Date uploaded in Sydney, Australia – 11 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2
ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்
1.கங்காரு
2.வல்லபி
3.பிளாட்டிபஸ்
4.கோவாலா
5.டிங்கோ
கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசீய விலங்கு. தபால்தலைகளில் இதைக் காணலாம்.
இது ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் பிராணி..
பின்னங்கால்களால் மிக அதிக தூரம் தாவிச் செல்லும் விலங்கு. அதுமட்டுமல்ல ; குட்டிகளை தனது வயிற்றுப் பகுதியில் சுமந்து செல்லும் மிருகம்.இது தாண்டும் தொலைவு – ஒரே தாவலில் முப்பது அடிகள் ; பத்து அடி உயரத்துக்கு எழும்பிக் குதிக்கும். மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் பாயும் .
ஆறு முதல் எட்டு அடி உயரத்துக்கு வளரும் ; ஆண் விலங்குதான் பெரியது; எடை 200 பவுண்டுகள் .
இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த மிருகம் வெஜிட்டேரியன் ; தாவரங்களையே உண்ணும்; பசுக்களைப் போல வயிறு படைத்தவை ; விழுங்கிய பொருட்களை மீண்டும் வாய்க்குள் கக்கி ஜீரணம் செய்கின்றன.
இவைகளில் நான்கு வகைகள் உண்டு. சிவப்பு, சாம்பல் நிறம் என்று பிரிக்கிறார்கள்
பெரும்பாலான கங்காருக்கள் இடது கையர்கள் ; வல து கையை பலப் பிரயோகத்துக்கு மட்டும் பயன்படுத்தும் .
இவை நல்ல நீச்சல் வீரர்கள் ; டிங்கோ என்னும் மிருகங்களிடமிருந்து தப்பிக்க நீரில் குதிக்கும். சில நேரங்களில் அவைகளை நீருக்குள் ஏமாற்றி அழைத்து சிறிய முன் கைகளால் குத்து விடும். அப்போது அதன் விசை 270 பவுண்டு.
கங்காருக்கள் பெரிய கரடிகளைப்போல பலம் கொண்டவை.
மனிதர்கள் செய்யும் படுகொலைகள்
கங்காரு மாமிசமும் தோலும் மிகவும் மதிப்பு உடையவை. ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் இவைகளைக் கொன்று எழுபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆஸ்திரேலிய அரசு இந்தப் படுகொலைக்கு கோட்டா நிர்ணயிக்கிறது . ஆண்டுக்கு ஐம்பது லட்சம் கங்காருகளைக் கொல்ல லாம் என்று ஆஸ்திரேலிய அரசு கோட்டா நிர்ணயித்துள்ளது
கண்களில் ஒளியை வீசி அவைகளைக் குருடாக்கி சுட்டுக்கொல்கிறார்கள் ; அனாதையாக்கப்பட்ட குட்டி (joeys) களை குத்திக் கொன்று மகிழ்கிறார்கள் பாதகர்கள்
The animals are temporarily blinded by a light before hunters cruelly shoot them, sometimes leaving them to bleed out, while orphaned joeys are bludgeoned or suffer an agonizing death due to the elements or starvation.
சில நாடுகள் கங்காரு படுகொலைகளைத் தடுப்பதற்காக தோல், மாமிச இறக்குமதிக்கு தடை போட்டுள்ளன.
இவை சுமார் எட்டு ஆண்டுகள்தான் வாழும்; மிருகக்காட்சி சாலைகளில் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன
Kangaroos
Family
Macropodidae
Genus
Macropus
The word kangaroo derives from ‘Gangurru’, the name given to Eastern Grey Kangaroos by the Guuga Yimithirr people of Far North Queensland.
ஆஸ்திரேலியாவின் மாகாணங்களில் ஒன்று குயின்ஸ்லாந்து ; அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் இதை கங்கரு என்று அழைத்தனர்.
இவையும் கங்காரு இனத்தைச் சேர்ந்தவை; ஆனால் அளவில் சிறியவை .
சிவப்பு கங்காரு 90 கிலோ எடைக்கு வளரும் வல்லபிக்கள் wallaby 20 கிலோ எடையே இருக்கும்.
வல்லபிக்கள் மூன்று அடி உயரம் மட்டும் வளரும். இப்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு வெளியிலும் இவைகளைக் காணலாம் நியூசிலாந்து, நியூகினி மற்றும் அமெரிக்காவின் ஹவாய் முதலிய தீவுகளில் இவை வசிக்கின்றன.
****
பிளாட்டிபஸ் என்னும் விலங்கு
Platypus
Scientific name: Ornithorhynchus anatinus
Alternative name/s:
Duck-billed Platypus
ஆஸ்திரேலியாவின் வினோத விலங்கு; வாத்து போல மூக்கு இருக்கும்; நீரில் வாழும்; முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். துவக்க காலத்தில் ஐரோப்பியர்களை திகைக்கவைத்த விலங்கு இது ; இப்படி ஒரு பிராணியே இருக்க முடியாது; இது ஒரு போலி ; கற்பனை என்றும் பல அறிஞர்கள் எழுதினார்கள்;
இவை டாஸ்மேனியா என்னும் ஆஸ்திரேலியா தீவு முழுதும் வசிக்கின்றன; மேலும் விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களிலும் காணப்படுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு நீரில் பாய்ந்து மூக்கினை மட்டும் பயன்படுத்தி நீரில் வாழும் பூச்சி புழுக்களையும் அவைகளின் முட்டைகளையும் உண்கின்றன.
இறால் போன்றவைகளையும் சாப்பிடும்; இதை வளர்ப்போர் மீன் வகை உணவுகளையும் கொடுக்கின்றனர் இவை நிழல் உள்ள கரைகளில் வளை தோண்டி அவைகளில் வாழும் . முதலைகளும் கழுகுகளும் பாம்புகளும் இதன் எதிரிகள் ; இவை இருபது ஆண்டுகள் வரை வாழ்கின்றன
இதனளவு – நாற்பது சென்டிமீட்டர் ; சுமார் ஒன்றரை அடி.
****
கோவாலா
ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழும் அரிய விலங்கு.
யூகாலிப்டஸ் மரங்களில் வாழ்ந்து அதன் இலைகளை உண்கின்றன. பார்ப்பதற்கு தேவாங்கு அல்லது கரடிக்குட்டி போல இருக்கும். மிகவும் சாதுவான மிருகம். இவைகளைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் தேதி கோவாலா தினம் கொண்டாடப்படுகிறது..
ஒரு அதிசயம் என்னவென்றால் மனிதர்களைப் போல இவைகளுக்கும் கைரேகைப் பதிவுகள் இருக்கின்றன. நமது கட்டைவிரலில் ஒவ்வொருவருக்கும் தனியான கோடுகள் இருப்பது போல இவைகளுக்கும் உள்ளன Koalas Have Fingerprints.
கோவாலா என்றால் தண்ணீர் குடிக்காதுNo Drink என்று பழங்குடி மக்களின் பாஷையில் பொருள்; இவை அரிதாகவே தண்ணீர் குடிக்கின்றன.
இவைகள் யூகாலிப்டஸ் எண்ணெய் அல்லது இலை போன்ற வாசனையை வெளியிடுகின்றன. ஏனெனில் அந்த இலைதான் இவைகளின் ஒரே உணவு.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி இவை களுகுத்தான் பொருந்தும்; ஒரு நாளைக்கு ஒரு கிலோ இலைகளை சாப்பிவிட்டுவிட்டு சுமார் இருபது மணி நேரம் உறங்குகின்றன. யூகாலிப்டஸ் மரக் குடும்பத்தில் 900 வகை மரங்கள் இருந்த போதிலும் இவை ஐம்பது வகை மரங்களையே நாடுகின்றன. அவைகளிலுள்ள விஷத்தை முறித்து , நார்ச்சத்தை விலக்கி உண்ணும் சக்தி இவைகளுள்ளன.
இவை ஒவ்வொன்றும் தனித்து வாழும் இயல்புடையவை ; ஆண்கள், தனக்கென எல்லையை நிர்ணயிக்கின்றன; அவைகளைச் சுற்றி பெண் கோவாலாக்கள் வசிக்கின்றன.
மரங்களில் வாழ்வதால் இவற்றின் தோலும் கைகளும் அதற்கேற்ப வலுவாக குஷன் போல அமைந்துள்ளன .
கங்காரு போலவே இவைகளுக்கும் வயிற்றுக்கு வெளியே பைகள் உண்டு; பிறந்த குட்டிகள் ஆறுமாதம் வரை தாயின் பையில் வளரும். அடுத்த ஆறுமாதம் தாயின் முதுகில் அல்லது வயிற்றுப் பகுதியில் தொற்றிக் கொண்டிருக்கும். .
இவை 13 முதல் 18 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
****
டிங்கோ The dingo
டிங்கோ என்னும் பிராணி நாய் வகையைச் சேர்ந்தவை; ஆனால் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடி மற்ற பிராணிகளைச் சாப்பிடுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா முழுதும் பரவிவிட்டன.
இவை கங்காரு, பன்றி முதல் பல்லி, பறவைகள் வரை எல்லா வற்றையும் வேட்டையாடி உண்கின்றன. அரிதாகவே பழங்களைச் சாப்பிடும்.
பொன்னிறம் அல்லது பழுப்பு நிறம் கொண்டவை. ஓநாய் குடும்பத்தைச் சேராவிட்டாலும் பொதுவாக ஊளையிடும்; எச்சரிக்கை செய்ய மட்டும் நாய்களை போல குரைக்கும். பத்து ஆண்டுகள் வரை வாழ்கின்றன ; ஆண்டுக்கு ஒரே முறை மட்டும் ஆறு குட்டிகள் வரை ஈனும் ; எல்லா டிங்கோக்களும் இனப்பெருக்கம் செய்வதுமில்லை!
காடுகளிலும் வறண்ட பாலைவனப் பகுதிகளிலும் வசிக்கினறன.
****
வாம்பெட், எகிட்னா
இவை தவிர வாம்பெட், எகிட்னா முதலிய வினோத மிருகங்களும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன.
ஒவொன்றுக்கும் வேறு எங்கும் காணாத தனிப்பட்ட வழக்கமும் குணாதிசயங்களும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகள் வரை வாழும் வாம்பேட்களில் மூன்று வகை உண்டு.
இவைகளை என்ஜினீயர்கள் என்றும் சொல்லலாம். பூமிக்கு அடியில் வளை தோண்டி வாழும் விலங்கு இது .கங்காரு போல வயிற்றில் குட்டிகளை வைத்து வளர்க்கும்.. சுமார் மூன்று அடி உயரம்; முப்பது கிலோ வரை எடை உடையவை ; புல் பூண்டுகளை சாப்பிடுகின்றன.
எகிட்னாக்கள் முள்ளம்போன்றி போல இருக்கும்; ஆனால் பிளாட்டிபஸ் போல முட்டையிட்டு குஞ்சு பொறித்துப் பாலூட்டும் அதிசய விலங்குகள் ஆகும்.
எகிட்னாக்கள் எறும்புகளைத் தின்னும் ; அவை கிடைக்காவிட்டால் புழுப் பூச்சிகளையும் உண்ணும்.
சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே வாழும் இவை பாதுகாப்பாக மனிதர்கள் வளர்க்கும் இடங்களில் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
—-subham—
Tags :ஆஸ்திரேலியா, வினோத விலங்குகள் ,கங்காரு
.வல்லபி,பிளாட்டிபஸ் ,கோவாலா, டிங்கோ, வாம்பேட் , எகிட்னா, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2
Date uploaded in Sydney, Australia – 11 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவ பக்த வள்ளலார் !
சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றலை விட தத்துவ வசனங்களே அதிகம். இந்து மதம் பற்றியும் சம்ஸ்க்ருத மொழி வசனங்கள் பற்றியும் அறியாதோர் அதைப் பின்பற்றுவது கடினம். ஆனால் பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல்தான்:
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
134. அம்பலத்தரசே
நாமாவளி
1. சிவசிவ கஜமுக கணநாதா
சிவகண வந்தித குணநீதா.
2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.
3. அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
4. பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
5. மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
8. படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
9. அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
10. அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.
11. அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
12. தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா.
13. கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.
14. சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.
15. இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
16. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
17. ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.
18. உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
19. அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.
20. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
21. ஆனந்த நாடகம் கண்டோ மே – பர
மானந்த போனகம் கொண்டோ மே.
22. சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.
23. சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
24. சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
25. அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
26. நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.
27. நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.
33. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
34. சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
35. அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
43. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
46. சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
90. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
91. நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
92. நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
இதிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருந்தாலும் ராக, தாளத்துக்கு ஏற்ப வருவதால் பஜனைகளில் பாடலாம்
****
இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
திருமூலர் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, வணக்கம், நமஸ்காரம்.
என நம்பி ஆண்டார் நம்பிகள் போற்றி வணங்கும் திருமூலர் பெரிய சித்தர். துறவி. தமிழின் ரகசியங்களை அறிந்தவர். சிவ ரகசியத்தை உணர்ந்தவர். அனைவரையும் ஆன்மீக உச்சியில் ஏற்ற தியானம், யோகம், மூச்சுக்கலை உள்ளிட்ட பலவற்றையும் தெள்ளுதமிழில் அள்ளித் தந்தவர். அவரைப் பற்றி இப்போது சிறிது சிந்திப்போம்.
மூவாயிரம் அரும் பாடல்களைத் தமிழுக்குத் தந்து பல ரகசியங்களை அனைவரும் அறிய வழி வகுத்த மாபெரும் சித்தர் திருமூலர்.
ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் சமாதியில் இருந்தவர் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை.
இவரைப் பற்றிய முக்கிய வரலாறு ஒன்று உண்டு.
கயிலை மலையில் தவம் செய்து கொண்டிருந்த சிவயோகி ஒருவர் பொதிகை மலையில் இருந்த அகத்திய மாமுனிவருடன் சில நாட்கள் இருக்கலாம் என்று பொதிகை நோக்கி வந்தார். சுந்தரநாதர் என்பது இவர் பெயர். திருவாவடுதுறையில் பசுபதி நாதரை தரிசித்து விட்டு அவர் சாத்தனூரை அடைந்தார். அங்கு மூலன் என்னும் இடையன் ஒருவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போதே வினைப்பயனால் கீழே விழுந்து இறந்தான். பசுக்கள் அனைத்தும் துயரத்தோடு அவனைச் சுற்றி நின்று புலம்பின. இதைப் பார்த்த சிவயோகி அப்பசுக்களின் துயரைப் போக்குவதற்காகத் தனது உடலை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டுத் தனது தவ ஆற்றலால் மூலனின் உடலில் புகுந்தார். பசுக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தன. சாத்தனூரில் உள்ள பசுக்களின் இருப்பிடங்களில் அவற்றை பத்திரமாகச் சேர்த்த யோகியார் திரும்பி தான் உடலை வைத்த இடத்திற்கு வந்து பார்க்க அங்கு அவர் உடலைக் காணோம். இது சிவனது அருள் விளையாடலே என உணர்ந்த அவர் திருவாவடுதுறைக்குத் திரும்பி வந்து அங்கு மேற்குத் திசையில் இருந்த ஒரு அரச மரத்தின் அடியில் நிஷ்டையில் அமர்ந்தார். ஆண்டிற்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அவர் பாடியருளினார். இப்போது நமக்கு இந்த 3000 பாடல்களும் கிடைத்துள்ளன. சில பிரதிகளில் 3047 பாடல்கள் கூட உள்ளன. பின்னர் சிவபிரானின் திருவடியை அவர் அடைந்தார்.
இவர் அருளிய நூல் திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன.
இந்த வரலாற்றைத் திருத்தொண்டர் புராண சாரமும் திருத்தொண்டர் திருவந்தாதியும் எடுத்துரைக்கின்றன.
நந்தி அருளாலே மூலனை நாடினோம் என்ற திருமந்திரப் பாடல் வரி இதை உறுதி செய்கிறது.
இன்னொரு ஆய்வின் படி இவர் சிதம்பரத்தில் சமாதி அடைந்துள்ளார் என்ற கருத்தும் தரப்படுகிறது.
சதுரகிரி தல புராண வரலாறு திருமூலர் பற்றிய பல சம்பவங்களை எடுத்துரைக்கிறது.
பாண்டிய மன்னனான வீர சேனன் என்பான் ஒரு கொடுங்கோலன். அவனை அவன் மனைவி உள்ளிட்ட அனைவரும் வெறுத்தனர். ஒரு நாள் கொடிய விஷ நாகத்தால் அவன் இறந்து விட்டான். அப்போது வான் வழியே சென்று கொண்டிருந்த திருமூலர் அம்மன்னனின் உடலில் புகுந்தார். தன் கல்ப தேகத்தைத் சீடனான குருராஜனின் பாதுகாப்பில் வைத்து விட்டு அரண்மனைக்கு வந்தார்.
திருமூல வீரசேனர் ஆட்சியில் நாடு செழிப்படைந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அரசி பழைய வீரசேனனிடம் அடையாத இன்பங்களை திருமூல வீரசேனரிடம் அடைந்தார். அந்த உடலில் இருப்பது ஒரு பெரும் சித்தர் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவரது கல்ப தேகம் இருக்கும் இடத்தையும் அதை அழிக்கும் வழியையும் அறிந்து கொண்ட அரசி அந்த உடலை அழித்து விட்டாள்.
நீண்டகாலமாக குருநாதரைக் காணாத சீடன் அவரைத் தேடி அரண்மனைக்கு வரவே அவனைப் பார்த்த திருமூலர் அவனைத் தன் கல்பதேகம் வைத்திருந்த குகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது தேகம் எரிந்து கிடந்தது. உடனே திரும்பி அரண்மனைக்கு வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் சதுரகிரி மலைக்கு வந்து தனது தவ வாழ்க்கையைத் தொடங்கினார். திருமந்திரம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றி, பின்னர் அங்கேயே சமாதி அடைந்தார்.
திருமூலர் மூலனுடைய உடலில் புகுந்த பின் செய்யப்பட்ட நூல் திருமந்திரம் ஒன்றே ஆகும். அதற்கு முன்னர் அவர் உபதேசம் முப்பது, மந்திரம் முந்நூறு என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.
நிறைமொழி மாந்தரான திருமூலர் சிவபிரானது ஆணையால் மறைபொருள் கூற்றுக்கள் செய்யுள் வடிவில் தமிழ் மூவாயிரம் ஆக்கப்பட்டிருப்பதால் இது மந்திரம் என்ற பெயரைப் பெற்றது.
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
12-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
GNANAMAYAM SUNDAY BROADCAST 12-1-2025
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Talk by Bengaluru Nagarajan on Swami Vivekananda
***
Talk by Brahannayaki Sathyanarayan on Dakshineswaram from Bengaluru
***
Interview with Nellai R C Raja, Editor, Health care Magazine
***
Tiruppugaz songs recorded by Kalyanji
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்
***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — ஸ்வாமி விவேகானந்தர்
***
சிறப்பு பேட்டி அளிப்பவர் – நெல்லை திரு R.C.ராஜா, ஆசிரியர், ஹெல்த் கேர் பத்திரிகை
ஹெல்த் கேர் பத்திரிகை பற்றி …….
இந்த பத்திரிகை ஒரு சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டது. அதன் வளர்ச்சியின் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர். விளம்பரதாரர்கள்,நுண்ணறிவு கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள். அவர்களது பங்களிப்பு ஆகியவை இன்று இந்த பத்திரிகையின் முன்னேற்றத்தை அடைய உதவியுள்ளது.
திரு.சந்தனம் நாகராஜன், திரு.சுவாமிநாதன், திரு.வெ. சுப்பிரமணியன், மூலிகை ஆர்வலர் திரு.குப்புசாமி, மருத்துவர் மகாதேவன் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் உள்ளிட்ட தலைமை எழுத்தாளர்கள் பணம் பெறாமல், தங்கள் திறமையை பகிர்ந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த பத்திரிகையில் மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் இல்லாவிட்டால், இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்களின் சந்தேகங்களையும்,கேள்விகளையும் தீர்த்து இருக்க முடியாது. மருத்துவத் துறையில் உள்ள தேர்ச்சி மற்றும் அனுபவம் கொண்டவர்கள் தங்கள் அறிவை வழங்கி, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான புரிந்துணர்வு வழங்குவதன் மூலம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.
இனிவரும் காலங்களிலும்,ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பரவலான பயன்பாடு பற்றி மேலும் புதிய அறிவியல் முன்னேற்றத் தகவல் வழங்குதல் என்ற நோக்கத்தோடு, இந்த பத்திரிகை தொடர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பரப்பும் பணியில் உள்ளது.
****
இடையிடையே திருப்புகழ் பாடல்கள்
****
JOIN US ON SUNDAYS.
—subham—
TAGS- SUNDAY 12-1-2025 , PROGRAMME, GNANAMAYAM BROADCAST, three continents
Date uploaded in Sydney, Australia – 10 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
We went to the Sydney University museum on 9th January 2025. It is a small museum and one hour is enough to see the displayed objects. The museum is called CHAU CHAK WING MUSEUM.
The entry is free. Compared with the British Museum and V&A in London, it is nothing. But there are some unique design models and miniature models; I went with my grandchildren and they learnt a lot. The atmosphere is very quiet and the staff are very nice.
At the entrance you get a free booklet explaining the sections on different floors in the building. The collections include antiquities, contemporary art, natural history, and objects of indigenous culture. It is open seven days a week. There is a café and a gift shop.
Level 1
We saw antiquities from Cyprus and the Middle East; stuffed animals, birds; sea shells are also displayed. Café serving hot food and drinks.
China gallery
Level 2
The Mummy Room, Roman and Greek antiquities.
Level 3
Entrance, gift shop etc.
The latest addition is the China gallery which brings together the work of five contemporary Australian artists from Chinese communities. This is a unique section.
I like the Micro Macro section with models of insight and inspiration. This is also unique. It presents models in miniature scales; they are part of the teaching in the University of Sydney. Models made up of wax, papier maches, glass, brass and iron are displayed. Single cells are expanded by a magnitude of thousands and a whole suburb is shrunken to the size of a tabletop.
Mini instruments, minerals , aeroplane models are also on display. It will help Australian students to learn a lot and generate new interest in some subjects/ areas.
Temporary exhibitions are also held.
****
I took lot of pictures with my I Pad.
Worth visiting with students and youngsters.
More information is available in their websites and Facebook pages:
sydney.edu.au/museum
Facebook – ChauChakWingMuseum
Address
University Place
The University of Sydney
Camperdown, NSW 2006
Phone (02)9351 2812
–subham—
Tags- The University of Sydney, museum, CHAU CHAK WING MUSEUM.
Date uploaded in Sydney, Australia – 10 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7
எனக்கு ரொம்ப நாளாக ஒரு டவுட்டு; சந்தேகம்; சம்சயம்;ஐயப்பாடு !
அது என்னவெனில் தமிழை முதலில் எளிமைப் படுத்தியவர் பாரதியாரா அல்லது அவருக்கு முன்னர் வாழ்ந்த அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகளா என்பதே .
இருவரும் தமிழை வளப்படுத்தினர், எளிமைப்படுத்தினர் என்பதில் ஐயமில்லை. அந்த மொழியின் கடின நடையை எளிமைப்படுத்தியதில் முதலில் நிற்பவர் வள்ளலார் ; ஆனாலும் வள்ளலாரின் வீச்சு தெய்வ பக்திப் பாடல்களுடன் நின்றுவிட்டது .
பாரதியாரோ தெய்வம், தேசம், பெண் விடுதலை, தமிழ் மொழியின் உயர்வு , இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் வளர்ச்சி, அகத்தியர் ஆதிசங்கரர் , காளிதாசர், வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் முதலிய இந்திய பெரியோர்கள் , உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், என்று நூற்றுக் கணக்கானோரை பாடிவிட்டார். ; அவை தெரு முழக்கம் ஆகிவிட்ட பாடல்கள்.
மேலும் வள்ளலார் போல,.பாரதியார் சிக்கலில் சிக்கவில்லை. அவர் ஆறுமுக நாவலருடன் மோதி வழக்கு மன்றம் ஏக நேரிட்டது ; திருமுறை என்ற சொல்லை உபயோகித்ததால் சைவர்களால் நிராகரிக்கப்பட்டார் .பாரதியார் வழக்கில் சிக்கியது வேறு விதம்; சுதந்திர போராட்டத்தில் மட்டுமே !
பாரதியாரினால் பாடப்பட்டவை இன்றுவரை சிறுவர் நாவிலும் தவழ்கிறது; ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதி பாடலில் கூட ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.
பாரதியாரும் வள்ளலாரும் மாணிக்க வாசகரின் செல்வாக்கிற்கு உட்பட்டதால் திருப்பள்ளி எழுச்சி போன்ற வகைப் பாடல்களைக் காணமுடிகிறது
இருவரும் எல்லா சமயங்களையும் போற்றி அவற்றின் உட்பொருள் ஒன்றே என்று உணர்த்தினர்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலாளர்; பாரதியாரோ தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார்.
இருவரும் வேதங்களைப் போற்றினர்; ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் புகழ்ந்தனர் இருவரும் முருக பக்தர்கள் ; ஆயினும் ஒரு வித்தியாசம்! வள்ளலார் கிருஷ்ண, விஷ்ணு பக்தர் என்று காட்டவில்லை; பாரதியாரோ கண்ணன் மீது ஏராளமான பாடல்களைப் பாடினார்.
சொல்லப்போனால் பாரதியார் பாடாத தெய்வங் கள் இல்லை கணபதி முதல் கிராம தேவதைகள் வரை பாடினார்; பெரிய தேவி பக்தரும் கூட; அது போன்ற பாடல்களை வள்ளலாரின் திருவருட்பாவில் காண இயலாது .
காட்டுவழியினில் கள்ளர் பயமிருந்தால் –
வண்டிக்காரன் பாட்டு
(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)
காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா! 1
நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே-எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா! 2– பாரதியார்
முத்துமாரி முதல் பராசக்தி வரை பாடினார் பாரதி
****
பாரதியார் 1882-1921
வள்ளலார் 1823- 1874
பாரதியார் இறந்தது 1921- ஆம் ஆண்டில்; வள்ளலார் மறைந்தது 1874 – ஆம் ஆண்டில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
பாரதியாரும் வள்ளலாரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தவிர்க்காமல், வெறுக்காமல் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். இருவரும் கவிதை மட்டுமின்றி உரைநடை இலக்கியத்தையும் நமக்கு அளித்தனர் . இருவரும் இந்து மதத்தின் காவலர்களாக நின்றனர்.
*****
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்– என்கிறார் வள்ளலார்
‘’பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்!
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்!
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!’’
என்று இறைவனை இறைஞ்சுகின்றார் பாரதி.
அது மட்டுமல்லாமல் காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும் மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன் என்றும் சொன்னார் பாரதியார் ; ஆகவே இவ்விஷயத்தில் இருவர் கருத்தும் ஒன்றே.
****
பாரதியார் திருவெம்பாவை பற்றி உரையாற்றினார் ; ஆண்டாள் பற்றியும் நம்மாழ்வார் பற்றியும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார்; வள்ளலாரும் சைவ விஷயங்கள் பற்றி உரையாற்றினார்; ஆனால் ஆங்கிலத்தில் எழுதவில்லை.
****
பாரதி, நாடு முழுதும் பயணம் செய்தார் ; பல மொழிகளைக் கற்றார் ; இதை வள்ளலார் செய்யவில்லை. இருவரும் படிக்காத மேதைகள்! பிறவியிலேயே கவிஞர்கள்!! இளம் வயதிலேயே கவிதைகளை புனைந்து சான்றோர்களை அசத்தியவர்கள்.
*****
இருவரும் சமய ஒற்றுமையை வலியுறுத்தினர்
பூமியிலே, கண்ட மைந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்
சாமி யென யேசு மதம் போற்று மார்க்கம்,
ஸநாதன மாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாம முயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,
நல்ல “கண்பூசி“ மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;
யாவினுக்கு முட் புதைந்த கருத்திங் கொன்றே.(65)
பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்
பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ ; சாமி நீ ; கடவுள் நீயே ;
தத்வமஸி ; தத்வமஸி ; நீயே யஃதாம் ;
பூமியிலே நீ கடவு ளில்லையென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் ‘சிவோஹ’ மென்று ஸாதிப்பாயே. – பாரதியார்
பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே – வள்ளலார்
****
இருவரும் தமிழ் மொழியை வளர்த்தனர்; எளிமைப்படுத்தினர் ; இருவரும் இந்து மதத்தினைப் போற்றினர் ; சிவனையும் முருகனையும் பாடினர்; பசிப்பிணியை அகற்ற விரும்பினர் .
பெரிய வித்தியாசம் – வள்ளலார் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து பசிப்பிணி அகற்ற உணவளித்தார்; பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் இருந்ததால் இதைச் செய்யவில்லை.
****
இருவரும் வள்ளுவர் போல புலால் உணவை வெறுத்தனர் ;
பாரதியார் உலக அரசியலை அலசினார் ; வள்ளலார் இந்துக்கடவுளருடன் நின்றுவிட்டார் அரசியலில் புகவில்லை இருவரும் ஆங்கிலேய ஆட்சியில் வாழ்ந்தவர்கள் .
பாரதியார் பாடிய, பேசிய, எழுதிய விஷயங்கள் இமய மலை போன்றது. வள்ளலாரின் வீச்சு ஒரு சிறு குன்றினைப் போன்றது ; ஆயினும் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ; மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்ற பழமொழிகளுக்கு இணங்க புகழ் மணம் பரப்பினார் .
தமிழ் உள்ளவரை- இந்து மதம் வாழும் வரை- இவர்கள் இருவர் பெயர்களும் அழியாது என்பதில் ஐயமில்லை .
–subham—
Tags- தமிழ், வளர்ச்சி, பாரதியாரும் வள்ளலாரும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7
ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தில் மேதையாகலாம் என்று அவர் கூறியதோடு அதற்கான திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் சொல்லித் தந்தார். தான் எப்படி மனதிலேயே இதை சாதிக்க முடிகிறது என்பதையும் அவர் விளக்கினார்.
மணவாழ்க்கை
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் பரிதோஷ் பானர்ஜி என்பவரை அவர் மணம் புரிந்தார். அனுபமா பானர்ஜி என்ற ஒரு பெண்குழந்தை அவருக்கு உண்டு. ஆனால் 1979ல் தன் கணவரை அவர் விவாக ரத்து செய்தார்.
அரசியல் ஈடுபாடு
அரசியலில் குதித்த அவர் ஆயிரத்தி தொள்ளாயிருத்து எண்பதுகளில் லோக் சபா உறுப்பினராக ஆந்திராவில் மேடக் தொகுதியில் இந்திரா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மும்பை தெற்குத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளராக நின்று அவர் தோல்வி அடைந்தார்.
நூல்கள்
சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார். ‘பஸில் டு பஸில் யூ’, ‘தி வோர்ல்ட் ஆஃப் ஹோமோசெக்ஸுவல்ஸ்’, ‘மேதபிலிடி: அவேகன் தி மேத் ஜீனியஸ் இன் யுவர் சைல்ட்’ போன்ற அவரது நூல்கள் பெரும் வரவெற்பைப் பெற்ற நூல்களாகும்.
1977ல் வெளியான ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அவரது நூல் தான் இதைப் பற்றி முழு ஆய்வு செய்யப்பட்ட நூலாக இருந்தது.
அவர் ஒரு ஜோதிட நிபுணரும் கூட. எண்களைப் பற்றிய மர்மங்கள் அனைத்தையும் அறிந்த பெரும் கணித நிபுணராக அவரை உலகம் அங்கீகரித்தது.
மறைவு
2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாசக் கோளாறுகளுக்காக பங்களூரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் இதயத்திலும் சிறுநீரகத்திலும் பாதிப்புகள் ஏற்பட அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி தனது 83ம் வயதில் மரணமடைந்தார்.
திரைப்படம்
சகுந்தலா தேவி பற்றிய திரைப்படம் ஒன்று 2020,ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.
சகுந்தலா தேவி தன் வாழ்க்கை மூலம் தெரிவிப்பது
சகுந்தலா தன் வாழ்க்கை மூலம் தெரிவிக்கும் ஒரு செய்தி இது தான். கடவுள் படைப்பில் – அல்லது இயற்கை என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் – அனைத்துமே எண்கள் தான் – கணிதம் தான்! “எல்லாமே எண்கள் தான்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன பிதகோரஸின் கூற்றை திடமாக, வலுவாக ஆமோதிக்கிறார் அவர். கணிதம் இல்லாத ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அவரது ‘கணிதப் புதிர்களும் விடுகதைகளும் ‘என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் விரிவாக இதைக் கூறுகிறார்.
“மனிதனும், மிருகங்களும் தங்கள் உள்ளுணர்வு மூலம் கணிதத்தை தங்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்றனர். நத்தை தன் கூடை துல்லியமான கணித அடிப்படையில் உருவாக்குகிறது. சிலந்திகளின் கணித ஆற்றல் அதன் கூட்டை அமைக்கும் போது தெரிய வருகிறது. சோளம், சூரியகாந்திப் பூ ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவற்றில் கணித அமைப்பைக் காணலாம்.” என்று அவர் கூறுகிறார்.
சகுந்தலா தேவியின் பொன்மொழிகளில் சில:
எண்கள் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு; அவை பேப்பரில் அடையாளங்களாக மட்டும் உள்ளன!
கணிதமில்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே எண்கள் தான்!
கல்வி என்பது பள்ளிக்குச் சென்று ஒரு பட்டத்தைப் பெறுவது அல்ல; அது உங்கள் அறிவைப் பெருக்கி வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உள்ளே இழுத்து உணர்வதாகும்.
உங்கள் உடலில் உள்ள எந்த ஒரு தசையையும் பயன்படுத்தாவிடில் அது சுருங்கி வறண்டு விடும். அதே போலத் தான் மூளையும். அதை அதிகமதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த அது இன்னும் சிறப்பாக ஆகிவிடும்.
கணிதம் என்றாலேயே ஏன் குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றன? ஏனெனில் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாக அணுகுவதனால் தான் இது ஏற்படுகிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கணித மேதையாக விளங்கிய சகுந்தலா தேவியின் நூல்கள் நமது மூளை ஆற்றலை வளர்க்க உதவுபவை. அவற்றைப் பயன்படுத்துவோமாக.