My Visit to Kiama Blowhole and Beaches in Shell Harbour, Australia (Post No.14,017)

Written by London Swaminathan

Post No. 14,017

Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan in Kiama, Australia

We went out of Sydney for a three day stay in Shell Cove. It is just less than three-hour drive from Sydney. Spacious guest houses are available there for rent. Seven beaches are in that area alone. We visited almost all beaches. Every beach has a park for little children and water sports for adults. In many beaches fishing is allowed.

Since it is summer time in Australia sun light is available until 8 pm. Restaurants are situated nearer to the beaches. But all the prices, particularly food prices, are expensive. Even coffee is more expensive than London.

One big advantage is availability of cheaper petrol. One litre is 1-75 to 1-80 Australian dollar. (£1= 2 AUD)

****

What is Kiama Blowhole?

The Kiama Blowhole is a blowhole in the town of KiamaNew South WalesAustralia. The name ‘Kiama’ has long been translated as “where the sea makes a noise”. Sea water gushes out through a hole in the rock.

Kiama’s famous Blowhole is the largest in the world, and when the swell is running from the southeast, you’re in for a real treat. The 2.5 metres opening in the rock face has had its plumes of water recorded at heights of over 30 metres!

With multiple accessible viewing platforms, the blowhole can be seen from multiple vantage points.

When it’s really blowing, you can hear an impressive whoosh sound and often feel the spray of the ocean. Don’t miss a visit to the Little Blowhole, which is more consistent than the big blowhole and equally stunning to observe. Their foundations were formed from volcanic lava flows about 260 million years ago (that’s 100 million years before the dinosaurs). Eventually it was the ocean’s power that created what we see today – eroding the softer strata rock to create the vertical blowhole.

The best time to visit Kiama Blowhole in New South Wales, Australia is during high tide and when there is a south-east swell, typically in spring and autumn: 

  • Tides: High tide increases the chances of seeing impressive water sprays and eruptions. 
  • Swell: A south-east swell is ideal for seeing the blowhole in all its glory. 
  • Time of day: Visit during sunrise or sunset to see the coastal scenery in a golden light.

By googling high tide time, you may plan your visit.

This landmark has attracted people to the region for over 100 years, and the first sightings were recorded by George Bass when he anchored his whaleboat in the sheltered bay, now known as Kiama Harbour, in December 1797. It is now estimated to attract 900,000 visitors each year.

There is a light house, adding beauty to the beach.

The distance between Sydney and Kiama blowhole is 125 kms.

Most of the beaches and tourist attractions are free. Only attractions in big cities have entrance charge and car parking charges.

The beaches are well maintained and clean. Dogs are banned from many beaches but people violate the rules and bring their dogs.

–subham—

Tags- Kiama blowhole, My visit, beaches, Shell cove

ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 4 (Post No.14,016)

Written by London Swaminathan

Post No. 14,016

Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாள் காலத்தை ஏழாம் நூற்றாண்டு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இணைய தளங்களிலும் நூல்களிலும் எழுதியிருப்பதைக் காணலாம். மு.ராகவையங்கார் என்பவர் அந்தக் காலத்தில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில்  9-ஆம் நூற்றாண்டு என்று நிரூபித்தார். ஆயினும் ஆண்டாள் மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் காலத்திய பாண்டிய மன்னர் யார் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆக, இந்த இரண்டு குழப்பங்களும் நீடிக்கின்றன.

எப்படிக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் என்ற வரி சிலப்பதிகார மன்னர் காலம் பற்றிய புதிருக்கு விடை கண்டதோ அதே போல ஆண்டாளும் ஒரு வரியைத் திருப்பாவையில் பாடியதால் அவரை  இரு நூறு அல்லது முன்னூறு ஆண்டு வட்டத்துக்குள் வைக்க முடிகிறது .

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13

ஆண்டாள் மிகப்பெரிய அறிஞர். அவருக்கு A to Z (Astronomy to Zoology) அஸ்ட்ரானாமி /வானவியல் முதல் சூவாஜி என்னும் விலங்கியல் வரை எல்லாம் தெரியும்; அவைகளை பாடலிலும் பாடியிருப்பதால் அவரது பேரறிவினை நாம் மெச்ச முடிகிறது. சிங்கம் பற்றி அவர் பாடியது அவருடைய விலங்கியல் அறிவினைக் காட்டுகிறது; நகைகள் மற்றும் திருமண முறை பற்றி வரிசைக் கிரமத்தில் நாச்சியார் திருமொழியில் பாடி இருப்பதால் அவருடைய உலகியல் அறிவினை நாம் அறிய முடிகிறது மார்கழி பற்றி நான்குத் திருப்பாவைப் பாடல்களில் பாடியிருப்பதால் அவருடை கால ஞானத்தை Time Sense நாம் அறிகிறோம். தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி மழை பெய்ய வேண்டுவதால் அவரது தேசபக்கத்தியையும் லோகா சமஸ்தா சுகினோ பயந்து என்ற நல்ல ஞானிகளின் குணத்தையும் காண முடிகிறது.  அவள் டீன் ஏஜ் கேர்ள் Teen Age Girl  அல்ல. சம்பந்தர் போல பிறவி ஞானி .

வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER  என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம்.  இந்த இரண்டையும் வானத்தில்  காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார்  உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை  300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

(Reference 1- திருப்பாவை பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடார் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் முகவை ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்துள்ளார். தமது ஆய்வு முடிவுகளை ‘ஆழ்வார்கள் கால நிலை‘ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.)

(Reference 2 ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.)

*****

ஆயினும் எவரும், மொழியியல் ரீதியில் (Linguistic approach) அவரை அணுகவில்லை ; இதற்கு அதிக மொழியியல் ஞானம் தேவை. அதாவது ஒரு மொழி வளர்ந்து கொண்டே இருக்கும்; இப்பொழுது கபிலர் பாடலையும் கம்பன் பாடலையும் கண்ணதாசன் பாடலையும் ஒரு தமிழ் தெரிந்த தமிழனிடம் கொடுத்தால், அவைகளை எளிதில் கால வரிசைப்படுத்திவிடுவான். இதே போல ஆண்டாள் பாடலையும் கம்பன் பாடலையும் அருகருகே வைத்தால் சொற்களைக் கொண்டும், பாடலின் யாப்பு இலக்கணத்தைக் கொண்டும் அவர் சொல்லும் கருத்தினைக் கொண்டும் காலத்தைக் கண்டு பிடிக்கலாம்.

ஆண்டாளைப் போல திருவெம்பாவை பாடிய மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிரும் தீர்ந்தபாடில்லை. காளிதாசனை அறிஞர்கள்    எழுநூறு ஆண்டு வட்டத்தில் வைக்கின்றனர். இந்திய வரலாறு புதிர்கள் நிறைந்தது; மாணிக்க வாசகர்  நால்வரில் முதலாமவர் என்று நான் என்னுடைய ஆராய்ச்சியில் காட்டியுள்ளேன். அவர் கணபதி பற்றியோ, லிங்கம் பற்றியோ பாடவில்லை. அதே போல . காளிதாசநும் கணபதி பற்றிப் பாடவில்லை இது போன்ற குறிப்புகளும் பாடல் நடையும் ஒரு வகையில் காலத்தைக் கணிக்க உதவும்.

ஆண்டாளும் பறை , தட்டொளி, ஆந்தனை, உக்கம் போன்ற பல புதிய சொற்களைக் கையாள்கிறார்.

திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதால் ஆண்டாளைக் காலத்தால் முந்தியவர் என்றே நான் கருதுகிறேன். அதாவது, அவரை மாணிக்க வாசகருக்கு அருகில் வைக்கவேண்டும் ஆறாவது ஏழாவது நூற்றாண்டு என்றே கருத வேண்டும்.

மேலை நாடுகளில் கவிஞர்களின் சொற்களையும் பாடல்களையும்  கம்பியூட்டரில் கொடுத்து காலத்தைக் கணிக்கின்றனர். அதே போல ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டு நூல்களையும் கம்ப்யூட்டரில் கொடுத்து ஏனைய  நூல்களுடன் ஆராயலாம். இந்தத் துறையை தமிழ் பல்கலைக் கழகம் அல்லது னிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் செய்யலாம். கம்ப்யூட்டர் அறிவுடன் தமிழ் மொழி அறிவும் இருந்தால் சரியான முடிவுக்கு வரமுடியும்.  இவ்வாறு  கொடுக்காமலேயே திருப்பாவையையும் திருவெம்பாவையையும் ஒப்பிடுகையில் இருவரின் காலமும் அருகருகே இருப்பதை நான் காண்கிறேன் .

****

ஆண்டாள் போடும் இன்னுமொரு புதிர்

மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் ; மார்கழி என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு; இவைகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.

—subham—

Tags– ஆண்டாள் காலம் ,குழப்பம்,திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 4 , வியாழன், வெள்ளி, மாணிக்கவாசகர், திருவெம்பாவை

மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா-1 (Post No.14,015)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,015

Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களேதிரு கல்யாண்ஜி அவர்களேலண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவரான  திரு மகேந்ந்திரநாத் குப்தா அவர்களைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்..

பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார். ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.

அவர் எம் என்றே அனைவராலும் அறியப்பட்டார்; அறியப்படுகிறார்.

‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.

அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.

1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம்.

நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் ஆக எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார். அவரது தந்தையார் மதுசூதன் குப்தாவும் தாயார் ஸ்வர்ணமயி தேவியும் இயல்பாகவே தெய்வ பக்தி நிரம்ப உடைய எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மதுசூதன் குப்தா கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வேலை பார்த்து வந்தார்.

மகேந்திரநாதர் இளமையில் ஒரு பாடசாலையில் ஒரு குருவிடம் கல்வி கற்றார். பின்னர் ஒரு பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர் 1867ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் படிக்கும் போது அவருக்கு வயது 13. அப்போது முதல் அவர் டயரி எழுதுவதை தனது வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை. தானாக ஆரம்பித்தார் இந்த நற்பழக்கத்தை. இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்து அவர் 1882 பிப்ரவரி மாதம் 25ம் தேதி பரமஹம்ஸரைச் சந்தித்த போது தான் தெரிய வந்தது. தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.

இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது

கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் எம்  இரண்டாவதாக வந்தார். தனது எப்.ஏ தேர்வில் ஐந்தாவதாகவும் பி.ஏ. தேர்வில் மூன்றாவதாகவும் அவர் வந்தார். பின்னர் சட்டப்படிப்பை அவர் மேற்கொண்டார். அப்போது ஹிந்து சாஸ்திரங்களை சம்ஸ்கிருத மொழியிலேயே படித்துக் கரைத்துக் குடித்தார். அத்துடன் ஆங்கில இலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். இத்துடன் ஜைன மத, புத்த மத நூல்களைக் கற்றார். ஜோதிடத்தையும் ஆயுர்வேதத்தையும் கற்று அவற்றிலும் அவர் நிபுணரானார்.

தனது படிப்பை முடிக்கும் முன்பேயே அவர் வேலை பார்க்க நேர்ந்தது. அவர் முதலில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்தவர் பின் கல்வித் துறைக்குத் திரும்பினார். ஜெஸூர் மாவட்டத்தில் நரெய்ல் உயர்நிலைப் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்கத்தா திரும்பி வந்து அங்கு பல பள்ளிகளிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

1873ஆம் ஆண்டு பி. ஏ. படிக்கும் போது அவர் நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை மணந்தார்.

காலம் வேகமாகச் செல்லும் போது அவரது குடும்பத்தில் ஏராளமான சண்டைகள் நிகழ்ந்தன. இதனால் மிகவும் மன உளைச்சலை அடைந்த எம் வீட்டை விட்டுப் புறப்படத் தயார் ஆனார். அவரைப் புரிந்து கொண்ட அவரது மனைவியும் கூட வரத் தயார் ஆனார். அது ஒரு சனிக்கிழமை.இரவு ஒரு வாடகை வண்டியைப் பிடித்து அவர்கள் செல்லும் போது வண்டியின் ஒரு சக்கரம் முறிந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் அவர் அடைக்கலம் புக நேர்ந்தது. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்தக்காரரான சித்தேஸ்வரனுடன் ஒவ்வொரு பூங்காவாக அவர் செல்ல ஆரம்பித்தார். பல பூங்காக்களில் அலைந்து திரிந்த போது சித்தேஸ்வரன், “இன்னும் ஒரு பூங்கா நதிக்கரையில் இருக்கிறது., அங்கே ஒரு பரமஹம்ஸர் இருக்கிறார். அங்கே போவோமா? என்று கேட்க இருவரும் அங்கு சென்றனர்.

கங்கைக் கரைத் தோட்டம். ரோஜா மலர்களின் கூட்டம். மகேந்திரநாதர் மெய் சிலிர்த்தார். பரமஹம்ஸரின் அறைக்கு வெளியே சென்று நின்றார். பின்னர் உள்ளே நுழைந்த போது, ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,”ஹரி அல்லது ராமா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்க வேண்டும்.  நீங்கள் சந்தியா உள்ளிட்ட எந்த சடங்குகளையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த எம் இவரே சுகதேவர் என்று நிச்சயித்தார். அன்புடன் பரமஹம்ஸர் அவரை யார் என்று விசாரித்தார்.

அன்று முதல் பரமஹம்ஸரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ‘எம்’மால். ஒரு வாரத்திலேயே அவர் பரமஹம்ஸரின் அணுக்கத் தொண்டராக ஆகி விட்டார்.

ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.

பரமஹம்ஸருடன் சந்திப்பு

1882ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக அவர் தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்தித்தார். இதற்குச் சில மாதங்கள் முன்னரேயே நரேந்திரன், அதாவது ஸ்வாமி விவேகானந்தர் பரமஹம்ஸரிடம் வந்து விட்டார்.

விவேகானந்தர் கூறும் ஒரு சம்பவம் இது:

ஒரு நாள் அவர் பரமஹம்ஸருடன் தக்ஷிணேஸ்வரத்தில் இரவில் தங்கி இருந்தார். பஞ்சவடியில் அவர் அமர்ந்திருந்த போது திடீரென்று பரமஹம்ஸர் அவரிடம் வந்தார். சிரித்துக் கொண்டே அவரது கையை பிடித்துக் கொண்டார். பிறகு அவரைப் பார்த்து, “உனது புத்திகூர்மையும் கற்ற விஷயங்களும் இன்று சோதனைக்குள்ளாகப் போகிறது. நீ இரண்டரை தேர்வுகளைத் தான் பாஸ் செய்திருக்கிறாய். மூன்றரை தேர்வுகளைப் பார்த்த ஒரு ஆசிரியர் இங்கு வந்திருக்கிறார். வா, பார்ப்போம், அவருடனான உரையாடலில் நீ எந்த அளவு இருக்கிறாய் என்று பார்ப்போம்” என்றார்.

விருப்பத்துடனேயோ அல்லது விருப்பமில்லாமலோ விவேகானந்தர் அவருடன் செல்ல வேண்டி இருந்தது.

 to be continued…………………………..

Sri Venkateswara Temple at Helensburgh, Australia (Post No.14,014)

Written by London Swaminathan

Post No. 14,014

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

My Visit to Sri Venkateswara Temple at Helensburgh, New South Wales, Australia

This temple is one hour drive from Sydney. 58 min (54.7 km) via Princes Hwy/A1 and M1

We went to the temple on 23-12-2024 and had good Darshan of Lord Shiva and Lord Vishnu in two shrines adjacent to each other. Temple is well maintained; photography inside the temple is not allowed which is very good; all temples must follow this. Siva has goddess Tripurasundari in the nearby shrine ,so do Vishnu has Mahalakshmi near by. All Hindu Gods from Ganesh to Hanuman, Skanda/Muruga are worshipped. We saw six priests serving the devotees with Vibhuti, Kunkum and Theertham (holy water). They welcomed everyone. Behind the temple was a canteen run by the temple. We paid and got Curd rice, Samaosa and vegetable rolls. All soft drinks such as rose milk, mango lassi coffee tea etc. are available. Spacious car park is there. We saw constant flow of devotees that included Tamils, North Indians, Nepalis, few white people. 100 percent recommended. People in our group put money in the Hundi/money box.

Main shrines have Shiva in Linga form and Vishnu in Tirupati Balaji form.

(Free Prasadam was also kept in the outside Prakara (open corridor; we did not go there).

Special parking slot was there for Car Puja; I understand those who buy new cars come here and  do this puja with the help pf the temple priests.

We saw places to break coconuts like we have in all Ganesh temples in Tamil Nadu

Temple Address

1 Temple Road, Helensburgh, NSW, Australia, New South Wales

(02) 4214 9080

contactus@svtsydney.org

Three families in three cars with grandchildren visited the temple after a three day stay in Shell Cove (Shell Harbour). Three we hired a six bed room house with three bath rooms and plenty of space in kitchen, reception and garden.

The temple has got many sculptures showing Vishnu Avatars and Shiva leelas; it gives good opportunity to children to learn more about Hindu mythology. Navagraha (Nine Heavenly Bodies) shrine described the significance of those on the walls nearby. 63 Nayanmar statues, Nalvar statues are also there. My grandchildren asked questions about all the big statues. so it is good to go with enough information and stories for children.

Temple authorities also can produce small brochures to explain statues all briefly.

 *******

Another Place to visit

Nan Tien Buddha Temple

When one goes to see Venkateswara Temple, it is better to include Nan Tien Buddhist temple with huge temple complex and beautiful and colorful Buddha states. During my Australian visit ten years ago, we went there. Since it is closed on Mondays we could not visit it on 23rd December, 2024. Better to check the opening hours of all places you visit before you travel. Good Vegetarian meal is sold there in the huge canteen. It is approximately 90 Kms from Sydney.

1h 24m (89.4 km)

via Princes Hwy/A1 and M1

-subham—

Tags- My visit, Venkateswara Temple, Helensburg, Australia

ஆண்டாளும் மொழியியலும்;  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் -3 (Post.14,013)

Written by London Swaminathan

Post No. 14,013

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்!-3

முந்தைய கட்டுரைகள் 

ஆண்டாளும் நகைகளும் -1

பறை என்றால் என்ன ?- 2

ஆண்டாளும் ஏனைய ஆழ்வார்களும் பல சொற்களையும் பெயர்களையும் மொழியியல் ரீதியில் மாற்றி எழுதியுள்ளனர். இந்த ஸ்பெல்லிங் மாற்றங்கள், சந்தி/ புணர்ச்சி விதிகள் ஸம்ஸ்க்ருதத்தைப் போன்ற விதிகளைப் பின்பற்றுகின்றன. உலகிலேயே  இன்றுவரை புணர்ச்சி வீதிகளுடன் வாக்கியங்களை எழுதும் முறை சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ளதால் இந்த இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியன தனிப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றனவோ  அது போல தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தனிப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்திய மொழிகள் அகர வரிசையிலும் (alphabetical order) , அகராதி அமைப்பிலும் (dictionary), வாக்கிய அமைப்பிலும் (Sentence Construction) கிட்டட்டத்தட்ட ஒரே அமைப்பினை உடையன. உலகிலேயே  மிகப்பெரிய நாடுகளில் ஒன்று என்பதாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை உடையதாலும் அதிக ஜனத்தொகை உடையதாலும் வெளிநாட்டுப்படையெடுப்புகளாலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகில் பல மொழிகளும் நம்முடைய விதிகளைப் பின்பற்றுவது இந்துக்களின் குடியேற்ற வழிகளைக் காட்டுகின்றன. நாம் பரப்பிய பண்பாட்டின் எச்ச சொச்சங்களை அங்கே காண முடிகிறது. உலகில் பழைய மொழிகளில் சம்ஸ்க்ருதம் ஒன்றில் மட்டுமே ‘ஜ’ என்னும் எழுத்து உள்ளது . இது எப்படி ‘ய’ ஆக மாறுகிறது என்பதைக் கண்டால் இந்துக்களின் செல்வாக்கு பரவிய இடங்களை எளிதில் அறியலாம்.

****

இப்பொழுது ஆண்டாள் லிங்குஸ்டிக்ஸ் — மொழியியல் பற்றிக் காண்போம்

சம்ஸ்க்ருதத்தில்  என்ற ஒலியில் முடியும் சொற்களைத் தமிழ்ப் படுத்தும்போது ஐ என்ற ஒலியில் முடிப்போம் :

பகவத் கீதா – கீதை

சீதா – சீதை

கோதா – கோதை

கோதா என்ற சொல் ரிக் வேதத்திலேயே 1-4-2 இருக்கிறது

மாலா – மாலை; ராதா = ராதை

****

விஷ்ணுசித்தர் /ன் என்பது பெரியாழ்வாரின் பெயர்

விஷ்ணுசித்தர் /ன்= விட்டுசித்தன்

ஷ்ணு= ட்டு

பூனை என்ற விலங்கினைக் குறிக்க சங்க இலக்கியம் முழுதும் பூசை என்றுதான் எழுதுவார்கள் ;

வண்டி என்பதைச் சொல்ல பாண்டில் என்றுதான் எழுதினார்கள்.

கம்சன் = கஞ்சன்

ஆழ்வார்பாடல்களில் கஞ்சன் என்றே காண்கிறோம்

ம்ச= ஞ்ச M=N

******

திருப்பாவை 4

ழிமழைக் கண்ணா …….

பாழியன்தோளுடைப் பற்பநாபன் கையில் ;

பத்மநாபன் =  பற்பநாபன்

உத்சவம் = உற்சவம்

த் = ர்/ ற் T/ D= R

*****

திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

பாற்கடலுள்= பால் கடலுள்

ற்= ல் R=L

நாட்காலே = நாள் காலை

ட் = ள் D= L

கிரிசைகள்= கிரியைகள்

சை = யை

****

கலுழன் = கருடன்

ஆழ்வார் பாடல்களில் இந்தச் சொல்லைக் காண்கிறோம் .

மாயோன் மேய காடுறையுலகமும்  – என்ற தொல்காப்பிய வரிக்கு எழுதிய உரைகளிலும் முல்லை நிலப் பறவை கருடன் என்பதைச் சொல்லும்போது இப்படித் தமிழ்ப் படுத்தியுள்ளனர் .

லுழன் = கருடன் L=R

கலுன் = கருன் L=D

கலுழன் = கருடன்  GALUZAN=GARUDAN

****

ஆழ்வார்  பாடல்களில்  ஒடித்து என்பதை ஓசித்து என்று பாடி இருப்பதைக் காண்கிறோம்.

டி = சி D=S

சம்ஸ்க்ருத எழுத்துக்களை தமிழ்ப் படுத்தும் இடங்களில் இதை மேலும் காணலாம்

பாஷை = பாடை D=S

விஷயம் = விடயம் D=S

இந்த மாற்றங்கள் உலகெங்கிலும் காணப்படுகின்றன ; குறிப்பாக ஆர் =எல் = டி R=L=D மாற்றங்களையும் டி= எஸ் D=Sமாற்றங்களையும் காணலாம்

ஆங்கிலத்தில் டி T  என்பதை எஸ் S என்று உச்சகரிப்பதை நூற்றுக் கண கான சொற்களில் காண்கிறோம் TION=SION

*****

திருப்பாவை 10

துளசி = துழாய் Tulsi= Tuzaay

நாற்றத் துழாய்முடி நாராயணன் — என்ற வரி பத்தாவது பாடலில் வருகிறது

*****

இப்போது ஒரு கேள்வியை எழுப்புவோம்

தமிழர்களைப் பார்த்து இப்படி ஆங்கிலேயர்கள் செய்தார்களா  அல்லது ஆங்கிலேயர்களைப் பார்த்து தமிழர்கள் இப்படிச் செய்தார்களா ; இரண்டும் இல்லை.

மொழிகள் மாற்றாரின் செல்வாக்கு இல்லாமலேயே இப்படி மாறும் என்றே சொல்லவேண்டும் ;ஷன் SION என்பதை TION என்று ஆங்கிலேயர்கள் சொல்வது ஓசித்து = ஒடித்து என்பதைப் போன்றதே.

*****

Tulasī (तुलसी) refers to the “holy basil” துளசி என்பதை ஏன் துழாய் என்று தமிழுக்கே உரித்தான சிறப்பு  கரத்துடன் மாற்றினர் என்று புரியவில்லை; அதே போல கருடன் என்பதையும் ஏன் கலுழன் என்று கஷ்டப்படுத்தினர் (!!!)  என்றும் புரியவில்லை!

—subham—

Tags- ஆண்டாளும் மொழியியலும், லிங்குஸ்டிக்ஸ் , திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-3,

திருவலஞ்சுழி ! ஆலயம் அறிவோம்! (Post No.14,012)

Pictures by London Swaminathan

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

 Post No. 14,012

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024.            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-12-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

என்ன புண்ணியம் செய்தனை

   நெஞ்சமே, இருங்கடல் வையத்து

முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை

   முழு மணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி

   வாணனை வாயாரப்

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்

   வழிபடும் அதனாலே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 25வது தலமாக அமையும் திருவலஞ்சுழி தலமாகும்

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமிமலைக்குத் தெற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் தஞ்சாவூர் பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இறைவர் : கபர்தீசர், கற்பக நாகேஸ்வரர், வலஞ்சுழி நாதர்

இறைவி : பெரியநாயகி

ஸ்தல விநாயகர் : ஸ்வேத விநாயகர்

தீர்த்தம் : காவிரி, அரசலாறு மற்றும் ஜட தீர்த்தம்

தல விருட்சம் : அம்மன் சந்நிதியில் உள்ள வில்வமரம்

திருஞானசம்பந்தரால் மூன்று பதிகங்களாலும் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களாலும் பாடி பரவப்பட்ட இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அதில் கடும் விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபிரானைச் சரண் புக அவர் இந்தக் காரியத்தை விக்னேஸ்வரர் பூஜையின்றித் தொடங்கியதால் இப்படி ஏற்பட்டது என்று கூறி விக்னேஸ்வரரைத் துதிக்கச் சொன்னார். உடனே தேவர்கள் கடல் நுரையினால் ஒரு விநாயகரை உருவாக்கி அதற்கு பூஜை செய்தனர். பின்னர் பாற்கடலைக் கடைந்து பயனை அடைந்தனர். தேவேந்திரன் அந்த விநாயகரை தான் தினமும் பூஜை செய்வதற்காக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று வருகையில் இந்தத் தலத்தில் பூஜை செய்து விநாயகரை எடுக்க முயலும் போது அவனால் முடியவில்லை.

தேவேந்திரனை விநாயக சதுர்த்தி தோறும் இங்கு வந்து பூஜை செய்யுமாறு விநாயகர் அருள் பாலித்தார்.

கடல் நுரையினால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறார். ஆகவே இவர் ஸ்வேத விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். இவருக்கு அபிஷேகம் கிடையாது; ஆனால் பச்சைக் கற்பூரம் சார்த்தி வழிபாடு நடக்கிறது.

இந்த ஆலயத்தை தேவேந்திரன் ஆணையிட விஸ்வகர்மா அமைத்ததாக ஐதீகம் கூறுகிறது.

இந்தத் தலத்திற்கு சக்தி வனம், தக்ஷிணாவர்த்தம், திரிணாவர்த்தம் என்ற பெயர்களும் உண்டு.

இன்னொரு வரலாறு இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பை விளக்குகிறது.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளியே வரும் போது ஒரு பெரும் பள்ளம் பூமியில் ஏற்பட்டது. காவிரி நதி இந்த பில துவாரத்தில் இறங்கியது. இதைக் கண்ட சோழமன்னன் மனம் கலங்கினான். அப்போது வானில் ஒரு அசரீரி எழுந்தது. ஒரு மன்னனோ அல்லது முனிவரோ இந்த பள்ளத்தில் இறங்கி பலியிட்டுக் கொண்டால் பள்ளமானது மூடி பழைய நிலை ஏற்படும் என்று அந்த அசரீரி கூறவே அங்கு தவம் புரிந்து வந்த ஹேரண்ட முனிவர் என்பவர் தான் பலியாவதாக அரசனிடம் தெரிவித்தார். அப்படியே அவர் பள்ளத்தில் இறங்க பள்ளம் மூடியது. காவிரி மேலெழும்பி ஓட ஆரம்பித்தது.  காவிரி இந்தத் தலத்தை வலமாகச் சுற்றி ஓடியதால் இது திருவலஞ்சுழி என்ற பெயரைப் பெற்றது.

இக்கோவிலில் நாம் ஹேரண்ட முனிவரின் சிலையைக் காணலாம்.

இந்தப் பள்ளத்திலிருந்து எழுந்த ஆதிசேஷன் மஹா சிவராத்திரி அன்று நான்கு யாமத்திலும் நான்கு தலங்களுக்குச் சென்று வழிபட்டான். அந்தத் தலங்களில் இந்த திருவலஞ்சுழியும் ஒரு தலமாகும்.

இங்கு ஆவணி மாதம் 9ம் நாளன்று இந்திர பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இங்குள்ள ஆலயத்தில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் பின்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. அடுத்த கோபுர வாயிலில் கொடி மரமும் நந்தி  மண்டபமும் உள்ளன. அதன்பின் ஸ்வேத விநாயகர் சந்நிதி உள்ளது.  இங்குள்ள மண்டபம் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

வாயிலின் அருகே சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரே கல்லால் அமைந்த ஒரு கருங்கல் பலகணி உள்ளது. சுமார் 9 அடி உயரமும் 7 அடி அகலமும் உள்ள இந்த ஜன்னலில் 16 துளைகள் உள்ளன.

வடக்கில் அலங்கார மண்டபமும், அதை அடுத்து உள்ள சுற்றில் நிறைபணி மண்டபமும் உள்ளது.

தெற்கே மடப்பள்ளியும் வடக்கே உற்சவ மண்டபமும் உட்பிரகாரத்தில் தெற்கே லிங்கங்கள், நவசக்தி மூர்த்தங்களும் மேற்கில் வலஞ்சுழி விநாயகரையும் காணலாம். இங்கு நவ கிரகங்கள் இல்லை. ஆனால் சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி உள்ளது.

மூன்றாவது வெளி பிரகாரத்தில் தென்புறத்தில் அம்பிகையின் சந்நிதி உள்ளது. சதுர்புஜங்களுடன் அம்பிகை கம்பீரமாக வீற்றிருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.

ஆலயத்தில் ஏராளமான நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்துள்ள சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.

நக்கீரர் இயற்றிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்ற நூலாலும் பெரிய புராணம் மற்றும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களாலும் இந்தத் தலத்தின் பெருமையை அறியலாம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வலஞ்சுழி நாதரும் அம்பிகை பெரியநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி மக்லீன்!! (Post No.14,011)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,011

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 kalkionlineல் 9-12-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 

வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி மக்லீன்!! 

ச. நாகராஜன் 

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஷர்லீ மக்லீனுக்கு வயது 90. (பிறப்பு : 24 ஏப்ரல் 1934 வயது 90) இன்னும் ‘இளமை’ குன்றாமல் அதே உற்சாகத்துடன் அனைவரையும் கவரும் விதத்தில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் அவர்.

2024 அக்டோபர் மாதம் 22ம் தேதி அவரது புதிய புத்தகமான The Wall of Life வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. தன் வாழ்க்கையில் இளமைக் காலம் தொட்டு உள்ள 150 அழகிய படங்களைத் தேர்ந்தெடுத்து இதில் அவர் வெளியிட்டுள்ளார்.

“நான் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்; அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

1983ல் அவரது படமான ‘டெர்ம்ஸ் ஆஃப் எண்டியர்மெண்ட்’ ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்றது. மொத்தம் ஆறு முறை ஆஸ்காருக்காக அவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இளமையிலேயே ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டவர். இமயமலைக்கு வந்து தியானத்தை செய்தவர்.

தனது ஏராளமான அதீத உளவியல் அனுபவங்களைப் பல கட்டுரைகளின் வாயிலாகவும் புத்தகங்களின் மூலமும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு லாமா அவருக்கு கழுத்தைச் சுற்றி அணியும் ஸ்கார்ப் ஒன்றைப் பாதுகாப்புக் கவசமாக அவருக்குத் தந்தார். அதை அணிந்து கொண்டு இமயமலையில் அவர் ஒரு சிறுத்தையிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

அங்கு அந்தக் கடுங்குளிரில் அவர் போர்வை எதையும் போத்திக்கொள்ளவில்லை. “லாமா சொன்ன ஒரு மந்திரத்தை உச்சரித்தேன். உடலே வெதுவெதுப்பாக இருந்தது” என்று கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர்.

பறக்கும் தட்டுகளில் ஈடுபாடு கொண்ட அவர் வானவெளியில் இனம் தெரியாத பறக்கும் பொருள்களைப் பார்த்ததாக வேறு கூறியிருக்கிறார்.

 எழுபது ஆண்டு காலம் திரைத்துறையிலும் தொலைக்காட்சியிலும் வெற்றிகரமாக வலம் வந்த அவர் தான் ‘எப்படி சபையைப் பார்த்து கூச்சப்படுவதிலிருந்தும் நடுங்குவதிலிருந்தும் மீண்டு வர முடிந்தது’ என்பதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறர்.

நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்த ஒரு அகுபங்க்சர் நிபுணரிடம் தான் சென்றதாகவும் அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் பின்னர் சபை நடுக்கம் என்ற பேச்சே அவர் வாழ்வில் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சபை நடுக்கம் ஏன் வந்தது என்பதைப் பற்றி அவர் கூறும் விவரம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு அரசவையில் அரசவைக் கோமாளியாக இருந்ததாகவும் ஒரு நிகழ்ச்சியின் போது மன்னரால் தண்டிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நிகழ்ச்சியை நினைத்தாலேயே தலை உருண்டு ஓடுவதைத் தன்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது என்று கூறிய அவர், “பின்னர் ஏன் எனக்கு சபையைக் கண்டால் நடுக்கம் வராமல் இருக்கும்” என்றார்.

 அவரது அதீத உளவியல் ஆற்றல் சம்பவங்களும் அவரது முந்தைய ஜென்ம வரலாறுகளும் படிக்கச் சுவையாக இருக்கும்.

தொண்ணூறு வயதிலும் உற்சாகமாக இருக்கும் இவரைப் போன்ற அதீத உளவியல் ஆற்றல் கொண்ட இன்னொரு நடிகையை உலகம் இனி பார்க்குமா என்பது சந்தேகம் தான்!

**

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 22-12-2024 (Post.14,010)

Written by London Swaminathan

Post No. 14,010

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

ஜெய்  ஸ்ரீராம் முழக்கம் எவ்வாறு குற்றமாகும்? : உச்சநீதிமன்றம் கேள்வி

மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவர் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தது யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 503-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு 447-ன் கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பின்னர் மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

xxxxxx

பூட்டானின் தேசிய தின விழாவில் சத்குரு பங்கேற்பு!

:பூட்டானின் 177-வது தேசிய தின விழா கொண்டாட்டம் இன்று (டிச.17) அந்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ்,  பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக கலந்து கொண்டார்.

இது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ்  பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “அழகிய பூட்டான், உங்கள் தேசிய தினத்தில் இங்கு இருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமும் கௌரவமும் ஆகும். அரசர், அரச குடும்பத்தினர் மற்றும் பூட்டானின் அற்புதமான குடிமக்கள் அனைவரது உபசரிப்பும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. எண்களோடு போட்டியிடுவதற்கு மேல் தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரும் நாடு, மனிதகுலம் முழுவதற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அழகிய பூட்டான் நாட்டிற்கும் அதன் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார். 

பூட்டானின் தேசிய விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் அரச விருந்து ஆகியவற்றிலும் சத்குரு கலந்து கொண்டார்.

பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா 1907-இல் நடைபெற்றது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி பூட்டானில் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது

இந்தியாவும் பூடானும் கலாச்சாரம் , பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளில் நீண்ட கால நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன.

*****

Hinduphobia Tracker துவக்கம்

இந்துக்களுக்கு எதிரான செயல்கள், படைப்புகள் மற்றும் சொற்பொழிவுகளை வெளி உலகிற்குத் தெரிவிக்க ஹிந்து போபியா ட்ராக்கர் Hinduphobia Tracker என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது இந்துக்களை வெறுக்கும் ஆட்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் இது பதிவு செய்யும். இந்து விரோதிகளின் அவதூறுகளை பட்டியலிடும் இந்த அமைப்பினை ஒ பி இந்தியா OpIndia ஆசிரியர் மற்றும் தலைமை அதிகாரிகளான நூபுர ஷர்மா, ராகுல் ரோஷன் ஆகிய இருவரும் நடத்தும்  Gavishti Foundation கவிஷ்டி பவுண்டேஷன் துவக்கியுள்ளது . 

சர்வதேச விதிமுறைகளை அனுசரித்து, எட்டு வகையான குற்றங்களை இந்த அமைப்பு பட்டியலிடும்; இந்து சமய பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்து மத சின்னங்களை அவமதிக்கும் செயல்கள், அதிரடி மதமாற்றம், இந்து மதத்தை எதிர்த்து அவதூறு கற்பிக்கும் எழுத்துக்கள் பேச்சுக்கள், செயல்கள் ஆகியன  இந்த எட்டு வகைகளில் அடங்கும். இனி இத்தகைய செயல்களை ஒபி இந்தியாவுக்கு அனுப்பலாம். ஒபி இந்தியா என்ற தளத்தை கூகுள் மூலம் எளிதில் கண்டு[பிடிக்கலாம்; அணுகலாம்.

 xxxxxx 

பிரதமரின் ஆலமர பிரதட்சிணம் 

உலகின் மிகப்பெரிய பண்டிகையான மஹா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் துவங்கிவிட்டன .அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டு ,கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக் ராஜ் நகரில் இது நடைபெறும். திரிவேணி சங்கம் என்பது இதன் இன்னும் ஒரு பெயர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நகருக்கு கார்த்திகை நாளன்று வந்து பல புதிய திட்டங்களைத் துவக்கினார். அங்குள்ள அழியாத ஆலமரத்தை வலம் வந்து உலகம் முழுதும் சுபிட்சம் அடைய பிரார்த்தனை செய்தார்

அக்ஷய வட என்பதன் பொருள் காலத்தால் அழியாத ஆலமரம் என்பதாகும். இது பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் மும்மூர்த்தி வடிவம் என்று கருதப்படுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலுள்ள இந்த ஆல மரத்தை பிரதமர் வலம் வந்து பிரார்த்தனை செய்தார்.

உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்பாடு செய்த பூஜைகளில் எஜமானன் என்ற ஸ்தானத்தில் இருந்து , பிரதமர் கிரியைகளையும் செய்தார்

xxxxxx

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்தது பெருமாள் தான்: திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேச்சு

வில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திவ்ய பாசுரம் இசை வெளியீட்டு விழாவில் திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசியதாவது:

இந்த விழாவில், நானும், இளையராஜாவும் பங்கேற்கும் வாய்ப்பு ஆண்டாளின் அனுக்கிரகத்தால், அழைப்பால் கிடைத்தது. 82 வயதாகும் இளையராஜா, 28 வயது இளையராஜா போல் உள்ளார். இவரது இசைஞானம் அளப்பரியது. அவர், 108 வயதையும் கடந்து இசை உலகின் உச்சத்தை தொட வேண்டும் என, மங்களாசாசனம் செய்கிறோம்.

இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாசுரத்தில் ஆண்டாள் சொல்லி உள்ளார்.

நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டுமே தவிர பாழாக்கக்கூடாது. ஆலயங்களின் பெருமையையும், இயற்கையின் அருமையையும் காப்பாற்றுவது நம் கடமை. இதையெல்லாம் ஆண்டாள் திருப்பாவையில் நமக்கு சொல்லி உள்ளார்.

இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, 33 சதவீதத்தை தாண்டவில்லை. ஆனால், ஆண்டாளுக்கு சர்வ சுதந்திரத்தை பெருமாள் கொடுத்திருந்தார். இந்த மண்ணின் ஆட்சியாளர் ஆண்டாள்தான். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்ததே பெருமாள் தான்.

இந்த மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடல் படித்து ஆண்டாளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்  என்று திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசினார்.

xxxxxx 

இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?

ஸ்ரீவில்லிபுத்துார்: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். இசைஞானி இளையராஜா, இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார்.

கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், சிலர் வதந்திகளை பரப்பி இருந்தார்கள்

பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.

கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான்.

 இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.

‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை’ என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.

இது குறித்து இளையராஜா, சமூக வலைதள பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது;

என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று

இளையராஜா கூறி உள்ளார்.

xxxxxxxxxx

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது உதயநிதி குறித்து அவதுாறு:

மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

. சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார். அதில், கூறியிருந்ததாவது:

பதற்றத்தில் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். உதயநிதி மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார்.

பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார்.

உதயநிதி வெளியில் வேண்டுமானால் எதிர்ப்பது போல செய்யலாம். உண்மையில் அவர் சனாதனத்தின் பக்கம் தான் தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் வட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

******

 ஆதிபுரீஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு தரிசனம்

சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் வடிவுடையம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமியன்று ஆதிபுரீஸ்வரர் கவசம் இன்றி காட்சி அளிப்பார். இந்த வைபவத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவும் நேற்று இரவு ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். ஆதிபுரீஸ்வரர், வடிவுடை அம்மனை மனமுருகி வேண்டி சென்றார். திருவொற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர் உள்ளிட்டோர் துர்கா ஸ்டாலின் உடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

*******

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைமகள் மாத இதழின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் தலைமையில் கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை, கனபாடம் மற்றும் ஜடா பாராயண பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியை ஆர்.கே.ராகவன் ஐபிஎஸ் தொடங்கி வைத்த நிலையில், கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தேஜஸ் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் பி.டி.டி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்ரீ மான் உ.வே.ஆனந்த பத்மநாபாச்சாரியார், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, இது போன்ற பிரச்சாரங்கள் நடைபெறுவது, தேசத்திற்கும், தேச மக்களுக்கும் நலன்தரும் என்று அவர் கூறினார்.

******

திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்.. 24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் 8 மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது .

பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்க ல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
XXXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  29 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

நேரம் மாறுதலைக் கவனத்திற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். வணக்கம்.

—-subham—-

Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 22-12-2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 22-12-2024 SUMMARY

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer was sung by Dr Subbalakshmi Nagarajan

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on MAHENDRANATH GUPTA (KNOWN AS “M”)

***

Mrs Brahannayaki Sathyanarayan spoke  on THIRU VALAM SUZHI SHRINE from Bengaluru

***

Trichy K Ganesan delivered a special lecture on Tamil Saint Manikkavasagar

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்யநாராயணன். -தலைப்பு – தேவாரத் திருத்தலம் திருவலஞ்சுழி

****

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு -மகேதிரநாத் குப்தா’ எம்’ என அறியப்படுபவர்;ராமகிருஷ்ண கதாம்ருதம் எழுதியவர்

திருச்சி கணேசன் – சொற்பொழிவு மாணிக்கவாசகர்

இடையிடையே திருப்புகழ் பாடல்கள்

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 22 12 2024 , GNANAMAYAM BROADCAST summary

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! பறை என்றால் என்ன ?- 2 (Post No.14,009)

Very good book with English and Telugu translation of Tiruppavai by  Dr Chennai Padmanabhan

Written by London Swaminathan

Post No. 14,009

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாளின் தமிழ்  அறிவினை எவரும்  சந்தேகிக்கவோ குறைகூறவோ  முடியாது; ஆயினும் பறை  என்னும்  சொல்லை அவர்  எங்கேயிருந்து  கண்டுபிடித்தார்  என்பதுதான்  வியப்பான  விஷயம் ; புரியாத  புதிர் ; சங்க  இலக்கியத்திலும்  அந்தச்  சொல்  இல்லை ; பிற்கால  அகராதிகளிலும்  அந்தச்  சொல்  இல்லை. அதாவது  அவர்  பயன்படுத்தும்  பொருளில்  இல்லை . 

ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் பறை என்ற சொல் பல  இடங்களில் வருகிறது.ஆனால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் வருவது வியப்பான செய்தியாகும்

பறை , பறையன், பறைகொட்டு முதலிய சொற்கள் காலப்போக்கில் மதிப்பிழந்து விட்டன. அந்தக் காலத்தில் பறைகளை முழக்கி அரசின் அறிவிப்புகளை வெளியிட்ட பெரிய அதிகாரிகள்

பறையர்கள் என்று அழைக்கப்பட்டனர்  . வள்ளுவரும் இப்படி ஒரு பறையன் என்று சொல்லுவார்கள்.

இதே போல கழகம் என்ற சொல்லுக்கு அந்தக் காலத்தில் சூதாடுமிடம் என்ற பொருளே இருந்தது . இப்போது கட்சிகள் எல்லாம் கழகம் என்று பெயர்  சூடிக்கொண்டு   திரிகின்ற்ன .  பல சங்கங்களும் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டு அலைகின்றன.

இதே போல ‘பறை’யும் அர்த்தம் மாறிவிட்டது. ஆனால் ஆண்டாளே பல இடங்களில் பல பொருளில் பயன்படுத்துவதுதான் வியப்பான

விஷயம்; அந்தப் பொருள்கள் அகராதியில் இல்லவும் இல்லை! திருப்பாவையை ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்தோரும் இப்படிப் பல பொருளில் சொல்லாக்கம் செய்துள்ளனர்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
 நாராயணனேநமக்கே பறைதருவான்,
 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

நமக்கே பறைதருவான்=
நமக்கு அருள் தர காத்திருக்கிறான்

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்-29

இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று.

*****

பறை (பெ) &  (வி) – 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.

இன்றும் மலையாள மொழியில் பறைஞ்ஞ்சு என்ற சொல் பேசுதல் என்ற பொருளில் பயன்டுத்தப்படுகிறது . ஆனால் ஆண்டாள் பயன்படுத்திய பொருள் இல்லை.

****

திருப்பாவை முதல் பாசுரத்தில் தொடங்கி வரிசையாக 29 பாசுரம் வரை நம்மை ‘பறை’யை யூகிக்க வைத்து 29-ம் பாசுரத்தில் பறை என்பது திருமாலுக்கு என்றென்றும் சேவை செய்வதே, நாம் அடைய வேண்டிய பிறவிப் பயன் அதுவே —- என்ற உட்பொருளை உணர்த்தி, 30-ம் பாசுரத்தில் பலனை கூறி நிறைவு செய்கிறாள்.

ஆண்டாள் 29 ஆம் பாசுரம் வரை 11 இடங்களில் பறை என்பதை பயன்படுத்துகிறார் (1,8, 10, 16, 24, 25, 26, 27, 28, 29,30- எல்லா இடங்களிலும் அருள் என்ற பொருள் பொருந்தாது. குறிப்பாக ஆங்கிலத்தில் திருப்பாவையை மொழிபெயரத்தோர் வெவ்வேறு விதமாக மொழிபெயர்த்துள்ளனர். விருப்பம், ஆசை என்ற பொருளிலும் பறை வருகிறது.

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.(30)

*****

என்னுடைய கேள்வி இதுதான் ?

எங்கிருந்து ஆண்டாள் இந்தச் சொல்லைப் பெற்றார் ? வேறு எங்கேயும் ஆதாரம் இருக்கிறதா ?அல்லது அவரே உருவாக்கிய சொல் என்றாலும் தவறில்லை; அந்தப் புகழ் அவருக்கே உரித்தாகுக. ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த ஷேக்ஸ்பியரும் ஆயிரத்துக்கும் மேலான புதிய ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். கழகம் என்ற சொல்லை இன்று நாம் வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம். அதே போல ஷேக்ஸ்பியர் உருவாக்கிய ஆங்கிலச் சொற்களையும் நாம் இன்று வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம்.;மேலும் பறை போல சில சொற்களுக்கு வெவ்வேறு பொருள்களையும் ஆங்கில அறிஞர்கள் முன்வைக்கின்றனர். நேற்றுவந்த ஷேக்ஸ்பியர் விஷயத்திலேயே நாம்மிவ்வளவு திணறினால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆண்டாள் விஷயத்தில் நாம் திணறுவதில் வியப்பில்லையே!!

—subham—

Tags—ஷேக்ஸ்பியர், திருப்பாவை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2,  பறை , என்றால் என்ன , ஆண்டாள்