ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 9-2-2025 (Post.14,189)

Written by London Swaminathan

Post No. 14,189

Date uploaded in Sydney, Australia – 10 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-2-2025 (Post.14,189)

collected from popular dailies and edited for broadcast.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ;  பிப்ரவரி 9- ஆம் தேதி தேதி ; 2025-ம் ஆண்டு

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

கும்பமேளாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

மகாகும்பமேளா  விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அத்துடன் நதியில் நின்றவாறு ருத்ராட்ச மாலையை கையில் வைத்தபடி மந்திரங்கள் சொல்லியும் அவர் வழிபட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம்,மகாகும்ப நகரில் நடைபெற்று வரும் உலகளவில் புகழ்பெற்ற மகாகும்பமேளா      விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகில் புறப்பட்டார்.

அங்கு கங்கா,யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கத்தில் புனித நீராடினார். அதனைத் தொடர்ந்து நதியில் நின்றவாறு கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தியபடி, கண்களை மூடி மந்திரங்கள் ஜெபித்தப்படி சில நிமிடங்கள் அவர் வழிபட்டார். மாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தில் கங்கையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்

முன்னதாக, கங்கையில் புனித நீராட வந்த பிரதமர் மோடியை, அரளி கரைப் பகுதியில் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் கும்பமேளாவுக்கு வந்து சித்தானந்த் சரஸ்வதி சுவாமிகளை  சந்தித்து ஆசிபெற்றார்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா இந்த ஆண்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி (ஜன.13) தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

*****

மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 42 கோடி பக்தர்கள் இதுவரை மகாகும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக, உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது

வசந்த பஞ்சமி நாளில் 5 கோடி பேர் புனித நீராடல்

வசந்த பஞ்சமி தினத்தில் மட்டும், ஐந்து கோடி பேர் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து நாட்களிலும், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். அதே நேரத்தில், சில முக்கிய நாட்களில், அகாராக்கள் எனப்படும் பல மடங்களைச் சேர்ந்தவர்கள், ‘அமிர்த ஸ்னான்’ எனப்படும் புண்ணிய நீராடுவர்.

இந்த நாட்களில், மடாதிபதிகள், சன்னியாசிகள், துறவிகள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். முன்னதாக, நாகா சாதுக்கள் புடைசூழ இவர்கள் பேரணியாக, திரிவேணி சங்கமத்துக்கு வருவர்.அதிகாலை 4:00 மணிக்கு புண்ணிய நீராடல் துவங்கியது. ஒவ்வொரு அகாராவுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பேரணியாக வந்து, அந்தந்த அகாராவைச் சேர்ந்தவர்கள் புண்ணிய   நீராடினர்.

இதற்கடுத்து, பிப்ரவரி  12ம் தேதி  பவுர்ணமி, 26ம் தேதி மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில், அமிர்த ஸ்னான் நிகழ்ச்சிகள் நடக்கும்.

.பூடான் மன்னர்

 பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு ‘அர்க்யம் ‘ கொடுத்தார் .

திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.10ம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*****

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை

புதுடில்லி: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கூறி தன் உரையை தொடங்கினார்.

இந்த விழாவில், இந்தோனேசியா அதிபர் பிரபோ சுபியன்டோ, முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம், நிர்வாக கமிட்டி தலைவர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடி பேசுகையில், ”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, வெறும் புவி அரசியல் தொடர்பானது மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விழா நடக்கிறது.இந்த தொடர்பானது, முருகக்கடவுள், பகவான் ராமர், பகவான் புத்தரை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து யார் இந்தோனேசியா பிரம்பனம் கோவில் வந்தாலும், அவர்கள் காசி, கேதார்நாத் வந்ததை போலவே ஆன்மிக உணர்வு பெறுவர்,” என்றார். 

******

ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி: ஹிந்து அல்லாத மத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, 18 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது

திருப்பதி தேவஸ்தான வாரியம், ஹிந்து ஊழியர்கள் மட்டுமே இங்க பணியாற்ற முடியும் என்று முன்பு கூறியிருந்தது. இவ்வாறு இருந்த போதிலும், இந்த 18 ஊழியர்கள் ஹிந்து அல்லாத மரபுகளைப் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் வாரியத்தின் தீர்மானத்தின்படி, கோவில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள இந்த 18 பேர், தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.ஊழியர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகளுக்கு மாற்றுதல் அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

1989ம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின்படி, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஹிந்து பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைவரும் தேவஸ்தான வாரிய உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி இந்த நடவடிக்கையை ஆதரித்தார்.

*****

காசியில் அன்னப்பூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம்

ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார்  ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் நல்லாசியுடன்  ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள்  வாரணாசியில் சங்கர மடத்தில் உள்ள  பகவதி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகத்தை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தி வைத்தார். முன்னதாக உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில்,  சிருங்கேரி சங்கராச்சாரியார்  ஜனவரி 24 முதல் 31 வரை கும்பமேளாவில் பங்கேற்று  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சங்கர மடத்தில், ஆயுத மோதக கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம், மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல பூஜைகளும் நடந்தன. நாடு முழுவதிலும் இருந்து, 485 வேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.

****

ஆதியோகி ரத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது.

தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.” 

*****

இந்து முன்னணி தலைவர் கைது

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தடையை  மீறி நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள்   கைது செய்யப்பட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடப்பட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை: பிப். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

******

முருகன் தலங்களில் தைப்பூச விழா

இந்த ஆண்டில், தைப்பூசம் பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.

இந்த நாளில் முருக  பக்தர்கள் விரதமிருந்து    முருகப் பெருமானை வழிபடுகிறார்கள் .

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலை கோவிலில். இந்த திருவிழாவுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதனை சுற்றியுள்ள செட்டிநாட்டு நகரத்தார்கள், 425 வது ஆண்டாக 329 காவடிகள் சுமந்து பாதயாத்திரையாக குன்றக்குடி வந்தடைந்தனர்.

அங்கிருந்து கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக சுமார் 180 கிலோ மீட்டர் கடந்து வரும் 10ஆம் தேதி பழனி சென்றடைவர். வரும் 13ஆம் தேதி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அதன் பின் அனைத்து நகரத்தார்களும் பழனியிலிருந்து பாதையாத்திரையாகவே சொந்த ஊர் திரும்புகின்றனர்.

இதே போல மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள பத்து கேவ்ஸ் ,சிங்கப்பூரில்  ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில்,

இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்

,தென்னாப்ரிக்கா,  மொரீஷியஸ் , செஷெல்ஸ், பிஜி நாடுகளில் உள்ள கோவில்களில்   தைப்பூசம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

****

பிப்ரவரி 10 பள்ளிகல்லூரிகள் விடுமுறை… நாகை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலின் மூலவர் காயாரோகணேசுவரர். இதில் சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். .

*****

நிம்மதி கிடைத்ததுஆன்மிக அனுபவத்தை மனம் உருகி பகிர்ந்தார்  ரஜினி!

தியானம் செய்வதன் மூலம் கிடைத்த மன அமைதி, நிம்மதி குறித்து நடிகர் ரஜினி காந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நான் இப்போது ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா (Y.s.s) ஆசிரமத்தில் இருக்கிறேன். இந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது முறையாக வந்துள்ளேன். முதலாவதாக 2002ம் ஆண்டு வந்தேன். இரண்டாவது முறையாக வந்த போது கூட இவ்வளவு அமைதியை நான் பார்க்கவில்லை.

தற்போது, இரண்டு நாட்கள் தங்கி இருந்து, நிறைய நேரம் ஆசிரமத்தை முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் ரொம்ப சிறப்பு குருவின் அறையில் உட்கார்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நேற்று காலை தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. தியானம் செய்த ஒரு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. அந்த அதிர்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்பொழுது என்னை பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்தாலே ‘பாசிடிவ் வைப்’ வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதன் சீக்ரெட் வந்து, நான் தியானம் செய்து கொண்டு இருப்பது தான். நான் தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை எவ்வாறு சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அது ஒரு விதமான அமைதி. 2002ம் ஆண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது 21 வருடங்கள் கழிந்து விட்டன. தினமும் செய்து கொண்டே இருந்தேன். முதலில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் ஒழுக்கமாக தினமும் தியானம் செய்து கொண்டே இருந்தேன். சில நேரங்களில் எனக்கு டவுட் வரும்.

என்னடா இவ்வளவு தியானம் செய்கிறோம் ஒரு மாற்றமும் நிகழவில்லையே என்று சந்தேகம் வந்தது. சரி இருந்தாலும் ஓகே என்று தியானம் செய்து கொண்டே இருந்தேன். இதன் பிறகு 10 முதல் 12 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாற்றங்கள் தெரிந்தது. இதனுடைய தாக்கம் தெரியவந்தது. அது எனக்குள்ளே ஒரு மாதிரியான நிம்மதி, எப்போதுமே அமைதி ( peace). இதனால் கஷ்டப்படாமலே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த குருக்கள் ஒருமுறை நமது கையைப் பிடித்து விட்டால், நாம் தாமாக விட்டு விட்டால் கூட அவர்கள் விடமாட்டார்கள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

பிப்ரவரி 16 – ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

Tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல்,  9-2-2025

GNANAMAYAM 9-2-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 9-2-2025 BROADCAST SUMMARY

புகழ்பெற்ற பாடகர்இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி அளித்தார் .

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி ஒன்பதாம் தேதி

9-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team from Langley, U.K.

World Hindu News in Tamil  was presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on Tamil Saint VALLIMALAI SWAMIKAL

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  TIRUVANMIYUR TEMPLE

***

INTERVIEW WITH FAMOUS SINGER AND MUSIC TEACHER HYDERABAD SHIVA. LONDON SWAMINATHAN INTERVIEWED DR B SIVA.

Hyderabad Dr. B.Siva (born to Shri Balasubramanian and Smt Kamala) started his journey at the age of 16 learning from Shri Chandrasekar, Smt Bhanu Kannan when he was he was in Hyderabad and learned from ‘Sangeetha Kalanidhi’ B.Rajam Iyer when he was doing his PG and UG courses in the Madras University. He is also the proud disciple of late Shri. Sethalapathy Balasubramaniam who is the direct disciple of Shri Papanasam sivan. He has also been under the guidance of late Smt. Sundaravalli Srinivasan.

His presentation in media shows called “Kalai Kalvi” and “Pan Paaduvom” in Makkal TV has thrown light on the feature and beauty of different South Indian Ragas and songs like Thiruppugazh and other famous as well as rare compositions. During the last 15 years of his journey, he has been performing in several reputed TV channels on various occasions such as Navaratri, Diwali, Margazhi, Sankaranthi etc…

He has been appreciated for his tremendous performance with his students in the world famous Lakshman Sruthi’s “Chennaiyil Thiruvaiyaaru” in which he performed Sri Aandal Aruliya “Thiruppavai” which increased his rasikas.

Hyderabad SIVA is well known for his activities towards the welfare of his students in the field of music. He is the proud founder of Sukhi Nikhetan Arts Academy, a musical institution in which about 250 students learn Carnatic Music. He is also well known for publishing books related to South Indian Music, Navagraha Kruthis, Thirumurai of Naalvar and is also a launcher of various music ACDs in the concept of “Listen & Learn”. He is also the proud launcher of his new book on Thiruppugazh as “Iasi Thamizh Paamaalai Series 2” with ACD both containing 4-8 line Thiruppugazh songs in the Third International Conference on Muruga Bhakthi, Durban, South Africa.

He with 108 students, is popular in presenting various thematic concerts in an unique style and theme called “Ashtothra Sangeetha Haaram”.

Reports and journals have praised his concerts. One of the most nostalgic report was by Dinamalar, on 22/10/2006, Chennai stated that “In this young age, he attracted and made the audience stunned by singing alapana, kalpana swaras etc., in the raga Shanmukhapriya”.

Presently he is well known for his rendering of songs in a very unique style without breaking the words and phrases not only in Thamizh Compositions, but other language compositions too. He is also being liked for singing a number of Viruthams in his concerts. His journey as a Music Teacher doesn’t end within the boundaries of our country. He is also an Advisor to Musical Institutions in Malaysia and South Africa, equally spreading our culture and art to the students in those countries.

On the professional view of Hyderabad Siva he has been one of the faculty members of the Vivekananda Educational Society and has also been a music lecturer at Sri Saraswathi College of Education, Ponneri, Tamil Nadu. Of all the above he is one among the grade artists in All India Radio, run by the Ministry of Information and Broadcast, Government of India. He is also a member of Advisory Council in Tamil Nadu Music & Fine Arts University.

Since his early years, he has won many accolades in many competitions conducted by reknowned institutions like Tirumala Tirupati Devastanam, Andhra Pradesh, Madras Music Academy, Kalasagram, Secundrabad, etc.

His titles includes an exhaustive list of “Sangeetha Kalarathna” by Tiruparamkundram Shri Skandha Guru Vidhyashram, Aasthana Vidhwan of “Sri Kanchikamakoti Mutt etc. He has also been awarded with Isai Chelvar, Ezhisai Endhal, Sandha Thamizh Isai Chelvar, Thiruppugazh Chemmal, etc by various organisations.

Hyderabad B.Siva has given enumerous concerts and musical presentations and programmes in various sabhas and institutions like the Chennai Sangeetha Vidhwath Sabha, Pongu Thamizh Pannisai Mandram, Bharatiya Vidya Bhawan, Delhi Tamizh Sangam, 2nd International Conference about Siddhar Neri, International Conference on Pancha Puraanam etc. Recently, he has given a musical demonstration in the 3 International Conference on Muruga Bhakthi, Durban, South Africa and 4″ International Conference on Muruga Bhakthi, Colombo, Srilanka.

E-mail: sugisrine@gmail.com

Web: www.snaacademy.com www.hyderabadsiva.com

***

Kalyanji  was anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர், Langley, U K

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் வழங்கினார்

***

ஆலயம் அறிவோம் வழங்கியவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருவான்மியூர் கோவில்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வள்ளிமலை சுவாமிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

புகழ்பெற்ற பாடகர்இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்களுடன் பேட்டி ; பேட்டி கண்டவர்  – லண்டன் சுவாமிநாதன் (from Sydney, Austalia)

இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஐதராபாத் Dr. பா. சிவா அவர்கள், ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஸ்ரீமதி கமலா இணையருக்கு இணையற்ற தவப்புதல்வராக 1975இல் தோன்றினார்.

தம் 16ஆம் அகவையிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ஐதராபாத்தில் இருந்தபோது ஸ்ரீ சந்திரசேகர், ஸ்ரீமதி பானு கண்ணன் இருவரிடமும் சங்கீதக் கலையைக் கற்கத் தொடங்கி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பயிலும்போது ‘சங்கீதக் கலாநிதி பி. இராஜம் ஐயர் அவர்களிடமும் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பெருமை பெற்ற ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் நேரடிச் சீடராகிய ஸ்ரீ சீதளபதி பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மாணவன் என்று தன்னடக்கத்துடன் குறிப்பிடும் இவர், அமரர் ஸ்ரீமதி சுந்தரவல்லி ஸ்ரீநிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சங்கீதத்தில் மேன்மை கண்டார்.

இசை பயிற்றுவிப்பதை இறைப்பணியாக மேற்கொண்ட சிவா, விவேகானந்தா கல்விக் கழகத்திலும் பொன்னேரி ஸ்ரீசரஸ்வதி கல்வியியல் கல்லூரியிலும் சங்கீத விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய ஆகாசவாணியில் இசைக் கலைஞராக மிளிர்ந்ததோடு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மன்ற உறுப்பினர் ஆகவும் சேவையாற்றி உள்ளார்.

ஆரம்ப காலந்தொட்டே சிவா அவர்கள் இசைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் வந்துள்ளார்கள். அவர்களில் சென்னை இசைக்கல்லூரி, ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், செகந்திராபாத் கலாசாகரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இசை, சங்கீதக் கலைத் துறைகளில் அவர் பெற்ற வல்லமை, அர்ப்பணிப்பு, புதிய பாணியில் போதிக்கும் ஆற்றல், தமிழிசை மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் பல பட்டங்கள் பெற்று கௌரவிக்கப் பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாஸ்ரமம் வழங்கிய சங்கீத கலாரத்னா, ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான், இசைச்செல்வர், ஏழிசை ஏந்தல், சந்தத் தமிழிசைச் செல்வர், திருப்புகழ்ச் செம்மல், சுககான நாதஜோதி போன்றவை நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

சென்னை சங்கீத வித்வத் சபை, பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம், பாரதீய வித்யா பவன், தில்லித் தமிழ்ச் சங்கம், 2ஆம் அனைத்துலக சித்தர் நெறி மாநாடு, அனைத்துலக பஞ்சபுராண மாநாடு போன்ற எண்ணிறந்த அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகளை சிவா நிகழ்த்தியுள்ளார். மேலும் பல மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியும் வருகிறார். சமீப காலத்தில் தென்னாப்பிரிக்கா, டர்பன் 3வது அனைத்துலக முருகபக்தி மாநாடு மற்றும் ஸ்ரீலங்கா, கொழும்புவில் நிகழ்ந்த ழ்ந்த 4வது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் சிவா அவர்கள் நிகழ்த்திய இசைக்கச்சேரி, கடல் கடந்தும் நமது தமிழிசை ஒலித்துக் கொண்டிருக்க ஒரு பாலம் அமைத்துள்ளது. என்றால் அது மிகையாகா.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளியேறும் பண்பாடுவோம், கலைக் கல்வி மூலம் தென்னிந்திய இசை, பல்வேறு இராகங்கள், திருப்புகழ் முதலிய தெய்வீகப் பாடல்களை சங்கீத ஞானம் உள்ளோரும், மற்றோரும் கேட்டின்புறும் வண்ணம் பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு அம்முயற்சியில் பாராட்டத்தக்க வெற்றியும் கண்டிருப்பது சிவாவின் தனிச்சிறப்பாகும்.

மேலும் தொலைக்காட்சியில் பல்வேறு ஒளி அலைகளில் நவராத்திரி, தீபாவளி, மார்கழி, மகர சங்கராந்தி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது இசைக்கச்சேரியை நிகழ்த்தி மக்களின் மனங்கவர்ந்து அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நமது கலாரத்னாவுக்கு ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக் கணக்கான ரசிகர்களை ஈட்டித் தந்த இன்னொரு நிகழ்வு உலகப் புகழ் பெற்ற லக்ஷ்மண் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு நிகழ்வில் தமது மாணவ மாணவியருடன் அவர் ஒளியேற்றிய இசை நிகழ்வாகும்.

சங்கீதக் கலையை மேலும் வளர்ப்பதிலும் தம்மிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கைத் தூக்கி விடுவதிலும் அவர் காட்டும் அக்கறை அளவிடற்கரியது. சுமார் 250 மாணவ மாணவியர் பயிலும் வண்ணம் சுகிநிகேதன் கலைக்கூடத்தை நிறுவி, அதற்கென ஓர் அழகிய மாளிகை எழுப்பி, சுகமான சூழலில் நவீனக் கருவிகளோடு கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து, நிறைய இசைப்புத்தகங்களையும் அவற்றுக்குத் துணையாக குறுந்தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் நவக்கிரகக் கீர்த்தனைகள், நால்வர் திருமுறைகள், இசைத்தமிழ்ப் பாமாலை, சின்னச் சின்னப் பாட்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

அவருக்கே உரித்த தனிப்பாணியில் அஷ்டோத்ர சங்கீதஹாரம் எனும் தலைப்பில் 108 மாணவர்களுடன் அவர் அரங்கேற்றிய இசைக்கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளேடுகளும் மாத இதழ்களும் சிவா அவர்களின் தனித்துவமிக்க இசைப்பணியைப் பாராட்டத்தவறவில்லை. குறிப்பாக 22.10.2006இல் வெளியான தினமலரில் இவ்வளவு சிறிய இளம் வயதில் காண்போரையும் கேட்போரையும் சுண்டியிழுக்கும் வண்ணம் சண்முகப்பிரியா ராகத்தில் ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களை அவர் பாடியத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஐதராபாத் சிவா அவர்களின் தனித்துவம் வாய்ந்த இசைப்பயணம் என்று சொல்லும்படி யாரும் இதுவரை செய்யத் துணியாதவகையில் திருமுறைப்பாடல்களைச் சரியான சொல் பிரிப்போடு, செவிமடுக்கும் இளைய தலைமுறையும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இராகம் பண் தவறாமல் பாடும், பாட்டுவிக்கும் ஆற்றலைக் கண்டு வியக்காதார் உளரோ? அதிலும் விருத்தங்களை இனிமை குன்றாது, பொருள் விளங்கப் பாடும் ஆற்றல் கடவுள் அவருக்களித்த வரம்தான்!

இவரின் இசைப்பணி தமிழ்நாட்டின் எல்லையுடன் நின்றுவிடவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசீயஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல இசைப் பள்ளிகளும், கல்லூரிகளும் அன்னாரை ஆலோசகராக ஏற்று நமது கலையையும் கலாச்சாரத்தையும் மக்களிடையே பரப்பி வருவது மகிழ்வூட்டுகிறது.

தொடர்க, வளர்க அன்னாரின் தெய்வீக இசைப்பணி!

‘இசைச்செல்வர்’, ‘சங்கீத கலாரத்னா’

ஐதராபாத் Dr.பா. சிவா

வில்லிவாக்கம், சென்னை 600049.

sugisrine@gmail.com

skype id: siva.vocal

:www.snaacademy.com, www.hyderabadsiva.com

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 tags-GNANAMAYAM ,9-2-2025, BROADCAST SUMMARY

Hindu Crossword 922025 (Post No.14,188)

Written by London Swaminathan

Post No. 14,188

Date uploaded in Sydney, Australia – 9 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across

1.greatest Hindu hero who brought down the .Moghul rule

5. Sincerity, honesty, veracity. 2 Conscience in Marathi; faith, belief; integrity in Hindi

6. 1) To be rich or wealthy.2) To cover, hide, screen.3) To cover (as with a net), encircle, entangle.4) To be sharp.5) To be cold, stiff, dull, or dumb. -in Sanskrit

7.goddess who blessed the great Hindu/ Marathi hero.

9.Marathi Hindu hero’s epithet

Down

1.prefix particle .The Sanskrit word xxxx is a prefix that means “with,” “together,” “completely,” or “absolutely”. It can also mean “union,” “junction,” “assemblage,” or “collection

2.week or day of the week in Indian lnguages

3.she made the marathi a great hero “with,” “together,” “completely,” or “absolutely”

7’’many’ in many Indian languages.

8. Arrow Symbol Clipart | Free Download ...Name of a man: , the name of a man in the Ṛg-veda.

Name of an author:  is the name of an author in Jaina literature from 1069.Name of Lord Vishnu:,  a name of Lord Vishnu

– go up–

10. Arrow Symbol Clipart | Free Download ...—go up—  “lover”, “husband”, “the god of love”, and “the name of a poet”. I

4. Sanskrit id., of Nārada’s ‘seven-stringed’ lute; AMg. id., a kind of lute), a musical instrument (in long lists of them; °tīm, acc. sg.), presumably a kind of lute (vīṇā): Mahāvastu ii.159.5; iii.407.19; Divyāvadāna 108.4.

1)     the egg-plant, [Bhāvaprakāśa]

1  2 3   4
       5    
     6    
 7    8Arrow Symbol Clipart | Free Download ...   
          
9         
       10Arrow Symbol Clipart | Free Download ...  

S1HIV2AJ3I  M4
A  A I   5MANA
M  R J6AL H
 B7HAVAN8Arrow Symbol Clipart | Free Download ...I A
 A   B M T
C9HATRAPATI
 U   I R10Arrow Symbol Clipart | Free Download ...  

—-subham—

Tags- Hindu Crossword 922025

தமிழ் தெரியுமா922025 ? (Post 14,187)

Written by London Swaminathan

Post No. 14,187

Date uploaded in Sydney, Australia – 9 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக

across

1.தெனாலிராமனை இப்படி அழைப்பார்கள்.

4.அழகிகளை இப்படி வருணிப்பார்கள் .

5.கல்வி என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்; பெண்களுக்கும் பெயர்.

5.பாடகிகள்,  மற்றும் பெண் கலைஞர்களைக்  குறிக்கும் சொல்.

6.கல்யாணம் என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு

8.இவர் பெயரில் மஹாபாரதத்தில் ஒரு நீதி நூல் உள்ளது.

 down   

1. சிவபக்தர்; சம்ஸ்க்ருதம், மைதிலி மொழிகளில் கவிதைகளை எழுதிய பன்மொழிப் புலவர்

2. ராம லட்சுமணர் வதம் செய்த அரக்கர்கள்;  ராவணனின் தம்பிகள்;

3. நம் தலையில் பிரம்மா எழுதுவது

7. வசந்தம் முதலான ஆறு காலங்களின் பொதுப்பெயர்

9.திருவண்ணாமலையில் வாழ்ந்த மெளன முனிவர்.

922025 

1  23
    4 
    5  
      
6   
8 9   

922025

வி1க2வி3
த்   ர4தி
யா த் வி5தூஷி
ப   
தி6ரு7 ம்
வி8துர9ர்  

  —-subham—

 tags-தமிழ் தெரியுமா922025 ? (Post 14,187)

பிரின்ஸிபிள் மாமி! (Post No.14,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,186

Date uploaded in Sydney, Australia – –9 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-1-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள சிறுகதை! 

ஒரு பிரின்ஸிபிளோடு இந்தக் கதையைப் படிங்க! 

பிரின்ஸிபிள் மாமி! 

ச.நாகராஜன் 

பிரின்ஸிபிள் மாமியைக் கண்டால் எல்லோருக்கும் பயம் தான்!

‘ஏன் புடவைத் தலைப்பைச் சரியாக போட்டுக் கொள்ளவில்லை?’, ‘இந்த ரவிக்கையை இப்படியா தைக்கிறது, முதுகே முழுக்க தெரியற மாதிரி.

அததுக்கு ஒரு ரூல் இருக்கு! பிரின்ஸிபிளா இருக்க வேண்டாமோ’ என்று ஒவ்வொன்றுக்கும் ரூல் பேசும் மாமியிடம் எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு.

ஏனென்றால் மாமிக்கு மனசு தங்கம். ஒரு அவசரம் என்றால் கேட்காமல் வந்து உதவி செய்வாள். பணத்தட்டுப்பாடா,, அது எப்படித்தான் மாமிக்குத் தெரியுமோ தெரியாது, முகத்தை வைத்துக் கண்டுபிடித்து கை நிறைய தேவையான பணத்தைக் கொடுத்து, ‘எப்ப சவுகரியமோ அப்ப திருப்பித் தா’ என்பாள். வட்டி எல்லாம் கிடையாது. சமைக்கமுடியாத சங்கடமான காலங்களில் மாமி வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும். குழந்தைகளையும் சிறுவர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு பிரின்ஸிபிள்னா என்ன, ஒழுக்கம்னா எப்படி இருக்கணும் என்று மாமி வகுப்பு எடுப்பதால் பெண்களுக்கெல்லாம் மாமி மேலே ஒரு பிரியமும் கூட!

ஊரில் உபந்யாசகர் வந்து கதை சொல்ல ஆரம்பித்தாலோ மாமி முதலில் ஆஜர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பிரசாதம் விநியோகிப்பது, தட்டு வசூல் எல்லாம் மாமி தான்!

அன்று பிரபலமான பாலக்காட்டு பாகவதர் வந்து பிரகலாதனைப் பற்றி அருமையாக உபந்யாசம் செய்தார். ஒரே கூட்டம்.  உபந்யாசம் முடிந்து விதவிதமான பிரசாதங்கள் விநியோகிக்கப்படும் நேரம் வந்தது. மாமி வழக்கம்போல கூட்டத்தை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள்.

‘இடிக்காம மெதுவாப் போகலாம். எல்லோருக்கும் பிரசாதம் நிறைய இருக்கு’. – மாமியின் குரல் கன ஜோராக ஒலித்தது. என்றாலும் இரவு சீக்கிரம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரத்தால் பிரசாத க்யூவில் ஒரே களேபரம். 

ஒரு சிறுவன் அதில் மாட்டிக் கொண்டான். அவன் நசுங்குவது நிச்சயம்.

பார்த்தாள் மாமி. அவனைக் கையைப் பிடித்து நெரிசலிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து, க்யூவில் முதல் ஆளாக நிறுத்தினாள்.

“மாமி! நீங்க செய்யறது தப்பு! எல்லோருக்கும் ரூல்னா ரூல் தான்! நான் என் இடத்துக்கே போறேன். இப்படி முன்னாலே வரக் கூடாது. நீங்களே சொல்லித் தந்திருக்கிறீர்களே, பிரின்ஸிபிள்னா பிரின்ஸிபிள்தான் மாமி!” – சிறுவனின் பேச்சைக் கேட்டு கூட்டமே திகைத்தது.

அட பிரின்ஸிபிள் மாமிக்கே பிரின்ஸிபிள் சொல்லித் தர ஒரு குட்டிப் பையனா!

 கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது. பெண்கள் கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.

“ஒருத்தி கமண்ட் அடித்தாள்: ”பிரகலாதன் சரித்திரம் கேட்டான் இல்லையோ, பையன். அப்பாவுக்கு மரியாதை கொடுத்தாலும் நாராயணா என்று சொல்வதை பிரகலாதன் விடலையே. ஒரு பிரின்ஸிபிளோட பிரகலாதன் இருந்ததைக் கேட்ட பையன் அப்படியே அதைக் கடைப்பிடிக்கிறானோ” – எல்லோரும் சிரித்தனர். 

“மாமி, போயும் போயும் ஒரு பையன்கிட்ட இப்படி தோத்துட்டேளே”- வம்பு வசந்தி கமெண்ட் அடித்து ஏளனமாகச் சிரித்தாள்.

 “நான் எங்கேடி தோத்தேன். நான் தான் ஜெயித்தேன்” என்று கம்பீரமாக மாமி கூறினாள். அனைவரும் மாமியை வியப்புடன் பார்த்தனர்.

 “தினந்தோறும் பிரின்ஸிபிள் பற்றி இந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரேனில்லியா அதுக்கு ஒரு பரிட்சை வந்த போது அதை எப்போதும் எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கணும் என்று நிரூபிச்சுட்டான் பாரு. சொல்லித் தந்த எனக்கு தாண்டி வெற்றி. எதிலும் ஒரு பிரின்ஸிபளோடு பேசணும் இல்லையா?!”

 மாமியின் பேச்சைக் கேட்ட சின்னப் பையன், “இது தான் பிரின்ஸிபிள் மாமி” என்றான்.

கூட்டத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் தலையை பலமாக ஆட்டி மாமி சொன்னது சரிதான் என்று கூவினர்.

வம்பு வசந்தியும் தான்!

**

My Trip to Blue Mountains in Australia (Post No.14,185)

THREE SISTERS 

Written by London Swaminathan

Post No. 14,185

Date uploaded in Sydney, Australia – 8 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

After a ten year gap, I went to the Blue Mountains in New South Wales, Australia. We went there by car on 8-2-2025. We enjoyed a trip in Sky Rail (Cable Car) and the scenic train that travels downwards. We walked a long way to look at the mountains from different points.

Here are some tips for future visitors :

Blue Mountains National Park is a 270,000 hectare park located within the Greater Blue Mountains.

This is the most visited national park in New South Wales and it is spread across several different towns and areas in New South Wales, including Katoomba, Blackheath, Lower Grose Valley, Mount Wilson, and Glenbrook.

Blue Mountains

1.Echo Point Lookout

Echo Point & the Three Sisters

There are several vantage points from this one spot, so it takes about 15 minutes to enjoy the views and take photos.

****

2.Scenic World

The best place to start your visit is at Scenic World. At this one spot, you can ride the world’s steepest railway, stand on the roof of the Skyway, ride on the Southern Hemisphere’s steepest cable car, and walk on boardwalk trails through the rainforest.

Eagle Hawk Lookout, Landslide Lookout, and Cahill’s and Boars Head Lookouts are three viewpoints on Cliff Side Drive. These are all located near Scenic World and it takes about 30 to 45 minutes to visit all of them.

This is the best of the three viewpoints on Cliff Side Drive. It’s a short, easy walk to an overlook protected by a railing. From this spot, you get a view of the Three Sisters, the cableway of Scenic World, and sweeping views of the Blue Mountains. It’s just a 5-minute drive from Scenic World.

****

3.Wentworth Falls Loop

Wentworth Falls

Wentworth Falls is a three-tiered waterfall and getting a view of this waterfall is one of the best things to do in the Blue Mountains.

From the Jamison Lookout and Wentworth Falls Lookout, you get a decent view of the waterfall, but for the best experience, hike part or all of the Wentworth Falls Loop.

****

Important things to do includes ride by cable car, ride by train ans seeing three sisters from different lookout points.

Scenic railway is the steepest passenger train in the world.

Scenic sky way is the cable car trip at a height of 270 metres.

As soon as one enters scenic world, one can see  giant  moving and roaring dinosaur figures . 

Each of the ride requires two hours because of the  long queues. 

Those who have more time may walk along rain forests for three hours.

FIRST  ONE LOOKS LIKE GANAPATHY

STEEPEST RAILWAY

LONDON SWAMINATHAN IN FRONT OF THREE SISTERS

CABLE CAR

Where is it?

Location details

  • The Blue Mountains are a section of the Great Dividing Range 
  • The foothills of the Blue Mountains are about 60 kilometers west of Sydney’s central business district (CBD) 
  • The Blue Mountains are accessible by car, train, or bus 

If you go by train to Katoomba, you may take public transport to reach scenic world. Explorer busses are available for tourists to take the to different points.

  • The closest train station to the Blue Mountains is Katoomba Station
  • Trains run from 4:30 AM to midnight, with regular departures every 30 minutes

 you may buy ticket to suit your  available time. if you have a car you may make your trip.

The bus routes will show the important locations.

Those who come to Sydney must do this one day trip.

—subham—

Tags- My Trip, to Blue Mountains , Australia

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 23 (Post No.14,184)

Three Sisters in Blue Mountains, Australia

Written by London Swaminathan

Post No. 14,184

Date uploaded in Sydney, Australia – 8 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 23

ஆஸ்திரேலியா நீல மலைக்கு (Blue Mountains) எனது பயணம் 

தமிழ்நாட்டில் நீலகிரியில் நீல மலை உள்ளது. அதுபோலவே ஆஸ்திரேலியாவில் சிட்னி   நகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் ப்ளூ மவுண்டன்ஸ் Blue Mountains என்னும் நீல மலை இருக்கிறது ; சுமார் ஒன்றரை மணிநேரத்தில் காரில் சென்றுவிடலாம் ..

நாங்கள் இரண்டாவது முறையாக 2025 பிப்ரவரி எட்டாம் தேதி சென்றோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த இடங்களை எல்லாம் மீண்டும் கண்டு களித்தோம் . இதை ஒரே நாளில் பார்த்துவிட்டுத் திரும்பினோம். சிலர் அங்கு தங்கி இரண்டு நாட்களிலும் பார்ப்பது உண்டு அதைச் சுற்றி தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன.

கார் வசதி இல்லாதவர்கள் பஸ் மூலமாகச் செல்லலாம் அல்லது கடூம்பா என்னும் இடம் வரை ரயிலில் சென்று பஸ்ஸைப்  பிடிக்கலாம்  அங்கு சென்றுவிட்டால் கட்டணம் கொடுத்து பஸ் டிக்கெட்(EXPLORER BUS)  வாங்கி பல இடங்களில் இறங்கிப் பார்க்கலாம்  அல்லது பஸ்ஸில் இருந்தவாறே பார்த்துவிட்டுத் திரும்பலாம். இதிலும் பல மணி நேர பயணம் முதல்  ஒரு மணி நேர பயணம் வரை பல வகையான  டிக்கெட்டுகள் கிடைக்கும்.

இந்த மலை, பல ஊர்களைக் கொண்டது; எல்லோரும் செல்லும் இடம் கடூம்பா என்னும் ஊராகும். அங்கிருந்துதான் பல இட்டங்க்ளுக்கு அழைத்துச் செல்லும் பஸ்கள் புறப்படுகின்றன.

Katoomba Cascades and Katoomba Falls  அங்கிருந்தும் சில அருவிகளைக் காணலாம். 

Blue Mountains National Park is a 270,000 hectare park located within the Greater Blue Mountains.

This is the most visited national park in New South Wales and it is spread across several different towns and areas in New South Wales, including Katoomba, Blackheath, Lower Grose Valley, Mount Wilson, and Glenbrook.

பார்க்க என்ன இருக்கிறது ?

கேபிள் கார் என்னும் கம்பி வழி ரயிலில் சென்று மலைகளையும் பள்ளத்தாக்குகளும் காணலாம். த்ரீ சிஸ்டர்ஸ்  என்று அழைக்கப்படும் இயற்கையான மூன்று மலை முகடுகளைக் காணலாம் . அவைகளைப் பார்க்கும் பிள்ளையார் பக்தர்கள், ஒரு மலை முகடு கணபதி போலவே இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

first rock looks like Lord Ganapathy

நீர்வீழ்ச்சி விழும் ஓரிடத்தில் அதைக் கயிறு மூலம் கடக்கும் விளையாட்டுகளும் உள்ளன . நெல்சன் பாறை என்ற இயற்கை மலை வடிவத்திலிருந்து சுற்று வட்டார ஊர்கள் முழுவதையும் காணலாம்.

நடந்து செல்லுவோருக்கு மைல் கணக்கில் நடப்பதற்கு காட்டு வழிப்  பாதைகள் இருக்கின்றன. மழைவனக் காடுகளைக் கண்டு இன்புறலாம். பல நீர்வீழ்ச்சிகளும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதால் பலவகை உணவு விடுதிகளும் உள்ளன .

அருகிலுள்ள இயற்கைக் குகைகள் பலத்த வெள்ள சேதத்தால் சில ஆண்டுகளாக மூடப்பட்டுவிட்டன. இவை உலகில் பல இடங்களில் காணப்படும் குகைகள் போன்றவை.  ஆங்காங்கே கடைகளும் உள்ளன . சில நினைவுப் பொருட்களை விரும்புவோர் அவைகளை வாங்கலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கைஆர்வலர்களுக்கு இது சொர்க்க பூமி.

இடங்களின் பெயர்களும் சிறப்புகளும் பின்வருமாறு :

london  swminathan in blue mountains, australia

london swaminathan with three sisters- rocks

cable car across the mountains

water falls

Blue Mountains

1.Echo Point Lookout

Echo Point & the Three Sisters

இங்கு கார் களை நிறுத்த வசதிகள் இருக்கிறது த்ரீ சிஸ்டர்ஸ் பாறைகளை நன்றாக கண்டு புகைப்படம் எடுக்கலாம்

There are several vantage points from this one spot, so it takes about 15 minutes to enjoy the views and take photos.

****

2.Scenic World

The best place to start your visit is at Scenic World. At this one spot, you can ride the world’s steepest railway, stand on the roof of the Skyway, ride on the Southern Hemisphere’s steepest cable car, and walk on boardwalk trails through the rainforest.

சீனிக் வோர்ல்டு என்னுமிடத்தில் கேபிள்கார் , மற்றும் கீழே இறங்கும் ரயில் வண்டி உள்ளன. நடக்க விரும்புவோருக்கு கானகப் பாதைகள் இருக்கின்றன .

ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு கியூஉ வரிசை இல்லாவிடில் இரண்டு மணி நேரத்தில் எல்லா சவாரிகளையும் முடித்துவிடலாம்.

*****

Eagle Hawk Lookout, Landslide Lookout, and Cahill’s and Boars Head Lookouts are three viewpoints on Cliff Side Drive. These are all located near Scenic World and it takes about 30 to 45 minutes to visit all of them.

இந்த மலை முகடுகளிலிருந்து நின்று பார்த்தால் வெவ்வேறு காட்சிகளைக் காணலாம் இதற்கு ஒரு மணி நேரம் தேவை.

இந்த மூன்று இடங்களில் சிறந்தது Eagle Hawk Lookout

இங்கிருந்து த்ரீ சிஸ்டர்ஸ் — மூன்று சகோதரிகள்— பாறை முகடுகள், கேபிள்கார் மழைப் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் காணலாம். மேலும் இது சீனிக் வோர்ல்டு அருகில்  உள்ளது .

This is the best of the three viewpoints on Cliff Side Drive. It’s a short, easy walk to an overlook protected by a railing. From this spot, you get a view of the Three Sisters, the cableway of Scenic World, and sweeping views of the Blue Mountains. It’s just a 5-minute drive from Scenic World.

****

Wentworth Falls Loop

Wentworth Falls

Wentworth Falls is a three-tiered waterfall and getting a view of this waterfall is one of the best things to do in the Blue Mountains.

வென்ட்வொர்த்  நீர்வீழ்ச்சியை வென்ட்வொர்த் காட்சி முனையிலிருந்தும், ஜேமிசன் முனையிலிருந்தும்  காணலாம்

From the Jamison Lookout and Wentworth Falls Lookout, you get a decent view of the waterfall, but for the best experience, hike part or all of the Wentworth Falls Loop.

****

Queen’s Cascade

இது ஐந்து நிமிட தொலைவில் இருக்கிறது மலைக்களத்தில்தான் அதிக நீர் வரும்  மலையில் இறங்கிப் பார்க்க வேண்டும்

நடந்து செல்லுவோருக்கு மணிக்கணக்கில் நடப்பதற்குப் பாதைகள் போடப்பட்டுள்ளன. மலை ஏறுவோருக்கும் வசதிகள் உண்டு.

—SUBHAM—

TAGS- ஆஸ்திரேலியா, அதிசயம் , பாருங்கள்!, Part 23, நீல மலை, Blue Mountains, எனது பயணம் 

பைபிள் விவரங்களைத் தந்த சாவுக்கடல் குகைச் சுருள்கள்! (Post.14,183)

கும்ரான் குகைகள்

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,183

Date uploaded in Sydney, Australia – –8 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

30-1-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!

 உலகின் அதிசய இடங்கள் 

செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : பைபிள் விவரங்களைத் தந்த சாவுக்கடல் குகைச் சுருள்கள்!

ச. நாகராஜன்  

செரிண்டிபிடி (Serendipity)  எனப்படும் தற்செயல் கண்டுபிடிப்பால் நான்கு சிறுவர்கள் லஸ்காக்ஸ் கேவ்- ஐக் கண்டுபிடித்ததைப் போல ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பைபிளின் அபூர்வமான விவரங்களைத் தரும் சுருள்களை ஒரு குகையில் கண்டுபிடித்தது உலகையே பிரமிக்க வைத்தது.

டெட் சீ ஸ்க்ரால்ஸ் (DEAD SEA SCROLLS) என்று புகழ் பெற்றிருக்கும் அந்தச் சம்பவம் இது தான்!

1947ம் ஆண்டு ஒரு நாள் ஆடுகளை மேய்க்கும் ஒரு பாலைவனச் சிறுவன் சாவுக்கடலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மலைச் சிகரங்களில் தன் ஆட்டைத் தொலைத்து விட்டான். அதைத் தேடிக்கொண்டே சென்ற அவன் ஓரிடத்தில் ஒரு சிறிய துவாரத்தைக் கண்டான். அதில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்ட அவன் டங் என்ற சப்தத்தைக் கண்டு பயந்து போனான். ஆனால் அவன் தன் நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு அந்த துவாரத்தின் உள்ளே தவழ்ந்து சென்றான்.

அங்கு குகையில் பல பெரிய மண் பானைகளைப் பார்த்து அதிசயித்தான். அதில் மெதுவாகக் கையை விட்டுப் பார்த்த போது பட்டுத்துணியில் சுற்றப்பட்டிருந்த பல காகிதத்தோல்களைக் கண்டான். அவற்றில் சிலவற்றை எடுத்து வந்து 13 மைல் தூரத்திலிருந்த ஜெருசலத்தில் சிரியன் பிஷப் ஒருவருக்கு விற்றான்.

அந்த பிஷப் அதை அமெரிக்கன் ஓரியண்டல் ஆய்வுப் பள்ளியில் கொடுத்து ஆராயச் சொன்னார். அதில் இருந்தவை அனைத்தும் ஹிப்ரூ மொழியிலிருந்த எழுத்துக்கள்!

இதனால் மிகவும் அதிசயித்துப் போன இரு டாக்டர்களான ஜான் சி,

ட்ரெவர் மற்றும் வில்லியம் ப்ரவுன் லீ (Doctors John C. Trever and William Brownlee) ஆகியோர் இவற்றை போட்டோ எடுத்தனர். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஹிப்ரூ மொழி வல்லுநரான டாக்டர் வில்லியம் ஆல்பிரைட்டுக்கு (Doctor William F.Albright) அனுப்பினர். அவர் அவற்றை ஆராய்ந்து கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை அவை என்று அறிவித்தார். இது ஒரு நம்பவே முடியாத அபூர்வ கண்டுபிடிப்பு என்று அவர் அறிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு உருவானது.

ஆயிரம் வருடங்கள் பழமையான பைபிள் பிரதிகளை அந்தப்பகுதியிலிருந்த எல்லோரும் தேடி அலைய ஆரம்பித்தனர்.

இது அவர்களுக்கு அதிக பணத்தைத் தரும் ஒரு புதிய வழியாக ஆகவே அவர்கள் பாறைகளையும் குகைப்பகுதிகளையும் பரந்த பாலைவனத்தில் தேட ஆரம்பித்தனர்.

முதலாவது குகை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கும் குறைவாக இன்னொரு குகை கண்டுபிடிக்கப்பட்டது.

இது கும்ரான் குகை (Qumran cave) என்று அழைக்கப்பட்டது.

இப்படியாக தேடுதல் வேட்டையில் 400 சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன! எஸ்தரைத் தவிர பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியும் எடுக்கப்பட்டது.

இஸ்ரேலிய யூத பண்பாட்டுப் பழம் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தப் பகுதிக்கு உலகெங்கிலுமிருந்து பயணிகள் வருவது வழக்கமாக ஆகி விட்டது இப்போது!

***

Hindu Crossword 722025(Post.14,182)

Written by London Swaminathan

Post No. 14,182

Date uploaded in Sydney, Australia – 7 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1  2 3
      
4     
      
5     
      
6     

Across

1.Hindu God whose duty is Preservation

4.good friend in Sanskrit

5.number 8 in Sanskrit

6.natural, easy or spontaneous

Down

1.dress, clothing, vesture

2.joyful, elation, being thrilled

3.north, high, 

V1ISH2NU3
E  A T
S4UHRUT
H  S A
A5STA R
   N A
S6AHAJA

—subham—

Tags- Hindu Crossword 722025(Post.14,182)

GNANAMAYAM 9-2-2025 BROADCAST PROGRAMME

புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி ஒன்பதாம் தேதி

9-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Saint VALLIMALAI SWAMIKAL

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  TIRUVANMIYUR TEMPLE

***

INTERVIEW WITH FAMOUS SINGER AND MUSIC TEACHER HYDERABAD SHIVA.

Hyderabad Dr. B.Siva (born to Shri Balasubramanian and Smt Kamala) started his journey at the age of 16 learning from Shri Chandrasekar, Smt Bhanu Kannan when he was he was in Hyderabad and learned from ‘Sangeetha Kalanidhi’ B.Rajam Iyer when he was doing his PG and UG courses in the Madras University. He is also the proud disciple of late Shri. Sethalapathy Balasubramaniam who is the direct disciple of Shri Papanasam sivan. He has also been under the guidance of late Smt. Sundaravalli Srinivasan.

His presentation in media shows called “Kalai Kalvi” and “Pan Paaduvom” in Makkal TV has thrown light on the feature and beauty of different South Indian Ragas and songs like Thiruppugazh and other famous as well as rare compositions. During the last 15 years of his journey, he has been performing in several reputed TV channels on various occasions such as Navaratri, Diwali, Margazhi, Sankaranthi etc…

He has been appreciated for his tremendous performance with his students in the world famous Lakshman Sruthi’s “Chennaiyil Thiruvaiyaaru” in which he performed Sri Aandal Aruliya “Thiruppavai” which increased his rasikas.

Hyderabad SIVA is well known for his activities towards the welfare of his students in the field of music. He is the proud founder of Sukhi Nikhetan Arts Academy, a musical institution in which about 250 students learn Carnatic Music. He is also well known for publishing books related to South Indian Music, Navagraha Kruthis, Thirumurai of Naalvar and is also a launcher of various music ACDs in the concept of “Listen & Learn”. He is also the proud launcher of his new book on Thiruppugazh as “Iasi Thamizh Paamaalai Series 2” with ACD both containing 4-8 line Thiruppugazh songs in the Third International Conference on Muruga Bhakthi, Durban, South Africa.

He with 108 students, is popular in presenting various thematic concerts in an unique style and theme called “Ashtothra Sangeetha Haaram”.

Reports and journals have praised his concerts. One of the most nostalgic report was by Dinamalar, on 22/10/2006, Chennai stated that “In this young age, he attracted and made the audience stunned by singing alapana, kalpana swaras etc., in the raga Shanmukhapriya”.

Presently he is well known for his rendering of songs in a very unique style without breaking the words and phrases not only in Thamizh Compositions, but other language compositions too. He is also being liked for singing a number of Viruthams in his concerts. His journey as a Music Teacher doesn’t end within the boundaries of our country. He is also an Advisor to Musical Institutions in Malaysia and South Africa, equally spreading our culture and art to the students in those countries.

On the professional view of Hyderabad Siva he has been one of the faculty members of the Vivekananda Educational Society and has also been a music lecturer at Sri Saraswathi College of Education, Ponneri, Tamil Nadu. Of all the above he is one among the grade artists in All India Radio, run by the Ministry of Information and Broadcast, Government of India. He is also a member of Advisory Council in Tamil Nadu Music & Fine Arts University.

Since his early years, he has won many accolades in many competitions conducted by reknowned institutions like Tirumala Tirupati Devastanam, Andhra Pradesh, Madras Music Academy, Kalasagram, Secundrabad, etc.

His titles includes an exhaustive list of “Sangeetha Kalarathna” by Tiruparamkundram Shri Skandha Guru Vidhyashram, Aasthana Vidhwan of “Sri Kanchikamakoti Mutt etc. He has also been awarded with Isai Chelvar, Ezhisai Endhal, Sandha Thamizh Isai Chelvar, Thiruppugazh Chemmal, etc by various organisations.

Hyderabad B.Siva has given enumerous concerts and musical presentations and programmes in various sabhas and institutions like the Chennai Sangeetha Vidhwath Sabha, Pongu Thamizh Pannisai Mandram, Bharatiya Vidya Bhawan, Delhi Tamizh Sangam, 2nd International Conference about Siddhar Neri, International Conference on Pancha Puraanam etc. Recently, he has given a musical demonstration in the 3 International Conference on Muruga Bhakthi, Durban, South Africa and 4″ International Conference on Muruga Bhakthi, Colombo, Srilanka.

E-mail: sugisrine@gmail.com

Web: www.snaacademy.com www.hyderabadsiva.com

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருவான்மியூர் கோவில்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வள்ளிமலை சுவாமிகள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

புகழ்பெற்ற பாடகர்இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி

இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஐதராபாத் Dr. பா. சிவா அவர்கள், ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஸ்ரீமதி கமலா இணையருக்கு இணையற்ற தவப்புதல்வராக 1975இல் தோன்றினார்.

தம் 16ஆம் அகவையிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ஐதராபாத்தில் இருந்தபோது ஸ்ரீ சந்திரசேகர், ஸ்ரீமதி பானு கண்ணன் இருவரிடமும் சங்கீதக் கலையைக் கற்கத் தொடங்கி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பயிலும்போது ‘சங்கீதக் கலாநிதி பி. இராஜம் ஐயர் அவர்களிடமும் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பெருமை பெற்ற ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் நேரடிச் சீடராகிய ஸ்ரீ சீதளபதி பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மாணவன் என்று தன்னடக்கத்துடன் குறிப்பிடும் இவர், அமரர் ஸ்ரீமதி சுந்தரவல்லி ஸ்ரீநிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சங்கீதத்தில் மேன்மை கண்டார்.

இசை பயிற்றுவிப்பதை இறைப்பணியாக மேற்கொண்ட சிவா, விவேகானந்தா கல்விக் கழகத்திலும் பொன்னேரி ஸ்ரீசரஸ்வதி கல்வியியல் கல்லூரியிலும் சங்கீத விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய ஆகாசவாணியில் இசைக் கலைஞராக மிளிர்ந்ததோடு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மன்ற உறுப்பினர் ஆகவும் சேவையாற்றி உள்ளார்.

ஆரம்ப காலந்தொட்டே சிவா அவர்கள் இசைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் வந்துள்ளார்கள். அவர்களில் சென்னை இசைக்கல்லூரி, ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், செகந்திராபாத் கலாசாகரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இசை, சங்கீதக் கலைத் துறைகளில் அவர் பெற்ற வல்லமை, அர்ப்பணிப்பு, புதிய பாணியில் போதிக்கும் ஆற்றல், தமிழிசை மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் பல பட்டங்கள் பெற்று கௌரவிக்கப் பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாஸ்ரமம் வழங்கிய சங்கீத கலாரத்னா, ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான், இசைச்செல்வர், ஏழிசை ஏந்தல், சந்தத் தமிழிசைச் செல்வர், திருப்புகழ்ச் செம்மல், சுககான நாதஜோதி போன்றவை நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

சென்னை சங்கீத வித்வத் சபை, பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம், பாரதீய வித்யா பவன், தில்லித் தமிழ்ச் சங்கம், 2ஆம் அனைத்துலக சித்தர் நெறி மாநாடு, அனைத்துலக பஞ்சபுராண மாநாடு போன்ற எண்ணிறந்த அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகளை சிவா நிகழ்த்தியுள்ளார். மேலும் பல மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியும் வருகிறார். சமீப காலத்தில் தென்னாப்பிரிக்கா, டர்பன் 3வது அனைத்துலக முருகபக்தி மாநாடு மற்றும் ஸ்ரீலங்கா, கொழும்புவில் நிகழ்ந்த ழ்ந்த 4வது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் சிவா அவர்கள் நிகழ்த்திய இசைக்கச்சேரி, கடல் கடந்தும் நமது தமிழிசை ஒலித்துக் கொண்டிருக்க ஒரு பாலம் அமைத்துள்ளது. என்றால் அது மிகையாகா.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளியேறும் பண்பாடுவோம், கலைக் கல்வி மூலம் தென்னிந்திய இசை, பல்வேறு இராகங்கள், திருப்புகழ் முதலிய தெய்வீகப் பாடல்களை சங்கீத ஞானம் உள்ளோரும், மற்றோரும் கேட்டின்புறும் வண்ணம் பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு அம்முயற்சியில் பாராட்டத்தக்க வெற்றியும் கண்டிருப்பது சிவாவின் தனிச்சிறப்பாகும்.

மேலும் தொலைக்காட்சியில் பல்வேறு ஒளி அலைகளில் நவராத்திரி, தீபாவளி, மார்கழி, மகர சங்கராந்தி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது இசைக்கச்சேரியை நிகழ்த்தி மக்களின் மனங்கவர்ந்து அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நமது கலாரத்னாவுக்கு ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக் கணக்கான ரசிகர்களை ஈட்டித் தந்த இன்னொரு நிகழ்வு உலகப் புகழ் பெற்ற லக்ஷ்மண் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு நிகழ்வில் தமது மாணவ மாணவியருடன் அவர் ஒளியேற்றிய இசை நிகழ்வாகும்.

சங்கீதக் கலையை மேலும் வளர்ப்பதிலும் தம்மிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கைத் தூக்கி விடுவதிலும் அவர் காட்டும் அக்கறை அளவிடற்கரியது. சுமார் 250 மாணவ மாணவியர் பயிலும் வண்ணம் சுகிநிகேதன் கலைக்கூடத்தை நிறுவி, அதற்கென ஓர் அழகிய மாளிகை எழுப்பி, சுகமான சூழலில் நவீனக் கருவிகளோடு கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து, நிறைய இசைப்புத்தகங்களையும் அவற்றுக்குத் துணையாக குறுந்தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் நவக்கிரகக் கீர்த்தனைகள், நால்வர் திருமுறைகள், இசைத்தமிழ்ப் பாமாலை, சின்னச் சின்னப் பாட்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

அவருக்கே உரித்த தனிப்பாணியில் அஷ்டோத்ர சங்கீதஹாரம் எனும் தலைப்பில் 108 மாணவர்களுடன் அவர் அரங்கேற்றிய இசைக்கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளேடுகளும் மாத இதழ்களும் சிவா அவர்களின் தனித்துவமிக்க இசைப்பணியைப் பாராட்டத்தவறவில்லை. குறிப்பாக 22.10.2006இல் வெளியான தினமலரில் இவ்வளவு சிறிய இளம் வயதில் காண்போரையும் கேட்போரையும் சுண்டியிழுக்கும் வண்ணம் சண்முகப்பிரியா ராகத்தில் ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களை அவர் பாடியத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஐதராபாத் சிவா அவர்களின் தனித்துவம் வாய்ந்த இசைப்பயணம் என்று சொல்லும்படி யாரும் இதுவரை செய்யத் துணியாதவகையில் திருமுறைப்பாடல்களைச் சரியான சொல் பிரிப்போடு, செவிமடுக்கும் இளைய தலைமுறையும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இராகம் பண் தவறாமல் பாடும், பாட்டுவிக்கும் ஆற்றலைக் கண்டு வியக்காதார் உளரோ? அதிலும் விருத்தங்களை இனிமை குன்றாது, பொருள் விளங்கப் பாடும் ஆற்றல் கடவுள் அவருக்களித்த வரம்தான்!

இவரின் இசைப்பணி தமிழ்நாட்டின் எல்லையுடன் நின்றுவிடவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசீயஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல இசைப் பள்ளிகளும், கல்லூரிகளும் அன்னாரை ஆலோசகராக ஏற்று நமது கலையையும் கலாச்சாரத்தையும் மக்களிடையே பரப்பி வருவது மகிழ்வூட்டுகிறது.

தொடர்க, வளர்க அன்னாரின் தெய்வீக இசைப்பணி!

‘இசைச்செல்வர்’, ‘சங்கீத கலாரத்னா’

ஐதராபாத் Dr.பா. சிவா

வில்லிவாக்கம், சென்னை 600049.

sugisrine@gmail.com

skype id: siva.vocal

:www.snaacademy.com, www.hyderabadsiva.com

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 TAGS- GNANAMAYAM, 9-2-2025 BROADCAST, PROGRAMME, புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா