தமிழ் தெரியுமா? – 9122024 (Post No.13,991)

Written by London Swaminathan

Post No. 13,991

Date uploaded in London – 9 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்


1    
 2    
3    
 4    
 5    
 6    
 7    
 8    
 9    
 10    

1.இந்த நாடகத்தில் இந்த ஒன்பது சுவைகளும் உண்டு

2.இந்த உலோகத்தைக் கீழே போட்டால் பொறுக்க முடியாது!

3.சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

4.ஷேக்ஸ்பியர் எழுதிய  ஜூலியஸ் சீசர்ரோமியோ அன்ட் ஜூலியட்ஒதெல்லோமாக்பெத்ஹாம்லெட் ஆகிய  நாடகங்களில்  இது மிகுதி.

5.அசெளகரியமான நிலை. சாப்பிட்ட பிறகு சிலருக்கு வயிறு கனமாக உப்பியது போல் இருக்கும். இன்னும் சிலருக்கு சாப்பிடாமலே கூட இத்தகைய உணர்வு இருக்கும். வயிற்றில் அதிகப்படியான வாயு உற்பத்தியாவதால் இந்நிலை உண்டாகிறது.

6.ஆபாசம்வெறுப்பு

7.வெற்றி பெற்றவுடன் மன்னர்கள் இதை முழக்குவார்கள் 

8.இன்பப் பேச்சுகாமச் சேட்டை.

பூந்தாது (சூடாமணி நிகண்டு)

தேன் (பிங். )

கள் (சூடாமணி நிகண்டு)

தேனீ (பிங். )

வண்டு (சூடாமணி நிகண்டு)

10.சில மூலிகைகளின் சாற்றை அப்படியே பச்சை நெடியுடன் பருகாமல்அதே சமயம் அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல்சற்றே சூடு செய்யஓர் இரும்புக்கரண்டியை நெருப்பில் காய்ச்சிஅதை பச்சை மூலிகைச் சாற்றில் பலமுறை தோய்த்து எடுத்து அந்தச் சாற்றைச் சூடாக்குவது ஒரு சித்த/ஆயுர்வேத மருத்துவ முறை…இப்படித் தயார் செய்யப்பட்ட மூலிகையின் ………………….ஆகும்.

XXXXX

விடைகள் 9 12 2024

ந 1ம்
பா 2ம்
அ 3திம்
சோ 4ம்
உ 5ப் பு  ம்
வி 6ம் 
மு 7ம் 
ச 8ம் 
பி 9ம் 
சு 10ம் 

–subham—

Tags– தமிழ் தெரியுமா? – 9122024

Beat the Dog Again and Again (to Conquer Lust)! (Post13,390)

Beat the Dog Again and Again (to Conquer Lust)! (Post13,390)

Written by London Swaminathan

Post No. 13,990

Date uploaded in London – 9 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Sri Ramakrishna Paramahamsa is teaching us spiritual truths through dogs and cats. Let us look at some doggy and catty matters.

1

A disciple once asked Sri Ramakrishna how he was to conquer lust; for, though he was passing his days in religious contemplation, evil thoughts were arising in his mind from time to time. To him the Master said : “There was a man who had a pet dog. He used to caress it, carry it in about his arms, play with it and kiss it. A wise man, seeing this foolish behaviour of his, warned him not to lavish such affection on a dog. For it was, after all, an irrational brute, and might bite him one day. The owner took the warning to heart and putting away the dog from his arms, resolved never again to fondle or caress it. But the animal could not at first understand the change in his master and would run to him frequently to be taken up and caressed. Beaten several times, the dog at last ceased to trouble his master anymore. Such indeed is your condition. The dog that you have been cherishing so long in your bosom will not easily leave you, though you may wish to be rid of it. However, there is no harm in it. Do not caress the dog anymore but give it a good beating whenever it approaches you to be fondled, and in course of time you will be altogether free from its importunities.’

2

The cat catches her kitten with her teeth, and they are not hurt; but when a mouse is so caught, it dies. Thus, Maya never kills the devotee, though it destroys others.

3

The young of a monkey cling to its mother tightly, when she moves about. The kitten on the other hand does not do so but mews piteously, and the mother grasps it by the neck. If the young of the monkey lets go its hold of its mother, it falls and gets hurt. This is because it relies upon its own strength.  But the kitten runs no such risk, as the mother herself carries it about from place to place. Such is the difference between self-reliance and entire resignation to the will of God.

4

Again Sri Ramakrishna Paramahamsa used the cat and monkey illustration and said the following:

Similarly, the aspirant who follows the path of Knowledge or path of selfless work depends upon his own effort to attain salvation. On the other hand, the aspirant who follows the path of Love knows that the Lord  is the disposer of everything; so with perfect confidence he resigns himself entirely to His mercy. The former is like the young of a monkey and latter like the kitten.

—subham—

Tags- devotee, monkey, cat, kitten, young, Sri Ramakrishna Paramahamsa

சாமவேதம், பஞ்ச தந்திரக் கதைகளை ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் தியோடர் பென்பே (Post.13,989)

Written by London Swaminathan

Post No. 13,989

Date uploaded in London – 9 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜெர்மானிய அறிஞர் Theodor Benfey (1809-1881) தியோடர் பென்பே, உலகப் புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகளை பற்றிய புதிய செய்திகளை  நமக்கு அளிக்கிறார்.

பஞ்ச தந்திரக் கதைகளில் பதிமூன்று பகுதிகள் இருந்ததாகவும் அவைகள் அழிந்துபோய் இப்போது ஐந்து பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் பென்பே சொல்கிறார்.

உலகிலுள்ள எல்லா விலங்குகள் (Fables)  பற்றிய நீதிக் கதைகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு நூல்களை எழுதிய அவர், எல்லாக் கதைகளும் இந்தியாவிலிருந்தே சென்றதாகவும் உறுதிபட மொழிகிறார் .

மங்கோலியர்களும் இந்தியக் கதைகளை பரப்பியதாக புதிய செய்தியையும் பென்பே பகிர்கிறார்.

அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது தென் இந்தியாவில் வழங்கி வந்த ஸம்ஸ்க்ருதச் சுவடிகள் ஆகும்.

சாமவேதத்தையும் ஆராய்ந்து நூல் வெளியிட்டார்

****

இதோ அவரது வரலாறு:

தியோடர் பென்பே(1809-1881) , ஒரு ஈடு இணையற்ற ஜெர்மானிய அறிஞர்; அவர் சம்ஸ்க்ருத மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நானூறு நூல்களை எழுதியுள்ளார்.

உலகில் வழங்கும் விலங்குகள் தொடர்பான எல்லா நீதிக் கதைகளையும் ஒப்பிட்ட பின்னர், அவை அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றவைதான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்.

அவர் ஜெர்மனியில் கோட்டிங்கன் நகருக்கு அருகில் 1809– ஆம் ஆண்டு பிறந்தார்; அவருடைய தந்தை ஒரு வணிகர். ஆயினும் யூத மத நூல்களை மகனுக்கு கற்பித்தார். தால்முட் நூலைக் கற்றவுடன் எபிரேய/ ஹீப்ரு மொழியில் ஆராய்ச்சி நடத்தினார் பின்னர் கிரேக்கம் , லத்தீன் மொழிகளைக் கற்று சம்ஸ்க்ருத மொழியின்பால் ஆர்வத்தைச் செலுத்தினார்

அவர் கோட்டிங்கன், மூனிச் நகர்களில் கல்வி கற்றார்

மத்தியதரைக்கடல் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் டாக்டர் பட்டம் பேராறு. பல இடங்களில் பேராசிரியர் வேலை பார்த்துவிட்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வாழ்நாளின் இறுதிவரை பேராசிரியர் பணியில் இருந்தார்  ரஷிய மொழியையும் கற்றார்

பாரிஸ் பெர்லின் முதலிய நகரங்களில் அவருக்கு கெளரவ பதவிகள் அளிக்கப்பட்டன. கிரேக்கச் சொற்களின் மூலம்/ வேர் என்ற நூலை வெளியிட்டார்;  எகிப்திய செமிட்டிக் மொழிகளையும் ஒப்பிட்டார்.

சாமவேதத்தை மொழி பெயர்த்து பிற்சேர்க்கையாக சொல் பொருள் விளக்கத்தையும் சேர்த்தார்; அந்த நூல் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.

சம்ஸ்க்ருத மொழியை விளக்க அவர் எழுதிய நூலில் பாணினியின் அரிய இலக்கண நூலை எளிதாக விளக்கினார்

முக்கியமான மொழிகளை அறிந்ததால், ஈசாப் கதைகளைப்  போல உள்ள எல்லா மொழிக் கதைகளையும் ஒப்பிட்டு உலகில் இந்தியாதான் இவைகளை அளித்தது என்றார்; மங்கோலிய மொழியில் வேதாளக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டதைப்  படித்து பல புதிய ஆதாரங்களை முன்வைத்தார். இதன் மூலமாக  மங்கோலியர்கள் செய்த பங்கு பணியை முதல் தடவையாக உலகிற்கு காட்டினார்; அது வரை அராபிய, பாரசீக மொழிகளில் பஞ்ச தந்திரம் இருந்ததை மட்டுமே உலகம் அறிந்து இருந்தது.  சிரியா மொழியில் பஞ்ச தந்திரக் கதைகள் இருப்பதையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்..

****

·         Theodor Benfey தியோடர் பென்பே (1809-1881)

·         பிறந்த தேதி – 28 January 1809

·         இறந்த தேதி – 26 June 1881

·         பிறந்த ஊர் – கோட்டிங்கன் நகருக்கு அருகில்

·         கல்வி கற்ற இடம்  – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்

·         வேலைபார்த்த இடம் – பிராங்க்பர்ட், ஹைடல்பர்க் கோட்டிங்கன் பேராசிரியர்

·          

·         Selected works: தியோடர் பென்பே எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்

·         De Liguris, 1828, Ph.D. thesis.

·         Observationes ad Anacreontis Fragmenta Genuina (Observations on Anacreontis and Genuine Fragments), 1830. Venia Legendi dissertation.

·         Über die Monatsnamen einiger alten Völker (Month Names of Ancient Peoples), 1836, in collaboration with Moritz A. Stern.

·         Griechisches Wurzellexikon (Lexicon of Greek Roots), 1839.

·         Über das Verhältniss der ägyptischen Sprache zum semitischen Sprachstamm (On the relationship of the Egyptian language to the Semitic language group), 1844

·         The Cuneiform Inscriptions, 1847.

·         The Hymns of Sama-Veda, 1848.

·         The History of Oriental Philosophy in Germany, 1868.

·         A Practical Grammar of the Sanskrit Language for the Use of Early Students, 1868.

·         A Sanskrit-English Dictionary: With References to the Best Edition of Sanskrit Author and Etymologies and Comparisons of Cognate Words Chiefly in Greek, Latin, Gothic and Anglo-Saxon, 1866.

வேதங்களில் உள்ள இலக்கணத்தை விரிவாக ஆராய துவங்கினார்; ஆனால் அந்தப் பணியை முடிப்பதற்குள் அவரது ஆவி பிரிந்தது .

அவர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் பஞ்ச தந்திர கதை ஆராய்ச்சியும், சாமவேத ஆராய்ச்சியும் முதலிடம் வகிக்கின்றன.

–subham—

Tags- சாமவேதம்,  ஆராய்ச்சி, பஞ்ச தந்திரம், ஜெர்மானிய அறிஞர், தியோடர் பென்பே, Theodor Benfey,

ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்! (Post No.13,988)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,988

Date uploaded in London – –9 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட உரை 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஶ்ரீசைலே மல்லிகார்ஜுனம் |

உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரமமலேஸ்வரம் ||

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம் |

சேது பந்தே து ராமேஷம் நாகேஷம் தாருகாவனே ||

வாரணாஸ்யாம் து விஸ்வேஷம் த்ரயம்பகம் கௌதமி தடே |

ஹிமாலயே து கேதாரம் க்ருஷ்மேஷம் ச சிவாலயே ||

ஏதானி ஜோதிர்லிங்கானி சாயம் ப்ராத படேந் நர: |

சப்தஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரேண வினஷ்யதி ||

                           த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்பதாவது தலமாக அமையும் வைத்யநாத் தாம் தலமாகும். தாம் என்றால் க்ஷேத்ரம் என்று பொருள் இந்தத் தலத்திற்கு பைத்யநாத், பஜிநாத், வைஜிநாத் தாம் என்ற பெயர்களும் உண்டு. இது தேவகார் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. கர் என்றால் இல்லம் என்று பொருள். ஆக தேவகார் என்றால தேவர்களின் வீடு என்று பொருள்.

த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம் கூறுகின்ற படி இந்த ஜோதிர்லிங்க தலங்களின் பெயரை உச்சரித்தாலாயே ஏழு ஜன்மங்கள் செய்த பாவம் முற்றிலும் நீங்கும் என்பது உறுதி!

இத்திருத்தலம் ஜார்கண்ட் மாநிலத்தில் தேவகார் நகரில் ஜெசிடி ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையம் வைத்யநாத் தாம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஹௌரா- பாட்னா- டெல்லி ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஞ்சி, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், பகலூர் பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து பஸ் வசதிகளும் உண்டு..

இறைவன்  திருநாமம் : ஶ்ரீ வைத்யநாதர்_

இறைவி திருநாமம் : பார்வதி

தீர்த்தம் : பார்வதி தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

இந்தத் தலம் 51 சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகவும் அமைகிறது. தேவியின் இதயம் விழுந்த இடமாக இத்தலம் அமைகிறது.

விஷ்ணுவின் சுதர்ஸன சக்கரம் இந்தத் தலத்தைக் கட்டியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

சிவன் திருவாதிரை நட்சத்திர நாளனறு ஒரே இரவில் ஜோதிர்லிங்கமாக மாறியதாக புராண வரலாறு கூறுகிறது.

இராவணன் இந்தத் தலத்தில் வந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். தரிசனம் தனக்குக் கிடைக்காத காரணத்தால் தன் தலையை ஒவ்வொன்றாக அரிந்து இட்டான். ஒன்பது தலைகள் இடப்பட்ட நிலையில், பத்தாவது தலையை அரிந்திட கத்தி கழுத்தில் பதிந்த போது, சிவபிரான் தரிசனம் தந்து அருளினார். சிவபிரானிடம் லிங்கத் திருமேனி ஒன்றை வழிபாட்டிற்காக வேண்டி அதைப் பெற்றான் அவன்.

இதனால் ஏற்படும் விபரீத விளைவை உணர்ந்த திருமால் அவன் முன் தோன்றி,”லிங்கத்தைப் பெற்றாயே. சிவனிடமிருந்து வாளைப் பெறவில்லையே. அதை அல்லவோ பெற வேண்டும்” என்று கூற இராவணன் லிங்கத்தைக் கிழே வைத்து மீண்டும் தவம் புரிந்து வாளைப் பெற்றான். 

பின்னர் முன் வைத்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அது அந்த இடத்தை விட்டுப் பெயராமல் அங்கேயே நிலையாக வேரூன்றி விட்டது. அதை எடுக்க எடுக்க அது கீழே அமிழ்ந்தது. சிவபிரான், “இனி யாம் இங்கேயே எழுந்தருளி இருப்போம்” என்று கூற இராவணன் அங்கிருந்து அகன்றான்.

அந்த நிலையில் சிவபிரான் தரையோடு தரையாக திருமுடி மட்டும் சிறிது தெரியக்கூடிய அளவில் காட்சி தருகிறார்.

இராவணனது வெட்டுப்பட்ட காயம் நீங்கவும் அவனது பத்து தலைகளும் பழைய நிலையில் மீண்டும் பொருந்தவும் சிவபிரான் அருளியதால் அவர் ஶ்ரீ வைத்யநாதர் என்ற பெயரைப் பெற்றார்.

வைத்யநாதரின் பிரதான கோவிலைத் தவிர இங்கு 21 இதர கோவில்களும் உள்ளன. பார்வதி, கணேசர், ப்ரம்மா, காலபைரவர், ஹனுமான், சரஸ்வதி, சூர்யா, ராம, லக்ஷ்மணர்,ஜானகி, கங்கா காளி, அன்னபூரணி, லக்ஷ்மி நாராயணர் ஆகியோருக்கான தனி சந்நிதிகள் உண்டு.

ஸ்வாமி கோவில் மற்றும் அம்மன் கோவில் விமானங்கள் பெரிதாகவும் சுமார் 150 அடி உயரம் உள்ளதாகவும் அமைந்துள்ளன. சுவாமியின் விமான ஸ்தூபியிலிருந்து அம்மனின் ஸ்தூபிக்கு சிவப்பு, பச்சை,மஞ்சள் நிறங்களில் அகலமான நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை மிக அழகாக இருக்கும். இது பிரார்த்தனைக்காரர்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பிராத்தனைகளுள் ஒன்றாக அமைகிறது.

எல்லா நோய்கள் தீர்வதற்கும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு நோய் நீங்கப் பெறுகிறார்கள். சில நாட்கள் இங்கேயே தங்கி தங்கள் விரதங்களை பல பக்தர்கள் முடிக்கின்றனர்.

பக்தர்கள் இங்குள்ள மகிமை வாய்ந்த பார்வதி குண்ட் எனப்படும் பார்வதி தீர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஈர ஆடையோடு கும்பிடுதண்டம், அங்கபிரதக்ஷிணம் முதலியனவற்றைச் செய்கின்றனர். அபிஷேக சாமான்களையும், நைவேத்திய பொருள்களையும் காவடி கட்டி எடுத்துச் செல்வது மரபாக இருக்கிறது.

ஆண்டுக்கு குறைந்தபட்சமாக இங்கு எண்பது லட்சம் யாத்ரீகர்கள் வருகின்றனர். ஆவணி மாதத்தில் நடைபெறும் ச்ராவண மேளாவின் போது பல லட்சம் பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். பக்தர்கள் தேவகாரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுல்தான் கஞ்சிலிருந்து கங்கை நதி நீரைக் கொண்டு வந்து இங்குள்ள  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பக்தர்கள் தங்க ஊருக்குள் பல மடங்களும், சத்திரங்களும் உள்ளன. காலை 5 மணி  முதல் இரவு 9 மணி வரை தினமும் தரிசனம் செய்யலாம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைத்யநாதரும் அம்பிகை பார்வதி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 2 (Post No.13,987)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.987

Date uploaded in London – 9 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-12-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

வாழ்க்கை வழிகாட்டிகள்!

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 2

ச.நாகராஜன்

.பெரும் சாதனை – இஸ்ரோ உருவாக்கம்

திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள தும்பாவில் ராக்கட் லாஞ்சிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அரபிக் கடலில் தும்பா (ஈக்வேடர் எனப்படும்) நிலநடுக்கோடு அருகே அமைந்த இடம்.

சோடியம் வேப்பர் நிரப்பிய இந்தியாவின் முதல் ராக்கெட் 1963 நவம்பர் 21ம் தேதி ஏவப்பட்டது.

இஸ்ரோவை நிறுவி இந்தியா விண்வெளித் துறையில் கால் பதித்தது.

இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நுட்பமாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியதாக இருந்தது. புதிய கட்டிடங்கள், சாலைகள், தகவல் தொடர்பு சாதனங்கள்,ஏவுதளம், சோதனை ஓட்ட அமைப்பு இதைச் செய்ய வல்ல நிபுணர் குழு என பிரம்மாண்டமான செயல் திட்டம் நுட்பமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியைத் தந்தது.

உடனடியாக பிரம்மாண்டமான ஒரு விரிவாக்கத்தை விக்ரம் செய்ய ஆரம்பித்தார்.

1965ல் ஐ.நா இந்திய விண்வெளி ஏவுதளத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.

இடையில் ஹோமி பாபா திடீரென்று விமான விபத்தில் மரணம் அடையவே விக்ரம் அடாமிக் எனர்ஜி கமிஷனின் தலைவராக ஆனார்.

அவரது தீவிர முயற்சியினால் 1975ல் (அவரது மறைவுக்குப் பின்னர்)

ஆர்யபட்டா ரஷிய உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றி மேல் வெற்றி

அன்று ஆரம்பித்த விண்வெளிப் பயணத்தில் உயர உயரச் சென்று கொண்டே இருக்கிறோம்.

இந்தியாவில் நாமாகவே வடிவமைக்கும் நமது சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. அடுத்த நாடுகளிலிருந்தும் வரும் சாடலைட்டுகளையும் அவர்கள் வேண்டுகோளின் பேரில் விண்ணில் ஏவ இஸ்ரோ வழி செய்கிறது.

சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகிற்கு முதலில் நிரூபித்த நாடாக இந்தியா ஆனது. செவ்வாயை நோக்கிக் கண்ணைப் பதிக்கிறது.

சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரைத் தேர்வு செய்து பயிற்சி தந்து வருகிறது.

இவை அனைத்திற்கும் காரணம் விக்ரம் சாராபாய் அவர்களே!

விருதுகள்

1966ல் அவர் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். பத்ம விபூஷண் விருது அவர் மறைவிற்குப் பிறகு 1972-ல் வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை அவர் பெற்றார்.

இரு வகை மனிதர்கள்

விக்ரம் சாராபாய் பற்றிய ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அவை ஒவ்வொன்றும் அவரது புதியதொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டும்.

அவரது மகள் மல்லிகா சாராபாய் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திப் பெயர் பெற்றவர். அவர் ஒரு நடிகையும் கூட! தன் தந்தையைப் பற்றி விழா ஒன்றில்  அவர் கூறிய சம்பவம் இது.

மல்லிகா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் அவர் யாருடைய கேர்ள்-ப்ரண்ட் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். விவாதம் பெரிய சண்டையாக ஆகி ஒரு மாணவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தி விட்டார்.

விஷயம் பெரிதாகி விடவே விக்ரம் சாராபாய் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். பள்ளியின் பிரின்ஸிபால் விக்ரமின் சகோதரியான லீலாபென் தான்!

பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்த வேகத்தில் திரும்பி வந்தார் விக்ரம், சிரித்துக் கொண்டே.

அவர் தனது மகளிடம் கூறினார்; “மல்லிகா, இந்த மீட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ ஒரு குற்றமும் செய்யாத போது நீ தான் காரணம் என்று உன் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. ஒன்று தெரிந்து கொள்! இந்த உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்க மாட்டார்கள். வசதியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். 

இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் வழியில் அமைத்துக் கொள்பவர்கள். அவர்கள் தங்களுக்கு எது உண்மை என்று படுகிறதோ அந்த வழியில் செல்வார்கள்.

நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த வழி தான் என் வாழக்கை எப்படிப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.

இந்த வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மல்லிகா.

தந்தையிடமிருந்து அரிய வழிகாட்டுதலைப் பெற்ற மல்லிகா பின்னால் பிரபலமானதில் ஆச்சரியமே இல்லை!

மறைவு

30 டிசம்பர் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கத்திலே அவரது ஆவி பிரிந்தது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அவரது அகால மரணம் இந்தியாவிற்கு பெரும் இழப்பாக ஆனது. 

கற்களைத் தாங்கத் தயார்

விக்ரம் சராபாய் எதிர்கொண்ட எதிர்ப்புக் கணைகள் எவ்வளவோ; அதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. அவர் கூறிய கூற்றுக்களில் சில;

சிலர் விண்வெளி திட்டங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கோ நமது குறிக்கோளில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

சத்தத்திற்கு நடுவில் நல்லை இசையைக் கேட்பவன் மிகப் பெரும் சாதனைகளைச் செய்ய முடியும். 

எனது நண்பர் விக்ரம் சராபாய் என்னிடம் சொன்னார்: கூட்டத்திற்கு மேலே நீ நிற்கும் போது உன் மீது எறியப்படும் கற்களைத் தாங்கிக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். 

இந்தியாவை சாதனை படைக்க வைத்த விக்ரம் சாராபாயை விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கூறுவதில் அதிசயம் ஒன்றும் இல்லையே!

***

SUNDAY 8-12-2024 GNANAMAYAM BROADCAST SUMMARY

GNANAMAYAM SUNDAY BROADCAST 8-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

PRAYER BY Mrs Bhuvaneswari Rajesvara sivachariyar

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

Thiruppugaz

Talk by Brahannayaki Sathyanarayan on VAIDHYANATHAM, JYOTIRLINGA SHRINE from Bengaluru

***

Talk by Bengaluru Nagarajan on POET VEMANA

***

Talk GANESH KANNAN , TRAINER AND MUSIC TEACHER.

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

—subham—

 SPECIAL BRAOADCAST  ON ZOOM, YOU TUBE ON 13-12-2024

Grand Thiruppugaz Festival via You Tube & Facebook by    Gnanamayam 

‘Tamaso Ma Jyotir Gamaya’

Lead me from Darkness to Light’ 

Let us Light the Lamp of Wisdom by Singing the Glory of Lord Skanda on December 13,2024- The Grand Karthikai Festival Day. 

Gnanamayam is organising this event on line.

Please send your recorded video clips to

the following e mail; it may be from any of the works done by Sri Arunagirinathar such as Thiruupucaz. Kanthar Anubhuthi , Kanthar Alankaram. We will play it on 13-12-2024

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

Last date for you to send 10-12-2024

Since we want to cover all the continents from America to Australia spreading all the Time Zones, it will be a day long broadcast.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

We will also broadcast lectures by famous religious scholars in between the songs.

Please join us and get the blessings of Lord Murugan/Skandan/Kartikeyan

Last date for you to send- 10-12-24

Broadcast Date- 13-12-24

(from very early morning till late night)

Lord Skanda Bless You All !

*******

ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

குவலயமெங்கும் குமரனைப் போற்றுவோம்

ஞான தீபம் ஏற்றுவோம்

திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

எல்லாம்வல்ல அறுமுகசிவனாகிய ஸ்ரீ முருகப்பெருமான் அனுக்கிரஹம் துணைக்கொண்டு,

 உலகநலனை வேண்டி முருகப்பெருமானுக்குகந்த கார்த்திகை தீபதினத்தைக்

கொண்டாடும் விதமாக

எதிர்வரும் குரோதி வருடம்

கார்த்திகை மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று

உலகளாவிய முருகன் அடியார்கள் கந்தப்பெருமானை சிந்தையில்கொண்டு சந்தக்கவிச் சக்ரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மற்றும்

கந்தரனுபூதி கந்தரலங்காரம் முதலியவற்றில்

ஏதேனும் ஓர் பாடலை பாடி வீடியோவாக அனுப்பினால்

எங்களது ஞானமயம் முகநூல் பக்கம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் 13/12/24

வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படும். பதிவுகளை

10/12/24ஆம் தேதிக்குள்

அனுப்பி வைக்கவும்.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.

இணையம் மூலம் நடைபெறும்

இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்

சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.

  வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.

சாற்றுவோம் திருப்புகழ் மாலை

போற்றுவோம் முருகனின் தாளை

வாசிப்போம் கந்தனின் நூலை

பூசிப்போம் குமரனின் வேலை

—-SUBHAM—

TAGS- Broadcast summary81224

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 8-12-2024 (Post.13,986)

Written by London Swaminathan

Post No. 13,986

Date uploaded in London – 8 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR DAILIES AND EDITED BY LONDON SWAMINATHAN

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் எட்டாம் தேதி 2024-ம் ஆண்டு

*****

அமெரிக்காவில் இந்துக்களைக் கேலி செய்யும் துணிகள் விற்பனை– இந்துக்கள் கண்டனம்

அமெரிக்கா முழுதும் ஊர்தோறும் சூப்பர் மார்க்கெட்டுகளை வைத்துள்ள வால்மார்ட் நிறுவனத்தை இந்துக்கள் பாகிஷ்காரிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் விரும்புகின்றன. அவர்கள் விற்பனை செய்யும் பெண்களின் , ஆண்களின் உள்ளாடைகள் முதல் காலணிகள் வரை 120 பொருட்களில் பிள்ளையார் படத்தைப் போட்டு அவமதிப்பு செய்துள்ளார்கள். இதை ஒருவர் ட்விட்டர் TWITTER தளத்தில் வெளியிட்டதால் வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் அவைகளை விலக்கிக்கொள்வதாக  வால்மார்ட் அறிவித்துள்ளது; ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நடிகர் நடிகையர் போல அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி –அதாவது மட்டரகமான விளம்பரம் தேடுவதற்காக== இந்துக்களைக் கிண்டல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன .

வால்மார்ட் முதலிய கடைகள இந்துக்களை பரிகாசிக்கும் செயல்களை செய்வது இது முதல் தடவை இல்லை ; அவர்களுக்கு இது வாடிக்கை ஆகிவிட்டது; இதன் மூலம் அவர்களுக்கு அந்தக் கடைகளை பற்றிய விளம்பரம் கிடைக்கிறது. இந்துக்கள் சாதுக்களாக இருப்பதால் ஆண்டு தோறும், சீசன் தோறும் இது நடைபெறுகிறது இந்தியாவிலும் இந்து விரோத அரசியல் வாதிகளும் நடிகர், நடிகையரும் இதே உத்தியைக் கையாண்டு இந்துக்களை அவமதிக்கின்றனர்; கண்டனம்  தெரிவித்தவுடன் மன்னித்துவிடுங்கள் என்று சால்ஜாப்பு சொல்வதும்  வழக்க மாகிவிட்டது. அவர்களுக்கு பயங்கர அபராதமும் அதிக தண்டனையும் கொடுத்தால்தான் இத்தகைய அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி தேடுவோரிடமிருந்து இந்துக்களுக்கு விமோசனம்  கிடைக்கும் என்று இந்து சமய பார்வையாளர்கள் கருதுகின்றனர்

XXXXXXX

இந்துத் தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தாக்குதல்

பிரிட்டனின் இரண்டு புகழ்பெற்ற இந்துத் தலைவர்களின் கெளரவ விருதுகளை ரத்து செய்து அரசரின் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்கள் காலிஸ்தானி ஆதரவாளர்களை எதிர்த்தும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தும் பேசியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று பார்வையையாளர்கள் கூறுகின்றனர்

இந்து கவுன்சில் அணில் பனோத் மற்றும் ரமி ரேஞ்சர் இருவரும் சிபிஇ CBE விருதினை இழக்கின்றனர். பிபிசி தவறான செய்தி வெளியிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

வங்க தேச இந்துக்கள் மீதான தாக்குதலையும் அவர்கள் கண்டித்தனர் பிரிட்டனில் சுதந்திரமான பேச்சுரிமை பழங்கதையாகிவிட்டது என்றும் இருவரும் கருத்து தெரிவித்தனர்.

பிரிட்டனில் லேபர் அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்துக்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது; அரசர் பேரில் விருது வழங்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஆளும் கட்சியின் சிபாரிஸிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

xxxxx

கத்தி முனையில் வங்கதேச இந்துக்கள் – பிரிட்டன் எம்.பி.க்கள் கண்டனம்

வங்க தேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ( Barry Gardiner ) பேரி கார்டினர் மற்றும் பிரித்தி படேல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் முதல், வங்கதேசம் முழுவதும் 2,000 மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், சிறுபான்மை இந்துக்களையே குறிவைத்து வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ( Barry Gardiner ) பேரி கார்டினர் கூறினார்

மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கள், இந்துக் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதையும், இடைக்கால அரசின் அதிகாரிகள் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததையும் ( Barry Gardiner ) பேரி கார்டினர் சுட்டிக் காட்டினார்

மேலும், சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட ( Barry Gardiner ) பேரி கார்டினர், வங்க தேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் .

*****

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா என  தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழக்கூடிய அசாதாரண சூழலில், இந்து சமுதாயத்தைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமாக, பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பிற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசாங்கம் அனுமதி மறுத்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வங்கதேசத்தில் நமது சகோதர சகோதரிகளான இந்து மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக
தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கைது செய்ததன் மூலம், ‘போலி திராவிட மாடல்’ அரசானது பாசிச அரசு என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டது.

தமிழக முதல்வர் அவர்களே, உக்ரைனிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற போர்களில் இறந்து போகிறவர்கள் மட்டும் தான் மனிதர்களா? நமது அண்டை தேசத்தில் அப்பாவிகளாய் கொல்லப்படுகின்ற இந்து மக்கள், உங்கள் கண்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா?

தொடர்ச்சியாக இதுபோன்ற பாசிச போக்கோடு செயல்பட்டு வரும்  இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசிற்கும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற தமிழக காவல் துறைக்கும், எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

*****

 வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த ஹெச்.ராஜா, வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்து கோயில்கள் தாக்கப்படுவதாகவும், இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறவனேரியில் ஆர்.எஸ்.எஸ் மாநில பொருளாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்து பின்பு விடுவித்தனர்.

 *****

ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்! 

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்றும், அமெரிக்காவில் இந்திய இந்துக்களே அதிக பட்டதாரிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றும், வங்கதேச இந்துக்களுக்காக தனி பிராந்தியம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை  ஐ.நா. பரிசீலிக்க வேண்டும் என்றும் சுவாமி மித்ரானந்தா கூறினார்.

*****

இலங்கை ஐ.நா. அலுவலகம் முன் உலக இந்து அமைப்பு பேரவை ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு, அந்நாட்டு ஆர்ஆர்எஸ் மூத்த தலைவர் விஜயபாலன் தலைமையில் உலக இந்து அமைப்புகளின் பேரவையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டக்கார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

**************

சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் – தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில்  இன்று செய்தி வெளியானது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும், அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளா னதாகதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு இன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலைகோவிலில் எந்த அடிப்படையில் விஐபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு  சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.விரிவான அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, கோவிலின் சிசிடிவி காட்சிகளை  சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

*****

ராமாயணம்‘: லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

 சென்னை, நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக பிரபல நடிகர் ரவி துபே நடிக்கிறார். இதனை அவரே தற்போது தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரன்பீர் கபூர் போன்ற ஒரு மெகா ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்’ என்றார்.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. 

*******

 இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்— ஆர் எஸ் எஸ் தலைவர் பேச்சு

மக்கள் தொகை குறைந்தால் சமூகம் இல்லாமல் அழிந்துவிடும் என்றும், இந்தியர்கள் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றன. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் தற்போது இந்தியா உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியிலிருந்து 142 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாகபுரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் போது சமூகம் அழிவை எதிர்கொள்கிறது என்று மாடர்ன் டொமகிரபிக் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

வெளியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் தேவையில்லை. தானாகவே அது மறைந்துவிடும். பல மொழிகளும் சமூகங்களும் இல்லாமல் போய்விட்டன. எனவே, நமது மக்கள் தொகை 2.1 சதவிகிதத்திற்கு கீழ் போகக் கூடாது. எனவே இதில் குறைவு ஏற்பட்டால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

xxxxxxx

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி —கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

ADDED : டிச 02, 2024 04:16 AM

தேசம் முதலா அல்லது மதம் முதலா’ எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது:

மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம்.

உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நம் தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

வங்கதேசம் இன்று’ என்ற தலைப்பில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:

எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நம் பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், ஹிந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.

வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன.

ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.

கோவை: கோவையில் நடைபெற்று வந்த, ‘விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு’ என்ற, ‘ஏ3’ மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.

****

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும்தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி, மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மற்றும் ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த அவர், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  15 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 8-12-2024, world hindu news81224

Cartoons from Deccan Chronicle upto 8122024

Followig are beautiful cartoons from the Deccan Chronicle News Paper covered up to 8th December 2024

Posted by London Swaminathan on 8-12-2024

 Cartoons from Deccan Chronicle upto 8 12 2024

–Subham–

Tags- Cartoons 8122024

I am a Broomstick! (Post No.13,985)

Written by London Swaminathan

Post No. 13,985

Date uploaded in London – 8 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There was a professional preacher who could rouse strong devotional feelings in the hearts of his hearers whenever he delivered religious discourses; but personally he was not a man of character.

Pained at the kind of life he led, I asked him one day  how it was that he moved so many hears  to devotion, while he himself lived such an unworthy life the man bowed and said ,”Yes, Sir, the broom though a contemptible thing , removes the dust and dirt on the floor and the street”.

Of course I couldn’t answer him.

–Sri Ramakrishna Paramahamsa.

****

You need a proper Teacher!

Sri Ramakrishna Paramahamsa adds one more anecdote to emphasise one must have a proper teacher.

One day I was going through the Panchavati, I heard the frightful croaking of a frog. I guessed it must have been caught by a snake.  When after a long time I was returning by that way, I again heard the same noise. Peeping through the bushes, I saw a water snake with a frog in its mouth. It could neither swallow it nor let it go, and there was no end of agony for the frog.

Then I thought, “Well, had it been the victim of a cobra, it would have been silenced for ever after three croaks at the most (and then there would have been no more suffering for either the frog or the snake.). Bu here the snake’s suffering is almost equal to that of the frog’s.  if an unenlightened man takes upon himself a foolhardiness the responsibility of saving another, there is no end to the misery of both. Neither does the ego of the disciple vanish, nor are his worldly ties cut asunder. If the disciple come under the influence of an unworthy teacher, he never gets liberation. But under a competent teacher the egotism of the Jiva perishes with three croaks.

–Sri Ramakrishna Paramahamsa.

–subham—

Tags- Sri Ramakrishna Paramahamsa, broom, frog, water snake, cobra, proper teacher

மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984)

Written by London Swaminathan

Post No. 13,984

Date uploaded in London – 8 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வேதம் ஓதிய எருமை மாட்டுக்கு சமாதி என்ற கட்டுரை, நேற்று வெளியானது. அது தொடர்பான கட்டுரை இது.

மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984)

தமிழ் நாட்டில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சரிதத்தை அறியாதோர் மக்கள் அல்ல; மாக்கள். அதே போல ஞானேஸ்வர் சரிதத்தை அறியாதோர் அறியாமையின் சின்னங்கள்தான். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஏற்றிய தீபம் இன்றும் அழியாமல் சுடர் ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு தினங்களில் பண்டரீபுரத்துக்கு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சாரி சாரியாக பக்தர்கள் கூட்டம் வருவதையும் அவர்களின் பஜனை கோஷங்களையும் இன்றும் கேட்கலாம்; காணலாம். அதுமட்டுமல்ல; ஞானேஸ்வரி என்ற பெயரில் வழங்கும் பகவத் கீதை பேரூரைச் செய்யுட்களை பட்டி தொட்டிகளில் கேட்கலாம். அவரது சீடர்கள் பாடிய அபங்கங்கள் என்னும் கீர்த்தனைகளை மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாடு முழுதும் நடக்கும் கச்சேரிகளிலும் கேட்கலாம்.

யார் இந்த ஞானேஸ்வர் ?

ஞானேஸ்வரின் தந்தையின் பெயர் — விடோபா அல்லது விட்டல் பந்த்;

தாயின் பெயர்— ருக்மாபாய்;

ஞானேஸ்வரின் சகோதர, சகோதரிகள்- நிவ்ருத்தி நாத் , சோபான தேவ்,  முக்தா பாய்

அவருடைய  காலம் –

நிவ்ருத்தி – 1273 CE

ஞானேஸ்வர் –1275 CE

சோபான —  1277 CE

முக்தாபாய் – 1279 CE

நான்கு அவதாரங்கள்

நிவ்ருத்தி –  சிவனின் அம்சம்

ஞானேஸ்வர் — திருமாலின் அம்சம்

சோபான – பிரம்மாவின் அம்சம்

முக்தாபாய் – சரஸ்வதியின் அம்சம்

*****

ஞானேஸ்வரின் தந்தை விட்டோபாவுக்கு  சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் அதிகம்;பெற்றோர்கள் திருமணம் பற்றிப் பேசியதையும் தட்டிக்கழித்து, தல யாத்திரை செய்வதாகப் புறப்பட்டார். அலங்காவதி என்ற  நகரினை அடைந்த பொழுது  சீதோபந்த் என்பவர் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். அவருடைய மகள் ருக்மாபாய் விட்டோபா மீது காதல் கொண்டாள்.  விட்டோபா புறப்பட்ட தருணத்தில், பின்னால் ஓடிவந்து என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று மன்றாடினாள்; அவர் மறுக்கவே கூச்சலும் குழப்பமும் உண்டானது ஆயினும் சம்சார சாகரத்திலிருந்துத் தப்பித்து  காசிக்குச் சென்று ஸ்ரீபாத சுவாமிகள் என்பவரைக் குருவாக ஏற்று தவம் புரிந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீபாதர் தல யாத்திரைக்குப் புறப்பட்டு அலங்காவதிக்கும் வந்து சேர்ந்தார்; அப்பொழுது தந்தையுடன் சென்ற ருக்மாபாய் அவரை நமஸ்கரித்து கண்ணீருடன் நின்றாள்; கல்யாணம் நடக்க வேண்டும் என்று கெளரி விரதம் இருந்ததன் நற்பயன் கிட்டியது; அவளை பார்த்த ஸ்ரீபாத சுவாமிகள் உனக்குத் திருமணமும் நடக்கும்; நான்கு குழந்தைகளும் பிறக்கும் என்று ஆரூடம் கூறினார். அப்போது அவளது தந்தை சீதோபந்த் முன்னர் நடந்த கதைகளைச் சொன்னார்.

ஸ்ரீபாதருக்குத் தூக்கிவாரிப்போட்டது இவளை மறுத்துவிட்டுச் சென்ற விட்டோபாதான் தன்னிடம் சந்நியாசம் பெற்றவன் என்று அறிந்து காசிக்குச் சென்றவுடன் விட்டோபா, உடனே ஊருக்குப் போய் ருக்மாபாயை மணந்து கொள் என்றார் ;

சுவாமி, துறவறம் ஏற்ற  நான் எப்படி மீண்டும் இல்லறத்தில் புக முடியும்? வேண்டாமே! என்று கெஞ்சினார்.

இது குருவின் கட்டளை; ஆகவே இதை நிறைவேற்றுவதே உன் கடமை என்று வலியுறுத்தவே அவரும் ருக்மாபாயை மணந்தார; நான்கு பிள்ளைகளைப் பெற்றார். அவர்களில் ஒருவர் ஞானேஸ்வர் ; ஊருரே அவர்களை வெறுத்தது. சன்யாசி எப்படி மணக்கலாம் என்று சொல்லி ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைத்தனர். பிரமணர்களுக்குரிய சடங்குகளை செய்துவைக்க மறுத்தனர்; எல்லா வகையிலும் அவமானம் செய்தனர் ;அந்தக்குடும்பமே காட்டுக்குள் குடிசைபோட்டு வசிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

*******

முதல் அற்புதம்

ஞானேஸ்வர் இறைவனின் அவதாரம்; சிறு வயதிலேயே ஞானி ஆனவர். முதலில் சீதோபந்த்துடன் வாழ்ந்தார் அவருடன் ஒரு விருந்துக்குச் சென்றபொழுது திடீரென பிராமணர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இல்லறம் ஏற்ற சந்நியாசி வந்திருக்கிறான்; அவனுடன் நாம் சாப்பிடக்கூடாது எல்லோரும் எழுந்து போவோம் என்றார்; உடனே உண்மைப் பிராமணன் யார்? என்ற வாக்குவாதம் துவங்கியது . கைகலப்பு ஏற்படவே ஞானேஸ்வர் தடியை எழுத்துச் சுழற்றினார். எல்லோரும் பயந்து ஓடி ஒளிந்தனர் . பலருக்கு அடியும் விழுந்தது; இதற்குள் மாமனார் சீதோபந்த் மயக்கம் போட்டு விழுந்தார் பிராமணர்கள் அரசனிடம் முறையிடவே விசாரணை துவங்கியது. அரசன் முன்னால் ஞானேஸ்வர் விநிறுத்தப்பட்டார். அவருக்கு வயது எட்டுதான் . அவருடைய ஆன்மீக வாதங்களைக் கேட்ட அரசன் அசந்தே போனான். இவன் சிறுவன் அல்ல; ஞானி என்று அவனை அழைத்து தழுவிக்கொண்டார்.  பொன்னும் பொருளும் கொடுத்து காட்டில் வாழும் அவரது தந்தை விட்டோபாவை அழைத்து வாருங்கள் என்று பல்லக்கினை அனுப்பினார். மந்திரியுடன் குடும்பத்தையே, பிராமண குருவைச் சந்த்தித்து இவர்கள் பிராமணர்களே என்று சர்ட்டிபிகேட் வாங்க அனுப்பினார். பைதான் என்னும்  பிரதிஷ்டான நகருக்குச் சென்ற பொழுது வாக்குவாதம் ஏற்ப்பட்டது. எருமை மாட்டின் தலையில் கை வைத்து வேதம் ஓத வைத்தார் ( இதை முந்தைய கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் )

*****

இரண்டாவது அற்புதம்

ஒரு அந்தணர் சிரார்த்தச் சடங்கினைச் செய்வதற்கு காத்திருந்தார்; அந்தணர்கள் உரிய நேரத்தில் வரவில்லை; ஞானேஸ்வர் அங்கே இருந்தார் . விண்ணுலகிலிருந்த பித்ருக்களையே நேராகத் திவசத்திற்கு வந்து சேருமாறு அழைத்தார்.  சச்சித்தானந்த பாலா என்ற இறந்த மனிதரை உயிர் பெறச் செய்தார் ; இப்படி எண்ணற்ற அற்புதங்கள்; அவர் பிறவிச் சித்தர்

ஞானேஸ்வர் புகழ் எங்கும் பரவியது  இருபத்திரண்டு வயதே ஆன அவர் ஏராளமானோரை பக்தர்களாக மாற்றினார்; நிறைய சீடர்களும் சேர்ந்தனர். அவர்களில் குறிப்பிட்டத் தக்கவர் நாமதேவர். ஒரு நாள் சீடர்களை  அழைத்து,  தான் சமாதியில் அமரப் போவதாகவும் செங்கற்களை வைத்துச் சுவர் எழுப்பி மூட வேண்டும் என்றும் சொன்னார்; பக்கதர்களும் சீடர்களும் தயங்கினர்; பின்னர் அவர் வலியுறுத்தவே அப்படியே செய்தனர். புனே நகரில் ஞானேஸ்வர் சமாதி இருக்கிறது .

சகோதர சகோதரிகள் நாலவரும், மதுரை ராமேஸ்வரம் வரை புனித யாத்திரையை மேற்கொண்டனர்.  நாமதேவரும் உடன் சென்றார். வர்கரி சம்பிரதாயத்தை இவர்கள் உருவாக்கினார்.

சமாதிகள் உள்ள இடங்கள்

சோபனா சமாதி- கர்ஹா நதிக்கரையில் சாஸ்வத் ;

நிவ்ருத்தி சமாதி- – த்ரயம்பகம்;

முக்தாபாய் சமாதி- – புயற்காற்றில் ஐம்பூதங்களில் கரைந்தார் ;

ஞானேஸ்வர் சமாதி-  – புனே நகரம்  .

ஞானேஸ்வரின் சகோதரி முக்தாபாயும் , அண்ணன் நிவ்ருத்தியும் தம்பி சோபனா தேவும் பெரிய ஞானிகள்; அவர்கள். அனைவரும் அடுத்தடுத்து சமாதி ஆனார்கள். மகாராஷ்டிர பக்தர்கள் இன்றும் நால்வரையும் வணங்கித் துதி பாடுகின்றனர் ; அவரது கீதங்களும் எங்கும் முழங்குகின்றன.

ஆலந்தீ புனே நகரிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் இருக்கிறது .ஆலந்தி(ஆநந்தி என்பதன் மருவு) என்னும் இடத்தில் இருக்கிறது  ஆண்டுதோறும் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் யாத்திரை புறப்பட்டு பண்டரீபுரத்துக்குச் செல்கின்றனர்; அது கண்கொள்ளாக் காட்சி. எல்லோரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி விடும்

****

ஞானேஸ்வரி நூலின் சிறப்பு – ஞானேஸ்வரின் நூலுக்கு அவர் இட்ட பெயர் பாவார்த்த தீபிகா ; மக்கள் அதை ஞானேஸ்வரி என்று அழைக்கின்றனர் ; அதில் பத்தாயிரம் சுலோகங்கள் உள்ளன. அது பகவத் கீதையின் விளக்க உரை ஆகும்.

அவர் செய்த வேறு நூல்கள்

ஹரிபாட் – இதில் 28 அபங்கங்கள் / கீர்த்தனைகள் உள.

அம்ருதானுபவ — இது சைவ வேதாந்த காவியம்.

பதிமூன்றாம் வயதிலேயே கீதா ஞானேஸ்வரி விளக்க உரையை எழுதினார்.; ப்ரவாரா நதிக்கரையில் நிவாஸ என்னும் ஊரில் அது நிறைவு பெற்றது

—SUBHAM—

TAGS-  ஞானேஸ்வரி, நிவ்ருத்தி ,ஞானேஸ்வர் ,சோபான ,முக்தாபாய், அற்புதங்கள்