Wonders of Batu Caves Skanda Shrine in Malaysia (Post No.14,298)

Written by London Swaminathan

Post No. 14,298

Date uploaded in London –  22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Durga Temple at  Batu Cavea

Forty feet long Durga Statue

Batu Caves near Kuala Lumpur, Capital of Malaysia, is famous for its tallest Muruga statue in the world.

I and my wife visited the shrine on 13th March 2025 on our way back to London from Sydney, Australia.

Though the temple is up above the hill, the golden coloured statue at the foothill is the most attractive one.

One should climb 272 steep steps to have the darshan of Lord Skanda/ Kartikeya/ Murugan.

Following are some interesting titbits about the Caves.

The Hill itself 400 million old geological calcite formation.

There are 272 steep, colourful steps.

Up above the hill is the Murugan shrine. During Thaipusam festival there will be a huge crowd.

The golden coloured Murugan statue at the foothills is 140 feet tall. It is the tallest Skanda statue in the world.

At the foothills, there are several temples including Hanuman, Vishnu, Ganesh, Durga and Ayyappan temples.

On the way to the main shrine smaller shrines are located. No fee is collected to enter the temple.

In addition to the temples, there are paid shows such as Gitopadesam and Ramayana show.

There are beautiful peacock statues and a huge Garuda statue; there is also a huge Hanumans statue near the Anjaneya temple.

Durga temple at the foothills has a beautiful idol; and a devotee has made a forty feet long Durga figure inside the temple.

Malaysia being a Muslim country, it is difficult to find a pure vegetarian restaurant; but inside the temple complex the restaurants serve pure vegetarian food.

One can reach the Batu Caves within half hour from the capital city Kuala Lumpur. Good parking space is provided in the temple complex.

One remarkable thing about the place is the presence of a big number of aggressive monkeys and the pigeons like old Trafalgar Square of London.

I found 50 %  devotees and 50 % tourists, mostly foreigners and local Chinese. We finished the  Darshan of all the temples in three hours. People travelling to Malaysia, must visit this temple.

london swaminathan

london swaminathan in batu caves

Extremists are demanding to cut down part of the mountain saying it creates traffic problems; but Hindus are resisting it.

I took lot of pictures there .

-subham—

Tags- Batu Caves, Murugan shrine, Skanda, monkeys, steep steps, temples  for all Gods, tallest, forty feet long, Durga

பத்து மலை (மலேசியா) முருகனைப் பார்க்க வாருங்கள்! (Post No.14,297)

Written by London Swaminathan

Post No. 14,297

Date uploaded in London –  22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செங்குத்தாக  ஏறும் 272  படிகள் !

140 அடி உயர தங்க நிற முருகன்!!

40 அடி நீள துர்க்கை!!!

BATU CAVES NEAR KUALA LUMPUR IN MALAYSIA

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது சிங்கப்பூரில் இறங்கி முத்துமாரியம்மனைத் தரிசித்தோம். ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்குத் திரும்பிச் செல்லுகையில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தங்கி அங்கு  பத்துமலைக் குகையில் Batu Caves உள்ள முருகனைத் தரிசித்தோம்.

நாங்கள் அங்கே சென்ற தேதி 13-3-2025

அங்கே மலைமீது முருகன் குடிகொண்டுள்ளார். கீழேயோ ஏகப்பட்ட சாமிகள்; கோவில்கள் .

நீங்களும் பத்து மலை முருகனைத் தரிசிக்க சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்

இது இருக்கும் பகுதியை செலாங்க்கூர் என்று அழைப்பார்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தங்க நிற முருகன் பொம்மையின் உயரம் 140  அடி.

குகைகளும் மலையும் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையான இயற்கை அமைப்பு ஆகும் ; இதை கால்சிய உப்பு மலைகள் என்பர் 

நகரின் மையப்பகுதியிலிருந்து காரில் செல்ல அரைமணி  நேரம்  தான் ; நல்ல பார்க்கிங் Parking வசதி இருப்பதால் காரை நிறுத்திவிட்டு மலையில் ஏறலாம். மலேசியா துலுக்க பூமி. ஆனால் கோவில் வளாகத்திலுள்ள உணவுவிடுதிகள் அனைத்தும் நல்ல சைவ– வெஜிட்டேரியன் உணவகங்கள். நாங்கள் முருகனைத் தரிசித்த பின்னர் சாப்பிட்டோம்.

மலைக்குப்போகும் முன்னர், கீழே கணபதியைத் தரிசித்தூப். பின்னர் முருகனைப் பார்க்க மலையில் ஏறினோம். உயரமான படிகள் ; நமது வீடுகளில் பத்து அல்லது இருபது படிகள் இருந்தால் கூட வயது ஆக ஆக நாம் கஷ்டப்படுவோம். பத்து மாலையிலோ சுமார் 272 படிகள். அதுவும் உயர உயர போய்க்கொண்டே இருக்கிறது .ஆங்காங்கு உள்ள மேடையில் தங்கிச் செல்லவேண்டும்.

மேலே செல்லும்போது குரங்குத் தொல்லை மிக அதிகம். என் கைப் பையை குரங்குகள் இரண்டு முறை சோதனை செய்தன நான் விரட்ட வேண்டியதாயிற்று.

நாங்கள் சென்றபோது போட்டோ எடுக்காத ஆளே  இல்லை ; செல்பி எடுக்காத ஆட்கள் இல்லை. பக்தர்கள் பாதி என்றால், வேடிக்கை பார்க்கவந்த டூரிஸ்டுகள் பாதி; அவர்கள் வெளிநாட்டினர் மற்றும் சீனர்கள் ஆவர்.

மலை உச்சிக்குச் சென்ற பின்னர் முருகன் , சிறிய கோவிலில் உள்ளார். படாடோபம், பந்தா எதுவுமில்லை. எனக்கு எனது மதுரை அருகிலுள்ள பழமுதிர்ச் சோலையை நினைவுபடுத்தியது . மலையின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மொட்டை மலை. அதிகம் செடி கொடிகள் இல்லை கீழே இறங்குவதும் கடினம்தான் இதற்குக் காரணம் செங்குத்தாக இறங்கும் படிகள்

தைப்பூசத் திருநாளின்போது போனால் கோவிலை நெருங்க முடியாது .

கீழே வந்தவுடன் பெருமாள் கோவில், அனுமார் கோவில், துர்கா கோவில்களைத் தரிசித்தோம். எந்தக் கோவிலுக்கும் நுழைவுக் கட்டணம் கிடையாது .

அனுமார் கோவில் அருகில் கட்டணம் கொடுத்துப் பார்க்கக்கூடிய ராமாயணக் காட்சி சாலை, கீதோபதேசக் காட்சிகள் உள்ளன. எங்களுக்கு நேரம் இல்லாததால் பார்க்கவில்லை  இது தவிர ஐயப்பன் கோவிலும் உளதாம் ஆண்டுதோறும் அய்யப்பன் சீசனில் இரு முடி கட்டுவது அங்குதான்.

****

நாற்பது அடி துர்க்கை

துர்க்கை கோவிலில் தமிழ் நாட்டிலுள்ள கோவில் போல அழகான துர்க்கை விக்கிரகம். எல்லா இடங்களிலும் இந்திய அர்ச்சகர்கள்தான் அந்தக் கோவிலில் சந்நிதிக்கு வெளியே ஒரு அன்பர் நாற்பது அடி நீளமுள்ள துர்க்கை பொம்மையை வைத்துள்ளார் .

பக்தர் கூட்டத்துக்கும், குரங்குக்கு கூட்டத்துக்கும் போட்டோ எடுக்கும் டூரிஸ்ட் கூட்டத்துக்கும் குறைவில்லாத இடம்! கீழே கூண்டுகளில் பறவைகள் வைக்கப்பட்டுள்ளன. மயில்களையும் வைத்துள்ளார்கள் லண்டன் ட்ரபால்கர் ஸ்கொயர் போல ஏராளமான புறாக்கள் வேறு உள்ளன. மயில்கள் அகவும் ஒலி யையும் கேட்கலாம்

பத்து மலை என்றவுடன் தங்க நிறத்தில் நிற்கும் பிரம்மாண்டமான முருகன் சிலைதான் நம் மனக் கண் முன் வரும். அது வெறும் அலங்கார உருவமே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ஆனால் மலை மீதுள்ள முருகனோ உருவத்தில் சிறியவர். அவரை வணங்கத்தான் இத்தனை கூட்டம்!

பல காரணங்களை சொல்லி பத்துமலையை மட்டம் தட்ட, அதாவது உயரத்தைக் குறைக்,க இந்து விரோத சக்திகள் குரல் கொடுத்தன . ஆயினும் இது வரை முருக பக்தர்கள் கை ஓங்கியே இருக்கிறது எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று சொல்வதற்கில்லை . விரைவில் தரிசித்துவிடுங்கள்.

மலைக்குச் செல்லும் வழியில் உள்ள மயில் பொம்மைகள் , பெருமாள் கோவில் மலைக்கு அருகில் உள்ள பெரிய கருடன் பொம்மை, மிக உயரமான அனுமார் சிலை ஆகியன பார்த்து ரசிக்க வேண்டியவை .

–subham—

Tags- பத்து மலை,  மலேசியா, முருகன் ,  பார்க்க வாருங்கள்,

செங்குத்தாக  ஏறும் 272  படிகள் , 140 அடி உயர தங்க நிற முருகன்,

40 அடி நீள துர்க்கை, குகைக் கோவில்

சித்தராஜ ஜெயசிம்மன் நீக்கிய யாத்ரீகர் வரி! (Post No.14,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,296

Date uploaded in London – –22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

3-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

 இந்தியப் பண்பாடு : சுவாமியை தரிசிக்க கட்டணமாவேண்டாம் என்ற மன்னனின் அரும் செயல்! 

சித்தராஜ ஜெயசிம்மன் நீக்கிய யாத்ரீகர் வரி! 

ச. நாகராஜன்

குஜராத்தை ஆண்ட மன்னர்களுள் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தவன் சித்தராஜ ஜெயசிம்மன்.

மூன்று வயதிலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

எட்டு வயதில் தந்தை கர்ணா இறக்கவே இவன் மன்னனான்.

‘திவ்யாஸ்ரய காவ்யா’ என்னும் நூல் இவனை வெகுவாகப் புகழ்ந்து இவனது அரும் செயல்களைப் பட்டியலிடுகிறது.

இதே காலத்தில் இங்கு வந்த இஸ்லாமிய யாத்ரீகர்களான அல் – இத்ரிஸி மற்றும் முகம்மது உஃபி ஆகியோர் முறையே தங்களது நூல்களான நுஜாத் – அல் – முஷ்டக் மற்றும் ஜமே – அல்- ஹிகயாதா என்ற நூல்களில் இவனைப் பற்றி விவரிக்கின்றனர். இவனது அரசவைக்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்.

கி.பி, 1094 முதல் கி.பி. 1143 முடிய இவன் ஆண்ட காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது.

சித்தராஜ என்று இவனுக்குப் பெயர் ஏற்பட்ட காரணம் இவன் பல வித அரும் சித்திகளைக் கொண்டிருந்தான் என்பதால் தான்.

இன்னொரு காரணம் சித்தர்கள் இருந்த பூமியை ஆண்ட அரசன் என்பதாலும் இவனுக்கு சித்தராஜன் என்ற பெயர் வழங்கப்பட்டது.

இவன் உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன் போலத் தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான பண்புகளை வளர்த்துக் கொண்டான்.

இன்றும் கூட குஜராத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் நாட்டுப்புறப் பாடல்களில் இவனது அரும் செயல்களைப் பாடி வருகின்றனர்.

இவனுக்கு அமைச்சராக இருந்த அறிஞர் சம்பத்காரா என்பவர் இவனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் தெற்கிலிருந்து பஹுலோடா என்ற தலத்திற்கு வரும் யாத்ரீகர்களிடமிருந்து யாத்திரை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

ஒருமுறை சோமநாதபுரத்திற்கு தல யாத்திரை செய்ய ஜெயசிம்மனின்  தாயார் மயநல்லா  (குஜராத்தில் அவர் மினலா தேவி என்று அழைக்கப்பட்டார்) கிளம்பினார். அந்தக் கால வழக்கப்படி சேனையின் முக்கியமான பகுதி அவருடன் கிளம்பியது.

மயநல்லா பஹுலோடாவை நெருங்கியபோது எதிரில் ஏராளமான யாத்ரீகர்கள் வருவதைப் பார்த்து அவர்களை நோக்கி, “யாத்திரை நன்றாக நடந்ததா?” என்று அன்புடன் விசாரித்தார்.

அவர்களோ, “தாயே! எங்களுக்கு அங்கு செல்ல வரி விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களோ ஏழைகள். தெய்வ தரிசனத்திற்காக வந்தோம். ஆனால் வரி கொடுக்கப் பணமில்லை. ஆகவே தரிசனம் செய்யாமல் திரும்புகிறோம்” என்று வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினர்.

இதைக் கேட்ட மஹாராணி திடுக்கிட்டார்.

“நீ”ங்களே பார்க்கமுடியாத போது நான் எதற்கு அங்கு போக வேண்டும்? நானும் உங்களுடன் திரும்புகிறேன்” என்றார் மஹாராணி.

செய்தி ராஜா ஜெயசிம்மனுக்குப் பறந்தது. உடனே ஓடோடி வந்த ஜெயசிம்மன் இந்தக் கணமே யாத்திரை வரி நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டான். தாயாரின் மீது அளவற்ற பக்தியும் பாசமும் கொண்ட அவனது உத்தரவால் ராணியார் மகிழ்ந்தார். மக்களின் உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லாமல் போயிற்று.

இந்தக் கால வழக்கப்படி 72 லட்சம் நாணயங்கள் மதிப்பாகும் அந்த வரித் தொகை!

மக்களின் மீது அவன் செலுத்திய அதே அன்பை மக்களும் அவன் பால் திருப்பிச் செலுத்தினர்.

அவனைப் பற்றிய சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. அவை விக்ரமாதித்த மஹாராஜாவின் கதை போலவே இருக்கும். அவற்றில் வேதாளம் போன்ற பேய், பிசாசு, ராட்சஸன் ஆகிய எல்லாமும் உண்டு! ஆனால் அனைத்தும் உண்மையாக நடந்தவையே!

***

GNANAMAYAM 23-3-2025 BROADCAST PROGRAMME


GNANAMAYAM 23-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

23-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Jaipur Kale Hanuman Temple

***

SPECIAL TALK ON VAISHNAVITE  SAINTS/ ALVARS

By Dr Sri Lakshmi from Singapore

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு 

ஜெய்ப்பூர் ஹனுமான் கோவில்  

*****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

ஆழ்வார்கள் பற்றிய தொடர் சொற்பொழிவு

வழங்குபவர் – சிங்கப்பூர் டாக்டர் ஸ்ரீ லட்சுமி

 ***

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,23-3-2025, BROADCAST PROGRAMME

கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post No.14,295)

London Swaminathan in Batu Caves, Malaysia 

Written by London Swaminathan

Post No. 14,295

Date uploaded –  21 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஒரு சுவையான சம்பவத்துடன் மீண்டும் பிளாக் படைப்புகளைத் துவங்குகிறேன்.

கடவுள் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டேன் . அவர் நம்முடைய  பாஸ்போர்ட் வைக்குமிடத்தில் இருக்கிறார்! மார்ச் 12- ஆம் தேதி ஆஸ்திரேலியாயாவில் மூன்று மாத சுக வாசத்தை முடித்துக்கொண்டு சிட்னியிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் தங்கினேன். அப்போது நானும் என் மனைவியும் பத்துமலை என்று அழைக்கப்படும் பாட்டு கேவ்ஸ்  BATU CAVES குகைக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம்  . நான் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் என் மனைவி தங்க வர்ண முருகப்பெருமான் உருவம் படைத்த எட்டு கீ செயின்களை KEY CHAINS வாங்கினாள் . அதற்குப்பின்னர் காரடையான் நோன்பினை அனுஷ்டிக்க இந்தியாவுக்குச்   சென்று எங்கள் அண்ணன் வீட்டில் தங்கினோம். மறுநாள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள குலதெய்வம் வைத்தீச்வரனைத் தரிசித்து விட்டு அங்கு அக்ஷர்தாம் விடுதியில் தங்கினோம்.

சென்ற முறை குலதெய்வ தரிசனத்துக்குச் சென்ற போது என் மனைவியை எச்சரித்து இருந்தேன்; பை  த்தியம் போல சாமி படங்களை வாங்காதே; வீட்டில் உள்ள சாமி படங்களே போதும் என்று. அர்ச்சனைகள் முடிந்து குருக்களுக்குத் தட்சிணை கொடுக்கும்போது அவர் சொன்ன வாக்கியம் — நீங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வைத்திய நாதசுவாமி படத்தைக் கொடுத்தார் . என் உடலில் புல்லரிப்பு ஏற்பட அதை வாங்கிக் கொண்டேன் . இதைத்தான் அசரீரி என்று சொல்லுகிறோம்.  இந்த முறை  சென்றபோது பட்டருக்குத் தட்சிணை கொடுக்கும்போது கோவில் செக்யூரிட்டி என் சட்டைப் பையில் வைத்தியநாத சுவாமி படத்துடன் உள்ள விபூதி குங்குமப் பொட்டலத்தைச் சொருகினார் . இதைத் தான் கும்பிடப்போனத் தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்லுகிறோம்.

****

சுவாமி மலை சுவாமிநாதனும் லண்டன் சுவாமிநாதனும்

 எனக்கு என் அப்பாவும் அம்மாவும் சுவாமிநாதன் என்று பெயர்வைத்ததற்குக் காரணம் சுவாமிமலை கோவில் உறை கடவுள்தான் . வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் ஸ்ரீவத்சம் விடுதியில் தங்கி அங்கிருந்த நண்பர் சீனிவாசனையும் காரில் ஏற்றிக்கொண்டு சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை  முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன். கும்பேஸ்வரர்  கோவிலில் சிவன் மற்றும் அம்பாள்  சந்நிதிகளில் மஹா தீவாராதனை நடந்து கொண்டிருந்தது . அப்போது என் பாஸ்போர்ட் பையை யாரோ பிக் பாக்கெட் அடித்துவிட்டனர். அது  எனக்குத் தெரியாது  நாங்கள் எங்கு போனாலும் விடுதியில் தங்கவும்   வெளிநாட்டுப் பணம் மாற்றவும் பாஸ்போர்ட்டு தேவை . ஆகையால் நான் எடுத்துச் செல்வேன்.

மறுநாள் முரளீதர சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு ஸ்ரீபெரும்புதூர் செல்லும்  வழியிலுள்ள மஹாரண்யம் சென்று அவரைத் தரிசித்து சீடரிடம் நன்கொடையும் கொடுத்தேன். அப்போது அவர் சீடர் உங்கள் முக வரியைக்  கொடுங்கள் ரசீதும் அனுப்புகிறோம் என்றார் . பையில் பாஸ்போர்ட் பையில் எப்போதும் என் முகவரி ஸ்டிக்கர்கள் இருக்கும் அதைத்தேடினேன். பாஸ்போர்ட் பை இல்லை.பகீர் என்றது .காரில் சிட்டாக பறந்து சென்னைக்கு வந்து என்னுடைய மூன்று பெட்டிகளையும் மும்மூன்றுமுறை புரட்டி எடுத்தேன் பாஸ்போர்ட் இல்லை.

சரி; மறுநாள் ப்லைட்டில்  FLIGHT என் மனைவியை மட்டும் லண்டனுக்கு அனுப்பிவிட்டு சென்னையில் பிரிட்டிஷ் ஹைகமிஷனுக்குக் காவடி எடுத்து புதிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட் அல்லது டிராவல் பேப்பர்ஸ் TRAVEL DOCUMENTS வாங்குவோம் என்ற பதற்றத்துடன் இருந்தேன்  . அப்போது என் ஐ போனில் பிளாஷ் மெஸேஜ் மின்னியது !என் அண்ணன் நாகராஜன் உன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா ? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார் . உடனே பெங்களூருக்கு மெஸேஜ்கள் பறந்தன. என்னுடை 135 புஸ்தகங்களை வெளியிட்ட புஸ்தக . காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸ்  என் அண்ணனைக் கூப்பிவிட்டு உங்கள் தம்பி பாஸ்போர்ட் கும்பகோணம் கோவில் குருக்களிடம் இருக்கிறது என்று சொன்னார் .அவரைத் தொடர்புகொண்டு கும்பகோணம்  குருக்களின் முகவரியை வாங்கினேன் . அவரைத் தொடர்புகொண்டேன்.

நான் கோவிலுக்குச் சென்ற நாளில் இரவில் அவர் அம்பாள் சந்நிதியில் பூஜை செய்திருக்கிறார்,  இரவில் பூக்களை எல்லாம் அகற்றிச் சுத்தம் செய்கையில் பாஸ்போர்ட் பை கிடைத்துள்ளது அதை எடுத்த பிக்பாக்கெட் பேர்வழி அதில் பணம் இல்லை ஆனால் பட்டு கேவ்ஸ் முருகன் கீ செயின்களும் பாஸ்போர்ட் , ஓ சி ஐ ஆகியன  மட்டும் இருக்கக்கண்டு அதைச் சந்நிதி பூக்குவியலில் போட்டுச் சென்றுவிட்டான்!

Batu Caves Murugan on Key Chain

அதிலுள்ள முருகன் படம் அவனுக்குப் பயத்தை    உண்டாக்கி  க்கியிருக்கவேண்டும். ஏனெனில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சுவாமிமலை  முருகனையும் அதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் பத்துமலை முருகனையும் தரிசித்துள்ளேன்.

குருக்களின் மனைவி மிகவும் புத்திசாலி . அவர் நான் மதுரைக்காரன் என்று  ஓ சி ஐ யில் இருப்பதைப்பார்த்து மதுரையிலுள்ள நபர்களை கேட்டிருக்கிறார்[  அவருக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் கூகுள் செய்த்தபோது நான் எழுதிய புஸ்தகங்கள் அனைத்தும் பளிச்சிட்டன  ; உடனே அதை வெளியிட்ட புஸ்தக. காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸை த்  தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் ; அவர் உடனே என் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லவே முன்னர் சொன்ன  மெஸேஜ் வந்தது

மறுநாள் லண்டனுக்கு பயணம் செய்ய இருக்கும் தருணத்தில் இது எல்லாம் நடந்தது; ராஜேஷ் தேவதாசுக்குப் பல முறை நன்றி சொல்லிவிட்டு உடனே குருக்களுக்குப் போன் செய்து இரவு பதினோரு மணிக்கு முன்னதாக தக்க ஐ.டி. யுடன் வந்து பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக்கொள்கிறேன் என்று    சொல்லி விட்டு  மாலை ஐந்து மணிக்கு  நானும் என்னனுடைய அண்ணன் மகன் சங்கரனும் சென்னையில் டாக்சியில் ஏறினோம். இரவு 11 மணிக்கு பாஸ்போர்ட்டினைப் பெற்றுக்கொண்டு பனத்தை அன்புப்பரிஸாகக் கொடுத்தோம் ;பணத்தை தொடக்கூட குருக்களும் அவரது மனைவியும் மறுத்துவிட்டனர். காப்பி முதலியவற்றைக் கொடுக்க தயாரானபோது நாங்கள்   இரவில்  தொந்தரவு செய்யக்கூடாது என்று  வேண்டாம் என்றோம்] நாங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் கோவில் கும்பிபாபிஷேகத்துக்கு பணம் அனுப்புங்கள் அதுவும் இப்போது வேண்டாம் ; பத்திரிக்கைவரும்போது கும்பேஸ்வரர்  கோவிலுக்குச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் .

நல்ல மனிதர்கள் உலகெங்கிலும் உள்ளனர் ; வாழ்க அவரது குடும்பம் 

மறுநாள் காலை ஐந்து மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம்; இரவில் ட்ரைவர் தூங்கிவிடக்கூடாதே என்ற பயத்தில் அலற அலற  சினிமாப்பாட்டுக்களை வைக்கச் சொல்லி ஆங்காங்கே அவரை TEA  டி சாப்பிடச் சொல்லி மறுநாள் காலை 5 மணிக்கு சென்னைக்கு வந்தோம் 12 மணி நேர இடைவிடாப்பயணம். அது பாஸ்போர்ட் பயணம்!

****

இன்னும் ஒரு அதிசயம்

பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பையில் இருந்த பத்துமலை முருகன் படம் என்னைக் காப்பாற்றியது ஒருபுறம் இருக்க, நாங்கள் வந்து இறங்கிய மறுநாளைக்கு ஹீத்ரோ விமான நிலைய தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்காக FLIGHTகள்/ விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன, ரத்தாகின; நாங்கள் முதல்  நாளே லண்டனுக்கு வந்ததால் தப்பித்தோம்..

சுவாமி மலை முருகனுக்கு அரோஹரா

பத்துமலை முருகனுக்கு அரோஹரா

–சுபம்—

Tags-  பாஸ்போர்ட், முருகன் கீ செயின், பிக் பாக்கெட், சுவாமி மலை, பத்துமலை

நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன? (Post No.14,294)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,294

Date uploaded in London– –21 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் மார்ச் 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன?

ச. நாகராஜன்

நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையாகவும் இருக்கிறது.

ஆனால் நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

2017ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா ஆரோக்கியத்திற்காக செலவழித்தது 306,160,477,903,740 ரூபாய்கள் ஆகும்.

ஆனாலும் கூட அங்கு ஆயுள் எல்லை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருந்தது; இருக்கிறது!

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (World Health Organisation WHO) இப்படி விவரிக்கிறது.

Health is a state of complete physical, mental, and social well-being and not merely the absence of disease or infirmity

“நல்ல ஆரோக்கியம் என்பது வியாதிகள் இல்லாத நிலை மட்டுமல்ல. அது உடல் ஆரோக்கியம்மன ஆரோக்கியம்சமூகத்தில் நலமுடன் வாழ்வது என்பது அனைத்தையும் முழுவதுமாகக் கொண்ட நிலையாகும்.”

அது மேலும் கூறுகிறது இப்படி:

A resource for everyday life, not the objective of living. Health is a positive concept emphasizing social and personal resources, as well as physical capacities.”

அன்றாட வாழ்க்கைக்கான ஆதாரமே நல்ல ஆரோக்கியம் தான். வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இல்லை அது.

சமுக மற்றும் தனிப்பட்ட நபருக்கான ஆதாரங்கள் மற்றும் உடல்தகுதியின் திறன்களையும் வலியுறுத்தும் ஒரு ஆக்கபூர்வமான கொள்கை அது.

இப்படி உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.

உடல் ஆரோக்கியம்

உடலில் எந்த வியாதியும் இல்லாமல் அனைத்து இயக்கங்களையும் செய்யும் உடல் வலிமையையே உடல் ஆரோக்கியம் குறிக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் விபத்துக்கள் ஏற்படாத பாதுகாப்புகள்.

தாம்பத்ய உறவில் எச்சரிக்கையுடன் இருப்பது.

நல்ல உணவுத்திட்டத்தை மேற்கொள்வது.

நல்ல உடல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பது.

மது, சிகரட், போதைப் பொருள்களைத் தவிர்ப்பது.

தடுப்பூசிகளைத் தேவைக்குத் தகப் போட்டுக் கொள்வது.

மேற்கண்டவை நல்ல உடல் ஆரோக்கியம் பெற மேற்கொள்ளவேண்டிய செயல்களாகும்.

மன ஆரோக்கியம்

உணர்வு பூர்வமாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்

(emotional, social and psycological well-being) உள்ள நல்ல ஆரோக்கியமான நிலையே மன ஆரோக்கியம் ஆகும்.

கவலை, மனத்தளர்ச்சி, மனச்சோர்வு இல்லாத நிலை மட்டுமல்ல. மன ஆரோக்கியம் என்பது.

வாழ்க்கையை நன்கு அனுபவித்தல்.

கஷ்டமான அனுபவத்தையும் துன்பங்களையும் எதிர்கொண்டு ஏற்று வென்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல்.

குடும்பம், நிதி நிலைமை இவற்றில் ஒரு சமச்சீர்த்தன்மையை உருவாக்கி நடந்து கொள்ளல்.

எப்போதும் பாதுகாப்பாகவும் அனைத்து விதத்திலும் பத்திரமாகவும் இருத்தல்.

தன்னால் முடிந்த அளவு திறன்களைப் பயன்படுத்தி மென்மேலும் உயருதல்.

இது தான் நல்ல மன ஆரோக்கியத்தின் அடையாளங்கள்.

மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றுகொன்று நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி நல்ல ஆரோக்கியத்தை எப்படிப் பெறுவது?

மரபணு சார்ந்த விஷயங்கள்

மனிதன் பிறக்கும் போது பல மரபணுக்களால் உருவாக்கப்படுகிறான். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலை சார்ந்த விஷயங்கள்

நல்ல சுற்றுப்புறச் சூழலானாது நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

காற்று மாசு, நீர் மாசு, மோசமான இடத்தில் வாழ்வது, உஷ்ணநிலை அதிகமாக இருக்கும் இடத்தில் வாழ்வது போன்றவை வியாதிகளையும் மன அமைதியின்மையையும் தரும்.

ஆகவே இவற்றில் வாழ நேர்ந்தால் உடனடியாக தக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

எங்கே நீங்கள் வாழ்கிறீர்கள்?

சுற்றுப்புறச் சூழல் எப்படி உள்ளது?

மரபணு எப்படி உள்ளது?

தனக்குத் தரப்பட்ட கல்வியின் தரம் என்ன?

வேலை வாய்ப்பும் உரிய சம்பளமும் எவ்வளவு?

இவற்றைச் சிந்தித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

சமூக பொருளாதார சூழ்நிலை

உடல் தகுதியிலான சூழ்நிலை

தனிமனிதனின் குணாதிசயம் மற்றும் நடத்தை

இவை நல்ல முறையில் மேம்பட மேம்பட உடல் ஆரோக்கியமும்  மன ஆரோக்கியமும் மேம்படும்.

ஓரிடத்தில் ஓய்வான நிலையில் உட்கார்ந்து ,மேலே உள்ள விஷயங்களை நன்கு சிந்திது ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒவ்வொருவருடைய வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

நூறு ஆண்டுகள் வாழ்வோமாக!

நோய் நொடியில்லாமல் வாழ்வோமாக!!

***

HOLIDAY DECLARED UNTIL 21-3-2025

HOLIDAY DECLARED UNTIL 21-3-2025

மஹா கவி பாரதியாரின் விடுதலை விடுதலை விடுதலை  என்ற பாட்டு ‘மெட்’டில் பாடவும்.

விடுமுறை விடுமுறை விடுமுறை !

ஆண்களோடு பெண்களுக்கும்  சிறுவர்க்கும் விடுமுறை !

லண்டன் சுவாமிநாதன் ‘பிளாக்’குகள்

இரண்டுக்கும் விடுமுறை !

விடுமுறை விடுமுறை விடுமுறை !

****

பேசு  புக்கு, ஞானமயம் பிராட்காஸ்ட்டுக்கும் விடுமுறை

நாங்கள் எழுதும் விஷயங்களுக்கு இரண்டு வார விடுமுறை

இருபத்தி ஒன்றாம் தேதி  சந்திக்கும் வரை விடுமுறை

விடுமுறை விடுமுறை விடுமுறை !

*****

புதிய நாடு, புதிய ஊர்கள் பார்க்கும் வரை விடுமுறை

லண்டன்மா  நகருக்குத் திரும்பும்வரை விடுமுறை

ஆஸ்திரேலியாவின் சிட்னி மா நகருக்கு  “விடுதலை”

GOOD BYE TO SYDNEY

விடுமுறை விடுமுறை விடுமுறை !

ENJOY UR HOLIDAYS UNTIL 21-3-2025

–SUBHAM–

டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293)

Written by London Swaminathan

Post No. 14,293

Date uploaded in Sydney, Australia –  12 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

  குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 4

 குமரேச சதகம்

  11. இப்படிப்பட்டவர் இவர்

ராயநெறி தவறாமல் உலகபரி பாலனம்

     நடத்துபவ னேயரசனாம்

ராசயோ சனைதெரிந் துறுதியா கியசெய்தி

     நவிலுமவ னேமந்திரி,

நேயமுட னேதன் சரீரத்தை எண்ணாத

     நிர்வாகி யேசூரனாம்,

நிலைபெறு மிலக்கண மிலக்கிய மறிந்துசொலும்

     நிபுணகவி யேகவிஞனாம்

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்

     அறியும்மதி யோன்வைத்தியன்,

அகம்இன்றி மெய்யுணர்ந் தைம்புல னொழித்துவிட்

     டவனேமெய் ஞானியெனலாம்

மாயவர் சகோதரி மனோன்மணிக் கன்பான

     வரபுத்ர வடிவேலவா

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரே சனே.

திருமாலின் தங்கையான உமையம்மைக்கு அன்புடைய நல்ல மகனே!,

வடிவேலேந்திய கையனே!, மயிலேறி……..குமரேசனே!, ராய

 அரச நெறி மாறாமல் உலகைக் காப்பாற்றுவோனே மன்னவ னாவான்,

அரசியல்சூழ்ச்சியறிந்து நன்மைதரும் பொருளைக் கூறுவோனே அமைச்சன்,

தன் உடல்மேல் பற்று வைக்காத தலைவனே வீரனாவான்,

நிலையான இலக்கண இலக்கிய முறையறிந்து கூறும் வல்லமையுள்ள கவியே கவியெனத் தக்கவன், – நன்மையைத் தரும் மருத்துவ நூல்களையும்

எழுவகைத் தாதுக்களின் நிலையையும் அறிந்த (அறிவால்) முதியவனே மருத்துவன்,

நானெனும் செருக்கின்றி உண்மையறிந்து ஐந்து

பொறிகளையும் அடக்கிவிட்டவனே உண்மை யறிஞன் எனப்படுவான்.

****

இந்துக்களின் கணக்கில் மாவீரன் யார்?

 மஹா வீரன் யார்? இந்தியாவில் இருவருக்குத்தான் மஹாவீர் என்று பெயர். ஒருவன் அநுமன். மற்றொருவர் சமண தீர்தங்கரர் மஹாவீரர்.

 யார் வீரன்? என்று மேலை நாட்டில் கேள்வி கேட்டால் ஏகே 47 துப்பாக்கியால் நூற்றுக் கணக்கான பெயர்களைச் சுட்டுத் தள்ளியோரின் பெயரைக் கூறுவார்கள். திரைப்படம் பார்க்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழ் இந்தி திரைப்பட கதாநாயகன் ,வில்லன்கள் பெயர்களைக் கூறுவார்கள். படித்திருந்து ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இண்டியானா ஜோன்ஸ் நினைவுக்கு வரலாம். பயங்கரவாதிகள் என்று ஒரு நாடு முத்திரை குத்துவோரையும் அவருடைய கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் மாவீரன் என்று கொண்டாடுவார்கள். ஆனால் வியப்பிலும் வியப்பான  கொள்கை– இந்தியக் கொள்கை புலன்களை வென்றவனே மஹாவீரன்.

 ஒன்றாகக் காண்பதே காட்சி, புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்

   என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவனும்” பிறன் மனை நோக்காத பேராண்மை” என்று பெரும் வீரத்தைப் புகழ்கிறான்.

எப்படி துளசிதாசரின் ஹனுமான் சாலீஸா இந்தியர்களைத் தட்டி எழுப்புகிறதோ அதே போல மஹவீரரின் சிலையும் கொள்கைகளும் சிரவணபெளஹோலாவில் உள்ள பாஹுபலியின் சிலையும் நம்மை எல்லாம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு” ஆகியவற்றை அந்தச் சிலைகளில் காண முடிகிறது. புலன்களை வென்றதாலேயே மஹாவீரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு கொள்கை. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது.

“கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எரியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளறினும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை என்று கொல்லிப் பாவையை நற்றிணைப் புலவர் பரணர் வருணித்தது மஹாவீரர், பாஹுபலி போன்ற புனிதர்களுக்கும் பொருந்தும்.

அனுமன் ஜயந்தியும் மஹாவீர் ஜயந்தியும் அருகருகே ஏப்ரல் மாதத்தில் வருவதால் இரண்டையும் இணைத்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி, 

அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி 

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் 

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான். 

xxxxx

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான்தன் வீரமே வீரம்-என்றானும்

சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர்

ஏவாமல் உண்பதே ஊண்—-ஔவையார்

“அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும்அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்” என்பது பொருள்.

அமைச்கர்   பற்றி வள்ளுவர் கூறிய கருத்தையும் இங்கே காணலாம் .

****

முக்காலமும் உணர்ந்தோனே கவி என்று வேத நூல்கள் விளம்புகின்றன ; ரிக்வேத உஷனஸ் கவி இதற்கு முன்னுதாரணமானவர் ; பகவத் கீதையில் கிருஷ்ணனும் கவிகளுள் தான் உஷனஸ் என்று பகர்கிறார்

*****

மனு என்ன சொல்கிறார்? 

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு). 

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)

–SUBHAM—

TAGS– குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 4, டாக்டர் , புலவர் , அறிஞன் யார்

வில்லிப்புத்தூரார்! – 2 (Post.14,292)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,292

Date uploaded in Sydney, Australia – –12 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

வில்லிப்புத்தூரார்! – 2

வில்லிப்புத்தூரார் வைணவராகப் பிறந்தாலும் சமயப் பொதுமைக் கருத்தைக் கொண்டவர்.

வில்லியும் சிவனும் என்ற தனது ஆய்வு நூலில் வில்லிப்புத்தூரார் 270 பாடல்களில் சிவனைப் பற்றிக் கூறுவதைத் தொகுத்துத் தந்துள்ளார் திரு ராய.சொக்கலிங்கம் அவர்கள். இவற்றில் 199 பாடல்கள் கவிக்கூற்றாக அமைபவை. 71 பாடல்களில் அர்ஜுனன் முதலிய பாத்திரங்கள் வாயிலாக சிவபிரானைக் குறிப்பிடுகிறார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு பாடலை மட்டும் இங்குக் காண்போம்:

கூற்றினை உதைத்த பாதமும், உடுத்த குஞ்சரத்து உரிவையும், அணிந்த

நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில், அனல் உமிழ் விழியும்,

ஆற்று அறல் பரந்த கொன்றைவார் சடையும், அல்லதை யாவையும் கருதான்:

மாற்றம் ஒன்று இன்றி நின்றனன், வரைபோல் வச்சுராயுதன் திரு மகனும்.

இந்திரன் மகனான அர்ஜுனன் சிவனைத் தொழுததை இப்படி வில்லிப்புத்தூரார் குறிப்பிடுகிறார்.

வில்லிப்புத்தூரார் வியாஸ பாரதத்தை முதல் நூலாகக் கொண்ட போதிலும் கூட பாத்திரப்படைப்பு, உவமைகள், அணி நயம், சந்த நயம், பொருள் நயம் ஆகியவற்றால் தனித்துவம் பெறுகிறார்.

அறுசீர் ஆசிரிய விருத்தங்களில் மட்டும் அவர் பத்து சந்த வேறுபாடுகளைக் காண்பிக்கிறார்.

சந்தத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இது:

மதித்துமதங்களேழினு மெய் வனப்புறு கொண்டல் மானுவன

கதித்து நெஉங்கை வீசியுடுகணத்தை முகந்து வாருவன

மிதித்துரகன்பருமணிகள் விழித்து வெகுண்டு வாவுவன

சொத்திருகண்களாலுமெரி கும்ப வாரணம்

இப்படி போர்க்களத்தில் யானைகள் போர் செய்யும் காட்சியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் வில்லிப்புத்தூரார்.

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம் தர வேண்டும்.

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம் தர வேண்டும்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம் தருதல் வேண்டும்.

இந்த கவிதை இலக்கணத்தை நன்கு அறிந்த வில்லிப்புத்துரார் தனது படைப்பால் நம்மை பிரமிக்க வைக்கிறார்..

ஒரே பாடலில் பல உவமைகளை அடுக்குவது இவரது தனிச் சிறப்பு! வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு சிறக்கும்!

மனிதப் பண்புகளைவிளக்குவதில் தனிச் சிறப்பைக் கொண்டதாக அமைகிறது வில்லி பாரதம்,

அத்தினாபுரம் சென்ற பாண்டவர் தனது பெரிய தாயார் ஆன காந்தாரியை வெறுப்பின்றி வணங்குகின்றனர்.

பீஷ்மர் தன் தந்தைக்காகப் பெரும் தியாகத்தைச் செய்து மணம் முடிக்காமல் இருக்கிறார்.

பாண்டவர் ஐவரில் மூத்தவரான தர்மரை இதர நால்வரும் வணங்கிப் போற்றுகின்றனர்.

அனைவரும் மாபெரும் அவதாரமான கிருஷ்ணரைப் போற்றித் துதிக்கின்றனர்.

பாரதப் போர் வராமல் தடுப்பது எப்படி என்பதை கண்ணபிரான் சகாதேவனைத் தனியாக அழைத்துச் என்று கேட்கிறான். அதற்கு சகாதேவன் பதில்  கூறும் இடம் மிகவும் அருமையான ஒரு இடம்!

நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா

கோபாலா போரேறே கோவிந்தா நீயன்றி மாபாரதம் அகற்றமற்றார்கொல் வல்லார

என்று உன்னைத் தவிர வேறு யார் தான் போரை நிறுத்த முடியும் என்று ஆரம்பித்து போரை நிறுத்த ஒரு வழியையும் கூறுகிறான் இப்படி:

பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்                                                காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி                                     நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான்  கட்டுவனேல்                       வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான்

கர்ணனுக்கு நாட்டைத் தந்து விட வேண்டும். அதற்கு முன் அர்ஜுனனைக் கொல்ல வேண்டும். திரௌபதியின் குழலைக் களைய வேண்டும். உன்னைக் கட்டிப்போட வேண்டும். இப்படிச் செய்தால் போர் வராமல் காக்கலாம் என்றான் சகாதேவன்.

இதைக் கேட்ட கண்ணன் எங்கே என்னைக் கட்டு என்று கூறி பதினாறாயிரம் வடிவம் கொண்டான்.  ஆனால் சகாதேவன் மூலமாம் தோற்றம் உணர்ந்து எவ்வுலகும் தா ய அடி இணையினைக் கருத்தினால் பிணித்தான் அதாவது மூலத் தோற்றத்தை தியானித்து அவனது இரு பாதங்களைப் பிடித்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார்.          .700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் அருமையாகத் தந்துள்ளார்.

வில்லிப்புத்தூராரின் கிருஷ்ண பக்திக்கு ஈடு இணையில்லை; எடுத்துக் காட்டிற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்:

அருமறை முதல்வனை ஆழி மாயனைக்                                    கருமுகில் வண்ணனைக் கமலக்கண்னனைத்                                 திருமகள் தலைவனைத் தேவதேவனை                                        இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்

ஆக இப்படி வில்லி பாரதத்தின் பெருமையையும் வில்லிப்புத்துராரின் மாண்பையும் சொல்லிக் கொண்டே போகலாம். நமது நேரத்தில் சிறிது நேரத்தை அவ்வப்பொழுது இந்த வில்லி பாரதத்தைக் கற்பதில் கருத்தை ஊன்றிச் செலவிட்டால் நமது வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

வில்லிப்புத்தூரார் புகழ் வாழ்க! கண்ணனை என்றும் தியானிப்போம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

–subham–

Hindu Crossword11325 (Post.14,291)

 Written by London Swaminathan

Post No. 14,291

Date uploaded in Sydney, Australia –  11 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Crossword11325 (Post.14,291)

11325

1 2  3G4 5
          
6      7R 
    8     
          
9 10       
       11  
12    13    
          
13 ↑ 15      ↑ 16

Across

1.word for monkey in Valmiki Ramayana(7 LETTERS)

6. 1) [noun] the body of a human being. 2) [noun] essence; substance. 3) [noun] a good physique. 4) [noun] beauty of the body (4)

7.English word tree is derived from this Sanskrit word(3)

8. “now, then, therefore, moreover, so much the more, and, partly; beginning of scriptures (4)

9.Entire, undivided (7)

12.Fire, Agni; comes with Vishnu in the Vedas (4)

13. wild, born in a forest; savage; in Sanskrit (5)

14Science of Cooking (10)

Down

1. One of the three sons of Agni and his first wife Svāhā. Agni is one of the most important Vedic gods and represents divine illumination. (8 LETTERS)

2.small quantity (4)

10. a nomadic group of warriors, likely originating from Central Asia, who invaded and terrorized Europe in the 4th and 5th centuries AD, famously known for their military prowess and ruthlessness, contributing to the decline of the Western Roman Empire.  (4)

3. second-highest mountain in India, after Kangchenjunga, (9)

4.Only woman in 12 Alvars of Tamil Nadu (5)

11.refers to bathing in Siva Purana (4)

5.Blessing in Sanskrit (8)

16.channel ↑ (3)

15.Node in Tamil; eye in Kannada; Canoe in Nepali  ↑ (4)

P1LA2VAN3GA4 A5
A L  A N N
V6APU N D7RU
A A A8DHA G
M    A L R
A9KH10ANDA  A
N U  E S11 H
A12GNA V13ANYA
  A  I A L
P13AK↑ 15ASASTRA↑ 16

–subham—

Tags—Hindu crossword11325