PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM ,LAUSANNE, SWITZERLAND
நீண்ட காலமாக மனதில் இருந்த ஒரு கருத்தினைச் சொல்வதற்கு 17-11-2024 நாளன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. மதுரை திட்டம் (PROJECT MADURAI) ப்ராஜெக்ட் மதுரை என்ற வெப்சைட்டினை அறியாத தமிழர் இருக்க முடியாது ; அதை நிறுவி இன்றுவரை அதில் நீடித்துப் பணியாற்றும், சுவிட்சர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகப் பணியாற்றும், டாக்டர் கே கல்யாண சுந்தரத்தை பேட்டி கொடுக்க அழைத்திருந்தோம். அப்போது தமிழ் இலக்கிய நோபல் பரிசு பெறுவதற்கு உள்ள ஒரே அமைப்பு ப்ராஜெட் மதுரை என்ற ஞானமயம் குழுவினரின் ஏகோபித்த முடிவினையும் தெரிவித்தோம். இந்தக் குழுவில் 130- க்கும் மேலான தமிழ் நூல்களை எழுதிய பெங்களூரு நாகராஜன், 135- க்கும் மேலான தமிழ், ஆங்கில நூல்களை எழுதிய லண்டன் ச சுவாமி நாதன் போன்றோர் அடக்கம்.
ஒருவரையோ ஒரு அமைப்பினையோ இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தால் அதற்கு மறுக்க முடியாத காரணங்களையும் முன்வைக்க வேண்டும்.
டாகடர் கு. கல்யாண சுந்தரத்தைப் பேட்டி கண்ட போது லண்டன் சுவாமிநாதன் சொன்ன விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் தருகிறேன். முழு ஒளிபரப்பையும் பேஸ்புக், யு டியூபில் காணலாம்.
“உங்களை பேட்டி கொடுக்க அழைத்ததற்காக நான் இதைச் சொல்லவில்லை; உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் ப்ராஜெக்ட் மதுரை குழுவுக்குத்தான் இலக்கிய நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் சொல்லும் முக்கியக் காரணங்கள்:
1.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள்.
2).1500 நூல்களுக்கு மேல் இலவசமாக அளிக்கிறீர்கள்.
3.நூற்றுக்கணக்கனா தமிழ் ஆர்வலர்களை, தொண்டர்களை உருவாக்கி அவர்களின் படைப்புகளை உங்கள் தளத்தில் வெளியிட்டு வருகிறீகள்.
4.பணமோ புகழோ விரும்பவில்லை; பணத்தை உண்டாக்க இந்த தளத்தில் விளம்பரங்களையும் போடுவதில்லை.
5.எல்லாவற்றுக்கும் மேலாக காப்பி எடுக்க அனுமதிக்கிறீர்கள்.
6. குக்கிக்களை ஒப்புக்கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை.
****
இப்போது ஏனைய தளங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்லி விடுகிறோம் ; நேற்று வந்த யுனிவர்சிட்டி போல இல்லாமல் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக தமிழ் ஆர்வத்தில் இதைச் செய்யத் துணிந்தீர்கள்; ஏனைய தளங்கள் எல்லாம் — மன்னிக்கவும் ஒரு கொச்சையான சொற்றோடரைப் பயன் படுத்தப்போகிறேன்– அதாவது அவர்களில் பெரும்பாலோர் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளிகளால் செய்யப்படுகிறது; சிலப்பதிகாரத்தை டைப் செய்யும் போது மாத சம்பளம் கிடைக்கவில்லை என்றால் சிலப்பதிகாரம் முழுமை பெறாது!!
மேலும் பல இடங்களில் குக்கிக்களை ஒப்புக்கொள் என்று நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள்; இது நமது PRIVACY, பிரைவசி-யில் தலையிடும் விஷயம். ப்ராஜெக்ட் மதுரை அதைச் செய்யவில்லை.
மேலும் பலர் விளம்பரங்களை போட்டு காசு சம்பாதிக்கிறார்கள் அதை ப்ராஜெக்ட் மதுரை செய்யவில்லை.
பலர் தங்கள் பணிகளை காப்பி செய்ய அனுமதிப்பதில்லை இத் தனைக்கும் தமிழ் இலக்கியம் எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தங்கள் சொந்த சொத்துக்களாக நினைக்கிறார்கள்.
உங்களைப்போல இவ்வளவு நூல்களை யாரும் கொடுக்காவில்லை; முன்னர் சொன்னது போல கூலிக்கு மாரடிக்கும், அதாவது சம்பளம் வாங்கிக்கொண்டு செயல்படும் நிறுவனங்கள் வேண்டுமானால் அப்படி அளிக்க முடியும்.
மேலும் பல வெப்சைட்டுகள் பாதியில் ERROR / பிழை என்று துண்டிக்கப்படுகிறது; அதையும் உங்கள் தளத்தில் காணவில்லை.
பலரும் சென்ற இடமெல்லாம் தங்கள் அமைப்பின் பெயரைச் சொல்லி தமிழுக்குச் சேவை செய்வதாக தம்பட்டம் அடித்து வருகிறார்கள் ; தமிழை விட்டு விட்டு அவர்களுடைய படங்களை போட்டு வருகிறர்கள் ;உங்கள் அமைப்போ தொண்டர்களோ அப்படிச் செய்யவில்லை .
உங்களுக்கு இணையாக ஒருவரை மட்டுமே என்னால் ஒப்பிட முடியும் பட்டத்துக்கோ, பணத்துக்கோ, புகழுக்கோ ஆசைப்படாமல் ஊர் ஊறாகச் சென்று தமிழ் வளர்த்த உவே சாமிநாத அய்யர் போல உங்கள் குழு வேலை செய்கிறது; இன்னபிற காரணங்களால் உங்களுக்கே ,உங்கள் அமைப்புக்கே இலக்கிய நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று எங்கள் குழு விரும்புகிறது.
****
பேட்டியின் போது டாக்டர் கல்யாண சுந்தரம் அளித்த பதிலின் (முழு விவரங்களையும் பேஸ்புக், யூ ட்யூப்-பில் காண்க)
சுருக்கம் பின்வருமாறு:
36 ஆண்டுகளாக இந்தப்பணி நடக்கிறது நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இந்தப் பணியைச் செய்கின்றனர் , மாதத்துக்கு முப்பதாயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் புகழையோ, அங்கீகாரத்தையோ விரும்பி நடக்கும் பணி அல்ல இது. பலரைச் சந்திக்கும்போது அவர்களே பாராட்டுகிறார்கள் அமெரிக்காவிலுல்ள டாக்டர் ஹார்ட்டின் மனைவி திருமதி கெளசல்யா ஹார்ட் போன்றோர் பாராட்டினர்.
எதிர்காலத்தில் சிற்றிலக்கியங்களான பிரபந்தங்கள், கலம்பகங்கள் ஆகியவற்றையும் தளத்தில் ஏற்ற ஆசை. இந்தப் பணியில் ஈடுபட எல்லோரையும் வரவேற்கிறேன்.
****
லண்டன் சுவாமிநாதன் கேட்ட கேள்விகள்:–
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஞான மயம் ஒளிபரப்பில் பேசினீர்கள்; இப்போது ப்ராஜெக்ட் மதுரை பற்றிய புதிய செய்திகள் என்ன ?
நீங்கள் படித்ததோ ரசாயன இயல்; டாக்டர் பட்டம் வாங்கியதும் அதில் தான்; விஞ்ஞானியான உங்களுக்குத் தமிழில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
யார் யாரையோ அழைத்து உலகத் தமிழ் மகாநாடு நடத்தி மேடையில் ஏற்றி பொன்னாடை போர்த்துகிறார்களே; அப்படி உங்களுக்குத் பாராட்டுக்கள் ,அங்கீகாரம் கிடைத்ததா ?
இப்படிப்பட்ட பணியில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்
உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன ?
****
டாக்டர் கல்யாண சுந்தரம் மிகவும் பணிவுடன் பதில் கொடுக்கையில் துவக்க காலத்தில் உதவியோரின் பெயர்களைச் சொல்லி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்; எதிர்காலக் கனவுகளையும் முன்வைத்தார் .
குக்கி COOKKIES இல்லாமல், விளம்பரம் இல்லாமல், இடையில் ERROR கிராஷ் ஆகாமல், காப்பி எடுக்க அனுமதிக்கும் ப்ராஜெக்ட் மதுரை நூல்களை அனைவரும் பயன் படுத்திப் பயன் பெறவேண்டும் என்று ஞானமயம் குழு அன்புடன் வேண்டுகிறது.
–subham—
PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM LAUSANNE, SWITZERLAND, தமிழில், இலக்கிய நோபல் பரிசு, யாருக்கு? , ஞானமயம், தமிழ் ,டாக்டர் கல்யாணசுந்தரம், ப்ராஜெக்ட் மதுரை
சென்னை விழுப்புரம் இரயில் பாதையில் 56 கிலோமீட்டர் தொலைவில் செங்கற்பட்டு நிலையம் உள்ளது. நிலையத்திற்குத் தென்கிழக்கில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.
இறைவர் வேதகிரீஸ்வரர் மலைமேல் இருப்பவர்)
பக்தவத்ஸலர் (கீழ்க்கோயிலில் இருப்பவர்)
இறைவி :சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்:
திரிபுர சுந்தரி (கீழ்க்கோயிலில் இருப்பவர்)
அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.
தீர்த்தம் : சங்க தீர்த்தம் (சங்கு பிறந்த குளம்), பட்சி தீர்த்தம்.
இன்னும் இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம்,, வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம், அகலிகை, நந்தி, வருணம், சம்பாதி தீர்த்தம் என 12 தீர்த்தங்கள் உண்டு.
சந்நிதிக்கு எதிரில் உள்ள ‘சங்கு தீர்த்த’த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சங்கு’ பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு, அதிசயச் செய்திகளும் உண்டு.
வேதமே மலையாய் இருத்தலின் வேதகிரி என்ற பெயரை இது பெற்றது. 500 அடி உயரம் உள்ளது இந்த மலை.
தினந்தோறும் காலையில் இங்கு எழுந்தருளும் கழுகுகள் பக்தர்களைத் திரளாகக் கூட வைக்கின்றன.
கலியுகத்தில் பூடா, விருந்தா ஆகிய இருமுனிவர்கள் சிவபிரானை நோக்கி நெடுங்காலம் தவம் புரிந்தனர். மனம் மகிழ்ந்த சிவபிரான் அவர்களிடம் ஒரு கற்ப காலம் தன் மேனியருளில் இருந்து பின்னர் முக்தி அடையலாம் என்று கூறி அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு உடனே முக்தி வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனால் சிவபிரான், நம் திருவருளை மறுத்த நீங்கள் கழுகுகளாக மாறுங்கள் என சாபமிட்டார். வருந்திய முனிவர்கள் சாப விமோசனம் கேட்க,, “நீங்கள் காசியப முனிவரிடத்தில் கழுகுகளாகப் பிறந்து உங்களுடைய மூக்குகளால் இந்த மலையினைக் கீறினால் இங்கு ஆகாய கங்கை அலை வீச உண்டாகும். அந்த தீர்த்தத்தில் மூழ்கி எம்மை பூஜை செய்யுங்கள். கலியுக முடிவில் முக்தி அடையுங்கள்” என்று கூறி அருளினார்.
அதே போல கழுகுகளாகப் பிறந்த அவர்கள் இந்த மூக்கினால் மலையைக் கீற, ஒரு தடாகம் உண்டாகியது.
அன்றிலிருந்து அவர்கள் இந்த மலையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் இந்தத் திருப்பதிக்குத் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தக் கழுகுகள் ஆதி நாள் தொட்டு இன்றும் இங்கு வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கலாம். இந்தக் கழுகுகளின் பார்வையில் பட்டவர்கள் செய்த அனைத்துப் பாவங்களும் நசியும் என்பது ஐதீகம்.
இதற்கென உள்ள தனிப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் கூடி, காத்திருந்து கழுகளை தரிசனம் செய்கின்றனர்.
இங்கு திலோத்தமை, மாயீகன், சுரகுரு மன்னன்,கங்கபதி ஆகியோர் தங்கள் சாபம் நீங்கப் பெற்றது பற்றிப் பெரும் வரலாறுகள் உண்டு.
மலையின் கண் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்தியாகிய மலை மருந்தைப் பற்றி ஒரு பதிகமே எழுந்துள்ளது.
கள்ளம் வல்லார் என்பது இந்த மூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று. அதாவது திருட்டில் வல்லவர் என்று பொருள். இதே அர்த்தத்தைத் தரும் தஸ்கரபதயே நம: என்ற நாமம் 25 திருநாம அர்ச்சனையில் ஒன்றாக அமைகிறது.
“கள்ளம் வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே’ என்பது திருஞான சம்பந்தரின் தேவாரம்.
வடமொழியில் கூறப்படும் கலியுக பதயே என்பதை கலியுகத்து மெய்யன் என்றும் மாசிலாமணி என்னும் திருநாமத்தைத் தமிழில் பொய்யாத மெய்யன் என்றும் கழுகாசல சதகம் என்ற நூல் கூறுகிறது.
அகளங்கமண்யே என்ற திருநாமத்திற்குப் பொருள் இறைவனுடைய மேனி வெண்மை நிறமானது என்பதாகும்.
இத்தலத்தில் இறைவன் ஒரு காலத்தில் பக்தர்களுக்கு மிகுதியாக பொன் கட்டிகளை அள்ளிக் கொடுத்ததாகவும் அதற்கு அறிகுறியாக சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் பொன் கட்டி ஒன்று இப்போதும் உள்ளது என்றும் பெரியோர் கூறுகின்றனர்.
இங்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகம், அப்பர் ஒரு பதிகம் சுந்தரர் ஒரு பதிகம் என ஆளுக்கு ஒரு பதிகம் தந்து அருளியுள்ளனர். மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார், வள்ளலார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்கள் இந்தத் தலத்தைச் சிறப்பித்து பாடல்களை அருளியுள்ளனர்.
பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்சதீபம் ஏற்றப்படும். இத்திருவிழாவிற்குப் புஷ்கரமேளா என்று பெயர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளுகின்றனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பக்தவத்ஸலரும் திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது.
அன்னை முதற்றே உலகு -1
ஸ்ரீஅன்னையின் வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான அபூர்வமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவரே கூறிய சம்பவங்கள் பல. அவற்றில் இரண்டு சம்பவங்களைக் கீழே காணலாம். இவை இளம் வயதிலேயே அவர் அபூர்வ சித்திகளைக் கொண்டிருந்தவர் என்பதற்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன!
ஸ்ரீஅன்னையும் விஷப்பாம்பும்
————————————-
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் (1901 முதல் 2000 முடிய உள்ள நூற்றாண்டு) நான் வட ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா பிரதேசத்திலுள்ள ‘க்ளெம்ஸெல்’ என்ற பட்டணத்திற்குச் சென்றிருந்தேன். இந்த பட்டணத்திற்கு வடக்கே அல்ஜீரியாவும் தெற்கே சஹாரா பாலைவனமும் உள்ளன. மேற்கில் மொரோகோவும், கிழக்கில் டியூனிஸியாவும் அமைந்துள்ளன. கோடைக்காலத்தில் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அங்கே வெப்பம் இருக்கும்.
குப்த (Occult) முறை இரகசியங்களை கற்றறியும் பொருட்டு நான் அங்கே வசித்து வந்த சித்தர் ஒருவரிடம் சென்றிருந்தேன்.அம்மகானின் பெயர் ஸ்ரீமான் தேயோன். அவர் போலந்து நாட்டு யூதராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
தினந்தோறும் வெப்பம் மிகுந்த நடுப்பகலில் நான் ஓர் ஆலிவ் மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டேன்.அந்த அதிவெப்பத்தின் கொடுமையையும் என்னால் சகிக்க முடிந்தது.ஒரு நாள் நான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது திடீரென அமைதி நீங்கி சஞ்சலமடையவே, கண்களைத் திறந்தேன். என் எதிரில் 3 அல்லது 4 முழ தூரத்தில், ஓர் பெரிய விஷப் பாம்பு நிமிர்ந்து நின்று சீறி, படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. இத்தகைய ஸர்ப்பத்திற்கு அப்பிராந்தியத்தில் நாகம் என்றே பெயர்; அதன் விஷம் மனிதனை உடனே மாய்க்கும் தன்மையது.
அது ஏன் அவ்வாறு என் மேல் சினமுண்டு இருந்தது என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை; நான் அதன் வீடாகிய பொந்தை மறைத்து உட்கார்ந்திருக்கக் கூடும் என்பது பிறகே எனக்குப் புலனாயிற்று. எனக்கு பின்னால் ஒரு பொந்து இருந்தது உண்மை தான்.இப்பொழுது நான் என்ன செய்வது?
சிறிது நகர்ந்தாலும் அது என்னைத் தீண்டி விடுமே; நான் சிறிதும் நகரவில்லை. அஞ்சவுமில்லை. நான் அதன் கண்களை உற்று நோக்கி என்னுடைய இச்சாசக்தியை முழுமையாக உபயோகித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது சீறுவதை நிறுத்தி சிறிது சாந்தமடைந்தது.இப்பொழுது நான் உற்று நோக்குவதையும் இச்சா சக்தியை உபயோகிப்பதையும் சிறிதும் குறைக்காமலேயே மெதுவாக எனது கால்களை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துக் கொண்டேன்; இறுதியாக அந்த விஷப்பாம்பு தன் தலையைத் தாழ்த்தி வேகமாகத் திரும்பி அருகே இருந்த குளத்தில் குதித்து மூழ்கியது.
பிற்பாடு நான் தேயோன் அவர்களிடம் இந்தச் சம்பவத்தைக் கூறிய போது அவர் பின்வருமாறு விளக்கினார்: “அந்த அரவம் அந்தப் பொந்தில் வசித்து வந்தது எல்லோரும் அறிந்ததே.நீராடின பிறகு தன்னுடைய வீட்டிற்குப் போக விரும்பியது. ஆனால் நீ அதன் வழியை மறித்து உட்கார்ந்திருந்தாய் அதனாலேயே அது மிக சினமுற்றது. நீ அதற்கு பால் அளிப்பாயாகில் அது உனக்கு சிநேகிதமாகி விடும்.”
அன்று தொட்டு எனக்கு பாம்புகளிடமிருந்த அச்சம் அறவே நீங்கிற்று. முன்பெல்லாம் பாம்பைக் கண்டால் அச்சம் கொண்டு பின்னடைவேன்; அடக்கமுடியாத அளவு அதனிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி தோன்றும். இச்சம்பவத்திற்குப் பிறகு அவை என்னை விட்டு அடியோடு நீங்கின.
ஸ்ரீஅன்னை நிறுத்திய புயல்
————————————-
க்ளெம்ஸலிலிருந்து நான் இரண்டாவது முறையாக திரும்பி வரும் போது, தேயோன் அவர்களும் ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொருட்டு என்னுடன் வந்தார். நடுக்கடலில் ஒரு புயல்காற்று எங்களைத் தாக்கிற்று. கடல் கொந்தளித்து மலை போன்ற அலைகள் எங்கள் கப்பலை மேலும் கீழுமாகத் தூக்கியடித்தன. விபரீதமான விபத்து ஒன்று நெருங்கி விட்டது என்றெண்ணி கப்பலிலுள்ள பலரும் பயந்து விட்டனர்.சிலர் அழவும் ஆரம்பித்து விட்டனர். கப்பல் தலைவனான மீகாமன் (Captain) கூட கவலை கொண்டு பிரயாணிகளுக்கு ஆபத்து உண்டு என்று கூறிவிட்டார்.
தேயோன் அவர்கள் என்னை நோக்கி, “நீ போய் அதை நிறுத்தி விட்டு வா” என்றார். கேப்டன் அதை செவியுற்று மிக ஆச்சர்யமடைந்தார். அவருக்கு தேயோன் கூறியதின் பொருள் விளங்கவேயில்லை; ஆனால் எனக்குப் புரிந்து விட்டது.
நான் என்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தேன். பிறகு என்னுடைய உடலை விட்டு வெளி வந்து பரந்த சமுத்திர வெளியில் தடையேதுமின்றி செல்லலானேன். அங்கே நான் கண்டது என்ன? உருவற்ற பல ஜீவராசிகள் உன்மத்தம் கொண்டு குதித்து கொம்மாளமடித்துக் கடலைக் கலக்கி வந்ததைக் கண்ணுற்றேன். நான் அவைகளையணுகி மிக அடக்கத்துடனும், இனிமையுடனும், இந்த குறும்பு விளையாட்டைக் கைவிடுமாறு வேண்டினேன்.
“அந்த அப்பாவி மனிதர்களை துன்புறுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்? தயவுசெய்து அமைதியடைந்து அந்த மனிதர்களின் உயிரை காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். அவ்வாறு நான் அவர்களை வேண்டுவதும், அவர்கள் செய்வதை ஆ§க்ஷபிப்பதுமாக அரை மணி காலம் கடந்தது. அதன் பிறகே அவை தங்கள் குறும்புச் சேஷ்டைகளைக் கைவிட்டன. கொந்தளித்த கடல் அமைதி அடைந்தது.
பிறகு நான் என் உடலுக்குத் திரும்பிப் போய் என்னுடைய அறையை விட்டு வெளி வந்தேன். நான் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்ற போது, அங்கே அனைவரும் சந்தோஷமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன்.
COLLECTED FROM TAMIL AND ENGLISH NEWSPAPERS AND EDITED BY LONDON SWAMINATHAN
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17- ஆம் தேதி 2024-ம் ஆண்டு
********
முதல் செய்தி
தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவம், மது : பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஹிந்துக்களுக்கு அசைவ உணவுப் பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானம் வழங்கியதற்காக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லண்டனில் நெ.10 டவுனிங் தெருவில் உள்ளது. இங்கு கடந்த அக். 29-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.
விருந்தில் அசைவ பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னரே தெரியவந்தது.
இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து அதிருப்தி தெரிவித்தார்கள்., ‘மது, மாமிசத்தால் பிரதமர் அலுவலக புனிதம் பாதித்து விட்டது. மிகுந்த வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும் என்றார்கள்.
நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, அசைவம் வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என பிரதமர் அலுவலம் உறுதியளித்துள்ளது.
லெஸ்டர் எம் பி ஷிவானி ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்; செய்தியை அறிந்த எல்லா இந்து அமைப்புகளும் லேபர் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்தன.
ஞான மயம் அமைப்புக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்தது
இது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் நடத்தப்பட்ட பொது மக்களுக்கான தீபாவளி நிகழ்ச்சியில், சீக்கியர்கள் பாலிவுட் ஆபாச நடனங்களையும் அசைவ பிரியாணியையும் அளித்ததை நேரில் பார்த்த நமது லண்டன் நிருபர் நினைவு கூறுகிறார்; இந்த ஆண்டு இந்து அமைப்புகள் திறம்பட நடத்தின என்பதையும் குறிப்பிட வேண்டும்
*****
அடுத்ததாக
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவருக்கு வயது 43. 2022ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார்.
இவரை, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துகள்.
21 வருடங்களாக நீங்கள் ஒரு சிப்பாயாக அமெரிக்காவிற்கு சேவை செய்தீர்கள். உங்களுடனான எனது சில உரையாடல்களில், உங்கள் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டேன். நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பார்லிக்கு தேர்வான முதல் ஹிந்து பெண் என்ற பெருமை கொண்டவர் துளசி கப்பார்டு; இவர் கடந்த முறை அமெரிக்க பார்லியில் எம்.பி.,யாக பதவியேற்றபோது பகவத் கீதை மீது உறுதி மொழி கூறி பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
1,400பழங்கால கலைப்பொருட்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றது.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் மீதான தொடர்ந்து நடந்த பல விசாரணைகளின் விளைவாக, இந்த கலைப்பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம், அமெரிக்காவும், இந்தியாவும் சட்டவிரோத வர்த்தகங்களைத் தடுப்பதன் மூலம் கலாசார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
****
மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர் எஸ் எஸ் தலைவர் எச்சரிக்கை
ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியின் சங்கப் பெண் தலைவி டாக்டர் ஊர்மிளாவின் நினைவாக ஜபல்பூரில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் அனைவரும் உணர்வதாக தெரிவித்தார்.
அறிவியல் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பலன்கள் ஏழைகளை சென்றடையவில்லை. ஆனால் உலகை அழிக்கும் ஆயுதங்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டதாக கூறினார்.
சில நோய்களுக்கான மருந்துகள் கிராமப்புறங்களில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (தேஷி கட்டா) கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
மனித குலத்திற்கு சேவை செய்வதே சனாதன தர்மம் என்று தெரிவித்த அவர், உலகிற்கு வழி காட்டும் ஆற்றல் இந்துத்துவாவுக்கு உள்ளதாகவும் கூறினார்.
இந்து என்ற வார்த்தை இந்திய வேதங்களில் காணப்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், குருநானக் தேவ் அவர்களால் பொதுச் சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.
இன்னும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இருபதே ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் இடத்தை அடைய முடியும் என்றும் கூறினார்
அரியானா மாநிலம் குருகிராமில் “விஷன் ஃபார் விக்சித் பாரத்-விவிபா 2024” மாநாடு நடைபெறுகிறது. பாரதிய சிக்ஷன் மண்டல் முப்பெரும் விழாவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அப்போது, 16 ஆம் நூற்றாண்டு வரை பல துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தோம், ஆனால் அதன் பிறகு நிறுத்தி விட்டதாக கூறினார்.
உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நகலெடுப்பதை விட நமக்கான தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல் மனம் மற்றும் அறிவு ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான உறவைப் பற்றி குறிப்பிட்ட அவர், “இரண்டும் மனிதகுலத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டவை” என்றும் சொன்னார்
கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாறும்போது உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
நாம் சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடியும், என்று அவர் கூறினார், இந்தியா உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைக் காண நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கடவுள் தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக மோகன் பகவத் தெரிவித்தார்.
****
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐயப்பன் சந்நிதியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
****
மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடந்தது. காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
இதனிடையே ,
தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி ஆந்திர மக்கள் இதே நாளன்று கார்த்திகை தீபம் ஏற்றி கார்த்திகையையும் கொண்டாடினர் ஆந்திரம் முழுது முள்ள பல கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்
தமிழ் பஞ்சாங்கத்தின்படி டிசம்பரில் வரும் பெளர்ணமி அன்றே தமிழ் நாட்டில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.
****
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு
திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தையொட்டி ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருப்பதி மலையில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பௌர்ணமி தினத்தையொட்டி கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தான பிராண தான அறக்கட்டளைக்கு பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் 50 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற பக்தர் 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட நாகராஜா என்பவர் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 15 மின்சார இருசக்கர வாகனங்களை நன்கொடையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
****
திருப்பதியில் சிருங்கேரி சுவாமிகளுக்கு பெரும் வரவேற்பு
தமிழ் நாட்டில் இரண்டு வார விஜய யாத்திரையை முடித்துவிட்டு சிருங்கேரி சங்கராசார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் ஆந்திரப்பிரதேச விஜய யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் திருப்பதிக்குச் சென்றார். அங்கு பக்தர்கள் அவருக்கு பெரிய வரவேற்பு அளித்தனர் .
நவம்பர் 16 ஆம் தேதி காளஹஸ்தி 17ஆம் தேதி நெல்லூர் 18 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விஜயவாடா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருப்பதாக மடத்து வட்டாரங்கள் தெரிவித்தன. 22 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குண்டூரில் பக்கதர்களுக்கு ஆசி வழங்கி விட்டு 27 ஆம் தேதி ராஜ மஹேந்திரவரம் செல்வதாகவும் விஜய யாத்திரை திட்ட அறிவிப்பு கூறுகிறது.
*****
லண்டனில் முக்கிய நிகழ்ச்சி
கடைசியாக, லண்டன் மக்களுக்கு ஒருநல்ல செய்தி!
சம்பிரதாய பஜனை உலகத்தில் கொடி
கட்டிப் பறக்கும் டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தருகிறார்கள். நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ்
பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளிக்க இருக்கிறார்கள்.
அனுமதி இலவசம். ஆயினும் நன் கொடைகளை வரவேற்கிறார்கள் .முன்கூட்டி ரெஜிஸ்டர் செய்வது நல்லது இருக்கை வசதிகளை அளிக்கவும் , பிரசாதம் வழங்கவும் இது உதவும்.
இதில் ஆர்வம் உடையோர் ராதா மாதவ் மஹோத்சவ் யு கே என்ற வெப்சைட்டில் மேல் விவரங்களை அறியலாம்.
ஆண்டுதோறும் லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொள்ளுவதால், கடந்த சில ஆண்டுகளாக இது பெரும் பக்தி விருந்தாக அமைகிறது.
*************
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 24-ம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும். வணக்கம்
We come across three dreams in Valmiki Ramayana. Dasaratha, Bharata talk about dreams in Ayodhya Kanda and Tri Jada, daughter of Vibhishana, describes her vivid dream in Sundara Kanda. All these are based on the Hindu beliefs of dreams. They don’t approve the Freudian or Jungian views.
Hindus believe that they get good or ominous messages in dreams about what is going to happen soon. We see this from the Vedic days until modern times.
Tamil poet Kamban has dealt with Tri Jada’s dream in 14 verses in Tamil
A religious head of Madurai Mutt had written a book about 100 years ago on the condition of departed souls and the way to contact them though Ouija board. He recounted a few dream anecdotes where the departed souls forewarned their family members about the robberies etc.
***
Let us look at Dasaratha’s dream first:
अपि चाद्याऽशुभान्राम स्वप्ने पश्यामि दारुणान्।
सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।
राम O Rama, अपि च also, अद्य now, स्वप्ने in a dream, दारुणान् frightening, अशुभान् inauspicious events, पश्यामि am seeing, दिवा during day time, सनिर्घाता accompanied by thunders, महास्वना generating great sounds, उल्का meteor, इह here, पतति is falling.
Moreover Rama, these days I see frightening and ominous events in dreams during day time. I see meteors accompanied by thunders falling, generating great sounds.
अवष्टब्धं च मे राम नक्षत्रं दारुणैर्ग्रहैः।
आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।
O Rama astrologers also tell me that formidable planets Sun, Mars and Rahu have afflicted my birth star.
प्रायेण हि निमित्तानामीदृशानां समुद्भवे।
राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।
When such ominous signs appear, usually the king either meets with death or faces a grave calamity.
तद्यावदेव मे चेतो न विमुह्यति राघव।
तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।
Therefore, before my mind is deluded I wish to see you installed as heirapparent for a man’s mind is unstable indeed, O Rama.
Today the Moon is in conjunction with the Punarvasu constellation. Tomorrow the Moon’s conjunction with the Pushya constellation is certain and the astrologers say this auspicious time is highly suitable for the purpose of coronation
Here we see the belief in astrology as well
****
Next comes Bharata’s dream after Dasaratha’s death
Ayodhya Kanada , Chapter 69
[Bharata experiences unhappiness over a distressing and frightening dream.]
ते दूताः those messengers, यामेव on whichever, रात्रिम् night, तां पुरीम् that city, प्रविशन्ति स्म were entering, तां रात्रिम् that night, भरतेनापि by Bharata also, अयम् this, आप्रियःdistressing, स्वप्नःdream, दृष्टःhas been seen.
On the very night the messengers were entering the city, Bharata had a distressing dream.
The son of the king of kings (Bharata) felt extremely troubled hen he had an unpleasant dream at dawn.
Observing him grief stricken his peers who always spoke pleasant words, engaged him in a variety of ways in the assembly in order to divert him.
In order to provide mental peace to Bharata, some played stringed instruments while some enacted dramatic scenes, some danced and cracked various kinds of jokes.
The magnanimous Bharata born in the race of Raghus, was not delighted by the conversations and jokes and soothing words of his friends.
Addressing Bharata amidst his companions some one close among them said O friend why are you dejected in spite of being in the company of friends.
Addressing his companion who was speaking thus, Bharata replied, saying Listen to the reason this desolation has overtaken me:
स्वप्ने पितरमद्राक्षं मलिनं मुक्त मूर्धजम्।
पतन्तमद्रिशिखरात्कलुषे गोमयह्रदे।।2.69.8।।
स्वप्नेin a dream, मलिनम्pale, मुक्तमूर्धजम्with dishevelled hair, अद्रिशिखरात्from the peak of a mountain, कलुषेdirty, गोमयह्रदेpool filled with cow dung, पतन्तम्falling down, पितरम्father, अद्राक्षम्saw.
In my dream I saw my father looking pale, with dishevelled hair, his body filled with filth falling from the peak of a mountain into a pool of cow dung.
प्लवमानश्च मे दृष्टस्स तस्मिन्गोमयह्रदे।
पिबन्नञ्जलिना तैलं हसन्नपि मुहुर्मुहुः।।2.69.9।।
I saw my father floating in that pool of cow dung, drinking oil with cupped palms and bursting into laughter again and again.
ततस्तिलौदनं भुक्त्वा पुनः पुनरधश्शिराः।
तैलेनाभ्यक्तसर्वाङ्गः तैलमेवान्वगाहत।।2.69.10।।
Thereafter I beheld him eating rice cooked with sesame seeds, his body besmeared with oil plunging again and again into it (the pool).
स्वप्नेऽपि सागरं शुष्कं चन्द्रं च पतितं भवि।
उपरुद्धां च जगतीं तमसेव समावृताम्।।2.69.11।।
औपवाह्यस्य नागस्य विषाणं शकलीकृतम्।
सहसाचापि संशान्तं ज्वलितं जातवेदसम्।।2.69.12।।
अवतीर्णां च पृथिवीं शुष्कां श्च विविधान् द्रुमान्।
In that dream I beheld the sea being dried up and the Moon fallen onto the ground. I saw the earth as though enveloped by darkness and obscured, the tusk of an elephant worthy of a ride by the monarch broken into pieces, a blazing fire extinguished suddenly, the earth split open, various trees dried up and mountains crumbled and covered with smoke.
In the dream, I beheld my father clad in black clothes and resting on a seat made of iron and the women in dark and brownish complexion laughing at him.
त्वरमाणश्च धर्मात्मा रक्तमाल्यानुलेपनः।
रथेन खरयुक्तेन प्रयातो दक्षिणामुखः।।2.69.15।।
Thereafter, I beheld that virtuous monarch bedecked with garlands made of red flowers and his body bedaubed with red sandalpaste, hurrying off southward on a chariot yoked with asses.
If one beholds in a dream a person setting out on a carriage yoked to asses, the wreath of smoke ascending from his funeral pyre will be seen soon.
एतन्निमित्तं दीनोऽहं तन्नवः प्रतिपूजये।
शुष्यतीव च मे कण्ठः न स्वस्थमिव मे मनः।।2.69.19।।
So it is for this reason that I am desolate and cannot respond well to your conversation. It appears as if my throat is getting parched up and my mind is ill-disposed.
Both these dreams are about the bad things that are going to happen.
There are some books in Sanskrit about dreams and their meanings. Famous author Varahamihira also has written about dreams.
****
Ravana threatening Sita Devi
Trijata’s Dream in Sundara Kanda
Valmiki has given over fifty couplets to describe the dream of Tri Jada, who had experienced more than one dream.
.
[Trijata narrates her dream]
स्वप्नो ह्यद्य मया दृष्टो दारुणो रोमहर्षणः।
राक्षसानामभावाय भर्तुरस्या भवाय च।।5.27.6।।
“Tonight I had a terrific, horriplating nightmare in which I saw the annihilation of all demons and the triumph of Sita’s husband”.
त्रिजटया by Trijata, एवम् that way, उक्ताः having been spoken, क्रोधमूर्छिताः overcome by wrath, राक्षस्यः shedemons, सर्वाः एव all of them, भीताः terrified, ताम् her, त्रिजटाम् to Trijata, इदम् this, वचः word, अब्रुवन् spoke.
Seized with fear, the she demons, overcome with wrath on hearing Trijata’s words said to her.
निशि night, त्वया by you, दृष्टः seen, अयम् this, स्वप्नः dream, कीदृशः what did you see, कथयस्व tell, तासाम् of them, राक्षसीनाम् of shedemons, मुखात् from their mouth, च्युतम् slipped, वचनम् word, श्रुत्वा after hearing, त्रिजटा Trijata, काले early morning time, स्वप्नसंश्रितम् all about the dream, वचनम् words, उवाच spoke.
“O Trijata, tell us the kind of dream you dreamt last night”, they insisted. Hearing the words from the mouth of the shedemons, Trijata told them all about her dream.
गजदन्तमयीं दिव्यां शिबिकामन्तरिक्षगाम्।।5.27.9।।
युक्तां हंससहस्रेण स्वयमास्थाय राघवः।
शुक्लमाल्याम्बरधरो लक्ष्मणेन सहागतः।।5.27.10।।
“Rama, in white attire, wearing a garland of white flowers, ascending a palanquin made of ivory drawn by a thousand swans and coursing through the sky with Lakshmana arrived.
“Valiant Rama, foremost among men, accompanied by his brother Lakshmana and wife Sita went towards the northerly direction in the wonderful Pushpaka chariot that resembled the Sun.
एवं स्वप्ने मया दृष्टो रामो विष्णुपराक्रमः।
लक्ष्मणेन सह भ्रात्रा सीतया सह राघवः।।5.27.20।।
“In this way I saw in my dream Rama as valiant as Lord Visnu accompanied by his brother Lakshmana and his wife Sita.
“Tonight I saw (in another dream) Ravana with shaven head, clad in black clothes, fallen down on the ground from the Pushpaka chariot, being dragged by a woman.
“He was wearing red garlands and unguents, his body smeared with oil. He was drinking, laughing and dancing, his mind and senses perplexed. He was driving on a chariot yoked to donkeys.
गर्दभेन ययौ शीघ्रं दक्षिणां दिशमास्थितः।
पुनरेव मया दृष्टो रावणो राक्षसेश्वरः।।5.27.25।।
पतितोऽ वाक्चिरा रा भूमौ गर्दभाद्भयमोहितः।
दक्षिणां दिशम् towards southerly direction, आस्थितः started, गर्दभेन after donkey, शीघ्रम् swiftly, ययौ went, राक्षसेश्वरः demon king, रावणः Ravana, भयमोहितः deluded by fear, गर्दभात् of the donkey, अवाक्चिरा: head bent down, पतितः fallen, मया by me, पुनरेव also, दृष्टः saw.
“I saw the demon king Ravana running behind the chariot driven by donkeys in the southerly direction. He was falling with his head bent down and deluded by the fear of the donkey.
सहसोत्थाय संभ्रान्तो भयार्तो मदविह्वलः।।5.27.26।।
उन्मत्त इव दिग्वासा दुर्वाक्यं प्रलपन्बहु।
दुर्गन्धं दुस्सहं घोरं तिमिरं नरकोपमम्।।5.27.27।।
मलपङ्कं प्रविश्याशु मग्नस्तत्र स रावणः।
स रावणः that Ravana, सहसा quickly, उत्थाय got up, संभ्रान्तः bewildered, भयार्तः terrorstricken, मदविह्वलः intoxicated with wine, दिग्वासाः naked (with sky as garment), उन्मत्त: mad, इव like, बहु many, दुर्वाक्यम् bad words, प्रलपन् uttering, दुर्गन्धम् emitting foul smell, दुस्सहम् words of abuse, घोरम् terrific, तिमिरम् dark,नरकोपमम् helllike, मलपङ्कम् pool of filth, प्रविश्य having disappeared, आशु he was, तत्र there, मग्नः drowned.
“I saw Ravana, getting up quickly, in a bewildered state, terror-stricken, totally confused in intoxication. He had gone almost insane, naked uttering words of abuse. Plunged into a pool of filth and emitting foul smell he disappeared into a helllike dark chamber.
रक्तवासिनी a woman clad in red clothes, काली a dark one, कर्दमलिप्ताङ्गी a woman smeared with wet mud, प्रमदा woman, दशग्रीवम् tennecked Ravana, कण्ठे neck, बद्ध्वा having bound, याम्यां दिशम् towards the abode of Yama in the southerly direction, प्रकर्षति was dragging.
A dark woman clad in red, body smeared with wet mud was seen dragging the ten-necked Ravana by his neck towards the abode of Yama in the southerly direction.
एवं तत्र मया दृष्टः कुम्भकर्णो निशाचरः।।5.27.29।।
रावणस्य सुतास्सर्वे दृष्टास्तैलसमुक्षिताः।
तत्र there, निशाचरः nightranger, कुम्भकर्णः Kumbhakarna, मया by me, एवम् in this way, दृष्टः was seen, रावणस्य Ravana’s, सुताः sons, सर्वे all, तैलसमुक्षिताः body smeared with oil, दृष्टाः was seen.
“There I saw the nightranger, Kumbhakarna and also Ravana’s sons, their bodies smeared with oil.
वराहेण दशग्रीवश्शिंशुमारेण चेन्द्रजित्।।5.27.30।।
उष्ट्रेण कुम्भकर्णश्च प्रयाता दक्षिणां दिशम्।
दशग्रीवः ten necked one, वराहेण by boar, इन्द्रजित् Indrajit, श्शिंशुमारेण च crocodile, कुम्भकर्ण Kumbhakarna, उष्ट्रेण च on a camel, दक्षिणां दिशम् towards the southern direction, प्रयाताः were travelling.
“The tennecked Ravana was seen (this time) riding on a boar, Indrajit on a crocodile and Kumbhakarna on a camel all set towards the southerly direction.
तत्र there, एकः only one, विभीषणः Vibhishana, श्वेतच्छत्रः with white umbrella, शुक्लमाल्याम्बरधरः wearing white garlands and clothes, शुक्लगन्धानुलेपनः with white sandal paste, मया by me, दृष्टः was seen.
“Only Vibhishana was under a white umbrella clad in white, with white garlands and white sandal paste.
विभीषणः Vibhishana, शङ्खदुन्दुभिनिर्घोषैः with sounds of conches and drums, नृत्तगीतैः by dancers and musicians, अलङ्कृतः decorated, शैलसङ्काशम् like the mountain, मेघस्तनितनिस्स्वनम् trumpetting like a thundering cloud, चतुर्दन्तम् of four tusks, दिव्यम् wonderful, गजम् elephant, आरुह्य on ascending, तत्र there, आस्ते stood there, चतुर्भिः four, सचिवैः सार्थम् with ministers, वैहायसम् in the air, उपस्थितः reached.
“(Hailed by) the sounds of conches and drums, and of musicians and dancers, Vibhishana was seen ascending on to a decorated fourtust elephant which was huge like a mountain and trumpting like a thundering cloud. He stood there along with four ministers and reached the aerial region.
समाजश्च मया दृष्टो गीतवादित्रनिःस्वनः।।5.27.34।।
पिबतां रक्तमाल्यानां रक्षसां रक्तवाससाम्।
” A large group of demons was seen collected together, drinking, wearing red garlands and red clothes, singing and playing musical instruments.
लङ्का चेयं पुरी रम्या सवाजिरथकुञ्जराः।।5.27.35।।
सागरे पतिता दृष्टा भग्नगोपुरतोरणा।
“I saw this delightful Lanka teeming with horses, chariots and elephants, archways and towers crumbling and falling into the ocean.
रावणेन by Ravana, अभिरक्षिता protected, लङ्का Lanka, रामस्य Rama’s, दूतेन by a messenger, तरस्विना by powerful, वानरेण by a vanara, दग्धा burnt, मया by me, स्वप्ने in the dream, दृष्टा seen.
In my dream I saw this city of Lanka protected by Ravana burnt down by a powerful vanara, a messenger of Rama.
“Kumbhakarna and other demon leaders wearing red clothes entered into a pool of cow dung.
अपगच्छत नश्यध्वं सीतामाप्नोति राघवः।।5.27.39।।
घातयेत्परमामर्षी युष्मान्सार्थं हि राक्षसैः।
“(Therefore) go away from here. You will be totally destroyed by Rama who will secure his wife and will kill all of you along with others in great anger.
“O demonesses beg her (pardon) now even though you had threatened her earlier. Where is the need to hesitate? There is cause for concern for demons from Rama.
प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा।।5.27.44।।
अलमेषा परित्रातुं राक्षस्यो महतो भयात्।
“O shedemons, this Janaka’s daughter from Mithila who is capable of protecting you against great dangers will be pleased by your submission.
****
The direction South is associated with Yama, the Lord of Death. And riding on donkey or a buffalo is also associated with death. In the ancient world they kept the dead bodies in medicinal oil to keep them from decaying. So oily bodies of victims also indicate their imminent death.
Tri Jada’s dream is the longest description of a dream in Hindu literature.
கதைக் கடல் என்னும் கதா சரித் சாகரம் இந்தியாவின் பழங்கால நாட்டுப்புறக் கதைகளைக் கூறும் சம்ஸ்க்ருத நூலாகும். இதை ஆராய்ச்சி செய்து அதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர் ஹெர்மன் ப்ரோக்கவுஸ் என்னும் ஜெர்மானியர் ஆவார்
பழங்கால இந்தியாவின் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் நமக்குக் காட்டுவது கதா சரித் சாகரம் நூல் ஆகும் இதே போல ஐரோப்பாவிலும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டுப்புற கதைகளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டிருந்தார்கள்; அவைகளை ஒப்பிட்டு ஆராய இவரது மொழிபெயர்ப்பு உதவி செய்தது.
HERMANN BROCKHAUS 1806- 1877
பிறந்த தேதி – 28-1-1806
இறந்த தேதி – 5-1-1877
பிறந்த ஊர் – ஆம்ஸ்டெர்டாம் AMSTERDAM, The Netherlands/Holland,
கல்வி கற்ற இடம் – லைப்சிக், கோட்டிங்கன் , பான் LEIPZIG, GOETTINGEN,
வேலைபார்த்த இடம் –லைப்சிக் பல்கலைக் கழகம், பேராசிரியர்
an edition of a philosophical drama by Krishna Mishra called Prabodhachandrodaya and
author of the influential Über den Druck sanskritischer Werke mit lateinischen Buchstaben (Concerning Sanskrit Works Printed in Latin Letters).
From 1853 he was editor of the Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft (Journal of the German Oriental Society),[3] and for a period of time was editor of the Ersch-GruberAllgemeine Encyklopädie.
****
இவர் இப்போது ஹாலந்து நாட்டின் தலைநகராக விளங்கும் ஆம்ஸ்டெர்டாமில் பிறந்தார்; அங்கு அவருடைய தந்தை ஒரு நூல் வெளியீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அது ஜெர்மனியில் உள்ள லைப்சிக் நகருக்கு மாற்றப்படவே அவரும் அங்கு சென்று கல்வி கற்றார். பின்னர் கோட்டிங்கன் , பான் நகரங்களிலும் கல்வியைத் தொடர்ந்தார் இந்திய மொழிகளைக் கற்றார். ஐரோப்பிய நகரங்களிலும் ஆராய்ச்சி நடத்திவிட்டு பாடலிபுத்திரம் நகரின் தோற்றம் உபகோஸவின் வரலாறு என்ற ஆராய்ச்சியை வெளியிட்டார்; உடனே அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது ஜேனா நகரில் உதவிப் பேராசிரியராகி, பின்னர் சாகும் வரை லைப்சிக்கில் பேராசிரியர் பதவியில் இருந்தார்
லய்ப்சிக் நகரில் பிரபோத சந்த்ரோதயா நூலை வெளியிட்டதன் மூலம் இவர் புகழ் பரவியது. அதை ஜெர்மன் லத்தீன் மொழிகளில் வெளியிட்டார் . பின்னர் சில்வஸ்டர் டே சசி வெளியிட்ட கதாசரித் சாகரத்தை முறையாக தொகுத்து வெளியிட்டார் ;அத்துடன் பஞ்ச தந்திரக் கதைகளையும் ஆராய்ந்தார் ஆனால் இந்திய பண்டிதர்களின் உதவியை நாடாததால் அதில் தவறுகள் இருந்தன.
இந்துக்களின் – விஞ்ஞான அறிவிலும் நாட்டம் ஏற்படவே பாஸ்கராச்சார்யாவின் ALGEBRA OF BHASKARA சம்ஸ்க்ருத அல்ஜீப்ரா நூலையும் வெளியிட்டு இந்தியாவின் அபார கணித அறிவை மனமார பாராட்டினார்
கங்காதாஸரின் சந்தோமஞ்சரி நூலும் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தது எழுத்து விஷயத்தில் ஒரு புரட்சி செய்தார் ;சம்ஸ்க்ருத தேவநாகரி லிபிக்குப் பதிலாக லத்தீன் மொழியில் ஸம்ஸ்க்ருதத்தை எழுதினார். அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுதும் எல்லோரும் லத்தீன் மொழியைக் கற்றாக வேண்டும்
பாரசீக மொழியிலும் இவருக்கு பாண்டித்தியம் உண்டு; இதனால் ஜொராஸ்டரின் வென்டிடாட் பாரசீக கவிஞர் ஹபிஸ் ஆகியோரின் நூல்களையும் முறையாகத் தொகுத்து– அதாவது எடிட் செய்து வெளியிட்டார்.
நாட்டுப்புறவியலுக்கு இவர் செய்த தொண்டு மகத்தானது .
–சுபம் Subham—
Tags- வென்டிடாட், பாரசீக கவிஞர், ஹபிஸ், கதைக் கடல், கதா சரித் சாகரம், ஹெர்மன் ப்ரொக்கோஸ், HERMANN BROCKHAUS .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2
ச.நாகராஜன்
பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொண்ட முதல் கூட்டம்
பெண்களின் உரிமையில் பெரிதும் அக்கறை கொண்டவர் அவர் என்பதை அவரது ஒரு சந்திப்பு நன்கு விளக்கியது. 1933-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்.
தான் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப்போவதாக அறிவித்தார் எலினார். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அதை ஆவலுடன் வரவேற்றபோது, ‘ஒரே ஒரு நிபந்தனை, அந்த நிருபர்கள் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்’ என்றார் அவர்.
அனைவரும் வியந்தனர். பெண்கள் அவரைப் போற்றினர். அவசரம் அவசரமாக அனைத்துப் பத்திரிகைகளும் ஏராளமான பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின; பயிற்றுவித்தன
ஜனாதிபதி பதவியேற்ற இரண்டே நாட்களில் மார்ச் மாதம் 6-ம் தேதி அவரது பெண் நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதுபோல 348 பெண் நிருபர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார்.
1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக ப்ராங்க்ளின் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் பல நாடுகளுக்கும் எலினார் பயணம் மேற்கொண்டார். உரைகளை நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை உலகம் அறிந்து போற்றியது.
அத்துடன் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தன் கணவரை எலினார் வற்புறுத்த அவரும் அதை ஏற்றார். பெண்களுக்கு முன்பு கண்டிராத உரிமைகளும் பதவிகளும் கிடைத்தன!
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பயங்கரமான நாஜி ஜெர்மனியுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டது. எலினார் தன் பங்கைச் செய்ய அமெரிக்கா இதற்கு ஈடு கொடுத்தது.
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மேரியன் ஆண்டர்ஸன் என்ற பாடகியை அமெரிக்க புரட்சி மகளிர் சங்கம் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் பாடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியது. இந்த இனவெறியைக் கண்டித்த எலினார் அவரை ஆதரித்து தனது உறுப்பினர் பதவியை அந்தச் சங்கத்திலிருந்து ராஜிநாமா செய்தார். தனியாக ஒரு கூட்டத்தை லிங்கன் மெமோரியல் இடத்தில் ஏற்பாடு செய்தார். 75000 பேர்கள் அங்கு குழுமினர்.
எதையும் நேரடியாக களத்தில் சென்று பார்ப்பது அவரது இயல்பாக ஆனது. ஏழ்மையில் வாடுவோரின் நிலைமை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க ஒவ்வொரு மாகாணமாக அவர் பயணம் செய்தார். ஒரு இடத்தில் தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்ன அவர் குடிசைப் பகுதிகளுக்குள் நுழைந்தார். அவர் யார் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு தொழிலாளர், ஓ, நீங்கள் எலினார் ரூஸ்வெல்ட் தானே! இங்கு வராதீர்கள். எனது குடிசையில் எனது மனைவியும் மகளும் சொறி கரப்பானால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார். ஆனால் எலினாரோ நேராக அவரது குடிசைக்குள் சென்றார். ஆறுதல் அளித்தார்.
இப்படி பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன.
கணவரின் மறைவு
1945-ம் ஆண்டு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் அவரை உலகின் முதல் பெண்மணி என்று பாராட்டினார். தனது கணவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மறைவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் தனது கடைசி பெண் நிருபர்கள் கூட்டத்தை நடத்தினார்.
தன் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அடுத்த ஆண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அவர் முதல் இடத்தைப் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ட்ரூமன் அவரை 1945 முதல் 1952 முடிய ஐ.நா. வின் அமெரிக்க தூதராக நியமித்தார்.
1962-ல் அவர் மறையும் வரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அங்கம் வகித்தார்.
நூல்கள்
வாழ்நாள் முழுவதும் அவர் 28 நூல்களை எழுதியுள்ளார். அவரது சுவையான சுயசரிதம் பல பகுதிகள் கொண்ட நூல்களாக அமைந்துள்ளது. பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் 3000-க்கும் மேற்பட்டவை.
மறைவு
ஒருவித எலும்பு மஜ்ஜை காச நோயினால் பாதிக்கப்பட்ட எலினார் தனது 78-ம் வயதில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மரணமடைந்தார். ஹட்ஸன் நதிக்கரையோரம் உள்ள ப்ராங்க்ளின் நூலகத்தின் அருகில் ஹைடன்பார்க்கில் அவரது குடும்பத்தினருக்கான கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார். அந்த நூலகமே அவரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எலினாரின் பொன்மொழிகள்
குறிப்பிடத்தகுந்த அவரது பொன்மொழிகளில் சில:
பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. சிறிய மனங்களோ மனிதர்களை விவாதிக்கின்றன.
எந்த ஒருவரும் உங்கள் அனுமதியின்றி உங்களை தாழ்ந்தவராக கருதச் செய்ய முடியாது.
ஒரு நல்ல தலைவர் மக்களைத் தன் மீது நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார். ஒரு பெரிய தலைவரோ மக்களை தங்கள் மீதே நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார்.