மனைவி வாழ்க! புரந்தரதாசர் புகழ் மாலை!! (Post.14259)

Written by London Swaminathan

Post No. 14,259

Date uploaded in Sydney, Australia –  2 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய ஐந்தாவது கட்டுரை இது)

ஒவ்வொரு வெற்றித் திருமகனுக்குப் பின்னரும் ஒரு பெண் மணி “Behind every great man is a great woman” இருக்கிறாள் என்று சொல்லுவார்கள் ;

இது சில ஆண்மகன்களின் வாழ்க்கையில் உண்மையே; பல பெண்கள் தாடகைகளாக , பூதகிகளாக, நீலாம்பரிகளாக இருப்பதையும் மறுக்க முடியாது ; மனைவியைப் புகழ்ந்து எழுதிய பலரை நாம் அறிவோம்; ஆனால் மனைவியைப் புகழ்ந்து பாட்டுப் பாடியவர்கள் ஒரு சிலரே ! அப்படிப் புகழ்  ந்துபாடிய ஒருவர் புரந்தரதாசர் !

பாரதியாரை எடுத்துக்கொண்டால் அவர்தான் உலகிலேயே பெண்களை அதிகம் புகழ்ந்து பாடிய புகழ்மிகு கவிஞர் ; கண்ணம்மா என்ற பெயரில் அவர் புகழ்  ந்து பாடிய பாடல்கள் அவர் மனைவியையும் குறித்து, நினைத்துப் பாடி இருக்கலாம் .

காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன்- அமு

தூற்றினை யொத்த இதழ்களும் – நில

வூறித் ததும்பும் விழிகளும் -பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்- இந்த

வையகத்தில் யானுள்ள மட்டிலும் – எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே!-இந்த(காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன்- துயர்

போயின,போயின துன்பங்கள் நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்

வாயினி லேயமு தூறுதே – கண்ணம்

மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே- உயிர்த்

தீயினி லேவளர் சோதியே-என்றன்

சிந்தனையே,என்றன் சித்தமே! – இந்த(காற்று)– பாரதியார்

*****

பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ

மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை

நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே!

கட்டியமுதே!கண்ணம்மா!–பாரதியார்

இந்தப் பாடல்களில் ஆன்மீக விஷயங்கள், செய்திகள் இல்லை;

ஆனால் புரந்தரதாசர் வாழ்வில் அவர் மனைவி செய்த ஒரு செயல் அவர் வாழ்க்கையையே நல்ல வழியில் திருப்பிவிட்டது. அதாவது தெய்வீகப் பாதையில் திருப்பிவிட்டது இதனால் அவர் மனைவியைப் பாராட்டி ஒரு கீர்த்தனையையே இயற்றிவிட்டார்!

இதன் பின்னால் ஒரு சம்பவம் உளது

கர்நாடக மாநிலத்தில் பணக்கார குடும்பத்தில்  சீனிவாசக நாயக்க (புரந்தரதாசர்) பிறந்தார். நவரத்ன தங்க நகை வியாபாரியாக வாழ்ந்தார் ; காசேதான் கடவுளடா என்று எண்ணி பேராசையுடன் பணம் ஈட்டினார் . ஒரு பிராமணன், அவரது கடைக்குச் சென்று  தனது மகனின்  பூணூல் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அந்த பிராமணனை அவர் நாளை வா, நாளை வா என்று மாதக் கணக்கில் அலைக்கழித்தார். ஒருநாள் செல்லாக்காஸைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் . மனம்  நொந்துபோன அந்தப் பிராமணன் நேராகப் புரந்தரதாசர் வீட்டுக்குப் போய் அவருடைய மனைவியிடம் விஷயத்தைச்  சொன்னார் . உடனே புரந்தரதாசர் மனைவி தனது விலையுயர்ந்த மூக்குத்தியைக் கழட்டிக்கொடுத்து அதை விற்றுக் கிடைக்கும் பணத்தில் பூணூல் வைபவத்தை நடத்தச் ந்து சொன்னார்.

அவர் புரந்தரதாஸ என்னும் சீனிவாச நாயக்க கடைக்குச் சென்று அதை அடகு வைத்தார் ; மூக்குத்தியைப் பார்த்தவுடன் அது தனது மனைவி லட்சுமியினுடையது  என்று அடையாளம் கண் டார் ; பெட்டியில் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு விரைந்தார் மனைவியிடம் மூக்குத்தியைக் கொண்டு வா என்றார் ; நடு நடுங்கிப் போன அந்தப் பெண்மணி சமையலறைக்குள் விரைந்து சென்று நாராயணா என்னைக் காப்பாற்று என்று வேண்டினார்.

காரைக்கால் அம்மையார் வேன்டியது போது  கணவனை அடக்க எப்படி சிவ பெருமான் மாம்பழத்தைக் கொடுத்தாரோ அதே போல இந்தப்பெண் மணிக்கு நாராயணன் தெய்வீக மூக்குத்தியை அளித்தார். அது புரந்தரர் கைக்கு வந்தது; கடைக்கு ஓடினார்; பூட்டிய பெட்டியைத் திறந்தார் ;  அங்கே அவர் வைத்துப் பூட்டிய மூக்குத்தி இல்லை!

உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது. அது அவரது சம்சாரம் அனுப்பிய தெய்வீக  மின்சாரம். பணத்தைத் துறந்தார்; வீட்டைத் துறந்தார் ; தம்புராவைக் கையில் எடுத்தார் ; விட்டலனின் நாமத்தைப் பாடத்துவங்கினார் ; ஊர் ஊராகச் சென்று பெருமாளைப் பாடினார் ; நவகோடி நாராயணன் என்று மக்களால்  பாராட்டப்பட்ட சீனிவாச நாயக்க புரந்தரதாசர் ஆனார்; கர்நாடக சங்கேதத்தின் பிதா மஹர் ஆனார். ஆயிரக் கணக்கில் கீர்த்தனைகளை இயற்றினார் ; அதில் ஒன்று தனது கண்களைத் திறந்த மனைவியைப் புகழ்ந்து பாடிய பாடல்.

இதோ அந்த கீர்த்தனை

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம

ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

நடந்தவையெல்லாம் நல்லதாகவே ஆயிற்று நம்

ஸ்ரீதரனின் சேவையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே பெட்டா ஹிடியுவுதக்கே

மண்டே பாகி நாசுதலித்தே

ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி

தண்டிகே பெட்டா ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

தம்புரா & கைத்தடி (இந்த இரண்டையும்) பிடிப்பதற்கு

தலை குனிந்து வெட்கப்பட்டேன்

என் மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)

தம்புரா & கைத்தடியை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடியுவுதக்கே

பூபதி எந்து கர்விசுதித்தே

ஆ பத்னீ குல சாவிரவாகலி

கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சைத் தட்டு பிடிப்பதற்கு

(நான் ஒரு) பணக்காரன் என்று எண்ணி கர்வத்தோடு இருந்தேன்

அந்த (என்) மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)

பிட்சைத் தட்டை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

துளசிமாலே ஹாகுவதக்கே

அரசனெந்து திருகுதலித்தே

சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு

துளசிமாலே ஹாகிதனய்யா (ஆதத்தெல்லா)

துளசிமாலையை அணிந்துகொள்வதற்கு

(நான் ஒரு) அரசன் என்று நினைத்து திரிந்து கொண்டிருந்தேன்

அந்த தாமரைக் கண்ணனான புரந்தரவிட்டலன்

(என் கழுத்தில்) துளசிமாலையை அணிவித்தானே (ஆதத்தெல்லா)

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக

****

நவ கோடி நாராயணன் பெயரை விட்டு புரந்தரர், தெருக்கோடி நாராயணன் ஆனார் .

அவர் மாறுவதற்கு மனைவி உதவினார்; நாம் மாறுவதற்கு அவருடைய கீர்த்தனைகளே போதும் !

சுபம்—

Tags- மனைவி வாழ்க, புரந்தரதாசர், சீனிவாச நாயக்க, நவகோடி நாராயணன் , மூக்குத்தி,  பிராமணன்,  மனைவி, கீர்த்தனை , பாரதியார், ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம

S Nagarajan Article Index February 2025 (Post No.14258)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,258

Date uploaded in Sydney, Australia – –2 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index February 2025

1-2-25 14161 அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் போஜன

           குதூகலம் -1

2-2-25 14164 போஜனகுதூகலம் – 2 (ஹெல்த்கேர் ஜனவரி 25 கட்டுரை)

3-2-25 14167 S.Nagarajan Article Index – January 2025

3-2-25 14169 ஆலயம் அறிவோம்!- திருக்கடையூர் (ஞானமயம் 2-2-25 உரை)

4-2-25  14171 அபிராமி பட்டர் – 1 (ஞானமயம் 2-2-25 உரை)

5-2-25 14174 அபிராமி பட்டர் – 2  (ஞானமயம் 2-2-25 உரை

6-2-25 14177 கடவுளைக் காட்டுங்கள் : ஷீர்டி சாயிபாபாவிடம் கேட்ட

             பக்தர்! (kalkionline 2-1-25 கட்டுரை)

7-2-25 14180 எண் 72 தரும் விடைகள்! (RULE OF 72)! (kalkionline 7-2-25

           கட்டுரை)

8-2-25 14183 உலகின் அதிசய இடங்கள்  –   செரிண்டிபிடி கண்டுபிடிப்பு :

                               பைபிள் விவரங்களைத் தந்த  சாவுக்கடல் குகைச் சுருள்கள்!

           (kalkionline 30-1-25  கட்டுரை)

9-2-25 14186   பிரின்ஸிபிள் மாமி! (kalkionline 28-1-25 சிறுகதை

           கட்டுரை)

10-2-25 14190 ஆலயம் அறிவோம் – திருவான்மியூர் (ஞானமயம் 9-2-25

             ஒளிபரப்பு)

10-2-25 14191 ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 1 (ஞானமயம் 9-2-25

              ஒளிபரப்பு)

11-2-25 14193 ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 2 (ஞானமயம் 9-2-25

              ஒளிபரப்பு)

12-2-25 14196 பத்ம பூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்  ஒரு  

            சரித்திரம், சகாப்தம் –   BY எஸ்.பி.பாலு 

13-2-25 14199 வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!! (kqlkionline 6-2-25 கட்டுரை)

14-2-25 14202 நாகமணியைக் கண்டதுண்டா? (kalkionline 6-2-25 கட்டுரை)

15-2-25 14205 வலதுபக்கம் ஒருக்களித்துப் படுக்காதே! முன்னோர்கள்

                              கூறியதை அறிவியல் வியந்து போற்றுகிறது! (ஹெல்த்கேர்

                               பிப்ரவரி 2025 இதழ் கட்டுரை)

16-2-25 14208   நம்முடைய கேள்விகளும், அறிஞர்களின் பதில்களும்!  

                            (kalkionline 11-2-25 கட்டுரை)

17-2-25 14212.  விஞ்ஞானிகளை அரண்டு மிரண்டு பயப்பட வைத்த

             ஒரு விஞ்ஞானியின் கண் திருஷ்டி! (kalkionline 7-2-25

             கட்டுரை)

17-2-25   142213   பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் (ஞானமயம் 16-2-25

              ஒளிபரப்பு)

18-2-25 14217 கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – (ஞானமயம் 16-2-25

              ஒளிபரப்பு)

19-2-25 14220 கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – (ஞானமயம் 16-2-25

              ஒளிபரப்பு) 

20-2-25 14223 கனவுகள் பலிக்குமா? (kalkionline 17-2-25  கட்டுரை)

21-2-25 14227 ப்ளாக் வாரண்ட் : தொலைக்காட்சித் தொடர்(kalkionline 4-2-25  

            கட்டுரை)

22-2-25 14230 ஆஹா ஏஐ AI ! ஐயையோ ஏஐ AI !! (kalkionline 16-2-25  

            கட்டுரை)

23-2-25 14233 வியக்க வைக்கும் டிடிகாகா ஏரி! (kalkionline 18-2-25  

            கட்டுரை)

24-2-25 14237 கண்ணதாசனும் கல்கி வார இதழ் கடைசிப்பக்கும் –

            (kalkionline 10-2-25  கட்டுரை)

24-2-25 14238 ஆலயம் அறிவோம் பண்டரிபுரம் பாண்டுரங்கன்) ஆலயம்

            ஞானமயம் 23-2-25 ஒளிபரப்பு)

25-2-25 14241 அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் அற்புத நூல்: Be Useful:

              Seven Tools  for Life  (kalkionline 19-2-25  கட்டுரை

26-2-25 14245 மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே

            ஒரு குட்டி மூளை!(kalkionline  20-2-25  கட்டுரை)

27-2-25 14248 விதியின் வலிமை! (சுபாஷித செல்வம்)

28-2-25 14251 எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம்

                                 கேளுங்களேன்!! (kalkionline  23-2-25  கட்டுரை)

***

புரந்தரதாசரும் பாரதியாரும் (Post.14,257)

Written by London Swaminathan

Post No. 14,257

Date uploaded in Sydney, Australia –  1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரியோர்கள்  சிந்தனை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் GREAT MEN THINK ALIKE  என்பது ஆன்றோர் வாக்கு . இதை மெய்ப்பிக்கும் வகையில் புரந்தர தாசரும் தேசீய புலவர் பாரதியாரும் அச்சம்/ பயம் பற்றி ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அச்சம் அறுத்தவன் என்று சிவ பெருமானை மாணிக்கவாசகரும் திருமூலரும் பாடுகின்றனர்.

அனுமனை கும்பிட்டால் பயமெல்லாம் (நிர்பயத்வம்) போய்விடும் என்று சின்னக்குழந்தைகளுக்கு ஸ்லோகமும் சொல்லித் தருகிறோம்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

बुद्धिर्बलं यशोधैर्य निर्भयत्वमरोगता ।

अजाढ्यं वाक्पटुःत्वंच हनुमत् स्मरणाद्भवेत् ॥

buddhirbalaṃ yaśodhairya nirbhayatvamarogatā .

ajāḍhyaṃ vākpaṭuḥtvaṃca hanumat smaraṇādbhavet ..

ஆஞ்சனேயரை பக்தியுடன் நினைத்தால் அறிவு, பலம், புகழ், வீரம், அச்சமின்மை, ஆரோக்கியம், சோம்பலின்மை , நாவன்மை, ஆகியன எல்லாம் கிடைக்கும்.

பாரதியார் எதற்கும் அஞ்சாத வீரர் ; அவர் அச்சம் என்பதை பேய் என்று வருணிக்கிறார் ; அதை ஞானம் என்னும் வாளால் அறுத்துத் தள்ளலாம் என்றும் நமக்குத் புகாட்டுகிறார் .

பயம்தான் பேய்

பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

****

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”

*****

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

*****

மேலும் பல இடங்களிலும் அச்சத்தை, பயத்தைச் சாடுகிறார்

அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”

****

நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட

அச்சப் பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளயும் களியாய்

வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.

****

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே

ஊமைச் சனங்களடி!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா

மாக்களுக்கோர் கணமும்—கிளியே!

வாழத் தகுதி உண்டோ?”

****

அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)

****

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

****

இப்போது புரந்தரதாசர் பாடலைக் காண்போம்.

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு

பயமும் எதுக்கய்யா

ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

கனசல்லி மனசல்லி களவளவாதரெ

ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)

ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித

பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த

பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ

குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை பூஜை செய்யும்

குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

(thanks for the translation; https://dasar-songs.blogspot.com)

****

திருமந்திரத்தில் அச்சம்

வைச்சன வாறாறு மாற்றி யெனைவைத்து

மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு

நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்

அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.

பொருள்

திருவடியுணர்வாகிய ஞேயத்தால் எனக்குள்ள பிறப்பு இறப்பாகிய அச்சத்தைக் கெடுத்தனன். கெடுத்து என்னையும் ஆண்டு கொண்டனன். அவனே நந்தியாகிய சிவபெருமான்..

****

திருவாசகத்தில் அச்சம்

    விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்

    மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி

    அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி

    அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர

    அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி

    ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற

    செச்சை மலர் புரையும் மேனி எங்கள்

    சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33

*****

மொத்தக்  கருத்து

ஆண்டவனை நினைத்தால் பயம் நீங்கும்

–Subham—

Tags- புரந்தரதாசர், பாரதியார், அச்சம்,  பயம், அனுமன் ஸ்லோகம், ஆஞ்சனேயர்,

சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்—30 (Post No.14,256)

Written by London Swaminathan

Post No. 14,256

Date uploaded in Sydney, Australia –  1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30

லண்டனிலுள்ள க்யூ தாவரவியல் பூங்காவையும் , ஆண்டுதோறும் நடக்கும் மலர்க கண்காட்சிகளையும்  பலமுறை பார்த்திருந்தபோதிலும் சிட்னி தாவரவியல் பூங்காவைப் பார்க்காமல்  வரக்கூடாது என்று முடிவு செய்து பிப்ரவரி 28-ஆம் தேதி  (2025) பூங்காவுக்குள் நுழைந்தேன் . இரண்டு மணி நேரத்தில் வேறு எங்கும் இல்லாத பல தாவர, மர வகைகளைக் கண்டேன் ; பல பறவைகளும் காட்சி தந்தன ; ஆங்காங்கே சிலைகளும் பூங்காவை அலங்கரித்தன ஆஸ்திரேலியாவில் உலகில் வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகள் இருபதாயிரத்துக்கும் அதிகம் உள்ளன . இவற்றில் மனம் கவரும் வண்ண மலர்களும் அடக்கம்

மனதில் நின்ற சில காட்சிகள்

பெரணிகள்  FERNS என்னும் கீழ்வகைத்  தாவரங்கள் மிகவும் பெரிய இலைகளுடனும் உள்ளன. ஒரு செடியின் ஒவ்வொரு இலையிலும் ஒரு குழந்தை படுக்கலாம். நம்மூர் தலை வாழை இலையைப் பாதியாக வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த அளவு.

செவ்வாழை மரங்களும் சாதாரண பச்சை வாழை மரங்களும் உள்ளன. ஆனால் அவை மினி / குட்டி வாழைப்பழங்கள்.

நமது ஊர்களில் காடு மேடுகளில் ஊமத்தைப் பூ மலர்ந்திருப்பதைக் காண்கிறோம்; அவை வெள்ளை நிறம்; ஆனால் ஆஸ்திரேலிய ஊமத்தைகள் இளம் சிவப்பு நிறமுடையவை ; அவற்றின் சைஸ் மிகப்பெரியவை  ராட்சத ஊமத்தை என்று சொல்லலாம்.

உலக மஹா கவி காளிதாசன்,  நம் நாட்டின் பருவங்களை ஆறாகப் பிரித்து ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இயற்றினான். வேதகாலம் முதல் உள்ள இதே பிரிவினை சங்கத் தமிழ்ப் புலவர்களும் பின்பற்றினார்கள்; மேலை நாட்டுக் கணக்கில் பருவங்கள் நாலுதான். அந்த நாலு பருவங்களைக் காட்டும் சிலைகளும் உள்ளன.

லண்டனில் கியூ பூங்காவுக்குள்  நுழைவதற்கு  கொள்ளைக் கட்டணம் வசூலிக்கிறார்கள்  ; ஆனால் சிட்னியில் இலவசம். ஆங்காங்கே செடிகளின் தாவரவியல் பெயர்களை பொறித்து வைத்திருப்பதோடு ஒவ்வொரு சந்திப்பிலும் பாதைகளைக் காட்டும் கைகாட்டி மரங்களையும் வைத்திருக்கிறார்கள்; காரணம் சிட்னி பூங்காவுக்கு எட்டு நுழைவாயில்கள் ; புகழ்பெற்ற சிட்னி ஆபரா ஹவுஸ் பக்கமும் ஒரு வாசல் உள்ளது நான் மார்ட்டின் பிளேஸ் என்னும் ஸ்டேஷனுக்குச் சென்று பத்து நிமிடத்துக்குள் பூங்காவுக்குள் பிரவேசித்தேன்.

சிம்ம வாசல் என்னும் கேட்டில் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. ஓரிடத்தில் நான் விரும்புவது….. என்று பொறித்த பெண்ணின்/ தேவதையின் சிலை உளது ; அதில் இளம்வெட்டுகள் பூக்களை வைத்து தங்கள் (காதல்) விருப்பங்களை சொல்கிறார்கள்.

பெரிய மரங்கள் இந்திய ஆலமரங்களுக்குப் போட்டியாக அங்கே இருக்கின்றன. எல்லாம் உயரத்தில் நமது மரங்களைத் தோற்கடித்துவிடும்; அத்தனை உயரம்.  பூங்காவை பலவகைகளாகப் பிரித்து போகும் வழியையும் காட்டி இருக்கிறார்கள் பாலைவனத் தாவரங்கள், ரோஜாத் தோட்டம், பெரணிகள், மூலிகைகள், பனைவகைத் தாவரங்கள், கட்டாயம் காண வேண்டிய தாவரங்கள் என்று பல பிரிவுகள் .

நாமாகச் சென்று பார்த்தால் நேரம் அதிகமாகும். அவர்களே நடத்தும் நடைப் பயணத்தில் WALKING TOURS  சேர்ந்துகொண்டால் எல்லா செடி கொடிகளையும் பார்ப்பதோடு அவற்றின் மகிமையையும் அறியலாம்

****

சிட்னி தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்

இது ஆஸ்திரேலியாவில் மிகவும் பழைய தோட்டம்; இருநூறு ஆண்டு வரலாறுடைத்து .

மேலும் இத்துடன் தாவரவியல் ஆராய்ச்சிக்  கழகமும்  இணைந்திருப்பதால், தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

மொத்தம் 27,000 வகைத் தாவரங்களைக் காணலாம் ; அவை உலகின் பல இடங்களை சேர்ந்தவை  ஆஸ்திரேலியாவிலுள்ள 24,000 வகைத் தவரங்களில் 87 சதவிகிதம் இந்த நாட்டிற்கே உரித்தானவை உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதவை.

ஆண்டு முழுதும் திறந்திருக்கும்; அனுமதி இலவசம்  

பூங்காவில் 15 வகைப் பிரிவுகள் இருக்கின்றன. நாட்டின் மழை வனக்காடுகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு பிரிவும் அதில் அடக்கம் ; அங்கு பத்து லட்சம் தாவர வகைகளை சேமித்துப் பாதுகாத்து வைக்கும் ஆராய்ச்சிப் பிரிவும் உள்ளது இந்த விஷயத்தில் லண்டன் கியூ கார்ட்டன் இதைவிடப் பெரியது

Facts about Sydney Botanical Gardens

Royal Botanic Garden Sydney

•             Australia’s oldest botanic garden, established in 1816.

•             Home to over 27,000 plants from around the world.

•             Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden

•             Free to visit, open every day of the year

•             Located on Sydney Harbour, next to the Sydney Opera House

•             Features a National Herbarium with about one million reference specimens

•             Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet

–subham—

Tags- சிட்னி, தாவரவியல் பூங்கா, எனது பயணம், சிறப்புகள் , சிலைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30

GNANAMAYAM 2-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM 2-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

2-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Tiruvarur Temple

***

SPECIAL TALK BY Dr Tenkasi D. Ganesan Ph.D

Masters degree and Ph.D.

Worked as a Human Resource Head in Larsen & Toubro Ltd.

Doctorate on the subject – Human resources in Bhagavad Gita

Public speaker, Writer and Poet

Visited around 100 colleges and schools for talk on behavioural topics

Trustee in Sri Vidyatheertha foundation, associated with Sringeri Sharatha Peetam. 

Public Relations Officer in Uratha sinthanai, a literary forum. 

Secretary of Rasikaas, a forum for arts and culture

Published 10 books so far including Bhagavad gita for daily life

Having a library of 4000 books of various interests in the house

Sharing literary and spiritual thoughts through You tube – Rasikaas TV.

So far approximately 100 videos have been shared and nearly 1,50,000 viewers have seen.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  திருவாரூர் ஆலயம்

. ***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு வழங்குபவர் தென்காசி டாக்டர் டி. கணேசன்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,2-3-2025, BROADCAST PROGRAMME

Hindu Crossword1325 (Post No.14,255)

Written by London Swaminathan

Post No. 14,255

Date uploaded in Sydney, Australia –  1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1325

12 3   4
     5  
6       
        
7       
        
8       
        
910 11    

Across

1.Rig Vedic Deity; general meaning Friend

6.one day and one night; Tamil worlds for Day/pahal and night/raathri/iravu came from this.

7. The natural order or connection of words in a sentence, construing grammatical order or relation in Sanskrit

8.Name of a river in Rig Veda

9.Mount of Gods like Elephant, Bull, Peacock, Lion, Yali, Anna/swan etc

Down

2.One of the Five Faces of Shiva; also represents North East Direction

3. xxxxx is the name of an asura king who terrorised the gods (devas), according to the Varāhapurāṇa chapter 96. xxxxx was eventually defeated by Raudrī who struck him and severed his head (muṇḍa) from his trunk (carma).

4.Breath control doe by Brahmins thrice a day

5. For one’s own sake, for the sake of one’s self in Sanskrit

10.Life, spiritual life in the Rig Veda; also life of departed spirits

11. Agni or the god of fire in Indian languages.

1325

M1I 2TR3A  P4
 S U A5 R
A6HORATRA
 A U M N
A7NVAYA A
 A L R Y
S8UVASTUA
 S N H M
V9A10HA11NAMA

—subham—

Tags- Hindu Crossword1325, PRANAYAMA

மூன்று வில்களின் தோற்றம்! (Post No.14,254)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,254

Date uploaded in Sydney, Australia – –1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மஹாபாரதத் துளிகள்!

மூன்று வில்களின் தோற்றம்!

ச.நாகராஜன்

மூன்று வில்கள்: பினாகம்சார்ங்கம்காண்டீவம்!

உமா தேவிக்கு சிவபிரான் உரைத்தது:

முன்னொரு யுகத்தில் கண்வர் என்னும் ஒரு மஹரிஷி இருந்தா. அவர் அற்புதமான தவம்செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு கடும் தவம் செய்யும் போது அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டாயிற்று. புற்று இருந்ததனால் அவர் தலையில் மூங்கில் முளைத்தது. அவற்றையெல்லாம் அவர் தாங்கிக் கொண்டு முன் போலவே தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்மதேவர் அவருக்கு வரங்கொடுக்கப் போனார். அவர் அவருக்கு வரம் அளித்த பிறகு, அந்த மூங்கிலைப் பார்த்து அதனால் உலகிற்கு உபயோகம் செய்வதைக் குறித்து ஆலோசித்தார்.

ஆலோசித்தபிறகு, அந்த மூங்கிலை எடுத்து வில்லாகச் செய்வித்தார்.

உலகங்களைப் படைத்தவராகிய பிரம்மதேவர் அப்போது விஷ்ணுவிடத்திலும் என்னிடமுத்திலும் சாமர்த்தியம்  இருப்பதை அறிந்து விஷ்ணுவுக்கும் எனக்குமாக இரண்டு விற்களைத் தந்தார்.

பினாகமென்பது என் வில்.

சார்ங்கமென்பது விஷ்ணுவின் வில்.

மிகுதியுள்ள மூங்கிலினால் காண்டீவம் என்னும் மூன்றாவது வில் உண்டாயிற்று. அதைச் சந்திரனுக்குக் கொடுத்து ப்ரம்மா திரும்பத் தன் உலகம் சென்றார்.

–    அநுசாஸன பர்வம் அத் 206

சிவபிரானைத் தொழுவதால் ஏற்படும் பலன்கள்!

யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் தனக்கு உபமன்யு கூறியதை விளக்குகிறார் இப்படி: (அநுசாஸனபரவம்ம் 49வது அத்தியாயம்)

மனத்தினாலாவது சிவனைச் சரணம் அடையும் மனிதர்கள் எல்லாப் பாவங்களையும் நீக்கித் தேவர்களுடன் வசிப்பர். குளம், ஆறு முதலியவற்றின் கரைகளைப் பலமுறை இடித்தும் இவ்வுலகம் அனைத்தையும் தீயில் போட்டும் இருப்பவனும் ஈஸ்வரரைப் பூஜை செய்வானாயின் அவனை அப்பாவம் பற்றாது.

எல்லா நற்குணங்களும் குன்றி  எல்லாப் பாவங்களோடும் சேர்ந்திருந்தாலும் சிவனை மனத்தினால் தியானிப்பவன் அந்தப் பாவங்கள் அனைத்தையும் ஓட்டி விடுகிறான். மகாதேவரைச் சரணம் அடைந்த புழு, பக்ஷி,  விட்டில், மிருகங்கள் இவற்றிற்கும் கூட எங்கும் பயம் இராது. ஆப்படியே பூமியில் சிவபக்தியுள்ள மனிதர்கள் சம்சாரத்திற்கு உட்படமாட்டார்கள்.”

எந்த திசையில் யாருக்கு பலி போட வேண்டும்?

பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு வாசுதேவருக்கும் பூமி தேவிக்கும் நடந்த ஒரு உரையாடலைத் தெரிவிக்கிறார்.

பூமிதேவி மாதவரிடம் கூறுகிறாள் “மாதவரே! தெற்கில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் வடக்கில் சந்திரனுக்கும் நடுவீட்டில் பிரம்மதேவருக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலி போடச் சொல்லுகின்றனர்.  மருத்துக்களுக்கும் தேவர்களுக்கும் பலியை வீட்டின் உட்புறத்தில் போட வேண்டும். விசுவதேவர்களுக்கு பலியை ஆகாயத்தில் போட வேண்டும். இரவில் சஞ்சரிக்கும் பேய், பிசாசுகளுக்கு பலியை இரவில் போட வேண்டும். இவ்வாறு பலியை நன்றாகப் போட்ட பிறகு பிராம்மணனுக்கு பிக்ஷையிட வேண்டும். பிராம்மணன் கிடைக்காத போது முதல் அன்னத்தை எடுத்து அக்னியில் போட வேண்டும்.

–    அநுசாஸன பர்வம் 154வது அத்தியாயம்

***

My Visit to Royal Botanic Garden in Sydney (Post No.14,253)

Written by London Swaminathan

Post No. 14,253

Date uploaded in Sydney, Australia – 28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the Royal Botanic Gardens in Sydney and spent two hours there. It has got beautiful flowering plants and huge trees. Birds are also seen everywhere. Australia has thousands of unique plants. it has rose garden, palm grove, herbarium, fernery etc. it is better to go in the guided tour which takes one and half hour. If you go on your own, you may miss some important plants or trees.

The huge garden has eight entrances. One can walk from Martin Place Metro station and enter the garden opposite to New South Wales state library. One has plenty of opportunities to take photos. In London one must pay a lot to enter the Kew Botanical Gardens. In Sydney it is FREE.

Most of the plants are named ; it will be very useful to Botany students and amateur botanists.  There are many statues decorating the gardens.

If one has not got much time, one must see the Must See Plants Section. Fernery has got lot of different types of ferns that can’t be seen in any other part of the world. The Succulent Garden has all the desert cacti plants.

The garden is well maintained and signposted at every junction. One can cover it in two hours.

Apart from the viewing, one can attend talks and special events. Information is available from their website

****

mini red bananas

one child can sleep on this huge leaf.

in Tamil Nadu we have small white (Umaththai) flowers; in Sydney huge pink flowers are on the plant.

Facts about Sydney Botanical Gardens

Royal Botanic Garden Sydney 

  • Australia’s oldest botanic garden, established in 1816.
  • Home to over 27,000 plants from around the world.
  • Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden
  • Free to visit, open every day of the year
  • Located on Sydney Harbour, next to the Sydney Opera House
  • Features a National Herbarium with about one million reference specimens
  • Has a rich Aboriginal heritage
  • Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet. It’s estimated that 2,000 species in our ecosystem are still to be discovered and documented. Amid climate change, habitat loss and the extinction crisis, we are fighting to conserve plant species and protect all life that depends on them.

At one end of the garden is the famous Sydney Opera House and Harbour Bridge. Those who go to see the opera house, may enter the garden by the nearby entrance.

—subham—

Tags- Botanic Gardens, Sydney, my visit, rare plants, statues

தமிழ் தெரியுமா28225 ? (Post.14,252)

Written by London Swaminathan

Post No. 14,252

Date uploaded in Sydney, Australia – 28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளையும் பின்பற்றுக.

1 2     
    3 45  ← ↑
6    7  
    8  9 ←
        
10    11↑1213 ←
  ↑14     

குறுக்கே

1. பெண்ணின் பெயர்; பிரியமுள்ளவள்; அன்புள்ளவள்

8. இந்த விதைதான் சாம்பார் போடி, ரசப்பொடியில் முக்கியப்பொருள்

9. வேலை செய்தால் கிடைப்பது இது  ←

5. அந்தக் காலத்தில் பயணத்தின் போது இதில்தான் தண்ணீர் கொண்டுசெல்வார்கள் ←

6. புட்டபர்த்தி மஹான்

10. சிறுவர்கள் சாட்டையால்/ கயிற்றால் சுற்றி விளையாடுவார்கள்; தரையில் சுற்றும்

13. கேரளத்திலுள்ள சுற்றுலாக் கடற்கரை ←

****

கீழே

2. அவிட்டத்துக்கும் பூரட்டாதிக்கும் இடையில் உள்ள நட்சத்திரம் ; சதபிஷக் என்றும் புகல்வர்.

3. கப்பலில் இதை விரித்தால் காற்றே   கப்பலைக் கொண்டுசென்றுவிடும்  .

4 ராமாயணத்தில் நாஸ்தீகம் போதித்த ரிஷி

5. பறவைகளின் வீடு ↑

6. பௌத்தர்களின் தரைக் காவல் தெய்வமாகப் போற்றப்பட்டவள். `முதல்வியான இறைவி’, `முதியோள்’ என்று இலக்கியங்கள் அவளைச் சிறப்பிக்கின்றன.

7. தாயிடமும் கிடைக்கும்; பசுவிடமும் கிடைக்கும்

11 கொடி என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்; பெண் களின் பெயர்

12. கொடி; மரகத, சுந்தர என்ற பெண்களின் பெயர்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் ↑

13. சேவலின் மனைவி

14. ஆசை, மாறிக்கொண்டே இருக்கும் மனது; நிலையற்ற புத்தி ↑

வ1த்ச2லா   டு
   பா3 ஜா4கூ5  ← ↑
ச6த்சாய்பா7பா 
ம் ம் ம8ல்லிகூ9 ←
பா   ல் 
ப10ம்ம்ல11↑வ12கோ13 ←
தி ↑ச14  தா ழி

—-Subham—

Tags—தமிழ் தெரியுமா28225 

எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!! (Post No.14,251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,251

Date uploaded in Sydney, Australia – –28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

சுயமுன்னேற்றம் 

எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!! 

ச. நாகராஜன் 

உங்களுடன் பேசுவதையே ஒரு பாக்கியமாக மற்றவர் நினைக்க வேண்டுமா?

அனைவரும் மிக்க நட்புடன் முதல் சாய்ஸாக உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

 இதோ இருக்கிறது தங்க விதிகள் ஆறு.

இதைக் கடைப்பிடியுங்கள். அப்புறம் பாருங்கள், நீங்கள் எப்படி மதிக்கப்படுகிறீர்கள் என்று!

1)       இடையில் குறுக்கிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்.

நண்பர்களோ அல்லது அலுவலக அதிகாரிகளோ உங்களுடன் பேசும் போது இடையிட்டுக் குறுக்கே பேசுவதை நிறுத்துங்கள். அது மட்டுமல்ல, உங்கள் மனதிற்குள் பேசுவதையும் நிறுத்துங்கள். பேசுபவர் பேசி முடிக்கட்டும்.

மற்றவர்களுக்காக அவர்களது வார்த்தைகளை நாமே உருவாக்கீப் பேசி முடிக்க நாம் எப்போதுமே ரெடி தான். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், என்ன வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள் என்று அறியும் மகாத்மாக்ககள் நாம் தான்! – இது தான் எல்லோருடைய பொதுவான அணுகுமுறை. இதை விட்டொழியுங்கள்!

அவர்கள் பேசுவதைப் பேசி முடிக்கட்டும் – அவர்கள் பாணியில், அவர்கள் சொற்களாலேயே!

2)       ஓய்வுடன் இருங்கள். மனச்சோர்வு, கவலை, டென்ஷன் ஆகியவை உங்கள் கேட்கும் திறனைப் பெருமளவு இழக்கச் செய்கிறது.

3)       எதிரில் பேசுபவரை ஆவலுடன் பேசும்படி செய்யுங்கள். நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள், விருப்பத்துடன் செவி மடுக்கிறீர்கள் என்பதை அவர் நன்கு உணர வேண்டும். அவர் முகத்தைப் பார்க்காமல் அவர் தோளையோ அல்லது எங்கேயோ ஒரு மூலையையோ பார்க்காமல் அவரையே கவனியுங்கள். ஒருவேளை அவர் சொல்வதில் குறிப்புகள் எடுக்க வேண்டுமெனில் அது எவ்வளவு முக்கியமானது என்றும் உங்கள் நினைவாற்றல் திறன் சற்று குறைவு தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது அவருக்குப் பெருமையைத் தான் தரும்.

4)       நீங்கள் எதிரில் இருப்பவரின் பேச்சைக் கேட்பது அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகத் தான்.  அவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராக விவாதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக அல்ல – இதை நினைவில் கொள்ளுங்கள்.

5)       உங்களுக்கென்று ஒவ்வொரு விஷயத்திலும் அபிப்ராயம் உண்டு தான்! அது எதிரிலிருப்பவர் சொல்வதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆகவே உங்கள் அபிப்ராயங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ளார்ந்த முனைப்புடன் அவர் சொல்வதை முழுவதுமாகக் கவனியுங்கள்.

6)       தர்க்கரீதியாக மட்டும் கேட்பது போதாது; உணர்ச்சியுடனும் கேட்க வேண்டும். அவர் மூளையிலும் இதயத்திலும் நீங்கள் இடம் பெற வேண்டும். பேசும் போது அவர் சொல்லாமல் விட்டதையும் நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். ஒருவர் சொல்லாமல் விடுவது சொல்வதை விட சில சமயம் முக்கியமானதாக இருக்கக் கூடும். கேட்பது ஒரு உயிருள்ள இயக்கம், அதுவும் ஒருவரை முதல் முறையாக நீங்கள் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால் இது மிக மிக முக்கியம். இந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு அதிக நேரம் கொடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கிக் கொள்ளுங்கள்!

இனி பாருங்கள், நட்பு வட்டம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உங்களின் மதிப்பு எப்படி கூடுகிறதென்று!

திருவள்ளுவர் கூறுவது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது:-

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.  குறள் 419


தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

**