Hindu Crossword14225 (Post No.14,203)

Written by London Swaminathan

Post No. 14,203

Date uploaded in Sydney, Australia – 14 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

The following Sanskrit words are used in all Indian languages.

ACROSS

1.Submarine fire in the shape of horse in Hindu scriptures

4.Passion, delusion in Sanskrit 

5.Place or residence, usually of a deity in North India

6.Great Purana detailing Krishna’s life

8. a long-necked, plucked, four-stringed used by musicians as a support in concerts in Sanskrit 

10.girls’ name; young, praiseworthy

11.vedic rishi; one of the Sapta rishis; Utathya, Brihaspati are his children 

DOWN

1.author of The Harshacharita, Court poet of Emperor Harsha.

2.short sound-wealth; long sound- donation in Sanskrit 

3.Rainbow in Sanskrit

7.Dynasty, lineage in Sanskrit 

9.Priest of the Sun God in Sakadwipa

12.furious, wild in Sanskrit 

13.God in Sanskrit 

Cw14225

1 2       3
         
     4  5
         
6    7   
         
         
8 9      
        10
11   12    
      13  

Cw14225

B1AD2AVAGNI  3
A H  S  N
N AGOM4AHD5
A N  A  R
B6HAGAV7ATA
H M R   D
A   D R H
T8AM9BURA A
T A AYVAN10
A11NGIR12AS U
  A   E13 S

—subham—

Tags- Hindu Crossword14225

நாகமணியைக் கண்டதுண்டா? (Post No.14,202)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,202

Date uploaded in Sydney, Australia – –14 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-2-25 கல்கி ஆன் லைனில் வெளியான கட்டுரை!

 பரபரப்பான ஒரு விஷயம் பற்றிய அலசல் ஆராய்ச்சி!

நாகமணியைக் கண்டதுண்டா? 

ச. நாகராஜன் 

நாகமணியைக் கண்டீர்களா என்றால் உடனே அதோ இருக்கிறாரே என்று நாகமணி என்ற பெயரைக் கொண்டவரைச் சுட்டிக் காட்டி விடுவர். நாகரத்தினம், நாக மணி, நாக மாணிக்கம், நாக ஜோதி, நாகமுத்து என்றெல்லாம் பெயர்களைக் கொண்டவர்கள் ஏராளம் உண்டு.

நமது கேள்வி நிஜமான நாகமணியைக் கண்டிருக்கிறீர்களா என்பது தான்.

தமிழ்நாடு முழுவதும் “நிஜமான” நாகமணியை பல லட்சம் ரூபாய்க்கு விற்க அலைபவர்களைப் பற்றிய ‘ஏமாற்றுத்’ தகவல்கள் பல உண்டு. போலீஸாரிடம் சொன்னால் உடனே அவர்கள் இதற்குத் தானே காத்திருந்தோம் என்று அவர்களைப் பிடிக்கப் ப டையுடன் கிளம்பி விடுவர்.’

சுயமாக ஒளியை உமிழும் நாகரத்தினக் கல், குழாய் போன்ற வடிவில் இருக்கும். ஒரு நாகமானது நூறாண்டுகளுக்குப் பிறது தனது ஜீவ சக்தியை இப்படி ஒளி உமிழும் மாணிக்கமாக மாற்றுவதை நமது புராணங்கள் நன்கு விவரிக்கின்றன.

தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்காந்தத்தில் பதினெட்டாவது அத்தியாயத்தில் நாராயணர் நாரதருக்கு ஒவ்வொரு மண்டலமாக விவரிக்கிறார். அதில் பூமியின் கீழ் உள்ள அதலம், விதலும், சுதலம், தராதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்களைப் பற்றி விவரிக்கையில், “அங்கு இராப்பகல் எப்போதும் கிடையாது. ஏனெனில் அங்குள்ள பாம்புகளின் தலைகளிலிருந்து வரும் ரத்ன காந்தியால் இருள் நீங்கி விடுகிறது” என்கிறார். 

அப்படிப்பட்ட ஒளி நாகரத்தினக் கல்லின் ஒளி என்பதை அறிகிறோம்.

அடுத்து கம்பன் சுந்தர காண்டத்தில் ஊர்தேடு படலத்தில்  இலங்கையில் பெண்மணிகள் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, “பாம்புகளின் தலைவனான ஆதிசேஷனின் சிவந்த நிறம் மிக்க படத்து மணியினை வலிமையால் கவர்ந்து எனக்கு ராவணன் அளித்தான்” என்று ஒரு பெண்மணி கூறுவதாகப் பாடியுள்ளான். (பன்னக அரசர் செங்கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி இன் உயிர்க் கணவன் ஈந்தான் – பாடல் 183)

அவனே உருக்காட்டு படலத்தில் (பாடல் 65) சீதை கணையாழியைப் பார்த்தவுடன் அவள், “தவற விட்ட மாணிக்கத்தை தன் எதிரில் கண்ட புற்றில் உள்ள பாம்பு போல இருந்தாள் – “இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்”) என்றும் பாடுகிறான்.

ஆக இப்படி இலக்கியம் கொண்டாடும் நாக மணி எங்கே?

பாம்புகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த ம.வீ.இராசேந்திரன் உலகில் 2000 பாம்பு வகைகள் உண்டு என்றும் இந்தியாவில் மட்டும் 390 வகைகள் உண்டு என்றும் கூறி பற்பல வியக்க வைக்கும் தகவல்களை ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற தனது நூலில் விவரிக்கிறார்.

ஆனால் ‘நாகமணி கவிஞனின் கற்பனையில் உதித்த மணியான சிந்தனைச் சிற்பம். கவிஞனுக்குக் களிப்பூட்டும் கருந்தனம்” என்கிறார் அவர்.

பாம்பின் நஞ்சே முத்தாக மாற வேண்டுமானால் அது பல ஆண்டுகளாக விளைந்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பின்  நச்சுப்பை நமக்கு இருப்பது போல ஓர் உமிழ் நீர்ப்பை தான்.” என்கிறார் அவர்.

ஆக அறிவியல் ரீதியாக நாகமணி இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் கற்பனை ரீதியாக? 1986ல் எடுத்து ஶ்ரீ தேவி நடித்த நாகின் படத்தின் முழுக்கருத்தே நாகமணியை அடிப்படையாகக் கொண்டது தான். படம் சக்கை போடு போட்டது!

2008ல் வெளியான நீல் கைமன் எழுதிய ‘தி க்ரேவ்யார்ட் புக்’  என்ற நாவல் நாகமணி அரிதாகவே கிடைக்கும் ஒரு ரத்தினம் என்றது. புத்தகம் பிரபலமானது.

 2017ல் வங்காள நாவலான ‘சர்ப மானவ்: நாகமணி ரஹஸியம்’,  நாகமணியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்ட நாவல்.

 நாகமணியை விஷம் முறிவுக்காகத் தரும் நாட்டு வைத்தியர்கள் ஏராளம் பேர் உண்டு. இவர்கள் நாகமணியைக் கொண்டிருக்கவில்லை.

மிருக எலும்புகளையோ அல்லது நாகத்தின் பாகங்களையோ வைத்து இப்படி நாகமணிக் கல்லை உருவாக்குகிறார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 ஆக நாகமணி இலக்கியத்தில் பொக்கிஷம்; நிஜமான வாழ்க்கையிலோ ஏமாற்றுபவரின் பொக்கிஷம். 

நாம் ஜாக்கிரதையாக இலக்கியத்தை நம்புவோம்; ஏமாற்றுவோரை ஒதுக்குவோம்! 

***

Tags-. நாகரத்தினம், நாக மணி

Hindu Crossword13225 (Post No.14,201)

Written by London Swaminathan

Post No. 14,201

Date uploaded in Sydney, Australia – 13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2 3  4
        
5      6  ←
        
7    8  
        
9      10  ←
        
      11  ← 

Across

1.Number five in many Indian languages

5. hot, burning in Sanskrit

6.Sapless, insipid, vain, unprofitable  ←

7. There is a nāḍī (tube) called XXXXXX, passing upward from the heart, and often referred to in the yoga-śāstras. When it reaches this last place, the nāḍī passes up breaking open the two regions of the head. That is the path to attain to one’s own true nature.

9. 1. A mountain, a rock. 2. A cloud, (in the language of the Vedas:)

10.    ← Loss, failure, absence, non-existence; damage, detriment

11.   ← Turtle or Tortoise and one of the Avatars of Lord Vishnu

Down

1.Vyasa’s father

 2.Lion-Man incarnation of Lord Vishnu

 3.O God in the famous Rama, Krishna mantras

4.Offence or punishment in Indian languages

8. Lovely, beautiful, charming, sweet, pleasing, agreeable, attractive; girls’ name

P1AN2CH3A A4
A A A  P
R5URARASA6  ←
A A E  R
S7USHUM8NA
H I  A D
A9SMAINAH10  ←
R H  J A
A AMRUK11  ← 

-subham-

Tags- Hindu Crossword13225

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-1 ; சீதக் களபச் செந்தாமரைப்பூம் (Post No.14,200)

Written by London Swaminathan

Post No. 14,200

Date uploaded in Sydney, Australia – 13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

***

விநாயகர் அகவல் துதியில் எத்தனை வரிகள் உள்ளன ?

72 வரிகள் உள்ளன .

****

இந்தத் துதியைப் பாடியவர் யார் ?

அவ்வையார் .

****

எந்தக் காலத்தில் பாடினார் ?

ஆறு அவ்வையார்களில் கடைசியாக வந்த ஆறாவது அவ்வையார் பாடினார்; தமிழ் நடையிலிருந்தும், ஸம்ஸ்க்ருதச் சொற் பிரயோகத்திலிருந்தும், யோக ரகசிய விளக்கத்திலிருந்தும் இவர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று துணியலாம்.

****

இது பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894- 1994) என்ன சொன்னார் ?

இதைப் படிக்கப் படிக்க உங்களுக்கே பொருள் விளங்கும் என்று சொன்னார்

அதாவது இதற்கு எத்தனை விளக்க உரைகள் இருந்தாலும் தினமும் அதிகாலையில் படித்துக் கொண்டே வந்தால் இதன் உண்மைப்பொருள் விளங்கும் .

****

இந்தத் துதியை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம் ?

1.பிள்ளையாரின் — கணபதியின்– விநாயகரின் — தோற்றம்  – முதல் 15 வரிகள் .

2.எனக்கு வேண்டியது என்ன —அடுத்த 15 வரிகள்

3.குண்டலினி முதலிய யோக விஷயங்கள் – வரி 55 வரை

4.பலன் என்ன —  கடைசி 17 வரிகள்.

****

முதல் இரண்டு வரிகளில் பாதச் சிலம்பு பற்றி ஏன் பாடினார் ?

இந்துக்களுக்கு ஒரு விதி உண்டு ; இதை ஸம்ஸ்க்ருத  , தமிழ்ப் புலவர்கள் பாடல்களில் காணலாம் ; பெண்களைப் பாடுகையில் முடி முதல் அடி வரை பாட வேண்டும் ; இறைவனைப் பாடுகையில் அடி முதல் முடி வரை பாட வேண்டும் ; அதாவது பெண்களின் கூந்தல் அழகினை வருணித்து விட்டு கால்களில் அணிந்த ஆபரணங்கள், அவளது அன்ன நடை பற்றிச் சொல்லலாம்.

இறைவனைப் பாடுகையில் முதலில் பாதங்களையே பாட வேண்டும் அவரது கண்களின் பார்வையை நாம் தாங்க முடியாது ; அதன் வீரியத்தைக் குறைத்து கடைக் கண்களால் மட்டுமே அவர் நம்மைக்  காண வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோளாக இருக்க வேண்டும்.

ஒருவரை இந்துவா அல்லது பிற மதத்தினரா என்பதைக் கண்டுபிடிக்க இது உதவும்.

தமிழ்ப் புலவன் திருவள்ளுவன் ‘பக்கா’ இந்து ; அதனால் முதலில்  கடவுள் வாழ்த்துப் பாடினான்; புத்தர்களும், சமணர்களும் கடவுள் பற்றிப் பேசவில்லை  ; முதல் பத்து குறள்களில் ஏழு குறள்களில் பாதம் பற்றிப் பாடினான் வள்ளுவன் ; இதனால் அவனைத் தீவிர இந்து என்று அறிகிறோம்; அவனைப் பின்பற்றி அவ்வையும் பாதச்  சிலம்பு பற்றிப் பாடினார். இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மதக் கடவுளருக்கு உருவம் கிடையாது.

****

மேலும் இறைவனின் கால் பட்டால் முக்தி கிடைக்கும் ; அது விதியை வெல்ல உதவும் என்று அருணகிரி நாதரும் பகர்ந்தார்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.–கந்தரலங்காரம்-40

(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து).

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே—அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  – 70

****

களபம் என்றால் என்ன?

குட்டி யானைக்கும் வாசனை மிகுந்த குளிர்ச்சி தரும் கலவைக்கும் களபம் என்று பொருள் ; அதனால் அவ்வையார், சீத/ குளிர்ச்சிமிக்க களபம் என்று அகவலைத் தொடங்குகிறார்

சீத+ உஷ்ணம் = சீதோஷ்ணம் ஸம்ஸ்க்ருதச் சொல் .

அவ்வையார் ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் அகவலைத் துவங்கியதைக் கவனிக்கவேண்டும் ஆனால் வள்ளுவனும் திருக்குறளை ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் துவங்கி ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் நூலை முடிப்பதையும் நாம் காண்கிறோம். இது ஒரு குற்றமில்லை. நூலின் சிறப்பினை உயர்த்த வள்ளுவனும் அவ்வையும் கண்ட உத்தி!

*****

திருப்புகழில் களபம்

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

     பவனி வரும்படி …… யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய

     இருளை விடிந்தது …… நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது

     வரிசை தரும்பத …… மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு

     மகிழ வரங்களு …… மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

     அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத

     குறமக ளிங்கித …… மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

     களபம ணிந்திடு …… மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி

     யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

****

களபம் ஒழுகிய புளகித முலையினர்

     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்

          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்

     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு

          தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்…….

இது போல நிறைய பாடல்களில் காணலாம்………..

முதல் இரண்டு வரிகளைக் கண்டோம் ; மேலும் காண்போம் .

தொடரும்…………………

Tags- விநாயகர் அகவல், ஆராய்ச்சிக் கட்டுரை-1, சீதக் களபச் செந்தாமரைப்பூம் 

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!! (Post No.14,199)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,199

Date uploaded in Sydney, Australia – –13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கி ஆன் லைன் இதழில்6-2-25 அன்று பிரசுரமான கட்டுரை

தேசத்தை எழுப்பிய தேசீய கீதம்

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!! 

ச. நாகராஜன் 

பிரம்மாண்டமான தேசம். பாரம்பரியமான தெய்வீக அறிவைக் கொண்டிருக்கும் தேசம். உலகில் உள்ள நாடுகளுக்கு வழி காட்டுவதற்காக இறைவன் படைத்த தேசம்.

அது தூங்கிக் கொண்டிருந்தது. அடிமைப்பட்டிருந்தது. வருவோர் போவோர் எல்லாம் அதன் மீதிருந்த ஆபரணங்களையும் இதர செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த தெய்வீக புருஷர்கள் அன்னையை வேண்டினர். அன்னை மனம் கனிந்தாள்.

வந்து உதித்தார் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா!

1838ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதியன்று வங்காளத்தில் 24 பர்கணா மாவட்டத்தில் கண்டலபதா என்ற ஊரில் அவர் பிறந்தார். இருபது வயதிலேயே ஆங்கில ஆட்சியில் துணை நீதிபதியாக ஆனார்.

பாரதப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட அவருக்கு வழிகாட்டி, உணவு, மருந்து எல்லாமே பகவத் கீதை தான்!

அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதை மெய்ப்பிக்கிறது.

ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது டாக்டர் அவரிடம் வந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொள்ளுமாறு கூறினார். பங்கிம் சந்திரர் சிரித்தார். இது டாக்டருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்” என்று அவர் கத்தினார்.

பங்கிம் கேட்டார்: “எப்படி?”

“இந்த மருந்தை உட்கொள்ளாமல் இருந்தால் அது தற்கொலை செய்து கொள்வதாகத்தானே அர்த்தம்?”

“யார் சொன்னது நான் மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்று?”

“எங்கே நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தைக் காண்பியுங்கள், பார்ப்போம்!”

பங்கிம் பேசவில்லை. தன் அருகில் இருந்த  ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அது ஒரு புத்தகம். கீதை புத்தகம்.

அது தான் அவரது வாழ்க்கைக்கு வழிகாட்டி!

தேச மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர் பரிதவித்தார்.

தேசம் எப்போது விழித்தெழும், எப்படி விழித்தெழும் என்ற சிந்தனை தான் அவருக்கு எப்பொழுதும்,!

1875ம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 37. ஒரு நாள் கல்கத்தாவின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சற்று தப்பிக்க எண்ணி தனது சொந்த ஊரான கண்டலபதாவிற்குச் செல்லும் ரயிலில் ஏறினார். நகரை விட்டுத் தாண்டியவுடன் ரயிலின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார் பங்கிம்.

அடடா! என்ன அற்புதம்! எங்கும் பச்சை பசுமையான வயல்கள். பசுமைத் தோட்டங்கள் அவர் மனம் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தது. பாரதத் தாய் அவர் முன்னே தரிசனம் தர ஆரம்பித்தாள். அற்புதமான ஜீவ நதிகள் அங்கு ஓடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. பரந்த காடுகள்   தெரிந்தன. ஒரு உற்சாகம் அவர் உடல் முழுவதும் பாய்ந்தது.

தாயின் செழுமையையும் அழகையும் கண்டு அவர் புல்லரித்தார்.’அவர் மனதில் தோன்றியது:

வந்தே மாதரம்!

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்

சஸ்ய சியாமளாம் மாதரம்

வந்தே மாதரம்.

கீதம் பிறந்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.

நாட்கள் கழிந்தன. 1880ம் ஆண்டு பங்கதர்ஷன் என்ற இதழில் இரு வருடங்கள் ஆனந்தமடம் என்ற ஒரு தொடர் நாவலை அவர் எழுதி வந்தார். அதில் இந்த கீதம் இடம் பெற்றது. 1882ல் ஆனந்தமடம் புத்தகமாக வெளியானது.

1772ல் ஏற்பட்ட சந்யாசிகளின் போராட்டத்தைச் சித்தரிக்கும் இந்த நாவல் நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று பங்கிம் நினைத்தார். ஆனால் உடனே அது நடைபெறவில்லை.

ஆனால் அவர் முன் ஒரு பெரிய காட்சி விரிந்தது. அதில் இந்த கீதம் தேசத்தில் விளைவிக்கும் தெய்வீகக் காட்சியைக் கண்டு அவர் மனம் சிலிர்த்தது.

 அவர் தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், “இன்னும் 20, 30 வருடங்களில் இந்த கீதத்தைப் பித்துப் பிடித்தது போல வங்காளத்தில் அனைவரும் பாடப் போகின்றனர். வங்காளம் இந்த கீதத்துடன் இணைந்து இருக்கும்” என்று எழுதினார்.

அரவிந்தர்,  தாகூர் உள்ளிட்ட பலரும் பங்கிம் சந்திரரைப் போற்றி எழுதினர்.

வந்தே மாதரத்தை எழுச்சி பெற்ற தேசம் தேசீய கீதமாக ஏற்றது.

அதன் ஒலி இமயத்தில் ஆரம்பித்து குமரி வரை ஒலித்தது!

1894 ஏப்ரல் மாதம் 8ம் நாளன்று அவர் மறைந்தார்; என்றாலும் அவரது கீதம் இமயம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!

வந்தே மாதரம் என்போம்! எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்!

****

Hindu Crossword12225 (Post.14,198)

Written by London Swaminathan

Post No. 14,198

Date uploaded in Sydney, Australia – 12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2 3 
      
4     
  5   
  6   
 7 8 9

ACROSS                    

1.In Sanskrit, “xxxxxx means “world,” “realm,” “plane of existence,” or “abode,” essentially referring to a place or dimension within the universe, often used in Hindu, Buddhist, and Jain contexts. 

 4. In Sanskrit, “XXXXX Mantra” translates to “the liberating mantra” or “the mantra that helps one cross over,” where “XXXXX means “to cross over” or “liberator,” referring to its ability to guide the soul beyond the cycle of birth and death in Hindu belief. 

5.The Sanskrit word XXXXX means “immortal,” “everlasting,” or “long life”. It is a gender-neutral name that is often associated with positive qualities such as strength, courage, and wisdom. Boys’ name.

6.Hand; used in Indian languages.

7. “essence,” “taste,” “flavor,” or “juice in Indian languages

DOWN

1.It means creeper; popular name for girls .

2. The Sanskrit word xxxxx has multiple meanings, including “hailstones”, “participant in an action”, and “semantic relation between a verb and a noun”

3. xxxxx is a Sanskrit word that means “sea monster” or “crocodile”. It has multiple meanings, including a water monster in Hindu mythology, a zodiac sign, and a yoga pose. 

8.Third Veda dealing with music

9. Another name of Manmatha; God of Love; also death, Killing, slaughter, slaying;

L1OK2AM3 
A A A 
T4ARAKA
H A5MAR
A K6ARA
 R7AS8AM9

–Subham—

Tags– Hindu Crossword12225

தமிழ் தெரியுமா12225 ? – (Post.14,197)

Written by London Swaminathan

Post No. 14,197

Date uploaded in Sydney, Australia – 12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக. இரண்டு சொற்கள் குறுக்கே செல்கின்றன.

 x1      
      2 
   3  4 4a
      5 
  6  7 ←  
    8x 9↑ 
10   11←  

ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்க; இரண்டு சொற்கள் குறுக்கே செல்கின்றன

1. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோவிலில் உள்ள சிவபெருமான்,;

2. நெசவாளரின் கருவி;

3. தோழி என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்,;

4.இளமை, பெண்மை, எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண், நத்தை, பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று, பெண் மீன்,சங்கு,மரக்கன்று;

5. காய் என்பதை அடுத்து வரும்; மாமிசத்துக்கும் பெயர்;

7. ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் ←  ;

10. கோட்டான், ஆந்தை, கெளசிகம் , உலூகம் 11. வேசி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கான இன்னுமொரு ஸம்ஸ்க்ருதச் சொல் ←,

1. அத்வைத தத்துவத்தைப் பரப்பியவர் ;(மேலிருந்து கீழே செல்க)  1. லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு,  6. சங்கீதம், நடனம், நடிப்பு ஆகியவற்றில் புகழ்பெற்றோரைப் பின்பற்றும் பெண் 8.  பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையுறுப்பு. ↑ 8.  கணவனை மனைவி அழைக்கும் ஸம்ஸ்க்ருதச்  சொல்  8 மூக்கு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் 9. திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாள் ↑,4.a. அடையாளம்

x1த்நார் 
வு தி   த2றி
டை  ச3கி நா4கு 4a
யா   ங் க5றி
ர் ர6தாக7 ←ங் 
 சி நா↑8x ர9↑ 
கூ10கை சிதா11← ர்

 —-Subham—

 Tags– தமிழ் தெரியுமா12225 ? 

கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம்! (Post.14,196)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,196

Date uploaded in Sydney, Australia – –12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம்

பத்ம பூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம் –   BY எஸ்.பி.பாலு 

ச.நாகராஜன் 

                            எஸ்.பி.பாலு

மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத் தொண்டினை தமது எழுத்துகள் மூலமாகவும், செயல் மூலமாகவும் நன்கு செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

அச்சுக்கலை வித்தகர் புதுக்கோட்டை கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்.

புகழ்பெற்ற மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிகைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி ‘நகர்வலம்’ பகுதி மூலமாகவும் எழுதுவது இவர் வழக்கம்.

பொதுமக்களின் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இவரது துணிச்சலான எழுத்துகள் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் பற்றிய புதிய புத்தகம்

கேப்டன் என்று மக்களால் அழைக்கப்படும் மறைந்த நடிகர் விஜயகாந்த்

(பிறப்பு: 25-8-1953 மறைவு: 28-12-2023) அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை  முழுமையாக இந்த நூலில் அவரது அபிமான ரசிகரான  இவர் இப்போது எழுதி வெளியிட்டுள்ளார்.

அவர் சென்னைக்கு வந்தது முதல், பல முயற்சிகளுக்குப் பிறகு திரைப்படத்துறையில் வெற்றி கண்டது வரையில் உள்ள அனைத்துத் தகவல்களும் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது இந்தப் புத்தகத்தில்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்து தென்னிநிதிய நடிகர் சங்கத்தில் நிலுவையில் இருந்த கடனை அவரே அடைத்தார்.

அரசியலில் ஈடுபாடு கொண்டு அவர் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கினார். மக்களிடம் அது பெருத்த வரவேற்பைப் பெற்றது. அவரே எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வரையில் அது பெரிதாக வளர்ந்தது.

மனித நேயத்துடன் பிறர் அறியாதபடி அவர் செய்த தர்ம காரியங்கள் ஏராளம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடல்நலம் குன்றி அவர் நோயுடன் போராட வேண்டி வந்தது.

ஐந்து ஆண்டு காலம் இப்படி நோயுடன் போராடிய அவர் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது

இந்நூல் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் நிறைய புள்ளி விவரங்களைத் தந்து அடிப்படையான செய்திகளைத் தருகிறது.

புத்தகம் கிடைக்கும் இடம் : புஸ்தகா டிஜிடல் மீடியாபெங்களூர். விலை ரூ 130 தகவல்களுக்கு நாட வேண்டிய தொலைபேசி எண் 74185 55884

பேப்பர் பேக் புத்தகத்திற்கு 15% தள்ளுபடி உண்டு -விலை ரூ110.50

***

tags-கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 24 (Post.14,195)

TAMIL MP IN AUSTRALIAN PARLIAMENT

 Written by London Swaminathan

Post No. 14,195

Date uploaded in Sydney, Australia – 11 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்

24ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 24

ஆஸ்திரேலியாவில் தமிழ் எம் பி

ஆஸ்திரேலியாவில்  ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் வசிக்கிறார்கள். எல்லா முக்கிய நகரங்களிலும் தமிழர்கள் கோவில்களையும் கட்டி வழிபடுகிறார்கள். இவர்களில் இலங்கைத் தமிழர்கள்  அதிகம். அங்கு நடந்த இனக் கலவரம் காரணமாகப் பலர் அகதிகளாகக் குடியேறினார்கள்; இவர்களைத் தவிர இந்தியா, தென் ஆஃப்ரிக்கா, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளிலிருந்து படிப்பதற்காகவும், கம்பியூட்டர் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்காகவும் வந்த இந்தியத் வம்சாவளித்  தமிழர்களையும் காணலாம். ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் குறைவு.

சிட்னி நகரம்,மெல்போர்ன் நகரம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்  நகரம் ஆகியவற்றில் அதிகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

முக்கிய நகரங்களில் இலங்கைத் தமிழர்கள் பத்திரிகைகளையும் வானொலி ஒலிபரப்புகளையும் நடத்துகிறார்கள்; ஆண்டுதோறும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இந்தியாவிலிருந்து வரும் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசை இடம்பெறுகிறது. பல இசைப் பள்ளிகளையும், நடனப் பள்ளிகளையும் வாராந்திர தமிழ் வகுப்புகளையும் தமிழர்கள் நடத்துகிறார்கள்.

தமிழர்கள் வாழும் இடங்களில் நூல்நிலையங்களில் தமிழ் புஸ்தகங்களையும் காணலாம்.

2022- ஆம் ஆண்டு முதல்  தமிழ் எம் பி ஒருவரும் பார்லிமெண்டில் இடம்பெற்றுள்ளார் அவருடைய பெயர் டாக்டர் மிஷல் ஆனந்தராஜா. இங்கிலாந்தில் லண்டனில் பிறந்து இங்கு குடியேறியவர். விக் டோரியா  மாநிலத்தில் ஹிக்கின்ஸ் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

Member for Higgins

Born in the UK, Michelle migrated to Australia from Zambia with her family at age 11. Michelle understands the powerful role that education, hard work and a welcoming society can play in changing lives.

As an infectious diseases and general medicine specialist doctor of 26 years experience, Michelle achieved her medical degree from the University of Sydney in 1996 and her PhD from the University of Melbourne in 2016.

ஆப்பிரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிலிருந்து குடியேறி ஆஸ்திரேலியாவில் கல்விகற்றவர்  மருத்துவ ஆராய்ச்சியாளரும் ஆவார்.

MY OLD ARTICLE

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

Research Article Written by london swaminathan; Date: 7 February 2016

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

HINDU FLAG OF AUSTRALIAN ABORIGINES; THIS TYPE OF DOUBLE CONE FALG IS USED BY HINDU ORGANISATION RSS, HINDU COUNTRY NEPAL AND HINDU TEMPLES.

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

மூத்தோர் சொல் அமிர்தம்

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

—SUBHAM—

TAGS- ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் , அதிசயம் ,- Part 24, தமிழ் எம். பி., பழங்குடிகள் தமிழர்களா?

Hindu Crossword11225

Written by London Swaminathan

Post No. 14,194

Date uploaded in Sydney, Australia – 11 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Hindu Crossword11225                         

1  2 3 4    
            
            
5        ↑6 7
            
8           
       9    
10 11         
            
            
12      ↑13    
     ↑14   ↑15  

1.tenth day after Navaratri; also called Dussehra

5.Kalhana’s work on Kashmir History

8.fourth of the seven worlds; also large, great in Hinduism

9.Fire sacrifice; havan; homa

10.drum came from this Sanskrit word

12.Great Philosopher of Janaka’s period; named in Brhat Aranyaka Upanishad

****

1.Most famous king associated with Vetal/ghost stories

2.Egg born creatures in Sanskrit

3.Only woman saint among the 12 Alvars/ Vaishnavite.

14.sound, musical note in Indian languages.

4.to be earned, what is to be acquired in Sanskrit

13.creeper or the country of wines/creepers; one of the 56 ancient Hindu countries

6.gathering/assembly in Sanskrit

6.holiest river in the world.

15.justice; logic; a philosophical system in India.

7.free from impurities; stainless ; in Guruvayur this means seeing god after the nightly ritualistic offerings have been removed .

11.washerman; to cleanse; purification in Sanskrit

****

Hindu Crossword11225

V 1IJA2YA3DA4SAMI
I  N N R R  
K  D D J A  
R5AJATARANG↑6IN7
A  J L N A I
M8AHAR  I N R
A      Y9AGAM
D10AM11ARA A A A
I A  R T Y L
T R  A A A Y
Y12AJNAVAL↑13KYAA
A A  S↑14   N↑15  

—subham—

Tags- Hindu Crossword11225