Date uploaded in Sydney, Australia – 17 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்
பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சிட்னி நகரிலுள்ள ஆஸ்திரேலிய மியூஸியத்துக்கு நேற்று 16-1-2025 ல் சென்றேன்.
முதலில் நல்ல செய்தி — அனுமதி இலவசம் !
சிட்னியின் நகரப் பகுதியில் உள்ளது ; பஸ் வசதியும் ரயில் வசதியும் உண்டு .
நாங்கள் போனபோது நல்ல கூட்டம் ; மாலை ஐந்து மணி வரைதான் கண்காட்சி .
நான் ஒரு லண்டன்வாலா ; ஆகையால் முதலில் லண்டன் மியூசியங்களை ஒப்பிடுகிறேன் . லண்டனிலும் பிரிட்டிஷ் மியூசியம் விக்டோரியா- ஆல்பர்ட் மியூசியம், சயன்ஸ் மியூசியம் ,நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஆகியவற்றுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை
ஆனால் ஆஸ்திரேலிய மியூசியத்தில் உள்ளது போல பழங்குடி மக்களின் விரிவான கலாசாரத்தை அங்கு காணமுடியாது; சிட்னியில் மட்டுமே காண முடியும்.
ஆயினும் லண்டனில் கோஹினூர் வைரம் போன்ற அரச நகைகளைக் காண கட்டணம் உண்டு, சில மியூசியங்களில் ரத்தினங்களையும் தாதுப் பொருட்களையும் இலவசப் பிரிவில் வைத்திருந்தாலும் சிட்னி போல அத்தனை ரத்தினங்களைக் காண முடியாது ; ஆஸ்திரேலிய மியூசியத்தில் மிகப்பெரிய ரத்தினக் களஞ்சியம் உள்ளது.
ரத்தினைக் கற்கள் , உலோகங்களின் தாதுக்கள், பலவகைக் கற்கள் பற்றி ஆராய்வோருக்கு, அறிய விரும்புவோருக்கு, இது ஒரு அறிவுச் சுரங்கம் .
புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு .
பிரிட்டிஷ் மியூசியம் போலவே கட்டணம் கொடுத்துப் பார்க்கும் விஷேஷக் காட்சிகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்; நாங்கள் போனபோது தென் அமெரிக்க நாகரீகக் கண்காட்சி நடந்தது; அதற்கு மட்டும் கட்டணம் உண்டு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்றபோது பழங்குடிப் பிரிவினை மட்டும் ஆழமாகப் பார்த்தேன் இப்போது மினரல்- தாதுப் பொருட்கள் பிரிவில் ரத்தினங்களை ஊன்றிப் பார்த்தேன். பேரக் குழந்தைகள் விளையாடவும் பல விஞ்ஞானக் கருவிகளையும், எலெக்ட்ரானிக் போர்டுகளையும் வைத்துள்ளனர்.
வெளியே உள்ள கடையில் ரத்தினக் கற்களின் விலைகளைப் பார்த்தால் ஆயிரம் முதல் பதினாயிரம் டாலர் வரை விலை உள்ளது ; இதை ஒப்பிடுகையில் உள்ளே உள்ள ரத்தினங்கள் விலை மதிப்பு தெரியும்; ஒளிவிடும் ரத்தினங்களையும் (Fluorescent gems) காட்சிக்கு வைத்துள்ளனர் .
இங்குள்ள பொருட்களில், ரத்தினைக் கற்கள், தாதுக்கள் மட்டுமின்றி வானத்திலிருந்து விழுந்த விண்கற்களும் உள்ளன .
What’s on display?
Minerals: The gallery features over 1,800 rare and spectacular minerals, including gemstones, rare earth minerals, and human-made minerals
Rocks: The gallery includes some of the oldest rocks on Earth
Meteorites: The gallery includes Australian meteorites and tektites
Ornamental minerals: The gallery includes minerals that can be carved, shaped, or polished into decorative objects.
ஏனைய பிரிவுகளில் டைனோஸரஸ் எலும்புக்கூடுகள், ஆஸ்திரேலிய மிருகங்களின் பஞ்சு அடைக்கப்பட்ட பெரிய உருவங்கள், ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்து வளர்ச்சி பெற வைத்தவர்கள், பசிபிக் தீவுகளின் நாகரீகங்கள் முதலியன உள. பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்கும் அந்தந்தத் துறையில் ஆராய்சசி செய்வோருக்கும் விருந்து படைக்கும் பிரிவுகள் இவை.
நீங்கள் சென்றால் பழங்குடி கலாசாரத்தையும்1800 ரத்தினக் கற்களையும் காணத் தவறாதீர்கள்; சிறுவர்களுடன் சென்றால் டைனோஸரஸ் பிரிவு முக்கியமானது. மொத்தத்தில் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் வரை போதும்; மேல் மாடியில் உணவுவிடுதியும் இருக்கிறது.
Opening Hours
Open Daily 10am – 5pm
Wednesdays Until 9pm
Closed Christmas Day
Free General Entry
Address
1 William Street
Sydney NSW 2010
Australia
Phone
+61 2 9320 6000
—SUBHAM—
TAGS- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் பாருங்கள், Part 7,
Date uploaded in Sydney, Australia – 17 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்—என்ற ராமலிங்க சுவாமிகள் பாடல் மிகவும் பிரசித்தமானது; பள்ளிக்கூடப் பாடப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றறது; மேலும் பல பாகவதர்களாலும் பாடப்பெற்றுள்ளது ஆயினும் இந்தப்பாடல் முழுவதையும் படித்தால்தான் உண்மைப்பொருள் விளங்கும். வள்ளலார் பெருமான் நிறைய விஷயங்களை வேண்டுகிறார் . இந்தப்பாடலில் பதினோரு செய்யுட்கள் உள்ளன. முக்கியப்பகுதிகளைக் காண்போம்; வள்ளலாரின் உண்மைக் கருத்தினை அறிவோம்.
பிழை பொறுத்தல் என்பதை மாணிக்கவாசகர், அப்பர் முதல் தேவராய சுவாமிகள் வரை எல்லோரும் சொல்லி வேண்டுகின்றனர். ஆகையால் பெரியோர்களும் பிழை செய்ததை, செய்வதை ஒப்புக்கொள்கின்றனர் அல்லது நம்மைப் போன்ற சாதாரணமக்களுக்காக அந்த வாசகத்தையும் சேர்த்தனர் என்றும் கொள்ளலாம்
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை)
பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை
மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை
ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்– கம்பராமாயணம்
பொருள்
பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.
****
ராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாவைத் தொடர்ந்து காண்போம்
இதில் ஐயா என்று தொடங்குகிறார்; பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்—-
வாய்மையே பேசுதல் வேண்டும் – வள்ளுவர் முதல் மஹாத்மா காந்தி வரை சொன்னதுதான். வேதத்தில் முதல் பாடம் சத்யம் வத — வாய்மையே பேசு என்பதாகும்; முண்டகோபநிஷத்தில் உள்ள சத்யமேவ ஜயதே என்ற வாசகம்தான் இந்திய அரசின் சின்னத்திலும் தமிழ்நாடு அரசின் சின்னத்திலும் உளது ; உலகிலேயே சத்யத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு பாரதம் மட்டுமே; பெண்கள் பெயர்களிலும் ஆண்கள் பெயர்களிலும் சத்யம் தழைக்கும் நாடு (சத்யா; சத்யா மூர்த்தி ; சத்ய வாகீஸ்வரன் முதலியன) இதில் புதுமை இல்லை . ஆயினும் ராமலிங்க சுவாமிகள் சொல்லும் ஒரு வினோத கோரிக்கை —
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்.
இதன் பொருள் என்ன ? ராமலிங்கர் இதை உண்மையென நம்பினாரா ? கிருஷ்ணர், சிவ பெருமான், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இறந்தோரை மீட்டு வந்ததை நாம் மஹாபாரதம் , நம்மாழ்வார் பாடல், பெரிய புராணம், தேவாரம் ஆகியவற்றிலிருந்து அறிகிறோம் . மேலை நாட்டில் ஏசுகிறிஸ்துவும் இப்படிச் செய்தார். வள்ளலாரே சம்பந்தர், ஆண்டாள் போல ஜோதி மயமாக மறைந்தார்! ஆகையால் ராமலிங்கரும் இறந்தோரை உயிர்ப்பிக்க முடியும் என்றே நம்பினார்; இதை ஒப்புக் கொள்ள முடியாதோருக்கு இன்னும் ஒரு விளக்கமும் உண்டு; செத்தாரைப் போல திரியும் ஜீவன்களை மீட்டு எடுக்க வேண்டும் என்பதாகும்.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
மூன்றாவது பாடல் அண்ணா என்று துவங்குகிறது ; கண்ணனைப் பாரதியார் பல உறவு முறைகளில் அழைத்தார்; அதைப்போன்றது இந்தப்பாடல் ..
இதில் மீண்டுமொரு வினோத வேண்டுகோள் வருகிறது. அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்!
தான் ஆண்டாள், சம்பந்தர், சங்கரர்,தான்சேன் போல மாயமாய் மறைவதை முன்னரே அறிந்து இப்படிப் பாடினார் என்று பொருள் கொள்ளலாம் . இந்து மதத்தில் பல பெரியோர்கள் இப்படி மாயமாய் மறைந்து ஜோதியில் கலந்ததை நாம் புராண இதிகாசங்களில் படிக்கிறோம். இது கோடிப்பேரில் ஒருவருக்கு கிட்டும் பாக்கியம்; அதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் சமய புஸ்தகங்களில் இடம் பெறுகிறது ; எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியம் அல்ல.
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
நாலாவது பாடலிலும் பழைய வேண்டுதல்களையே வலியுறுத்துகிறார் .
அடுத்த கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.
TO BE CONTINUED………………………….
—SUBHAM—
TAGS -அப்பா நான் வேண்டுதல் கேட்டு , அருள் புரிதல் வேண்டும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11
தமிழர்தம் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உற்சாகத்தைத் தரும் ஒரு விழாநாளாகும்.
மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதை மகர சங்கராந்தி என்று குறிப்பிட்டு அது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.,
காசியபரின் புதல்வனான சூரிய பகவான் எல்லாவிதமான நோய்களையும் தீர்ப்பவன். வெற்றியை அருள்பவன்.
இதை விளக்க ஏராளமான சம்பவங்கள் இதிஹாஸ புராணங்களில் உள்ளன.
ஆதித்ய ஹ்ருதயம் : ராவணனை வதம் செய்யப் போர்புரியும் காலத்தில் ராமர் சற்று களைப்படையவே, அகஸ்திய மாமுனிவர் அவர் முன் தோன்றி சூரியனை வழிபடுவதற்காக ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தார், ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதி சூரியனைத் தொழுது ராவணனை வதம் செய்தார் ராமர்.
ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் காலையில் சொன்னால் உண்டாகும் நலன்கள் பல.
இது புண்ணியம் வாய்ந்தது. எல்லா எதிரிகளையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. அழிவற்றது. மங்களத்துக்கெல்லாம் மங்களமானது. பாவங்களைப் போக்கவல்லது. கவலையையும் துன்பத்தையும் நீக்குவது. ஆயுளை வளர்ப்பது.
சூர்ய அஷ்டோத்திரம் : மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர் சூரியனின் 108 நாமங்களை தர்மருக்கு உபதேசம் செய்தார். மனம் குளிர்ந்த சூரிய பகவான் அக்ஷய பாத்திரத்தை தர்மபுத்திரருக்கு அளித்தார். இதைச் சொல்பவர்கள் நல்ல மனைவி/கணவன், புத்திரர்கள், செல்வம், ரத்தினக் குவியல் ஆகியவற்றை அடைவர்.
சூர்யாஷ்டகம் : சிவபிரானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் சூரியனின் மகிமையை உரைக்கும் அற்புதமான தோத்திரமாகும்.
மயூர சதகம்: ஹர்ஷவர்த்தனரின் அவைப்புலவராக இருந்த கவிஞர் மயூர பட்டர் பேரழகியாக விளங்கிய தன் மகளின் அழகை வியந்து கவிதை பாடினார். மகளின் அழகை தந்தை வர்ணிக்கலாமா என்று மனம் நொந்த தபஸ்வினியான அவரது மகள் அவருக்கு குஷ்டநோய் பிடிக்குமாறு சாபம் கொடுத்தாள். குஷ்ட நோயால் அவர் அவதிப்படுவதைப் பார்த்த பின்னர் மகள் வருத்தமடைந்து அவரை சூரியனைக் குறித்து நூறு பாடல்களைக் கொண்ட சதகம் ஒன்றை இயற்றக் கூறினாள். மயூரர் சதகத்தை இயற்றி சூரியனைத் துதிக்கவே அவர் குஷ்டம் நீங்கியது. ஹர்ஷவர்த்தனர் உள்ளிட்ட அனைவரும் பிரமித்தனர். பல்வேறு மந்திரங்களை உள்ளடக்கிய இந்த சதகம் குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் போக்கும்.
சூரிய நமஸ்காரம்; மிக அற்புதமான உடல் பயிற்சி இது. சூரியனுக்குரிய மந்திரங்களைச் சொல்லி இதைச் செய்யும் போது உள்ளமும் பண்படுகிறது. 14 ஆசனங்களை உள்ளடக்கியுள்ள சூரிய நமஸ்காரத்தைச் செய்வோர் நீடித்த ஆயுளுடனும் நல்ல தேக ஆரோக்கியத்துடனும் திகழ்வர். இதற்கு எடுத்துக்காட்டாக நூறு வயது சென்னையில் வாழ்ந்தவர் யோகி கிருஷ்ணமாசார்யா. இவரது சரித்திரம் அற்புதமானது. சூரியனைத் தொழாமல் இவர் எதையும் செய்ததில்லை.
சூரியன் வழிபட்ட 12 தலங்கள் மிகவும் சிறப்புள்ளவை. 1) கேதாரம் 2) திருக்கோலக்கா 3) திருவெண்காடு 4) சாயாவனம் 5) கருங்குயில்நாதபுரம் 6) திருத்துருத்தி 7) ஶ்ரீ வாஞ்சியம் 8) திருநாகேஸ்வரம் 9) குடந்தைக் கீழ்க்கோட்டம் 10) தேதியூர் 11) திருமீயச்சூர் 12) திருவாவடுதுறை ஆகிய தலங்கள் பெருமை வாய்ந்தவை.
இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள தலங்களாக திருமீயச்சூர், திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஆகியவை திகழ்கின்றன.
இன்னும் இன்னம்பர், திருவையாறு, திருத்தாளமுடையார் கோவில் திருக்கழுக்குன்றம், பருதிநியமம், திருவாடானை ஆகிய தலங்களும் சூரியன் பூஜித்த தலங்களாகும். இங்கு வழிபாடு நடத்துவோருக்கு அனைத்து நலன்களும் சித்திக்கும்.
சூரியனுக்கே பிரத்யேகமாக நாடு முழுவதுமுள்ள ஆலயங்களில் ஒரிஸாவில் உள்ள கோனார்க்,.குஜராத்தில் மொதெரா, காஷ்மீரில் மார்தாண்ட கோவில், ஆந்திராவில் அரசவல்லி கோவில்.. தமிழ்நாட்டில் சூரியனார் கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களாகும்.
சூரிய தேவனை தினமும் வழிபடுவோம். ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவோமாக.
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வேதாந்த தேசிகர்
***
ஞானமயம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லட்சுமியின் சிறப்புப்பேட்டி
முனைவர் எம் எஸ் ஶ்ரீ லக்ஷ்மி சாதனைகள் படைப்புகள்
சோ. இலக்குமி, முனைவர் இலக்குமி மீனாட்சிசுந்தரம் என்னும் பெயர்களால் அறியப்பட்ட இவர் முனைவர் எம் எஸ் ஶ்ரீ லக்ஷ்மி என்னும் பெயரால் இப்போது அழைக்கப்படுகிறார்.
இவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தவர். மலாய் மொழியையும் நன்கு கற்றவர். மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வல்லமை கொண்டவர். மரபுக் கவிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத் திறனாய்வாளராகத் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்த பன்னூலாசிரியராகவும் சிறுவர் இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்கிறார்.
இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக எழுத்தாளர் விழாவின் ஏற்பாட்டுக்குழுவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பணிகளையும் செய்த இலக்கியத் தொண்டூழியர். நாடக மதிப்பீட்டுக்குழு, ஊடக வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றிலும் இவர் இலக்கியச் சேவை புரிந்துள்ளார்.
ஆசிரியர் என்ற முறையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆறு கட்டுரை நூல்களையும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கெனச் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான பாட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் விளங்குகிறார். புதிய ஆய்வுக்களங்களில் நாட்டம் கொண்ட இப்பெருமாட்டி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் இருநூறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சென்னை கம்பன் கழக அ.ச.ஞா. விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் அயலகத் தமிழ்ப் பெண்ணறிஞர்களுக்கென அறிவித்த அம்மா இலக்கிய விருதினை 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு வழங்கி இவரின் தமிழ்ப் பணியை அங்கீகரித்தது. இவரின் தமிழ்த் தொண்டுக்காக கும்பகோணத்தில் இயங்கும் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 2022ஆம் ஆண்டு தமிழாகரர் என்னும் பட்டமும் 2023 ஆம் ஆண்டு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தால் செந்தமிழ்த்திலகம் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. வளர்தமிழ்மாமணி என்னும் சிறப்புப் பட்டத்தை தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகமும் பாண்டிச்சேரியில் இயங்கும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் உலகத்தமிழ் மாமணி என்னும் சிறப்புப்பட்டத்தையும் சென்ற ஆண்டு இவருக்கு வழங்கி உள்ளன. மலேசிய நாட்டில் இந்த் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத் தொடக்கவிழாவில் முத்தமிழ்ப் பேரரசி என்னும் சிறப்புப் பட்டமும் இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி வழங்கப்பட்டது. இவர் எழுதிய திருநெறிய தமிழ் என்னும் நூல் சேக்கிழார் விருதினை இவருக்கு பெற்றுத் தந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் நாள் இவரின் தமிழ்த்தொண்டினை அங்கீகரிக்கும் விதமாக வானவில் பண்பாட்டு மையம், சென்னை இவருக்குச் செல்லம்மா பாரதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.
திருநெறிய தமிழ் இவரது 39ஆவது நூல். இந்த ஆண்டு பூந்தோட்டம் என்னும் சிறுவர் கவிதை நூலும் அறிந்ததும் அறியாததும் என்னும் ஆய்வுக்கட்டுரை நூலும் அடுத்த மாதம் வெளிவர உள்ளன.
****
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
Date uploaded in Sydney, Australia – 16 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவில் அய்யர் மலை
உலக அதிசயங்கள் பற்றிய நூல்களில் மூன்று அதிசயங்கள் கட்டாயம் இருக்கும்
சிட்னி நகர ஆபரா ஹவுஸ் SYDNEY OPERA HOUSE
ஆஸ்திரேலிய பவளத்திட்டு GREAT BARRIER REEF
ஐயர்ஸ் ராக்AYER’S ROCK or ULURU
இதை பார்க்க எனக்கும் ஆசைதான் ; 2015- ஆம் ஆண்டில் சிட்னிக்கு முதல் தடவை வந்தபோது இதற்கு எப்படிப் போவது? என்று என் சம்பந்திகளிடம் கேட்டேன்; சிரித்துக்கொண்டே அவர் சொன்னார்: முப்பது ஆண்டுகளாக சிட்னியில் வசிக்கிறேன்; நானே அதைப் பார்த்ததில்லை . பிரம்மாண்டமான ஆஸ்திரேலிய கண்டத்தின் நட்ட நடுவில் பாலைவனப்பகுதியில் அது நிற்கிறது அதைப் பார்க்க விமானத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். மேலும் அதைத் தவிர அங்கு காண்பதற்கு வேறு எதுவும் இல்லை என்றார்; அத்தோடு என் ஆசையும் பறந்தோடிப் போயிற்று!
ஆயினும் அதைப்பற்றி அறியும் ஆவல் நீங்கவில்லை; ஆஸ்திரேலிய மியூசியத்துக்குச் சென்று பழங்குடி மக்கள் பிரிவில் அது பற்றிப் பல விஷயங்களை அறிந்தேன் .
சிட்னி நகரிலிருந்து அது மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது; விமானத்தில் போவதற்கு முப்பது மணி நேரம் ஆகும் .
ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பாலைவனப்பகுதியில் அய்யர் மலை நிற்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்று. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் புனிதச் சின்னம் இது.
வரலாற்று ரீதியிலும், புவியியல் ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம். பழங்குடி மக்கள் இதை உளூரு ULURU என்று அழைபர். இந்த முறை எனது ஆஸ்திரேலியப் பயணத்தில் ஐயர்ஸ் ராக் எனப்படும் உளூருக்குப் போகமுடியவில்லை. நான் சிட்னி மியூசியத்தில் கண்டதையும், புத்தகத்தில் படித்ததையும் கொண்டு இக்கட்டுரையை வரைகிறேன்.
இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ்HENRY AYERS என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்தது, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்..
மலையைச் சுற்றி 60 கதைகள்
இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகட்டும் ஒரு கதை சொல்லும். வேதகால மக்கள் எப்படி வாய்மொழியாக வேதங்களைப் பாதுகாத்தார்களோ, அது போலப் பழங்குடி மக்களும் பாடல் வடிவில் பல கதைகளைப் பாதுகாத்துப் பாடிவருகிறார்கள். எல்லாம் பாம்பு, பல்லி தொடர்பான கதைகளாக இருக்கும். குனியா, வன்னாபி, வானவில் பாம்பு. விஷம், ,மலைப்பாம்பு என்று பல வகைகள். ஒவ்வொன்றும் அந்தந்த இன மக்களைக் குறிக்கும்.
இந்த அய்யர் மலையில் பல பழங்கால வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. 30 மைல் தொலைவில் கட தூஜா என்னும் இடமிருக்கிறது இது பெண்களுக்கு புனிதமான இடம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் உடலமைப்புபோலத் தோன்றும். நாம் சதி என்னும் பார்வதி தேவி தட்ச யக்ஞத்துக்குப் பின்னர் கோபமடைந்து தனது உடலை எரித்தபோது அதன் பகுதிகள் விழுந்த இடமெல்லாம் எப்படி சக்தித் தலங்கள் ஆனதாக நம்புகிறோமோ அதே போலப் பழங்குடி மக்களும் புனிதமான பெண்ணின் உடல் என்று நம்புகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் படைப்புக் கதைகள் பழங்குடி மக்களின் புராணத்துக்கு அடிப்படையாக அமைகிறது. இதைக் கனவுநேரம் என்று அவர்கள் மொழியில் சொல்லுவர். நாம் திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் செய்கிறார் என்பது போல இது. இந்தப் படைப்புக்காலத்தில் இரண்டு பையன்கள் , உளூரு மலையை உருவாக்கியதாக அவர்கள் கதைகள் சொல்லுகின்றனர். மேலும் குனியா என்னும் மலைப்பாம்பு மக்களை நீரு என்னும் விஷப் பாம்பு ஆட்கள் தாக்கியபோது படைப்புகாலம் முடிவுக்கு வந்தது என்பர்.
அவர்கள் புராணப்படி, முன்னோர்களின் ஆவிகள் இந்த உலகைப் படைத்ததாகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று பெயர் சூட்டியதாகவும் அவை பாடல் வடிவில் உள்ளன என்றும் சொல்லபடுகிறது. இந்த விஷயங்களை, சமயத் தலைவர்கள் மட்டுமே அறிவர் என்பர். இது நமது வேதப் பாடல்களை ரிஷிகள் மட்டுமே “கேட்க” (சுருதி) முடியும் என்பதைப் போல. ஒரு பழங்குடி இனத் தலைவருடன் பயணம் செய்தால் அவர், ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் அழைத்துச் சென்று அது தொடர்பான பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார்.
மற்றொரு கதை குனியாவும் மாலாவும், ஒரு முக்கிய சடங்கிற்கு குறித்த காலத்தில் வராததால், விண்டுல்கா என்னும் மேற்குப்பகுதி மக்கள் கோபமடைந்ததாகவும் பின்னர் பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது
எனது கணிப்பு
பழங்குடி மக்கள் பாம்பின் பெயரில் மக்களை அழைப்பதைப் பார்க்கையில் இவர்களும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த நாகா இன மக்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் – பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் நடத்தி பாம்புகளைக் (நாகா இன மக்களை) கொன்றதையும், பின்னர் இருவருக்கும் உறவினரான ஆஸ்தீக மகரிஷி சமாதான உடன்படிக்கை செய்து கொடுத்ததையும் இந்த பல்லாயிரமாண்டு வரலாற்றை பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் சொல்லிவருவதையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுடியுள்ளேன் ( மாயா இன மக்கள் இந்திய நாகர்களா – என்ற கட்டுரையில் விவரம் காண்க) ).
பின்னர் மய தானவன் என்ற ஒரே ஒரு நாகர் இன மனிதன் மட்டும் அர்ஜுனனின் உதவியைப் பெற்றதையும் நமது புராணங்கள் விளக்குகின்றன. இவனது தலைமையில் பாதாள லோகத்துக்கு (தென் அமெரிக்கா) சென்றவர்களே மய= மாயா நாகரீகத்தைத் துவக்கினர். எகிப்தின் முதல் மன்னன் மனு, மாயா இன முதல் மன்னன் ஆகிய அனைவரும் கலியுக முதல் ஆண்டான கி.மு.3102-ல் ஆட்சி துவக்கியதாக அந்தந்த நாட்டு வரலாறு சொல்வதும், ஆஸ்தீக மகரிஷி பெயரில் அஸ்டெக் நாகரீகமிருப்பதும் இவைகளௌக்கு மேலும் சான்று பகரும். இதே போல ஆஸ்திரேலியாவிலும் நாகர்களே சென்று ஆட்சி அமைத்ததால் எல்லாம் பாம்பின் பெயரில் அமைந்துள்ளன. பல்வேறு காலத்தில் – 40,000 ஆண்டுகளில் — பல நாகா அணிகள் சென்றதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கலாம்.
மாயா, ஆஸ்திரேலியப் பழங்குடிகள், எகிப்திய மன்னர்கள் ஆகியோருடன் வேறு பல ஒற்றுமைகளும் நிலவுவதை தனித் தனி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். அதன் பிண்ணனியில் நான் கூறுவதை வைத்துப் பார்த்தால் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது விளங்கும்.
இந்துக்களுக்கு கன்யாகுமரிக்குக் கீழே 7 பாதாள லோகங்கள் இருப்பது நன்கு தெரியும். கடலில் சென்று அடையும் எல்லா தீவுகளையும் நாகர் தீவு என்றும் அங்குள்ள பெண்கள் நாக கன்னிகைகள் என்றும் சொல்லி வந்தனர். பல்லவர் வரலாறு, மணிமேகலையில் சோழர் வரலாறு முதலியவற்றிலும் இதைக் காணலாம்.
ஆஸ்திரேலியாவில் முதல் முதலில் குற்றவாளிகளை மட்டுமே குடியமர்த்தி வந்தனர். இதே போல வாமனாவதாரத்திடம் தோற்றுப் போன மஹா பலி சக்ரவர்த்தியையும் தென் அமெரிக்கவுக்கு நாடு கடத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திரும்பிவரலாம் என்று பணித்தனர். அப்படி வந்த நாளையே இன்று வரை மலையாளிகள் ஓணம் என்று கொண்டாடிவருகின்றனர். இதுபோலவே, வேத முறைகளைக் கைவிட்ட விஸ்வாமித்திரரின் மகன்களை தெற்கே அனுப்பி அவர்கள் திராவிடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் புரணங்கள் கூறும். ராம லெட்சுமணர், பஞ்ச பாண்டவர்கள் கூட 14 ஆண்டுகளும், 13 ஆண்டுகளும் வனவாசத்தில் தெற்கு வரை வந்து சென்றனர்.
அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்பதெல்லாம் பிற்காலத்தில் பல பெயர்கள் ஏற்படக் காரணமாயீற்று. அதல என்பதிலிருந்தே, அடலாண்டிக் மஹாசமுத்திரம் என்றும் சுதல என்பதிலிருந்தே சவுத் (தென் திசை என்பதும் ) வந்தன. கபிலாரண்யா என்பதே, அமெரிக்காவின் கலிபோர்னியா என மருவியது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.
-சுபம்-
Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 6, அய்யர் மலை, AYER’S ROCK , ULURU , ஹென்றி ஐயர்ஸ் ராக், HENRY AYERS ,உளூரு
Date uploaded in Sydney, Australia – 16 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரிநாதருக்கு அடுத்தபடியாக முருகனை மிகவும் போற்றி வணங்கியவர் ராமலிங்க சுவாமிகள்தான் ; பாரதியாரின் முருகன் துதிகள் கூட இதற்கு அடுத்த இடத்தில்தான் வரும். பிற்கால சாஹித்யகர்த்தாக்கள் நிறையவே முருகனைப் பாடியிருக்கின்றனர் என்பது உண்மைதான்.
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் பாடிய கந்தர் சரணப்பத்து பற்றி பலருக்கும் தெரியாது. இது பஜனைகளில் பாடவேண்டிய பாடல். ராக தாளத்துக்கு ஏற்ப வரக்கூடியது மட்டுமல்ல; எளிதில் திரும்பச் சொல்ல வல்லது ; ஆழ்ந்த பொருளும் கொண்டது.
பத்து செய்யுட்களைக் கொண்ட இந்தத் துதியில் சில கண்ணிகளைக் காண்போம் :
சென்னைக் கந்தகோட்டம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
2. பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
3. முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
****
10. வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவைஇல் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
முருகனின் நாமம் வேதப் பொருள் என்பது வள்ளலாரின் துணிபு. அதை இரண்டாவது மற்றும் பத்தாவது செய்யுட்களில் உறுதிப்படுத்துகிறார்.
****
நாலாவது செய்யுளில் காவே தருவே சரணம் சரணம் என்கிறார்; அதாவது மரங்களும் அந்த மரங்கள் நிறைந்த காடும் போன்றவனே என்கிறார்; இது மாணிக்க வாசகரின் ஏகன் அனேகன் என்பது போன்றது ; அவனே ஒருவனாகவும் கோடிக்கணக்கான தெய்வங்களாகவும் நின்று அருளவல்லவன் .
அது மட்டுமல்ல ; பாரதியாரின்
‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்! “
என்ற வரிகளையும் நினைவுபடுத்தும்.
இதைச் சிறுவர்களுக்கு கற்ப்பிப்பதோடு, பாடப்புஸ்தகங்களிலும் சேர்க்க வேண்டும்
தெய்வமணிமாலையிலுள்ள முப்பத்தொரு பாடல்கள் தெரிந்த அளவுக்கு இது பரவவில்லை .
ஆறாவது செய்யுளில் ஞாலத்து துயர் தீர் நலனே சரணம் என்கிறார் ராமலிங்க சுவாமிகள் ; உலக மக்களின் துயரை நீக்குபவன் முருகன் ; சங்கீத நாராயண சப்த மாத்திரம் விமுக்த துக்காஸ் சுகினோவா பவந்து என்று விஷ்ணு சஹஸ்ரமநாமத்தில் வருகிறது; அதுபோல முருகன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் உலகத்துயர் நீங்கும்.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்— என்பதையும் ஒப்பிடலாம்.
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்.
****
7. நங்கட் கிளியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
ஏழாவது பாடலில் ஞான சம்பந்தரை நினைவு கூறுவதைக் கவனிக்கவேண்டும்; சம்பந்தப் பெருமானை திரு முருகனின் அவதாரம் என்று ஆன்றோர் கருதுவர் அதைச் வள்ளலாரும் பாடி மகிழ்கிறார் ; வணங்கிப் போற்றுகிறார்
காங்கேயன் என்று முருகனுக்கு ஒரு பெயர்; அதாவது கங்கையின் மைந்தன் ; கங்கையால் தோன்றிய சரவ ணப்பொய்கையில் அவதரித்தவர் ஆதியும் ஏழாவது பாடலில் சொல்கிறார்
சுருங்கச் சொன்னால் பாடலில் வரும் வரிகளைக் கொண்டு பிறப்பு முதல் வள்ளி திருமணம் வரை கதை சொல்லிவிடலாம்.
****
ஒன்பதாவது பாடலில் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் என்று முருகனைப் போற்றுகிறார் ;இறைவன் என்பவர் எல்லோர் இருதயத்திலும் உறைவதை உபநிஷத்களும் உரைக்கின்றன. அதை அறிவதற்கு முயற்சி செய்தால் அவன் ஏற்கனவே நம்மிடத்தில் இருப்பதை உணரலாம்
பத்துப் பாடல்களும் கந்தா சரணம் என்று முடிவது பாடலின் முழுப்பொருளை உணர்த்துகிறது.
கந்தகோட்டக் குமரனை, கந்தனை சரணடைவோருக்கு வேறு எதுவும் தேவையில்லை ; மேலும் இதே பாடலில் சிவனே என்றும் வருவதால் தெய்வம் ஒன்றே என்பதை சொல்லாமற் சொல்கிறார் வள்ளலார் .
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Gāṅgeya (गाङ्गेय).—a. (-yīf.) Being in or on or of the Ganges; स्नातानां शुचिभिस्तोयैर्गाङ्गेयैः प्रयतात्मनाम् (snātānāṃ śucibhistoyairgāṅgeyaiḥ prayatātmanām) Mahābhārata (Bombay) 13.26.31.
Date uploaded in Sydney, Australia – 16 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Fifty Wonders of Australia -Part 3 (Post No.14,101)
33.Australia is also home to really speedy dragonflies. One dragonfly was recorded flying at the massive speed of 36 miles per hour (57 km per hour).
34.Australia has a population of 25 million people. That’s just under half the amount of people who live in the UK, even though Australia is about 32 times larger than the UK.
35.20 f the top 25 most venomous spiders are from Australia.
36.Wombats are Australian animals, and they have cube-shaped poo. Scientists think that this is so it doesn’t roll away.
37.Eucalyptus trees are iconic to Australia, and are a major part of the country’s landscape:
· Number of species
There are around 900 species of eucalyptus in Australia, which are part of the genera Eucalyptus, Corymbia, and Angophora. The tallest tree in Australia is an Eucalyptus tree. The tallest tree in the country, Centurion, is in Tasmania. It was last officially measured over 100m.
· Distribution
Eucalypts are found in every state and territory of Australia, except for the driest regions. They can grow in a variety of environments, from high rainfall to semiarid, and from sea level to subalpine.
· Uses
Indigenous Australians have used almost every part of the eucalyptus tree, including the leaves, sap, bark, and wood.
38.The Geography of Australia
Australia is unique because, not only is it one of the biggest countries in the world, it is the only country to cover an entire continent. Whilst a lot of Australia’s land is fertile and hospitable, over a third of it is desert land. Australia is famous for its outback, which is a massive area of desert. The climate in the outback is extremely hot and dry, which means that there isn’t a lot of water or vegetation there. For this reason, very few people choose to live in the outback, as it is pretty inhospitable to life.
The climate is much more comfortable in the southwest and southeast of Australia, which is where most of the country’s cities and farms are located. The land in this part of Australia is much more fertile than the outback, so farms there grow things like wheat and grapes for wine.
39.In addition to mainland Australia, there is a wide range of small islands included within the continent of Australia. In fact, there are 8,222 islands within the marine borders of Australia. One of Australia’s most famous islands is Tasmania Island. Tasmania Island is located at the south-eastern corner of mainland Australia. It is a large, mountainous island with a very high annual rainfall, which gives it incredibly fertile soil compared to mainland Australia.
Here are some of Australia’s biggest islands. Each of these islands has a surface area larger than 1,000 km² (386.102 miles²):
Tasmania Island, Melville Island, Kangaroo Island, Groote Eylandt,
Bathurst Island, Fraser Island, Flinders Island, King Island, Mornington Island.
Fraser Island is the world’s largest sand island. It stretches over 120 km along the southern coast of Queensland, Australia.
40.The total surface area of Australia is 7,686,850 km² (2,967,910 sq miles). This is 31.5 times larger than the surface area of the United Kingdom.
The coastline length of mainland Australia is 35,877 km (22,293 miles).
There are a total of 758 estuaries in Australia. An Estuary is a partially enclosed, coastal body of water where fresh water from rivers and streams combines with salt water from the ocean. Most of these estuaries can be found in the subtropical and tropical zones of Australia.
41.Australia is the only country in the world that has control over the largest area of ocean jurisdiction.
Throughout the entirety of Australia, there are no land borders.
42.History of Australia
People have lived in Australia for over 60,000 years. The first people who lived there were the Aboriginal and Torres Strait Islander Peoples. The Aboriginal Australians lived in tribes and spoke about 250 different languages. They invented tools like the boomerang, which we still associate with Australia, and the spear.
The Aboriginal Australians are the oldest living culture in the world. They have also created some amazing art throughout the centuries. This includes carvings, paintings, and depictions of nature. The main types of Aboriginal arts and crafts include dot painting, rock painting, and weaving. They usually represent the natural world because Aboriginal Australians have always had a close relationship to the natural landscape.
Dutch explorers first landed in Australia in 1606, and British settlers arrived in 1776. This is when Captain James Cook charted the east coast of Australia in his ship HM Endeavour. He called Eastern Australia ‘New South Wales’. Now, New South Wales is the name of one of the six states that make up Australia.
In 1788 Britain claimed the first of six colonies. In 1901, those six colonies joined together to form the Commonwealth of Australia. A Commonwealth country has the same King or Queen as Britain, but the monarch only has a ceremonial role.
Nowadays, Australia is governed by a democratically elected government. In 1999, there was a vote in which Australians decided against separating from the UK. However, some people are still discussing the idea of separating from the UK.
43.Australian traditions and lifestyle
Australia Day is on 26 January. This marks the anniversary of the first ships to land in New South Wales in 1788. There are barbecues, festivals, and fireworks.
The warm climate and outdoor spaces mean that people in Australia spend a lot of time outdoors. They love sports like surfing and sailing. They also invented a new sport, which is Australian rules football. This game is like a mix of basketball, rugby, and football, all in one.
In Australia, a white Christmas is impossible. Its seasons are opposite to those of the UK, so it’s summer in Australia when Christmas is celebrated. People celebrate with Carols by Candlelight, where they gather together outside to sing carols and light candles.
44.Food in Australia
Currently, the food in Australia is a combination of British cuisine and food with indigenous origins along with Mediterranean and Asian influence. One thing that Australia is known for is its variety of high-quality meat, which it is able to produce due to its wide range of natural resources.
Seafood is also very popular in Australia. High-quality seafood is easily accessible in Australia, as most of the population live close to the sea. For this reason, the seafood restaurants in Australia are some of the best in the world.
There is also a range of popular plant and animal foods in Australia known as the Bush tuckers. These foods are indigenous to the Australian bush. Some examples of bush tucker plant food are finer lemons, Kakadu plums, desert quandong, kutjera, muntries, and riberries. Some examples of bush tucker animal foods are kangaroo and emu meat, as well as the shellfish that live in the saltwater river system of Australia.
A fun fact is that the Aboriginal people of Australia actually consume wood-eating larvae as part of their traditional diet. These larvae are super high in protein, so Aboriginal people would eat them to build up their muscles and bones.
45.Australia’s top 10 exports by value are:
Mineral fuels: Including oil, this is the largest export at US\$125.9 billion
Ores, slag, and ash: US\$104.4 billion
Gems and precious metals: US\$21.4 billion
Salt, sulfur, stone, and cement: US\$13.4 billion
Cereals: US\$13.1 billion
Meat: US\$12.3 billion
Inorganic chemicals: US\$6.3 billion
Machinery including computers: US\$5.3 billion
Oil seeds: US\$4.5 billion
Aluminum: US\$4.4 billion
46.Australia’s Top 10 Imports in 2023
1. Petroleum oils (not crude): $50.75 billion
2. Motor vehicles for passengers: $34.8 billion
3. Motor vehicles for goods transport: $16.965 billion
4. Electrical apparatus for telephony: $12.9485 billion
5. Automatic data processing machines: $10.295 billion
6. Medicaments: $8.961 billion
7. Unwrought or semi-manufactured gold: $8.265 billion
8. Crude petroleum oils: $7.9605 billion
9. Blood and immunological products: $6.5975 billion
10. Construction machinery: $4.6255 billion
47. The Sydney Opera House
The Sydney Opera House is a UNESCO World Heritage site that hosts over 1,500 performances annually.
· 48.The outback
The outback is the remote rural areas of Australia, where there are scorching temperatures, little water, and almost no vegetation.
· 49.The Great Dividing Range
The Great Dividing Range is a 3,700-kilometer stretch of mountain that sends water down into Australia’s most important rivers.
· 50.The world’s oldest fossil
The world’s oldest fossil was discovered in Australia, at 3.4 billion years old.
39 வயதிலேயே பிரம்மாண்டமான சாதனையை உலக அரங்கில் நிறைவேற்றி முடித்த ஸ்வாமிஜி, “‘மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது, இப்போதைக்கு இது போதும்’, என்று முடிவு செய்து தங்கள் இருப்பிடம் சென்று விட முடிவு செய்து விட்டார்.
1906ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி ஏகாதசி தினம். அன்று அவர் விரதம் இருந்தார். மார்கரெட் எலிசபத் நோபிளாக அயர்லாந்தில் பிறந்து ஸ்வாமிஜியின் கருணை நோக்கினால் சகோதரி நிவேதிதையாக மாறிய ஆன்மீகச் செல்வி அங்கு வந்த போது ஸ்வாமிஜி அவருக்கு உணவு வகைகளைப் பரிமாறி சாப்பிடுமாறு உபசரித்தார். சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவ தாமே நீர் வார்த்தார். “ஸ்வாமிஜி, இதை நான் அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்” என்று நெஞ்சுருக நிவேதிதை கூற, “ஏன் ஏசுநாதர் தன் சீடர்களின் கால்களையே கழுவி விட்டாரே!” என்று அவர் பதில் அளித்தார்.
“ஆனால், அது. அது.. அவரின் கடைசி தினமாயிற்றே..!!” தொண்டையில் சிக்கித் திணறிய வார்த்தைகள் நிவேதிதையின் வாய்க்கு வரவில்லை.
அதற்குச் சில நாட்களுக்கு முன்பே ஸ்வாமிஜி பஞ்சாங்கம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி நாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அது எதற்கு என்று யாருக்கும் தெரியாது.
தன் யாத்திரையின், அவதார தினத்தின் இறுதி நாளை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அது 1902ம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி.
அமெரிக்காவிற்கும் தனக்கு உள்ள ஆன்மிகத் தொடர்பின் அழியாத முத்திரையைப் பதிக்க விரும்பிய வீரத் துறவி தேர்ந்தெடுத்த தினம் அமெரிக்க சுதந்திர தினப் பொன்னாள். என்று வரை அமெரிக்கர்கள் அந்தப் பொன்னாளில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களோ அன்று வரை அவரின் நினைவும் அதில் பூரணமாக்க் கலந்திருக்கும்.
அன்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் யோக மார்க்கம் மூலமாக சிரசின் வழியே தன் உயிரைத் துறந்து பர வெளியுடன் கலந்தார் ஸ்வாமிஜி.
விவேகானந்தர் இந்தியா பற்றிக் கூறியது!
இந்தப் பூவுலகில் புனிதமான புண்யபூமி என்று உரிமை கொண்டாட ஒரு நாடு இருக்குமானால், மனிதகுலம் தம் கர்மபலன்களைக் கழிக்க வந்து சேர வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித ஆன்மாக்களில் ஒவ்வொன்றும் இறைவனை அடைய வேண்டி தனது இறுதி வீடாக வந்து அடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித குலம் பரந்த உள்ளத்தின் உச்சநிலையை, தூய்மையின் எல்லையை அமைதியை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் எல்லாவற்றிற்கும் மேலாக உள்முகமாகத் திரும்பிய, ஆன்மீகத்தைக் கொண்ட நாடு என்று ஒன்று இருக்குமானால் அது தான் இந்தியா ஆகும்
விவேகானந்தர் ஒரு ஹிந்து எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிக் கூறியது!
நான் கூறுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள்! ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
விவேகானந்தர் தன்னைப் பற்றித் தனது கடைசி நாளில் கூறியது!
விவேகானந்தர் என்ன செய்தார் என்பதை இன்னொரு விவேகானந்தரால் தான் புரிந்து கொள்ள முடியும். இன்னும் காலப்போக்கில் எத்தனை விவேகானந்தர்கள் தோன்றப் போகிறார்கள்?!!!
விவேகானந்தர் எதிர்கால இந்தியா பற்றிக் கூறியது!
நான் எதிர்காலத்தின் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் பிரத்யக்ஷமாக தெளிவாக நான் காண்கிறேன். நமது புராதன அன்னையானவள் மீண்டும் எழுந்து விட்டாள் என்பதையும் அவள் தனது எழுச்சி பெற்ற சிம்மாசனத்தில் இன்னும் அதிகப் புகழுடன் மீண்டும் அமர்கிறாள் என்பதையும் நான் காண்கிறேன்.
எழுமின் விழிமின்
‘எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின்’ என்ற கடோபநிஷத்தின் வாக்கியத்தை லட்சியமாகக் கொடுத்து ‘அனைவருக்கும் முக்தி’ என்ற லட்சியத்தை உலக மக்களின் முன் வைத்தார் ஸ்வாமிஜி.
“உலக மாந்தர் அனைவரும் முக்தி அடைய உதவுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பூமியில் பிறக்கத் தயார்” என்று அறிவித்த அவரது அமிர்த வாக்கியம் மனிதர்களின் உள்ளங்களை எல்லாம் பூரிக்க வைக்கும் கருணை வெள்ளத்தின் அடையாளம் அல்லவா!
ஸ்வாமிஜியின் நினைவை அனுதினமும் போற்றி அவர் காட்டிய வழியில் நடப்போம்! நன்றி வணக்கம்!