மனமே தான் எல்லாம்; மன அழுத்தம் மரணத்திலும் கொண்டு விடும்! Relax மக்களே! (Post No.13,944)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.944

Date uploaded in London – –28 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Kalkionline ல் தீபம் இதழில் 18-11-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 

மஹரிஷி அரவிந்தர் ஜனனம் : 15-8-1872

                    சமாதி   : 5-12-1950

அன்னை  ஜனனம்          : 21-2-1878

           சமாதி           : 17-11-1973

போற்றுவோம் புனிதர்களை! 

மனமே தான் எல்லாம்; மன அழுத்தம் மரணத்திலும் கொண்டு விடும்! Relax மக்களே! 

ச.நாகராஜன்  

அன்னையின் உபதேசம்

 அரவிந்த அன்னை மிகத் தெளிவாக மனதின் மாண்பைக் கூறுகிறார் இப்படி:  “சில மனிதர்கள் இருக்கிறார்கள் – ஒரு சின்ன விஷயம் அவர்கள் உடலுக்கு நேர்ந்தால் கூட அவர்களின் மனம் உடைந்து போய் விடுகிறது. இன்னும் சிலரோ உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் கூட  மனதைத் தெளிவுடன் வைத்திருக்கிறார்கள். மனம் மிகவும் மோசமாக இருந்து உடலை நல்ல விதமாக வைத்திருப்பவரைப் பார்ப்பது மிகவும் அரிது. அது முடியாதது என்பதில்லை; அப்படி நடப்பது என்பது மிக மிக அரிதான ஒரு விஷயம்! ஏனெனில் உடலின் நலம் மனதின் நலத்தையே பொறுத்திருக்கிறது. மனமே உடலின் மாஸ்டர். உடல் எளிதில் வசப்படுத்தக்கூடிய ஒன்று என்பதோடு மனம் கீழ்ப்படியும் நல்ல வேலைக்காரன் தான்!”

 இப்படிக் கூறிய அவர் மேலும் விளக்குகிறார்: “சாதாரணமாக ஒருவர் மனதை மோசமாகவே பயன்படுத்துகிறார்.  மனதை அழிவு வேலையைச் செய்ய விட்டு விடுகிறார். ஆனால் அதையே தனக்கு நல்லதைச் செய்யப் பயன்படுத்தவும் ஒருவரால் முடியும். அதை எப்படிச் செய்வது என்று ஒருவர் தெரிந்து கொண்டால் சில விநாடிகளிலேயே அற்புதமான நல்ல விளைவுகளை ஒருவர் பெறுவார்.”

இதைக் கூறி விட்டு அன்னை தாரக மந்திரமாக மூன்று மந்திர மொழிகளை நமக்கு அறிவுறுத்திக் கூறுகிறார்.

மனதை ஒழுங்கு படுத்து. (Organize the Mind)

மனதைத் தூய்மைப் படுத்து. (Purify the Mind)

மனதை அமைதிப்படுத்து. (Quiet the mind)

அனைத்து உபநிடதங்கள் கூறுவதை சாரமாக இப்படி அன்னை எடுத்துரைக்கிறார்.

மனமே எல்லாம் – உபநிடதம்

அம்ருத பிந்து உபநிடதம் கூறுவது இது:

மன ஏவ மனுஷ்யானாம் ; காரணம் பந்த மோக்ஷயோ:

பொருள் :

மனதைப் பொறுத்தே மனிதர்கள் அமைகின்றனர் காரணம் மனமே பந்தப்படுத்துகிறது; மனமே மோக்ஷத்திற்கு வழி வகுக்கிறது!

மனதின் சரித்திரத்தை எழுதிய டெய்லர் !

மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு நுட்பமானது. மனதை வைத்துக் கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் அல்லது தாழ்த்திக் கொள்ளலாம்.

ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.

இதைப் பதிவு செய்திருப்பவர் ஆகப் பெரும் எழுத்தாளரான கார்டன் ராட்ரே டெய்லர் என்பவர். மனதின் இயற்கையான சரித்திரத்தைப் புத்தக வடிவில் தந்திருப்பவர் இவர் ( The Natural History of the Mind by Gordon Rattray Taylor). இவர் பிபிசிக்கு அறிவியல் ஆலோசகராக இருந்தவர்.

இவர் கூறும் சம்பவம்:

“இரண்டாம் உலகப்போர் சமயம் க்ளிப்போர்ட் ட்ரோக் என்பவர் டெய்லருக்கு நண்பராக ஆனார். ட்ரோக் லண்டனில் நான்கு வருடங்கள் வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு வார்டனாகப் பணி புரிந்தார். எப்போது தாக்குதல் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

 ஆகவே அவருக்கு தூக்கம் என்பதே கிடையாது. கிடைத்த சிறு இடைவேளையில் தூங்க வேண்டியது தான்! இதனால் எப்போதும் அவரை மன அழுத்தம் பாதித்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் பெரிய வான் வழித்தாக்குதல் நடந்தது. ஏராளமான பேர்கள் இறந்தனர். இறந்தவர்களைப் புதைக்க வேண்டுமே! ட்ரோக் பணியாற்றிய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனைத்து உடல்களும் கொண்டு செல்லப்பட்டன. அன்றைய இரவு இன்னொரு பெரிய குண்டு பள்ளிக்கூடத்திற்கு அருகே போடப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை; எப்போது வெடிக்குமோ என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டது. மருத்துவ அதிகாரிகள் இறந்த உடல்களை பள்ளியில் வைத்திருப்பது அபாயகரமாகும்; உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்; ஒரு வேளை குண்டு வெடித்தால் என்ன செய்வது? என்று கூறி தன்னார்வத் தொண்டர்களை உடனே உதவிக்கு வருமாறு கூறினர். 

இன்னொரு நாள் இதே போன்ற ஆபத்து அறிவிப்பு வந்தது. ட்ரோக் அனைத்து குண்டுகளும் ஹிட்லர் தன்னையே குறி வைத்துப் போடுவதாக மனதில் எண்ணலானார். தான் இறக்கும் வரை அனைத்து குண்டுகளும் தன்னையே இலக்காக வைத்து ஜெர்மானிய விமானப்படை தாக்குதலை நடத்தும் என்று எண்ணிய அவர் நடைபாதையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தார்.

அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது இரத்த அழுத்தத்தைப் பார்த்த டாக்டர் ஓவென்று அலறினார். ட்ரோக்கை நோக்கி அவர், “இதோ பாருங்கள்! விஷயத்தை லேசானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டு தொடர்ந்து அலட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் உடல் தானே வெடித்து விடும்” என்று எச்சரித்தார்.

சில வருடங்கள் அவர் உயிர் வாழ்ந்தார்; ஒரு நாள் மாரடைப்பால் இளமையிலேயே அவர் மரணமடைந்தார்.

மன அழுத்தம் எப்படி மரணத்தில் கொண்டு விடும் என்பதற்கு ட்ரோக் சிறந்த உதாரணம் என்று கூறி மனதின் சரித்திரத்தைக் கூற ஆரம்பிக்கிறார் டெய்லர்.

 ***

HINDU CROSSWORD PUZZLE 27112024 (Post.13,943)

Written by London Swaminathan

Post No. 13,943

Date uploaded in London – 27 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.KING OF DWELLERS OF HEAVEN

2. CHOZA KING WHO CONQUERED INDIAN OCEAN ISLANDS

3.KING OF ELEPHANTS

4. SWAMI VIVEKANANDA’S NAME

5.ABOVE OR BELOW KING OF HEAVEN

6. KING OF SNAKES

7. KING OF BIRDS

8. PAST SANKARACHARYA OF KANCHI MUTT IN TAMIL NADU

1    2    3
           
           
           
    NNN    
8   NDRAN   4
    NNN    
           
           
         5 
7    6     

ANSWER

D1    R2    G3
 E   A   A 
  V  J  J  
   E E E   
    NNN    
J8AYENDRANERAN4
    NNN    
   E E E   
  G  G  P  
 A   A   U5 
G7    N6     

–subham—

Tags- HINDU CROSSWORD PUZZLE, 27112024 .

தமிழ் தெரியுமா? – 27112024 (Post No.13,942)

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

Written by London Swaminathan

Post No. 13,942

Date uploaded in London – 27 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

      1    
 8         2
          
          
          
 7   ம்    3
          
          
          
 6     5    4

1. ராஜா, ராணி, மந்திரி, குதிரை ,தேர் –முதலியன உள்ள 64 கட்ட விளையாட்டு;

2 .இதைத் தோண்டினால் தங்கம் வெள்ளி வைரம் -முதலியன கிடைக்கும்.

3.வைணவர்களுக்கு இதுதான் கோவில்;

4.ஒரே காட்சிதான் இந்த நாடகத்தில்;

5.விஷ்ணுவின் கையிலுள்ள வில்லின் ஒரு பெயர்;

6.கடல் அலையின்  பெயர்; தமிழ்நாட்டில் இதன் பெயரில் ஒரு ஊர் உள்ளது.;

7. சிவன் கையிலுள்ள விலங்கு;

8. கிராம்பு CLOVES என்றும் சொல்லுவார்கள்.

Answer

     ச 1    
ல 8    து   சு 2
    ர   
  ங்  ங் ங்  
    க   
கு 7ங்ம்ங்ஸ்ரீ 3
    க   
  ங்  ங் ங்  
    ர   
த 6    சா 5   ஓ 4

 –SUBHAM—

Tags- தமிழ் தெரியுமா ? – 27112024

December 2024 Calendar; Quotes by Nehru(Post No.13,941)

Written by London Swaminathan

Post No. 13,941

Date uploaded in London – 27 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Jawaharlal Nehru was the First Prime Minister of India; he fought for India’s independence from the British rule.  Here are some quotes from his book Discovery of India and his speeches.

Festival Days: December 11-Bharatiyar Birth Day; 13- Kartikai Deepam Festival; 16-Markaazi month begins; 25- Christmas

Full moon day-15; New moon day- 30; Ekadasi Fasting days- 11, 26;

Auspicious Days- 5

 December 1 Sunday

“Adi Shankara strove hard to synthesize the diverse currents that were troubling the mind of India of his day, and to build a unity of outlook out of that diversity. In a brief life of 32 years, he did the work of many long lives and left such an impression of his powerful mind and rich personality on India that it is very evident today.

December 2 Monday

Shankara  was a curious mixture of a philosopher and a scholar, an agnostic and a mystic, a poet and a saint, and in addition to all this, a practical reformer and an able organizer”

December 3 Tuesday

“Shankara functioned on the intellectual, philosophical and religious plane and tried to bring about a greater unity of thought all over the country. He functioned also on the popular plane in many ways, destroying many a dogma and opening the door of his philosophic sanctuary to everyone who was capable of entering it.”

December 4 Wednesday

The greatest treasure which India possesses and what is her finest heritage, is the Sanskrit language and literature, and all that it contains. “This is the magnificent inheritance and so long as it endures and influences the life of our people, the basic genius of India will continue.”

December 5 Thursday

About Kalhana’s  Rajataangini

“It is a history and it is a poem, though the two perhaps go ill together, and in a translation especially we have to suffer for this combination.

“Written 800 years ago, the story is supposed to cover thousands of years, but the early part is brief and vague and sometimes fanciful and it is only in the later periods, approaching Kalhana’s own times, that we see a close up and have a detailed account.

December 6 Friday

“Kalhana’s book is something far more than a record of king’s doings. It is a rich store house of information, political and social and, to some extent economic. We see the panoply of the Middle Ages, the feudal knights in medieval glittering armour, quixotic chivalry and disgusting cruelty, loyalty unto death and senseless treachery; we read royal amours and intrigues of and of fighting and militant and adulterous queens.

December 7 Saturday

“Buddha has always had a great appeal for me. It is difficult for me to analyze this appeal, but it is not a religious appeal, and I am not interested in the dogmas that have grown up round Buddhism. It is the personality that has drawn me. So also the personality of Christ has attracted me greatly”.

December 8 Sunday

“The Buddha story attracted me even in early boyhood, and I was drawn to the young Siddhartha who, after many inner struggles and pain and torment, was to develop into the Buddha. Edwin Arnold’s ‘Light of Asia’ became one of my favourite books.

December 9 Monday

In later years, when I travelled about a great deal in my province, I liked to visit the many places connected with the Buddha legend, sometimes making a detour for the purpose. Most of these places lie in my province or not far from it. Here (on the Nepal frontier) Buddha was born, here he wandered, here (at Gaya in Bihar) he sat under the Bodhi tree and gained enlightenment, here he preached his first sermon, here he died”. [The Discovery of India, p. 130] 

December 10 Tuesday

“The children of today will make the India of tomorrow. The way we bring them up will determine the future of the country.” 

December 11 Wednesday

“Life is like a game of cards. The hand that is dealt you is determinism; the way you play it is free will.”

 December 12 Thursday

“Evil unchecked grows, evil tolerated poisons the whole system.” 

December 13 Friday

“Time is not measured by the passing of years but by what one does, what one feels, and what one achieves.”

December 14 Saturday

“We live in a wonderful world that is full of beauty, charm and adventure. There is no end to the adventures we can have if only we seek them with our eyes open.” 

December 15 Sunday

. “Politics and Religion are obsolete. The time has come for Science and Spirituality.”

December 16 Monday

Nationalism is essentially a group memory of past achievements, traditions, and experiences,”

December 17 Tuesday

Fine buildings, fine pictures and books and everything that is beautiful are certainly signs of civilization. But an even better sign is a fine man who is unselfish and works with others for the good of all. To work together is better than to work singly, and to work together for the common good is best of all.

December 18 Wednesday

“For only they can sense life who stand often on the verge of it, only they whose lives are not governed by the fear of death.”


December 19 Thursday

“I am a socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread. The other systems have been tried and found wanting. Let this one be tried—if for nothing else, for the novelty of the thing.’ Vivekananda”

December 20 Friday

“We talk of high philosophies and our ancient greatness but act in narrow grooves and show intolerance to our neighbour. These are basic questions for us to keep in mind, for our future depends on the answer that we give to them.”

December 21 Saturday

“Life is too complicated and, as far as we can understand it in our present state of knowledge, too illogical, for it to be confined within the four corners of a fixed doctrine. The”
― Jawaharlal NehruDiscovery of India

December 22 Sunday

“I had little patience with leftist groups in India, spending much of their energy in mutual conflict and recrimination over fine points of doctrine which did not interest me at all. Life is too complicated and, as far as we can understand it in our present state of knowledge, too illogical, for it to be confined within the four corners of a fixed doctrine.” 

December 23 Monday

“Schopenhauer says, ‘a man can do what he will, but not will as he will.”
― Jawaharlal Nehru, The Discovery of India

 December 24 Tuesday 

“In this materialistic age of ours,’ says Professor Albert Einstein, ‘the serious scientific workers are the only profoundly religious people. 

December 25 Wednesday

“A leader or a man of action in a crisis almost always acts subconsciously and then thinks of the reasons for his action.”

December 26 Thursday

“There is no end to the adventures that we can have if only we seek them with our eyes open”

December 27 Friday

I wish to declare with all earnestness that I do not want any religious ceremonies performed for me after my death. I do not believe in such ceremonies, and to submit to them, even as a matter of form, would be hypocrisy and an attempt to delude ourselves and others.”

December 28 Saturday

“Whatever gods there be, there is something
godlike in man, as there is also something of the devil in him.”

December 29 Sunday

“Children are like buds in a garden and should be carefully and lovingly nurtured, as they are the future of the nation and the citizens of tomorrow.”

December 30 Monday

“Culture is the widening of the mind and of the spirit.”

December 31 Tuesday

“The policy of being too cautious is the greatest risk of all.” 

—Subham—

Tags- Nehru, Quotes, Discovery  of India, Jawharlal Nehru, December 2024 Calendar

QUIZ சைதன்யர் பத்து QUIZ (Post No13,940)

Written by London Swaminathan

Post No. 13,940

Date uploaded in London – 27 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

வங்காளத்திலும் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் வைஷ்ணவ பக்தி மார்க்கத்தைப் பரப்பிய சைதன்ய மஹாப்பிரபு பற்றிய பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் .

1.சைதன்யர் எந்த ஊரில்எப்போது பிறந்தார் ?

சைதன்யர், மேற்கு வங்காள மாநிலத்தில் நாடியா நகரில் 1486- ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி பெளர்ணமி தினத்தில் பிறந்தார் .

****

2.அவருடைய உண்மையான பெயர் என்ன?

விஸ்வாம்பர்; அவர் பத்தாவது குழந்தை. அவருக்கு முன்னால் பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்துவிட்டனர் .  சைதன்யரின் அண்ணன் பெயர் விஸ்வரூபன். தனது சகோதரிகள் அனைவரும் இறந்ததால் அவர் துறவறம் ஏற்று தென்னிந்தியாவில் ஒரு மடத்தில் சேர்ந்தார்

****

3.அவருடைய வேறு பெயர்கள் என்ன ?

தாய் தந்தையர் விச்வாம்பர் என்று பெயர் சூட்டினாலும் பல குமந்தைகளைப் பறிகொடுத்ததால் இவர் மீதும் எம தருமன் பாயக்கூடாது என்று கசப்பு — நிமாய் என்று அழைத்தனர் . இதற்கு கசப்பான நீம் மரம் – வேப்ப மரம்– என்று பெயர் . அருகிலுள்ள எல்லோரும் அவரது அழகைக்கண்டு கெளரங்கர் என்று அழைத் தார்கள் ; கெளர் என்றால் அழகு ; குழந்தை அழும்போது ஹரி என்று சொன்னால் அழுகையை நிறுத்தி விடுவான்; இதனால் எல்லோரும் கெளர்–ஹரி என்றும் சொன்னார்கள்; அது கெளரங்கர் என்று மருவியது.

****

4.சைதன்யரின் தாய்தந்தையர்மனைவிமக்கள் யார் ?

ஜகந்நாத மிஸ்ரர் என்ற அந்தணர் அவருடைய தந்தை; தாயின் பெயர் சசி தேவி . மாணவராக இருந்தபோதே தந்தை இறந்தார். பின்னர் வல்லபாச்சாரியாரின் புதல்வியான லெட்சுமியை கல்யாணம் செய்து கொண்டார்  . அவர் பாம்பு கடித்து இறந்தவுடன் விஷ்ணுப்ரியா என்ற பெண்ணை மணந்தார்.

****

5.அவர் எழுதிய ஆராய்ச்சி நூலை ஆற்றில் எறிந்தது ஏன் ?

சைதன்யர் / கெளரங்கர் மாணவனாக இருந்தபோது , ரகுநாதர் என்ற ஆசிரியரிடம் தர்க்கம் பயின்றார். ஆசிரியர்  திதீதி என்ற நியாய சாஸ்திர நூலை எழுதி உலகப் புகழ் பெற விரும்பினார்  சைதன்யர் / கெளரங்கரும்  ஒரு ஆராய்ச்சி நூல் எழுதினார்; இருவரும் படகில் செல்கையில் உன் ஆராய்ச்சி நூலைக் காட்டு என்று சொன்னவுடன் சைதன்யர் தயக்கமின்றி அதைக் கொடுத்தார். படித்த மாத்திரத்திலேயே வாத்தியார் ஓ என்று கதறி அழுதார். காரணம் என்னவென்று கேட்டபோது, நான் எனது நூல் மூலம் உலகப் புகழ்பெற எண்ணினேன்; அது கெட்டுப்போச்சே! என்று கதறி அழுதார். சைதன்யரும் அழுதுகொண்டே தனது ஆராய்ச்சிச் சுவடிகளை ஆற்றில் எறிந்தார். இன்றுவரை அவரது ஆசிரியர் எழுதிய நூலே முதலிடம் வகிக்கிறது.

*****

6.அவர் சைதன்யராக மாறியது எப்படி?

அவருக்கு 24-ஆம் வயதில் கேசவ பாரதி சுவாமிகள் என்பவர் கிருஷ்ண சைதன்யர் என்ற புதிய நாமத்தைச் சூட்டி சந்நியாசியாக மாற்றினார்

****

7.சைதன்ய மஹாப் பிரபுவின் குரு யார் ?

கெளரங்கரின் / சைதன்யரின் வாழ்வில் ஒரு வியத்தகு மாற்றம் 1509- ஆம் ஆண்டில் நடந்தது  அவர் தமது தோழர்களுடன் கயை நகருக்குத் தல யாத்திரை செய்தார். அங்கு மத்வாச்சாரியாரின் சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஈஸ்வர பூரி என்ற துறவியைச் சந்தித்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிருஷ்ண பகவானுடைய பத்து எழுத்து மந்திரத்தையும் ஈஸ்வர பூரி உபதேசித்தார் அதிலிருந்து கிருஷ்ணா ஹரி என்று சொல்வீர் என்று உபதேசித்து ஆனந்தக் கூத்தாடினார்; புழுதியில் புரண்டார்; அப்படிச் செய்யும் போதெல்லாம் உணவையும் பானங்களையும் மறந்தார்

****

8.அவருடைய நெருங்கிய நண்பர் யார்

நித்தியானந்தர் என்ற அந்தணர் துறவியாக மாறி கிருஷ்ணனை காண , பிருந்தாவன த்திலேயே தங்கி பெரும் முயற்சி செய்தார் ; வெற்றி   பெறவில்லை; அவரை சைதன்யர் சந்தித்து, வீட்டுக்கு அழைத்துச் சென்று, அம்மா செத்துப்போன என் அண்ணன் திரும்பி வந்துவிட்டான்; இதோ பார்! என்று அம்மாவுக்கு அறிமுகப்படு த்தினார்.  அவர்கள் இருவரும் நவத்வீபம் பகுதியில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டு தெருக்களில் சென்றபோது பக்தர்கள் கூட்டம் பெருகியது; சென்ற இடமெல்லாம் ஹரியின் நாமம் விண்ணைப் பிளந்தது.  பிற்காலத்தில் சனாதனர்ஹரிதாஸர்முராரிகதாதரர் ஆகியோரும் சேர்ந்து ஹரி நாமத்தைப் பரப்பினார்கள்.

****

9.கொலைகார ஜாகை மாதை ஆகிய இருவரையும் மாற்றியது எப்படி?

ஜாகை மாதை என்ற இரண்டு அந்தணர்கள் கொலை, கொள்ளை , கற்பழிப்பு ஆகிய எல்லா குற்றங்களையும் செய்து மஹா பாவிகள் என்ற பெயர் எடுத்தனர் அவர்களுக்கும் ஹரி நாமம் சொல்லி மாற்றிவிட வேண்டும் என்று சைதன்யர் சொன்னதால் நித்தியானந்தர் தலைமையில் பக்தர் கூட்டம் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாவிகளின் இல்லத்திற்குப் படை எடுத்தது.  ஹரி நாமம் சொல்க என்று நித்தியானந்தர் சொன்னவுடன், மாதை உடைந்த ஜாடியின் ஒரு பகுதியை அவர் மீது வீசினான். நெற்றியில் அது அடித்து ரத்தப் பெருக்கை உண்டாக்கிற்று. இன்னொரு பகுதியை தலை மீது எறிய எடுத்தபோது  ஜாகை ஓடிவந்து துறவியை அடிப்பது பாவம் என்று தடுத்தான். பின்னால் நின்றிருந்த சைதன்யர் ஓடிவந்து தாக்குதலைத் தடுப்பதற்காக ஜாகையைக் கட்டிக்கொண்டார் ; அவன் மூர்ச்சையாகி விழுந்தான்; அதே நேரத்தில் மாதையும் பேசும் சக்தியை இழந்தான்; மன்னிப்புக் கேட்கும்படி நித்தியானந்தர் சொன்னவுடன் அப்படியே செய்தவுடன் இருவரும் நல்ல நிலைமைக்குத் திரும்பினார்கள் சைதன்யரின் பெரிய பக்தர்களும் ஆனார்கள்.

****

10.சைதன்யர் ம  ம்ஆஸ்ரமம் ஏதேனும் ஸ்தாபித்தாரா ?

அவருடைய முக்கியக் கொள்கைகள் என்ன ?

இல்லை; ஆனால் அவரது பக்தர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்பினார்கள்; ஹரி போல் என்ற நாமம் எங்கும் ஒலித்தது அவரது வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன ஒரு வண்ணானனைத் தொட்டவுடன் அவன் ஹரி நாமம் சொல்லிக் கூத்தாடவே அவனது மனைவி,  பேய் பிடித்துவிட்டதாகச் சொல்லி ஏனையோரையும் அழைத்தாள்; அவர்கள் அந்த ஆடும் வண்ணானைக்  கட்டிப்பிடித்து பேயை விரட்டச் சென்றபோது அவர்களுக்கும் ஹரி நாம் என்னும் எலெக்ட்ரிக் ஷாக் அடித்து ஹரி போல் என்று ஆடத் துவங்கினார்கள்; ஒரு முறை சைதன்யர் கடலில் குதித்து சமாதியாகவே மீனவர்கள் கனமான மீன் கிடைத்துவிட்டது என்று எண்ணி கரைக்கு கொண்டு வந்து அவரைத் தொட்ட மாத்திரத்தில் ஹரி பக்தர்கள் ஆனார்கள்.

தனது  இறுதிக் காலம் முழுவதையும் புரி நகரில் செலவிட்ட சைதன்யர் 1533 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்

அவரது பக்தர்கள் அவரை ஆறு கைகள் கொண்ட தெய்வம் என்று வருணிக்கிறார்கள். அவர்  பல பிரிவுகளை பின்பற்றிய பெரியோர்களையும் கிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு மாற்றினார் .

—subham—

Tags-சைதன்யர்நித்தியானந்தர்மஹாப்பிரபு, நிமாய்கெளரங்கர், திதீதிஈஸ்வர பூரி

ராமாயணத்தில் வரங்கள் (21) சரபங்ரை ப்ரம்ம லோகம் அழைத்துச் செல்ல இந்திரன் வந்தது!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.939

Date uploaded in London – –27 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (21) 

ராமாயணத்தில் வரங்கள் (21) சரபங்க மஹரிஷியை இந்திரன் சந்தித்து அவரை ப்ரம்ம லோகம் அழைத்துச் செல்ல வந்தது!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ சரபங்கர் அக்னிப் பிரவேசம் செய்வது” என்ற ஸர்க்கம்.

விராதனை வதம் செய்த ஶ்ரீ ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணருடன் நேராக சரபங்க மஹரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.

அங்கே சரபங்கரின் அருகில் சூரியனையும் அக்னியையும் நிகர்த்து அழகுடன் மிகவும் ஒளிபெற்று விளங்கும் அத்புதன் என்ற பெயரை உடைய இந்திரனைக் கண்டார்.

இந்திரன் தேர்த்தடத்திலிருந்து பூமியை மிதிக்காமல் இருப்பதையும் தேவர்களால் அவன் சூழப்பட்டிருப்பதையும் அவர் பார்த்தார்.

சரபங்கருடன் இந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போது லக்ஷ்மணருக்கு ராமர் இந்திரனின் ரதத்தைக் காண்பித்தார்.

“இந்திரன் அருகில் நிற்பவர்கள் அனைவரும் நித்ய யுவாக்கள். சிவப்பு ஆடை உடுத்தவர்கள். புலிகள் போல நெருங்க முடியாதவர்கள். எல்லோருடைய மார்புகளிலும் அக்னியை நிகர்த்த ஹாரங்கள் விளங்குகின்றன. இருபத்தைந்து வயதிற்குரிய வடிவை இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இது தான் இவர்களுக்கு எப்போதுமே ஏற்பட்டிருக்கிறது.” என்று விவரித்த ராமர் லக்ஷ்மணரிடம், ‘இங்கேயே காத்திரு இதோ வருகிறேன்’ என்று கூறி விட்டு சரபங்கரை நோக்கிச் செல்கிறார்.

இந்திரன் உடனே சரபங்கரிடம் அனுமதி பெற்று செல்ல விழைகிறான்.

“ஏனெனில் அவதார காரியத்தை முடித்த பின்னரே அவரை வெற்றி பெற்றவராக நான் பார்க்கப் போகிறேன்” என்று இந்திரன் கூறி சரபங்கரிடமிருந்து விடை பெற்றுக் கிளம்புகிறான்.

இந்திரன் சென்ற பிறகு சரபங்கரை ராமர் காண்கிறார். அப்போது இந்திரன் வந்ததைப் பற்றி அவர் சரபங்கரிடம் கேட்கிறார்.

அதற்கு சரபங்கரும் விவரமாக இந்திரன் வந்ததைப் பற்றி எடுத்துரைக்கிறார்.

மாமேவ வரதோ ராம ப்ரஹ்மலோகம் நிநீஷதி |

ஜிதமுக்ரேண தபஸா துஷ்ப்ராபமக்ருதாத்மபி: ||

ராம – ஶ்ரீ ராம!

வரத: – தண்ணளியுடைய வரம் அளிக்கும்

ஏஷ: – இவன்

அக்ருதாத்மபி: – ஆத்மஞானமில்லாதவர்களால்

துஷ்ப்ராபம் – அடைய முடியாததும்

உக்ரேண – கடும்

தபஸா – தவத்தால்

ஜிதம் – சம்பாதிக்கப்பட்டதுமான

ப்ரஹ்மலோகம் – பிரம்மலோகத்திற்கு

மாம் – என்னை

நிநீஷதி – அழைத்துப் போக எண்ணுகிறான்

 ஆரண்ய காண்டம் ஐந்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 26

இவ்வாறு கூறிய சரபங்கர் ராமர் வந்ததை ஒட்டி அவரை தரிசிக்காமல் பிரம்மலோகத்திற்குப் போகவில்லை என்று கூறுகிறார்.

பின்னர், ‘தன்னால் சம்பாதிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்க’ என்று கூறி அனைத்தையும் ராமருக்கு அர்ப்பணிக்கிறார்.

ராமர் அவரிடம் காட்டில் செல்ல இருக்கும் ஓரிடத்தைக் காண்பிக்குமாறு அவரை வேண்ட சரபங்கர் அவரை சுதீக்ஷ்ண ரிஷியைச் சென்று காணுமாறு கூறுகிறார்.

பின்னர் அக்னியை வளர்த்து அதில் புகுந்து தன் உடலை நீத்து தேஜோ மயமாக விளங்கி பிரம்மலோகத்தை அடைகிறார்.

இங்கு வரதோ ராம என்று கூறும் சரபங்கர் தான் பெற்ற வரதானத்தைப் பற்றி விவரமாக எதுவும் கூறவில்லை.

சரபங்கர் வரதானம் அடைந்ததை இங்கு தெரிந்து கொள்கிறோம்.

**

தமிழ் தெரியுமா ? – 26112024 (Post No.13,938)

Written by London Swaminathan

Post No. 13,938

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

1  3  4
   6  
7      8
        
9       
        
    10   

குறுக்கே வலம்  இடமாக செல்க

1.நாய் மாமிசம் சாப்பிட்ட ரிக் வேத ரிஷியின் பெயர்.

5.காஞ்சீபுரத்தில் அத்தி மரத்துடன் தொடர்புடைய கோவிலில் இந்த ஒலியை பக்தர்களிடம் கேட்கலாம்..

7.அவன் நல்ல சாமி —- … ஆயிற்றே ; அவனுக்கா இந்த கதி?

9.திரு அருணகிரிநாதர் அருளிய நூல்; ஆடும் பரிவேல் என்று துவங்கும் 51 செய்யுட்கள்

10.சரஸ்வதியின் இன்னும் ஒரு பெயர் ; தமிழ்ப் பெண்களிடையே இந்தப் பெயருடைய பெண்கள் உண்டு

****

குறுக்கே இடம் வலமாக செல்க

8. யாரோ எனக்கு எதிராக — செய்கிறார்கள் ; அனுசுயா வுக்கு முன்னாலும் இந்த சொல் வரும்.

மேலிருந்து கீழே செல்க

2.சாக்கிய குல புத்தரின் நெருங்கிய உறவினரும், பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராகவும் விளங்கியவர். சாக்கிய நாட்டு இளவரசன்

3.கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுவோர் —- தேடுவதாகச் சொல்லுவார்கள்.

4.மூ.ன்று தெருக்கள் கூடும் இடம் ; நான் ரூபாய்க்கு ஒரு படி அரிசி தராவிடில் என்னை ———— யில் வைத்து அடியுங்கள்.

7.ப- எழுத்தில் துவங்கும் தாமரையின் பெயர் ; 
பெண்களிடையே இந்தப் பெயருடைய பெண்கள் உண்டு

கீழிருந்து மேலே செல்க

6.மேலே செல்க—ரோடு போட உதவும் பெட்ரோலிய பொருள்

ANSWER

வா1தே2வ 3ர் மு4
  வ5தா6 ச்
ப7க்ன் திச8
ங் த் ம  ந்
க9ந்நுபூதி
 ன்    
ம்  க10லைவாணி

–subham—

Tags–தமிழ் தெரியுமா ? – 26112024

Hindu Crossword Puzzle 26112024 (Post No.13,937)

Written by London Swaminathan

Post No. 13,937

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1   2  3    4
          
          5
 6    7     
       8   
          
 9       10  

Across

1.Mars is known in Hindu astrology as…

5. Go Left to Right—copper in Indian languages

6.Laugter; used with Mantha…..; Atta……

8.Of the waters in Hindu Vedic and Avestan literature

9.Holiest city for Sikhs

Down

1.That which is indestructible; name of the Paatra/Vessel Draupadi owned

2.Mango in Sanskrit; the prostitute who met Buddha has this name with suffix Pali

3. Commendation or interjection or participle in Sanskrit

4. Terminalia Catapa tree in Sanskrit or Almond tree with long sound

7.Opposite of Amrit

10.Go upward- Form, Shape, Figure in Tamil and Sanskrit

****

Answer/ Solution

A 1NGA 2RA 3KA V 4
K  M H   A
S  R ARMAT 5
H 6ASAM 7  A A
A   R A 8PAM
Y   I  U A
A 9MRITSAR 10  

—Subham—

Tags- Hindu crossword, 26112024

Story of Sanskrit ! How did World’s Oldest Grammar develop in 3000 Years? (Post No.13,936)

Written by London Swaminathan

Post No. 13,936

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There is a beautiful summary of the development of Sanskrit grammar in the past 3000 years. H P Dwivedi has published a thesis to Patna University and got a doctorate. His title was Some Aspects of the Technical Terms in Astadhyayi (astaadhyaayii). When he published his thesis in a book, he has written an introduction where he has summarised the four phases in the growth of Sanskrit Grammar. It is very useful for anyone interested in the study of Sanskrit grammar. His book title is Studies in Panini (year 1978).

“It is a fact that the Astadhyayi of Panini which has been held in high esteem both by native and foreign scholars of Sanskrit grammar and distinguished above all similar works of other countries was brought to perfection by the Varttikas of Katyayana and the Mahabhasya of Patanjali.

Panini – 700-800 BCE (according to Goldstucker)

Varttikas of Katyayana – 400 BCE

Maha Bhashya of Patanjali- 150 BCE

****

Different Phases of the Study of Panini

The First Phase began earlier than Katyayana (kaatyaayana) and culminates virtually in the Mahabhasya of Patanjali continuing in the Kasika of Vamana and Jayaditya. The earlier commentators no doubt supplied materials for the Varttikas of Katyayana as did the works of grammarians like Vyadi and others for the Mahabhasya of Patanjali. These are the two works that have survived. The Varttikas and Mahabhasya show critical acumen of high order and are indispensable  for understanding the Astadhyayi. They have practically brought perfection to the Paninian system which would have otherwise not been what it is today. On account of these contributions of Katyayana and Patanjali, the tradition has nick named the system Trimuni Vyakaranam.

The chief purpose of their works are (1) a threadbare discussion of the aphorisms of the Astadhyayi with reference to illustrations  thereof(2)  rejection of unnecessary rules or their parts and (3)recasting of the rules so as to accommodate new formations that crept up in the language in course of time.

Patanjali is regarded as the ultimate authority of the Paninian system and all the later commentators are indebted to him. Patanjali follows the same order of the Sutras in his discussion as given in the parent work.

The Kasika (about 700 CE) is a commentary on the Astadhyayi. It contains, as proposed by the authors, a systematic presentation of the material of grammar scattered all over the vrtti, the Mahabhasya and Dhatupatha and the Ganappatha etc. Its method of discussion is first to give simple meaning of the sutras , illustrate them by suitable examples, cite examples to which a particular rule does not apply and to add  short critical notes, if necessary. Though the Kasika is expected to follow the Mahabhasya  in the matter of discussion yet at times it differs remarkably from it. It is to be noted that the Mahabhasya, though indispensable for understanding the spirit of Panini, presupposes preliminary acquaintance of the sutras of Astadhyayi for which purpose the Kasika alone is suitable. It claims to unfold the hidden meaning of the sutras of Astadhyayi and preserve the whole of Ganappatha of Panini intact. It teaches the formation of the derivatives of the words and explains Patanjali’s addition to Katyayana’s Varttikas. In this respect, the Kasika is a unique work serving a link between  the Astadhyayi and the Mahabhasya.

The Kasika has a couple of commentaries: the Kasika Vivarana Panjika, popularly known as Nyasa by Jitendrabuddhi  (8th century CE) and Pada Manjari by Haradatta Mishra  (12th century CE). These two works are highly informative and worthy of names and systematic paraphrasing  of the discussions available in Mahabhasya as it is evident from the prefatory verses thereof.

The Second Phase begins with the Rupavatara (ruupaavataara) of Dharmakirti and the Rupamala of (ruupamaalaa) Vimala Sarasvati (19th century CE) and culminates into Sidhdanta Kaumudi of Bhattoji Dikshita (17th century CE). These works distinguish themselves by changing  the order of the sutras of Astadhyayi, the underlying motive of this  change is to secure convenience in word formation as the ultimate purpose of grammar. The main problem confronting the authors of the first phase was to explain threadbare the rules of the Astadhyayi to supplement shortcomings  and to do away with its superfluousness. In other words their main objective was to bring about perfection of Astadhyayi which they fully achieved. To the authors of second phase,  on the other hand, the formation of words was the primary consideration. The works of this phase better known as the Prakriya Granthas, proved most suitable to the changing need of the hour, because Sanskrit was no longer a spoken language  and had long left its claim as such. They were followed by works which mark commencement of the third phase.

The Third Phase, which begins with the Sabdakaustubha and the Manorama of Bhattoji Dikshita and ends with the work of Nagesa, marks the climax of the textual study of Panini. The authors devoted themselves to subtle discussions of the theories and elements of grammar. The works of this phase were mostly Tika Granthas (tiikaa) and needed a more grounding in the principles of grammar  than it was required for understanding their original. The influence of logic in them is quite apparent and therefore they came, later on to be known as Navya Vyakarana or Neo Grammar. This new school within the old system was actually founded by Bhattoji Dikshita but attained perfection in the works of Kaunda Bhatta and Nagesa (naagesa).

 The contributions of the later grammarians to the Paninian system are quite outstanding  by virtue of their logical and subtle discussions of the theories and elements of  grammar they virtually left no place for further deliberation. The theory of Sphota though owing its origin to Nirukta period was developed by the new school of grammarians who were more logicists than structuralists.

As a matter of fact the authors of this phase devoted themselves more to pedantry than to really useful scholarship. They are mainly responsible for putting to confusion the aim and purpose of grammar which later on came to be misunderstood by the posterity as an end in itself and not a means to the study of Sanskrit language.

Then came the Fourth Phase when the Sanskrit language was introduced to the Western world. Goldstucker and others wrote their views on the great works of Panini, Katyayana and Patanjali.

My Comments

The above summary shows the development of grammar in 3000 years. We don’t have any grammar nearer to the age of Panini, Katyayana and Patanjali in any part of the world. Even the Tolkappiam of Tamil grammarian Tolkappiar or Truna Dhumagni is dated first century BCE or CE; that is they came at least 200 or 300 years later. Even there, the Third Adikara of Tolkappima is considered a later addition. My view is that the entire work is compiled in the present format around fifth century CE. The word Adikaram found in Tirukkural, Silappadikaram and Tolkappiam shows that they were compiled in the same period.  But their authors might have lived earlier than that.

Above all the development of language and literature in India shows that Hindus were the pioneers of civilization. They were first in producing grammar books, dramas, poetry, thesaurus, books on sex, astronomy and mathematics.  Unless a civilization is advanced, we can’t see such books 2000 years ago. Only Greeks produced more plays in that period. Socrates and other Greek scholars followed the Upanishads in writing intellectual and philosophical matters.

—subham—

Tags – Sanskrit , Grammar, Development, Panini, Patanjali, Astadhyayi, Mahabhasya, Varttika, Katyayana, Kasika, Bhayyoji Dikshita, Siddhanta Kaumudi, Goldstucker, Story of Sanskrit

பீமாவரம் கோவில்கள் – 46 (Post No.13,935)

Someswara Swami Temple

Written by London Swaminathan

Post No. 13,935

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Maulamma Temple

xxxx  

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 46

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு பஞ்சராம க்ஷேத்திரங்கள் என்ற ஐந்து புகழ் பெற்ற கோவில்களில் அடங்கும் .

பின்னரும் கோவில்களுக்கு அதிகமான பக்தர்கள் செல்கிறார்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில்

கோட சட்டம்மா அம்மாவாரி கோவில்

வாசவி மாதா கோவில்

வீரபத்ர சுவாமி கோவில்

இவை தவிர கடந்த இருநூறு ஆண்டுகளில் எழுந்த புதிய கோவில்களும் உள்ளன.

****

Maddi Anjaneya Temple மட்டி ஆஞ்சனேயர் கோவில்

மாவட்டத்திலுள்ள முக்கிய ஆஞ்சாசனேயர் கோவில் குரவைக்கூடம் என்னுமிடத்தில் உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத் தலைநகரான ஏழூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் குரவைக்கூடம் அமைந்துள்ளது

மட்டி என்று தெலுங்கு மொழியில் சொல்லப்படும் மருதமரத்தின் அடியில் அனுமன் இருப்பதால் இதை மட்டி ஆஞ்சனேயர் கோவில் என்பார்கள்.

இந்த இடத்தை ஜனரெட்டிகுடம் என்றும் சொல்கிறார்கள்  ரெட்டி ராஜு சிற்றசர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வணங்கினர்.

ராவணனிடம் பணிபுரிந்த ஒரு அசுரன் அனுமன் பக்தன் என்றும் அவனே பின்னர் இங்கு வந்து  குரங்காகப் பிறந்து வேண்டியதன் பெயரில் அனுமன் தோன்றியதாகவும் தல புராணம் சொல்லும்;  மட்டி மரத்துக்கு அடியில் அமர்ந்த நிலையில் அனுமன் ,ஒரு கையில் பழத்தையும் இன்னுமொரு கையில் கதையையும் ஏந்தியவாறு தரிசனம் தருகிறார்

எல்லா இந்துப் பண்டிகை தினங்களில் பக்தர்கள் வந்தாலும் ராம நவமி ,அனுமன் ஜெயந்தி போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருகுகிறது

****

Mavullamma   Temple, BHIMAVARAM பீமாவரம்

கடந்த இருநூறு ஆண்டுகளாக மாவுலம்மா வழிபாடு பிரபலம் ஆகியுள்ளது . முதலில் வீதியில் ஒரு அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் இடையில் வழிபடப்பட்டாள்.  ஜ்யேஷ்ட மாதத்தில் ஒரு மாத கால உற்சவம் நடக்கும்போது பீமாவரம் நகரமே விழாக்கோலம் பூணும் .

வட்டார வியாபாரிகள் சங்கம் பிரபல கலைஞர்களையும் பேச்சாளர்களையும் அழைத்தது தினமும் செவிக்கு விருந்து படைக்கிறார்கள் .

தேவியின் உருவம் சக்தி வாய்ந்த கண்களுடன் காட்சி தருகிறாள்.. .

பொங்கல் /சங்கராந்தி நேரத்திலும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள். வெளியேயுள்ள கடைகளில் வேண்டிய பொருட்களை வாங்கும் வசதி இருக்கிறது . முன்னர் உக்ரமான வடிவில் இருந்த சிலையை ஸ்ரீ கிராந்தி அப்பராவ் சுமுகமான ,சாந்தமான சிலையாக வடிவமைத்தார்.

****

Gunupudi Someswara Janardhana Swamy Temple:

பீமாவரம் நகரிலுள்ள முக்கியக் கோவில் குனுபுடி சோமேஸ்வர ஜனார்த்தன  சுவாமி கோவில் ஆகும்.

பஞ்சராம கோவில் வரிசையில் இது சோமராம கோவில்.  எனப்படும்.

இருபதே கிலோமீட்டர் தொலைவில் பாலகொல்லுவில் இன்னும் ஒரு பஞ்சராம கோவில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய முடிகிறது .

இவைகள் சிவன் கோவில்கள்.  சோமேஸ்வர லிங்கத்தை  சந்திரன் (சோமன்)  நிறுவியதாக தல புராணம் சொல்லும்.  நாலாவது நூற்றாண்டில், சாளுக்கிய மன்னன் பீமன் காலத்தில்  இதன் வரலாறு துவங்குகிறது. லிங்கத்தின் நிறம் அமாவாசை , பெளர்ணமி தினங்களில் மாறுகிறது  கருவறைக்கு மேலே அன்னபூரணி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆதிலட்சுமி, கந்தன், கணேசர் சூரியன் சந்நிதிகளும் இடம்பெறுகின்றன. ராம பிரானுக்கும் அனுமனுக்கும் தனியே சந்நிதிகள் இருக்கின்றன.

****

பாலகொல்லு சிவன் கோவில்

பாலகொல்லு சிவன் கோவிலை க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில் என்று அழைக்கிறார்கள். சிவலிங்கத்தை நாலாபுறமுள்ள ஜன்னல்கள் வழியாகவும் தரிசிக்கும் படி கருவறை அமைக்கப்பட்டது இதன் சிறப்பு ஆகும்   விஷ்ணுவே நிறுவிய லிங்கம் என்பதால் ராமலிங்கம் பெயர் வந்தது  இங்குள்ள ஏனைய சந்நிதிகள் :  துர்கா, லெட்சுமி, சப்த மாத்ரிகா, நடராஜர்,கணேசன், கந்தன் , சனீஸ்வரன், பிரம்மா. கோவில் கோபுரம் ஆந்திரத்திலுள்ள பழமையான கோவில்களில் மிக உயமான கோபுரத்தைக் கொண்டுள்ளது ஒன்பது நிலைக்கு கோபுரத்தின் உயரம் 120 அடி.

சிவலிங்கம் பாற்கடலின் வெண்மை நிறத்தை உடையது . அருகில் ஓடும் நதி நரஸாபூரில் கோதாவரியுடன் சங்கமிக்கிறது  கோவிலில் கருங்கற்களில் சமைக்கப்பட்ட 72 அழகான தூண்களும் உள்ளன

*****

அருகில் மேலும் சில சிவன் கோவில்களும் இருக்கின்றன.

ஜூட்டிகா, நட்ட ராமேஸ்வரம் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை .  நட்ட ராமேஸ்வர கோவிலில் கடல் கிளிஞல்களால்  ஆன சிவலிங்கம் உளது . Juttiga and Natta Rameswaram (Dakshina kasi):

****

பாலகொல்லுவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது

Sri Vasavi Kanyakaparameswari Temple, Penugonda:

அருகில் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கும் நாகேஸ்வர சுவாமி கோவிலும் பார்க்க வேண்டிய ஆலயம் ஆகும்.

****

Famous Temples in West Godavari

Sri Venkateswara Swami Vari Devasthanam.

Sri Venkateswara Swamy Temple.

Ksheera Ramalingeswara Swamy Temple.

Sree Kota Sattemma Ammavari Temple. …

Vasavi Matha Temple.

New Vasavi Kanyaka Parameswari Temple. …

Ratnalamma Temple.

Veerabhadra Temple

–subham—

Tags- பீமாவரம் கோவில்கள் , பஞ்சராம கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற  108 கோவில்கள், Part 46