Here are more cartoons from the Deccan Chronicle Newspaper up to 22nd November 2024
Posted by London Swaminathan on 22-11-2024
—subham—
cartoons22112024, deccan chronicle.
Here are more cartoons from the Deccan Chronicle Newspaper up to 22nd November 2024
Posted by London Swaminathan on 22-11-2024
—subham—
cartoons22112024, deccan chronicle.
Posted by Tamil and Vedas on November 22, 2024
https://tamilandvedas.com/2024/11/22/ten-more-good-cartoons-from-deccan-chronicle-22-11-2024/
Dogs takn to slaughter houses
Post No. 13,918
Date uploaded in London – 22 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Snake Blood served hot and fresh in Glass
ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி, நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கத்தினை ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் உபதசத்திலுள்ள ஒரு சம்பவத்தின் மூலம் அறியலாம்.
தென் கொரியர்கள் ஆண்டுக்குப் பத்து லட்சம் நாய்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்; சீனர்கள் உயிருள்ள பாம்புகளின் ரத்தத்தைக் குடிக்கிறார்கள்; பல்லி , கரப்பு, தேள் இவைகளைச் சாப்பிடுகிறார்கள். நகரும் எந்த ஜந்துவும் அவர்களுப் பிடிக்கும் என்பது முது மொழி; அந்த வரிசையில் வாம தேவரைச் சேர்த்துவிடக்கூடாது அவர் பெரிய ஞானி; ரிக் வேதமோ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பேராசிரியர் வில்சனின் கணிப்பு. இல்லை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது விஞ்ஞானிகளின் துணிபு. மேலும் இது போன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டுதான் உள்ளன .
ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் நாலாவது மண்டலம் வாமதேவ ரிஷியின் பெயரில் அமைந்துள்ளது அவரது தெய்வீகக் கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன அவர் பசி வந்தபோது நாயின் குடல்களைச் சாப்பிட்டதாக ரிக் வேதம் பாடுகிறது. மனிதர்களுக்குப் பசிக்கொடுமை வந்துவிட்டால் என்ன செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மனு ஸ்ம்ருதியும் (10-106 )அந்த நாய் மாமிச சம்பவத்தைக் குறிப்பிடுகிறது
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பதைத் தமிழ்ப்புலவர்களும் பாடியுள்ளனர்; அதாவது பத்து நல்ல குணங்களைக் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்; ஆனால் வாமதேவ ரிஷி சாதாரண மனிதர் அல்ல;. அவருடைய புகழ் ரிக்வேதத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் உள்ளது.
உண்மையான விளக்கம் என்ன வென்றால், ஞானிகளுக்கு உடல் என்பது வெறும் அழுக்குச் சட்டை போன்றது; இதை பகவத் கீதையிலும் கிருஷ்ணன் கிழிந்த ஆடை — வாஸாம்ஸி ஜீர்ணானி — என்று வருணிக்கிறார் திருவாசகத்தில், தேவாரத்தில், சித்தர் பாடல்களில் மலம் சேரும் ஒன்பது வாயில் குடிலினைக் காண்கிறோம் ஆகவே ஞானிகளுக்கு உடல் ஒரு பொருட்டல்ல; மேலும் அவர்கள் சில நேரங்களில் பைத்தியக் காரன் போலவும் , குழந்தைகள் போலவும், குடிகாரர்கள் போலவும் நடந்து கொள்வார்கள் என்று ராம கிருஷ்ண பரம ஹம்ஸர், பல சம்பவங்கள் மூலம் நமக்குக் காட்டுகிறார்.
Rig Veda 4.18.13
अव॑र्त्या॒ शुन॑ आ॒न्त्राणि॑ पेचे॒ न दे॒वेषु॑ विविदे मर्डि॒तार॑म् । अप॑श्यं जा॒यामम॑हीयमाना॒मधा॑ मे श्ये॒नो मध्वा ज॑भार ॥
अवर्त्या शुन आन्त्राणि पेचे न देवेषु विविदे मर्डितारम् । अपश्यं जायाममहीयमानामधा मे श्येनो मध्वा जभार ॥
avartyā śuna āntrāṇi pece na deveṣu vivide marḍitāram | apaśyaṃ jāyām amahīyamānām adhā me śyeno madhv ā jabhāra ||
English translation:
“In extreme destitution I have cooked the entrails of a dog; I have not found a comforter among the gods; I have beheld my wife disrespected; then the falcon, (Indra), has brought to me sweet water.” (Amruta).
*****
பகவத் கீதை
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || 2-22||
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா₂ விஹாய
நவானி க்₃ருஹ்ணாதி நரோ ’பராணி
ததா₂ ஸ²ரீராணி விஹாய ஜீர்ணான்
அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ பகவத் கீதை 2-22
ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை( ஜீர்ணானி வாஸாம்ஸி) அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது. பகவத் கீதை 2-22
****
நாயுடன் எச்சில் இலையில் சாப்பிட்ட சாது!
Final minute for this dog
ஒரு சமயம் பகவத் பிரேமையில் ஈடுபட்ட சாது ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (ரா.கி.ப) தங்கியிருந்த ராணி ராசமணியின் காளி கோவிலுக்கு வந்திருந்தார்; அவருக்கு ஒரு நாள் முழுதும் ஆகாரம் கிடைக்கவில்லை. பசியோடு இருந்தபோதும் தமக்கு சாதம் வேண்டும் என்று அவர் ஒருவரையும் கேட்கவில்லை . ஆனால் ஒரு மூலையில் எறியப்பட்ட எச்சில் சோற்றை ஒரு நாய் சாப்பிடுவதைக் கண்டு அங்கே சென்று அந்த நாயைத் தழுவிக்கொண்டு , “தம்பி ! எனக்கு கொடுக்காமல் நீ மட்டும் உண்பது எப்படி?” என்று சொல்லிக்கொண்டு அந்த நாயுடன் சாப்பிட ஆரம்பித்தார் ; இப்படிச் சாப்பிட்ட பின், அவர் காளி கோவிலுக்குள் நுழைந்து மிகுந்த பகுதி பரவசத்துடன் கோவில் முழுதும் ஆனந்த உணர்ச்சி நிரம்பும்படியாக ஸ்தோத்திரம் பண்ணத்தொடங்கினார் . பிறகு அவர் வெளியே செல்லும்போது பரமஹம்சர், தமது உறவினரான ஹிருதய முகர்ஜியை அந்தச் சாதுவுவின் பின்னால் போகும்படியும் அவர் சொல்வது, செய்வது, எல்லாவற்றையும் தன்னிடம் செல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.
ஹிருதயும் அப்படியே அவர் பின்னால் சென்றார் ; சிறிது தூரம் போன பின், அந்த சாது திரும்பிப் பார்த்து ஏனப்பா என் பின்னால் வருகிறாய்? என்று கேட்டார் சுவாமி எனக்கு ஒரு உபதேசம் செய்தருள வேண்டும் என்றார் ஹிருதய் .
அதற்கு அவர் “அப்பனே! இந்த அழுக்குப் படிந்த குட்டை நீரும், அதோ பெருக்கெடுத்து ஓடும் சர்வ பாப நாசினியாக கங்கையின் நீரும் ஒன்றென உனக்குத் தோன்றும்போதும் வீணா கானமும் அதோ அந்த தெருக்களில் கேட்கும் ஜனசந்தடியும் உன் காதுகளில் வித்தியாசம் இல்லாமல் கேட்கும்போதும் தான் உனக்கு உண்மையான ஞானோதயம் உண்டாகும்” என்றார். இதைக் கேட்டுவந்து, ஹிருதய் பகவானிடம் (ரா.கி.ப) சொன்னபோது அவர், அந்த சாது உண்மை ஞானத்ததையும் பிரேமையையும் பெற்றிருக்கிறார்; சித்தர்கள் குழந்தைகளைப் போலவும் பெ,,,,,,ய்களைப் போலவும், அத்தோடு பைத்தியக்கார்களைப் போலவும் இன்னும் பலவித வேஷங்களுடனும் அங்குமிங்கும் அலைந்து திரிவார்கள் என்றார் .
இந்த சம்பவம் மட்டுமின்றி, ஸ்ரீ ராகிருஷ்ணரே பலவித சமய சம்பிரதாயங்களை பின்பற்றி பயிற்சி சாதனைகளை செய்தபோது எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதையும் பார்க்கும் போது வாமதேவரும் ஏன் நாய் மாமிசம், சாப்பிட்டார் என்பது புரிகிறது
நீதி- ஞானிகள் உபாதேசத்தைப் பின்பற்று; அவர்கள் செய்வதை எல்லாம் தகுந்த ஞானம் ஏற்படும்வரை செய்யாதே!
–subham—
Tags- ரிக்வேதப் புலவர் ,வாமதேவ ரிஷி, நாய் மாமிசம், ,புது விளக்கம், ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்
Posted by Tamil and Vedas on November 22, 2024
https://tamilandvedas.com/2024/11/22/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/
Post No. 13,917
Date uploaded in London – 22 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள் பகுதி 45
விநாயகரை வழிபடும் புராதன கோவில்களில் பிக்கவோலு Bikkavolu Vinayaka Temple) சிறப்பிடம் பெறுகிறது; காரணம் என்னவெனில் இது பழமையான பிள்ளையார் கோவில்; மேலும் ஏழு அடி உயரத்திற்கு கணபதி காட்சி அளிக்கிறார். அத்தோடு இது ஒரு தான் தோன்றி, அதாவது ஸ்வயம்பு சிலை.
இது காகிநாடாவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ளது இதை ராஜ மகேந்திரவரத்திலிருந்ததும் அடையலாம்; சுமார் நாற்பது கி.மீ
இதன் வரலாறு 849 CE ஆம் ஆண்டில் துவங்குகிறது
இந்தக் கோவில் பற்றிய மூன்று சுவையான விஷயங்கள்
1.பிள்ளையார் சிலை வளருகிறது
2. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை ரகசியமாக பிள்ளையார் காதில் ஓதுகிறார்கள்
(ஏனைய கோவில்களில் நந்தியின் காதில் இவ்வாறு ஆசை அபிலாஷைகளைத் தெரிவிப்பதைக் காணலாம்)
3.மூன்றாவது விசேஷம்- கணபதி காலிலிருந்து நீரூற்று வருகிறது
இயற்கையே பிள்ளையாரின் மகிமையை இவ்வாறு அலங்கரிக்கிறது; அங்கீகரிக்கின்றது போலும்! விநாயகர் சிலை மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த வட்டாரத்தத்தில் பல கோவில்களை கீழைச் சாளுக்கிய வம்ச மன்னர்கள் கட்டினார்கள் கிராமத்திற்கு பிருத்தாங்கினவோலு என்ற பெயரும் உண்டு. மூன்றாம் விஜயாதித்யன் பெயரில் கிராமம் இருக்கிறது
****
கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்
மூன்று சிவன் கோவில்கள் இங்கே இருக்கின்றன அவைகளில் ஒன்று கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில். .(SRI GOLINGESWARA SWAMI VARI TEMPLE, BICCAVOLU ). ஏனைய இரண்டு கோவில்கள் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில், சந்திர சேகர சுவாமி கோவில் ஆகும்; எல்லாக் கோவில்களும் ஆயிரம் ஆண்டு அல்லது அதற்கு மேல் வரலாறு உடையவை.
கோ லிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால் கரு வறையில் அழகான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது ;சுற்றிலும் சிற்பக் களஞ்சியம்தான். வாயில் புடையில் நீண்ட 33 வரி சாசனத்தைப் பொறித்துள்ளார்கள் . இன்னும் ஒரு சிறப்பு ஆலிங்கன நிலையில் சிவனையும் பார்வதியையும் செதுக்கியுள்ளார்கள் இது முக மண்டபத்தில் இருக்கிறது . விமானம் ஒரிஸ்ஸா பணியில் இருக்கிறது சில சிலைகள் கஜுராஹோ (காமக் கலை) சிற்பங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
ராஜ ராஜேஸ்வரி ஆலயம்
இந்த ஆலயத்தில் சிவலிங்கமும் ராஜேஸ்வரியும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் சுற்றியுள்ள பிறைகளில் / மாடங்களில் கணபதி, மயில் மீதரமர்ந்த முருகன், மஹிஷாசுர மர்த்தனி ஆகியோர் உள்ளனர் .
சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சந்திரசேகரனையும் பாலா திரிபுர சுந்தரியையும் தரிசிக்கலாம்; மகர தோரணங்களுடன் மண்டபம் காட்சிதருகிறது.
கணேசரையும் மறுபுறம் லட்சுமியையும் காட்டும் ஒரு சிற்பம் இங்கிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கிராமத்துக்கு வெளியே இருக்கும் சிவன் கோவிலில் சிவபிரானின் சதுரங்க நடனத்தைக் காணலாம் .
சின்னச்சின்ன கோவில்களாக வயல்வெளி முழுதும் நிறைந்திருக்கும் ஆலயங்களில் கங்கை யமுனா நதி தேவதைகளின் சிற்பங்கள், பல்லவ, ராஷ்டிரகூட பாணி விமானங்கள் ஆகிய யவற்றையும் தொல் பொருட் துறை அறிஞர்கள் பட்டியலி ட்டுள்ளார்கள்.
–subham—
Tags- பிக்கவோலு விநாயகர் கோவில்,ஆந்திர மாநில , புகழ்பெற்ற கோவில்கள் ,பகுதி 45 , கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்
Posted by Tamil and Vedas on November 22, 2024
https://tamilandvedas.com/2024/11/22/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b2%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.916
Date uploaded in London – –22 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kalkionline-ல் 14-11-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. Kalkionline-ல் கல்கி, மங்கையர் மலர், தீபம், கோகுலம் உள்ளிட்ட பத்திரிகைகளைப் படிக்கலாம்.
பூமியில் உங்கள் வயது 60 என்றால் புதனில் உங்கள் வயது 249! ஓஓ!!
ச.நாகராஜன்
சஷ்டி அப்த பூர்த்தி விழாவில் கலந்து கொண்ட நீங்கள், உங்கள் நண்பரிடம் பூமியில் உங்கள் வயது அறுபது என்றால் புதனில் உங்கள் வயது 249 வருடம் என்று சொல்லுங்கள்.
பிரமிப்பார்!
தொடர்ந்து சுக்ரனில் 97, செவ்வாயில் 31, வியாழனில் 5 வயது சனியில் இரண்டு வயது என்று சொல்லுங்கள்.
பிரமித்துப் போவார்.
கீழே உள்ள அட்டவணை அனைத்து அறிவியல் விவரங்களையும் தருகிறது.
கிரகம் மனித வயது Rotation
சுழல் முறை Revolution
சுழற்சி
பூமி 60 வயது ஒரு நாள் ஒரு வருடம்
புதன் 249.12 வயது 58.6 நாட்கள் 0.2408 வருடம்
சுக்ரன் 97.53 வயது 243 நாட்கள் 0.61562 வருடம்
செவ்வாய் 31.90 வயது 1.025 நாட்கள் 1.8809 வருடம்
குரு (வியாழன்) 5.06 வயது 0.41 நாட்கள் 11.862 வருடம்
சனி 2.04 வயது 0.45 நாட்கள் 29.458 வருடம்
யுரேனஸ் 0.71 வயது 0.67 நாட்கள் 164.79 வருடம்
நெப்ட்யூன் 0.36 வயது 6.39 நாட்கள் 248.54 வருடம்
நீங்கள் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்களில் இளமையுடன் இருப்பீர்கள்.
புதனிலும் சுக்ரனிலும் வயதானவராய் இருப்பீர்கள்.
இதுவே பூமியில் உங்கள் வயது நூறு என்றால் இதர கிரகங்களில் வயது என்ன?
இதோ அட்டவணை:
கிரகம் மனித வயது Rotation
சுழல் முறை Revolution
சுழற்சி
பூமி 100 வயது ஒரு நாள் ஒரு வருடம்
புதன் 415.05
வயது 58.6 நாட்கள் 0.2408 வருடம்
சுக்ரன் 162.33 வயது 243 நாட்கள் 0.61562 வருடம்
செவ்வாய் 53.16 வயது 1.025 நாட்கள் 1.8809 வருடம்
குரு (வியாழன்) 8.48 வயது 0.41 நாட்கள் 11.862 வருடம்
சனி 3.40 வயது 0.45 நாட்கள் 29.458 வருடம்
யுரேனஸ் 1.19 வயது 0.67 நாட்கள் 164.79 வருடம்
நெப்ட்யூன் 0.61 வயது 6.39 நாட்கள் 248.54 வருடம்
இதற்கான அறிவியல் காரணம் என்ன?
மனிதர்கள் பொதுவாக தங்கள் வயதை ஆண்டுகளிலேயே கணக்கிடுகிறார்கள். இதர கிரகங்களில் உங்களின் வயது அந்த கிரகங்களின் ஓடுபாதையைப் (ORBIT) பொறுத்தே அமைகிறது.ஆகவே தான் பூமியில் 60 என்றால் புதனில் 249 என்று ஆகிறது. கிரகங்கள் சூரியனை வெவ்வேறு கால அளவில் சுற்றுகிறது. ஆகவே ‘ஒரு வருடம்’ என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறான கால அளவு. சுழற்சி வேகம் ஒவ்வொர் கிரகத்திற்கும் வேறு மாதிரியாக உள்ளது. இதனால் தான் மேலே உள்ள அட்டவணை வெவ்வேறு அளவைத் தருகிறது!
எனக்கு வயது இருபது என்றால் எப்படி மற்ற கிரகங்களின் வயதைத் தெரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம்.
இணைய தளத்தில் கூகில் தேடலில் My Age in other planets
என்று டைப் செய்தால் வரும் அட்டவணையில் உங்கள் வயதை பதிவு செய்து கிரகம் வாரியாக வயதைப் பெறலாம்.
சந்திரனைப் பொறுத்த மட்டில் அதன் ஒரே முகத்தைத் தான் நாம் பார்க்கிறோம். ஏனெனில் அதன் சுழற்சி 29.53 பூமி நாட்கள். பூமி 24 மணி நேரத்தில் தன் சுழற்சியை முடிக்கும் போது சந்திரன் சூரிய உதயத்தை 709 மணி நேரங்களில் பார்க்கிறது.
ஆகவே பூமியில் உங்கள் வயது 60 என்றால் சந்திரனில் 742.11.
பூமியில் நூறு என்றால் சந்திரனில் 1236.85
நிலாவிலே உல்லாசமாய் ஆடலாம்!
சல்லாபமாய் பாடலாமா?!!!
***
Posted by Tamil and Vedas on November 22, 2024
https://tamilandvedas.com/2024/11/22/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-60-%e0%ae%8e%e0%ae%a9/
Post No. 13,915
Date uploaded in London – 21 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
| 1 | 2 | ||||
| X | X | X | X | X | |
| 3 | 4 | ||||
| X | X | X | X | ||
| X | 5 | X | X | ||
| 6 | |||||
| X | X | X | X | X | |
| 7 |
Across
1.Maharashtra, Andhra have saints with this name.
4.(left to right)Rajasthan city named after Ajaya Meru or AJamila
6.Long sound means food; short sound means first letter in Indian alphabets; also Brahmin street
7.one of the Hindu trinity with four heads
****
Down
2.Greatest archer of ancient India
3.Common name for Kalyani, Todi, Bhairavi, Malkauns etc
5.Wife of Vali in Ramayana , Kishkinda kanda
********
—Subham—
Tags- Hinduism Puzzle 21112024
Posted by Tamil and Vedas on November 21, 2024
https://tamilandvedas.com/2024/11/21/109681/
Post No. 13,914
Date uploaded in London – 21 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்!
குறுக்கே வலம் இடமாக செல்க
1 சுவாமிநாதன் இருக்கும் kunru
3. தமிழ்நாட்டில் மிருதங்கம்; ஆனால் வடக்கத்திய கச்சேரிகளில்……….
5.முனிவர் என்பதை சம்ஸ்க்ருதத்தில் அழைக்கும் சொல் *******
மேலிருந்து கீழே செல்க
1.நால்வரில் ஒருவர்;திருவாரூர் காரர்
௨சீதை பிறந்த ஊர்
****
கீழிருந்து மேலே செல்க
4.அய்யங்கார்களில் U வடிவ நாமம் போடும் பிரிவு *************
| 1 | 2 | |||
| xxxxxxxxxxxx | xxxxxxxxxxxx | |||
| 3 | xxxxxxxxxxxx | |||
| xxxxxxxxxxxxx | xxxxxxxxxxxx | 4 | ||
| xxxxxxxxxxxxx | 5 | xxxxxxxxxxxxxxxx |
*******
விடைகள்
| சு 1 | வா | மி 2 | ம | லை |
| ந் | xxxxxxxxxxx | தி | xxxxxxxxx | க |
| த 3 | பே | லா | xxxxxxxxx | ட |
| ர | xxxxxxxxxxx | பு | xxxxxxxxx | வ 4 |
| ர் | xxxxxxxxxxx | ரி 5 | ஷி | xxxxxxxxxxxxxxxxx |
—-subham—
Tags– தமிழ் தெரியுமா21112024
Posted by Tamil and Vedas on November 21, 2024
https://tamilandvedas.com/2024/11/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-21112024-post-13914/
Picture from South Korea; Dogs are waiting for their final day.
Post No. 13,913
Date uploaded in London – 21 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri R K P- – Sri Ramakrishna Paramahamsa (RKP)
One of the famous poets of the Rig Veda is Vamadeva. When he was hungry, he ate dog’s meat. Tami poem says that when one gets hungry ten virtues will disappear. So, it is normally interpreted as the pain of hunger. But Vamadeva was a great saint. Vamadeva (Sanskrit: वामदेव, Vāmadeva) rishi (sage) is credited as the author of Mandala 4 of the Rigveda. He is mentioned prominently in the Upanishads as well, particularly the Brihadaranyaka and the Aitareya.
Manu Smrti refers to Vamadeva and dog meat in 10-106 on the basis of Rig Veda
Rig Veda 4.18.13
अव॑र्त्या॒ शुन॑ आ॒न्त्राणि॑ पेचे॒ न दे॒वेषु॑ विविदे मर्डि॒तार॑म् । अप॑श्यं जा॒यामम॑हीयमाना॒मधा॑ मे श्ये॒नो मध्वा ज॑भार ॥
अवर्त्या शुन आन्त्राणि पेचे न देवेषु विविदे मर्डितारम् । अपश्यं जायाममहीयमानामधा मे श्येनो मध्वा जभार ॥
avartyā śuna āntrāṇi pece na deveṣu vivide marḍitāram | apaśyaṃ jāyām amahīyamānām adhā me śyeno madhv ā jabhāra ||
English translation:
“In extreme destitution I have cooked the entrails of a dog; I have not found a comforter among the gods; I have beheld my wife disrespected; then the falcon, (Indra), has brought to me sweet water.” (Amruta)
Commentary by Sāyaṇa: Ṛgveda-bhāṣya
In extreme destitutuin: So Manu has, Vāmadeva, who well knew right and wrong, was by no means rendered impure, though desirous when oppressed with hunger, of eating the flesh of dogs for the preservation of his life; icchan attum, wishing ot eat; the text has śuno āntrāṇi pece, I cooked the entrails of a dog; the falcon: i.e., as swift as a hawk, śyena vat śīghragāmīndraḥ; Sūkta 18: Ṛṣi vāmadeva, while yet in the womb, was reluctant to be born and chose to come into the world through his mother’s side; (Caesarean Operation) aware of his purpose, the mother prayed to Aditi, who thereupon came, with her son Indra, to expostulate with the Ṛṣi; this is the subject of the Sūkta
Here Caesarean Operation of Vamadeva’s mother is mentioned
****
South Korean’s eat one million dogs every year.
Anecdote from Sri Ramakrishna Paramahamsa (RKP)
Saint who ate with a dog!
by Swaminathan
Post No 872 Date: 27th February 2014
Many of the Western translators show us only the one side of the coin. We may get another interpretation from Sri R K P’s anecdote It is in the book Sayings of Sri Ramakrishna . For saints like Vamadeva body is a worn out clothe. Bhagavdgita described it as Vasaamsi Jeernaani
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || 2-22||
vāsānsi jīrṇāni yathā vihāya
navāni gṛihṇāti naro ’parāṇi
tathā śharīrāṇi vihāya jīrṇānya
nyāni sanyāti navāni dehī
As a person sheds worn-out garments and wears new ones, likewise, at the time of death, the soul casts off its worn-out body and enters a new one. B.G.2-22
Sri R K P himself narrates how he behaved when he practised various methods in the religious books. He also adds the saints behave like mad men, sometimes like children. We see it in Adi Shankara’s Viveka Chudamani as well.
****
From “Sayings of Sri Ramakrishna”, Sri Ramakrishna Math, Mylapore, Chennai.
“Once a god intoxicated Sadhu (saint) came to Rani Rasmani’s Kali temple where the Master was living. One day he did not get any food; and even though feeling hungry, he did not ask anybody for it; but seeing the dog eating the remnants of food thrown away in a corner after a feast, he went there and embracing the dog said, “Brother, how is it that you eat alone without giving me a share?” So , saying, he began to eat along with the dog. Having finished his meal in this strange company, the sage entered the temple of Mother Kali and prayed with such earnestness of devotion as it sent a thrill through the temple. When after finishing his prayers, he was going away, the Master (Sri Ramakrishna Paramahamsa) asked his nephew Hriday, to follow that man, and talk with him.
When Hriday followed him for some distance, the sage turned around and said, “Why do you follow me?” Hriday replied, “Sir, give me some instruction”. The sage said, “When the water of this dirty ditch and the Holy Ganges yonder appear as one in your sight, and when the sound of the flageolet (musical instrument) and the noise of the crowd will have no distinction to your ear, then you will reach the state of true Knowledge. A Siddha roams in various disguises – as a child, as an unclean spirit, or even as a mad man”.—Sri Ramakrishna
—Subham—
Tags- Dog meat, Vamadeva, Rig Veda, Manu Smriti, Saint, ate with dog, strange behaviour, Sri Ramakrishna Paramahamsa
Posted by Tamil and Vedas on November 21, 2024
https://tamilandvedas.com/2024/11/21/how-did-vedic-poet-vamadeva-eat-dog-meat-sri-r-k-p-explains-post-no-13913/
Post No. 13,912
Date uploaded in London – 21 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாய் மீது கவிதை
பரதனுக்கு கேகய நாட்டு மன்னன் நிறைய தங்கம், ரத்தினம் யானை, குதிரைகளை அளித்ததோடு மிகப்பெரிய நாய்களையும் பரிசளித்தான் என்று வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. அந்த நாய்கள் அரண்மனை வாசலுக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாம்!
இதே போல தமிழ்நாட்டில் ராஜபாளையம் நாய்களும் மிகவும் பிரசித்தம், வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுவதையும் அவை மான் கூட்டத்தைக் கலைத்து விரட்டும் அளவுக்கு வேகமாகச் செல்லக் கூடியவை என்றும் சங்க இலக்கியப்பாடல்கள் பாடுகின்றன.
பெர்னிக்கே என்பது எகிப்திய துறைமுகம். அங்கு டன் கணக்கில் இந்திய பொருட்கள் கிடைத்தன அவைகளில் முத்துக்கள், இரத்தின மணிகள், யானைகள், இந்தியக் குரங்குகளின் எலும்புகள், தேக்கு, பருத்தித் துணிகள் முதலியன அடங்கும். தமிழன் ஒருவன் பிராமி லிபியில் தமிழ் தலைவன் கொற்றன் என்று எழுதியுள்ளான் பிராகிருத மொழியில் ஏனைய தென்னிந்தியர்கள் பெயர்கள் காணப்படுகின்றன
பாபிலோனைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் இந்திய வேட்டை நாய்களை ( Indian hounds) வளர்த்தார்கள் என்று ஹெரடோட்டஸ் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார். கடேசியஸ் (Ctesias) என்பவரும் இதைக் கவனித்து பாரசீகர்கள் இந்திய நாய்களை வளர்த்தத்தைக் கூறுகிறார். இவை கேகய நாட்டிலிருந்து ஈரான்/ பாரசீகம் வரை சென்றிருக்கலாம்.
கடேசியஸ் என்பவர் கிரேக்க நாட்டு டாக்டர் அவர் பாரசீக மன்னனிடம் பணிபுரிந்தவர். இந்தியா பற்றியும் எழுதியுள்ளார்
டாலமி பிலடெல்பஸ் (Ptolemy Philadelphus ) என்ற மன்னனின் பரிவாரத்தில் இந்திய வேட்டை நாய்களும் இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
பப்பைரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகள் கிடைத்துள்ளன அவை 2300 ஆண்டுகள் பழமையுடையவை; அதில் ஒரு நாய் அவரது எஜமானர் காட்டுப்பன்றியை வேட்டை ஆடியபோது அவரைக் காப்பாற்றுவதற்குத் தன்னுயிரை கொடுத்தது இதனால் அவைகளின் கல்லறை மீது இரண்டு கவிதைகள் பொறிக்கப்பட்டன.
பப்பைரஸ் என்ற புல் போன்ற தாவரத்திலிருந்து எகிப்தியர்கள் காகிதம் தயாரித்ததால் பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது
****
நாய்க்கு ஒரு கல்வெட்டு ; நாய் மீது தமிழர்கள் அன்பு
உலகத்திலேயே முதல் முதலில் நாயைக் கவிதையில் ஏற்றிய புகழ் ரிக்வேதத்துக்கு உண்டு சரம/ சரமேயஸ் என்ற நாயை ரிக்வேதம் பாடியது அதை கிரேக்கர்கள் திருடி ஹெர்மஸ் என்றனர். ஏனெனில் அவர்கள் மொழியில் ‘ச’ எழுத்து கிடையாது; இதனால்தான் சிந்துவை ஹிந்துவாக்கி நமக்கும் அந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஆனால் உலகிலேயே முதல் முதலில் நாய்க்கு கல்வெட்டு வைத்தவன் தமிழன்.
உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி எழுதிய செங்கம் நடுகற்கள் என்ற புஸ்தகத்தில் இதைச் செப்பியுள்ளார் கோவிவன் என்ற பெயருள்ள நாய்க்கு எழுப்பிய கல்வெட்டு அது
அது மாமன்னன் மஹேந்திர பல்லவன் காலத்தில் வடஆற்காடு செங்கம் வட்டாரத்தில் எடுத்தனுரில் வாழ்ந்தது. அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.624-ல் வாழ்ந்தது.
திருடர்கள் பசுமாடுகளைத் திருடிச் செல்ல வந்த பொழுது தன்னை வளர்த்த கருந்தேவக் கத்தி என்பானைக் காக்க கோவிவன் போராடியது. ஆயினும் கள்ளர்களின் தாக்குதலில் நாயும் அதை வளர்த்த எஜமானனும் இறந்துபட்டனர். இருவருக்கும் சமைத்த நடுகல் மூலம் நாம் இந்த வரலாற்றை அறிகிறோம்.
****
ஒரே நகரில் 220 கல்வெட்டுகள்
சுகோத்ரா (Socotra) என்னும் தீவு இந்து மஹாசமுத்திரத்தில் (Yemen) யேமன் நாட்டில் உள்ளது. சவுதி அரேபியா அருகில் இருக்கிறது
The Hoq Cave contains a large number of inscriptions, drawings and archaeological objects. Further investigation showed that these had been left by sailors who visited the island between the first century BCE and the sixth century CE
அங்குள்ள ஹக் குகையில் சுமார் 220 கல்வெட்டுகள் இருக்கின்றன; ஆப்பிரிக்காவை நோக்கிச் செல்லும் கப்பல் பயணிகளும் மாலுமிகளும் வியாபாரிகளும் அங்கு இறங்கி தீர்ந்து போன பொருட்களை ,பண்டங்களை நிரப்பிக் கொண்டதாகத் தெரிகிறது . அங்கு சுமார் 220 கல்வெட்டுகள் பாரசீக, அராபிய, எபிரேய , இந்திய மொழிகளில் உள்ளன. பெரும்பாலான எழுத்துக்களும் பெயர்களும் குஜராத்திகளால் விடப்பட்டுள்ளன; பிராமி லிபியில் அவை உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் அவை பொறிக்கப்பட்டன. குஜராத்தின் பாருக்கச்ச — ப்ரோச்– துறைமுகத்திலிருந்து அவர்கள் சென்றிருக்க வேண்டும் 192 கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும், பாக்ட்ரியன் கரோஷ்டி எழுத்துக்களில் ஒவ்வொன்றும் உள்ளன. கிரேக்க மொழியில் இரண்டு குறிப்புகள்தான் உள்ளன. இந்துக்கள் எந்த அளவுக்கு வியாபாரம் செய்தனர் என்பதை கல்வெட்டுகளின் அபார எண்ணிக்கை காட்டுகிறது. லத்தீன் மொழியில் ஒரு கல்வெட்டும் இல்லாததால் இந்துக்கள்தான் எகிப்துக்கும் இத்தாலிக்கும் சென்று வியாபாரம் செய்தனர் என்றும் ஊகிக்கலாம்.
அங்கு காணப்பட்ட பெயர்கள்
காஞ்ச என்ற வியாபாரியின் மகன் விஷ்ணு, , மாலுமி ஸ்கந்தபூதி, பத்ரா ஆகியோர் தங்கள் பெயர்களை பொறித்தனர்; இதைப் பார்கையில் பொரித்த இந்துக்கள் ஸ்வஸ்திகா, த்ரி சூலம் ஸ்தூபங்கள் ஆகியவற்றையும் வரைந்துள்ளனர் மூன்று பாய்மரங்கள் உள்ள கப்பல்களையும் வரைந்துள்ளதால் பெரிய கப்பல்கள் என்பது தெரிகிறது. ராதா கிருஷ்ணன் பெயரில் பிரார்த்தனையும் இருக்கிறது ; ஒரு புத்த பிட்சு, புத்தர் மீதான பிரார்த்தனையையும் விட்டுச் சென் றுள்ளார். சுக + தரா த்வீப என்பது சுகோத்ரா என்று மருவியது சுகத்தினை நல்கும் தீவு என்பது சுகோத்ரா என மாறிவிட்டது
சிரியன் கிறிஸ்தவர்கள் சிலுவைச் சின்னத்தையும் வரைந்துள்ளனர்
கடற்பயணம் சென்றோர் எவ்வளவு கடவுள் நம்பிக்கையுடன் சென்றனர் என்பதையும் சுவர் ஓவியங்களும் பிரார்த்தனைகளும் காட்டுகின்றன.
–subham—
Tags- நாய் மீது கவிதை , கோவிவன், நாய், கல்வெட்டு , Ptolemy Philadelphus Ctesias, 220 கல்வெட்டுகள், சுகோத்ரா, மத்தியக் கிழக்கு, நாடுகள் ,சுவையான
Posted by Tamil and Vedas on November 21, 2024
https://tamilandvedas.com/2024/11/21/109669/
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.911
Date uploaded in London – –21 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (20)
ராமாயணத்தில் வரங்கள் (20) ப்ரம்மா விராதனுக்கு வழங்கிய வரம்!
ச. நாகராஜன்
இனி ஆரண்ய காண்டத்தில் வரும் வரங்களைப் பார்ப்போம்.
ஆரண்ய காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘ விராதனை அடிப்பது” என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணனோடு ஆரண்யத்தில் புகுந்த போது பெரிய முகம் உடையவனும், பயங்கரமானவனும், மேடு பள்ளமான வயிறை உடையவனும், பார்க்கவே முடியாதவனும், வக்கிரனும், நீண்டவனும், விகாரமானவனும், கொடிய தோற்றமும் உடையவனும் புலித்தோலை உடுத்தவனும், ரத்தத்தினால் பூசப்பட்டவனும் வாயை யமன் போன்று பிளந்தவனுமான ஒருவன் பெரும் கூச்சலிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான்.
சீதையை அவன் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
“விராதன் என்னும் அரக்கனான நான் ரிஷிகளின் மாமிசங்களையே புசிப்பவன். அழகு வாய்ந்த இந்தப் பெண் எனக்கு மனைவியாகட்டும். உங்கள் இருவரின் ரத்தத்தையும் குடிப்பேன்” என்றான்.
“நீங்கள் யார்” என்று விராதன் கேட்க இக்ஷ்வாகு வசமத்தைச் சேர்ந்த க்ஷத்ரியர்கள் நாங்கள். நீ யார்? என்று ராமர் கேட்டார்.
அதற்கு விராதன் இவ்வாறு பதில் கூறினான்:
“புத்ர: கில ஜயஸ்மாஹம் மம மாதா சதஹ்ரதா |
விராத இதி மாமாஹு: ப்ருதிவியாம் சர்வராக்ஷஸா: ||
அஹம் – நான்
ஜயஸ்ய – ஜயன் என்பவனுடைய
புத்ர: – புதல்வன் என்று
கில – வதந்தி
மம – எனது
மாதா – தாய்
சதஹ்ரதா – சதஹ்ரதை என்பவள்.
ப்ருதிவியாம் – உலகில்
சர்வ ராக்ஷஸா: – அரக்கர்கள் அனைவரும்
மாம் – என்னை
விராத: இதி – விராதன் என்று
ஆஹு: – அழைப்பார்கள்
தபஸா சாபி மே ப்ராப்தா ப்ரஹ்மணோ ஹி ப்ரஸாதஜா |
சஸ்த்ரேணாவத்யதா \லோகேஸ்ஸேத்யா மேதத்வமேவ ச |\
மே – எனக்கு
தபஸா அபி – தவத்தால்
லோகே – உலகில்
சஸ்த்ரேண – ஆயுதத்தால்
அவத்யதா – சாவின்மை
ப்ரஹ்மண: – பிரம்மாவினது
ப்ரஸாதஜா ஹி – அனுக்ரஹத்தின் பயனாய்
ப்ராப்தா – கிடைத்திருக்கிறது
அச்சேதாம வரத்வம் ச – வெட்டமுடியாமையும் பிளக்கமுடியாமையும்
ஏவ ச – அங்ஙனமே கிடைத்திருக்கிறது.
ஆரண்ய காண்டம் மூன்றாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 5 & 6
என்று இவ்வாறு விராதன் பதில் உரைக்கிறான்.
பிரம்மாவினால் ஆயுதங்களால் தனக்கு மரணம் கிடையாது என்று தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான் விராதன்.
“ஓடி விடுங்கள்” என்று விராதன் கூற சினத்துடன் அவனை பாணத்தால் அடிக்கிறார் ஶ்ரீ ராமர். அவன் கை துண்டிக்கப்பட்டது. பிறகு அவன் ராம லக்ஷ்மணரை தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
ராமர், “தவ வலிமையால் இவன் போரில் ஆயுதத்தால் கொல்லப்படாதவனாக இருக்கிறான். ஆகவே இவனைப் பள்ளம் வெட்டிப் புதைத்து விடுவோம்” என்கிறார்.
உடனே விராதன் அவரை வணங்கி தனக்கு குபேரன் இட்ட சாபத்தைக் கூறுகிறான்.
ராமரால் அவன் உடலை நீத்து ஸ்வர்க்கம் அடைகிறான்.
இங்கு ப்ரம்மா தனக்கு தந்த வரத்தை விராதன் கூறுவதைப் பார்க்கிறோம்.
Posted by Tamil and Vedas on November 21, 2024
https://tamilandvedas.com/2024/11/21/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-20-%e0%ae%aa/
Post No. 13,910
Date uploaded in London – 20 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
| 1 | 2 | 3 | 4 | ||
| X | X | X | |||
| 5 | X | ||||
| X | X | X | |||
| X | X | X | X | ||
| 6 | 7 | ||||
| X | X | X | X | ||
| X | X | 8 |
Across
1.Avatar with …… on his shoulder (Sanskrit word)
5.English word Mega came from this (Sanskrit word)
6. Name of a Yādava, a friend and uncle of Kṛṣṇa. [It was he who induced Balarāma and Kṛṣṇa to go to Mathurā and kill Kaṃsa. Kṛṣṇa consented to go and promised to slay the demon within 3 nights, which he succeeded in doing.
8. Fire ceremony, Havan, Yaga (Sanskrit word)
****
Down
2.Kingless, so disorderly (Sanskrit word)
3.Netajis Army’s First word meaning Free, Independence, Urdu/Persian word
4.North, Reply (Sanskrit word)
7.Son of Dasaratha
*****
ANSWER/ SOLUTION
| P1 | A2 | R | A3 | S | U4 |
| x | R | x | Z | x | T |
| M5 | A | H | A | x | T |
| x | J | x | D | x | A |
| x | A | x | x | x | R |
| A6 | K | R | U | R7 | A |
| x | A | x | x | A | x |
| x | x | H8 | O | M | A |
–Subham–
Tags—Hindu Crossword Puzzle ,2011202.
Posted by Tamil and Vedas on November 20, 2024
https://tamilandvedas.com/2024/11/20/hindu-crossword-puzzle-20112024-post-no-13910/