GNANAMAYAM 23-2-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

23-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Poet Villippuththurar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Pandharpur Temple

***

SPECIAL TALK BY SINGAPORE DR RAJI SRINIVASAN

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  பண்டரிபுரம் ஆலயம்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – வில்லிப்புத்தூரார்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு சிங்கப்பூர் டாக்டர் ராஜி சீனிவாசன்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

tags–  GNANAMAYAM ,23-2-2025 BROADCAST,  PROGRAMME

ஆஹா ஏஐ AI! ஐயையோ ஏஐ AI !! (Post No14,230)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,230

Date uploaded in Sydney, Australia – –22 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-2-25 கல்கிஆன்லைன் -இல் பிரசுரமாகியுள்ள கட்டுரை 

ஆஹா ஏஐ AI!

  ஐயையோ ஏஐ AI !!

ச. நாகராஜன் 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி நாளுக்கு நாள் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

நோபல் பரிசு பெற்ற மேதைகள் உட்பட பலரும் ஐயையோ ஏஐ என்று பயப்படக் காரணம் உண்டுங்க!

சுற்றுப்புறச் சூழலுக்காக நீங்கள் கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று AI CHATBOT சொல்ல ஒரு நல்ல மனிதன் தற்கொலையே செய்து கொண்டான்..

DEEPFAKE பெண்களுக்கு மிக ஆபத்தானது என்று விவரிக்கும் பெண்கள் அது முகங்களை FAKE செய்யும் என்றும் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்றும் கூறுகின்றனர். சில நாடுகளே சட்டபூர்வமான நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்கின்றன என்று கூறும் இந்தப் பெண்கள் ஆபாசமான போர்ன் வீடியோக்கள் உலவ ஆரம்பித்து விட்டன என்கின்றனர்.

படைப்பாளிகளோ – இசை அமைப்பாளர்களாகட்டும், பாடகர்களாகட்டும் – தங்கள் படைப்புகளையும் குரலையும் செயற்கை நுண்ணறிவு காப்பி அடிப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்.

சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எந்தக் காலத்தில் கேஸ் முடியும்? எவ்வளவு செலவாகும்?

DEEPFAKE உண்மையைத் திரித்து வெளியிடும். இது உலகிற்கே ஆபத்தாக முடியும்.

மக்கள் குழப்பமடைவர். முக்கியமானவற்றை சுலபமாக நழுவ விடுவர். முக்கியமல்லாதவற்றை எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்குவர்.

படைப்பாற்றல் கொண்டவர்களை இமிடேட் செய்து அவர்களைத் தவிக்கவிடும் AI.

மனிதர்களுக்குத் தேவையானவற்றை எதிர்த்து புது லட்சியங்களை AI உருவாக்கிவிடும்.

தீர்ப்பைத் தருகிறேன் என்று AI தவறான தீர்ப்புகளை அளிக்க ஆரம்பித்தால் மனித குலமே  அவ்வளவு தான்!

AIக்கு ஆதரவு தருவோர் அது மகாத்மா காந்திஐன்ஸ்டீன் போன்றோரை உருவாக்கும் என்கின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அதே AI ஒரு ஹிட்லரையோஒரு ஸ்டாலினையோ ஒரு மாசேதுங்கையோ உருவாக்கி விட்டால் ஒட்டு மொத்த மனித குலமே போய்விடுமே என்கின்றனர்!

AIக்கு ஒழுக்கம் அறவுணர்வு MORAL – என்பதே கிடையாது.

டிராக்கில் கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ஒரு டிராலி அதே பாதையில் சென்றால் ஐந்து பேரைக் கொன்று விடும். அந்த ஆபத்தைப் பார்த்து அதை வேறு டிராக்கில் செலுத்தினால் ஒருவன் மட்டுமே கொல்லப்படுவான். என்ன செய்வது?

அற உணர்வின் படி ஒருவன் சாவது சரி, டிராக்கை மாற்றலாம் என்று சொல்லும் போது AI தனக்குக் கொடுத்த கட்டளையின் படி அதே டிராக்கில் தான் டிராலி போக வேண்டும் என்று முடிவு எடுத்தால், ஆறு பேரும் கொல்லப்படுவர்.

இப்படி ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.

AI எவ்வளவு உதவி செய்கிறது தெரியுமா? இந்திய போலீஸ் பத்தாயிரம் குற்றவாளிகளை ஃபேஸ் ரிகாக்னிஷனைப் பயன்படுத்திப் பிடித்திருக்கிறது என்று ஆஹா AIகாரர்கள் வாதிக்கின்றனர்.

அடடா, 50 குறிப்புகளைக் கொடுத்தால் அது 1000 வார்த்தைகள் கொண்ட கட்டுரையைத் தருகிறது என்கின்றனர் அவர்களில் இன்னும் பலர்!

இதே AI பல்வேறு புலனாய்வுக் குழு போலச் செயல்பட்டு டிஜிடல் அரெஸ்ட் செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் செய்திகள் தினமும் எத்தனை வெளி வருகின்றன, அதைப் பாருங்கள் என்கின்றனர் ஐயையோ AIகாரர்கள் 

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஐக்கியநாடுகளின் சபையை அணுகி இதைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

இதையும் AI தடுத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று ஐயையோ AIகாரர்கள் புலம்புகின்றனர்.

நீங்கள் எந்தப் பக்கம் சார்?!

ஆஹா ஏஐ AI யா?

  ஐயையோ ஏஐ AI யா??

***

Hindu Crossword 21225 (Post No.14,229)


Written by London Swaminathan

Post No. 14,229

Date uploaded in Sydney, Australia – 21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1  2 3 4  
         5
6    7    
          
8    910   
          
          
11         

ACROSS

1.Boy who got boons from Yama, God of Death.

6.musical note, tone

7.Sound, musical sound

8.Disease in Vedas

9.Crocodile in Sanskrit

11.Food Donation

DOWN

1.Vedic Twins

2.Ganesh name; protector of the weak.

3.By whom, by what is the meaning; Beginning word  of the Upanishad

4.Woman devil killed by Rama when he accompanied Vishwamitra.

5. short sound- dance jargon; long sound- reason or cause in Indian languages

10.Disease of the eyes in Sanskrit

N1ACH2IK3ET4A 
A  E E A K5
S6WARAN7ADHA
A  A A A R
T8AKMAN9A10KRA
H  B  RA N
Y  H  M  A
A11NNADHANAM

–subham—

Tags– Hindu Crossword 21225

கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய்  பெயர் காரணம் (Post No.14,228)

Written by London Swaminathan

Post No. 14,228

Date uploaded in Sydney, Australia – 21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மலேசியாவில் தமிழ் கல்வெட்டுகள்

கிடாரங்காய் ஊறுகாயைப் பார்த்த மாத்திரத்தில் நாவில் உமிழ்நீர் சுரக்கும் ; எலுமிச்சங்காய் ஊறுகாயை விட ஒரு படி மேலே நிற்கும் ; ஆனால் இதுவும் அதே எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்ததுதான்

கெடா , கடாரம் , கிடாரங்காய் எல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்கள் !

மலேசியா நாட்டின் வட பகுதியில் உள்ள மாகாணம் கெடா. அதுதான் தமிழில் கடாரம் என அழைக்கப்பட்டது. ‘கெடா’ தேசத்தை கைப்பற்றி சோழ பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததால் ராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரை பெற்றார்.

மலேசியாவுக்கு — அதாவது மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்கு தமிழர்களை கூலி வேலைக்கும், ராணுவப்பணிகளுக்கும் கொண்டு சென்றார்கள். அவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து போன மக்கள் கப்பலில் திரும்பி வரும்போது கிடாரங்காய்களைக் கொண்டு வரு வா ர்காளாம் . இதனால் இதற்கு மதிப்பு அதிகம்

அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் அங்கு சென்று வெற்றி வாகை சூடியதால் அவன் பெயரிலும் கடாரம் ஒட்டிக்கொண்டது .

கடாரம் என்பது கெடா மாநிலத்தின் பழைய பெயராகும். பழங்காலத்தில் இருந்து, இப்போது மலேசியாவின் வரை படத்தைக் காண்போர் கெடா என்ற பெயரைக் காணலாம்

பட்டினப்பாலை என்னும் சங்கத் தமிழ் நூலில் கடாரத்தின் பெயரை காழகம் என்று உருத்திரன் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் . ஆகவே ராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காழகமும் தெரியும்; அதைத்தாண்டி பவளம் கிடைக்கும்  செஷெல்ஸ் மொரீஷியஸ் (ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பவளம் கிடைக்கும் மிகப்பெரிய திட்டு இரண்டு தீவுகளுக்கிடையே இருக்கிறது), மாலத் தீவுகளும் தெரியும்.

இதோ பட்டினப்பாலை வரிகள் ………

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 185–193)

(குண கடல் துகிரும்= மேலைக்கடலிலிருந்து பவளமும்)

*****

மலேசியத் தமிழ் கல்வெட்டுகள்

தகூபா என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு மிகவும் பிரசித்தமானது.

பண்டைய கெடாவில் ஒரு இந்துக் குடியேற்றம் இருந்துள்ளது, இது கர்னல் லோவின் கண்டுபிடிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

ராஜேந்திர சோழன் காலத்துக்கு முந்தைய கல்வெட்டுகள் மலேஷியா, வியட்நாம், தாயலாந்து நாடுகளில் கிடைத்துள்ளது ; இந்தோனேஷியா, போர்னியோ தீவின் காடுகளிலும் சம்ஸ்க்ருத தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவர்கள் எழுதும் லிபி/ எழுத்து எல்லாம் பல்லவர் கால வட்டெழுத்து, பிராமி ஆகியவற்றிலிருந்து வந்ததை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்; அவர்களுக்கு இலக்கியத்தை உண்டாக்கிக்கொடுத்ததும் ராமாயணம், மஹா பாரதம், புத்தமத ஜாதக கதைகள்தான்.

மணிக்கிராமத்தார் என்னும் வணிக்கக்குழு அங்கே சென்று வியாபாரம் செய்ததை பல கல்வெட்டுகள் காட்டுகின்றன. விஷ்ணு  கோவிலில் ஒரு பக்தர் குளம் வெட்டியதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது . நாலாம் நூற்றாண்டு.

பல புத்த விஹாரங்களில் இந்திய பெயர்கள் இருக்கின்றன. இந்தோனேஷியாவைப் பொறுத்த மட்டில் மூலவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு யாகங்கள் தானங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன  வியட்நாமில் ஸ்ரீமாறன்/ தமிழில் திருமாறன் கல்வெட்டு இருக்கிறது இதுதான் மிகப் பழைய கல்வெட்டு (இரண்டாம் நூற்றாண்டு).

*****

தகூபா தமிழ் கல்வெட்டு அவனிநாராயணன் என்ற குளத்தை நாங்கூர் உடையான் வெட்டியதாகச் சொல்கிறது

Tamil inscriptions

An inscription at Takuapa on the Malay Peninsula that indicates that Nangur-Udaiyan dug an artificial lake called Avani-naranam

****

வணிக கட்டுப்பாடுகளை குறித்து நெசெவ் கல்வெட்டு பேசுகிறது

The Neusu Inscription, which may have dealt with trading regulations

****

கீழ்க்கண்ட கல்வெட்டுகள் மலாயாவுக்கு வெளியே உள்ளவை:

போர்னியோவின் குடாய் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் தமிழ் இந்து மன்னர்கள்  யாக யக்ஞம் செய்து தானம் செய்ததை விரிவாக விளம்புகிறது. நாலாம் நூற்றாண்டு.

அவனைத் தொடர்ந்து மேற்கு ஜாவா தீவில் பூர்ணவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன . இவை எல்லாம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இந்துக்கள் அங்கு சென்றதைக் காட்டுகின்றன ; காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள் வர்மன் என்ற பட்டத்தை தாங்கி ஆட்சி செய்தனர்.

4th century Sanskrit Yupa inscriptions of Mulavarman, Kutei East Kalimantan, Indonesia

The oldest inscriptions in Indonesia are the Kutai inscriptions, which are found on stone pillars in Borneo. They are written in Sanskrit and date to the 4th century CE.

Why are the Kutai inscriptions significant?

They suggest that Tamil Hindu traders and priests were established in Indonesia by 350–400 CE

They show that Vedic ideas were popular with the Tamils

They indicate that the Tamils used Sanskrit to praise a king in Indonesia.

Purnavarman followed Mulavarman (West Java Sanskrit Inscription)

Old Malay inscriptions

The Kedukan Bukit Inscription from South Sumatra, Indonesia, which dates from the 7th century CE

The Sojomerto inscription from Central Java, which dates from the 7th century CE

Other inscriptions from the 7th to 10th centuries discovered in Sumatra, Java, and other islands of the Sunda archipelago

Sanskrit inscriptions

Many Sanskrit inscriptions have been found in Malaysia and Indonesia

The Buddhist Bodhigarbhālaṅkāralakṣa-dhāraṇī (mantra) inscription was found in Gua Berhala, a cave in Perlis, Malaysia

Other inscriptions

The Tarumanegara Stone in West Java, which is believed to bear the oldest known Malay script dating as far back as 400 CE

 —subham—

Tags- கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய் , பெயர் காரணம், மலேசியாவில் தமிழ் கல்வெட்டு

ப்ளாக் வாரண்ட் : தொலைக்காட்சித் தொடர் (Post No.14227)

 Charles Chopraj

  Tihar Jail Delhi

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,227

Date uploaded in Sydney, Australia – –21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  4-2-25 kalkionline இதழில் வெளிவந்துள்ள கட்டுரை 

அதிர்ந்து பதற வைக்கும் ஒரு டி.வி. தொடர்!

சின்னத்திரை

ப்ளாக் வாரண்ட் : தொலைக்காட்சித் தொடர்

ச. நாகராஜன்

நெட்ஃப்ளிக்ஸில் ஜனவரி 10, 2025 முதல் பார்த்து மகிழ (இல்லை, நடுங்க) வைக்கும் ஹிந்தி சீரியல் ப்ளாக் வாரண்ட்.

ப்ளாக் வாரண்ட் என்றால் சுருக்கமாக தூக்கு தண்டனை என்று அர்த்தம்!

 டெல்லியில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திஹார் ஜெயிலை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெடுத்துச் சித்தரிக்கும் இது  The Snake, Gallows, Macho, Team Player, Prison Food,  The Blanket, Double Life Sentence ஆகிய ஏழு எபிசோடுகளைக் கொண்டுள்ளது.

 சுனித்ரா சௌத்ரி மற்றும் சுனில் குப்தா படைத்த ப்ளாக் வாரண்ட் என்ற தொடரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இதை விக்ரமாதித்த மோத்வானெ, சத்யன்ஷு சிங், அர்கேஷ் அஜய்,  ரோஷின் ரவீந்திர நாயர் மற்றும் அம்பிகா பண்டிட் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

 சிறை என்றும்  கைதி என்றும் ஒரு நிமிடம் பேசிவிட்டு அதை மறந்து போவது அனைவரது இயல்பு தான். ஆனால் திஹார் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது, என்பதையும் அங்குள்ள கைதிகளிடையே உள்ள அதிகாரப் போட்டியையும், அதில் வெற்றி பெற்று தலைமையிடம் வகிக்கப் போராடும் குழுக்களைப் பற்றியும் இதில் பார்த்துத் திகைக்கலாம்.

தூக்கு தண்டனை எப்படி போடப்படுகிறது என்பதை ஒரு முறை அல்ல மூன்று முறை இதில் பார்த்து வேதனைப்படலாம்.

டிஎஸ்பி தோமராக நடிக்கும் ராகுல் பட் நம்மை நடிப்பால் வியக்க வைக்கிறார்.

காயத்ரி மந்திரம் சொல்லும் ஜெயிலர் சுனில்குப்தாவாக வரும் ஜஹன் கபூரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது.

ஜெயிலுக்குள் பாம்பு, போர்வைத் திருட்டு, கள்ள வியாபாரம் அடிதடி, கொலை ஆகியவற்றையெல்லாம் பார்த்து வியக்கிறோம்.

 ஜெயிலருக்கும் கைதிகளுக்கும் இடையே இருக்கும் உறவு அதிசயமானது. பங்காளி உறவா அது? அட்ஜஸ்ட்மெண்ட் உறவா?

 சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜின் ஆதிக்கம் ஜெயிலில் எப்படி இருந்தது, அவனது ராஜ வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இதில் பார்த்து பிரமிக்கலாம்.

தனிக் குரலுடனும் தனி நடையுடனும் சோப்ராஜாக வரும் சிதாந்த் குப்தா நமது பாராட்டுக்குரியவர்.

 இந்த ப்ளாக் வாரண்ட்- சீரியலை எழுதிய சுனில் குமார் குப்தா 35 வருடம் திஹார் ஜெயிலி ல் ஜெயிலராக இருந்தவர். சோப்ராஜ் உள்ளிட்ட கைதிகளை அன்றாடம் பார்த்தவர்.

தனிப் பேட்டியில் கீழ்க்கண்ட பல தகவல்களை \அவர் தெரிவிக்கிறார் (இந்தத் தொடரில் அல்ல)

 அப்ஜல் குரு என்ற தீவிரவாதிக்கு ப்ளாக் வாரண்ட் கொடுத்து தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது அவன் பாடிய பாலிவுட் பாடல்: அப்னே லியே ஜியே (நீ உனக்காக வாழ்ந்தால் நீ வாழ்ந்தது வீண், உலகிற்காக வாழ்) –தூக்கு தண்டனையே கூடாது என்ற கொள்கையை முன் வைக்கிறார் குப்தா. 82 சதவிகித கைதிகள் ஒருவித வசதியுமின்றி மிக மோசமான பின்னணியில் இருந்து வருபவர்கள். அவர்களில் குற்றமிழைக்காதோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வக்கீலை வைத்துக்கொள்ளக் கூடப் பணமில்லதவர்கள். ஒரு நாளைக்கு 78 கொலைகள் நடக்கும் தேசத்தில் ஜெயில் தண்டனை ஒரு தீர்வு அல்ல. ஏராளமான சீர்திருத்தங்களை வெளியிலும் செய்ய வேண்டும். ஊழல் ஊறிக் கிடக்கும் சிறைகளிலும் செய்ய வேண்டும் என்கிறார் இவர்.

ஒரு கேஸ் முடிய ஆகும் காலம் யாராலும் சொல்ல முடியாத ஒன்று என்று கூறி வேதனைப்படும் இவர் தனது அடுத்த புத்தகமானது ஜெயில் எஸ்கேப் பற்றி இருக்கும் என்கிறார். ஒரு கைதி போலீஸ் ஆபீஸர் உடையில் தப்ப, இன்னொரு கைதி தூங்கிக் கொண்டிருந்த ஜெயில் அதிகாரியின் யூனிபார்மை அணிந்து தப்ப இது போன்ற விவரங்கள் எல்லாம் இவரது அடுத்த புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் பரிதாபகரமான ஜெயில் கைதிகளின் வாழ்க்கை மிகவும் சீர்திருத்தி அமைப்பட வேண்டிய ஒன்று என்ற விழிப்புணர்ச்சியை ப்ளாக் வாரண்ட் ஏற்படுத்துகிறது.

ப்ளாக் வாரண்ட் தொலைக்காட்சியின் ஏழு எபிசோடுகளையும் பார்த்தால் நமக்குத் தோன்றுவது –

ப்ளாக் வாரண்ட் – வேண்டவே வேண்டாம், யாருக்கும், எப்பொழுதும்!

***

Hindu Crossword 20225 (Post No.14,226)

Written by London Swaminathan

Post No. 14,226

Date uploaded in Sydney, Australia – 20 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1   2 3 4 5
           
6          
           
7          
          8
9 1011       
       12   
13          
       14    
15     16     
           
           
 17         18K19  

 ACROSS 

1.name of Vaishnavite text and sage

6 three eyed Shiva

7 temple puja rules

8 without; used in north Indian languages; minus, in the absence of

9 Rishi who diverted River Kaveri into Tamil Nadu; who levelled Vindhyas for laying road; who crossed (drank) ocean.

13 Festoons; Sanskrit word

14 Seer; Sanskrit word

15 Original name of Buddha

19 Good smell; Sanskrit word  

  DOWN

1 famous Prakrt anthology compiled by King Hala

2 girl’s name; without impurities; pure

3 devotional mystic Hindi poet and saint; his poems are in Sikh scriptures too.

4 Lord Krishna’s chief queen

5 Bhanabhatta’s Sanskrit novel written 1300 years ago.

10 garden; grove; Prakrit word

11 rituals done to departed souls

12 ghee in Sanskrit

15 Parvati; also custom of wife burning herself with the dead husband.

16 girl’s name; desire in Tamil and Sanskrit

18 heat; warmth, anger in Sanskrit       ↑

20225

G1ARGA2 K3 R4 K5
A   M A U A
T6RAYAMBAKAD
H M L I M A
A7GAMA R I M
S R    ANIB8
A9GA10S 11TYA I A
P  R   G12  R
T13ORANA R  I
A  R   R14ISHI
S15IDDHA 16RTHA 
A  H S A M 
T  A H   S 
I 17 SHANAMUSU18K19  

–subham—

Tags –Hindu Crossword 20225

தமிழ் தெரியுமா  20225 ?  (Post No.14,225)

Written by London Swaminathan

Post No. 14,225

Date uploaded in Sydney, Australia – 20 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக் குறிகளையும் பின்பற்றுக.

20225

1  2  
      
3    ↑4
  5 6 
↑7    ←8

ACROSS  குறுக்கே

 1.ராம சரித மனஸ் என்ற ஹிந்தி ராமாயணத்தின் ஆசிரியர்

3.மெதுவாக ; மதுரைப் பகுதியில் அதிகம் புழங்கும் சொல்.

5.பொதுவாக சிவனுக்குள்ள பெயர்; ஒரு தாவரத்துக்கும் பெயர் 

7.உலகம் என்பதற்கான சொல்

8.கடவுள் ; ஸம்ஸ்க்ருதச் சொல்லின் வடிவம் ←  

DOWN கீழே

1.சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மலர்; வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும்

2.செம்பு; கோவில்களில் , மின்சாரக் கம்பிகளில், பயன்படும் உலோகம்.

4.சங்க காலப் பாடல்களில் காணப்படும் சிறிய குழு; வாயமொழி/ சத்தியம் தவறாதவர் ↑

5.ஏழரை ஆண்டுக் காலத்துக்கு எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் கிரகம்.

6.நாம் வாழும் பெருநிலப் பரப்பு ; அதர்வண வேதத்தில் இதன் பெயரில் ஒரு சூக்தமே இருக்கிறது

7.அம்பாசமுத்திரத்தின் சுருக்கமான பெயர் ↑

*************

விடைகள்

20225

து1சிதா2ர்
ம்  மி 
பை3ய   கோ↑4
ம் ச5ம்பூ6 
அ↑7னி மிசா←8

–SUBHAM—

TAGS-தமிழ் தெரியுமா  20225 ?

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?– 27 (Post No.14,234)

Written by London Swaminathan

Post No. 14,224

Date uploaded in Sydney, Australia – 20 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 27

The aboriginal peoples of Australia

சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டல் மட்டம் குறைவாக இருந்தது; அப்போது ஆதிவாசிகள் நீண்ட படகுகளில் நட்சத்திரங்களையும் விடி வெள்ளி (venus) போன்ற கிரகங்களையும் துணையாக வைத்துக்கொண்டு துணிகரப் பயணம் மேற்கொண்டனர். நிலப்பரப்பைக் கண்ட இடத்தில் அப்படியே தங்கத் துவங்கினார்கள். இதனால் பிரம்மாண்டப் பரப்புடைய ஆஸ்திரேலியாவின் எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு இன ஆதிவாசிகள் காணப்படுகின்றனர். இந்த இனங்களின்– அவர்கள் பேசும் மொழிகளின் -எண்ணிக்கை 250.

மீன்பிடித்தும், கங்காரு போன்ற மிருகங்களை வேட்டையாடியும்  வாழ்க்கை நடத்தினர் அவர்கள் பூமராங் என்ற வினோத ஆயுதத்தையும் , டிட்ஜ்ரோடு போன்ற இசைக்  கருவிகளையும் கண்டு பிடித்தனர் . குடியேறிய கதைகளைப்  பாடல்கள் மூலம்  பரம்பரை பரம்பரையாகப் பரப்பி வந்தனர் .

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மிகவும் குறைவான ஆடைகளையே பயன்படுத்தினர்; பலர் நிர்வாணமாகவும் இருந்தனர்; கால நிலைக்கேற்ப உடைகளை மாற்றிக்கொண்டனர்.

நாட்டின் குளிர் பிரதேசங்களில் வசித்தோர் மிருகத்தின் தோலினால் ஆன ஆடைகளை அணிந்தனர் ; பாலைவனப்  பகுதிகளில் நாடோடி வாழ்க்கை நடத்தியோர், உடைகளை அணியவில்லை சிட்னி நூலக வாயிலில் உள்ள கதவுகளில் காணப்படும் படங்கள் அவர்களை இவ்வாறு காட்டுகின்றன. தோலாடைகள் மேல் சாயங்களைப் பூசிக்கொண்டனர்.

உள்ளே உள்ள காட்சி சாலையில் தோலாடை அணிந்தவர்களையும் காண முடிகிறது .

****

உணவு வகைகள்

மீன்களையும் மிருகங்களையும் பெரும்பாலும் உண்ட ஆதிவாசிகள் செடி கொடிகளின் பழங்கள், விதைகளையும் சாப்பிட்டனர். அவைகளின் மருத்துவப் பலன்களையும் அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்திருந்தனர்

பழங்குடி மக்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் வெள்ளை அல்லது செம்மண் நிற களி மண்ணினால் உடலில் பலவகையான படங்களையும் கோடுகளையும் வரைந்து கொண்டனர்; உடலில் விபூதி போல வெண்ணிறக் கோடுகளை பூசிக்கொண்டனர்

இவைகளை வைத்தே எந்த இனம் என்று அடையாளமும் காண முடியும். அவைகளுக்கு அவர்கள் பல ஆன்மீக விளக்கத்தையும் முன்னோர்களின் கதைகளையும் கூறினார்கள்

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து வியாபாரத்துக்காக வந்தவர்கள் மூலம், முதல் வெளி உலகத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் வெள்ளைக்காரர்கள் வந்து பல இடங்களை ஆக்ரமித்தனர் . முதலில் குற்றம் செய்த , சிறையில் அடைக்கப்பட்ட, கைதிகளைக் குடியமர்த்த ஆஸ்திரேலியாவைப் பயன்படுத்தினர். பின்னர் பல இடங்களில் தங்கம் கிடைப்பதை அறிந்தவுடன் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் குடியேறினர் நவீன யுகத்தில் வியாபாரத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் மக்கள் வரத்துவங்கினர்[;  மருத்துவ மற்றும் கம்பியூட்டர் தொழில் நிமித்தம் இந்தியர்கள் குடியேறினர். இலங்கையிலிருந்து நிறைய தமிழ் அகதிகளும் பஞ்சாபிலிருந்து பல சீக்கிய அகதிகளும் குடியேறினார்கள் .

இப்போது ஆஸ்திரேலிய  பழங்குடி மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் அவர்கள் உரிமைக்காகப் போராட முடியவில்லை. ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர்கள் கொண்டாடும் ஆஸ்திரேலியா டே AUSTRALIA DAY  என்னும் நாளை அவர்கள் ஆக்ரமிப்பு தினம் என்று சொல்லி எதிர்ப்பு தினமாகக் கடைப் பிடித்து வருகிறார்கள் 

.

****

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையையும் இணைத்துள்ளேன்

ஆஸ்திரேலிய  பழங்குடி மக்களின் சுவையான வரலாறு

சுமார் 50,000 முதல் 60,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்! 

20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை. 

ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லேகாண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.

250 மொழிகள், 250 குழுழுக்கள்

ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.

இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.

ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.

முன்னொரு காலத்தில்

“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை. 

முதல் குடியேறிகள்

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு  ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர்.

உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க

சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.

1788–ல் முதல் காலனி

உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு  இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.

கேடயங்கள்

ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்

ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.

ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம்  இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.

—subham—-

TAGS- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 27, ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார், பழங்குடி மக்கள்

கனவுகள் பலிக்குமா? (Post No.14,223)

 Carl Jung

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,223

Date uploaded in Sydney, Australia – –20 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

17-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை! 

ஸ்வப்ன சாஸ்திரம்

கனவுகள் பலிக்குமா? 

ச.நாகராஜன் 

கனவுகள் பலிக்குமா?

காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி இது.

நமது சாஸ்திரங்கள் கனவுகளின் பலன்களை வெகுவாக விரித்துக் கூறுகின்றன.

அன்றாட சூரிய வழிபாட்டில் துர் ஸ்வப்னத்தைத் தராதே என்று தொழுது வேண்டிக் கொள்கிறோம்.

சுமார் 15000 ஸ்லோகங்கள் கொண்ட அக்னி புராணம் 229ம் அத்தியாயத்தில் கனவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி நம்மை பிரமிக்க வைக்கிறது.

நல்ல கனவுகள் வந்தால் பின்னர் தூங்கக் கூடாது என்பது அது தரும் அறிவுரை. முதல் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஒரு வருடத்திலும், இரண்டாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஆறு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் மூன்று மாதத்திலும் நான்காம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் 15 நாட்களிலும் சூரிய உதய சமயத்தில் காணப்படும் கனவுகள் பத்து நாட்களிலும் பலிக்கும் என்கிறது இந்த புராணம்.

கனவில் யானை,குதிரை, தங்கம், எருது அல்லது பசுவைப் பார்த்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதே போல்ச சுஸ்ருத சம்ஹிதாவும் கனவின் பலன்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

கனவுகள் இல்லாத இலக்கியமே இல்லை.

சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதை என்றே ஒரு காதை இருக்கிறது. அதில் கண்ணகி நடக்கப்போவதைக் காண்கிறாள்.

சீதை அசோகவனத்தில் துன்பத்துடன் வருந்தும் போது திரிஜடை தான் கண்ட கனவை சீதையிடம் கூறி ஆறுதல் தருவது பிரசித்தமானது.

பத்து இடங்களில் கனவு என்னும் சொல்லை ஆளும் திருவள்ளுவர் கனவு நிலை உரைத்தல் என்ற ஒரு அதிகாரத்தையே கனவிற்காக ஒதுக்குகிறார்.(குறட்பாக்கள்: 819,1054,1211,1213,1214,1215,1216,1217,1219,1220

உலகின் ஆகப் பெரும் கணித மேதையான ராமானுஜன் “நாமகிரி அம்மன் கனவில் எனக்கு உள்ளொளி தருகிறாள்” (Namagri would bestow insight in dreams) என்று கூறி தனது கணிதக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் கனவுகளே என்கிறார்.

ஆப்ரஹாம் லிங்கன் 1865ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கண்ட கனவை நண்பர்களிடம் விரிவாகக் கூறினார். அதன்படி தனது மாளிகையில் கிழக்கே இருந்த அறையை நோக்கி அவர் செல்கையில் அங்கு ஏராளமானோர் குழுமி இருக்க சவப்பெட்டி ஒன்றையும் அவர் காண்கிறார். யார் அது என்று கேட்டபோது ஜனாதிபதி என்ற பதில் வருகிறது. தனது மரணத்தை முன்பாகவே கனவில் காண்கிறார் லிங்கன். இதை  வார்ட் ஹில் லமோன் என்பவர் ரிகலெக் ஷன்ஸ் ஆஃப் லிங்கன் என்ற நூலில் விவரிக்கிறார்.

கனவு பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த, வித்தியாசமான பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் கார்ல் ஜங். (பிறப்பு 1875 மறைவு 1961)

ஒரு சமயம் அவரிடம் சிகிச்சை பெற வந்த பெண்மணி தான் கண்ட கனவை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் தனது கனவில் ஒரு மதிப்புள்ள நகை தனக்குத் தரப்பட்டிருந்ததையும் அது வண்டு போலச் செய்யப்பட்ட அணிகின்ற கல் என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜன்னலை யாரோ தட்டும் சப்தத்தைக் கேட்ட ஜங் ஜன்னலைத் திறக்க அவர் கையில் ஒரு பொன்வண்டு வந்து உட்கார்ந்தது. “இதோ நீங்கள் கூறும் வண்டு” என்று ஜங் அந்தப் பெண்மணியிடன் அந்த வண்டைக் காட்ட தான் கனவில் கண்ட அதே வண்டை அவர் பார்த்து பிரமித்து விட்டார்.

ஜங் தன்னிடம் வருவோரிடம் அவர்கள் கண்ட கனவுகளைப் பற்றித் தீவிரமாக விசாரிப்பார். அதற்குத் தக சிகிச்சையை அளிப்பார். ஏராளமான சுவையான கேஸ்கள் அவரிடம் வந்தன. அதையெல்லாம் பார்த்து வியந்த அவர் கனவிற்கான பலன்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

உலகெங்கிலுமிருந்து அவருக்குப் பேசுவதற்கான அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அங்கெல்லாம் அவர் தனது ஆய்வைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

அறிவியலும் நமது சாஸ்திரங்களும் ஆமோதிக்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று கனவு!

நல்ல கனவைக் காணலாம்;  “கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்று கூடப் பாடலாம்!

***

My Visit to the State Library in Sydney (Post No.14,222)

Written by London Swaminathan

Post No. 14,222

Date uploaded in Sydney, Australia – 19 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the State Library ,NSW in Sydney today 19th February 2025. The library always runs special exhibitions in separate halls. It has rare collections like the British Library in London which I frequently visit. Like the British Library the entry is free. But if you need books from the special collections, you must become a member, which is also free. I went round the exhibitions and browed through some books. Library has a huge collection of books, archives and paintings.

Directions 

  • The library is a short walk from Martin Place station.
  • The library’s phone number is (02) 9273 1414.
  • The library’s email address is enquiries@sl.nsw.gov.au.

Features

  • The library has two public reading rooms: the State Reference Library and the Mitchell Library. 
  • The library has a cafe, bookshop, and galleries. 
  • The library has free entry and Wi-Fi. 
  • The library has free exhibitions and a public events program. 
  • The library has a collection of over five million items. 
  • The library has rare and valuable books, manuscripts, paintings, and more in its underground stacks. 

Address

1, Shakespeare Place,

Sydney, NSW 2000 Australia

The library has 5000 books on Shakespeare. It is in a separate hall called The Shakespeare room.

****

London Swaminathan near the NSW State Library  in Sydney

Temporary Events and Exhibitions

Some exhibitions are temporary and are on show for a limited period of time only

PIX Exhibition

PIX was Australia’s first pictorial news weekly. It hit the newsstands from 1938 . PIX was popular for over thirty years and ceased publication in 1972. It was full of sensational pictures.

Peter Kingston’s beautiful paintings are displayed in the library. Photography is allowed in Exhibitions.

The library has something for everyone even if one is not a serious reader. I took lot of pictures. After viewing all that is on display one can have coffee and snacks in the Café. Opening hours and more information about the day to day events are available from the Library’s website.

All book lovers must visit the library.

–Subham—

Tags–  State Library, My visit, Sydney, PIX Magazine Exhibition, Peter Kingston’s  paintings.