மஹரிஷி பாணினி! – 1 (Post No. 14,051)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,051

Date uploaded in Sydney, Australia – –5 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-2024 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது. 

 மஹரிஷி பாணினி! – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்தை வகுத்து எழுதிய மகரிஷி பாணினி பற்றி சிந்திக்கப் போகிறோம்.

முதன் முதலாக இப்படி ஒரு இலக்கண நூலை வகுத்தவர் இவரே.

பாணினி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் காந்தாரத்தில் அட்டோக் என்ற நகரில் உள்ள சாலாதுரா என்ற கிராமத்தில் பாணினா என்பவருக்கும் தக்ஷி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆனால் அவர் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை பாடலிபுத்ரத்தில் தான் கழித்தார். ஆகவே அறிஞர்கள் அவர் சாலாதுராவில் பிறந்திருந்தாலும் பாடலிபுத்ரத்திலேயே வளர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.

ஜைமினி மற்றும் பர்த்ருஹரி பாணினியை ஒரு சிஸ்டா என்று கூறுகின்றனர். சிஸ்டா என்பவர்கள் பிராமணர்களின் ஒரு பிரிவு. அவர்கள் சாஸ்திரங்களை நன்கு கற்றவர்கள். உலக இன்பங்களைத் துறந்தவர்கள். இமயமலையிலும் காலகாவனம் எனப்படும் வங்காள பிராந்திய காடுகளிலும் விந்திய மலையிலும் ஆரவல்லி மலையிலும் வாழ்க்கையைக் கழித்தவர்கள்

இவர் வாழ்ந்த காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. டாக்டர் கோல்ட்ஸ்டக்கரும் பண்டார்கரும் (Dr. Goldstucker and Bhandarkar) இவர் கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் வின்சென்ட் ஸ்மித் மற்றும் பெல்வல்கர் (Vincent Smith and Belvelkar) ஆகியோர் கிறிஸ்துவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

 பாணினி புத்தரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் அவர் புத்தர் காலத்திற்கு முன் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது.

ஸ்மிருதிகளைப் பற்றி அவர் நன்கு அறிந்திருப்பதால் அவர் மனு வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் வாழ்ந்திருக்கவேண்டும். ஆக அவர் கிறிஸ்துவுக்கு முன்னர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.

 பதஞ்சலி பாணினியை தாக்ஸியின் மகனே பாணினி என்று நம்புகிறார். பாணினியை அவர் ஆசார்யர் என்றும் மஹரிஷி என்றும் பகவான் என்றும் அழைக்கிறார்.

ராமபத்ராக்‌க்ஷிதர் என்ற அறிஞர் பாணி என்ற முனிவரின் மகனே பாணினி என்று கூறுகிறார்.

 மிக முக்கியமான இலக்கணகர்த்தாக்கள் தனக்கு முன்னர் இருந்ததாக பாணினி குறிப்பிடுகிறார். இவர்களில் பத்து பேரை அவர் குறிப்பிட்டாலும் கூட அவர்கள் இயற்றிய நூல் ஒன்று கூட நம்மிடையே இன்று இல்லை.

 பாணினி தான் வகுத்த விதி ஒன்று பழைய விதியுடன் ஒத்துப் போகவில்லை என்றால் முந்தைய விதி என்ன என்பதையும் மாற்றாகத் தருகிறார்.

 இலக்கணத்தை வடமொழியில் வ்யாக்ரணம் என்று சொல்கிறோம். இலக்கணம் என்று வழக்கு மொழியில் நாம் கூறுவதிலிருந்து வ்யாக்ரணம் என்பது சற்று மாறுபடுகிறது. லத்தீன் வழியில் பிறந்த இதர மொழிகளின் இலக்கண நூல்கள், எப்படி வாக்கியங்களை அமைப்பது போன்ற விதிகளைக் கூறுகையில் சம்ஸ்கிருத வ்யாக்ரணமானது மொழியின் அறிவியலாக அமைகிறது. Science of Language என்று இதைக் கூறலாம்.

இதில் அடங்கி இருப்பவை: PHONETICS, ETYMOLOGY, ACCENTUATION, SYNTAX, WORD FORMATION BY DECLENSION, CONJUGATION, SEMANTICS.

இவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி. பெயரே இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்பதைத் தெரிவிக்கிறது. இந்த ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களைக் கொண்டிருக்கிறது.

இது மொத்தம் 3995 சூத்திரங்களைக் கொண்டிருக்கிறது. இது வேதத்தின் அடிப்படையிலானது. தாதுபாடா, கணபாதா, பரிபாஷா, லிங்கானுசாஸனா ஆகிய உப உரைகளைக் கொண்டிருக்கிறது.  சிவபிரானின் அருளால் உத்வேகம் பெற்று அவர் தனது நூலை இயற்றியுள்ளார்,

 சீன யாத்ரீகரான யுவான் சுவாங் உலக மொழிகள் அனைத்தும் பாணினீயத்திலிருந்தே தமது இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்கிறார்.

 இவரைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

பாடலிபுத்ரத்தில் வர்ஸா என்ற அறிஞர் வாழ்ந்து வந்தார். அவரிடமே கல்வி கற்றார் பாணினி. நாளடைவில் வர்ஸாவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களில் மிகவும் மந்த புத்தி கொண்டவராக பாணினி இருந்தார். ஆனால் அவர் குருவுக்கும் குரு பத்னிக்கும் நல்ல சேவை செய்து வந்தார். குரு பத்னிக்கு பாணினி மீது மிகுந்த அன்பு இருந்தது. அவர் பாணினியை அழைத்து இமயலைக்குச் சென்று சிவனைக் குறித்துத் தவம் இருக்க அறிவுரை வழங்கினார்.

அதன்படியே சிவனைக் குறித்து இமயமலையில் பாணினி தவம் செய்ய சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரை சம்ஸ்கிருத இலக்கணம் எழுத அருள் பாலித்தார்.

to be continued…………………………………..

***

My Visit to Sydney Murugan Temple in Australia (Post No.14,050)

Written by London Swaminathan

Post No. 14,050

Date uploaded in Sydney, Australia – 4 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

We went to Sydney Murugan Temple on 3rd January 2025. Being a Friday evening, we saw a lot of devotees in the temple. It is a Sri Lankan Tamil temple, but I saw people from different communities including North Indians and Nepalis coming. A white coupe was doing special Puja in front of the main shrine with the help of a priest. There are three main shrines in the temple for Lord Murugan (Skandan, Kartikeyan, Shanmugam), Shiva in Linga form and Goddess Meenkashi.

The temple is constructed in the agamic way with the deities around the main shrines. Lord Ganesh and Lord Kartikeya/Muruga on either side with Dakshinamurthy, , Vishnu. Lakshmi,  Durga , Chandikeswara etc. At the end Navagrahas also are installed.

The temple has a good and divine atmosphere. It won’t take much time to go around the temple. It has a spacious car park and a canteen behind.

I was surprised to see many devotees coming by public transport. It has a bus stop in front of the temple.

People wash their feet before entering the temple. The taps are just outside. In those days every temple has a tank where the devotees washed their hands and feet. It is still in all  big temples in Tamil Nadu. Three or four priests were serving the devotees.

The temple has a website where the festival events and opening hours are given. It is better to check it before visiting the temple.

After having good Darshan we entered the temple canteen and ordered Masala dosa and Vadais. The quality was not good and the items were expensive as well. The dosa was not hot and made from sour dough. The temple authorities must improve it and reduce prices as well. When we went to Venkateswara temple, we had curd rice and lemon rice with other snacks. So, the temple may provide some rice items as well irrespective of the time of the day.

The temple surroundings have good flowering plants. The temple is maintained well.

From the temple website I came to know that they organise religious discourses and concerts on festival days. More details about the coming events are also available on the website.

There was a big board announcing the opening of a community centre very soon. It is a good move. Since Sydney has a sizeable population of Hindus it would serve the Hindu community.

When was the Sydney Murugan Temple built?

The foundation of this temple was laid way back in 1994. During 1985 a Hindu society, the Saiva Manram, was founded to construct a temple for Lord Murugan. Since its inception, Lord Murugan has been called ‘Sydney Murukan. ‘ The Saiva Manram has laboured hard for nearly ten years to build this temple for Lord Murugan.

Following is the address of the temple:

217 Great Western Hwy, Mays Hill NSW 2145

Sydney Murugan Temple

https://www.sydneymurugan.org.au ›

—-Subham—

Tags – My visit, Sydney Murugan Temple

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே (Post.14,049)

Written by London Swaminathan

Post No. 14,049

Date uploaded in Sydney, Australia – 4 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே— திருவருட்பா பாடல் , அருட்பிரகாச  வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 

எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மனப்பாடம் ஆன பாடல் இது.  ஏனெனில் நான் மதுரையில் யாதவர்கள் நடத்தும் யாதவா ஸ்கூலில் முதல் ஐந்து வகுப்புகளைப் படித்தேன்.  யாதவர்கள் ஒரு புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலையும் நடத்தி வந்தார்கள். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அடுத்தபடியாக நான்கு மாசி வீதிகளையும் வலம் வரும் ஒரே தெய்வம் அந்தக் கிருஷ்ணர் மட்டுமே. அவ்வளவு சிறப்பாக நடத்திய கோவில் அது. என்னுடைய வடக்கு மாசிவீ தி வீட்டிலிருந்து பள்ளிக்கூடமும் கோவிலும்  கூப்பிடு தூரம்தான் .

யாதவர்கள்களோ க்ருஷ்ண பக்தர்கள். ஆயினும் அந்தப் பள்ளியில் பாடிய பாடலோ வள்ளலார் பாடல். அதுதான் காலையில் தினமும் பள்ளிக்கூட இறைவணக்கப் பாடல். குடுமி வைத்த, நாமம் போட்ட ஒரு அய்யங்கார் எங்களுக்கு ஹெட்மாஸ்டர் ; பெயர் எல்லாம் மறந்துவிட்டது என்னுடைய ஆப்த நண்பர்கள் சுடலை முத்து, கோவிந்தன், பக்கோடா சுந்தரம்; இவை தவிர எதுவுமே நினைவு இல்லாவிடினும் வள்ளலார் பாடல் மட்டும் இன்று வரை– 77 வயது வரை–  நினைவில் இருக்கிறது.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ( எஸ் எஸ் எல் சி ) படித்தேன். அங்கு தினசரி இறைவணக்கப் பாடல் காக்கைச் சிறகினிலே நந்த லாலா. அதைப் பாடிய மதுரை சேஷகோபாலன் எனக்கெல்லாம் மிகவும் சீனியர். பிற்காலத்தில் மதுரை சேஷகோபாலன் மிகவும் புகழ்பெற்ற பாடகர் ஆனார்.

இப்பொழுது ஆரம்பப்பள்ளிக் கூடப் பாடலுக்கு நன்றாகப் பொருள் தெரிகிறது  நிறைய நல்ல விஷயங்களை சிறு வயதிலேயே குழந்தைங்களை மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த பொருளைக் கற்பிக்கும் . விநாயகர் அகவல் பற்றி காஞ்சி பரமாசார்யசுவாமிகள் (1894-1994) குறிப்பிடுகையில் தினமும் அதைப்படித்து வந்தால் போகப்போகப் பொருள் புரியும் என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுகிறார் காரணம் இதை எத்தனை விளக்கினாலும் நாமே மனதில் பொருளை வரவழைத்துக் கொண்டால் அது ஆழம் ஆழமாகச் சென்று கொண்டே போகும்.

சிறைச் சாலையில் இந்துக் கைதிகளை சந்திக்கும் பகுதிநேர வேலையையும்  லண்டனில்  செய்துவந்தேன். HINDU CHAPLAIN ஹிந்து சாப்ளைன் என்று பெயர்.  பெண்கள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. ஒரு இலங்கைப் பெண்மணி – இளம் வயது — பாஸ்போர்ட் திருத்திய குற்றத்துக்காக ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றிருந்தார் ; அவரிடம் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்குகிறீர்கள் என்றேன் ; முருகன் என்றார். என்ன தெய்வபக்திப்   பாடல் தெரியும்? என்று கேட்டேன். பேந்தப் பேந்த விழித்தார் ; அம்மா ,அப்பா என்ன பாடினார்கள் ; அதாவது நினைவு இருக்கிறதா? என்று கேட்டேன் . ஆங்கிலத்தில் மில்க், ஹனி என்றெல்லாம் வரும் பாடல் என்றார். உடனே நான் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்….. என்ற பிள்ளையார் துதியைச் சொன்னேன். ஆமாம் அதுதான் அதுதான் அம்மா சொல்லிக்கொடுத்தார் என்று தலையை ஆட்டினார்  இதனால்தான் இளமையில் கல் என்று என்று ஆன்றோரும் சொன்னார்கள்.  ஆங்கிலத்திலும் CATCH THEM YOUNG  என்று சொல்லுவார்கள் .

****

இப்போது வள்ளலார் பாடலின் பொருளைக் காண்போம் :

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

களிப்பு = பேரானந்தம்

பக்த விஜயம் என்ற நூலைப் படித்தால் கீழ்மட்ட தொழில்களை செய்துவந்த குயவர்கள், நெசவாளர்கள், சக்கிலியர் , உழவர்கள் — அதாவது பள்ளிக் கல்வி கற்காத –பக்தர்களும் பெரிய மஹான்களான கதைகளை அறியலாம். ஆழ்வார்களில், நாயன்மார்களில், இது போல பல அடியார்களைக் காண்கிறோம். ராம கிருஷ்ண பரமஹம்சரோ ரமணரோ சேஷாத்ரி சுவாமிகளோ  பள்ளிக்கூடம் செல்லவில்லை .அவர்கள் எல்லோர்க்கும் இறைவன் அருள் புரிந்தார் ; பெரிய படிப்பு படித்த சுவாமி சிவானந்தர், ஆதிசங்கரர் போன்றோருக்கும் அருள் புரிந்தார் ஆக ஆன்மீக முன்னேற்றம் அடைய கல்வி என்பது ஒரு பொருட்டல்ல .

****

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

சூர்தாஸ் , தீர்க்கதமஸ் போன்ற பக்தர்கள் கண் பார்வையற்றவர்கள் . தீர்க்க தமஸ் — நீண்ட இருள் –  ஒரு ரிக் வேத ரிஷி; அவருடைய பெயரே அவர் குருடர் என்பதைக் காட்டும்; அவர் பாடிய புகழ்பெற்ற துதிகள் ரிக்வேதத்தில் உள.  புகழ்பெற்ற கிரேக்க இதிஹாசக் கவிஞர் ஹோமர் என்பவரும் அந்கரே ; அவர்களுக்கு எல்லாம் ஞானக் கண் கொடுத்தவன் இறைவன் ; இறைவனைக் கண்டவர்கள் வரிசையில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சாது சந்யாசிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானக்கண் கொடுத்ததால் இன்று ரமணர், ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்றோரின் அ,,ய சொற்பொழிவுகளை நாம் படிக்க முடிகிறது 

****

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

வல்லார் என்பதை உடல் வலிமை, மன வலிமை, பொருள் வலிமை உடையோர் என்றும் மாட்டார் என்பதை அவை இல்லாதோர் என்றும் பொருள் கொள்ளாலாம்.  மதுரையில் சிவன் விளையாடிய 64 லீலைகளைக் கூறும்  திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு  சிவ பெருமான் பெரிய அரசர்களுக்கும் வலிமையற்ற ஏழைப்பங்காளருக்கும் எப்படியெல்லாம் அருள்புரிந்தார் என்பது புரியும்.

****

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

இறைவனை மதிக்காதவர்களை நாம் அசுரர்கள் என்போம். நரகாசுரன்,  ஹிரண்யகசிபு, மஹாபலி, ராவணன் போன்ற அசுரர்களுக்கும் இறைவன் மோட்ச கதியைக் கொடுத்ததை புராண இதிகாசத்தில் காண்கிறோம் ; அவர்கள் செய்த பாவங்கள் அத்தோடு கழிவதால் அவர்கள் இறைவன் கைகளில் இறக்கும் பாக்கியத்தைப் பெறுகின்றனர் . இதைக் கம்ப ராமாயணத்தில் வாலி வதை படலத்தில் காணலாம்.  மறைந்திருந்து கொன்றதாக ராமனைக் குற்றஞ் சாட்டிய வாலி, இறுதியில் ராமன் கையால் மரணம் அடைந்தது பாக்கியமே என்கிறான்.

இன்னொரு பொருளும் உண்டு  இறைவன் எல்லோருக்கும் மதி- புத்திமதி — சம அளவில் கொடுத்து இருக்கிறான். அவரவர் அதைப் பயன்படுத்துவது வேறு வேறு விதமாக இருக்கிறது பிறப்பொக்கும் எல்லா உயிரும் ; ஆனால் செய்தொழிலால் வேற்றுமை ஏற்படுகிறது என்று வள்ளுவனும் பகர்வான்.

****

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

இறைவன் பாரபட்சமற்றவன்; அவன் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்றவன். தீதும் நன்றும்  பிறர் தர வாரா என்பது கணியன் பூங்குன்றன் என்ற தத்துவ ஞானியின் பொன்மொழி அவரவர் பூர்வ ஜென்ம வினைப்பயனால் ஒருவர்  தவறான வழியிலோ சரியான வழியிலோ  செல்கின்றனர் ; உபநிஷத்தில் வரும்  த,  த, த, கதை இதை விளக்குகிறது அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் மூவரும் உபதேசம் கேட்கச் சென்றனர்; இறைவன் பிரஜாபதி  சொன்னது ஒரே சொல் அதைத் தேவர்கள் தர்மம் /அடக்கம் வேண்டும் என்றும் அசுரர்கள் தயா /கருணை வேண்டும் என்றும்  மனிதர்கள் தத்த / தானம் செய்ய வேண்டும் என்றும் பொருள்கொண்டனர் மேற்கூறிய இறப்பிண்டு வள்ளலார் வரிகளையும் விளக்கு கதை இது

நாம் பிறக்கும்போது நமது பாங்கில் இறைவன் ஒரு தொகையை டெபாசிட் செய்து அனுப்புகிறான். எப்படி முதலீடு செய்தால் அது வளரும் என்றும் என்ன செய்தால் அது தேயும் என்றும் (இதிஹாச, புராண, தர்ம சாஸ்திர நூல்களில்) சொல்லியும் கொடுக்கிறான்; இதற்குப் பிறகும் விவேகத்தைப் பயன்படுத்துவது நம் கைகளில்தான் இருக்கிறது ..பஸ்மாசுரன் போன்றவர்க்கும் சிவன் வரம் கொடுத்தார் ராவணனுக்கு வரம்/ அஸ்திரம்  கொடுத்தார் ; அவர்கள் தவறாகப் பயன்படுத்தியதால் அழிந்தனர் .

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

இவ்வாறு எல்லோருக்கும் பாரபட்சமின்றி அருளும் சிவ பெருமானே என்னுடைய துதியை ஏற்பாயாக என்பது வள்ளலாரின் வேண்டுகோள்.

—SUBHAM—-

TAGS- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! – 2 (Post.14,048)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,048

Date uploaded in Sydney, Australia – –4 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

26-12-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! – 2 

ச. நாகராஜன்

ஊனமுற்றோருக்கு நல் வாழ்வு

உலகின் உன்னதமான மனித குல சேவை ஒன்றைச் செயலில் காட்டியவர் காஸுமா ததேய்ஷி.

உலகில் உள்ள நாடுகளில் ஐரோப்பாவில் 14 சதவிகிதமும்

 12 சதவிகிதம் அமெரிக்காவிலும் ஜப்பானில் 4 சதவிகிதமும் உடலில் குறை உள்ளோர் வாழ்கின்றனர்.

க்யோடா நகர்புற எல்லையில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் ஒரு அரிய காட்சியைக் காண்பவர் வியந்துபோவார்கள்.

உடல் ஊனமுற்றவர்களையும் மனதளவில் மன வளர்ச்சி குன்றியவர்களையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைக்கவே முனையும். அவர்களைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய பொதுவாக தொழில் அதிபர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் ஓம்ரான் நிறுவனரான ததேய்ஷி படைப்பாற்றல் திறனுடன் அதி நவீன தொழில்நுட்பங்களை இந்த ஊனமுற்றவர்களுக்காகவும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகவும் உரிய முறையில் மாற்றி அமைத்தார்.

ஸிஸ்டம்ஸ் தியரி என்ற தொழில்நுட்பக் கொள்கையானது வெவ்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து எப்படி ஒரு முழு பொருளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது.  சைபர்னெடிக் எஞ்ஜினியரிங் என்ற தொழில் நுட்பமும் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் தொழில் நுட்பமாகும்.

ஆக இந்த தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து கொண்ட ததேய்ஷி உடல் ஊனமுற்றவர்கள் கூட சிக்கலான அசெம்பிளி லைனில் திறம்பட வேலை பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவர்கள் திறனுக்கு ஏற்றபடியும் உடல் வலிமைக்கு ஏற்றபடியும் அவர் இயந்திரங்களைத் தயாரிக்கச் செய்தார். அவர்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதை நன்கு கணித்து மீதி திறனை இயந்திரங்களே செய்ய உரிய வழி வகைகளை அவர் உருவாக்கினார். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வேலையை நிச்சயம் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

ஓம்ரான் சன் ஹவுஸ் தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி லைனில் உள்ள இயந்திரங்கள் உடல் ஊனமுற்றோர் அமர்ந்திருக்கும் வீல் சேர் அளவு கீழே இறங்கி வரும். ஒரு கையை இழந்த ஒருவர் இன்னொரு கையால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காக கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

உடல் வலுவே இல்லாத ஒரு பெண்மணி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பாக்கேஜிங் மெஷின் உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இலேசாக தன்னிடம் உள்ள சிறு பெட்டியை உள்ளே தள்ளி விட அந்த பாக்கேஜிங் அதை ஏற்றுக் கொண்டு மிக வேகத்துடன் தன் உள்ளே இழுத்துக் கொள்ளும்.

தொழிற்சாலையில் உள்ள அனைத்து விளக்குகளையும் லிப்டுகளையும் இவர்கள் தங்கள் வீல் சேரிலிருந்தே இயக்கலாம்.

அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து கண்ணியமாகவும் பிறர் மதிக்கும் படி மரியாதையுடன் வாழவும் அவர் வழி வகை செய்தார்.

உலகம் இதை ஆச்சரியத்துடன் பார்த்தது; அவரை அனைவரும் வாழ்த்தினர்.

முதலில் “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று நினைத்தவர்களே ஓம்ரான் நிறுவனத்தின் லாபத்தைக் காண்டு வியந்தனர்.

உடல் ரீதியாக குறைகள் உள்ளவர்கள், மன ரீதியாக குறைகள் உள்ளவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குறைகள் உள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஓம்ரான் நல்ல வாய்ப்புகளையும் பயிற்சியையும் தந்தது.

பெரிய வணிக வியாதி

ஒரு நிறுவனம் வளர்ந்து வரும் போது அங்கு பிக் பிஸினஸ் டிஸீஸ் எனப்படும் “பெரிய வணிக வியாதி” என்று ஒன்று உருவாகி நிறுவனத்தின் கட்டுக்கோப்பை சிதைக்கச் செய்வதைக் கண்ட ததேய்ஷி தனது பெரும் நிறுவனத்தைப் பல பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய ஒரு மேலாளரை நியமித்தார். அவர்கள் கம்பெனியின் தலைவர் போல இருக்க வேண்டும் என்று அவர் உணர்த்தினார். நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உள்ள வழிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

உற்பத்திப் பிரிவே தொழிற்சாலைக்கு இதயம் போன்றது என்பதால் அங்கு மதிய இடைவேளையின் போது முதலில் தொழிலாளர்களுக்கே உணவு முதலில் பரிமாறப்படும். கடைசியில் தான் மேலாளர்கள் சாப்பிடலாம். இது போன்ற பல சிறப்பு விதிகள் தொழிலகத்தை மிக அழகுற நடத்த வழி வகுத்தது.

“உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல விளைவானது நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது நிச்சயம் நடைபெறும் என்பதற்கான நல்ல சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று அடிக்கடி அவர் கூறுவார்.

ததேய்ஷி எழுதிய நூல்

ததேய்ஷி ‘தி எடர்னல் ஸ்பிரிட் ஆஃப் எண்டர்ப்ரெய்னர்ஷிப்’ என்ற நூலை 1985ல் எழுதினார். இது சீன, ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் விற்பனையைக் கண்ட நூலாக ஆனது.

மறைவு

1991ல் ததேய்ஷி தனது 91ம் வயதில் மறைந்தார்.

பொன்மொழிகள்

தன் வாழ்நாள் அனுபவத்தை அவர் பிறருக்கும் தெரிவித்து வந்தார்.

அவற்றில் சில இதோ:

முக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் வணிகமானது சமூகத்தில் ஒரு மதிப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் சமூகத்திற்கு லாப நோக்கில் அல்லாமல் பெரிய அளவில் நல்லனவற்றை வழங்கும் போது அது மிக்க சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

‘என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது’ என்று பார். முயற்சி செய்து அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்.

முதலில் முயற்சி செய் என்பதே மந்திரம்!

உலகம் வியக்கும் ததேய்ஷியின் வாழ்க்கைத் தத்துவமே மொத்தம் மூன்றே வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

“முதலில்  முயற்சி செய்!” என்பது தான் அந்த மூன்று வார்த்தை மந்திரமாகும்!

அன்றாடம் ஆரோக்கியம் சம்பந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டில் உபயோகிக்கும் போது நாம் மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டிய ஒரு பெயர் காஸுமா ததேய்ஷி!

***

GNANAMAYAM SUNDAY BROADCAST 5-1-2025 PROGRAMME

Miss Aparna Raguraman was playing violin in a London event in November 2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 5-1-2025 PROGRAMME

5-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

*****

TIME:  12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Great Saint Thirumoolar.

***

Brahannayaki Sathyanarayan speaks about the significance of GAYA KSHETRA .

***

SPECIAL PROGRAMME

Interview with Violinist Miss Aparna Raguraman of London by Sandhya Sridhar

Daughter and Disciple of renowned musicians Sri Balu Raguraman & Smt Subathra Raguraman, Aparna Raguraman was initiated into the art of violin playing at a very young age. Milapfest awarded the National youth Fellowship to Aparna for the years 2020 and 2021, following with her violin Arangetram in the year 2022 with the support of Sri Srimushnam V Raja Rao. Aparna was featured as a special artiste in the group conducted by Miss Anoushka Shankar and performed at The Royal Festival Hall, South Bank Centre, London in 2022 and has toured Italy for a series of Concerts organized by the Isha Foundation. Aparna debuted her performances in the Chennai music season for several concerts in 2024. Having attended various workshop conducted by Sri Ganesh Rajagopalan and Sri Lalgudi Krishnan, Aparna now trains under Smt A Kanyakumari in Chennai.

Miss Aparna Raguraman will be interviewed by Miss Sandhya Sridhar

Sandhya Sridhar is an Odissi dancer based in London, UK. Alongside her profession as a scientist, she has nurtured a range of arts from a young age. She hails from an artistic family- daughter of Smt. Geetha Sridhar, Bharathanatyam Dancer and niece of Kalaimamani Sukanya Ramesh, film actress and Bharathanatyam Dancer. Her maternal family is steeped in artistic lineage, descending from the eminent actress S Jayalakshmi, Veenai S Balachander and painter S Rajam. 

She received tutelage in Carnatic violin from Sri Balu Raguraman at a young age at the Bharatiya Vidya Bhavan. 

She trained in Odissi dance with Smt Swapnokalpa Dasgupta (NCPA Mumbai), following induction into the form from Smt Sujata Mohapatra. She has additionally received tutelage from Smt Poushali Mukherjee and Smt. Barnali Mitra. She completed her Rang Manch Pravesh (debut performance) at Bharatiya Vidya Bhavan in Chennai in 2013- the first event of its kind in Chennai. She has performed at numerous events and festivals both in the UK and internationally, including International Yoga Day in London, Equator Festival, Kent and Indian High Commission Veterans Day. 

Sandhya continues to practice and perform Odissi whilst pursuing her PhD with Imperial College London in Oncology. 

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

JOIN US ON SUNDAYS.

—subham—

Gnanamayam, Programmae, 5-1-2025

Hindu Crossword312025 (Post No.14,047)

Written by London Swaminathan

Post No. 14,047

Date uploaded in Sydney, Australia – 3 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Crossword312025

1 2  3
      
4     
      
5  6  
     7
      
      
 8     

ACROSS

1.Lord Vishnu’s name meaning one who has beautiful hair or one who has killed demon Kesi

4.  The month Sravana, (July-August) 2. A cloud. 3. The rains, rainy season. 4. Smell. 5. The fibres in the root of the lotus. 6. A bird. 7. A grey-headed man. n.

Long sound- Navel

5.Means Mango

7. (RIGHT TO LEFT) Important name of Vishnu meaning ne who destroys sins

8. Gupta inscriptions name this city in Madhya Pradesh as “Indrapura”. It is believed that the city is named after its Indreshwar Mahadev Temple, where INDRA is the presiding deity. I have used alternate spelling.

DOWN

1.Sepent power lying in Body

2.The forest woman blessed by Sri Rama

3.The seer who drank ocean which means he crossed Indian ocean to establish Hindu culture and kingdoms in Seven South East Asian countries; they ruled for 1500 years.

6.In the Vedas, a demon, weapon, enemy, envious

Hindu Crossword312025

K1ES2AVA3
U A  G
N4ABAHA
D A  S
A5MRA6 T
L IRAH7
I  A Y
N  R A
I  8NDUR 

—SUBHAM—

TAGS- Hindu Crossword312025

அம்பரமே தண்ணீரே சோறே! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 12 (Post No.14,046)

Written by London Swaminathan

Post No. 14,046

Date uploaded in Sydney, Australia – 3 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்—திருப்பாவை 17

பொருள்: ஆடைகளையும்குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

****

ஆராய்ச்சிக்குரிய நான்கு விஷயங்கள்

1.உம்பியும் நீயும் உறங்கேல்

2.அம்பரமே தண்ணீரே சோறே

3.அறிவுறாய்!

4.அம்பரம் ஊடறுத்து

ரோட்டி (ரொட்டி)  கப்டா  அவுர் மகான் Roti Kapda Aur Makaan रोटी कपड़ा और मकान உணவுஉடைஉறைவிடம் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகள்; இது உலகெங்கிலும் முழங்கும் சொற்கள். தில் உறைவிடம் (வீடு) பற்றி ஆண்டாள் சொல்லவில்லை, அதற்குப் பதிலாக பாதுகாக்கப்பட்ட குடி நீர் பற்றிப் பேசுகிறாள் ; ஏனெனில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் யாருக்கும் வீடு அல்லது வசிப்பிடம் ஒரு பிரச்சனையே இல்லை ; காலி இடங்களில் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்தனர்; அரசும் காடு திருத்தி நாடக்கிக் கொடுத்தது  ஆனால் சுத்தமான குடிநீர்,  ஆறுகள் ஓடாத இடங்களில் ஒரு பிரச்சினையாக இருந்தது . இதற்காக சத்திரங்களைக் கட்டி, குளங்களையும் கிணறுகளையும்  வெட்டி அரசு உதவி செய்தது. இதை ஆண்டாள் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

அம்பரம் என்ற சொல்லைச் சிலேடைப் பொருளில் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். முதலில் அம்பரம் என்பது ஆடை என்னும்

பொருளிலும் பின்னர் அம்பரம் என்பது ஆகாயம் என்னும்

பொருளிலும் வருகிறது; இது ஆண்டாளின் தமிழ் அறிவினைக் காட்டுகிறது.

சமணர்களால் இரு பிரிவினர் உண்டு திகம்பரர் , ஸ்வேதாம்பரர்:

திக் என்னும் திசையையே  ஆடையாக   கருதியோர் நிர்வாணமாக வலம் வந்தனர் ; அவர்கள்  திகம்பரர்.

வெள்ளை /ஸ்வேதா உடை அணிந்தோர் இன்னுமொரு பிரிவினர்; அவர்கள் வெள்ளை ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்;

அங்கு அம்பரம் என்பது ஆடையைக் குறித்தது.

ஆண்டாள் பயன்படுத்தும் இரண்டாவது அம்பரம் ஆகாயம் என்னும்  பொருளில் வந்தது  வாமனாவதாரத்தில் குள்ளனாக வந்த விஷ்ணு த்ரிவிக்ரமனாக விச்வரூபம் எடுத்தபோது அவன் ஆகாயத்(அம்பரம்) தையும் தாண்டிச் சென்றான்.

இந்த வாமனாவதாரம் ரிக் வேதத்திலும் உள்ளது ; வள்ளுவனும் ஒரு குறளில் அடி அளந்தான் என்று  வாமானவதாரத்தைப் போற்றுகிறார்; இன்னும் சில இட ங்களில் தாமரைக் கண்ணன், பல் மாயக் கள்ளன் என்று கிருஷ்ணனை வள்ளுவர் போற்றுகிறார்; ஆண்டாளும் நரசிம்ம அவதாரம் முதல்  பல அவதாரங்களைக் குறிப்பிட்ட போதும் வாமன/ த்ரிவிக்ரமன் கதையை இந்தப்பாசுரத்தி லும், மேலும் இரண்டு பாசுரங்களிலும் போற்றுகிறார் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் பாடியுள்ளார்.   .

அறிவுறாய்! என்ற ஆண்டாளின் சொல்லுக்கு விழித்தெழு , விழிமின் என்று ஆன்றோர்கள் பொருள் சொல்லுவர். அதுவும் ஆண்டாளின் சொல்லாக்கத்தைக் காட்டி  நிற்கிறது

உம்பியும் நீயும் என்று பலராமனிடம் சொல்லுவது அக்கால வழக்கினைக் காட்டுகிறது இப்போது நாம் தம்பி என்று சொல்லுவது அக்காலத்தில் அம்பி, உம்பி என்ற பொருளில் வழங்கின

இலங்கைத் தமிழில் அவன், இவன் உவன் என்ற மூன்று சொற்களை பயன்படுத்துகின்றனர் அருகில் இருப்பவன் இவன் ;தொலைவில் இருப்பவன் அவன் ; இடையில் இருப்பவனே உவன்.

சங்க காலத்தில் அம்பி, உம்பி இம்பி என்று பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம்.

திருப்பாவைக்கு உரை எழுதிய சான்றோர்கள் நந்த கோபன் அரண்மனையில் நான்கு அடுத்தடுத்த அறைகள் இருந்ததாக ஊகிக்கின்றனர் .

முதற்கட்டில் நந்தகோபரும், இரண்டாங்  கட்டில் யசோதையும் மூன்றாங் கட்டில் கண்ணபிரானும் நான்காம் கட்டில் பலதேவரும் பள்ளி கொள்ளுவது முறையாதலால் இந்த வரிசையைத் திருப்பாவை 17ல் பின்பற்றியதாகவும் சொல்கிறார்கள்..

****

கோவிலில் இரு பெரும் தெய்வங்கள்

சங்க காலத்தில் கண்ணனையும் பலதேவனையும் ஒரே சந்நிதியிலோ அல்லது அடுத்தடுத்த சந்நிதிகளிலோ வைத்து வணங்கியதை பல கோவில்களிலும் சங்கப்பாடல்களிலும் காண முடிகிறது (ஆனால் பலதேவன் சந்நிதிகள் இப்போது காலியாக உள்ளன.) அதே போல சிவனையும் விஷ்ணுவையும் ஒரே கோவிலில் வணங்கியதையும் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கூட மிகப்பெரிய சைவத் தலமான சிதம்பரத்தில் சிவனும் பெருமாளும் ஒரே கோவிலில் இருப்பதைக் காண்கிறோம். கேரளத்திலும் இது போல உள்ளது

2200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய-கிரேக்க அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் பலராமனையும் வாசுதேவ கிருஷ்ணனையும் பொறித்துள்ளார்கள்.

Indo-Greek Coins

சங்கத் பாடல்கள் முழுவதிலும், புலவர்கள்  கிருஷ்ணன்—

பலராமன் ஜோடியை வருணித்துள்ளார்கள்  இதை ஆண்டாளும் பாசுரம் 17-ல் பாடியுள்ளார்.

***

புறநானூறு 56

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! —  புறநானூறு 56

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது..

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி, ,கலப்பை ஆயுதப் படை, பனைமரக் கொடி ஆகியவற்றை உடைய பலராமன் ;

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்.

நீல நிற ரத்தினக்கல் போன்ற நீலநிற மேனி, கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் ;

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்.

(பலராமனின் பனைக்கொடியைத் தொல்காப்பியமும் கூறியுள்ளது)

****

நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,

முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்

கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,

நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,                 5

இளையது ஆயினும் கிளை அரா எறியும்

அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?

இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்                 20

உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்

பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்

கையகப்படுவது பொய் ஆகாதே;

அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,

தொல்லோர் சென்ற நெறிய போலவும்,                     25

காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்

ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,

இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று

அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி       30

நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.– புறநானூறு 58

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும்,

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,

ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

****

மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்

வருந்தினன்” என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;

நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,                        5

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு

அரிய வாழி, தோழி! பெரியோர்

நாடி நட்பின் அல்லது,

நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.--நற்றிணை 32

மாயோன் -கிருஷ்ணன் / விஷ்ணு

வாலியோன் – பலராமன்/ பலதேவன்

****

சங்க காலம் முதல் ஐந்தாம் நூற்றாண்டு  வரை இந்தியா முழுதும் இவ்விருவரையும் போற்றித் துதிபாடியதையும் கோவில்களில் வைத்து வணங்கியதையும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் உறுதிசெய்கின்றன..

மேலும் பல இலக்கியச் சான்றுகள்

கலித்தொகை 104; 105;

பரிபாடல் 2-20/23;

பரிபாடல் 3-81;

பரிபாடல் 13-29/33;

பரிபாடல் 15-54/61

சிலப்பதிகாரம் 5-171/172;

சிலப்பதிகாரம் 14-8/9

இன்னா நாற்பது -1

திணைமாலை 58

யாப்பருங்கல விருத்தி – 78 உரை

சீவக சிந்தாமணி

ஆகியவற்றிலும் இரு பெருந் தெய்வங்களைப் புலவர்கள் பாடிப்பரவியள்ளனர்.

—subham—

Tags- சங்க இலக்கியம் புறநானூறு , நற்றிணை ,இரு பெரும் தெய்வங்கள் , பலதேவன், பலராமன், கண்ணன், வாலியோன் , பனைக்கொடி, அம்பரம் , ஆண்டாள் , திருப்பாவை  பாசுரம் 17

காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! -1 (Post No.14,045)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,045

Date uploaded in Sydney, Australia – –3 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-12-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! -1

ச. நாகராஜன்

பழைய காலம் போல வங்கியில் க்யூ வரிசையில் நின்று காசோலையைக் கொடுத்து பணத்தை வாங்குவது போய், நினைத்த நேரத்தில் நமக்கு  மிக அருகில் உள்ள இடத்தில் உள்ள பூத்துக்குப் போய் ஒரு கார்டைச் செருகி வேண்டுமென்ற பணத்தை நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வழி செய்யும் ஏ.டி.எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினைப் பெருமளவில் உருவாக்க வழி வகுத்தவர் யார்? ஆரோக்கியம் பெற ஏராளமான எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனங்களைப் பெருமளவில் தரத்துடன் உற்பத்தி செய்ப வழி வகுத்தவர் யார்? இவற்றை விட ஊனமுற்றவருக்காக வியத்தகும் சேவையைச் செய்தவர் யார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் காஸுமா ததேய்ஷி என்பது தான்!

பிறப்பும் இளமையும்

ஜப்பானில் உள்ள குமாமோடோ என்ற நகரில் 1900ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி குமானோசுகே – ஐ ததேய்ஷி தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் காஸுமா ததேய்ஷி. இந்தக் குடும்பம் பாரம்பரியமாக ஜப்பானியர் பயன்படுத்தும் கோப்பைகளைத் தயாரித்து வந்தது. இவைகள் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டு வந்தன.

1908ம் ஆண்டு மார்ச் 26ம் நாள் ததேய்ஷியின் தந்தை மறைந்தார். உடனே  குடும்பத்தின் வியாபாரம் குறைய ஆரம்பித்தது. ததேய்ஷியின் தாயார் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பப்பள்ளியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் குடும்பத்தின் நிலைமையைக் கருதி செய்தித்தாள்களை விநியோகிக்க ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ததேய்ஷியின் பாட்டி குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதோடு அவருக்கு ஒழுக்கம், விஸ்வாசம், சுதந்திரமாக இருத்தல் போன்ற நற்பண்புகளை ஊட்டினார்.

இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். ‘இளமைக்கால அனுபவங்கள் பின்னால் எனக்குப் பெரிதும் உதவியது’ என்றார் அவர்.

ட்ரவுஸர் ப்ரஸ்

ஆரம்பகால தொழில்நுட்பப் படிப்பை குமாமோடோ  தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் துறையில் முடித்துப் பட்டம் பெற்ற அவர் ஹையாகோ ப்ரீஃபெக்சுரல் அரசு நிறுவனத்தில் மின்னியல் பொறியாளராக வேலை பார்க்கத் தொடங்கினார். அவரது நண்பர் ஒருவர் அவரை இண்டக்‌ஷன் டைப் ரிலேயைத் தயாரிக்கத் தூண்டினார். இது அவருக்கு மின் சாதனங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தது.

1929ல் அமெரிக்காவில் வால் மார்ட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இது ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளை அனைத்தையும் பாதித்தது. ததேய்ஷி தனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்து தனியாகத் தொழிலைத் தொடங்கினார். முதலில் ட்ரவுஸர் ப்ரஸ் ஒன்றை அவர் தயாரித்தார்.

ட்ரவுஸர் ப்ரஸ் என்பது நாம் அணியும் சூட்டில் உள்ள சுருக்கங்களை மின்சார இயக்கத்தால் நீக்கும் மின் சாதனமாகும்.

பின்னர் 1932ல் எக்ஸ் ரே விற்பனையாளர்காக இருந்த தனது நண்பரின் தூண்டுதலால் எக்ஸ் ரே மெஷினுக்கான டைமர் ஒன்றைத் தயாரித்தார்.

தனது தொழில் வளர்ந்து வருவதை உணர்ந்த அவர் ஒஸாகா நகரில் உள்ள ஹிகஷினோடா என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். ‘ததேய்ஷி எலக்ட்ரிக் மானுஃபாக்சரிங் கம்பெனி’ என்று ஆரம்பிக்கப்பட்ட அது உலகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமான ஓம்ரான் நிறுவனமாக உயர்ந்தது.

ஓம்ரான் கார்பொரேஷன்

க்யோடோ நகரில் உள்ள ஒரு பகுதிக்கு ஓமுரோ என்று பெயர். அதிலிருந்து ஓம்ரான் என்ற வார்த்தை உதித்தது. இயந்திரங்கள் தனது வேலையைச் செய்யட்டும்; மனிதனோ இன்னும் அதிகம் படைப்பாற்றலைச் செய்யட்டும்’ என்றார் ததேய்ஷி.  எல்லா சாதனங்களையும் தானியங்கி முறையில் அவர் உருவாக்க ஆரம்பித்தார். ஏ டி எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினை முதன் முதலில் பெருமளவில் அவர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஒரு கார்டைச் செருகி மெஷினிலிருந்து பணத்தை எடுப்பதைக் கண்ட நடைமுறையை உலகமே முதலில் பார்த்து வியந்தது. இப்போது இது சகஜமாக ஆகி விட்டது. அவரது இன்னொரு நிறுவனமான ஓம்ரான் ஆயில்ஃபீல்ச் அண்ட் மரைன் என்ற நிறுவனம் ஏசி மற்றும் டிசியால் இயங்கு, சாதனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது.

2023ல் ஓம்ரான் 8760820 லட்சம் யென்னை விற்பனையாகக் கொண்டது.

(ஒரு யென் என்பது 0.552 இந்திய ரூபாயாகும்). 120 நாடுகளில் ஓம்ரான் தனது தயாரிப்புகளை இப்போது வழங்கி வருகிறது.

வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சாதனங்களையும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கண்காணிப்பு சாதனங்களையும் ஓம்ரான் தயாரிக்க ஆரம்பித்தது. இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிகள், டிஜிடல் தெர்மாமீட்டர், பாடி காம்போஸிஷன் மானிடர், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள்  உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் இந்த தயாரிப்பில் அடங்கும்.

யடாகா நகாமுரா என்ற டாக்டர் ஜப்பானில் நடந்த  பாராலிம்பிக்ஸில் போட்டிகள் முடிந்த பின்னர் ஜப்பான் வீரர்கள் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்பதைக் கண்டார். வருத்தம் கொண்டார்.

தனது மனப்பான்மை போலவே உள்ள ததேய்ஷியுடன் இணைந்து அவர் 1972ல்  ஒம்ரான் டையோ என்ற நிறுவனத்தையும் 1985ல் ஓம்ரான் டையோ எலக்ட்ரிக் கம்பெனி லிமிடட்  என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அவர்களது ஒரே கொள்கை: “தர்மம் அல்ல; வாய்ப்பு தான்” (Not a Charity but a Chance). ஊனமுற்றோருக்கான விசேஷ சாதனங்களை இந்த நிறுவனங்கள் தயாரித்தன.

to be continued……………………………..

.***

My Visit to Palm Beach in Australia (Post.14,044)

Written by London Swaminathan

Post No. 14,044

Date uploaded in Sydney, Australia – 2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken by london swaminathan

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Australia is full of beaches, rain forests and national parks. If you go out of cities, you will see nothing but tall trees touching the sky or waves crashing on the coast. The country has Pacific Ocean on the east and Indian Ocean in the West and the South.

Palm beach is one of the famous beaches, approximately one hour drive from Sydney. You can enjoy swimming in the Pacific Ocean or boating or hand gliding etc. at Palm Beach.

It is at the end of three different beaches in a peninsula area. We pass Avalon Beach, Bilgola beach, Whale Beach and reached Palm Beach. At every beach we saw hundreds of cars parked.

(Palm Beach is a suburb in the Northern Beaches region of Greater Sydney, in the state of New South Wales, Australia. Palm Beach is located 41 kilometres north of the Sydney central business district.)

It is a safe beach for children and youths. There are shallow areas where one can swim safely. Moreover, the coast guards are readily stationed there to keep an eye and save people. On the beaches, they plant two flags at a distance and in between any one can enter the sea without any fear.

We went there on New Year’s Day (1-1-2025) and there were 200 to 300 cars. One must pay Parking charge for the cars. Good public bus service is also available connecting all the beaches.

If you want to go in the sea in a ferry, they charge 20 dollars per head for one hour ride; children go free.  I took a seat in the upper deck so that I can take good pictures. The sea is full of Blue Bottle jelly fish which is poisonous. Only when you step on it you are affected. I saw five to ten dead jelly fish on the shore.

***

Three families went to the beach with all the tents and packed lunches. We enjoyed the feast on the shore under shady trees.

Children went for swimming under adult supervision. Youngsters, young couples were taking sun bath. In Australia sun cream is a must to avoid skin cancer. The weather reports add this UV factor in everyday weather report.

***

London Swaminathan’s Foot prints on Sands of Time 1-1-2025

Mighty Pacific Ocean

In the far north is Cairns where from one can go to see Great Barrier Reef; during my last trip in 2015, we hired a glass bottomed boat and saw the living corals and the fish that live in coral reef under the sea.

  • The Great Barrier Reef has 2900 reefs and an incredible 900 islands
  • It covers 2600 kilometres in length
  • Australian coasts are often nicknamed ‘Surfers Paradise,’ due to having a number of world-class surfing spots such as Crescent Head in New South Wales and Noosa Heads in Queensland
  • Australia’s marine environment houses 4000 different fish species, 500 coral species and 50 types of marine mammals
  • More than 85 percent of Australia’s population lives within 50 kilometres of the Australian coastline
  • This geographical feature and interests in sports help Australia to get more medals in Olympic and World Tennis. Australia always maintains its position within the first ten countries in the Olympic Medal Table.

***

Bluebottle Jelly Fish

The bluebottle jellyfish has a toxic sting, but it’s not usually harmful to humans:

The bluebottle’s tentacles contain stinging capsules that release a toxic mixture of proteins and phenols. This venom is deadly to small fish and other sea creatures, but not usually to humans.

Scientific name: Physalia physalis

Alternative name/s:

Indo-Pacific and Portuguese Man o’War

Similar species:

Physalia physalis, Portugese man-of-war

Size Range

Float: 2 cm – 15 cm

Introduction

The Bluebottle, Physalia physalis, is a common, if unwelcome, summer visitor to Sydney beaches. At the mercy of the wind, they are sometimes blown into shallow waters, and often wash up onto the beach.

On the eastern coast of Australia, it is the NE winds and warmer currents that bring them and other organisms that make up the armada or fleets of blue coloured floating colonial cnidarians and their predators, to beaches on the incoming tides.

The float is a bottle or pear-shaped sac that can exceed 15 cm. It is mainly blue, though its upper margin may show delicate shades of green or pink. It is a living, muscular bag that secretes its own gas, which is similar to air. The float has aerodynamic properties and it seems likely that sailing characteristics may be modified by muscular contraction of the crest.

The Bluebottle belongs to the phylum Cnidaria, which includes corals and sea anemones.

Physalia physalis is commonly encountered in the summer months on the eastern coast of Australia, and during Autumn and winter in southern Western Australia

The Bluebottle, Pacific man-o-war, is found in marine waters in the Indian and Pacific Oceans.

–Subham—

Tags-  Palm Beach, Pacific Ocean, Blue bottle jelly fish, coral reef, My visit

முப்பத்து மூவர்; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 11 (Post.14,043)

Written by London Swaminathan

Post No. 14,043

Date uploaded in Sydney, Australia – 2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முப்பத்து மூவர் திருப்பாவை ஆராய்ச்சிக்கட்டுரைகள்-11

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

வேதகாகத்தில் ‘மிஸ்டர் முப்பது’ Mr Thirty  என்று இந்திரனுக்குப் பெயர்; அதாவது திருவாளர் முப்பது; ஏனெனில் அவர் முப்பது என்ற தொகுதியுடைய வேத கால தெய்வங்களுக்கு தலைவர் . இந்திரன் என்பது ஒரே ஆளின்/ தெய்வத்தின்/ பெயர் அல்ல. அது பிரதமர், ஜனாதிபதி, தலைவர் என்பது போலப் பதவியின் பெயர்; இதைக் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) போன்ற பெரியோர்கள் தமது சொற்பழிவுகளில் விளக்கியுள்ளார்கள்; அது தெரியாத வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் அவர்களைப் பின்பற்றும் அரைகுறை அறிஞர்களும் ‘இந்திரன் அதைச் செய்தான் இதைச் செய்தான்’ என்று ஒரே ஆளின் பேரில் கதை கட்டிவிட்டுள்ளனர் . நிற்க. 

***

முப்பத்து மூவர் என்பதுடன் கோடி என்ற எண்ணைச் சேர்த்து முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லுவது வழக்கம். அதாவது கடவுளின் உருவங்கள் எண்ணற்றவை என்பதே இதன் பொருள். எடுத்துக்கட்டாக நாம் அஷ்டோத்திரம் (108) என்றும் சஹஸ்ர நாமம் (1008)  என்றும்  பெயர்களைச் சொல்லி வழிபடுகிறோம் இறைவனின் குணங்களை இப்படி 108, 1008 எண்களால் குறிப்பிடுகிறோம். லலிதா சஹஸ்ர நாமக்  கதைகளிலும் தேவிக்குப் பல கோடி பெயர்கள் இருக்கும் சம்பவம் வருகிறது.

***

தேவர்கள் எண்ணிக்கை 33. அவர்கள் யார் யார் ?

ஆதித்யர்கள் 12;

ருத்ரர்கள் 11;

வசுக்கள் 8;

அஸ்வினி தேவர்கள் 2= 33

இவர்களுக்கு இந்திரன் தலைவன்

இவர்களைத் துவாதச ஆதித்தர், ஏகாதச ருத்ரர், அஷ்ட வசுக்கள் , அஸ்வினி தேவர்கள் அல்லது நாஸத்யர்கள் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவர்.

இந்த விஷயம் வேத கால இலக்கியம் முழுவதிலும் வருவதைச் சங்க நூல்களும் செப்புகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதத்தின் அத்தனை தகவல்களையும் தமிழர்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பரிபாடல்திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் முப்பத்து மூவர் இடம்பெறுகின்றனர்.

****

பரிபாடல் வரிகள்

விதியின் மக்களும்

மாசிலெண்மரும் பதினோரு கபிலரும்

……..

தாமா விருவரும்  — பரிபாடல்  3

(கபிலர் – காசிபன் மக்கள் பன்னிரு ஆதித்தர் )

****

நாலெண் டேவரும் நயந்து நிற்பாடுவார் —பரிபாடல்  3

(வசுக்கள், திவாகரர்/ஆதித்தர், உருத்திரர், மருத்துவர் என நால்வகைப்பட்ட தேவர்களும் விரும்பி நின்னைப் புகழ்வர் )

****

உலகிருளகற்றிய பதின் மருமிரிருவரும் 

மருந்துரையிறுவருவருந்திருந்து  நூலெண்மரும்

ஆதிரை முதல்வனிற்கிளந்த 

நாதர் பன்னொருவரும்— பரிபாடல் 8

****

நால்வேறியற் கைப்பதி னொரு மூவர்  — திருமுருகாற்றுப்படை

****

நால்வகைத்த தேவரும் மூவறுகணங்களும்

பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து

வேறு வேறு கடவுளர் சாறு சிறந்ததொரு பாடல் — சிலப்பதிகாரம்

***

பரிபாடல் முதலிய நூல்களில் விரிவாகச் சொன்ன தகவலை ஆண்டாள் ஓரிரு சொற்களில் முப்பத்து மூவர் என்று சுருக்கிச் சொன்னதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.  33 என்ற எண்ணைச் சொன்னாலே தமிழர்களுக்கு உடனே புரிந்து விடும்; அந்த அளவுக்குத் தமிழர்கள் வேதங்களை அறிந்திருந்தனர் என்பதை ஆண்டாள் பாசுரம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பரிபாடலில் உள்ள பெரும்பாலான விஷயங்கள், ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாலும் அவரது வாசகங்கள் சங்க கால வாசககங்களுக்கு அருகிலிருப்பதாலும் அவரை ஒன்பதாவது நூற்றாண்டில் வைக்காமல் ஏழாவது நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைப்பதே பொருந்தும்.

—subham—-

Tags– முப்பத்து மூவர், திருப்பாவை, ஆராய்ச்சிக்கட்டுரைகள் 11