Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகின் அதிசய இடங்கள்!
கோரோங்கோரோ எரிமலை வாய்!
பிளவுப் பள்ளத்தாக்கில் ஒரு வனவிலங்கு சரணாலயம்!!
NGORONGORO CRATER
ச. நாகராஜன்
வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கொரோங்கோரோ எரிமலை வாய்!
ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவே தான்.
எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப் பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள்
கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.
கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.
கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.
ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!
அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.
மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.
மூங்கே மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE)
ஆகிய இரு நதிகள் நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.
அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.
இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக் கொள்கின்றன!
அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.
எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Here are some difficult questions from the Hindu epic Ramayana (I Posted them in Tamil in 2012 in this blog; Tamil version is given below the English version.)
1.What was the name of Janaka’s minister?
2.Can you name the wives of Lakshmana, Bharata and Shatrughna.?
3.Who built Rama Setu- the sea bridge to Lanka?
4.Sita was the princess of which country? What was the capital of the country?
5.Who were the father and mother of Ravana?
6.Who were Ravana’s ministers?
7.Name the father of Vali and Sugreeva.
8.Where did Valmiki give Shatrughna importance?
9.Who advised Rama to make friendship with one person and who was that person?
10.Can you name the wives of Vali and Sugreeva?
11.What is the similarity or commonality between Arjuna and Vali?
12.Surpanakha was in love with Lakshmana? Who was the other woman that went after Lakshmana? Where did it happen?
13.Who performed the Putra Kameshti Yaga for the benefit of King Dasaratha?
14.What were the birth stars of Rama, Lakshmana Bharata and Shatrugna?
15.Do you remember their zodiac signs according to Hindu astrology?
16.How many Grahas/planets were in exaltation in Rama’s horoscope ?
3. Two engineers Nalan and Neelan did the blueprint for the bridge and Vanara Sena/ Monkey battalion did help in building it.
4. Sita was the princess of Videha and its capital was Mithila;
5.Ravana’s father was Brahmin Visravas and his mother was Kaikasi from the Rakshasa tribe;
6.Mahodaran and Malyavan;
7. Riksharajan;
8.Lavanasura was killed by Rama and his kingdom Mathurapuri was annexed to Rama’s empire. Shatrugna was made the king of that country.
9.Demon Kabandha advised Rama to meet the Monkey King Sugreeva and get his help to find Sita.
10. Vali’s wife Tara; Sugreeva’s wife Ruma.
11. Both Arjuna and Vali were born with the grace of Indra.
12.Ayomukhi; she fell in love with Lakshmana in Mathanga Muni’s Ashram. Demoness Ayomukhi became impressed by Lakshmana and captured him in her embrace saying that he is her lover. Lakshmana cut off her nose, one ear and a breast. The demoness ran away
13.Rishyasrnga .
14.Rama- Punarvasu; Lakshmana and Shatrugna- Ayilyam/Ashlesha and Bharata -Pusam/Pushya
15. According to Hindu astrology the zodiac signs of Lord Rama – Cancer, Lakshmana – Gemini, Shatrughna – Gemini, and Bharata – Taurus.
16.In the birth chart of Lord Rama, five planets were in exaltation: Sun (in Aries), Jupiter (in Cancer), Saturn (in Libra), Mars (in Capricorn), and Venus (in Pisces). This configuration is a significant aspect of his horoscope, suggesting a powerful and auspicious birth chart
17.Kaikeyi used two boons granted by King Dasharatha to demand that her son Bharata be crowned king and that Rama be exiled to the forest for fourteen years .Rama got the friendship of Sugreeva only after piercing Seven trees in one shot.
****
Following Tamil version is from my previous post:
1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?
2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?
3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?
4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?
5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?
6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?
7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?
8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?
9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?
10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?
11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?
13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?
14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?
15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?
16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை ஏன்?
விடைகள்:
1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்கள 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 26
Stamps posted today include
Martyr Day, B C Roy, Purushothamdas Tandon, Darjeeling Rail, Asian Games 1982, Civil Aviation, Inpex, Asian Games, 1982, Arjuna Shooting Circling Fish, Oil Exploration, Apple Satellite, Communication Indi-USSR, Four Flowers of India, Children s Day 50p, Kashmir Stag, Indian Airforce, Police Patrol, M F Hussain Painting etc.
–Subham—
Tags Part 26, 2500 Indian Stamps, B C Roy, Purushothamdas Tandon, Darjeeling Rail, Asian Games 1982, Civil Aviation, Inpex, Asian Games, 1982, Arjuna Shooting Circling Fish, Oil Exploration, Apple Satellite, Communication Indi-USSR, Four Flowers of India, Children s Day 50p, Kashmir Stag, Indian Airforce, M F Hussain Painting etc.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.அக்ஷய திருதியை என்றால் என்ன அர்த்தம் ? ஒவ்வொரு ஆண்டும் எப்போது வரும் ?
1.அக்ஷய அழிவில்லாத ; திருதியை = மூன்றாவது நாள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ( அம்மாவாசையில் அடுத்த மாதம் துவங்குவதாக எண்ணுவோருக்கு வைகாசி மாதம் ) வளர்பிறையில் மூன்றாம் நாள் அட்சய திருதியை கொண்டா டப்படுகிறது.
****
2.இந்த 2025 ஆம் ஆண்டு (30.04.25 புதன்கிழமை) அக்ஷய திருதியை நாளில் ஏற்பட்ட கூடுதல் சிறப்பு என்ன ?
2. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா பொறுப்பேற்றார்
சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு அட்சய திருதியை நாளில் ,காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கினார். அதன்பின், ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.
****
3.அக்ஷய திருதியை தினத்தில் மக்கள் தங்க நகைக்கடைகளுக்கு படை எடுப்பது ஏன்?
3.இந்த ஆண்டு அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்; அந்த தினத்தில் எதைச் செய்தாலும் .எதை வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அன்று நகைகளையும் ரத்தினங்களை வாங்குகிறார்கள் .
தங்கத்தின் விலை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.
****
4.அக்ஷய திருதியை நாளுக்கும் கும்பகோணத்துக்கு என்ன தொடர்பு?
4.அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார்கள். மேலும் ஒரே மண்டபத்தில் தங்கி பக்கதர்களுக்குத் தரிசனம் தருவார்கள்.
****
5.ஆந்திரத்திலுள்ள சிம்மாசலம் கோவிலில் இந்த தினத்தில் என்ன நடக்கும் ?
5.ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் அருகில் சிம்மாசலம் மலையிலுள்ள வராஹ லெட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மீதுள்ள லிங்க வடிவிலுள்ள சந்தனப் பூச்சு இந்த ஒரு நாள் மட்டும் அகற்றப்படும் அப்போது சுய உருவில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்
முன்னொரு காலத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின் மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.
****
6.இமய மலை புனிதத் தலங்களில் இந்த தினத்தில் என்ன நடக்கும்?
6.பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும். கேதார் நாத் ஜோதிர்லிங்க கோவிலும் பத்ரிநாத் பத்ரி நாராயணர் கோவிலும் திறக்கப்படுகிறது .
****
7.அக்ஷய திருதியை நாள் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள வேறு நம்பிக்கைகள் என்ன ?
7.பரசுராமர் அவதரித்த திருநாள்; கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த
திருநாள்; பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்; பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்; வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. திரேதாயுகம் தொடங்கிய நாள்; கனகதாரா ஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியாரால் இயற்றப்பட்டது.
8.அரிசி, கோதுமை அல்லது பார்லியை யாகக்கிரியைகளில் இந்துக்கள் பயன்படுத்துவார்கள்; வட இந்திய குளிர்ப்பிரதேசங்ககளில் பார்லி எளிதில் விளைகிறது .பார்லி தோன்றிய நாள் இதுதான் .
***
9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் அக்ஷய திருதியை ஏன் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது ?
9.ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி நகரில் ஜகந்நாதர் கோவில் உள்ளது; அங்கு நடக்கும் ரத யாத்திரைதான் உலகப் பிரசித்திபெற்றது; ஆக்ஸ்போர்டு அகராதியில் ஜக்கர்நாட்juggernaut என்ற சொல்லை உருவாக்கியது .
இன்றைய தினத்தில்தான் ரதம் அமைக்கும் பணிகளும் சந்தன் யாத்ரா சடங்குகளும் தொடங்குகின்றன
juggernaut
/ˈdʒʌɡənɔːt/
noun
a huge, powerful, and overwhelming force.
“the juggernaut of public expenditure”
British
a large, heavy vehicle, especially an articulated lorry.
“the juggernaut thundered through the countryside”
***
10.ஹரே கிருஷ்ணா இயக்கக ISKCON temples கோவில்களில் என்ன நடக்கும்?
10.கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சந்தனத்தைச் சார்ந்தும் விழா துவங்கும் இது 21 நாள் நடைபெறும்; சேவைப் பணிகளில் தொண்டர்கள் இறங்குவார்கள் விஷேஷ பூஜைகளும் பிரசாதமும் முக்கிய அம்சங்கள்.
–subham—
Tags- அக்ஷய திருதியை , ரத யாத்திரை, ஜெகன்நாத், பரசுராமர், கங்கை நதி , தங்கம் , காஞ்சி மடம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் 26-3-25 இதழில் பிரசுரமான கட்டுரை!
இகிகை! வாழ்வாங்கு வாழ உதவும் கை!
ச. நாகராஜன்
ஏதோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் என்று வாழ்க்கையைக் கழிப்பதை மாற்றி உயிருடன் இருப்பதற்கான காரணத்தை அறிவது தான் இகிகை.
இகிகை வாழ்க்கையை நன்கு வாழ்வதற்கான ஒரு ஜப்பானிய வழி!
இகிகை என்பதை . அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.
எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும் வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.
ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா? கான்ஸர், மாரடைப்பு, மனச்சோர்வு, இதர பயங்கர வியாதிகள் எதுவும் ஒகினாவா மக்களுக்கு ஏற்படுவதில்லை.
காரணம் – இகிகை.
இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.
§ நீங்கள், உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.
உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.
உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!
உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?
அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:
§ நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
§ உலகத்தின் தேவை என்ன? (அதற்கான உங்களது பணி)
§ நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
§ எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)
இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!
இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம். அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!
அதை எப்படிக் கண்டுபிடிப்பது?
நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:
§ எதை நான் விரும்புகிறேன்?
§ எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
§ இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
§ உலகத்தின் இன்றைய தேவை என்ன?
இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!
இகிகையால் வெற்றி பெற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு காண்போம். குட் ஆல் (Goodall) என்ற பெண்மணிக்கு விலங்குகள் என்றால் ஒரு பிரியம். அதிலும் குறிப்பாக குரங்குகளின் மீது அவருக்கு ஒரு அபார ஈடுபாடு உண்டு. குரங்களைப் பற்றி ஆராய ஆரம்பித்த அவர் ஏராளமான அபூர்வ ரகசியங்களைக் கண்டுபிடித்தார். அவற்றைப் புத்தகங்களாக எழுதினார். உலக பிரசித்தி பெற்றார். அவரது உரைகளைக் கேட்க ஏராளமானோர் கூடினர். பணமும் புகழும் அவருக்குப் பெருகியது.
ஆக இந்த இகிகையை கடைப்பிடித்து நமது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதோடு செலவமும் புகழும் பெற்று நீடித்த ஆயுளைக் கொண்டு திருப்திகரமான வாழ்க்கையை வாழலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 25
Stamps posted today include
FOUR TREES, GOMATESWARA, KALIYAMANTHAN KRISHNA, FOUR BUTTERFLIES, FOUR TRIBES OF INDIA, TELEPHONE, PICASSO PAINTING, DURGABAI DESHMUK, RADIO TELESCOPE, ROHINI ROCKET, FOR FLOWERS, ASIAN GAMES, MAHAR REGIMENTS, YEAR OF DISBALED FORESTS, CONSERVATION OF FORESTS, J J SCHOOL OF ART, SOIL SCIENCE, CHILDREN S DAY, PALESTINIAN SOLIDARITY, WORLD FOOD DAY, NILMONI PHUKAN, SANJAY GANDHI , DISCOVERY OF TB, ETC
–Subham—
Tags Part 25, 2500 Indian Stamps, GOMATESWARA, KALIYAMANTHAN KRISHNA, FOUR BUTTERFLIES, FOUR TRIBES OF INDIA, TELEPHONE, PICASSO PAINTING, DURGABAI DESHMUK, RADIO TELESCOPE, ROHINI ROCKET, FOR FLOWERS, ASIAN GAMES, MAHAR REGIMENTS, YEAR OF DISBALED FORESTS, CONSERVATION OF FORESTS, J J SCHOOL OF ART, SOIL SCIENCE, CHILDREN S DAY, PALESTINIAN SOLIDARITY, WORLD FOOD DAY, NILMONI PHUKAN, SANJAY GANDHI , K P JAYASWAL, VON STEPHAN, RAGHAVA, DEER SCULPTURE ETC
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vidura Niti or Neeti (Maxims of Vidura on Right Conduct) occurs in the Udyoga Parva of Mahabharata. It has got 8 chapters containing over 500 couplets in Sanskrit. In this, Vidura outlines things wise people and leaders should do, and things they should not.
***
Festival Days : May Day-1; Sankara and Ramanuja Jayanti- 2; Planet Guru/Jupiter Transit-11; Buddha Purnima, Chitra Pournami- 12;
New Moon Day- 27; Full Moon Day -12.
Ekadasi Fasting Days- 8,23.
Auspicious Days (Tamil Panchang) – May16, 18, 23.
Auspicious Dates and Muhurat Timings in May 2025: (North Indian Panchang)
May 15th: Auspicious Muhurat timings start at 02:09 PM and end at 03:15 PM.
May 16th: Muhurat timings from 05:30 AM to 04:07 PM, with the Tithi being Chaturthi.
May 17th: Muhurat timings from 05:44 PM to 05:29 AM on May 18th, Tithi Panchami.
May 18th: Muhurat timings from 05:29 AM to 06:52 PM, Tithi Shashthi.
May 22nd: Muhurat timings from 01:12 AM to 05:26 AM on May 23rd, Tithi Ekadashi.
May 28th: Auspicious Muhurat timings start at 05:45 AM and end at 07:06 PM.
Some of the states in India observe following holy days:
Narasimha Jayanti- May 11;
Narada Jayanti- May 13;
Maha Ranapratap – Jayanti- May 29;
Surdas Jayanti- May 2 ;
Rabindranath Tagore Jayanti – May8, 9;
****
May 1 Thursday
(Lust, Anger and Greed must be shunned by a man as these three destroy the ATMA (soul) and are the three doors of the Hell
***
May 2 Friday
Everyone undergoes the cycle of Joy- Sorrow, creation-destruction, gain-loss and life-death one by one. Hence a patient man must not either be happy for them or mourn for them.
***
May 3 Saturday
One who has food moderately has the following six advantages, not only is he healthy, gets long life , strength, and happiness, but also his children are blessed with beauty and no one makes fun of him for eating too much.
***
May 4 Sunday
A king should act responsibly; otherwise, the wealth of the kingdom would be exhausted in no time.
***
May 5 Monday
Comparing our body as a chariot, one should calmly control the horses of senses, otherwise, uncontrolled senses would lead to destruction – like uncontrolled horses.
***
May 6 Tuesday
As dry wood would burn wet wood, an innocent man should stay away from sinners, otherwise, he will be punished in the same way as a sinner.
***
May 7 Wednesday
Whether one has or does not have wealth, he must be hospitable to his friends. One should never demand anything from their friends, trying to examine their worthiness
***
May 8 Thursday
One who takes away others wealth by deceit, developed intimacy with women other than his own wife and abandons a kind and gentle friend is doomed
***
May 9 Friday
The joys of getting a boon, acquiring a state and birth of a son even if combined cannot match the joy of being released from the ruthless clutches of an enemy.
***
May 10 Saturday
Goddess Laxmi showers blessings on such homes where senior most member of the family is protected, where a high caste man fallen in bad times, a money-less friend and a childless sister are given refuge and shelter.
***
May 11 Sunday
An alert man should never visit such a man’s home during the evenings who is untrustworthy. He should not try to hide himself at the cross road, in the night as there is a chance of getting caught and he should not try to acquire that woman in which the king is interested as there is a certainty of persecution.
***
May 12 Monday
One who wants his own advancement must do service supreme, best quality man, If situation so arises, he can also do service to the medocre man, but he must never serve a mean person.
***
May 13 Tuesday
Sorrow destroys beauty ;Power is destroyed by sorrow; Knowledge is destroyed by sorrow. Due to sorrow, man becomes diseased.
***
May 14 Wednesday
That man who knows the nature of all creatures (viz., that everything is subject to destruction), who is cognisant also of the connections of all acts, and who is proficient in the knowledge of the means that man may resort to (for attaining their objects), is reckoned as wise. (VN: 1.28).
***
May 15 Thursday
He who exults not at honours, and grieves not at slights, and remains cool and unagitated like a lake in the course of Ganga (Ganges), is reckoned as wise. (VN: 1.27)).
***
May 16 Friday
He, who commences his acts with due thought and consideration, who never gives up things half way , who never wastes his time, and who has his senses under control, is regarded wise.
***
May 17 Saturday
He, who speaks eloquently, can converse on various subjects, knows the science of argumentation, possesses genius, and can interpret the hidden meaning of sacred books, is reckoned as wise.
***
May 18 Sunday
‘He alone is a wise man, who knows his capacity, who is never idle or lazy but exerts himself according to his might, who is not affected by pleasure or pain, profit or loss, honour or dishonour, who has a firm faith in Dharma and who is not tempted by sensual objects.
***
May 19 Monday
These six are instantly destroyed, if neglected, viz., kine (cow), services(the work which is under the supervision of servants), agriculture, a wife, learning, and the company of a base person. (VN: 1.85).
***
May 20 Tuesday
A king should renounce these seven faults which are productive of calamity, inasmuch as they are able to effect the ruin of even monarchs firmly established; these are women, dice, hunting, drinking, harshness of speech, severity of punishment, and misuse of wealth.(VN: 1.89-90).
***
May 21 Wednesday
After giving birth to a son, clearing all their debts, managing a means of earning a livelihood for them, then after arranging the marriages of his daughters, he should lead the life of a recluse in the forest.
***
May 22 Thursday
Resolution made to realize god, influence of an intelligent person, humility of a learned person and annihilation of the sinners give instant results.
***
May 23 Friday
Those having intelligence of a wise man, do not strive for objects that are unattainable, do not grieve for what is lost and gone, and never lose their heart (remain firm) in calamities.
***
May 24 Saturday
He ,who grasps the most difficult subject quickly, listens to the talks of others patiently, pursues the objects of the senses with judgment and not from desire and does not give his opinion unasked , is said to possess the foremost mark of wisdom.
***
May 25 Sunday
He whose intended acts, and proposed counsels remain concealed from foes, and whose acts become known only after they have been done, is considered wise.
***
May 26 Monday
He whom neither anger nor joy, nor pride, nor false modesty, nor stupefaction, nor vanity, can draw away from the high ends of life, is considered as wise.
***
May 27 Tuesday
He, who wishes for those things that should not be desired, and forsakes those that may legitimately be desired, and who bears malice to those that are powerful, is regarded to be a foolish soul.
***
May 28 Wednesday
He, on the other hand, who is ignorant of scriptures yet proud, poor but builds castles in the air, and wishes to obtain things or wealth without any exertion on his part, resorts to unfair means, for the acquisition of his objects, is a fool.
***
May 29 Thursday
One who takes his bath daily increases his BALA (power), ROOPA (beauty and splendour), gets sweet voice, becomes fairer, achieves KOMALTAA (tenderness), SUGANDHA (fragrance), PAVITRATAA (purity), SHOBHA (splendour) and SUKUMARATAA (delicacy).
May 30 Friday
(The following eight qualities increases the SHOBHA (splendour) of a man- BUDDHI (intelligence), KULINTAA (nobility), SHASTRAGYAAN-knowledge of scriptures, INDRIYANIGRAHA (control of the senses), PARAKRAMA (Bravery), Little talk, charity according to his ability and KRITAGYATAA (gratefulness).
May 31 Saturday
One must not take secret advice from an intelligent, a procrastinator, a man who is always in hurry and a false admirer. These four are worth abandoning for an emperor. A learned man must recognize these people.
–Subham—
Tags- Vidura Niti, Neeti, Quotations, May 2025, Calendar
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சம்ஸ்க்ருதத்தில் 650-க்கும் மேலான நாடகங்கள் இருக்கின்றன என்று பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதியுள்ளார்.
“Europe first learned of the old Indian drama from Sir William Jones translation of Kalidasa’s Shakuntala, published in 1789. Something in the nature of a commotion was created among European intellectuals by the discovery and several editions of the book followed. Translations also appeared in German, French Danish and Italian. Goethe was powerfully impressed and he paid a magnificent tribute to Shakuntala.
The stream of Sanskrit drama continued to flow for centuries but after Murari , early in the ninth century, there is a marked decline in the quality. That decline, and a progressive decay, were visible in other forms of life’s activities. It has been suggested that this decline may be partly due to the lack of royal patronage during the Indo -Afghan and Mogul periods and the Islamic disapproval of the drama as an art form, chiefly because of its intimate association with the national religion. But there is little substance in the argument though political changes at the top had some indirect effect. The decline was obvious long before the political changes.
Yet , in spite of all this, it is astonishing the Sanskrit drama continued to be produced right through the mediaeval period and up to recent times. In 1892 appeared a Sanskrit adaptation of Shakespeare’s Midsummer Night’s Dream. Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.
—Jawaharlal Nehru in his book Discovery of India.
ஆக உலகிலேயே அ திக நாடகங்களை உடைய பழைய மொழி சம்ஸ்க்ருதம் தான்.கிரேக்க மொழியில் புகழ்பெற்ற பழைய நாடகங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் குறைவு!
65& 66வால்மீகியும் வியாசரும்
4000 ஆண்டுக்கு (Professor Wilson’s dating; he translated Rig Veda before Max Muller) முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.
உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.இது வியாசர் எழுதியது என்பதைச் சொல்லத் தேவை இல்லை
வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.
18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. புராணங்களில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன.
உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.
கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்). பாரசீக மொழியில் உள்ள செண்ட் அவெஸ்தாவின் காலம் கி.மு 600.
கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.
பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.
நமது காலத்திலேயே ரமண மகரிஷி சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகங்களை இயற்றியுள்ளார் ; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருதத்தை முறையாகப் படித்தது இல்லை.
****
67.இருபதாயிரம் சுபாஷித பாடல்கள் !
பெங்குவின் வெளியிட்ட, ஜான்ப்ரோ எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் என்று நூல் கீழ்கண்ட புள்ளி விவரத்தைத் தருகிறது :
சுபாஷித ரத்ன கோச – தொகுத்தவர் வித்யாகார – ஸ்லோக எண்ணிக்கை 1738 – காலம் 11 ஆம் நூற்றாண்டு.
சுபாஷிதாவலி – வல்லபதேவ- 3527- காலம் 12 ஆம் நூற்றாண்டு.
சார்ங்கதர பத்ததி – சாரங்கதேவ – 4620- காலம் 14 ஆம் நூற்றாண்டு.
John Brough, Poems from the Sanskrit Language, Penguin Publications,1968
***
இன்னும் ஒரு புள்ளிவிவரம்:–
சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் /சுபாஷித பாடல்கள்
சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்
பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,
சதுக்தி கர்ணாம்ருத 2370 பாடல்கள்–485கவிஞர்கள்,
சூக்தி முக்தாவளி 2790 பாடல்கள், 240கவிஞர்கள்,
சரங்கதார பத்ததி 4689 பாடல்கள்–282கவிஞர்கள்
ப்ருஹத் பத்ததி 7586 பாடல்கள்,
வல்லப தேவ சுபாஷிதாவளி 3527 பாடல்கள் 360 கவிஞர்கள்
(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு !
இரண்டாம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன!
ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.
****
68.அமரசிம்மன்
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் தலைப்பு வாரியாக பெயர்களை அடுக்குகிறார் அமரசிம்மன்.
தெய்வங்கள், தேவர்கள், மிருகங்கள் , கிரகங்கள் போன்ற தலைப்புகளில் பெயர்களை அடுக்குகிறார் இந்த அகராதியில் யமனுக்கு 14 பெயர்கள் சிவனுக்கு 52 பெயர்களும், விஷ்ணுவுக்கு 46 பெயர்களும், பலராமனுக்கு 17 பெயர்களும்,அம்பாளுக்கு 21 பெயர்களும், லெட்சுமிக்கு 14 பெயர்களும், கணபதிக்கு 8 பெயர்களும்,
அக்னிக்கு 34 பெயர்களும், வருணனுக்கு 5 பெயர்களும், வாயுவுக்கு 20 பெயர்களும், குபேரனுக்கு 17 பெயர்களும், மன்மதனுக்கு 19 பெயர்களும், ஜினதேவனுக்கு 18 பெயர்களும், புத்தபகவனுக்கு 7 பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.. குருகுலத்தில் சம்ஸ்க்ருதம் பயிலச் சென்றோர் இதை மனப்பாடம் செய்துவைத்திருந்தனர். இதில் மூவாயிரம் வரிகள் உள்ளன ; மூன்று காண்டங்களாகவும் 26 வர்க்கங்களாகவும் பிரிக்கப்பட்ட இதிலுள்ள சொற்களின் எண்ணிக்கை 11,580.
இதற்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே தமிழில் நிகண்டுகள் வந்தன . அதிலும் சம்ஸ்கிருத சொற்கள் மிகுதி!
***
69.சாணக்கியன்
சாணக்கியன் எழுதியதாக பல நீதி வாக்கிய நூல்கள் கிடைத்திருக்கின்றன. அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் உலகின் முதல்பொருளாதார நூல் ஆகும் . அதில் அரசாட்சி, படை பலம், வரி விதிப்பு, ஊதியம். உளவுத்துறை, தண்டனைகள் என்று பல விஷயங்களை அலசி ஆராய்ந்து அரசனுக்கு அறிவுரை வழங்குகிறார் 2300ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நூல் எழுத வேண்டுமானாலால் அந்த சமுதாயம் அப்போதே மிகப்பெரிய நாகரிக நிலையை அடைந்திருக்க வேண்டும் உலகில் அக்காலத்தில் இதற்கு ஈடு இணையான நூல் வேறு எந்த மொழியிலும் இல்லை.
***
70.மூககவி
இவர் இயற்றிய கவிதையின் பெயர் மூக பஞ்சசதி; மூக பஞ்சசதீயின் முதல் பாகம் ஆர்யாசதகம். ஏனைய நான்கு பகுதிகள் – பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் , கடாக் ஷசதகம் , மந்தஸ்மித சதகம். மொத்தம் 500 பாடல்கள்
ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு ஸ்லோகம் உண்டு :
மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்.
யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.
பல ஊமைகள் தெய்வ சந்நிதியில் வாக்கு வண்மை பெற்றதை மூககவி, குமரகுருபரர்போன்றோர் வாழ்க்கையில் அறிகிறோம் .
****
71.விசாகாதத்தர்
சாணக்கியரின் பெருமையை நாடக ரூபத்தில் சொல்லும் நூல் முத்ரா ராக்ஷஸம் . இதை சம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் விசாகதத்தர். பிராமணர்களை அவமதித்த நந்த வம்சத்தை வேரோடு சாய்ப்பேன் ;அதுவரை குடுமியை முடியமாட்டேன் என்று வீர சபதம் செய்து அதை நிறைவேற்றியதால் சாணக்கியரின் பெருமை இன்றுவரை நீடிக்கிறது ;அவரது அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல் ஆகும்.
விசாகாதத்தர் பெண்களை புகழும் அழகு அந்தக் காலத்தில் பெண்கள் இருந்த உயர் நிலையைக் காட்டுகிறது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சியில் “பெண்ணை நீயே வாழ்கைக்கு வழிகாட்டி; குடும்பம் நடத்தும் கலையின் தலைவி ; குடும்பத் தலைவி; குணவதி; இல்லத்தில் உறையும் தெய்வம்; ஆன்மீக உண்மைகளை அறிய உதவும் உத்தமி; அறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்ந்த பெண் மணி” என்று புகழ்கிறார் .
முத்ரா ராக்ஷஸம் பற்றி பி ஆர் ராஜாராம் மொழிபெயர்த்த இருபது பக்க கட்டுரை 1964 -ஆம் ஆண்டு மஞ்சரி மாத இதழில் வந்திருக்கிறது . இது மராட்டிய பத்திரிக்கைக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு ;நல்ல வரை படங்களும் உள்ளன.
***
From Wikipedia
இந்நூல் 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது[1].
பரிதிமாற் கலைஞர் எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை முத்திராராட்சம் எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்,
***
72 % 73 சரகர் சுஸ்ருதரின் மருத்துவ சம்ஹிதைகள்
சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் உலகில் முதலில் எழுதப்பட்ட விரிவான மருத்துவ நூல்களாகும்
இவைகளில் டாக்டர்களுக்குப் பயன்படும் மருத்துவ, மூலிகைக் குறிப்புகளைத் தவிர பொதுவான ஆரோக்கிய விஷயங்களும் மருத்துக்கருக்கு இருக்கா வேண்டிய குணங்கள் பற்றியும் உள்ளன.
74.ஷ்யாமிளகா
ஓரங்க நாடகம் பாதத்தாடித்தகா எழுதியவர் இவர். அங்கதம், கிண்டல் நிறைந்த நாடகம் காலம் ஐந்தாம் நூற்றாண்டு
***
75.வல்லனா
பாலா வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த இவர் கவிதை எழுதியுள்ளார்; காலம் ஒன்பதாம் நூற்றாண்டு .
***
76.வத்ஸபட்டி
இவருடைய கவிதை மாண்டசோரி கல்வெட்டில் இருக்கிறது காலம் 436 CE.
***
77.வித்யா
இந்தப் பெண் கவிஞரின் பாடல்கள் கவிதைத் தொகுப்பு நூல்களில் மட்டும் காணப்படுகிறது . காலம் எட்டாம் .
****
78.விகடனிதாம்பா
கவிதை இயல் நூல் எழுதிய ராஜசேகரா வாலும் பாராட்டப்பட்ட புலவர். காலம் ஒன்பதாம்
****
79.யசோதர்மன்
கன்னோசியிலிருந்து ஆண்ட எடடாம் மன்னர். அவர் எழுதிய நாடகத்தின் பெயர் ராம அப்யுதயா.
***
80.யோகேஸ்வர
பாலா வம்ச ஆட்சிக்காலத்தில் கவிதை இயற்றிய புலவர். அபினந்தா என்பவர் இவரைப் பாராட்டியதால் இவரது பெருமை நன்கு தெரிகிறது.
****
81.கல்வெட்டுக் கவிதைகள்
மாண்டசோர் கல்வெட்டில்,வத்ஸபட்டியின் நீண்ட கவிதை உள்ளது குமாரகுத்தார் காலத்திய கவிதை. லாட தேச நெசவாளர்களை புகழ்கிறது .
சங்கு நாராயண தூண் ஸ்துபிக் கல்வெட்டு , நேபாளம்
நேபாள நாட்டிலுள்ள இந்த நீண்ட கவிதைக் கல்வெட்டு மஹாராணி ராஜ்யவதியை லெட்சுமி தேவி என்று புகழ்கிறது ;காலம் 464 CE
ஜாவா கல்வெட்டு, INDONESIA ; மேர்பாபு பாறைக் கல்வெட்டு
இது வசந்த காலத்தைப் புகழும் நான்கு வரி பாடல் கல்வெட்டு.
***
82.அண்மைக்காலத்தில் சம்ஸ்க்ருத மழை பொழிந்த சதாசிவ பிரம்மேந்திராள் , நாராயண தீர்த்தர், நாராயண பட்டதிரி போன்ற நூற்றுக் கணக்கான பெரியோர்கள் சம்ஸ்க்ருதம் வாழும் மொழி என்பதைக் காட்டியுள்ளார்கள் ; அவர்களுடைய பாடல்கள் இன்றும் பஜனைகளில் ஒலிக்கின்றன. பாகவத சப்தாஹம், கேரளத்தில் மிகவும் சர்வ சாதாரணம். அங்கு பாகவத முற்றோதல் சம்ஸ்க்ருதத்தில் நடைபெறுகிறது!
சுமார் இரண்டாயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களின் பெயர்களை நாம் அறிகிறோம். நான் சொன்ன சுமார் 80 கவிஞர்கள் ஒரு சாம்பிள்தான் ; உணவு விடுதியில் சாப்பிடப்போனால் ஸ்டார்ட்டர் என்று சில பண்டங்கள் வரும்; நான் சொன்னது ஸ்டார்ட்டர். மெயின் டிஷ் — முழு உணவு — வேண்டுவோர் கட்டாயம் சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டும் அல்லது தமிழில் வந்த மொழிபெயர்ப்புகளை வாங்கிப் பயன் அடையவேண்டும் . இந்துக்கள் ஸம்ஸ்க்ருதத்தைப் பயிலாவிடில் வெள்ளைக்காரன் பிதற்றியது எல்லாம் உண்மை என்றாகிவிடும்!
—subham—
Tags- சாணக்கியன், அர்த்த சாஸ்திரம் ,அமரசிம்மன் ,மூக கவி, கல்வெட்டில் ஸம்ஸ்க்ருதக் கவிதைகள், சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7
20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
துக்காராம்! – 2
ச. நாகராஜன்
இதே போல இன்னொரு சம்பவமும் உண்டு.
ஒரு நாள் ஏழைப் பெண்மணி ஒருத்தி துக்காராமைப் பார்த்து, ‘உடுத்திக் கொள்ள ஒரு துணியும் இல்லை. ஏதாவது ஒரு ஆடையைத் தாருங்கள்” என்று கெஞ்சினாள்.
மனம் இரங்கிய துக்காராம் வீட்டின் கொல்லைப்புறத்தில் உணர்த்தி இருந்த தன் மனைவி கமலாபாயின் புடவையை எடுத்துக் கொண்டு அவளிடம் கொடுத்தார். அவளும் அவரை வாழ்த்தியவாறே அதைப் பெற்றுக் கொண்டாள்.
வீட்டில் உலர்த்தி இருந்த தன் புடவையைக் காணாது திடுக்கிட்டுத் தேடிய கமலாபாய் அதைத் தெருக்கோடியில் சென்று கொண்டிருந்த ஏழைப் பெண் எடுத்துச் செல்வதைப் பார்த்துக் கோபம் கொண்டாள்.
அவளிடம் சென்று கேட்க அவளோ துக்காராம் தான் அதைக் கொடுத்தார் என்றாள்.
இதனால் மிகவும் கோபமுற்ற கமலாபாய் ஒரு அம்மிக் குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி ஓடினாள். ‘இதனால் கோவிலில் உள்ள பண்டரிநாதனின் திருவடிகளை நசுக்கி விட்டுத்தான் அடுத்த வேலை’ என்ற அவளது குமுறலைக் கேட்ட துக்காராம் திடுக்கிட்டார்.
கோவிலில் நுழைந்த கமலாபாயைக் கண்ட கிருஷ்ணன், ருக்மிணியைப் பார்த்து, “ஹே ருக்மிணி! ஏழைப் பெண் வேஷம் போட்டு புடவையை துக்காராமிடமிருந்து வாங்கி வந்தாயே. இதோ துக்காராமின் மனைவி கமலாபாய் ஓடி வருகிறாள். அவளுக்கு ஞானோபதேசம் செய்” என்றார்.
கமலா பாய் ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் கதவுகள் பலத்த மணி ஓசை எழுப்பி தாமாக மூடிக் கொண்டன.
ருக்மிணி தேவி கமலாபாயின் புடவையை உடுத்திக் கொண்டு கமலாபாயின் முன்னே காட்சி அளித்தாள்
தன் கையிலிருந்த குண்டுக்கல் நழுவி விழ கமலாபாய் மனம் தெளிந்து ஞானம் பெற்றாள். வெளியே வந்த போது தன் உடலில் பட்டாடையும் பலவித ஆபரணங்களும் ஜொலிக்கக் கண்டாள்.
கமலாபாயோ,” உங்களை வணங்கி நல்ல வாழ்வு வாழ்ந்தால் மோக்ஷம் தானே அல்லவா வரும். உங்களைப் பணிந்து வாழ்வதே எனக்குப் போதும்” என்று மனம் திருந்தி வாழலானாள்.
துக்காராமின் பக்திக்கு மெச்சிய விட்டலன் அவரிடம் அடிக்கடி வரலானான். விருந்தினனாக வருவான். உருவமற்றவனாக வருவான். கூட இருந்து சாப்பிடவும் செய்வான்.
இந்தச் செய்தி ஊரார் அனைவருக்கும் பரவியது. தேஹு கிராமத்திற்கு அருகில் கிஞ்சன்வாடி என்று அழகிய ஒரு சிறு கிராமம் இருந்தது. அங்கு விநாயகரை பூஜித்து வந்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் துக்காராமுடன் பண்டரிநாதன் உணவு உண்பதைக் கேட்டு நாமும் தான் விநாயகரைப் பூஜிக்கிறோம்; நம்முடன் ஒருநாளும் விநாயகர் கூட இருந்து உண்ணவில்லையே” என்று பொறாமை கொண்டார்.
துக்காராமைச் சந்தித்து இதைப் பற்றி அவர் நேரடியாகவே கேட்க, அன்று துக்காராம் அவருடன் சாப்பிட உட்கார்ந்தார். ஒரு இலை பண்டரிநாதனுக்கும் இன்னொரு இலை விநாயகருக்காக அந்த பக்தரின் அருகிலும் போடப்பட்டன.
கணேச பக்தர் நெடுநேரம் காத்திருந்தும் விநாயகர் வரவில்லை. துக்காராம் அவரிடம், “இப்போதுதான் ஒரு அடியவரின் கப்பலை மூழ்காமல் காக்கச் சென்ற விநாயகர் அந்தப் பணியை முடித்து விட்டு இதோ உள்ளே வருகிறார்” என்றார்.
உடனே விநாயக பக்தர் உள்ளே ஓடிச் சென்று பார்த்தார். விநாயகர் ஈரம் சொட்டச் சொட்ட அங்கே உட்கார்ந்திருந்தார். அவர் உடலிலிருந்து உப்பு நீர் சொட்டிக் கொட்டிருந்தது. ஆனால் அவர் எதையும் எடுத்து உண்ணவில்லை.
அவர் துக்காராமிடம் ஓடி வந்தார். “ஸ்வாமி! நீங்கள் அழைத்தால் தான் அவர் உணவை எடுத்துக் கொள்வார்” என்று கூற துக்காராமும் அங்கு சென்று பாண்டுரங்கனையும் விநாயகரையும் வேண்ட அவர்கள் இலையில் இடப்பட்டவைகளை எடுத்து உண்ண ஆரம்பித்தனர்.
ஆனால் இலையில் இடப்பட்ட உணவுகள் மறைவது மட்டும் அனைவருக்கும் தெரிந்தன. துக்காராம் கண்களுக்கு மட்டும் அவர்கள் தெரிந்தனர்.
பிறப்பால் தாம் உயர்ந்தவர்கள் என்ற கர்வம் அங்கிருந்த அனைவருக்கும் நீங்கிற்று.
அவர்கள் துக்காரராமைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இப்படி இன்னும் ஏராளமான அற்புத சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஶ்ரீ மஹாபக்த விஜயம் நூலில் உள்ள படி இங்கு தரப்படுகிறது.
துக்காராம் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
1937, 1938,1963,1973, 2012 ஆகிய ஆண்டுகளில் வெளி வந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் அமைந்திருந்தன; மக்களின் வரவேற்பையும் பெற்றன.
துக்காராமின் அபங்கங்களின் திரண்ட கருத்துடன் இந்த உரையை முடிக்கிறேன்.
இறைத்தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அதிலிருந்து ஒருபோதும் நழுவாதீர்கள்.
எனது அபங்கங்கள் பக்தியின் இரகசியத்தைக் கொண்டுள்ளது.
75 என்பது லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 75 என்பது ஏழு மற்றும் ஐந்து ஆகியவற்றைக் கொண்டது.
ஏழு என்பது ஐந்து புலன்கள் மற்றும் மனம் மற்றும் புத்தியாகும் ஐந்து என்பது ஐந்து புலன்களாகும். இவற்றை வென்றால் துறவு ஏற்படும். .
சகுணமும் நிர்க்குணமும் ஒன்றே. இந்தப் புரிதல் துக்காராமுக்கு வந்தது.
துக்காராமின் இந்த அபங்கங்களை எவர் ஒருவர் தினமும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சொல்கிறாரோ அவர் அதுவாகவே ஆவர். எவர் ஒருவர் இதை அன்புடனும் பக்தியுடனும் தினமும் சொல்கிறாரோ அவர் ஆன்மீகப் பாதையில் நிலையாய் இருப்பர். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராது. இதைச் சொல்பவர்கள் எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பர்.