள்ள இது ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும், சரித்திர வரலாறுகளும் ஏராளம் உள்ளன.

 கடிகி நீர்வீழ்ச்சி

 கடிகி நீர்வீழ்ச்சி இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி. கோஸ்தானி ஆற்றிலிருந்து வரும் நீர் 50 அடி உயரத்திலிருந்து கடிகி என்ற கிராமத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. போர்ரா குகை அருகே உள்ளது இது.

 இங்கு மலைமீது ட்ரெக்கிங் செய்ய வசதிகள் உண்டு. .இங்கு முகாமிட்டும் தங்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இங்கு கிடையாது. மேலே செல்ல ஜீப் வசதிகள் வாடகைக்குக் கிடைக்கப்படும். போரா குகைக்கும் இதற்கும் உள்ள தூரம் ஐந்து கிலோமீட்டர் தான்!

 அரக்கு பள்ளத்தாக்கு

 கடிகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பார்க்க வேண்டிய இடம் அரக்குப் பள்ளத்தாக்கு என்ற மலை வாசஸ்தலம் ஆகும். காடுகள் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இது காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இது உள்ளது. இந்தப் பகுதியில் தான் 30க்கும் மேற்பட்ட போர்ரா குகைகள் உள்ளன.

  பீம்லி பீச்

பீமுனிப்பட்டனம் கடற்கரை என்பதே பீம்லி பீச்சாக மருவி அழைக்கப்படுகிறது.

பஞ்ச பாண்டவரில் ஒருவரான பீமனின் பெயரைக் கொண்டது இது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்தக் கடற்கரை உள்ளது. பக்கத்தில் உள்ள் பவுரலகொண்டா மலைப்பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்களைக் கண்டு மகிழலாம். 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை விசாகப்பட்டணத்தில் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.

 மொத்தத்தில் அழகிய கடற்கரைகள், ஆறு கடலில் கலக்கும் சங்கம இடம், கோவில், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள் என பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட விசாகப்பட்டினம் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகும்..

 ****

GNANAMAYAM 18TH MAY  2025 SUNDAY BROADCAST PROGRAMME

GNANAMAYAM 18TH MAY  2025 SUNDAY BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on NAGAPPATTINAM SHRINE.

****

Professor S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College speaks on Great Mathematician Ramanujan (in Tamil)

****

SPECIAL EVENT-

VARANASI KUMBABHISHEKAM BOOK REVIEW BY AUTHOR SRI SUBBU SUNDARAM FROM KASI/ VARANASI.

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

18-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சிநிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்:

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  திருநாகைக்காரோணம் (நாகபட்டினம்)

****

சொற்பொழிவு:-

பேராசிரியர் எஸ். சூரியநாராயணன் , மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபால் .

தலைப்பு — கணிதமேதை ராமானுஜன் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு நிகழ்த்துபவர் – திரு சுப்பு சுந்தரம், ஆசிரியர்  — காசி கும்பாபிஷேகம்

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சுப்பு சுந்தரம் நூல் 

விமர்சனம்.

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூல் பற்றி காசி மாநகரிலிருந்து பேசுபவர் திரு சுப்பு சுந்தரம்,

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,18-5-2025, BROADCAST, PROGRAMME

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் (NEWS ABOUT THE BOOK).

சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூலுக்கான வெளியீட்டு விழா. விழா 29/1/2025

 சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சுலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்திகழ்ச்சியில் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர். 

விழாவில் குருமூர்த்தி பேசும் போது. ஆன்மிகத்திற்காகவே பிறந்து அதற்காகவே வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார். தலைமுறை தலைமுறையாக வேதத்தையும் கோயில்களையும் பாதுகாத்தவர்களும் அவர்களே காசி பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்மிக பணி யாற்றிய நகரத்தாரின் தாழ்வுக்கு திராவிடம்தான் காரணம் திராவிட இயக்கத்தால் ஆன்மிகம் குறைந்ததால்தான். நகரத்தார் சமுதாயம் தாழ்ந்தது. காசி தமிழ் சங்கத்திற்கு வித்திட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளதால், இந்நூலுக்கு இன்னும் பெருமை சேர்கிறது என்றார். 

விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். ரவி தனது உரையில் “ஆன்மிகத் தலமாக விளங்கும் காசியில் 40,000 தமிழக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக தமிழர்கள் காசியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் காசி, பாரதத்தின் ஆன்மிக ஈர்ப்பு மையம் ரிஷிகளால் பாரதம் உருவாக்கப்பட்டபோது, அவர்கள் சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. நமது நாட்டின் பாரம்பரியமும் நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் நாடு முழுவதும்

ஒரு கட்டமைடையும் உருவாக்கின செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை துரதிரஷ்ட வசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம் பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மமே பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்தில் நடந்த தவறுகளை திருக்கி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டுக் கொண்டுவர் முயற்சிக்கிறார். அந்த வகையில் இந்தியா வரும் காலங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மலரும் என்றபோது, எழுந்த பலந்த சுர கோஷம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. 

காசிக்குப் போய்வந்த அனுபவத்தையும்; காசியிலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்த அனுபவத்தையும் இந்த நூல் தருகிறது. காசி எனும் பெயர் காரணம். , வரலாறு அதை ஆண்ட மன்னர்களின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சிறப்பு என விரிவாக எழுதப்பட்டுள்ளது. சில அற்புதங்கள் சிலரது கையால்தான் நிகழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அப்படி சுப்பு சுந்தரத்தின் திருக்கரங்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. 

—subaham— 

Tags-Gnanamayam Broadcast, May 18, 2025, Programme

Pictures of 2500 Indian Stamps!- Part 40 (Post No.14,521)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,521

Date uploaded in London – –16 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 40

Stamps posted today include 1991, 1992 STAMPS

Children’s Day, EAGLE, FALCON, BIRDS OF PREY , ASANAS, USTRASAA, DHANURASANA, TRIKONASANA, BHUJANGASANA, AIRFORCE GOLDEN JUBILEE, MADAN LAL DHINGRA, TIGERS OF THE SKY, PARA REGIMENT, RAHUL SANKRIYAYAN, PARLIAMENT CONFERENCE, SISTERS OF THE MARY, RUN FOR YOUR HEART, PANDIT RAVISHANKAR SHUKLA, MEERUT COLLEGE, FAKIRMOHAN SENAPATI, CSIR GOLDEN JUBILEE,

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 40, year 1991 , 1992, Children’s Day, EAGLE, FALCON, BIRDS OF PREY , ASANAS, USTRASAA, DHANURASANA, TRIKONASANA, BHUJANGASANA, AIRFORCE GOLDEN JUBILEE, MADAN LAL DHINGRA, TIGERS OF THE SKY, PARA REGIMENT, RAHUL SANKRIYAYAN, PARLIAMENT CONFERENCE, SISTERS OF THE MARY, RUN FOR YOUR HEART, PANDIT RAVISHANKAR SHUKLA, MEERUT COLLEGE, FAKIRMOHAN SENAPATI, CSIR GOLDEN JUBILEE, HARYANA SILVER JUBILEE

ராம ரத்தினத்தின் விலை என்ன ? (Post No.14,520)

Written by London Swaminathan

Post No. 14,520

Date uploaded in London –  16 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுவாமி ராம தீர்த்தர் ராம நாம மஹிமை பற்றி விளக்குவதற்காக சொன்ன கதை இது :

ராம் தீர்த்தர் வழக்கம் போல போதனை செய்து முடித்தவுடன் சீடர்களை நோக்கி ஏதேனும் சந்தகங்கள் இருந்தால் கேட்கலாம் என்றார்.  ஒரு சீடர் எழுந்து நின்று அவரை முறையாக  வணங்கி விட்டுக் கேட்டார்:

“சுவாமிகளே!  நீங்கள் அறுபது நாழிகைப்பொழுதும் ராம ராம என்று ஜபித்துக் கொண்டு இருக்கிறீர்களே. காலையிலும் மாலையிலும் மட்டும் ஜபித்தால் போதாதா? இந்த சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இன்று பதில் செல்லுங்களேன்” என்று பணிவுடன் கேட்டார் . அந்த சீடனின் பெயர் சிதானந்தம் .

சுவாமிகளும் புன்னகையுடன் பதில் கொடுத்தார் ; “உங்களில் பலருக்கும் இப்படி சந்தேகம் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். இதோ என்னிடம் உள்ள பல கற்களில் ஒன்றை சிதானந்தத்திடம் கொடுக்கிறேன்” என்று சொல்லித் தந்தார் .

ஓ சிதானந்னதா!  இதை பத்துப் பேரிடம் காட்டி விலை மதிப்பினை  அறிந்து வா. ஆனால் ஒரு நிபந்தனை. கல்லை யாரிடமும் விற்றுவிடாதே; திருப்பிக் கொண்டு வா; பின்னர் உங்கள் சந்தேகத்தைத் தெளிவிக்கிறேன்” என்றார் .

சீடனும் அதை ஆவலுடன் பெற்றுக்கொண்டு நடந்தான். முதலில் அவன் போனது ஒரு சந்தை ; எங்கு பார்த்தாலும் கடைகள். ஒரே கூட்டம். யாரிடம் விலையைக் கேட்பது என்று எண்ணி திகைத்துக் கொண்டிருந்தபோது ஒரு மூலையில் ஒரு கிழவி காய்கறி விற்றுக்கொண்டிருந்தாள்; அவளிடம் போய், கூட்டம் இல்லாதபோது, ‘பாட்டி இந்தக் கல்லின் விலை என்ன இருக்கும்?’ என்று சொல்லி அவளிடம் கொடுத்தான். அவளும் அதை பார்த்துவிட்டு ‘ரோம்ப அழகாக இருக்கிறது மழ  மழ  என்று வழு வழுப்பாக இருக்கிறது ; இதை வீசைக் கல்லாகப் பயன்படுத்தலாம். என்னிடம் கொடு; ஒரு கிலோ கத்தரிக்காய் கொடுக்கிறேன்’ என்றாள் .அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்புதானா! எதற்கும்  இதற்கு வேறு ஒருவரிடம் விலை  கேட்கலாம் என்று எண்ணிக்கொண்டே அடுத்த கடைத்தெரு வுக்குப் போகலாம் என்று கருதி, அங்கே இருந்த ஒரு கடைக்குப் போனான் அந்தக் கடைக்காரன் கல்லை வாங்கிப் பார்த்துவிட்டு , ‘அன்பரே இது சாதாரண கல் அல்ல ; என்னால் விலை மதிப்பிட முடியாது; என்னிடம் விற்றால் ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிறேன் என்றான். சீடன் சிதானதத்து க்கு ஒரே வியப்பு! அட ஒரு கிலோ கத்தரிக்காயிலிருந்து ஒரு பவுனுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே என்று சொல்லிக் கொண்டே  நகைக்கடைத் தெருவுக்குப் போனான். ஒரு திண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பொற்கொல்லனிடம் காட்டி இதன் மதிப்பினைச் சொல்ல முடியுமா? என்று வினவினான்.  அவனும் தன்னுடைய கருவிகளைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, ‘சுவாமி இது ரத்தினக் கல்; கட்டாயம் பத்து பவுனுக்கு மேல் விலை மதிப்பிடலாம்’ என்று சொன்னான் .

வியப்பு மேலிட்ட சீடன் சிதானந்தம், இரத்தின வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் நுழைந்து, ஒருவரிடம் கொடுத்து, இதன் மதிப்பு என்ன இருக்கும்? என்றான். அவர் அதைப்பார்த்துவிட்டு இது நல்ல ரத்தினக் கல் ; நிச்சயமாக ஐநூறு பவுன் விலை கிடைக்கும் ஆனாலும் இதோ என் நண்பர்  ரத்தின வியாபாரி; அவரிடமே கேட்டு விடலாமே என்று இரத்தின வியாபாரியிடம் கல்லினைக் கொடுத்தான் . அவர் அதைப் பார்த்தவுடனேயே அடடா , இது அரியவகை ரத்தினைக் கல்; ஆனால் கச்சாச் சரக்கு;நன்றாக வெட்டி பட்டை தீட்டினால் ஆயிரம் பவுன் வரை கிடைக்கும் என்றார் ; அடுத்த வியாபாரி இடை மறித்து இல்லை இல்லை ; இதற்கு அதற்கு மேலும் மதிப்பு உண்டு நான் 5000 முதல் பத்தாயிரம் வரை மதிப்பு போடுவேன் ஆயினும் இந்த ஊரிலேயே பெரிய இரத்தின வியாபாரி தனபாலன்தான் அவர் கடைக்குப் போங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சீடர் சிதானந்தத்துக்குத் தலை சுற்றியது; ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பிலிருந்து பத்தாயிரம் பவுன் அளவுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே!  நம் குருவிடம் இதே போல பல கற்கள் இருக்கின்றனவே; அவருக்கே மதிப்பு தெரியாதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே  ,

தைரியமாக தனபாலனின்   ரத்தினக் கடைக்குள் நுழைந்தான் . அவர் அதைப்  பார்த்த உடனேயே அரிய ரத்தினம் என்று சொல்லிக்கொண்டே அதைக் கருவிகளைக் கொண்டு அடித்தும் கீறியும் பலவித இரத்தின பரீட்சைகளைச் செய்தார்.

சுவாமி , உங்களைப் பார்த்தால் சந்நியாசி போல இருக்கிறது; இது போன்ற கற்கள் முனிவர்கள், அரசர்களிடம் மட்டுமே இருக்கும். என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு அபூர்வக் கல்லினைப் பார்த்ததே இல்லை; என்னுடைய சொத்து முழுவதையும் உங்களுக்குக்  கொடுத்தாலும் இந்தக் கல்லின் விலையைக் கொடுத்ததாக ஆகாது; இதன் மதிப்பு அதற்கும் மேலானது என்று சொல்லி கல்லினைத் திருப்பிக்கொடுத்தார். 

சீடன் சிதானந்தம் மறுநாள் சுவாமி ராமதீர்த்தரின் கூட்டத்துக்குச் சென்றான்; அவருடைய பாடத்தைக் கேட்க பெரிய சீடர்கள் கூட்டம் அங்கே இருந்தது அனைவரின் முன்னமும் சீடன்  சிதானந்தம் நட  ந்தது அனைத்தையும் சுவாமி ராமதீர்த்தரிடம் எடுத்துரைத்தான் .

அவரும் புன்னகை செய்துகொண்டே கல்லினை வாங்கிக்கொண்டு உபதேசத்தைத் தொடர்ந்தார்;

“கேட்டீர்களா, சீடர்களே முதலில் கல் என்று எண்ணிக்கொண்டுபோன பொருள்,  ஜாதி ரத்தினம் ஆனது; ரத்தினத்தை மதிப்பிட அது பற்றிய  நல்ல அறிவுவேண்டும். ரத்தினம் பற்றிய அறிவு இல்லாததால் கறிகாய்க்காரி  அதற்கு ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பு போட்டாள். மற்றவர்களுக்கு ரத்தினக் கற்கள் பற்றிய அறிவு இருந்ததால் ஒரு பவுனிலிருந்து பத்தாயிரம் வரை மதிப்பு போட்டார்கள் ரத்தினப் பரீட்சையில் தேர்ந்த ஞானமுள்ள தனபாலரோ இதற்கு விலையே சொல்ல முடியாது என்றார் . ராம நாமம் என்னும் ரத்தினத்தின் மதிப்பும் அப்படிப்பட்டதே  ரா மா என்பது இரண்டே எழுத்துக்கள்தான்; அதன் மதிப்பினை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? அதைத் தினசரி ஜபிப்பதின் மதிப்பினை உங்களுக்கு நான் எப்படிச் சொல்லமுடியும்?  ராமநாம மதிப்பினை அறிய, அதை உள்ளபடி ஜபித்து ஞானம் அடைய வேண்டும்; அது வந்துவிட்டால் இரத்தின வியாபாரி தனபாலன் சொன்னது போல ராமநாமத்தின் மதிப்பினை சொல்லவே முடியாது!  அரைகுறை அறிவு பெற்றவர்கள் அவரவர் அறிவுக்கு ஏற்ப மதிப்பிடுவார்கள்;  பரிபூரண ஞானம் எய்தியவர்களுக்கு ராம நாமம், விலை மதிக்க  முடியாத  ரத்தினம் என்பது தெரியும்.  ஆகவே நீங்களே முயன்று ராம நாமத்தின் மதிப்பினை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உங்கள் ஐயம் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு சுவாமி ராம் தீர்த்தர் ராம ராம என்று சொல்லிக்கொண்டே ஜபத்தில் ஆழ்ந்து விட்டார்  .

–SUBHAM—

TAGS- ராம ரத்தினத்தின் விலை , ராம நாமம், மதிப்பு, சுவாமி ராம தீர்த்தர்,கதை

மனதை மயக்கும் மைசூர்! (Post No.14,519)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,519

Date uploaded in London – –16 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 19-4-25 இதழில் வெளியான கட்டுரை!

மனதை மயக்கும் மைசூர்! 

ச.நாகராஜன் 

எங்கள் பாரம்பரியம் நீங்கள் சேரும் இடம்Our Heritage Your Destination – இது தான் மைசூர் சுற்றுலாத் துறையின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியம்!

புராணத்தில் குறிப்பிடப்படும் இரண்டு தலைகள் உள்ள கந்த்பெருண்டா பறவை நடுவில் இருக்க இருபுறமும் அலங்காரத் துணி போர்த்தப்பட்ட யானைகள் இருக்க அங்கு பொறிக்கப்பட்டிருக்கும்  இந்த வாக்கியம் மைசூரின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியமாகும்.

இந்தியாவில் உள்ளதிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது மைசூர்.

மைசூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பார்த்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன. 

கம்பீரமான மைசூர் அரண்மனை 

நகரின் மகுடம் என்று சொல்லப்படும் மைசூர் அரண்மனை பழம் பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. அம்பாவிலாஸ் என்று அழைக்கப்படும் இது 1912ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

மூன்று வாயில்கள் கொண்ட இந்த அரண்மனையின் முக்கிய வளாகம் 245 அடி நீளமும் 156 அடி அகலமும் கொண்டது. தெற்கு வாயில் வழியே பொதுமக்கள் செல்லலாம். கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் பொதுவாக தசரா விழாவின் போது திறக்கப்படுகிறது. கஜலட்சுமி சிற்பங்கள் உட்பட ஏராளமான சித்திர வேலைப்பாடுகளையும் குவி மாடங்களையும் இங்கு கண்டு களிக்கலாம். சுமார் 18 கோவில்கள் இங்கு உள்ளன. தர்பார் மண்டபம் அரசருக்கே உரித்தான  மண்டபமாக அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியக்கலாம். மன்னர்கள் அனைவரும் சாமுண்டி தேவியின் பக்தர்கள் என்பதால் அரண்மனை சாமுண்டி மலையை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம் 

சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல  ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில்  அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தியின் சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது. இதுவே நாட்டில் உள்ள நந்திகளில் பெரிய நந்தியாகும்.

இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.

மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக சாமுண்டீஸ்வரி அம்மனை தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

நினைத்ததை அருளும் சாமுண்டீஸ்வரியைப் தரிசிப்பது மைசூருக்கு வருகை புரிவோரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

பிருந்தாவன் கார்டன்ஸ்

மைசூரிலிருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிருந்தாவன் கார்டன்ஸ். மைசூருக்கு பயணம் மேற்கொண்டோர் தவறாமல் பார்த்து மகிழும் இது ஒரு பிரம்மாண்டமான பூங்கா தோட்டமாகும். இரவு நேரத்தில் ஒளி விளக்குகள் பளீரென மின்ன, ஆங்காங்கே நீரூற்றுகள் நீரை வானில் செலுத்த தேவலோகம் போலக் காட்சி அளிக்கும் இது ஏராளமான திரைப்படங்களில் இடம் பெற்று அனவரையும் மகிழ்வித்த தோட்டமாகும். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே அறுபது ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மையத்தில் சிறு குளம் ஒன்றில் காவேரி அம்மனின் விக்ரஹம் உள்ளது.

இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப நீரூற்றுகள் இங்கு நடனமாடும் காட்சி அதிசயிக்க வைக்கும் ஆனந்தக் காட்சியாகும்.

ரங்கந்திட்டு பறவைகள் காப்பகம்

கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டதில் அமைந்துள்ள இந்த பறவைகளின் சரணாலயம் மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது. சுமார் 170க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கே உள்ளன என்பதால் பறவை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு திரள்கின்றனர். 2016-17ல் மட்டும் இங்கு மூன்று லட்சம் பயணிகள் வந்தனர். தீவுகளின் வழிகாட்டும் படகு சவாரி நாள் முழுவதும் கிடைக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு.

ஶ்ரீரங்கப்பட்டண ஆலயம்

மைசூருக்கு மேற்கே 14 கிலோமீட்டர் தூரத்தில்  மாண்ட்யா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஶ்ரீ ரங்கப்பட்டணம் என்ற பெயர் இந்த ஆலயத்தின் பெயரால் எழுந்ததே. இங்கு மஹாவிஷ்ணு அனந்தசயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். விஷ்ணுவின் பாதங்களில் லக்ஷ்மி தேவி காட்சி அளிக்கிறார். ஶ்ரீரங்கப்பட்டணம், திருவரங்கம், கும்பகோணம், திருபேர்நகர்,, மயிலாடுதுறை ஆகிய ஐந்து இடங்களில் அமைந்துள்ள பஞ்சரங்கத் தலங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று, 

மைசூர் மிருகக்காட்சி சாலை

157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் 25 நாடுகளைச் சேர்ந்த 168 இனங்களைக் கொண்ட 1500 மிருகங்கள் உள்ளன. யானைகள், ஆப்பிரிக்க காட்டெருமை, ராஜ நாகம், சிறுத்தை உள்ளிட்டவற்றை இங்கு பார்க்கலாம்.

இங்குள்ள கரஞ்சி ஏரியில் 45 வகையான பறவை இனங்கள் உள்ளன. கரஞ்சி ஏரி 77 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்டமான ஏரி; குழந்தைகளுடன் செல்ல வேண்டிய இடம் இது.

 மெழுகு அருங்காட்சியகம்

மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பிரமிக்க வைக்கும் மெழுகுச் சிலைகளைக் காணலாம். மகாத்மா காந்தி அமர்ந்த நிலையில் இங்கு காட்சி தருகிறார்.  இங்கு பல பகுதிகளைச் சேர்ந்த பலவகையான இசைக்கருவிகள் உள்ளன. பார்வையாளர் விரும்பினால் அவர் விருப்பத்திற்கேற்ப இசைக்கருவிகளை இசைக்கும் வாய்ப்பும் உண்டு. நுழைவுக் கட்டணம் உண்டு.

 ரயில்வே மியூசியம்,, கடல் சிப்பி அருங்காட்சியகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்கள் மைசூரில் பார்ப்பதற்கு உள்ளன.

 மைசூருக்கு வருகை தருவோர் கூறுவது:

இங்குள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்கிறது!

ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்காமல் இருக்கவே முடியாது!!

மாயாஜாலம், மனதைக் கவரும் காட்சிகள் – இதுவே மைசூர்!!!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 39 (Post No.14,518)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,518

Date uploaded in London – –15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 39

Stamps posted today include 1991 STAMPS

Puppets , Kamaladevi, Mozart, Velakali, Kayang, folk dances, Road  safety,Hozagiri, B R Ambedkar, Valar, Antartic Treaty, Penguins, New Delhi, Diamond Jubilee, Youth Tourism, Gorkha Rifles, 18th Cavalry, India Tourism, Chithira Tirunal, Balarama Varma, Children’s Day,

 –subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 39, year 1991 , Puppets , Kamaladevi, Mozart, Velakali, Kayang, folk dances, Road  safety,Hozagiri, B R Ambedkar, Valar, Antartic Treaty, Penguins, New Delhi, Diamond Jubilee, Youth Tourism, Gorkha Rifles, 18th Cavalry, India Tourism, Chithira Tirunal, Balarama Varma, Children’s Day,

Women and Flowers: Bhartruhari (Post No.14,517)

Written by London Swaminathan

Post No. 14,517

Date uploaded in London –  15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Pictures -Paintings by Jaimini Roy

After God made your eyes of lotus blue

Took for your teeth white jasmine, shaped the whoe

Face as a better lily, chose the hue

And texture of magnolia for your skin,

He the grew tired of soft things, and within

He carved from flint the impenetrable soul.

****

Women and Fish

Love goes a-fishing with the rod desire

Baiting his hook with Woman for Delight.

Attracted by the flesh, the men-fish bite.

He hauls them in and cooks them in his fire

****

Women is Moon

A face to rival the moon,

Eyes that make mockery of lotuses

Complexion eclipting God’s lustre

Thick tresses that shame the black bee

Breast s like elephants swelling losses

Heavy hips,

A voice enchanting and soft

The adornments in maidens is natural.

Woman is a Sweet and Bitter Fruit

No single plant in this world’s garden- plot

Bears such sweet fruit , such bitter fruit as she:

Ambrosial are the apples on her tree

When she is in love, and poison when she is not.

–Bhartruhari

Tamil poet Tiru Valluvar also says Woman is a disease and she is also the medicine for the disease. This is the basis of Homeopathy as well.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து– குறள் 1102:

Disease and medicine antagonists we surely see;

This maid, to pain she gives, herself is remedy.

Another translation

For all illnesses, the medicine is distinct from the disease, but for the pain she causes,

The bejewelled maiden herself is the cure – 1102

“The medicine for a disease is always something different from it : but for the disease caused by this beautiful maid, she herself is the cure”.1102 -Tirukkural

Woman is a Day and a Year

When you are away

A day is a year:

But when you are here

A year is a day

It is in Sanskrit

Sassaamemaasasamaasamaa

Yoyaatayaatayaayaatiyaayaatyaayaatayaatayaa

First line contains no consonants other than s and m, the second line only y and t.

In Sanskrit they don’t leave space between words.

Ancient Tamil verses also written with little space. Only these two languages use Sandhi/ joining rules until this day. It is seen even in day today Tamil newspapers.

—-subham—

Tags- woman, flower, fish, fruit, day year, disease, medicine, Bhartruhari, Valluvar, Kural

ஒரு படி தானியத்துக்கு ஒரு படி முத்து! பரஞ்சோதி முனிவர் தகவல்-3 (Post.14,516)

Written by London Swaminathan

Post No. 14,516

Date uploaded in London –  15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-3

பரஞ்சோதி முனிவர் , அவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில், நிறைய அதிசயச் செய்திகளைக் கொடுக்கிறார்; அதில் ஒன்று பாண்டிய நாட்டில் எடைக்கு எடை முத்து கிடைக்கும் என்னும் செய்தி ஆகும் . மதுரை நகர பெண்களிடம் ஒரு படி எள் , அல்லது கொள்ளு கொடுத்தால் அவர்கள் ஒரு படி முத்து கொடுப்பார்கள் . அதை பெண்கள் வளையல்களாகவோ, மாலைகளாகவோ செய்துகொள்ளலாம். மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு உள்ள முத்து அங்கி, முத்து மாலைகளை பார்க்கையில் இது உண்மைதான் என்றும் தெரிகிறது .

வேழம் உடைத்து மலைநாடு

          மிகுமுத்து உடைத்து தென்னாடு;

தாழ்வில் தொண்டை வளநாடு

          சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்

சோழன் புவிசோறு உடைத்தென்னும்

          துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து

வாழும் பெருமைத் திருநாடு

          வளம்சேர் சோழ மண்டலமே   

மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விடச் சோழ நாடே சிறந்தது.

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து

என்றார் ஒளவையார் (தொண்டை மண்டல சதகம், மேற்கோள் 13)

****

இதோ திருவிளையாடல் புராணப் பாடல்

துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்

கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை

கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்

எள்ளு மாறவு மளப்பன விடைக்கிடை முத்தம் 42

  துள்ளுகின்ற கெண்டை மீன்போலுங கண்களையுடைய நெய்தனிலப் பெண்களால், சுறா மீனோடு உண்ணுதற் பொருட்டு, கள்ளையும்  இனிய

கரும்பையும், வாங்குதற் பொருட்டும், புளியங்காய், தினை கிழங்கு, தேன் இவைகளை, வாங்குதற் பொருட்டும், அவரை கொள், எள் இவைகளை வாங்குதற் பொருட்டும்,

 அளவுக்கு அளவு முத்துக்கள் அளக்கப் பெறும்

.

அந்தக் காலத்தில் பண்டமாற்றுமுறை நாடங்கிலும் வழகத்தில் இருந்தது யாரிடம் எது அதிகம் இருந்த தோ அதைக் கொடுத்து வேறு ஒரு பண்டத்தை  வாங்கினார்கள் பாண்டிய நாட்டில் முத்துக்கள் ஏராளமாக கிடைத்ததால் அதை அளந்து கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் .

கருவி வாள் சொரி மணிகளும் கழை சொரி மணியும்

அருவி கான்ற பல் மணிகளும் அகன் தலை நாகத்து

இரவி கான்ற செம் மணிகளும் புனம் கவரி மான்

குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்.    49

.மேகங்கள் சொரிந்த முத்துக்களும், மூங்கில்கள் சொரிந்த முத்துக்களும், அருவிகள் ஒதுக்கிய பல்வகை மணிகளும்,

அகன்ற படத்தினையுடைய நாகத்தினின்றும், உமிழப்பட்ட,

சூரியன்போலும் சிவந்த மணிகளும்,  தினைப்புனத்தின் கதிர்களைக்

கவர்கின்ற கூட்டமாகிய மான்களும் குருவிகளும் வீழும்படி,

 குறமகளிர் கவணில் கோத்து எறிகின்ற கற்ககள் ஆகும்

 கொடிச்சியர் – குறிஞ்சிநில மகளிர். (49)

குறிஞ்சிநில மகளிர், கவண் கல் வீசவும் ரத்தினக் கற்களைத்தான் பயன்படுத்துவார்களாம்!

—–subham—-

Tags-, கவண் கல், தானியத்துக்கு, முத்து , பரஞ்சோதி முனிவர், ரத்தினக் கற்கள், வேழம் உடைத்து மலைநாடு,தென்னாடு முத்துடைத்து

கோலாகலமான கோவள குதூகலம் (Post No.14,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,515

Date uploaded in London – –15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

சுற்றுலா பயண இடங்கள்

கோலாகலமான கோவள குதூகலம்

ச. நாகராஜன்

கோவளம் தரும் குதூகலம்!

தூய்மையான காற்று, மனதை மயக்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழ்நிலை, அற்புதமான கடற்கரைகள், ஆகியவற்றைக் கொண்ட கோவளம் அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரு சுற்றுலா பயண இடமாகும்.

கேரளத்தில் அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி வெளி நாட்டோர் விரும்பி வரும் இடமாகும்.

கோவளம் என்றாலேயே மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதி என்றே பொருள்.

 இது திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல டாக்ஸி, கார் வசதிகள் உண்டு.

.கலங்கரை விளக்கக் கடற்கரை, ஹவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை ஆகிய மூன்று அடுத்தடுத்த பிறை போன்ற கடற்கரைகளை இது கொண்டுள்ளது

 டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான இடமாகும்.

 இங்குள்ள ஏராளமான பீச் ரிஸார்ட்களில் ஏதேனும் ஒன்றில் தங்கி இருந்தால் நிச்சயமாக சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தில் மிளிரும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

கோவளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் பீச் அனைவரும் செல்ல விரும்பும் பிரசித்தமான ஒரு கடற்கரையாகும். 118 அடி உயரமுள்ள லைட் ஹவுஸ் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. 140 படிகள் ஏறி பார்வையாளர்கள் பார்க்கும் இடத்தை அடைந்தால் அங்கிருந்து ரம்யமான காட்சியைப் பார்க்கலாம்.

 இங்குள்ள மணல் விசேஷ தாதுக்களில் கலவையினால் உண்டான ஒரு விதமான கருப்பு நிற மணலாகும்,

 கோவள கடற்கரைக்குப் போட்டி போடும் விதத்தில் விழிஞத்துக்கு அருகே அற்புதமான காட்சிகளோடு இருப்பது பூவார் கடற்கரையாகும்,.

இங்கு நெய்யாறு அரபிக் கடலில் கலக்கும் காட்சி கண்ணைக் கவரும் ஒன்று.

 ஆயுர்வேதத்திற்குப் பெயர் பெற்ற இடமான திருவனந்தபுரத்தில் சௌவாரா கடற்கரையில் மசாஜ் உள்ளிட்டவற்றைச் செய்து கொள்வதோடு பல வியாதிகளைப் போக்கும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம். ஆயுர்வேத மையங்கள் பல அமைந்துள்ள பகுதி இது.

 கடற்கரையில் காற்று வாங்கிய பின் நிம்மதியாக அருகிலுள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள பார்க்க வேண்டிய பல இடங்களுக்கும் செல்லலாம்.

 பத்மநாபஸ்வாமி ஆலயம்

 விஷ்ணு எழுந்தருளியுள்ள பத்மநாபஸ்வாமி ஆலயம் வழிபாட்டுக்குரிய இடமாக அமைகிறது.  

108 வைணவ திவ்ய தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள பத்மநாபசுவாமியின் மூல விக்கிரகம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது. இவை நேபாளத்தில் உள்ள கந்தகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.

கர்பக்ருஹத்தில் உள்ள ஒரு கல் மேடை மேல் அமைந்துள்ள மூல விக்ரஹம் 18 அடி நீளத்திற்கு உள்ளது.

மூன்று வெவ்வேறு வாயில்களிலிருந்து இதை தரிசிக்கலாம். முதல் வாயிலில் தலையையும் மார்பையும் தரிசிக்கலாம். இரண்டாவது வாயிலில் கைகளும் மூன்றாம் வாயிலில் பாதங்களும் தரிசிக்கலாம். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளும் ஓவியங்களும் மனதைக் கவர்பவை.

இந்தக் கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. சமீப காலத்தில் இவற்றைத் திறந்து பார்த்த போது ஏராளமான தங்க நகைகள், வைர வைடூரியங்கள் உள்ள பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் அதிக பணமுள்ள கோவிலில் இதுவும் ஒன்று என்பதை இந்த பாதாள அறைகள் உறுதிப்படுத்துகின்றன.

 மிருகக்காட்சி சாலை

திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை மிகவும் பழமையான ஒன்றாகும். இங்கு விலங்குகள் கூண்டில் அடைக்கப்படாமல் இருப்பதால் இவற்றைப் பார்ப்பது இயற்கைச் சூழ்நிலையில் இவற்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.

 நேபியர் மியூஸியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு அருங்காட்சியகமான இதில் வெங்கலச் சிலைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம். தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இது.

 சித்ரா ஆர்ட் காலரி

நேப்பியர் மியூசியத்தை ஒட்டி அமைந்துள்ள சித்ரா ஆர்ட் காலரி பாரம்பரியமான கலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கலையகமாகும்.

ஆகப் பெரும் ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுள்ளன. ராஜபுதன பாணி, பாலினீசிய பாணி, தஞ்சாவூர் பாணி உள்ளிட்ட பல வகை ஓவியங்களை இங்கு பார்த்து பரவசம் அடையலாம்.

 கனகக்குன்னு அரண்மனை:

இது திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகம் அருகே உள்ள அருங்காட்சியகமாகும்.

இது பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகும். பாரம்பரிய கலை விழா நடக்கும் போது சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து இதில் கலந்ஹது கொள்கின்றனர்.

இதைக் கட்டியவர் ஶ்ரீ மூலம் திருநாள் ஆவார்.

 குதிரை மாளிகை அரண்மனை

இது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனையாகும்

 .பத்மநாப சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது இது.  இந்த மாளிகையில் கூரைப் பகுதிக்குக் கீழே 22 குதிரைச் சிற்பங்கள் உள்ளதால் இது குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.

 எண்பது அறைகள் கொண்ட இந்த மாளிகையில் இருபது அறைகள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான படைக்கலங்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள் உள்ளவற்றை இங்கு காணலாம. கேரள வரலாற்றை நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குள்ள மாடத்திலிருந்து பத்மநாப சுவாமி கோவிலைப் பார்த்து மகிழலாம்.

 பிரதான சாலையான மகாத்மா காந்தி சாலை ஷாப்பிங் செய்ய உகந்த இடமாகும்.

 பசுமை நகரம் என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட திருவனந்தபுரத்தில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

வேலி லகூன், கரமண நதி, வெள்ளயானி ஏரி, கவுடியார் அரண்மனை உள்ளிட்ட இடங்களை நமக்குள்ள நேரத்தைப் பொறுத்து திட்டமிட்டுப் பார்க்கலாம்.

 கேரளத்தின் இந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் ஒருவர் மனதில் தோன்றும் எண்ணம்: “சும்மாவா சொன்னார்கள் இதை கடவுளின் சொந்த நாடு” என்று!

***