சிட்னி நூலகத்துக்கு விஜயம் -26 (Post.14,221)

London Swaminathan in front of Sydney NSW State Library 

Written by London Swaminathan

Post No. 14,221

Date uploaded in Sydney, Australia – 19 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

.ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 26;

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு அடிக்கடி போய் புஸ்தகங்களைப் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போடும் பழக்கம் இருப்பதால் எந்த நாட்டுக்குப் போனாலும் நூலகத்துக்குச் செல்லும் வழக்கம் உண்டு. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நூலகம் தலைநகர் கான்பெர்ராவில் இருந்தாலும் அதற்கடுத்த முக்கியத்துவம் பெற்ற நூலகம் சிட்னி நகரில் உள்ளது .

நியூசவுத் வேல்ஸ் ஸ்டேட் லைப்ரரி என்ற பெயருடைய இந்த நூலகத்தில் ஐம்பது லட்சம் புஸ்தகங்களும், ஓவியங்களும் கலைப் பொருட்களும் ஆவணங்களுமுள்ளன.  அவ்வப்போது தற்காலிக பொருட் காட்சிகளும் நடக்கும்.

பிரிட்டிஷ் லைப்ரரியைப் போலவே அனுமதி இலவசம். புகைப்படங்களும் எடுக்கலாம். ஆனால் ஸ்பெஷல் கலெக்சன் எனப்படும் அரிய  நூல்கள் வேண்டுமானால்  மெம்பர் ஆக வேண்டும்..அதுவும் இலவசமே.

நூலகத்தில் ஷேக்ஸ்பியர் அறை என்ற இடத்தில் ஷேக்ஸ்பியர் பற்றி ஐயாயிரம் புஸ்தகங்கள் உள்ளன.

அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை லைப்ரரியின் வெப் சைட்டிலிருந்து பெறலாம்

மெட்ரோ ரயிலில் சென்றால் நகரின் மையத்திலுள்ள மார்ட்டின் பிளேஸ் ஸ்டேஷனில் இறங்கி நடந்தே செல்லலாம்

நான் பிப்ரவரி 19 ஆம் தேதி, 2025 அங்கு சென்றபொழுது நூலகத்துக்குள் சென்று புஸ்தகங்களைப் புரட்டிப்பார்த்தேன் உட்கார்ந்து படிக்க நேரமில்லை;  இரண்டு சிறப்பு கண்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது

பீட்டர் கிங்ஸ்டன் என்பவரின் அருமையான ஓவியங்கள் பெரிய அறைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு   உள்ளன. அதே போல ஆஸ்திரேலியாவின் முதல் படங்கள் மட்டுமே உள்ள வாராந்திர இதழ் பற்றிய காட்சியும் உள்ளத்து; பிக்ஸ் PIX  (1938 to 1972) என்னும் அந்த வாராந்திர பட இதழ், பரபரப்பு ஊட்டும் படங்களை வெளியிட்டு மக்களை மகிழ்வித்தன. அந்த முப்பது ஆண்டு இதழ்களின் படங்கள் காட்சியில் உள்ளன; அதுவும் இலவசமே.

நூலகத்தில் ஷேக்ஸ்பியர் அறை என்ற இடத்தில் ஐயாயிரம் புஸ்தகங்கள் ஷேக்ஸ்பியர் பற்றி உள்ளன.

பீட்டர் கிங்ஸ்டன் வரைந்த ஓவியங்கள் அற்புதமாக இருக்கின்றன 

அவ்வப்போது  நடக்கும்  இது போன்ற  காட்சிகளைத் தவிர எப்போதும் காட்சியில் உள்ள விஷயங்களும் இருக்கின்றன.

நூலகத்தின் முகவரி

State Library ,NSW in Sydney

Directions 

  • The library is a short walk from Martin Place station.
  • The library’s phone number is (02) 9273 1414.
  • The library’s email address is enquiries@sl.nsw.gov.au.

·         Address

·         1, Shakespeare Place,

·         Sydney, NSW 2000 Australia.

புஸ்தகக் காதலர்கள் அனைவரும் போகவேண்டிய நூலகம் இது.

–subham—

Tags–பீட்டர் கிங்ஸ்டன், ஓவியங்கள் ,ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!, Part 26, சிட்னி நூலகம், விஜயம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 2 (Post No.14,220)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,220

Date uploaded in Sydney, Australia – –19 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-2-2025அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 2

ச. நாகராஜன்

கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:

பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்

தென்னுன் டேனிற் றீஞ்சுவை  செஞ்சொற் கவியின்பம்

கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு

அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்

(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)

தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் ‘செம் சொல் கவி இன்பம்’ போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.

தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?

ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவன் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறான்.

உருக்கமான ஒரு இடத்தை அவன் தனது கவிதா வரிகளினாலேயே காண்பிக்கிறான் இப்படி:


‘”
கண்ணே வேண்டும்” என்னினும்ஈயக் கடவேன்என்
உள் நேர் ஆவி வேண்டினும்இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல்,
மண்ணே! கொள் நீமற்றையது ஒன்றும் மற‘ என்றான். 32

கெஞ்சுகின்ற சந்தத்தில், ராமனை காட்டுக்கு அனுப்பாதே என்று சொல்லக் கூட முடியாமல், மற்றைய வரத்தை மட்டும் மற என்கிறான்மன்னன்  தசரதன்.

ஆங்காங்கே நகைச்சுவையையும் அவன் தருவதற்குத் தவறவில்லை.

எடுத்துக்காட்டாக அனுமன் ராவணனிடம் வாலியைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். வாலி தன் வாலில் ராவணனைச் சுற்றிச் சுழற்றிக் கொண்டு போனான். ஆகவே ராவணனுக்கு வாலியின் வால் மீது பயம்.இது அனுமனுக்குத் தெரியும்.

ஆகவே ராவணனிடம் வாலியைப் பற்றி அவன் கூறும் போது.,

அஞ்சலை அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே

வெஞ்சின வாலிமீளான்வாலும் போய் விளிந்ததன்றே”

என்கிறான்.

வாலி போய் விட்டான். மீளமாட்டான். அவன் வாலும் போய் விட்டதுபயப்படாதே என்று ராவணனைக் கிண்டல் செய்கிறான் அவன்.

இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகை பற்றிய காவலைச் சொல்கிறான்.

அந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை அவன் சொல்லும் போது நகைச்சுவையும் தவழ்கிறது; இலங்கையின் அளப்பற்ற வீர பராக்ரம காவலும் புரிகிறது.

ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்

ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

               ஊர்தேடு படலம் பாடல் எண் 139

வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்ட பெரிய கைகளை உடையவர்கள் ,பிறைச் சந்திரன் போன்ற வக்கிரமான பற்கள் வெளியே விளங்க இருப்பவர்கள் அதாவது சிரித்தவாறு புன்முகத்துடன் இருப்பவர்கள், பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்

இந்திரஜித்தின் வீட்டைக் காவலர்கள் காவல் காத்த லட்சணம் இது தான். 

கம்பன் கையாண்ட வண்ணங்கள் 96

10569 பாடல்களில் அவன் சுமார் 43 வகையான விருத்த வகைகளைக் கையாளுகிறான்.

கம்பனில் திளைத்துக் குளிக்கும் கவியான கே.என். சிவராஜ பிள்ளை கவி இலக்கணமாகச் சுட்டிக் காட்டுவது ஏழு பண்புகளை.

மாதுரியம், தெளிவு, வளம், பாவிகம் (Idealisation), அணி, இசை, தொனிப்பொருள் ஆகிய அந்த ஏழையும் கம்பன் தன் காவியத்தில் எப்படிக் கட்டிக் காத்து பரிமளிக்க வைத்தான் என்பதை கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை என்ற நூலில் அவர் 36 பாக்களில் விளக்குகிறார்.

கம்பனது கவிதைளில் தமிழ் யாப்பிலக்கணம் விவரிக்கும் 120 அணிகளையும் கணலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு யமகப் பாடலைப் பார்ப்போம்

சுந்தரகாண்டத்தில் ஊர் தேடு படலத்தில அடுத்தடுத்து நான்கு யமகப் பாடல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று இது.

அஞ்சு வணத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம்                  

அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள்                  

அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும்                       

அஞ்சு வணத்தின் முத்தொளி ராரந் தணி கொண்டாள் 

இலங்கா தேவியின் தோற்றத்தை கம்பன் இந்தப் பாடலில் வர்ணிக்கிறான்.

பாடலின் பொருள்:

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் – வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஆகிய ஐந்து நிறங்கள் கொண்ட ஆடையை உடுத்தி இருந்தாள்

அரவெல்லாம் அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் – பாம்புகளெல்லாம் கண்டு பயப்படும் கருடனைப் போன்ற கடும் வேகம் கொண்டவள்

அருள் இல்லாள் – இரக்கம் என்பதே சற்றும் இல்லாதவள்

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் – அழகிய பொன்னாலான மேலாடையை உடையவள்

அலை ஆரும் – அலை பொருந்திய

அம் – கடல் நீரில்

சு – அழகான

வள் – ஒளி பொருந்திய

நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சங்கினின்று பிறந்த முத்துக்கள் ஒளி வீசும் மாலையாகிய அணிகலனைத் தரித்திருந்தாள்.

எப்படி இலங்கா தேவியின் வர்ணனை?

ராவணனின் பெருமை, ராம ராவண யுத்தம், வாலி வதம், அனுமனின் சொல் நயம், பரதனின் மாண்பு, லட்சுமணனின் சேவை, குகனின் நட்பு என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து அவனது கவி நயத்தைச் சொல்லப் போனால் நாள் ஆயிரமும் போதாது; நா ஆயிரமும் போதாது.

கம்பன் திருவரங்கத்தில் தன் கவிதையை அரங்கேற்ற விரும்பினான். ஆனால் அங்குள்ளவர்கள் தில்லை திட்சிதர்கள் ஒப்புக் கொண்டால் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்றனர். தில்லை சென்ற கம்பன் அங்குள்ள 3000 தீட்சிதர்களையும் எப்படி ஒருங்கே கூட்டுவது என்று திகைத்தான். ஆனால் அங்கு ஒரு குழந்தை இறக்க 3000 தீட்சிதர்களும் ஒருங்கே கூடினர்.

நாகபாசப்படலத்தைக் கம்பன் பாட இறந்த குழந்தை உயிர் பிழைத்தது. இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய  அனுமதியும் கிடைத்தது. அரங்கேற்றமும் தடையின்றி நடந்தது. கம்பனின் வாழ்வில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு. இவற்றைப் பலத் தனிப்பாடல்கள் விளக்குகின்றன.

சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி, மும்மணிக்கோவை உள்ளிட்ட பல நூல்களையும் கம்பன் படைத்துள்ளான்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்

என இவ்வாறு ராம நாமத்தின் சிறப்பைக் கம்பன் கூறுகிறான்..

ராம நாமத்தைத் துதிப்போம்; அதன் பெருமையை உணர்த்தும் கம்பனைப் போற்றுவோம்.

நன்றி வணக்கம்.

தமிழ் தெரியுமா18225 ? (Post.14,219)

தமிழ் தெரியுமா18225 ?

Written by London Swaminathan

Post No. 14,219

Date uploaded in Sydney, Australia – 18 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

18225

1  
   
2 ↑3
   
   4 

குறுக்கே 

1.- இந்த கிராமத்தில் பிறந்தவன் பெரிய விகட கவி ஆனான். 

2.- கொட்டினால் வலிக்கும் ; மண் கூடு கட்டி வசிக்கும்; பறக்கும். 

4 — பாய்ந்தால் —–; பதுங்கினால்  பூனை.

4. ← ஜகந்நாதர் கோவில் கொண்ட இடம்; நகரம் என்றும் பொருள்;

கீழே

1. — தென்னை மரத்தின் செய்யுள் வடிவம்

2. -பெண்ணுக்கும் பெயர்; நாட்டின் தென் கோடிக்கும் பெயர்

3.↑ –பாட்டுப் பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர்; சங்க காலச் சொல்.

3.-  காசியிலகோவில்கொண்ட தேவி;  வீட்டில் அழைக்கும் சுருக்கமான  பெயர். 

18225

தெ1னாலி
ங் 
கு2வி↑3
 சா
ரிபு4லி

 –subham—-

 tags- தமிழ் தெரியுமா18225 ?

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; வித்தக விநாயக  விரைகழல் சரணே ( Post No.14,218)

Written by London Swaminathan

Post No. 14,218

Date uploaded in Sydney, Australia – 18 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; final part; நிறைவு 

வள்ளுவனும் அவ்வையாரும் இறைவனின் பாத  கமலங்களைத் தொழுது நூல்களைத் துவக்கியதைக் கண்டோம் ; விநாயகர் அகவலில் அவ்வையார், பாதங்களில் சரணடைந்து நூலை/ துதியை நிறைவு செய்கிறார்

வித்தக விநாயக விரைகழல் சரணே – வரி 72.

அதற்கு முன்னர் ஐந்தெழுத்தின் மகிமையை, பொருளை உணர்த்தி , உயர்ந்த தத்துவங்கள் கூறும் நிலையை அடைய உதவியதாகவும் நன்றிப்  பெருக்குடன் குறிப்பிடுகிறார்.

இது உண்மையில் பலசுருதி ஆகும். யார் யார் எல்லாம் இந்த அகவலைப் பொருள் உணர்ந்து படிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை இது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட…….

…………………………..

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

இதோ கடைசி நான்கு வரிகள் :-

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே.

அதற்கு முந்தைய இரண்டு வரிகளில்

திருநீறு பூசிய ,தவ வேடம் தாங்கிய, சிவனடியார்களின் சத் சங்கத்தில் தன்னைச் சேர்த்ததாலேயே இந்த உயர் நிலை கிடைத்தது என்றும் சொல்கிறார். துவக்கத்திலேயே குருவின் பெருமையைச் சொன்னார்; இப்போது சத் சங்கத்தின் / அடியாரின் பெருமையைச் சொல்கிறார்

அதாவது உயர் நிலையை அடைய தொண்டர் குழாத்தில் இருக்கவேண்டும்; அப்படியில்லாவிடில் சாண் ஏறி முழம் சறுக்கிய கதை ஆகிவிடும் .

இதை அவ்வையார், ஆதி சங்கரர் , அபிராமி பட்டர் எல்லோரும் வலியுறுத்துகின்றனர் :

சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம் ஆதி சங்கரர்,’)

பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்  வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.

****

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

****

வள்ளுவர் அறிவுரை:

தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:


ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)


ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !

*****

அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:


“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.
சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!

****

மாணிக்கவாசகரும் திருமூலரும்இதை அவ்வைக்கு முன்னரே பாடிவிட்டனர்

தாமே தமக்குச் சுற்றமுந்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 45. யாத்திரைப் பத்து

****

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனு மாமே.”

என்ற திருமூலர் வாக்கை இங்கு நினைவுகூர்க. இதனால், இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை நல்கும் என்பது கூறப்பட்டது.

இந்தப்  பாடல்களில்  பகவத் கீதையில் கண்ணன் சொன்ன உத்தரேத் ஆத்ம நாத்மானம்  (நமக்கு நமே நண்பன் நமக்கு நாமே எதிரி ) கருத்தும் வருவதைக் கண்டு மகிழ்க.

****

இதற்கும் முன்னதாக உபநிஷதம் சொல்லும் வரிகளை அவ்வையார் சொல்கிறார் –

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

“anor aniyan mahato mahiyan” (Katha Upanisad 1-2-20), meaning “God is smaller than the smallest and greater than the greatest.”

இறைவன் அணுவுக்கும் அணுவானவன்/ சிறியவன்; உலகில் / பிரபஞ்சத்தில் காணப்படும் பெரிய பொருளுக்கும் பெரியவன் என்று கடோபநிஷத் கூறுகிறது.

******

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து….

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”

Brahman beyond speech & thought:

(Anuvaga 4 of Anandavalli) Taitriya Upanishad

When all words turn back as well as Manas, without reaching; he who knows Brahman’s bliss fears not at any time.

மனதுக்கும் சொற்களுக்கும் எட்டாத இறைவனை உணர்பவனே பிரம்மத்தை (கடவுளை) அறிந்தவன் – தைத்ரீய உபநிஷத்

என்பது  தைத்திரீய, உபநிஷத மேற்கோள்.

****

கேனோபனிஷத்தும் இதையே கர்கிறது

“That which cannot be expressed in words but by which the tongue speaks — know that to be Brahman. Brahman is not the being who is worshiped of men.”

சொற்களால் வருணிக்க இயலாது; நாக்கு மட்டும் பேசும்.

அதுதான் பிரம்மம்- இறைவன் –கேனோபனிஷத்

(அதாவது சடங்குகளோ, துதிகளோ வழிகள்- படிகள் மட்டுமே. அதைப்   பாடுவோரும், சடங்குகளை  செய்வோரும் கடவுளை அறிந்தவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள் )

Kena Upanishad-

****

यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।

तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ४ ॥

yadvācānabhyuditaṃ yena vāgabhyudyate |

tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate || 4 ||

4. What speech does not enlighten, but what enlightens speech, know that alone to be the Brahman, not this which (people) here worship.              

உரைகள் மூலம் அது பிரகாசமடைவது இல்லை; ஆனால் அது நமது பேச்சுக்களை ஒளிபெறச் செய்கிறது ; அதுதான் பிரம்மம்/ கடவுள் –கேன உபநிஷத்       

கடவுளை சடங்குகள் மூலம் வணங்குவோர் எல்லாம் கடவுளை அறிந்தவர்கள் அல்ல

ஒட்டு  மொத்தக் கருத்து – ஆயிரம் துதிகளைப் பாடித் துதித்தாலும், ஆயிரம் யாக யக்ஞங்களை செய்தாலும் —  அவைகள் மூலம் மட்டும் இறைவனை அடைய முடியாது

ஆயிரம் ஏணிப்படிகளைக் கடந்து சென்றாலும் சிகரத்தைத் தொடவில்லை- உச்சியை அடையவில்லை (பிரம்மத்தை அடையவில்லை ) என்றே பொருள்..

****

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்………

या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी |

यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: || B.G.2-69||

yā niśhā sarva-bhūtānāṁ tasyāṁ jāgarti sanyamī

yasyāṁ jāgrati bhūtāni sā niśhā paśhyato muneḥ 2-69

For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.

பகவத் கீதை BG 2.69: எல்லா உயிரினங்களும் பகல் என்று கருதுவது ஞானிகளுக்கு அறியாமையின் இரவாகும், மேலும் அனைத்து உயிரினங்களும் இரவாகக் காணும் பகல் என்பது ஞானிக்கு பகலாகும்.

For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.

இங்கே யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வேறுபாடு விளக்கப்படுகிறது

இதை நிஜமான இரவு  பகலொடு ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ளக்  கூடாது ;அறியாமை என்பது – இரவு ;ஞானம் என்பது- ஒளி / வெளிச்சம் – பகவத் கீதை 2-69

******

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து…………

ஏன் ஞானிகள் எல்லோரும் சேரவாறும் ஜகத்தீரே — என்று நம்மை அறைகூவி அழைக்கிறார்கள். அங்கு எல்லையில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கலாம்  ஒரு உணவு விடுதி பற்றியோ சுற்றுலாத் தலம் பற்றியோ எழுதிய கட்டுரைகளைப்  படித்தால் எப்படியாவது அங்கே போக வேண்டும் என்று நாம் துடிக்கிறோம்  ; அதே போல அடியார்கள் எழுதியதைப் படித்தவுடன் நாமும் எல்லையில்லாத ஆனந்தத்தை அடையத் துதிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்   பலருக்கும் பிரம்மானந்தா, நித்யானந்தா, விவேகானந்தா, ஆனந்தா , யோகானந்தா என்றெல்லாம் தாய் தந்தையர் பெயர் வைக்கிறார்கள் எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெற வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பும் கூட .

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு உபன்யாசத்தில் சொன்னதைப் போல இதை படிக்கப் படிக்க நாளுக்கு நாள் பொருள் விளங்கி ஞானம் பெருகும்.

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு

****

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.– கபிலதேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை

–சுபம்- –

 Tags–        விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை 6,  நிறைவு

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 (Post No.14,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,217

Date uploaded in Sydney, Australia – –18 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-2-2025அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது. 

கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம். 

தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தந்த கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி இன்று சிந்திப்போம்.

புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்ட கவிச்சக்கரவர்த்தியைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

 சோழநாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஊர் தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் என்னும் திருத்தலத்தில் கம்பர் அவதரித்தார்.

 கம்பன் பிறந்த ஊர் காவேரி தங்கும் ஊர்

கும்பமுனி சாபம் குலைந்த ஊர் – செம்பதுமத்

தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா

ஓதகத்தார் வாழும் அழுந்தூர்

என்று தமிழ் நாவலர் சரிதை (பாடல் 185) பெருமையோடு திருவழுந்தூரைப் பற்றி விவரிக்கிறது.

  இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த பெரும் வள்ளலான சடையப்ப வள்ளல் என்பார். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவரும் ஒருவருக்கொருவர் போர் புரிந்து வந்த காலத்திலும் அவர்கள் மூவரையும் தன் இல்லத்திற்கு ஒருங்கே அழைத்து விருந்து வைத்த பெருந்தகை சடையப்ப வள்ளல் ஆவார்.

 இவர் வாழ்ந்த காலத்திலேயே குலோத்துங்கள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்; அவரது அவையை ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் புலவர் அலங்கரித்தார். இதே காலத்தில் நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவரும் வாழ்ந்து வந்தார்.

 இந்த வரலாற்றுச் செய்திகள் மூலம் கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.

 சிறு வயதிலிருந்தே இராமன் பால் பெரிதும் ஈர்ப்புக் கொண்டிருந்த கம்பன் வால்மீகியின் ராமாயணத்தை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தான்.

தமிழ் மற்றும் வடமொழியில் வல்லவனாக இருந்ததாலும் திருவருள் பெற்றமையாலும் இராமாயணத்தைப் பாடுவது என்று உறுதி கொண்ட அவன் அற்புதமான இராமாயணத்தைத் தமிழில் இயற்றித் தமிழுக்கு ஏற்றமும் பெருமையும் அளித்தான்.

 வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான்

ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி

மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

என்பது கம்பனின் வாக்கு.

 வால்மீகியில் ஊறித் திளைத்த கம்பன் அவரது நான்கு பாதங்கள் கொண்ட ஸ்லோகத்தில் ஒன்றில் கூட ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான். அதைப் பருகிப் பருகி உளம் களித்த அவன் அன்பு என்னும் தேனைக் குடித்து ஒரு ஊமை உளறுவதைப் போல உளறலானேன் என்று அவையடக்கமாகக் கூறுகிறான்.

நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்

இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்

தொடை நிரம்பிய தோமறு மாக்கதை

சடையன் வெண்ணெய்நல்லூர் வயின் தந்ததே

என்ற கம்பராமாயணப் பாயிரச் செய்யுள் மூலம் இக்காவியத்தை இயற்ற ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் சடையப்ப வள்ளலே என்பது தெரிய வருகிறது.

 உத்தரகாண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களைக் கம்ப ராமாயணம் கொண்டுள்ளது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10569 அல்லது 10576 வரை உள்ளன.

இவற்றின் அருமையையும் பெருமையையும் முற்றிலுமாக உரைத்தவர் இதுவரை இல்லை. அவ்வளவு அற்புதமான சொற்சுவை மற்றும் பொருள் சுவை கொண்ட பாடல்கள் இவை.

கம்பனின் எல்லையற்ற தன்மையை விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டு கம்பனின் infinity தன்மையைக் கூறுகிறார்

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

சொல் கண்டார் சொல்லே கண்டார்சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!! (பாடல் 72)


சொல்வளம் பெரிதென்கோ யான்சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்! (பாடல் 51)

கம்பனது சமயக் கொள்கை சிவ விஷ்ணு பேதத்தைத் தாண்டிய அற்புதமான கொள்கை என்பதை அவன் கிட்கிந்தா காண்டத்தில் நாடவிட்ட படலத்தில் நிலை நிறுத்துகிறான்.

அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்

பரகதி சென்றடைவரிய பரிசே போல் புகலரிய பண்பிற்றாமால்

சுரநதியின் அயலது வான்றோய் குடுமிச் சுடர்த் தொகைய தொழுவோர்க்கெல்லாம்

வானதிகந் தருந்தகைய வருந்ததியா நெடுமலையை வணங்கி அப்பால்”

என்பது கம்பனின் வாக்கு.

அருந்ததி என்னும் மலையைக் குறிப்பிட வந்த கம்பன் சிவன் பெரியவன்; இல்லை விஷ்ணு பெரியவன் என்று சண்டை போடுகின்ற அறிவிலோர்க்கு – முட்டாள்களுக்கு – பரகதி – முக்திப் பேறு அடையவே முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறான்.

கம்பனின் சொல்நயமும்நாடகபாணியில் ஒவ்வொரு காட்சியையும் அவன் சித்தரிப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.

கோசல நாட்டை வர்ணிக்கும்போது நம்மை திடுக்கிட வைக்கிறான்.

அங்கு வண்மை இல்லைதிண்மை;உண்மை இல்லைஒண்மை இல்லை. ஏன் என்று காரணத்தை அவன் விவரிக்கும் போது நாம் களிப்படைகிறோம்.

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”

இப்படி ஒரு வர்ணனையை எந்த இலக்கியத்திலும் காண முடியாது.

எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ என்று சுருக்கமாகச் சொல்லி நம்மை வியக்க வைக்கிறான்.

**

to be continued 

tags—கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1 

GNANAMAYAM 16-2-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 16-2-2025 BROADCAST SUMMARY

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளித்தார்

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி 16-ம் தேதி

16-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team- Mr Bala Subrahmanyan and Mrs Padma Bala Subrahmanyan from London.

World Hindu News in Tamil was  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on Tamil Poet Kambar

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Bhavani Sangameswarar Temple

***

INTERVIEW WITH FAMOUS DANCER & TEACHER MALAYSIA  Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai .

LONDON SWAMINATHAN INTERVIEWED Mrs Usha Durai, founder and principal of Laasya Arts Academy .

GURUVAYUR USHA DURAI INTRODUCING NATYA ICON 

Guru Srimati Mathura Natya Mamani Guruvayur Usha Dorai 

Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai, is no stranger to the world of music as she was born into a family of acclaimed Carnatic singers and musicians from Kerala, India. It is to her father, Mridangam Maestro Guruvayur Dorai and her aunt, Tamilisai Maestro Guruvayur Ponnamal that she owes her artistic and creative visions.

The founder and principal of Laasya Arts Academy, Guruvayur Usha is a Bachelor Degree holder from Madras University, graduated in Sociology with music as an elective subject. She has made her dance debut under the tutelage of Smt.Indra Rajan and Shri Pandanallur Srinivasa Pillai with her “Arangetram” in 1983. As a testament of her dedication to her profession, the title of ‘MADURA NATYA MAMANI’ was conferred to her in 1986. She later pursued a diploma in Bharatanatyam. Her combination of talents as a dance/music teacher, choreography,composer and instrumentalist mastering not only the Nattuvangam but also mridangam, tabla and veena have made her an exceptionally rare breed of teacher.

Laasya Arts is her dream school which serves not only as a dance academy, but also as creativity hub where a lot of ideas are created and applied in musical, dance and theater arrangements. To date, Guruvayur Usha Dorai conducted 49 arangretrams, including 3 vocal arangetrams which each one is uniquely presented and far different from each other. Apart from that, she also has produced and backboned a lot of in-house and collaboration productions. Some of her significant productions are MURUGA CHARANAM, GOVINDA, MAA..!-A TRIBUTE TO MOTHERS, NRITHYA YOGA, SAMARPANAM, and MANTHRA TANTHRA.

Recently, she toured her production KAAPIYAM, all over India and received many good critics and credits to her effort in spreading the Tamil Literature works. Besides that, Guruvayur Usha serves her passion involving herself in choreography and orchestration. LAHARI, a production by Damaru Creations, crystallizes the teachings of Aadi Sankara into a well-received dance and musical production in Malaysia and Singapore which intensified credits to her talent in choreography. In addition, AMRAPALI HARMONY FUSION PROGRAMME by a Singapore based production company, GR Vision also utilizes her expertise in music  dance and theater orchestration and it has been successfully touring the world. Not stopping there, she has indulged in some literary work where she has written 4 padha varnham lyrics, 3 shabdams and 7 padhams which is definitely helping her to soar higher in this artistic world.

All her efforts through these years had been fulfilled when she was conferred the title ‘Nrithya Aacharya’ and ‘Kalai Thaai’. It is also worth to note down that she aptly received the award ‘Queen of Nattuvangam’ in 2016 & Kappiya nattiya nayaki, Nattuva perarasi and along with Nattuvanga ratnakara award in the same year. Adding more to the list are  Aryabhatta award,  KARTANATAKA ( INDIAN AWARD) and KALA SAMMAN award by Bharatiya Samskrithi Club Kolkata in Kuala Lumpur. Other highlights in her life include life time achievement award by AIDA International and Natya Icon award by Veharra Arts Kuala Lumpur in 2020.

Life time achievement award by Sugam organisation in 2021.

Honorary Doctorate in 2022 from Kolkata university

Invitation by ICC to perform in Ayodhya in2022

2022 musical ensemble 

Eesha Sarvesha

2023

Staged in three places in Tamilnadu

Eesha Sarvesha

Comprising 50 students 

2024 

Meenakshi a warrior princess ( music dance artistic director) Singapore Sarva fine arts

London Swaminathan interviwed her from Sydney, Australia 

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் லண்டன் திரு. பாலசுப்ரமணியன் திருமதி பத்மா பாலசுப்ரமணியன்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – கவிச் சக்ரவர்த்தி கம்பர்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளித்தார்   – லண்டன் சுவாமிநாதன் – லண்டன் சுவாமிநாதன் ; – லண்டன் சுவாமிநாதன் பேட்டி கண்டார்

 ***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- Gnanamayam, Summary, 16-2-25, broadcast

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5 ; என்னை யறிவித்து எனக்கருள் செய்து (Post.14,216)

Written by London Swaminathan

Post No. 14,216

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5;

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

…….

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

*****

இந்த வரிகளில் அவ்வையார் நிறைய யோக ரகசியங்களை சொல்கிறார். இங்கும் எண்களைப் பயன்படுத்துகிறார் . மிகவும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் — நமது உடலில் மூலாதாரத்தில் பாம்பு போல ஒரு மாபெரும் சக்தி உறைந்து  கிடக்கிறது ; அதை மூச்சுப் பயிற்சியின் மூலம் மேலே கொண்டுவந்தால் முக்தி கிடைக்கும்; அது நடக்கும் காலத்திலேயே பல அற்புகங்களும் நடக்கும். இது பற்றி எழுதுவோரும் பேசுவோரும் லட்சக் கணக்கில் உள்ளனர் . இதை அனுபவத்தில் செய்து காட்டியோர் வெகு சிலரே.

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

இதில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியில் வரும் சொற்கள் வருகின்றன ; இடகலை, பிங்கலை, சுழுமுனை , மூலாதாரம் ஆறு ஆதாரம், சதுர்முக சூக்கம், குண்டலினி , அசபை .

இவைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இந்த வரிகளை விளங்கிக்கொள்ள முடியாது. ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியிலும் விவேகானந்தர் ராஜ யோக புஸ்தகத்திலும் விளக்கங்கள் உள்ளன. அவர்கள் அனுபவித்து எழுதியவர்கள்; மற்றோர் பிறர் சொன்னதை — என்னைப் போல — கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்கின்றனர்.

அவ்வையார் வேண்டுவது குண்டலினி சக்தியை எழுப்பி அதை மேலே செலுத்தி முக்தி பிற அருளுக என்பதாகும்.

குண்டலினி சக்தி பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது அனுபவங்களின் வாயிலாக விரிவாக எழுதியுள்ளார் .

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம்ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

முதலில் சொற்களின் பொருளைக் காண்போம் . இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது; அவர்களே அனுபவிக்கும்வரை புரியவும் புரியாது

*****

ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்

xxxxxx

இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்

பிங் கலை  வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்

சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி

xxxx

பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி

அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

xxxxxx

யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.

எட்டு என்பது- ஓசை, ஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.

xxxx

புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக. ஆத்மலிங்கம் பஜரேஅதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை  நினைத்தே!

xxxx

கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன்.  உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.

xxxx

மூன்று மண்டலம் என்பது உடலிலுள்ள சந்திர, சூரிய அக்கினி மண்டலம் என்பர் ஆன்றோர்.

ஆதித்தன்- சூரிய மண்டலம், குமுதா சகாயம்- நிலவின் தோழன் குமுதா மலர்= சந்திர மண்டலம் .

ஈரெட்டு நிலை = பதினாறு கலை= பிராணாயாமம் செய்வோரின் அகரத்தியில் உள்ள சொல்.

சண்முக = ஆறு+ சதுர் முக = நான்கு ; ஆறு பருமைப் பொருள்; நான்கு நுண்மைப்பொருள்

எண்முக= எண்சாண் உடம்பு   .

காலால் எழுப்பி = காற்றுப் பொய்யெச்சியால் குண்டலினியை எழுப்பி;  

****

இவை பற்றி ஏராளமானோர் எழுதுகின்றனர் ; அவை எல்லாம் வேற்றுப் பேச்சு உண்மையில் இவைகளை பயின்று அனுபவித்த ராமகிருஷ்ணர், விவேகானந்தர் , சுவாமி சிவானந்தர் ஆகியோர் எழுதியதை மட்டும் படித்தறிய வேண்டும்.

தாயுமானவர் பராபர்க் கணினியிலும், பட்டினத்தாரிபூரண மாலையிலும் இவை பற்றிப் பாடியுள்ளனர்.

இவ்வாறு குண்டலினி என்னும் பாபிம்பினை — அக்கினியை எழுப்பி உடலிலுள்ள ஆறு சக்கரங்களை வழியாக தலைக்கு கொண்டு சென்றால் ஆயிரம் இத்தலத் புகழ்  தாமரை போலுள்ள சஹஸ்ராரத்தை அடைந்தவுடன் அமுதம் சுரப்பதால் எல்லையில்லாத ஆனந்தம் சுரக்கும்; இறைவனும் காட்சி தருவான்; சமாதி நிலை ஏற்படும்  என்பது அனுபவித்த யோகியர் வாக்கு

******

என்னை அறிவித்து — இது உபநிஷத கட்டளை

இதை சாக்ரடீஸ் பின்பற்றி உன்னையே நீ அறிவாய் என்கிறார் .

இதை திருமூலர் இதை அழகாக தூய தமிழில் சொல்கிறார்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.

—-திருமூலரின் திருமந்திரம்:

தன்னை அறிந்தால் என்ன பலன் ?

முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்

பின்னை வினையைப் பிடித்துப் பிசையலான் என்கிறார் திருமூலர்

இவையெல்லாம் பகவத் கீதையிலுந்து லிருந்து வந்த கருத்துக்கள்

கீதையில் கிருஷ்னும் தானே தனக்கு நண்பன் என்கிறார்

BG 6.5: உங்கள் மனதின் சக்தியால் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்ஏனென்றால் நீங்களே உங்களுக்கு நண்பன்நீங்களே உங்களுக்கு எதிரி.

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् |
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: || 6-5||

uddhared ātmanātmāna nātmānam avasādayet
ātmaiva hyātmano bandhur ātmaiva ripur ātmana

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் |

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||6-5||

இதனால்தான் அவ்வையாரும்

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

என்கிறார் .

தொடரும்…………………..

Tags-விநாயகர் அகவல் ,ஆராய்ச்சிக் கட்டுரை-5, என்னை யறிவித்து ,எனக்கருள் செய்து

ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில் -25 (Post No.14,215)

Written by London Swaminathan

Post No. 14,215

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25

சிட்னி மாநகரிலிருந்து  ஒரு மணி நேரம் பயணம் செய்தால் மிண்டோ( Minto,  NSW 2566)  என்ற நகரினை அடையலாம் அங்கு அமைதியான சூழ்நிலையில் ஒரு அழகான சிவன் கோவில் இருக்கிறது. நான் என் குடும்பத்துடன் பிப்ரவரி 16 ஆம் தேதி (2025) அங்கு சென்றேன். சூலூர்  சிவ சண்முக  குருக்கள் எங்களை வரவேற்று நல்ல தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார்; பிரசாதமும் கிடைத்தது .

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குஜராத் மாநில மக்கள் கட்டிய இந்தக் கோவில் வடக்கத்திய தெற்கத்திய கோவில்களின் அம்சத்தைக் கொண்டு விளங்குகிறது.

இலங்கைத் தமிழர்களும் இங்கு ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். நாங்கள் சென்றபோது நிறைய நேபாள இந்துக்களும் ஆஸ்திரேலிய நகரத்தார் சமூக மக்களும் வந்திருந்தனர் . அவர்களுடைய வருடாந்திர காவடி உற்சவம் நடந்ததால் முருகப்பெருமானின் உற்சவ கோலத்தையும் பக்தர்களின் காவடியையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியது

கோவிலின் அமைப்பு

கோவில் பிரதான சந்நிதி காசி விஸ்வநாதர் ஆவார். பெரிய, அழகான சிவலிங்க உருவத்தில் அவரைத் தரிசிக்கலாம். இந்த விக்கிரகத்துக்கு மட்டும் தமிழ் ஆகம கோவில்களைப் போல அபிஷேக ஆராதனைகள் உண்டு அவருக்கு ஒரு புறம் அஷ்ட தச

புஜ  துர்க்கையும்  மறு புறம் ராம லெட்சுமணர் சீதாதேவி அனுமன் சகிதமும் காட்சி தருகின்றனர். இந்த துர்கா, ராம பரிவார் வடக்கத்திய பாணியில் உள்ளன. வெறும் உடை அலங்காரம் மட்டுமே .

கோவிலுக்குள் நுழையும் போதே கணபதியையும் முருகனையும் தரிசிக்கலாம்.முக்கிய சந்நிதிதிகள் மூன்றினைத் தவிர குட்டி சந்நிதிகளில் கிருஷ்ணர், புவனேஸ்வரி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், கால பைரவர் முதலானோரின் விக்கிரகங்களும் இடம்பெற்றுள்ளன .

கோவிலின் தனிச் சிறப்பு

வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இங்கே காணப்படுகின்றன. மிகப்பெரிய சிவன் சிலையும் அனுமன் சிலையும் கோவிலுக்கு மெருகு ஊட்டுகின்றன. அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிலைகளை படம் பிடிப்பதோடு செல்பி எடுக்கவும் தவறுவதில்லை .

இவை தவிர இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாடலும் ஒரு மண்டபத்தில் இருக்கின்றன. இந்தியா சென்று தரிசிக்க முடியாதவர்கள் இந்த மண்டபத்தை வலம் வந்தால் போதும்;  கோவிலில் யாக சாலை இருப்பதோடு எதிர்கால விரிவாக்கத்  திட்டங்களும் உள்ளன .

****

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

நாங்கள் சென்ற நாளில், நகரத்தார் சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தும் காவடி, பால்குட நிகழ்ச்சியும் நடந்தது ; நூற்றுக்கும் மேலானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பெண்களும் ஆண்களும் காவடி மந்து வர, முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியும் வலம் வந்தார் . சூலுர் சிவ சண்முக குருக்கள் சொன்ன நீண்ட தமிழ் சங்கல்பத்தை அவர்கள் பக்தி சிரத்தையோடு சொன்னார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில், லண்டன் முருகன் கோவிலில் நடந்த நகரத்தார் உற்சவத்துக்கு என்னைச்   சிறப்பு விருந்தினராக அழைத்து  சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். இன்றைய உற்சவத்தைப் பார்த்தபோது அந்த நினைவலைகள் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்தன

சிவராத்திரி நிகழ்ச்சிகள்

அடுத்து வரப்போகும் சிவராத்திரி நாளில் சிவனுக்கு பக்தர்களே பாலபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கணபதி ஹோமம் முதல் ஏகாதசரருத்ர ஹோமம் /அபிஷேகம் வரை நடத்தும் அறிவிப்புகளையும் கோவில் வெளியிட்டுள்ளது சென்ற  ஆண்டு தமிழ் அன்பர்கள் அங்கு திருவாசக முற்றோதலையும் நடத்தி இருக்கிறார்கள் . எல்லா சமூகத்தினரும் கோவிலைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பு .சிட்னி நகருக்கு வரும் அன்பர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்து பார்க்க வேண்டிய கோவில் இது

இதோ கோவிலின் முகவரி :

The full address of the temple is

Shri Shiva Mandir

Address: 201 Eagleview Rd,

Minto New South Wales 2566

—subham—

Tags- ஆஸ்திரேலியாவில், அழகான சிவன் கோவில் -25

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25, மிண்டோ( Minto,  NSW 2566

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 16-2-2025 (Post.14,214)

Written by London Swaminathan

Post No. 14,214

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 16- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

மகாகும்பமேளாவில்  புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!

 பிரயாக்ராஜ் மகாகும்ப மேளாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். உலகின் பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான இந்த எண்ணிக்கை, இந்த விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளது.

கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் மகாகும்ப நகரத்திற்கு வருகை தந்ததால், உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமாக இது மாறியுள்ளது. ஒன்றரை மாதங்களில் பிரயாக்ராஜுக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் .

ஐம்பது கோடி மக்கள் நேரடியாக பங்கேற்ற உலகின் முதல் விழா இது.

மனித வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் பங்கேற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை

உலகிலேயே மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில் 55 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி., அரசு கூறியுள்ளது.

‘பூர்ணிமா’ சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்; பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்து வருகிறார்.

பிப்ரவரி பத்தாம் தேதி கும்பமேளாவுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.

பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். அவர் அக்ஷயவத்  என்னும் புகழ்பெற்ற புனித ஆலமரத்தையும் படே ஹனுமான் கோவில் அனுமனையும் வணங்கினார்

கடந்த 5-ம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். அதற்கு முன்னதாக பூட்டான் மன்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பவுர்ணமி அன்று தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஒட்டகம், குதிரைகளில் ஊர்வலகமாக வந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீராடி வருகின்றனர்.

****

கும்பமேளாவை ஆடம்பர விழாவாக சித்தரிப்பதற்கு சாதுக்கள் கண்டனம்

மஹா கும்பமேளா என்பது ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கைக்கானது. இதில் தேவையில்லாத விஷயங்களையோ, 5 ஸ்டார் கலாசாரமாகவோ சித்தரிக்க வேண்டாம்’ என, சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்

மாடலாக இருந்து சன்னியாசியான ஹர்ஷா ரிசாரியா, மாலை விற்கும் மோனலிசா, ஐ.ஐ.டி., பாபா அபய் சங், நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதுவா மஹா கும்ப மேளா? மஹா கும்பமேளாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் செயல்படுகின்றன. இது சாதுக்கள், ஆன்மிகவாதிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல கூட்டத்தை சமாளிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் நதிக்கரையில், மணலில், திறந்த வெளியில் துாங்குகின்றனர். பஜனை செய்கின்றனர். புனித நீராடிய பின், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம், புண்ணிய நதியில் நீராடுவதுதான். என்று.  ஹிந்து துறவி. மஹந்த் தர்மேந்திர தாஸ் கூறினார்,

*****

மைசூரில் மூன்றுநாள் கர்நாடக கும்பமேளா

மைசூர் கும்பமேளா பிப். 10 ம் தேதி-தொடங்கியது

தெற்கின் பிரயாகராஜ்’ என்று அழைக்கப்படும் டி.நரசிபுரா, திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடினர். முதல் நாளன்றே இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காவேரி-கபில-ஸ்பதிகா, நதிகளின் புனித சங்கமமாக விளங்குவது திருமகூடலி.   இங்கு கும்பமேளா பிப்ரவரி பத்தாம் தேதி  முதல் 12 ஆம்  தேதி வரை மூன்றுநாள் நடந்தது

வெள்ளி ரதத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் ஊர்வலம் வந்தனர். கும்பமேளாவின் இரண்டாவது நாள் பிப்ரவரி. 11 ம் தேதி மாலையில், வாரணாசியில் கங்கை நதியில்  நடைபெறுவது போல மஹா ஆரத்தியும் நடத்தப்பட்டது

*******

டில்லி மாநகரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் புதிய கட்டிடம்

உலகத்திலேயே மிகப்பெரிய இந்து சமய தொ ண்டர் படையான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின்– அதாவது ஆர் எஸ்.எஸ். அமைப்பின்- புதிய கட்டிடம் டில்லி மாநகரத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி திறக்கப்படுகிறது .

புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் குஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது.

சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.

சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது.

இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.

****

கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை – ஐகோர்ட் அதிருப்தி

கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ. 54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன் எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துது.

திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலக வாடகை பாக்கி ரூ 54,35,660 அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

xxxxxxx

அர்ச்சனை தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை அர்ச்சகர்களுக்கு சொந்தமில்லை! வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!

கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்த கோவிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கை இணை உண்டிகளில் செலுத்த உத்தரவிடப்படுகிறது இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வர பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும் தட்டு காணிக்கை உண்டியல் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

இப்படிக்கு திருக்கோவில் செயல் அலுவலர்”

அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அர்ச்சகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது .

*****

பக்தர்களை தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கும் தமிழக அரசு : இந்து முன்னணி கண்டனம்!

கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அறநிலையத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை உள்ளிட்ட வழிகளில் இந்து சமய அறநிலையத்துறை பல கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என திமுக அரசு நினைப்பதாக விமர்சித்துள்ள அவர், திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

*****

திருப்பதி லட்டு கலப்பட புகாரில் நால்வர் கைது

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி வெங்கடாசலபதி  கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரித்த  நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக எழுந்த விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

லட்டு கலப்பட விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் உள்பட நான்கு பேரை, அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

*******

பழநி தைப்பூசத் திருவிழா: அண்ணாமலை நேர்த்திக்கடன்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்  அண்ணாமலை,48 நாள் விரதத்தை நிறைவு செய்து பழனி கோவிலில் காவடி சுமந்து வழிபாடு செய்தார்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

 தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

*****

சுருக்கமான செய்திகள்

திருப்பதியில் சொகுசு ஓட்டல்அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

 திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் துவங்கினர்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 – 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.

அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

*****

கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது யானைகள் மோதல்- 3 பேர் பலி

கோழிக்கோடு, மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருவிழாவின் போது இரண்டு கோயில் யானைகள் பட்டாசு வெடித்து ஓடிய கொடூரமான சம்பவத்தில் 3 முதியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இறந்தவர்கள் குருவங்காட்டைச் சேர்ந்த லீலா மற்றும் அம்முக்குட்டி மற்றும் கொயிலாண்டியைச் சேர்ந்த ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த முப்பது பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வேல் யாத்திரை : பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை காக்க வலியுறுத்தி சென்னையில் வேல் யாத்திரை நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டது.


xxxxxx

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

பிப்ரவரி 23- ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

 tags-ஞானமயம், வழங்கும், உலக இந்துமத செய்தி மடல்,  16-2-2025, (Post.14,214)

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் (Post.14,213)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,213

Date uploaded in Sydney, Australia — 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-2-2025 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

முத்து ஏர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்நூல் பூண்டு

தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த

அத் தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி

தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது கொங்கு நாட்டில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் கொண்டுள்ள திருநணா திருத்தலமாகும். பவானி என்று இப்போது இந்தத் தலம் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் பவானி நகரம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வடமேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்றது இந்தத் திருத்தலம்.

இறைவர் : சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு)

இறைவி :  வேத நாயகி, பவானி, சங்கமேஸ்வர், பந்தார் விரலம்மை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.

தீர்த்தம் :    காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்ளிட்டவை.

,

தல விருக்ஷம் : இலந்தை

திருநணா என்றும் பவானி முக்கூடல் என்றும் புராணங்களால் இத்தலம் சிறப்பிக்கப் பெறுகிறது. வானி என்பது பவானி நதியின் பழம் பெயராகும். பவானி, காவிரி, மற்றும் மறைந்திருக்கும் அமுத நதி ஆகிய மூன்றின் சங்கமமே பவானி சங்கமம் ஆகும். இது தட்சிணப் பிரயாகை என்றும் கூடுதுறை என்றும் அழைக்கப்படுக்கிறது.

இத்தலமானது சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதும கிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் என்றும் குறிக்கப்படுகிறது.\

இங்கு சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் இடையே முருகன் சந்நிதி இருப்பதால் இது சோமாஸ்கந்த மூர்த்தி சிறப்புடையதாக ஆகிறது.

இக்கோவிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. வடக்கு நோக்கியே பிரதான வாயிலான ராஜ கோபுரம் உள்ளது. இது ஐந்து நிலை கோபுரமாகும். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வாயிலின் மேற்புறம் ராஜ விநாயகரும், கீழ்ப்புரம் முத்துகுமாரசுவாமியும் காட்சி அளிக்கின்றனர்.

அடுத்து மேல்புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் சௌந்தரவல்லித் தாயார் கோயிலும் உள்ளன.

இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

குபேரன் ஒரு நாள் தன் விமானத்தில் வரும் போது இங்கு காவிரியாற்றின் கரை ஓரத்தில் புலி, மான், பசு, யானை, சிங்கம் உள்ளிட்டவை பகை இன்றி இருப்பதைப் பார்த்தான். அங்கு ஒரு இலந்தை மரத்தையும் பார்த்தான். அப்போது தெய்வீக அசரீரி ஒன்று “இந்த இலந்தை மரத்தின் அடியில் ஜோதி மயமான லிங்கம் இருக்கிறது. இதை வழிபடுவாயாக” என்றது.

அதன்படி குபேரன் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை வழிபட சிவபிரான் அவனுக்கு காட்சியளித்து அருளினார். அவனது வேண்டுதலின்படி அழகாபுரியைப் போல இத்தலம் திகழ ஆரம்பித்தது. இது தட்சிண அளகை என்ற திருப்பெயரைப் பெற்றது. இறைவனுக்கு  அளகேசன் என்ற நாமமும் உண்டாயிற்று.

இத்தலத்தைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1802ம் ஆண்டில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்னும் ஒரு துரை. அவர் இங்கு பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் பதவி புரிந்ததால் கூடுதுறை மகத்துவமும் வேதநாயகியின் பெருமையும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சுவாமியை தரிசிக்க அவர் விரும்பினாலும் ஆங்கிலேயர் என்பதால் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி இல்லை.

இதனால் வேதநாயகி சந்நிதிக்கு எதிரே மதிலில் மூன்று துவாரங்களைச் செய்து அதன் வழியே அம்மனை தரிசிக்கலானார்.

ஒரு நாள் இரவு வேதநாயகியைப் போல அலங்காரம் கொண்ட பெண் ஒருத்தி அவர் கனவில் வந்து அவரை வெளியே போகும் படி சொல்ல அவரும் எழுது வெளியே சென்றார். சில நிமிடங்களில் அந்த பங்களாவின் கூரை இடிந்து கீழே விழுந்தது. அவர் தனது உயிர் தப்பியது வேதநாயகின் கருணையினால் தான் என்பதை உணர்ந்தார்.

உடனே தந்தத்தினாலேயே ஒரு கட்டிலை – அதாவது பல்லக்கு ஊஞ்சலைச் செய்து காணிக்கையாகக் கோவிலுக்கு அளித்தார். அது கொடுக்கப்பட்ட தேதி 11-1-1804 என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்றும் கோவிலின் உள்ளே காணலாம்.

இந்தக் கோவிலில் இன்னொரு அதிசயம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவானின் ஒளியானது, மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாளன்று, சங்கமேஸ்வரர், சுப்ரமண்யர், வேதநாயகியம்மன் சந்நிதிகளில் காலை நேரத்தில் பூஜை செய்வது போல மூர்த்திகளின் மீது படுகிறது.

இங்குள்ள கூடுதுறையில் ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் திரளாக வந்து குளிப்பது வழக்கம். ஆடி பதினெட்டாம் நாளில் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் குழுமி நீராடுகின்றனர்.

இங்குள்ள அபிஷேக மண்டபத்தின் வடபால் அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அமுதமே இங்கு லிங்கமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கம் அதற்குரிய ஆவுடையாரின் மேல் இருக்கிறது. எளிதிலே இதை எடுக்கலாம்; திரும்பவும் வைக்கலாம்.  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த அமுதலிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு மகப்பேறு அடைவதற்காக கோயிலை வலம் வருகின்றனர். இப்படிச் செய்வதால் மகப்பேறு அடையமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தை இந்தத் தலத்தில் அருளியுள்ளார்.

இன்னும் ஏராளமான சிறப்புகளையும் புராண வரலாறுகளையும் இந்தக் கோவில் கொண்டிருக்கிறது.

அவற்றை அருணகிரிநாதரின் திருப்புகழ், பவானி கூடல் புராணம், வேதநாயகி பிள்ளைத் தமிழ், வேதநாயகி அம்மன் சதகம் உள்ளிட்ட பல நூல்களின் வாயிலாக அறியலாம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சங்கமேஸ்வரரும் அன்னை வேதநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

 tags–பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்