TIME: 12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer was sung by Neeraj Nurani from New Zealand.
World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan lectured about Great Sanskrit Grammarian Panini
***
Brahannayaki Sathyanarayan explained the significance of on THIRUVALLIKKENI Parthasarathy Temple from Bengaluru
***
Londo Swaminathan from Sydney, Australia INTERVIEWED WITH FAMOUS SINGER SRI MANIKKAM YOGESWARAN of BERLIN
COORDINATOR, SOUTH ASIAN MUSIC AT GLOBAL MUSIC ACADEMY, BERLIN
Mr Yogeswaran is currently in Tamil Nadu performing his 30 th year concert at the same Sabha in Chennai.
M.Yogeswaran is a classical musician trained in
carnatic music which originates from South India. When he performs on the world stage, his ensemble of talented traditional artists and world-renowned orchestras accompany him.
During childhood he was trained in classical music under his teachers “Sangita Bhushanam” Sri P Muthukumarasamy and “Sangita Bhushanam” Sri S Balasingam. His Guru is the world-renowned musician and singer “Padma Bhushan” “Sangita Kalanidhi” Prof Sri T V Gopalkrishnan. Since then, his work as a live performer extends into different branches of music, film and contemporary music.
His popular accomplishments include; the movie soundtracks Migration for Eyes Wide Shut in 1999 directed by Stanley Kubrick this was achieved together with Jocelyn Pook, Spike Lee’s 25th Hour in 2002 for the song The Fuse and in 2007 again with Jocelyn Pook for the songs Quiet Joy , Memories of a Summer and Love Blossoms in Sarah Gavron’s film Brick Lane and his song tribute The Bells for Queen Elizabeth II for her Diamond Jubilee celebrations in June 2012.
As a soloist he has played a role as Mahatma Gandhi in a musical celebrating the Bi centenary of the Norwegian constitution. The musical titled Stemmer composed by the British composer Orlando Gough and performed with the Bergen Philharmonic Orchestra in May 2014. The event was presided by His Highness The Crown Prince of Norway.
***
Tiruppugaz songs recorded by Kalyanji
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
சென்னை நகரில் மிகப் பழமையான பகுதியாகும் இது. மைலாப்பூரை அருகில் கொண்டு விளங்கும் இந்தத் தலம் மிகவும் பிரசித்தமான தலமாகும். இங்குள்ள பார்த்தசாரதி கோவிலின் முன்னால் அமைந்துள்ள அல்லி மலர் நிறைந்துள்ள குளத்தால் இது அல்லிக்கேணி என்ற பெயரைப் பெற்றது. முன்பொரு காலத்தில் இது துளசி வனத்தில் நடுவில் அமைந்திருந்தது.
இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய மாஹாத்மியம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளஸி. ஆரண்யம் என்றால் காடு என்று பொருள் எனவே பிருந்தாரண்யம் என்றால் துளஸி வனம் என்று பொருள்.
முன்னொரு காலத்தில் சுமதி என்ற மன்னன் வேங்கடமலையில் திருவேங்கடமுடையானை வழிபட்டு, அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணனாக பெருமாளை தரிசிக்க எண்ணி, தவம் இருந்தான். பகவான் அவனிடம் கைவரணி தீர்த்தம் கொண்ட பிருந்தாரண்யம் வந்து நீ விரும்பிய தோற்றத்துடன் என்னை தரிசிப்பாயாக என்று அருள் பாலித்தார். அவ்வண்ணமே வியாஸருக்கும் சுமதி ராஜாவுக்கும் இரு திருக்கரங்களுடன் வேங்கடகிருஷ்ணனாகக் காட்சி தந்தார்.
வேங்கடவனால் காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் ஏற்பட்டது..
கர்பக்ருஹத்தில் குடும்ப சமேதராய் ருக்மிணி, பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தனோடு கிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.
மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மரால் அம்புகளால் துளைக்கப்பட்ட வடுக்கள் திருமுகத்தில் திகழ, உற்சவர் பார்த்தசாரதி இன்றும் காட்சி தருகிறார்.
இங்குள்ள தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீகம்.
வைணவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக உள்ள வேங்கடம், திருவரங்கம், கச்சி ஆகிய மூன்று தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்திற்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இங்குள்ள மூலவரான வேங்கடகிருஷ்ணன் கம்பீரமான மீசையுடன் காட்சி தருகிறார். 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் இப்படி மீசையுடன் காட்சி தருவது இத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஶ்ரீ பார்த்தசாரதி கோவில் வைகாநஸ பகவத் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விதிப்படியே பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.மானுட வாசுதேவன் மற்றும் பர வாசுதேவன் என்று இருவிதமாகச் சொல்லப்படுவதில் இங்கு மானுட வாசுதேவனாக குடும்பத்துடன் கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆக அந்த சாஸ்திரம் சொல்லியுள்ளபடி யுக்தியையும், புத்தியையும் சேர்த்து பொருத்தமான வடிவத்தில் விக்ரஹத்தை அமைத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பெருமாள் இங்கு மீசையுடன் தோற்றமளிக்கிறார்.
இங்கு பெருமாள் தனது சுதர்ஸன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று வாக்களித்ததால் அவர் கையில் ஆயுதம் இல்லை. ஆனால் போரின் ஆரம்பம் மற்றும் முடிவினைத் தெரிவிக்கும் வகையில் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.
உற்சவ மூர்த்தியும், தன் கதாயுதம் இல்லாமல், செங்கோலுடன் காட்சி தருகிறார்.
இங்கு தங்கத்தால் ஆகிய இரு கருட வாஹனங்கள் உள்ளன. பெரிய கருட வாஹனத்தில் ஶ்ரீ பார்த்தசாரதி வருடத்தில் ஏழு முறை உலா வருகிறார். சிறிய கருட வாகனம் ஶ்ரீ ரங்கநாதருடைய வாகனமாக அமைகிறது.
12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இங்குள்ள அல்லிக் கிணற்றில் தான் பிறந்தார் என்றும் அவர் இங்கு ஓடிக்கொண்டிருந்த கைரவிரணி நதி வழியே பார்த்தசாரதி கோவிலில் உள்ள வேங்கடகிருஷ்ணனைத் தொழ வந்தார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
இது எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில் என்று வரலாறு தெரிவிக்கிறது.
கோவிலின் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டது என்பதை திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார் இப்படி:
இந்தப் பகுதியில் தான் பாரதியார் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் பாரதியார் நினவில்லமாக இப்போது திகழ்கிறது. அதே போல விவேகானந்தர் தங்கிய ஐஸ் ஹவுஸின் பெயரானது 1963ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் என்று மாற்றப்பட்டது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பார்த்தசாரதியும் ருக்மிணித் தாயாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
***
tags-ஆலயம் அறிவோம், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்
Nationala Yogasana Meet; Tamil Nadu Students came first.
Written by London Swaminathan
Post No. 14,032
Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024
Collected from National Newspapers and edited.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 29–ம் தேதி 2024-ம் ஆண்டு
*****
வைகுண்ட ஏகாதசி 2025 ஜனவரி 10ம் தேதி
விரதங்களில் மிகவும் புண்ணியமான விரதமாகவும், பெருமாளுக்கு மிகவும் விருப்பமான விரதமாகவும் கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பஞ்சமா பாவமும் நீங்கி, அவர்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதுடன், இறுதியில் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றில் வருவது உண்டு. அதாவது மாதத்திற்கு 2 ஏகாதசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரத நாட்கள் வரும். இவை ஒவ்வொன்றிற்கும் தனியான பெயர்கள், சிறப்புகள் மற்றும் தனியான பலன்கள் உண்டு. சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அப்படி மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என சிறப்பித்து கொண்டாடுகிறோம். மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாகவும் விரத நாளாகவும் வரும் வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்லுவதுண்டு.
****
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வருகிற 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 31-ந்தேதி முதல், ஜனவரி 9-ந்தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10-ந்தேதி முதல், 20-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ளது.
இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் நடத்தப்படும். வைகுண்ட துவாரம் எனப்படும் இந்த வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு வைண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் இரவு முழுவதும் கண் விழித்து, உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பது உண்டு
ஜனவரி 10ம் தேதி வரக் கூடியது தான் வளர்பிறை ஏகாதசி .அதைத் தான் வைகுண்ட ஏகாதசியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பதியில் பாலாஜி கோவிலிலும் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது
*****
வைஷ்ணவ தேவி கோவில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரிலுள்ள புகழ்பெற்ற சக்தித் தலமான
வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ரோப் வே ROPE WAY எனப்படும் கயிறு வழிப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் 72 மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மூன்று நாள் கிளர்ச்சி நடத்திய சங்கர்ஷ கமிட்டி, இந்த ரோப் வே என்னும் கயிறு வழிப்பாதை வழக்கமான நடை முறைகளையும் வியாபாரிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கூறியுள்ளது
250 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .
கிளர்ச்சிக்கு முன்னர் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை .
மாதா வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகம் இதை 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற எண்ணியது. இதன் மூலம் பக்தர்கள் 13 கிலோமீட்டர் பாதையைக் கஷ்டப்பட்டு கடக்காமல், ஆறே நிமிடங்களில் கோவில் வளாகத்தை அடைய முடியும்.
பகதர்கள் இப்படி ரோப் காரில் சென்றால் 13 கிலோமீட்டர் பாதையிலுள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது சங்கர்ஷ கமிட்டியின் வாதம் . பல்லக்குத் தூக்கிகள், மட்டக் குதிரை சவாரி நடத்துவோர் கற்களை வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வியாபாரிகளின் கவலையைத் தீர்க்க பேச்சுவார்த்தை உதவும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
******
பெற்றோர் பாத பூஜைக்கு தடை: இந்து முன்னணி கடும் கண்டனம்
‘பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது’ என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை, ஹிந்து முன்னணி கண்டித்துள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
‘தனியார் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்வது கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தான், தமிழர்களின் அடிப்படை பண்பாடு. பெற்றோரை போற்றுதல், வணங்குதல் என்பது தமிழர் மரபிலே உள்ள நல்லொழுக்கமாகும்.
யாரெல்லாம் பெற்றோரை போற்றினரோ, அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மக்களால் போற்றப்படுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். தனியார் பள்ளியில் பெற்றோர், மாணவர் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடக்கிறது. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.
இதுபோன்ற நிகழ்வுகளால், மாணவர் – பெற்றோர் உறவு மேம்படுகிறது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீதான அன்பும், அக்கறையும் கூடுகிறது என்பதே உண்மை. இத்தகைய நிகழ்வுகள் தவறான செயலாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. நம் பண்பாட்டை சிதைக்கும் வெளிநாட்டு கலாசாரத்தை, பள்ளிகளில் புகுத்துவதை திராவிட மாடல் ஆட்சி ஊக்கப்படுத்துகிறது.
மாணவர்களிடம் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் வன்முறை பெருகி வருகிறது. இதற்கு தீர்வாக பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வைத்த கோரிக்கையை, நடைமுறைப்படுத்த கல்வித் துறை மறுக்கிறது. தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியுள்ளார்.
******
சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கி வருகை
சபரிமலையில் டிசம்பர் .26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற் றது. அதற்கு முன்னர், தங்க அங்கி சன்னிதானம் வந்தடைந்தது.
நவ., 16-ல் தொடங்கிய மண்டல கால சீசன் சபரிமலையில் இத்துடன் நிறைவு பெறுகிறது.
ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி பம்பை வந்தடைந்தது
மாலை 3:00 மணி வரை பம்பை கணபதி கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு . அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமடாக நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது . அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு , மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் அதை பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்தினார்கள்.
மதியம் களபாபிேஷகத்துக்கு பின் இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது . இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறுகிறது
டிச.,22ல் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி 74 கோயில்களுக்கு சென்று விட்டு இன்று பம்பை வந்தது
2018ல் ஏற்பட்ட பெருவெள்ளம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் தடைபட்ட பம்பா சங்கமம் நிகழ்ச்சி 2025 ஜன.,12-ல் பம்பையில் நடைபெறும். அன்றைய தினம் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி 75 தீபங்கள் அனைத்து கோயில்களிலும் ஏற்றப்படும். 2025 மகர விளக்கு சீசனில் ஐயப்பன் படம் பொறித்த தங்க லாக்கெட் விற்பனைக்கு விடப்படும்.
மகர ஜோதி தரிசனத்துக்கு முன்னர் மீண்டும் நடை திறக்கப்படும்
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.
அதில்,: துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார் என
கூறியிருந்தார்.
ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை டிச.,15ல் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ‘ சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டா்’ எனக் கூறியிருந்தார்.ஆனால் போலீசார் சா்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ விதிகளை பின்பற்றித் தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது’ எனக்கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றிபேசக்கூடாது என்ற நிபந்னையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
*******
திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகைதீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்த மகாதீபத் ததரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சுமார் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் பலத்த காற்றிலும் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. செங்குத்தான மலைப்பாதையில் தீப கொப்பரை இறக்கி கொண்டு வரப்பட்டது தொடர்பான டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.
கோவை: ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை டிசம்பர் 22–ல் தொடங்கியது. கோவை ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
******
பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி, பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படிபழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள்வர தொடங்கி உள்ளனர்.
பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், தைப்பூச திருவிழா அனுமதி பெறுவதற்கும் பழனி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி யாகம் நடந்தது.
ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
******
தேசிய அளவிலான யோகாசன போட்டி – தமிழ்நாடு அணி சாம்பியன்!
பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட டார்கள். அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் மொத்தமாக 780 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது.
*****
அமெரிக்காவில் சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு உயர் பதவி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார். தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். முன்னதாக, மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
‘பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்ஸூடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்,’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
*****
ராமாயணம்‘: ராவணனாக நடிக்க யாஷ் வாங்கும் சம்பளம் !
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யாஷ். இந்த படங்கள் அனைத்து ரசிகர்களையும கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார்.
ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கிறார். மேலும், ராமராக ரன்பீர் கபூரும் , சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.
வில்லனாக நடிக்கும் யாஷ் இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வில்லன் கதாபாத்தித்திற்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக யாஷ் இருப்பார்.
*******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு
ஜனவரி 5 –ஆம் தேதி லண்டன் நேரம்நண்பகல் 12 மணிக்கும்,
Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பாவை நூலை நன்றாகப் படிப்பவர்கள் அதிலுள்ள அழகான அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். அதைப் பாடிய ஆண்டாள் ஒரு கோர்வையாக அதைப் பாடுகிறார். முஃப்தீ பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோர் நாவிலும் பாவைப் பாசுரங்கள் ஒலிப்பதற்கு இதுவே காரணம். தட்டொளி, உக்கம், பறை, முதலிய புதிய சொற்களைத் தந்து தமிழ் மொழியையே வளப்படுத்துகிறார்.
சங்கத் தமிழ் மாலை முப்பது என்பதுதான் அவர் தனது பாசுரத் தொகுப்புக்கு கொடுத்த பெயர். அது மிகவும் பொருத்தமான பெயரே. ஏனெனில் அவர் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலிருந்தும் மேற்கோள் காட்ட முடிகிறது; திருப்பாவை மாலை நூலை எழுதிய திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கக் காரியதரிசி , தமிழ் வித்துவான், பந்தல்குடி மாடபூசி ரெ. திருமலை அய்யங்கார் எழுதிய 276 பக்க நூல் முழுதும் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியுள்ளார். ஆண்டாள் சொன்னதை கம்பனும் வில்லிப்புத்தூராரும் கூடப் பிற்காலத்தில் பாடியுள்ளதையும் காட்டுகிறார்.
*****
அமைப்பு
பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .
தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி, என மூன்றுவகையாம்.
கொச்சகக்கலிப்பாவானது தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.
திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் , சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.
மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவையின் பாடல்களும் எட்டடியால் அமைந்த தரவு கொச்சகக் கலிப்பாக்களே . அவற்றினும் ஈரசைச் சீர்கள் வந்திருக்கின்றன. ஆயினும் அவை முற்றிலும் வெண்டளையினாலேயே அமைந்திருக்கின்றன.
நாந்திச் செய்யுள்
திருப்பாவையின் ஈற்றுப் பாசுரம் நாந்திச் செய்யுள். நாந்திச் செய்யுளாவது நூல் இயற்றுவோர் நூலுக்கு முன்னாகவேனும் பின்னாகவேனும் தம்மைப் படர்க்கையில் வைத்து, இன்னார் இயற்றியது இந்நூல் என்பது தோன்றக்கூறுவது . இங்ஙனமே ஆழ்வார்களுள் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுர கவியாழ்வார் என்னும் இவ்வருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர்.
சைவ சமயாச்சாரியாருள் சம்பந்தர், சுந்தரர் இருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர். திருவெம்பாவையில் நாந்திச் செய்யுள் இல்லை.
*****
திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு
முதல் பாசுரத்தில் நோன்புக் காலம் பற்றியும்
இரண்டாவது நோன்புக்காலத்தில் செய்யவேண்டியது பற்றியும்
மூன்றாம் பாசுரத்தில் மாதம் மும்மாரி மழை பெய்து நாடு செழிக்கச் செய்யும் நல்ல நோக்கம் பற்றியும், நான்காம் பாசுரத்தில் மழைக்குரிய தேவதை பற்றியும் பாடுகிறார்
ஐந்தாம் பாசுரத்தில் இப்படிப்பாடி, மனதில் சிந்தித்தால் அஹங்காரம் அழியும் என்பார் .
ஆறாவது முதல் பதினைந்தாம் பாசுரம் வரை பத்துப்பாசுரங்களில் யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பருவப் பெண்கள் அனைவரையும் தட்டி எழுப்புகிறார் இதுதான் பஜனையின் கருத்தும் கூட. எல்லோரும் பயன் பெற சத் சங்கம் உதவுகிறது
இறுதியில் கண்ணனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி போற்றி போற்றி என்று துதித்து நோன்பு இருந்த காரணத்தையும் சொல்லி, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்
இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.
ஆண்டாள் ஒரு திரைப்பட இயக்குனராக இருந்தால் , வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருப்பார் திருப்பாவை முப்பதையும் நாம் காட்சி வடிவில் மனக்கண் முன் கண்டால், இயற்கைக் காட்சிகளில் துவங்கி கண்ண பரமாத்மாவின் அரண்மனை வரை கண்டுகொண்டே போகலாம். இது நமது ஆத்மாவின் பயணம் . இதன் சிறப்பு, தான் மட்டும் பயன்பெறாமல் மற்றவர்களையும் இறைவனிடத்தில் இட்டுச் செல்வதாகும். அதே நேரத்தில் மழை எய்து நாடு செழிக்கவும் வேண்டுவதாகும். திருப்பாவை யில் நாட்டின் செழிப்பு போற்றப்படுகிறதா? அல்லது தனி ஒரு பெண்ணின் முன்னேற்றம் போற்றப்படுகிறதா? அல்லது மக்கள் அனைவரின் ஆன்மீக முன்னேற்றம் போற்றப்படுகிறதா? என்று பட்டி மன்றமே ந டத்தலாம். இதற்கு திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு நமக்குத் துணை புரியும்.
–SUBHAM—-
TAGS-திருப்பாவையின் அமைப்பு, திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 9,ஆண்டாள்
சுக்ரீவன் சீதா தேவியைத் தேட தன் வீரர்கள் அனைவரையும் எல்லா திசைகளிலும் அனுப்புகிறான்.
மரீசியின் புத்திரனான மாரீசனையும் பெயர் பெற்ற வானரனான அர்ச்சிஷ்மானையும் மேற்குத் திக்கில் சீதையைத் தேட அனுப்புகிறான்.
அவர்களுக்கு மேற்குத் திசையில் உள்ள அனைத்து இடங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறான்.
ஸுராஷ்ட்ரம், பாஹ்லீகம், சூர தேசம் பீம தேசம் உள்ளிட்ட பல தேசங்களைச் சொல்லி விட்டு மேரு பர்வதத்தைப் பற்றி வர்ணித்து விளக்குகிறான் சுக்ரீவன்.
தேஷாம் மத்யே ஸ்திதோ ராஜா மேருருத்தரப்ர்வத: |
ஆதித்யேன ப்ரஸன்னேன ஷைலோ தத்தவர: புரா ||
தேஷாம் – அவைகளின்
மத்யே – நடுவில்
உத்தரபர்வத: – மிகச் சிறந்த பர்வதமும்
ராஜா – எல்லாவற்றிலும் பெரிதுமாகிய
மேரு: – மேரு என்னும் பர்வதம் (இது மகா மேரு பர்வதம் அல்ல; வேறொரு மேரு பர்வதம்)
ஸ்தித: – இருக்கிறது
புரா – முன்னொரு காலத்தில்
ஷைல: – அந்தப் பர்வதமானது
ப்ரஸன்னேன – உள்ளங்குளிர்ந்த
ஆதித்யேன – சூரிய பகவானால்
தத்தவர: – பின் கண்ட வரத்தைப் பெற்றது
தேனைவமுக்த: ஷைலேந்த்ர: ஸர்வ ஏவ த்வதாஸ்ரயா |
மத்ப்ரஸாஜாத்பவிஷ்யந்தி திவா ராத்ரௌ ச காஞ்சனா: ||
ஷைலேந்த்ர: – மலையரசன்
தேன – அவரால்
ஏவம் – பின்கண்டபடி
உக்த: – வரமளிக்கப்பட்டது’
த்வதாஸ்ரயா – உன்னை அடைந்திருக்கும்
ஸர்வ ஏவ – எல்லோருமே
திவா ராத்ரௌ ச – பகலிலும் இரவிலும்
காஞ்சனா: – பொன்னாக
மத்ப்ரஸாஜாத் – என்னுடைய அருளினால்
பவிஷ்யதி – ஆகக் கடவன்
த்வயி யே சாபி வத்ஸ்யந்தி தேவகந்தர்வதானவா: |
தே பவிஷ்யந்தி ரக்தாஸ்ச ப்ரபயா காஞ்சனா இவ ||
யே – எந்த
தேவ கந்தர்வஸ்ச தானவா: ச – தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும்
த்வயி – உன் மீது
வத்ஸ்யந்தி அபி – வசிக்கின்றார்களோ
தே ச – அவர்களும்
ப்ரபயா – ஒளியால்
காஞ்சனா இவ – பொன்னென
ரக்தா: – சிவந்தவர்களாய்
பவிஷ்யந்தி – இருப்பார்கள்
– 42வது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 38,39,40
இப்படி மேரு மலை பெற்ற வரத்தை சுக்ரீவன் விளக்குகிறான். இந்த வரம் கேட்டுப் பெறப்பட்டதா சூரியபகவானால் அருளித் தரப்பட்டதா என்ற விளக்கம் தரப்படவிலை. என்றாலும் கூட மேரு மலை பெற்ற அற்புதமான வரத்தைப் பற்றி அறிய முடிகிறது.
Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ku-ring-gai Chase National Park
It is 35 kilometres from Sydney; it is a nature reserve, looking like Kodaikanal or Uthakamandalam (ooty) in Tamil Nadu. There is a big water source where tourists enjoy boating, angling , paddling etc. Since we went on a hot day we spent only half a day there. There is lot of scope for walking and picnicking. Most of the tourists came with pack lunch and enjoyed it under shelters.
There is an entrance fee for the National Park; but you can buy an annual pass for the family which works out cheaper. There is also Car parking fee . if you want to hire a boat , you have to pay separately.
Even young children were practising fishing. In the salty water lake, we saw jelly fish and big fish.
Ku-ring-gai Chase National Park area was the living place of aboriginals 200 years ago. They lived in caves in the area and lived by fishing and hunting. Ku-ring-gai Chase means Smoky fog which can be seen in the morning over the water source. Though the aboriginal names are retained in every town of Australia, now the aboriginals are rarely seen in these areas. The white migrants, of late Chinese and Indians, took over those places. Everywhere one can see more Chinese than any other community, particularly in Sydney.
****
Here is a description by the tourist authority of the area.
Located in the west of Ku-ring-gai Chase National Park, Bobbin Head is a large area offering lots of attractions and facilities. As well as being a great place to bushwalk, paddle or go fishing, Bobbin Head is the perfect waterfront picnic spot.
The area features barbecues, picnic tables, shelters and plenty of green space for an impromptu frisbee session or a spot of cricket. There’s also a children’s playground that’s sure to be a hit with kids and you can pick up a coffee at the Bobbin Head Inn Café or tuck into some contemporary Australian cuisine at Waterside Bistro.
Visit Empire Marina Bobbin Head to enjoy a coffee or leisurely meal by the water, or follow any of the number of walking tracks and collect maps and brochures from Bobbin Head Visitor Centre. Stroll the mangrove boardwalk behind the picnic area and see if you can spot some of the park’s many birds.
You can also learn more about connecting to Country at Bobbin Head through video stories which share our Aboriginal cultural heritage and the importance of protecting the natural environment in Ku-ring-gai Chase National Park.
****
Yesterday went to Merry lands Central Gardens which has animals, pythons, bandicoots, owls etc in cages. There is plenty of space for children to run around.
Places like Sydney and its suburbs have a park in almost all streets. Parents encourage their children to do outdoor activities. No wonder Australia is in top places in Olympics and Cricket.
—subham—
Tags- Merry lands, Central Gardens, Bobin head, boating
Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கானகம் சென்ற சீதையும், கணவனை இழந்த கண்ணகியும் சன்யாசிகளுக்கு அன்னமிடும் அறிய வாய்ப்பினை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுவதை கம்பனும் இளங்கோவும் பாடிச் சென்றனர்
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
(கொலைக்களக் காதை, சிலப்பதிகாரம், இளங்கோ)
ஆண்டாளும் இதே தொனியில் திருப்பாவையில் சந்யாசிகள் வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகிறார் :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
ஐயம் பிச்சை வேறுபாடு
ஐயம் என்பது தமிழ்ச் சொல்
பிச்சை என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.
ஐயம் என்பது நாமாக விருந்தினர்கள் மற்றும் சன்யாசிகளுக்குப் படைக்கும் உணவு ; அதாவது அவர்களை அழைத்து உணவிடுதல்.
பிக்ஷை என்பது வீட்டு வாசலில் வந்து பவதி பிக்ஷாம் தேஹி என்று கேட்போருக்கு இடும் உணவாகும் இதிலிருந்தது வந்த சொல்லே பிக்ஷு, பிக்ஷாவந்தனம்
மனு ஸ்ம்ருதியில் மூன்று ஜாதியினரும் பூணூல் போட்டுக்கொண்டவுடன் எப்படி வீட்டு வாசலில் நின்று பிக்ஷை கேட்கவேண்டும் என்று எழுதியிருக்கிறார் . பிராமணர்கள் , க்ஷத்ரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று ஜாதியினரும் பெர்முடேஷன் காம்பினேஷனில் permutation combination சொல்லவேண்டும் என்று விதித்திருக்கிறார் பவதி , பிக்ஷாம் தேஹி என்ற மூன்று சொற்களையும் வெவ்வேறு ஆர்டரில் சொல்லவேண்டும்
ஆக வீட்டு வாசலில் வந்து அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்று தற்காலத்தில் கேட்போரும் இந்த வகையினர்தான் .
நான் சிறுபயனாக இருந்தபோது மதுரையில் வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இப்படி எங்கள் வீட்டுக்கு வந்து குரல் எழுப்பியதை நானே பார்த்து இருக்கிறேன்; ராமேஸ்வரம் வேத பாடசாலையிலும் சேதுபதி உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்த வேத பாடசாலையிலும் தானப்ப முதலீத் தெரு வேத பாடசாலையிலும் மாணவர்கள் வேதம் படித்தார்கள்; இவை தவிர மதுரை பெருமாள் கோவில் அருகிலும் வேத பாடசாலை இருந்தது திராவிட ஆட்சி வந்த பின்னர் இந்த வேத பாடசாலைகள் மூடப்பட்டன. திராவிட ஆட்சி மட்டும் காரணமல்ல; பிராமணர்களின் உதாசீனமும் மனப் போக்கு இதற்கு காரணங்கள் ஆகும் .
****
திருப்பாவையில் சந்யாசிகள் வருணனை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.-14
பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
காஷாய வஸ்திரத்தை — காவி உடையை — சந்யாசிகள் அணிவார்கள்; செங்கல்லைப்பொடி செய்து வெள்ளை வேட்டியை அதில் நனைத்து காவி உடையைத் தயாரித்ததை ஆண்டாள் பாடுகிறாள். அது மட்டுமல்லாமல் வெண் பல் என்ற சொல்லையும் சேர்க்கிறான் ; ஏனெனில் சந்யாசிகள் வெற்றிலை பாக்கு போடமாட்டார்கள்; தூய சாத்வீக உணவையே உட்கொள்வார்கள் இதனால் அவர்களுக்கு வெள்ளை பற்கள் ; சமண சந்யாசிகள் பல் தேய்க்க மாட்டார்கள் இதனால் அவர்களை ஊத்தை வாய் சமணர்கள் என்னு சம்பந்தர் திட்டுவதைக் காண்கிறோம். புத்த சந்யாசிகள் மற்றவர்கள் கொன்ற மிருகங்களை சாப்பிடுவார்கள் ; அவர்களும், நாற்ற வாயர்களே ; இந்து சந்யாசிகள் வெள்ளைப் பற்களை உடையவர்கள் என்பதை ஆண்டாள் வேறுபடுத்திக் காட்டுகிறாள்.
அந்தக் காலத்தில் கோயில்கள் இருந்ததையும் அங்கு அதிகாலையில் சங்கு முழக்கம் எழுந்ததையும் ஆண்டாள் குறிப்பிடுகிறார் அவருக்கு முன்னர் வாழந்த அப்பர் பெருமான் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன என்பதையும் பாடலில் பாடியிருக்கிறார்.
தவத்தவர் என்ற ஆண்டாள் சொல்லையும் கவனிக்க வேண்டும் அவர்களுடைய ஒரே நிதி – செல்வம் – தபோ நிதி ஆகும்
தபஸ் = தவம்
ப = வ மொழியியல் குறிப்பையும் கவனிக்கவும்.
முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலிலும் கல் தோய்ந்து உடுத்த படிவ பார்ப்பான் என்ற வரி உண்டு .
*****
உபநிஷத் வரிகள்
ஆண்டாளுக்கு உபநிஷத்தும் அத்துப்படி .
ஆண்டாளும் திருவள்ளுவரும் உபநிஷத்துக்களைப் படித்து அதில் கரை கண்டவர்கள் .
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்—.குறள் 360:
இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர், ஞான யோகங்கள் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் தூசு போலுமாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்று நாமம் கெட என்கிறார் .
இதை ஆண்டாளும்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
நெருப்பிலிட்ட பஞ்சு போல என்ற சொற்றோடர் உபநிஷத்தில் வருகிறது
ஆகையால் நெருப்பிலிடப்பட்ட த்ருண/ புல் விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய சமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன என்பது சாந்தோக்ய உபநிடதம் 5-24-3 என்று ஒரு திருப்பாவை உரை கூறும்.
3. Just as the cotton fibres of the iṣīkā grass are totally consumed when thrown into the fire, similarly all sins are consumed of one who performs the Agnihotra sacrifice with the knowledge of the Vaiśvānara Self.
*****
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்
சந்திரனும் சூரியனும் உதித்தாற்போல அழகிய திருக்கண்கள் இரண்டினால் எங்களை ஆசீர்வதிப்பாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்; இது பாவங்கள் அனைத்தையும் பொசுக்கிவிடும்.
இப்படி சந்திர சூரியர்களை இறைவனின் கண்களாக வருணிப்பதை ரிக் வேதம் முதல, விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை ரிஷி முனிவர்கள் பாடுகிறார்கள்
चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत ।
मुखादिन्द्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत ॥१३॥
Candramā ṃanaso Jātaś-Cakssoh Sūryo ājāyata |
ṃukhād-īndraś-Ca-āgniś-Ca Prānnād-Vāyur-ājāyata
||13||
The moon was born from his mind and the sun was born from his eyes, Indra and
agni (fire) were born from his mouth, and vayu (wind) was born from his breath.
சந்த்ரமா மன॑ஸோ ஜா॒த: । சக்ஷோர் ஸூர்யோ॑ அஜாயத ।
முகா॒²தி³ன்த்³ர॑ஶ்சா॒க்³னிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ॥ என்பது ரிக்வேத புருஷ சூக்த வரிகள்
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.
*****
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)
இதற்கு முந்தைய பாசுரங்களில் பெண்ணின் தூக்கத்தினைப் பலவகையாக வருணித்த ஆண்டாள் இறுதியில் இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? என்று வினவி, தட்டி எழுப்புகிறாள்; இதற்கு உரை எழுதிய பெரியோர்கள் இது தினசரி உறக்கம் பற்றியதல்ல; அறியாமை என்னும் இருளில் உறங்கும் ஆத்மாவைத் தட்டி எழுப்பும் வாசகம் இது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்
Uthishtata, Jagrata, Prapya Varanibodhata” is a sloka from the Katha Upanishad that translates to “Arise, awake, and stop not till the goal is reached”. Swami Vivekananda popularized the slogan in the late 19th century as a message to people to break free from their hypnotized state of mind
சுவாமி விவேகானந்தருக்குப் பிடித்த உத்திஷ்ட ஜாக்கிரத ப்ராப்யவரான் நிபோதாத என்ற கடோபநிஷத்தின் எதிரொலி இது
எழுந்திரு விழித்திரு (எழுமின் விழிமின் ) குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ 1-3-14 ॥
1-3-14. Arise, awake; having reached the great, learn; the edge of a razor is sharp and impassable; that path, the intelligent say, is hard to go by.
ஆண்டாள் திருப்பாவை இடைச்சியருக்குப் பாடிய சாதாரணப் பாடல்கள் அல்ல. அவர் பிறவி ஞானி என்பதால் தத்துவ முத்துக்களை உதிர்த்து இருக்கிறார்; அவரவர் அறிவின் நிலைக்கேற்ப அதன் பொருளை உய்த்துணரலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
kalkionline-ல் 23-12-24 அன்று பிரசுரமாகியுள்ள கட்டுரை
மஹாபாரத மர்மம்
மங்கையரே, உங்கள் அழகுக்கு மெருகூட்டிக் கொள்ளுங்கள்!
ச.நாகராஜன்
16 வித அலங்காரங்கள்
புராதனமான ஹிந்து சாஸ்திரங்கள் ஒவ்வொரு மங்கையும் பேரழகியாகத் திகழ வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் தங்கள் இயல்பான அழகுக்கு மெருகூட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றன.
இது அவர்களின் ஆடம்பரத்திற்காக அல்ல என்றும் கணவர், தந்தை தாய், சுற்றத்தார், உறவினர் ஆகியோருக்காக மட்டுமல்ல என்றும் இது ஒரு சமுதாயக் கடமை என்றும் கூறுகின்றன.
அழகிய தேவதைகள் போல ஒவ்வொரு நாரீமணியும் உலகில் வலம் வந்தால் தேசம் செழிக்கும்.
ஆக இதற்காக 16 விதமான அலங்காரங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுவதியும் இவற்றை அறிந்து தனது அழகை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.
16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.
அவையாவன:
1) ஸ்நானம்
2) அழகிய ஆடை
3) திலகம்
4) கண்ணுக்கு மை
5) காதணி
6) மூக்குத்தி
7) கூந்தல் அலங்காரம்
8) ரவிக்கை (மார்க்கச்சு)
9) சிலம்பணி (நூபுரம்)
10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)
11) வளையல்
12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)
13) மேகலை
14) தாம்பூலம்
15) மோதிரம்
16) அலங்காரம் செய்யும் திறமை
இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.
இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.
எது அழகு?
எது க்ஷணத்திற்கு க்ஷணம் நூதனமான புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அதுவே அழகு. அந்த உருவமே அழகிய உருவமாகும். ரமணீயம் என்பதை இப்படி விவரிக்கிறது சிசுபாலவதம்.
க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயம்
– சிசுபாலவதம் 4-17
புதுப் புது விதமாக அழகுற
ஜொலிக்கும் ஒரு மங்கைக்கு எத்தனை உருவம் இருக்கும்? சொல்ல முடியாத அளவு எல்லையற்றதாக இருக்கும்.
அழகுற கிளியோபாட்ராவை தன் கதாபாத்திரமான எனோபார்பஸ் மூலம் வர்ணிக்கும் ஷேக்ஸ்பியர் கூறியதை இங்கு நினைவு கூறலாம்.
Age cannot wither her, nor custom stale Her infinite variety:
(Antony and Cleopatra)
அற்புதமான சொற்றொடர் இன்ஃபைனட் வெரைடி!
காலம் ஒருநாளும் அவள் அழகை அழிக்க முடியாது; அவளது அழகு முடிவற்ற வடிவங்களை எடுக்கக் கூடியது என்பதே இதன் திரண்ட பொருள்..
திரௌபதியின் பேரழகு
பாரதத்தில் கவிஞர்களால் இயற்றப்பட்ட காவியங்களில் வரும் கதாநாயகிகளை வர்ணிக்கும் கவிஞர்கள் நிச்சயமாக 16 வித அலங்காரங்களையும் மனதில் கொண்டே அவர்களை வர்ணிப்பர்.
எடுத்துக்காட்டாக திரௌபதி பற்றிய மஹாபாரத வர்ணனையையும் காலவரிடம் தரப்பட்ட யயாதியின் கன்னிப் பெண் மாதவியைப் பற்றிய வர்ணனையையும் இங்கு காணலாம். அழகிய உத்தமமான ஒரு மங்கை எப்படி இருப்பாள் என்பதற்கான இலக்கணமாக இதைக் கொண்டு ஒவ்வொரு மங்கையும் தன்னை செம்மையுற அழகு படுத்திக் கொள்ளலாம் இல்லையா?
விராட தேசத்தில் மாறு வேடத்தில் ஸைரந்தரியாக மாறி அங்கு விராடனுடைய மனைவியான ராணி ஸுதேக்ஷ்ணைக்கு முன் வந்த திரௌபதியைப் பார்த்த அவள் அசந்து போகிறாள்.
அவள் அழகை வர்ணிக்கிறாள்:
“நீ யார்? நீண்டும் குறுகியும் இல்லாத மறைந்திருக்கும் கணுக்கால்களையும், சமமான இரண்டு தொடைகளையும், சப்தம், புத்தி, நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளும் மூக்கு, இரண்டு கண்கள், காது, நகங்கள், மார்பகங்கள், பிடரி ஆகிய ஆறு அங்கங்களில் உன்னதமாய் இருப்பவளும், சிவந்திருக்கும் உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், உதடு, நாக்கு, நகம் ஆகிய ஐந்தில் பளபளப்புள்ளவைகளும் ஹம்ஸம் போல சுத்த ஸ்வரத்துடன் பேசுபவளும் அழகிய கூந்தலையும், குரலையும் உடையவளும், இளமைப் பருவத்தின் மத்தியில் இருப்பவளும், பருத்திருக்கின்ற மார்பகங்களைக் கொண்டவளும், குடிலமான இமை மயிர்களும் கண்களையும் கொண்டவளும் கோவைப்பழம் போன்ற உதட்டை உடையவளும் மெலிந்த இடை, சங்கு போன்ற கழுத்து, மறைந்திருக்கும் நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டவளுமான நீ யார்?
இப்படி அவள் கேட்கும் போது திரௌபதியின் சௌந்தரியத்தை நம்மால் அறிய முடிகிறது.
மாதவியின் அழகு
அடுத்து விஸ்வாமித்திரயர் அற்புதமான குதிரைகளைக் காலவரிடம் குரு தக்ஷிணையாக் கேட்க அவர், யயாதி மன்னனிடம் வந்து அவற்றைக் கேட்கிறார். யயாதி தன்னால் அதைக் கொடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி தனது புதல்வி மாதவியைத் தருகிறான். மாதவியை அழைத்துக் கொண்டு சென்ற காலவர் அயோத்தி அரசனான ஹர்யஸ்வன் என்ற அரசனை அடைந்து குதிரைகளைக் கேட்கிறார். மாதவியைப் புத்திர வம்சம் பெற அவனுக்கு மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறார்.
பேரழகி மாதவியைப் பார்த்த அரசன் பிரமித்துப் போகிறான்.
அவளை வர்ணிக்கிறான்:
“இவள் ஆறு அங்கங்களில் உன்னதமாக இருக்கிறாள். பின் தட்டு, நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயரமாய் உள்ளன.
சூட்சுமமாக இருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சூட்சுமமாக இருக்கிறாள்.விரல்களுடைய கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் சூட்சுமமாய் உள்ளன.
கம்பீரமாக இருக்க வேண்டிய மூன்று அங்கங்களில் கம்பீரமாக இருக்கிறாள்.குரல், மனம், நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளாய் உள்ளாள்.
சிவந்திருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சிவந்தவளாய் இருக்கிறாள். உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இரண்டு கடைக்கண்கள் , நகங்கள் ஆகியவற்றில் சிறந்து உள்ளாள்.”
இவளை ஏற்றுக் கொள்ள என்ன தர வேண்டும் என்று கேட்டு அவளைப் பெறுகிறான்.
இப்படி ஒவ்வொரு காவியமும் அழகிய பெண்களின் அங்கங்களை வர்ணிக்கிறது! அவர்களின் குண லட்சணங்களையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த அங்க லட்சணங்களை இப்போது அறிவியலும் ஆமோதிக்கிறது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல பயாலஜிஸ்ட் ராபின் பேகர், “உடலின் சரியான அளவு விகிதம் லேசாக ஒதுக்கி விட முடியாதபடி அதிக அர்த்தமுள்ளது” என்கிறார்!
மனித நடத்தைகள் பற்றி சில வருடங்களுக்கு முன்பு வியன்னாவில் நடந்த மாநாட்டில் பேசிய போது அவர் சாமுத்ரிகா லட்சணம் சரியாக அமையப் பெற்றால் ஏற்படும் நலன்களை விவரித்தார்.
அவை நமது இதிஹாஸ அழகிகளின் அங்க வர்ணனையை ஆமோதிக்கின்றன.
ஆக பெண்ணாய் பிறந்த ஒவ்வொரு மங்கையும் சௌந்தர்ய சாஸ்திரத்தை நன்கு கற்று அது கூறும் வழிமுறைகளைக் கையாண்டு பேரழகிகளாகத் திகழ வேண்டும். சிறு சிறு வேறுபாடுகள் அங்கத்தில் இருந்தாலும் அவற்றை மெருகூட்டி அழகாக்கி உன்னத வாழ்க்கையை வாழலாம்!
வாழ்த்துவோம் நம் நாரீமணிகளை!
***
குறிப்பு : திரௌபதி அழகு – விராட பர்வம் 14ம் அத்தியாயம்