ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -2 (Post No.13,677)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.677

Date uploaded in London – 17 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

 ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -2

 ச. நாகராஜன்

ஒலிம்பிக் போட்டிகளில் லரிஸாவின் வெற்றி 

மிகத் திறனுடன் ஜிம்னாஸ்டிக்ஸில் தேர்ச்சி பெற்ற லரிஸா 1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். 21 வயதான அவர் ஹங்கேரியைச் சேர்ந்த 35 வயதான அக்னஸ் கேலடியுடன் மோத வேண்டியதாக இருந்தது.

மிகக் கடுமையான போட்டியில் தனது திறமையைக் காண்பித்த அவர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தன் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் கேலடியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி ‘டை’யில் முடிந்தது.

அடுத்து 1960-ல் ஒலிம்பிக் போட்டி ரோமில் நடந்தது. 3 தங்கப் பதக்கங்களையும்  2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அவர் சோவியத் யூனியனைப் பெருமைப் பட வைத்தார்.

அடுத்து 1964ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது அதில் 2 தங்கப் பதக்கங்களையும்  2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.

இந்த மூன்று போட்டிகளிலும் அவர் நான்கு வெங்கலப் பதக்கங்களையும் வென்றார்.

ஆக 1956 மெல்போர்ன், 1960 ரோம், 1964 டோக்கியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் (‘டை’யில் முடிந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து அவர் 18 பதக்கங்களை வென்றார்.

\நீண்ட நெடுங்காலம் அதாவது 1964லிருந்து 2012ம் ஆண்டு முடிய இவரே அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கு இருந்தது.

2012-ல் தான்  அமெரிக்கரான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்களை வென்று இவரது சாதனையை முறியடித்தார். என்றாலும் கூட மங்கையரில் அதிக மெடல்களைப் பெற்ற பெண்மணி என்ற இவரது சாதனையை முறியடிக்க இதுவரை பெண்மணிகளில் ஒருவரும் இல்லை. அமெரிக்கப் பெண்மணியான ஷெனான் மில்லர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மெடல்களை வென்றுள்ளார்.

மைக்கேல் பெல்ப்ஸ் இவரது சாதனையை முறியடித்த போது, “ஒரு பெண்மணி நெடுங்காலத்திற்கு முன்னர் செய்த சாதனையை ஒரு ஆண் முறியடிக்க இப்போதாவது காலம் வந்ததே” என்று அவர் கூறியதை உலகமே ரசித்தது.

அவர் 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்களையும் 14 யூரோபியன் சாம்பியன்ஷிப் மெடல்களையும் வென்றதால் உலகின் அதிசயமான ஜிம்னாஸ்டிக் பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.

தான் பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை தனது பயிற்சியாளரான (கோச்)

சோட்னிசென்கோவிற்குத் தந்தார் லரிஸா. இறக்கும் வரை அவர் தன்னிடம் அதை வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பின் அவரது மனைவி அந்தத் தங்கப் பதக்கத்தை லரிஸாவுக்குத் திருப்பித் தந்தார்.

அனைவரிடமும் அவர் காட்டும் மரியாதைக்கு இது ஒரு சான்றாகும்.

அன்றைய நிலை

பழைய காலத்தைப் பற்றி அவர் கூறுவது இது:

“1964ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு ராணுவ  கூடாரங்களில் தான் தங்க இடம் தந்தனர்; பொதுக் கழிப்பறைகளையே தான் நாங்கள் உபயோகித்தோம். ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழுவினரோ சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சோவியத் யூனியன் சார்பில் போட்டியிட்ட எங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. என்றாலும் அதிகாரிகள் எங்களை கண்ணியத்துடன் நடத்தினர். எங்களுக்கு தேசத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும் என்ற அடங்காத ஆசையும் இருந்தது. எங்கள் நாட்டின் கொடி ஏற்றப்படும் போதும் தேசீய கீதம் இசைக்கப்படும்போதும் நாங்கள் ஓவென்று ஆர்ப்பரிப்போம்.” என்கிறார் அவர்.

பயிற்சியாளர்

1966ம் ஆண்டு அவர் போட்டிகளில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.

சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவிற்கு பயிற்சியாளராக ஆனார்.

இவரது நேரடிப் பயிற்சியால் சோவியத் யூனியன் விளையாட்டு வீராங்கனைகள் பல பதக்கங்களைப் பெற்றனர்.

தினமும் ஏராளமான கடிதங்கள்  ரஷியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவருக்கு வரும். அனைத்தையும் இரவு நேரத்தில் ஒவ்வோன்றாகப் படிப்பார். “எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். என்ன செய்வது?, இப்படி ஒரு கடிதம்; எனக்கு திறமையே இல்லையோ என்று ஒரு கடிதம் – அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பதிலை அனுபி உற்சாகத்தை அளிப்பது இவரது பழக்கம்.

குடும்பம்

லரிஸா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் டாட்யானா இவாநோவா லாடிநினா நாட்டுப்புற நடனத்தில் நிபுணர். அவருக்கு ஒரு மகனும் உண்டு.

மாஸ்கோவில் இப்போது வாழ்ந்து வரும் அவர் ரஷிய- உக்ரேன் போரினால் ரஷிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைமைக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஒலிம்பிக்கில்  கலந்து கொண்டதை தேசப்பற்று இல்லாத செய்கை என்று விமரிசித்தார்.

சமூக சேவை

கியவ் நகரில் சமூக சேவைக் குழுவைச் சேர்ந்த வயதான ஒருவர் அவரைப் பார்த்து உங்களை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது, எனக்கு இந்த சமூக சேவையில் உதவி புரிய வர முடியுமா என்றார்.

புன்னகை புரிந்த லாரிஸா, “ஓகே” என்றார்.

தினமும் அவரிடம் உதவி நாடி ஏராளமானோர் வருவர். உடல் பிரச்சினை ஒருவருக்கு இருக்கும், இன்னொரு வயதானவருக்கு தரை அடுக்கில் இல்லாமல் நான்காம் மாடியில் குடியிருப்பு வீடு ஒதுக்கப்பட்ட குறை இருக்கும் – ஒவ்வொன்றாக அவர் தீர்த்து வைப்பார்.

ஒரு நாளைக்கு ஒரு பெண்மணி வேகமாக அவரிடம் வந்து ஒரு பேப்பரை ஆட்டி ஆட்டிப் பேசினார். “இடம் இல்லையாம். இடமே இல்லையாம்” என்று அவர் கோபத்துடன் கத்தினார். லாரிஸா பொறுமையுடன் உங்கள் வீட்டிற்குப் போகலாமா? என்றார்.

அவர் வீட்டிற்குச் சென்று டீயை அருந்தியவாறே அவரது குறையைக் கேட்டார். தனிப் பெண்மணியாக குழந்தையை வளர்க்கும் சிங்கிள் மதரான அவரது குழந்தைக்கு நர்ஸரியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர் என்ன செய்வார், பாவம்! உடனே நர்ஸரி மானேஜருடன் லரிஸா பேசினார்: உங்களுக்குக் குழந்தை இருக்கிறதல்லவா என்ற அவரது மென்மையான குரலைக் கேட்ட மானேஜர் உடனடியாக அந்தக் குழந்தைக்கு நர்ஸரியில் இடம் கொடுத்தார். இப்படி நாளைக்கு விதம் விதமாக ஒரு பிரச்சனை வரும்.

89 வயதான இவர் இன்னும் இந்த சேவையில் ஈடுபடுவது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

 உற்சாகமூட்டும் பெண்மணி 

அனைத்துப் பெண்மணிகளையும் உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்கேற்குமாறு அறைகூவல் விடும் லரிஸா தன்னைப் பற்றிக் கூறுவது இது:

“ஒரு சாதனையை 48 ஆண்டுகள் முறியடிக்காமல் தக்க வைத்திருப்பது போதுமான காலம் தானே!”

***

You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,676

Date uploaded in London – 16 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)

Recently Dravidians arrested Mahavishnu, a Tamil Speaker of Paramporul Foundation,  in Tamil Nadu because he said rebirths are caused by the evil or good deeds done by them in previous births. From Tamil Veda Tirukkural to all Hindu scriptures support what he said. if anyone doesn’t like it, let them shut their ears and leave. Court must acquit and release him immediately based on Hindu scriptures.

Here is what Tirumanthiram of Tirumular said 1200 years ago. He migrated to Tamil Nadu from Kashmir and composed 3000 poems. Earlier I posted what he said about Pig’s birth.

If you criticise your teacher, you will be born as a Dog!

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்

வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

 Consequences of Abusing Guru
The Guru taught the wisdom
Of One-Letter mantra (Aum);
He who speaks derisive of Him
Will be born a lowly Cur;
And having led a dog’s life for a Yuga entire,
He will be a worm born;
And then to dust shall be consigned.

****

After 100 Dog Births you will be an Out caste

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

533: Do not Abuse Guru
Those who wounded feelings,
Of Holy Guru who taught,
The One-lettered mantra, “AUM”
Will be a dog born,
And after a hundred dog incarnations
Will die a human out-caste.

****

Dogs will eat you.

 பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ

அணங்குட னாதித்த னாறு விரியின்

வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து

சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே

: Missing the Vision, the Body Perishes

Do you know how this body perishes?

Hear this:

A pretty damsel the man has for wife;

And like the sun his prosperity spreads;

And all bow to him in respect;

A body that waxed in a life like thus

Became a prey for prowling dogs to consume.

****

Sinners will scream like beaten Dogs

 சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 43

1199: Yoga True Path to Mukti

Sakti is the Lady of Sadhaka (Yogi)

She is the Mistress of Mukti

This they know not,

And in vain, in other ways,

Their devotion went;

Wretches they are;

Unto a beaten dog,

They scream and wail.

****

Bad men will bark at the Hills

1558. ஒன்றது பேரூர் வழியா றதற்கு

என்றது போல இருமுச் சமயமும்

நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்

குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2

1558: All Faiths Lead but to Lord

One, the Great City,

Six, the roads that lead to it;

Thus are Faiths Six;

They that contend, “This true; That false”

Are unto the dog that in ire barks

To its own echo at hilly side.

****

False Saints Howl like Dogs in the graveyard

1671. சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4

1671 Siva Jnanis are Quiescent

They howl about unto dogs at foot of gallows;

They peck about like vultures at carrion;

They frisk about like monkeys in merriment

They of false Jnana;

But quiescent are the Siva Jnanis true,

Dead to the world, though living in body and senses.

****

If you don’t respect Saints, there will  be wars.

1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்

வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்

நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு

வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1

1910 Do not Consign Siva Jnani’s Body to Fire; Nor Neglect it

If the body of Siva Jnani is to fire consigned,

The people entire will in burning fever suffer;

If his body a prey to dogs and jackals left,

Tumultous war the land will see,

And the people a prey to dogs and jackals be.

****

Who becomes Stray Dogs?

2148. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பிடை நின்ற உயிரை அறியார்

உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7

2148 Know the Relationship Between Body and Jiva

The bodies (Causal, Subtle and Gross) embrace one another,

But the Jiva within body stood,

They know not;

They who the kinship between body and Jiva

Understood not,

Are verily bewildered

Unto the dog that into a kitchen abrupt strays.

XXXXX

Also read my post:

WHO WILL BE BORN AS A RAT OR A DOG OR AN ASS ?-MANU’s LIST (Post No.7942)

Post No.7942

Date uploaded in London – 8 May 2020   

****

Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2024/09/13 › who-is-born-…

*****

3 days ago — Tamil poems say very interesting thins about Slaves, Beggars, Lepers and Hermaphrodites/eunuchs. ( I have already given a long list of animal …

Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? Tamil Discovery (Post No.13,664)

Post No. 13,664

Date uploaded in London – 13 September 2024   

****             

Can a Man be born as a Pig in his Next Birth? By London Swaminathan Post No. 823 Date 6 th February 2014.

****

Learn Tiru manthiram through Pictures – Part 5 ( Post No.13,626You will be born as a Pig.

****

பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45 (Post.13,547)

Post No. 13,547

Date uploaded in London – 15 August 2024                 

—–Subham—

Tags- Dog, born as, rebirth, Tirumular, warning.dont insult, Guru, Om, Aum

கருமிகள் பற்றி ஷேக்ஸ்பியரும், ரிக் வேதமும், தமிழ் வேதமும் செப்புவது என்ன?- 5 (Post No.11,675)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,675

Date uploaded in London – 16 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 கருமி, கஞ்சன்

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார் என்று முதலில் காண்போம் : ஷேக்ஸ்பியர் காலத்தில் நிக்கார்ட் NIGGARD என்ற ஆங்கிலச் சொல்லை மைசர் என்ற பொருளில் பயன்படுத்தினர். இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் இப்போது வேறு பொருள் .

வள்ளுவர் போல கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விடு  என்று  ஷேக்ஸ்பியர் சொல்லவில்லை. ஆயினும் கஞ்சன் , கருமி என்ற பொருளில் நிக்கார்ட் என்பதைக் கையாளுகிறார். இன்று இது கறுப்பர்களைத் திட்டும் சொல்லாக உபயோகப்படுகிறது.

மைடாஸ் MIDAS என்ற கிரேக்க புராணக்கதை எல்லோருக்கும்  தெரியும். தொட்டதெல்லாம் தங்கம் ஆகவேண்டும் என்று வேண்டி சாப்பாடு, தண்ணீர் முதலியவற்றைத் தொட முடியாமல் தவித்த மைடாஸ் கதாபாத்திரத்தை MERCHANT OF VENICE  மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்  நாடகத்தில் ஷேக்ஸ்பியர்  குறிப்பிடுகினறார் .அதே போல ஷைலாக் என்னும் பேராசை பிடித்த கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும் கருமிகளைத் திட்டவில்லை. அவர்கள் எல்லாவற்றிலும் சுஷ்டமானவர்கள் என்றே உவமையாகப் பயன்படுத்துகிறார். உன் பேச்சில் கருமித்தனம் வேண்டாம் என்பார்.

****

strait (adj.)       Old form(s): straight=mean, niggardly, stingy= கருமித்தனம்

Brutus

The deep of night is crept upon our talk,

And nature must obey necessity,

Which we will niggard with a little rest.

There is no more to say.

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸ் சொல்வதாவது: நம்முடைய பேச்சில் இரவு குறுக்கிடுகிறது ; கொஞ்சம் (கருமித்தனம் போல ) ஓய்வு எடுப்போம் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 ****

மாக்பெத் நாடகத்தில் உன் பேச்சில் கருமித்தனத்தைக் காட்டாதே என்கிறார் .

            No, they were well at peace when I did leave ’em.

MACDUFF

Be not a niggard of your speech. How goes ’t?

****

niggardly (adj.)            –mean-minded, tight-fisted, miserly            

My daughter! O, my ducats! O, my daughter! Fled with a Christian! O, my Christian ducats!

ஷைலாக் ஒரு யூதர். அவரிடம் கடன் வாங்கிய அன்டோனியோ ஒரு கிறிஸ்தவர். அவருடன் ஷைலக்கின் மகள் ஓடிப் போய்விடுகிறாள் உடனே ஷைலாக் கதறுகிறார் என் மகள் ! என் தங்க காசு!  கிறிஸ்தவனுடன் ஓடிப்போய்விட்டாள் என்னுடைய கிறிஸ்தவ தங்கமே!.

*****

2.Rich honesty dwells like a miser, sir, in a poor house; as your pearl in your foul oyster. -As You Like It. Act v. Sc. 4.

பணக்காரன் ஒரு குடிசையில் வசிப்பது போல அவள் இருக்கிறாள் ; பளபள முத்து அழுக்கான சிப்பிக்குள் இருப்பது போல. –ஆஸ் யூ லைக் இட் நாடகம்

3.Sonnet 75 in modern English

நாடகங்களைத்தவிர 154 பாடல்களையும் ஷேக்ஸ்பியர் எழுதினார். அவைகள் எல்லா வற்றிலும் 14 வரிகள் இருக்கும் ; நாம் 2 வரிப்பாடலை குறள்  என்றும் 4 வரிப்பாடலை வெண்பா என்று அழை     போல 14 வரிப்  பாடல்களை சான்னட் Sonnet என்று சொல்வார்கள்.

Sonnet 75: So Are You To My Thoughts As Food To Life

அதில் மைஸர்  என்பதைக் கஞ்சன் என்றே வியாக்கியானம் செய்கின்றனர். முதல் சில வரிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: நீ எனக்கு உயிர் வாழ உணவு போலவும்  பூமிக்கு வசந்த கால மழை  போலவும் உள்ளாய்; ஒரு கருமி தன்னுடைய பணத்தைப் பாதுகாக்க எப்படி தவிக்கிறானோ அப்படி நான் தவிக்கிறேன்.

ஒரு சமயம் அதைப்பார்த்து ஒரு கருமி மகிழ்கிறான். மற்றோர் சமயம் திருட்டு பயம் வாட்டுகிறது

So are you to my thoughts as food to life,
Or as sweet-season’d showers are to the ground;
And for the peace of you I hold such strife
As ‘twixt a miser and his wealth is found.
Now proud as an enjoyer, and anon
Doubting the filching age will steal his treasure;
Now counting best to be with you alone,
……………

****

அடி, உதை, கொல்! கருமிகளுக்கு எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்!

கருமிகளையும் கஞ்சர்களையும் கண்டால் இந்துக்களுக்குப் பிடிக்காது. வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை அவர்களைச் சாடியிருக்கிறார்கள். வள்ளுவர் கருமி களின் தாடையில் குத்துவிட்டு கரும்பு போலக் கசக்கிப் பிழி என்கிறார். வேத கால ரிஷிகள் கருமிகளைத் தீர்த்துக் கட்டுங்கள் என்கின்றனர். செல்வத்தின் பயனே ஈதல் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.

இதோ சில பொன்மொழிகள்: 

கன்னத்தில் அடிகையை முறுக்குகரும்பு போல நசுக்கு!

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

பரிதியார் உரை:கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

ரிக் வேதம் சொல்கிறது:

இந்திரனுக்கு பரிசு கொடுக்காதவர்களை அவன் எப்போது தன் காலடியில் களைகளைப் போட்டு மிதிப்பது போல மிதிப்பான்? (1-84-8)

(இங்கே இந்திரன் என்பது கடவுள் என்ற பொருளில் வந்துள்ளது; தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கடவுளுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான்; நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு; இதோ ஒன்று மட்டும்; கோ= அரசன், கடவுள்; கோவில்= அரண்மனை, இறைவன் உறைவிடம்; வேதங்களில் இந்திரன் என்பது அரசனையும், இறைவனையும் குறிக்கும்; இன்றுவரை நாம் கூட ராஜேந்திரன், மஹேந்திரன் என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்; இந்திரன் என்ற பெயர் இல்லாத நாடே மனித குலமே உலகில் கிடையாது. ஆங்கிலத்தில் ANDREW ஆன்ரூ என்பர்; அயிந்திர= அண்டிர= ஆன்ருANDREW; ஆய் அண்டிரன் என்ற தமிழ் மன்னன்= அஜேந்திரன்; எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

கருமிகளிடம் செல்வம் தங்காது/நிலைக்காது–RV 7-32-21

கருமிகளைக் கொல்லுங்கள்– 1-184-2

கொல்லச் சுரப்பதாம் கீழ் – என்ற வரிகள் மூலம் ரிக் வேத கருத்தை நாலடியாரும் ஆதரிக்கிறது (இரவலர் கன்றாக ஈவர்……..கொல்லச் சுரப்பதாம் கீழ்).

தொல்காப்பியரும் கருமிகளைத் திட்டுகிறார்:

கொடுப் போர் ஏத்திக் கொடா அர்ப்பழி த்தலும் -1036

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!!

 மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–

த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்

தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்

மஹாபாரதம்உத்யோக பர்வம் 33-60

அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்

அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை

த்வா- இருவரும்

கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி

அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.

வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.

AVVAIYAR CLASSIFICATION

உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

 “நல்வழி”  ஔவையார் 

உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு;  தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி

XXX

Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!

க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி

ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி

“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”

இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!

xxx 

Trees and Men; Three Types of Men

3 வகை மனிதர்கள் பாக்கு மரம்பனை மரம் தென்னை மரம்

தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

 பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

xxxx

ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர் போடும் Marks/ மதிப்பெண்!

அறப்பளீசுர சதகம் 38. இழிவு

இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை

     என்னுமவன் அவனின் ஈனன்

  ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்

     திடும்மூடன் அவனில் ஈனன்!

உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி

     உதவிடான் அவனில் ஈனன்!

  உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்

     உலுத்தனோ அவனில் ஈனன்!

பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்

     பலகால் அலைந்து திரியப்

  பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே

     பாரில்எல் லோர்க்கும் ஈனன்!

அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்

     அமுதனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த

இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,

எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………

தேவனே!,

புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்

இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –

அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்

அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்

மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு

எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே

நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்

உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்

பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறிபலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகேஇல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்

எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.

     (வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,

இயல்வது கரவேல்’ ‘

ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.

xxx

1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,-  45 / 100 Marks

 2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks

3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks

4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி

ஏமாற்றுவது இழிவு—25/100 Marks

5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்

இழிவு- 15 /100 Marks

6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks

முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees

தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்

இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா 

—subham—

Tags- கருமிகள் , ,ரிக் வேதம், தமிழ் வேதம், தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 , கருமி, கஞ்சன்

திருப்பதி கோவில் அதிசயங்கள்!  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 32 (Post No.13,64)

PICTURES ARE TAKEN FROM TTD WEBSITE;THANKS.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,674

Date uploaded in London – 16 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா  விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.

உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி,  முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!

பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள்  உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.

பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.

மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.

இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.

பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா  மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.

சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.

தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.

இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி,  சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள்.

தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.

இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று

****

எங்கே இருக்கிறது ?

சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும்  காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். சென்னை பம்பாய் ரயில்பாதையில் ரேணிகுண்டா சந்திப்பிலிருந்து 12 கி.மீ தூரத்தில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது அங்கிருந்து பஸ்களில் மலைக்குச் செல்லலாம்

நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறுமணிநேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.

தமிழில் திருவேங்கடம் என்றும் சம்ஸ்க்ருதத்தில் ஆதிவராஹ க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்

செப்டம்பர் 15, 2024 ல் அவரைத் தரிசித்த பக்தர் எண்ணிக்கை 85,626. இவ்வாறு தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டு முழுதும் விழா தான். ஆயினும் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பானது

பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது

பாலாஜியைப் பாடிய ஆழ்வார்கள்

மங்களாசாசனம் — பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்; பாசுரங்கள் 202–க்கும் மேல்

மூலவர்: திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான்.

உத்சவர்   _ திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன், மலையப்ப சுவாமி

திருமலையில், கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்.

தீர்த்தம்– 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

கோவிலுக்கு அருகிலுள்ள புஷ்கரிணி/ குளம்  மிகவும் பெரியது;  அழகானது.

ஸ்தல வ்ருக்ஷம்- புளியமரம்

****

கோவிந்தா கோவிந்தா

நைமிசாரண்ய ரிஷிகள், கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ளது; இன்றும் பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்தை மட்டுமே சொல்கிறார்கள்.

திருப்பதி லட்டு

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.

****

நான்  24 AUGUST 2019  ல் எழுதிய கட்டுரையிலிருந்து  முக்கியத் தகவல்கள்

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.

2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்

பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.

சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.

kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi

dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti

இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.

பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!

திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.

ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+  பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.

1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி  மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.

1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.

பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.

51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.

பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.

ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-

சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,

கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,

அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்

சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்

ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்

இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்

 பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன. 

*****

திருப்பதி மலைமேல் முருகன் !

(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை  கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

1.            திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.

1.            சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

1.            பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள்    தரும் தகவல்

R.Nanjappa

  /  August 24, 2019

Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?

If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.

On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!

When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.

So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.

நாமக்கல் மலைமீது பெரிய நாமம் இருந்தது உண்மை. நான் 60களில் சேலத்திலிருந்து திருச்சி செல்லும் போது அதைப் பார்த்திருக்கிறேன்.

நந்தி உருவம் போல் வேறு பல தெய்வ உருவங்களும் பிற இடங்களிலும் இருக்கலாம். இத்தகைய ஆஞ்சனேயர் உருவம் ஒன்றை நான் அறிவேன். 60களில் சேலம்-பங்களூர் ரயில் பாதை (மீட்டர் கேஜ்) புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதில் தர்மபுரியிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் முத்தம்பட்டி என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் உயரத்தில் இருக்கும். இருபக்கமும் உயர்ந்த குன்று/மலை. கன்ட்ராக்டர் தினமும் அங்கு ஜல்லிக்கல்லைக் கொட்டி தளத்தை உயரச்செய்வார்;மறுநாள் காலையில் அது கலைந்திருக்கும்! இப்படி பலமுறை நடந்தபின் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஏதோ பயம் தோன்றியது. அப்போது ரயில் தடத்தின் இருபுறமும் வளர்ந்திருந்த செடிகொடி புதர்களை நீக்கி மலையைத் தேடிப்பார்த்தார்கள். ஒருபுறம் மலையில் ஒரு ஆஞ்சனேயர் உருவம் செதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கன்ட்ராக்டர் தன் செலவில் அதற்குமுன் ஒரு மேடை அமைத்து, கோபுரம்போல் ஏதோ சிறிதாகக் கட்டுவதாகவும் , பூஜைக்கு ஏற்பாடு செய்வதாகவும், ஆஞ்சனேயர்தான் தடங்கல் இல்லாமல் ரயில் பாதை சரியாக அமைய அருள்புரியவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. கன்ட்ராக்டரும் தன் வேண்டுகோள்படி ஆஞ்சனேயர் திருமுன் மேடை அமைத்து, கோபுரம் போல் சிறிய அமைப்பையும் மலையையொட்டியே எழுப்பி, 1967ல் பெரிய விழாவாக பூஜை செய்தார். இந்த உருவம் எப்போது யார் செதுக்கியது என்று தெரியவில்லை. இது வியாசராயர் நிறுவிய 732 விக்ரஹங்கள் போல் இல்லை. சேலம்-பெங்களூர் புதிய இருப்புப்பாதையில் 1968 ஜனவரி பொங்கலன்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று அந்த ஆஞ்சனேயருக்கு விழா எடுத்தார்கள். அப்போது முத்தம்பட்டிக்குச் செல்ல யாரும் டிக்கட் வாங்கவேண்டியதில்லை! முத்தம்பட்டி ஸ்டேஷன் சிறிது தள்ளி இருந்தாலும் பாசஞ்சர் ரயிலை கோவிலுக்கு நேரெதிரிலேயே நிறுத்துவார்கள். எக்ஸ்பிரஸ் வண்டி அங்கு வரும்போதெல்லாம் இஞ்சினில் விசில் அடித்து தங்கள் மரியாதையைத் தெரிவிப்பார்கள். இப்படிப் பல வருஷங்கள் நடந்தன. தற்போது நிலை தெரியவில்லை!

****

திருப்பதி கோவில் அறிவிப்பு

திருமலையில் பிறந்தார் அனுமன்!

’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

Post No. 12,291

Date uploaded in London –   18 July , 2023                  

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

****

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

****

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

****

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

 ****

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

****

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

****

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

XXXXXX

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

****

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

****

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

****

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

****

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

****

3. குலசேகர ஆழ்வார் 

****

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

****

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।
उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।
uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

****

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

****

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

****

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

XXXX

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

****

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

****

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..

****

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

****

தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு

…………………

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்

சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது

–SUBHAM–

TAGS- ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 32, திருப்பதி கோவில் , அதிசயங்கள், முருகன் கோவில், அருணகிரிநாதர் , அதிகமான கல்வெட்டுகள் , லட்டு, பக்தர் எண்ணிக்கை , அனுமன் பிறந்த இடம், தொல்காப்பியத்தில் , திருமலை

ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா (Post No.13,673)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.673

Date uploaded in London – 16 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

 ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -1 

ச. நாகராஜன்  

ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா 

ஒலிம்பிக் நாயகி 

ஒரு பெண் நினைத்தால் எந்த சூழ்நிலையையும் சாதகமாக்கி கடுமையாக உழைத்து இமாலய வெற்றி பெறலாம் என்பதை நிருபித்தவர் ரஷியப் பெண்மணியான லரிஸா லடிநினா. மங்கையர் அனைவருக்கும் உத்வேகமும் ஊக்கமும் ஊட்டும் இவர் 18 ஒலிம்பிக் மெடல்களைப் பெற்று ஒலிம்பிக் நாயகியாக விளங்குகிறார். 90 வயதிலும் சுறுசுறுப்பாக அனைவருக்கும் வழிகாட்டும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?

பிறப்பும் இளமையும்

ரஷியப் பெண்மணியான லரிஸா செமியோனோவ்னா டிரியி உக்ரேனில் கெர்ஸன் என்ற இடத்தில் 1934-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். அவர் பதினோரு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரை விட்டுத் தந்தையார் பிரிந்து சென்றார்.  அவரை வளர்த்தவர் படிப்பறிவில்லாத அவரது தாயார் தான்.  அவர் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இரவில் வாட்ச்மேன் வேலையைப் பார்த்தார்; குழந்தையை வளர்த்தார்.

ஸ்டாலின்கிராட் போரில் லரிஸாவின் தந்தை மெஷின் கன் ஆபரேட்டராக இருந்த போது கொல்லப்பட்டார்.

இளமையில் ‘பாலட்’ டான்ஸை பயிற்சி செய்த லரிஸா பின்னர் அவரது நடனப் பயிற்சியாளர் கெர்ஸனை விட்டுச் சென்று விடவே சீருடற்பயிற்சி என்னும் ஜிம்னாஸ்டிக்ஸில் தீவிரமாக ஈடுபட்டார்.

1953-ல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர் கியிவ் என்ற இடத்தில் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். 19 வயதே ஆன போது 1954-ல் ரோமில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு அவர் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக் போட்டி பற்றிய சுவையான செய்திகள்

கிரேக்க நாட்டில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீஸில் நடந்த போட்டிகளால் உத்வேகம் பெறப்பட்டு ஒலிம்பிக் போட்டி துவங்கப்பட்டது.

1894ல் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது.

1896ல் முதன் முதலாக ஏதன்ஸ் நகரில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 1994 முதல் சம்மர் ஒலிம்பிக், விண்டர் ஒலிம்பிக் என்று இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

 உடல் ஊனமுற்றோருக்காக பாராலிம்பிக் என்னும் போட்டிகள் தனியே தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது.

 முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1916, 1940, 1944 ஆகிய வருடங்களில் போட்டி நடத்தப்படவில்லை.

 ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

 2020 சம்மர் ஒலிம்பிக்கிலும் 2022 விண்டர் ஒலிம்பிக்கிலும் 14000 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

40 வெவ்வேறு விளையாட்டுகளில் 448 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

போட்டியில் வென்ற முதல் மூவருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் வழங்கப்படுகிறது.

இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்கள் பெற்ற முதல் மூன்று நாடுகள் பின் வருமாறு:

அமெரிக்கா 2259 மெடல்கள்

ரஷியா 2011 மெடல்கள்

ஜெர்மனி 1821 மெடல்கள்

சம்மர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 520 கோடி அமெரிக்க டாலர் ஆகும். விண்டர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 310 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.

 ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறத்தில் ஐந்து ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது.

இந்த வளையங்களின் வண்ணங்கள் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு.

இப்படிப்பட்ட வண்ணங்களின் தேர்வு ஏனெனில், உலகில் உள்ள அனைத்து தேசங்களின் கொடிகளிலும் இந்த ஐந்து வண்ணங்களில் ஏதோ ஒரு வண்ணம் இடம் பெறுகிறது, அதனால் தான்.

 ஒலிம்பிக் உத்வேகமூட்டும் வாசகம் : சிடியஸ், ஆல்டியஸ், ஃபார்டியஸ் 

(வேகமாக, உயரமாக, வலிமையாக) என்பதாகும். 

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு 

ஏதென்ஸில் 1896-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டதென்றாலும், 1900ல் தான் பெண்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக எல்லாப் போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள 1928 முதல் அனுமதிக்கப்பட்டனர்.

**

Tamil View on Biting Dogs and Barking Dogs! (Post No.13,672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,672

Date uploaded in London – 15 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Naay in Tamil is Dog. Gnamali is an ancient word for the same. Though we see dogs in good light in Rig Veda and Mahabharata, dog is seen as unclean animal. It is not allowed in Brahmins street or places where rituals take place. But in Rig Veda, it is shown as a messenger and in Mahabarata it accompanied Yudhisthira till the end.  All the Hindus appreciated its gratefulness.

Mahatma Gandhi advised in his many articles to kill the stray dogs, though he championed the cause of Ahimsa (Non hurting).

Manikkavasagar, one of the Four Great Saivite saints compared himself to the lowest dog in 62 places in his Masterpiece Tiruvasagam. Following him many other Saivite poets also used the animal with bad connotation. Actually they represented only common people by using that expression. The poets were great people.

Pig is another unclean animal hated by the Hindus.

****

Tamil Jain poets composed 400 poems, and they are collected in the book Naladiyar (naaladiyaar). And there is another book Neethi Venba by an anonymous author, which also have some references to dogs. There are many proverbs on dogs as well.

South Koreans relish Dog meat. A new law will be implemented in three years’ time to ban dog meat completely. Now they eat 10 lakh dogs every year according to newspapers.

One million dogs eaten in South Korea

There are about 1,150 farms, while 1,600 restaurants sell dog meat dishes, according to the agriculture ministry. Activists say as many as 1 million dogs a year are slaughtered in South Korea.19 Jan 2024

The oft quoted journalist phrase has its origin in Tamil book Naladiyar.

The phrase “When a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news” is often used in journalism school to illustrate the idea that news is defined as unusual and infrequent events. 

Here are the translations of Tamil poems (the original tamil verses are in my Tamil article).

Who will bite the biting dog?

70. Dog Bite

There are none here who though see a dog snap angrily at them, will in return snap at the dog with their mouth. So when the low mischievously utter base things, will the noble repeat such words in return?

Or

Return not railing for railing. Though a dog, in rage, should lay hold of them, there are none in the world who, in return, would lay hold of it with their mouth; and thus, when low men speak, not what is fitting, but low words, will high-minded men, in reply, utter such words with their mouth.

****

One good reference to Dog

213.Elephant and Dog

Avoiding the friendship of those who resemble elephants, seek the friendship of those who resemble dogs, for an elephant will his driver whom  he has known for a long time but a dog will wag his tail while the spear thrown at him is still in his body.

Or

The elephant and the dog, types of false and true friends. Forsaking friendship with those who resemble the elephant, embrace and hold fast intimacy with those who are like the dog; for the elephant will slay even its keeper though it has long known him; but the dog will wag its tail when it has in its body the javelin hurled at it by its angry master.

218. Friendship

Though they adhere to one in friendship, as closely as the small toes of the dog to one another, yet of what use is their love if they do not help even so little as the leg of a fly? Though the , who like the water channel which fructifies the  rice field, be eve so far away, we must nevertheless go to  them and obtain their friendship.

Or

Friendship of those who though near aid not. Of what value is the friendship of those who being very near like the little claw on a dog’s leg, afford not help as much as a fly’s foot? Though you go far to seek it, lay hold of the friendship of those who are like the water channel that causes the crops in the field to flourish.

****

254.Barking Dog

If one who has grown up in ignorance enter the assembly of the men of great learning and remain silent, it will be like the sitting down of a dog; and if instead of remaining quiet, he says anything, it is like the barking of it.

Or

An ignorant man is a mere cur! When a man who has grown up without learning enters the society of the wise, if he sits still, it is as if a dog sat there; and if he rise to speak, it is as though a dog barked.

****

322.AVVIYAM

Men destitute of rectitude will not even listen to the ways of virtue taught by those who are free from envy and other evils, just as  the chuckler’s dog that gnaws and devours leather, incapable of relishing the taste of the milk porridge

Or

Foolish people hearing hear not. When men of ungrudging soul declare the way of virtue, those who are not rightly disposed, although they give ear, hear not. Even so the currier’s dog seizes on and devours leather, not appreciating the flavour of milk and rice.

****

Dogs Don’t like Golden Dish

345.PORKALAM

Though the dog be properly nourished and fed from a golden dish, yet it will ever earnestly looking out for the leavings of others. In like manner, though the mean be esteemed to be honourable men , their acts will  differ from  their position in life.

Or

The dog prefers to feed on refuse. Nature will out! The dog, though you tend it with care, feeding it from a golden vessel, will watch, eye fixed for others’ leavings ; even so, although you receive the base as if they were possessed of greatness, the deeds they do will be otherwise (= their real character will be seen by their conduct).

****

Thanks to https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0711.pdf

—subham—

Tags: Tamil view, Dogs, Grateful, runs for, barking, biting, Friendship, Naladiyar,  assembly, refuse, wags tail, Naay, Gnamali

யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம் (Post No.13,671)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,671

Date uploaded in London – 15 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் , மாக்ஸ்முல்லரின் பரம எதிரி, யூத மத அறிஞர்  தியோடர் கோல்ட்ஸ்டக்கர் (1821- 1872)   பற்றி  பல கட்டுரைகள் எழுதிவிட்டேன் இன்னும் மர்மம் துலங்கவில்லை.

அவருடைய படம் எங்குமே இல்லை. அவரே அதை அழித்தாரா அல்லது மாக்ஸ்முல்லர் கும்பல் அவர் படத்தை அழித்தனரா? அவரது நூல்கள் ஏன் வெளியாகவில்லை ? அவர் பிரிட்டிஷ் லைப்ரரியிடம் (அப்போது இந்தியா ஆபீஸ் லைப்ரரி ) வெளியிடச் சொல்லி கொடுத்த விஷயங்கள் என்னவாயிற்று  ?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டன்  பல்கலைக்கழக லைப்ரரிக்குச் சென்று 130  ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர்கர்கள் பற்றிய ஆங்கில நூலை எடுத்தேன். அவசரத்துடனும் ஆர்வத்துடனும் வேகமாக பொருளடக்கத்தைப் பார்த்து THEODOR GOLDSTUCKER 1821-1872 தியோடர் கோல்ட்ஸ்டக்கர் பெயர் இருப்பதைப் பார்த்தேன். எனது எக்ஸைட்மென்டு EXCITEMENTக்கு அளவே இல்லை என் முகம் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல பிரகாசித்தது. புரட்டினேன்புரட்டினேன் புரட்டினேன் கோல்ட்ஸ்டக்கர்   பக்கத்துக்கு  வந்தேன். 1000 வாட் பல்பு பியூஸ் ஆயிற்று. அவர் படம் அந்தப் புஸ்தகத்தில் இல்லை!!! 130 சம்ஸ்க்ருத அறிஞர்களில் பெரும்பாலோர் படங்கள் உள்ளன. ஆனால் எனது அருமை கோல்ட்ஸ்டக்கர் (1821- 1872)  படம் இல்லை  அவ லண்டன் பலக்லைக்கழக் கழக ஸம்ஸ்க்ருத்ப் பேராசிரியர் .

முதலில் அவரது வரலாற்றைப் படித்துவிட்டு மீண்டும் மர்மக் கதைக்கு வருவோம்.

பாணினி  எழுதிய இலக்கண நூல் அஷ்டாத்யாயீ, இலக்கிய உலக அதிசயங்களில் ஒன்று; 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி,  அதற்கு எழுதிய மஹாபாஷ்யம் என்னும் உரை அதைப்போலவே இன்னுமொரு அதிசயம்.  பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கணம்தான் உலகின் முதல் இலக்கண நூல்மஹாபாஷ்யம்தான் உலகின் முதல் இலக்கண உரைநூல்!

பாணினி 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  நூலை இயற்றியதாக கோல்ட்ஸ்டக்கர் நிரூபித்துள்ளார். அவர் ஒரு யூதர். ஆனால் கிறிஸ்தவ மத அறிஞர்கள் எல்லோரும் உலகம் தோன்றியதே 6000 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற வாதத்தை ஏ ற்  றதால் இந்துமத நூல்கள் சொல்லும் காலத்தை நம்பவில்லை. அவர்கள் 6000 ஆண்டுக்கு முன்னர்தான் பூமி தோன்றியது என்று  சொன்னபோது தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் பூமியும் மனிதனும் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பகர்ந்தன.

சம்ஸ்க்ருத பண்டிதர்கள் உதவி இல்லாமல் ஐரோப்பாவில் மஹாபாஷ்யத்தை ஆராய்ந்தவர் இவர் ஒருவர்தான். குரு குலக் கல்வியை அவர் ஆதரித்தார்.

***

18-1-1821-ல் ஜெர்மனியில் கோநிஸ்பர்க் KOENIGSBERG என்னுமிடத்தில் பிறந்தார்.

பாரிஸ் நகரில் சம்ஸ்க்ருத நூல்களை பயின்ற பின்னர் 1850 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு வந்தார். ஓராண்டுக்குப் பின்னர் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் ஸம்ஸ்க்ருதப் பேராசியர் ஆனார். 6-3-1872 ல் இறக்கும் வரை அந்தப் பதவியை வகித்தார்.

பிரபோதய சந்திர என்ற நாடகத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து  பெயரை வெளியிடாமல் அச்சிட்டார். சம்ஸ்க்ருத — ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் மாபெரும் திட்டத்தை எச் எச் வில்சன் , இவரிடம் ஒப்படைத்தார். ஆனால் அந்த நூல் அரைகுறையாக நின்றுவிட்டது.

அவரது முயற்சியில் சம்ஸ்க்ருத நூல் கழகம் உருவானது. அதன் சார்பில் ஜைமினீய நியாய  மாலாவிஸ்த்ரா 1867-ல் வெளியிடப்பட்டது . அவர் எழுதிய மஹாபாஷ்யப் பேருரை அவர் இறந்த பின்னர் 1874-ஆம் ஆண்டில் வெளியானது .

வேத கால சடங்குளைப் பற்றிய MANAVA KALPASUTRA மானவ கல்ப சூத்திரத்தை குழாயில் குமாரில சுவாமி உரையுடன் வெளியிட்டார். லண்டன் பெர்லின் ஆகிய இரண்டு நகரங்களிலும் 1861 ஆம் ஆண்டில் சம்க்ருத இலக்கியத்தில் பாணினியின் பங்கு என்ற ஆங்கில நூல் வெளியானது சம்ஸ்க்ருத மொழி குறித்த அருமையான நூல் இது என்று உலகமே போற்றியது. யாஸ்கர்,  காத்யாயனர், பதஞ்சலி, ஆகியோரின் படைப்புகளுடன் பாணினி நூலை ஒப்பிட்ட பெரும் ஆராய்சசி நூல் இது.

ஆங்கிலேய கருத்துக்களை புகுத்தாமல் இந்தியாவில் இந்திய சட்டப் புஸ்தகங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவில் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் ON THE DEFICIENCIES IN THE PRESENT ADMINISTRATION OF HINDU LAW, LONDON 1871 எழுதினார். பிரிட்டிஷ் அரசாங்கமே சட்ட விஷயங்களில் கோட்ஸ்டக்கரை கலந்தாலோசித்தது. இலக்கணத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினாரோ அவ்வளவு நேரத்தை சட்ட விஷயங்களுக்கும் ஒதுக்கினார். பந்து = சொந்தக்காரர் என்ற பெயரில் அவைகளை வெளியிட்டார்.

அவர் இறந்த பின்னர் 1879-ம் ஆண்டில் லண்டனில் LITERARY REMAINS OF THE LATE THEODOR GOLDSTUCKER  என்ற நூல் வெளியானது. இதில் கோல்ட்ஸ்டக்கரின் முழு படைப்புகளும்  இல்லை. இதையே இன்று வரை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர்.

மர்மம் என்ன ?

இவ்வளவு பெரிய அறிஞரின் படம் ஏன் எங்கேயும் இல்லை ? அவரது குடும்பத்தினர் எங்கே ? அவர்களாவது படத்தை வெளியிடலாமே !

அவர் நான் இறந்த பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட வேண்டும் என்று லண்டனிலுள்ள  இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் கொடுத்த விஷயங்கள் என்ன ஆயிற்று ? ஏன் இன்று வரை யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை ?

அதில் ஸம்ஸ்க்ருதத்தையும் இந்து மதத்தையும் போற்றும் விஷயங்கள் இருப்பதால் அமுக்கிவிட்டார்களா?

மகாபாரதம் குறித்து ஆராய்ச்சி நோட்ஸ்களுடன் அவர் எடுத்திய இரண்டு தொகுதிகளை ஏன் இன்று வரை வெளியிடவில்லை ?

ஆதார நூல் GERMAN INDOLOGISTS ஜெர்மன் இண்டாலஜிஸ்ட்ஸ் 1990

****

இந்தக் கட்டுரையைப் படிப்போர் ஏதேனும் புதிய விஷயங்களையோ அல்லது அவரது புகைப்படத்தையோ கண்டாலோ தயவு செய்து எழுதுங்கள் . நானும் லநாதனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி மற்றும் பல்கலைக்கழக் லைப்ரரியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.  அவரது ஆங்கிலப் புஸ்தகங்களில் பாணினி பற்றிய நூலைப் படித்து நான் ஏற்கனவே தமிழிலும் ,ஆங்கிலத்திலும் ஏற்கனவே கட்டுரைகளை எழுதியிருக்கிறன்.

—subham—

Tags- ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் , யூத மத அறிஞர்,  தியோடர் கோல்ட்ஸ்டக்கர்  , படம், மர்மம் என்ன ?

ஐன்ஸ்டீனின் மூளை! – 2 (Post No.13,670)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.670

Date uploaded in London – 15 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐன்ஸ்டீனின் மூளை! – 2

ச. நாகராஜன்

உலகின் தலை சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் பத்துப் பேரை இன்றைய இயற்பியல் விஞ்ஞானிகள் நூறு பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அந்தப் பட்டியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலிடம் பெறுகிறார்.

இதுவரை சர் ஐஸக் நியூட்டன் மட்டுமே இயற்பியல் விஞ்ஞானிகளுள் முதல்வராகக் கருதப்பட்டு வந்தார். அவரை இரண்டாம் இடத்திற்கு இறக்கி, முதலிடத்திற்கு ஐன்ஸ்டீனை முன்னேற்றி விட்டது இந்த விஞ்ஞானிகளின் புதிய தேர்வு!

ஐன்ஸ்டீன் (தோற்றம் 14-3-1879 மறைவு 18-4-1955) இன்றைய உலகின் சிந்தனைப் போக்கையே காலம் மற்றும் வெளி பற்றிய (Space and Time)

தனது ஒப்புமை தத்துவத்தால் (தியரி ஆஃப் ரிலேடிவிடி) மாற்றி விட்டவர். மாபெரும் நோபல் பரிசைப் பெற்றவர்.

பட்டியலில் இடம் பெற்ற பத்துப் பேர் யார், யார்?

1)   ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

2)   ஐஸக் நியூட்டன்

3)   ஜேம்ஸ் க்ளர்க் மாக்ஸ்வெல்

4)   நீல்ஸ் பொர்

5)   வார்னர் ஹெய்ஸன்பர்க்

6)   கலிலியோ

7)   ரிச்சர்ட் பெய்ன்மேன்

8)   பால் டிரக்

9)   எர்வின் ஷ்ரோடிங்கர்

10) எர்னஸ்ட் ருதர்போர்ட்

பிஸிக்ஸ் வோர்ல்ட் என்ற பத்திரிக்கை இந்த தேர்வை நடத்தியது.

ஐன்ஸ்டீனும் ஐஸக் நியூட்டனும் என்றும் முதல் இரண்டு இடங்களிலேயே இருப்பர்; இவர்களை மாற்றவோ இறக்கவோ முடியாது என்று பிரையான் க்ரீன் என்ற கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கூறுகிறார்.

நியூடன், ஜேம்ஸ் க்ளர்க் மாக்ஸ்வெல், பால் டிரக் ஆகிய மூவரும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். நியூஜிலாந்தைச் சேர்ந்த எர்னஸ்ட் ருதர்போர்டும் பட்டியலில் இடம் பெற்று விட்டார். இவர் தன் ஆராய்ச்சியைப் பெரும்பாலும் பிரிட்டனில் செய்தவர்.

இந்தப் பத்துப் பேரில் ஏழு பேர் கொள்கைகளைக் கண்டுபிடித்த தியரிஸ்ட் என்னும் தத்துவம் தந்த விஞ்ஞானிகள் ஆவர்.

இதே போன்று தேர்வு நடத்திய பிஸிக்ஸ் வெப் தேர்வில் ஐஸக் நியூட்டன் முதலிடம் பெற்றார். மைக்கேல் பாரடேயும் பட்டியலில் இடம் பெற்று விட்டார். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு பட்டியலிலும் இடம் பெறாதது மிக்க ஆச்சரியத்தைத் தருகிறது!

ஐன்ஸ்டீன் இறந்தவுடன் அவரது மருத்துவரான ஜான் ஹார்வி அவரது மூளையை எடுத்து ரகசியமாகத் தனது வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டார்.

பின்னால் இது தெரிய வந்த போது விஞ்ஞானிகள் பலரும் அவரது மூளையை ஆராய விருப்பம் தெரிவித்ததால் அதைப் பல துண்டுகளாக்கி ஹார்வி அனைவருக்கும் தந்தார்.

மூளையை முழுதுமாக ஆராய்ந்ததில் கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகம் முன்னணி வகித்தது. அங்குள்ள மூளையியல் பெண் விஞ்ஞானியான சாண்ட்ரா விடல்ஸன் பல அதிசயங்களைக் கண்டு பிடித்தார்.

பகுத்தறியும் கணிதப் பகுதியான மூளையின் Inferior Parietal Region   

எனப்படும் இன்ஃபீரியர் பரீடல் பகுதி மற்ற சாதாரண மூளைகளை விட பதினைந்து சதவிகிதம் இருபுறமும் அகலமாக இருப்பதை அவர் கண்டார். அத்தோடு மூளையின் முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் வரை செல்லும்  குழைவு (Groove)   ஐன்ஸ்டீன் மூளையில் அப்படி மறுபுறம் வரை செல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலான ‘தி லான்சட்’ பத்திரிக்கையில் அவர் இவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

சூழ்நிலை, மூளையின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று என்று குறிப்பிடும் அவர், ஆனால் சூழ்நிலை மட்டுமே இதற்குக் காரணம் இல்லை என்பதை ஐன்ஸ்டீனின் மூளை நிரூபிக்கிறது என்கிறார்.

எந்தச் சூழ்நிலையானாலும் முன்னேறலாம் என்பது சுவையான செய்தி!

இன்ஃபீரியர் பரீடல் பகுதி இப்போது மிகவும் ஆராயப்பட வேண்டிய முக்கிய பகுதியாகி விட்டது.

35 ஆண்கள், 56 பெண்கள் ஆகியோரது மூளைகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டதில் தெரிய வந்துள்ள செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது வியப்படைகிறோம்.

ஐன்ஸ்டீனின் மூளையின் மர்மம் விளக்க இருக்கும் செய்திகள் ஏராளம் என்பதால் உலகமே அதில் ஆர்வம் காட்டுவதில் வியப்பில்லை.

ஏனெனில் உலகின் முதல் மூளை எப்படி இருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வம் ஏற்படுவது இயல்பு தானே!

**

‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 250வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

Shakespeare in Rig Veda and Tamil Veda- on Misers (Post.13,669)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,669

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Misers and Stingy people are hated by the society. We find quotations on them from great scholars around the world from historical times. Shakespeare who lived 500 years ago did not preach violence against them. But Hindus never hesitated to use violence against them. We see such references in the Rig Veda and the Tamil Veda Tirukkural. We have quotations even from the Mahabharata.

Here are a few quotations from Shakespeare:

Misery in Shakespeare meant difficulty. He used Niggard for miserliness.

strait (adj.)   Old form(s): straight , mean, niggardly, stingy        

KJ V.vii.42

[King John to all]

I beg cold comfort; and you are so strait / And so ingrateful you deny me that.

****

****

H8 I.i.70

[Abergavenny to Norfolk, of Wolsey’s pride] If not from hell, the devil is a niggard

***

Mac IV.iii.180

[Macduff to Ross] Be not a niggard of your speech

****

H5 II.iv.46

[Dauphin to Constable] a weak and niggardly projection / Doth like a miser spoil his coat with scanting / A little cloth

****

TN II.v.4

[Sir Toby to Fabian, of Malvolio] Wouldst thou not be glad to have the niggardly, rascally sheep-biter come by some notable shame?

*****

1.Decrepit miser! base ignoble wretch!
I am descended of a gentler blood.
Thou art no father nor friend of mine.

2.Rich honesty dwells like a miser, sir, in a poor house; as your pearl in your foul oyster. -As You Like It. Act v. Sc. 4.

3.Sonnet 75 in modern English

You are to me what food is to life, or what spring showers are to the earth, and to achieve peace of mind about you I struggle with myself as a miser struggles with his wealth. One moment he proudly enjoys it and the next he’s worried that the thieving age we live in will steal his treasure – now counting it best to keep you to myself, then reckoning it better if the world could see my pleasure. At times I feel full from feasting on your looks but eventually absolutely starving for a glimpse of you, having or looking for no pleasure except what you give me and what I can take from you. That’s why I either waste away with hunger day after day, or either stuff myself with you or go without.

Sonnet 75: So Are You To My Thoughts As Food To Life

So are you to my thoughts as food to life,
Or as sweet-season’d showers are to the ground;
And for the peace of you I hold such strife
As ‘twixt a miser and his wealth is found………
****

Merchant of Venice

Shylock is a greedy and a miser in Shakespeare’s Merchant of Venice drama. He  is a Jewish moneylender who loans 3,000 ducats to his Christian rival Antonio, setting the security at a pound of Antonio’s flesh. When a bankrupt Antonio defaults on the loan, Shylock demands the pound of flesh.. Meanwhile, Shylock’s daughter, Jessica, falls in love with Antonio’s friend Lorenzo and converts to Christianity, leaves Shylock’s house and steals vast riches from him, which add to Shylock’s rage and harden his resolve for revenge. In the end – due to the efforts of Antonio’s well-wisher, Portia – Shylock is charged with attempted murder of a Christian, carrying a possible death penalty, and Antonio is freed without punishment.

Greedy King Midas is also referred to in the play.

****

VIOLENCE IN RIG VEDA AND TAMIL VEDA AGAINST THE MISERS!

Rig Veda is the oldest religious book; and that is the oldest anthology. It is full of mystery and history. It shows a civilised society with very high values. The Vedic seers praised hospitality and charity. They made it one of the six tasks for Brahmins; they can accept donation but they must also give. Tamil literature also praised hospitality and charity. Tamils consider Tirukkural, the didactic book with 1330 couplets, as the Tamil Veda. It is authored by Tiruvalluvar, the greatest of the Tamil poets. Though Rig Veda and Tamil Veda are thousands of years apart, the values remained same throughout the vast land, then the world’s largest country. 

The Vedic and Tamil poets were dead against the misers. They went even to the extent of preaching violence against the stingy fellows. The poets of the Rig Veda and Tamil Veda advocates arm twisting and jaw breaking tactics to extract money from the parsimonious and penurious lot

Rig Veda says,

When will Indra trample, like a weed; the man who hath no gifts for him? RV 1-84-8

“Slay the niggards”- says another Vedic seer 1-184-2

“Wealth comes not to the niggard, unpleasant man” – RV 7-32-21

DROWN MISERS IN THE SEA: MAHABHARATA

Ambhasi nivestavya: To be drowned in ocean

Mahabharata says,
Dvaambhasi nivestavyau gale badhwaa drutaam silaam
Dhanavantamadaataaram daridram caatapasvinam
—Udyoga parva 33.60

 Drown the following two kinds of people in the ocean:

1.Adaataa Chanukah
Richman who doesn’t give
2.Atapasvi daridra
Poor man who is not devout

****

From Tamil Books

Break the jaw; Crush him like Sugarcane: Valluvar

Tamil poet Tiruvaluvar never hesitated to advocate violence against the mean-minded, close fisted, Scrooge like fellows; he says in a Tirukkural couplet,

“At a mere word the good melt; but the mean, like the sugarcane, yield only under pressure” – 1078

Another translation of the same couplet: “Good men of virtue give charity at the mere call for help, but ignoble ones, will give only when crushed like sugarcane”.

Another couplet runs like this:

“The mean will not even shake off what sticks to their hands to any but those who would break their jaws with their clenched fists”- 1077

Another translation of the same couplet: Except to those who twist their hands and break their jaws, mean characters, will not even shake their food-moistened fingers.

In another couplet, Valluvar advocated also death penalty for the murderers. He compared the murderers as weeds in the field. Capital punishment for grievous offences is like the weeding of fields, necessary for protecting the food crops.

“The king gives capital punishment to wicked killers like removing weeds from flourishing fields” (Tirukkural 550)

Sanskrit law books such as Manu smrti and Sukra neeti also support capital punishment.

****

Tolkappiam and Bhagavad Gita

Oldest Tamil book Tolkappiam also says that those who don’t give will be shunned and those who give would be praised (Sutra 1036)

 In the Bhagavad Gita, Lord Krishna says those who cook for themselves, verily eat sin (B.G.3-13)

Manu also says the same: “The person who cooks only for himself eats nothing but sin, for the food left over from sacrifice is the food intended for good men”- Manu 3-118

 2000 years ago, Tamil poet Ilamperu Vazuthi (Purananuru verse 182) said that Tamils wouldn’t eat alone even if they get Indra’s Amrta (ambrosia from the Indraloka); Giving and sharing was in their blood.

There is a satirical couplet in Sanskrit, mocking at the misers:

Krupana iva daataa na bhuuto na bhavishayati

Na buncanneva sarvasvam parasmai sah pradaasyati

 There was neither a philanthropist in the past nor there will be one in in the future like the misers. They don’t even eat and leave all theirs to others.

 It is true indeed that they don’t spend anything for themselves and after their death, all their wealth go to others.

XXXX

People are of Three Tree Types! 

He gives twice who gives quickly – is a proverb.

A Tamil poem also says that there is nothing wrong to say ‘No’ if one doesn’t have money to donate; but it is the habit of low lives to dodge and refuse to give at the end (Naladiyar poem) 

Another Tamil verse compares people who prevent other people from giving to a fruit tree surrounded by thorny bush. Here the fruit tree stands for the philanthropists and the thorny bush to the bad people who prevent the good people from donating. (Neethineri Venba)

The same poet divides people into three categories:

Palmyra Tree people:

The first category is like the Palmyra tree; they give like Palmyra trees; i.e the Palmyra trees give fruits even without we watering it.

The second category of people is like the Coconut trees. You have to water the coconut trees now and then to get good yields.

The third category of people is like areca nut trees. Unless you water it constantly the trees wont yield you any fruits. People at the lowest level will help you only when you help them. 

—-subham—

Tags- Miser, Niggard, stingy, Shakespeare, Rig Veda, Tirukkural, Violence, Mahabharata, Tree Types, Men, Midas, Shylock

அனுமன் வால் பற்றிய சுவையான துணுக்குகள் (Post No.13,668)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,668

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமனின் வால், திரவுபதியின் புடவை போல அற்புதமாக நீண்டு கொண்டே போக்கக்கூடியது என்று ராமாயணங்கள் பாடுகின்றன

ராமாயணங்கள் என்று பன்மையில் சொன்னதற்குக் காரணம் ௩௦௦௦  ராமாயண நூல்கள், கீர்த்தனைகள், பிற நூல் குறிப்புகள் உள்ளன . ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் புதிய தகவல் கிடைக்கிறது .

அனுமனுக்கு ராவணன் சபையில் உட்கார ஆசனம் கொடுக்கப்படவில்லை உடனே அவன் தனது வாலினை  நீளமாக்கி அதைச் சுருட்டி ஆசனம் உண்டாக்கினான் ; இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் பல கோவில்களில் சிற்பமும் ஓவியங்களும் உள்ளன. இந்த அனுமன் இருக்கை விஷயம் பாவார்த்த ராமாயணத்தில் இருக்கிறது.

அனுமனின் வால் பற்றி ஆனந்த ராமாயணம் ஒரு சுவையான செய்தியை அளிக்கிறது . ராவணனின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய ராக்ஷஸ பட்டாளமே வந்தது. ஆனாலும் வால் எரிய மறுத்தது .அனுமனே ஒரு ஐடியா சொன்னான். ராவணனின் பத்து வாய்களால் காற்றினை ஊதினால் தீப்பிடிக்கும்  என்றான் . ராவணன் பூ இவ்வளவுதானா என்று பத்து வாய்களால் ஊதினான் . உடனே தீப்பிடித்தது . ஆனால் அந்த  தீ அங்கே மட்டும் பற்றவில்லை ; ராவணனின் தாடி. மீசை எல்லாம் பரவி அவன் முகத்தைக் கருக்கியது.

இந்தோனேஷிய மொழியில் உள்ள ராமாயணம் , விபீஷணன் விடுத்த எச்சரிக்கையை  எழுத்தில் வடித்துள்ளது . அது என்னவென்றால் இந்தக் குரங்கினைக் கொல்லுங்கள் என்று ராவணன் கட்டளையிட்ட போது, கொல்லாதீர்கள்; குரங்கினால் இலங்கைக்கு ஒரு ஆபத்து வரும் என்று முன்பே சாபம் உள்ளது என்று விபிஷணன் நினைவுபடுத்துகிறான். அதற்குப்  பின்னரே வாலுக்குத் தீ வைக்கும் கட்டளையை ராவணன் பிறப்பிக்கிறான்.

கிருத்திவாஸ ராமாயணம் என்னும் அஸ்ஸாமிய மொழி  ராமாயணம் வால் பற்றிய மிகைப்படுத்திய வருணனையை அளிக்கிறது.  அது ௧௦௦ யோஜனை நீளம் வளர்ந்ததாகவும் அதைத்தூக்க லட்சம் ராக்ஷஸர்கள் வந்ததாகவும் பகர்கிறது .ஆங்கில இலக்கியத்தில் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் நாவல் கும்பகர்ணன் அனுமன் விஷயங்களை கல்லி வரின் மீது ஏற்றிச் சொல்கிறது. இதைத்தான் ஈயடிச்சான் காப்பி என்கிறோம் .

தென் இந்திய மலைவாழ் பழங்குடி மக்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ராக்ஷன் ஒருவன் இரும்ப்புப்பட்டறையில் ஆயு தங்கள் செய்கையில் அனுமன் அங்கு கொதித்துக்கொண்டிருந்த இரும்பினைக் குடிக்கப் போனானாம். ; அப்படியும் அனுமனைத் தடுக்க முடியாததால் அனலாகத்தகித்த இரும்புக்கு குழம்பினை அனுமனின் வாலில் ஊற்றினானாம். அது தீப்பிடிக்கவே அனுமன் இலங்கை முழுதும் தாவிச்சென்று இலங்கையை தீக்கிரையாக்கினானாம். கற்பனைக்கு அளவுதான் உண்டோ !

 இறுதியில் அனுமன் தன்னுடைய வாலில் இருந்த தீயைக் கடலில் முக்கி நடித்ததாக வால்மீகி ரா செப்புகிறது அனால் கிருத்திவாஸ ராமாயணம் மேலும் ஒரு kathaiyaik  கூறுகிறது. தீயை எப்படி அணைப்பது என்று சீதா தேவியை மான் கேட்கவே உனது விசுவரூப வ்வாயில் வைத்தால் aal vaain தீ அவிந்து போகுமே என்றாளாம். அனுமனும் அவ்வாறே செய்ய முகம் karukirraam.  கருகிப்போனதாம் ; எல்லோரும் nakaipparkale  என்று எண்ணி மீண்டும் சீதையிடம் senru அனுமன் kamplaint seyyave  கம்மபாய்ண்ட் பிழை

 செய்யவே கவலைப் படாதே எல்லா குரங்குகளின் mukaththaiyum கறுப்பாக்கிவிடுகிறேன்; யாரும் உன்னைப் பார்த்து நகைக்கம்பமாட்டார்கள் என்று சீதாதேவி மறுமொழி பகnraalனரா

சிலர், அனுமன் நாரதரிடம்  யோஜனை கேட்டதாகவும் அவர்தான் வாய் மூலமாக தீயை அணைக்கும் ‘ஐடியா’வை, முன்  வைத்த தாகவும்  விளம்புவர்.  அனுமன் பலத்தை மறந்தது  பற்றியும் வெவ்வேறு ராமாயணம் வெவ்வேறு கதையை வழங்குகிறது கயிலாயத்தில் சேட்டைகள் செய்ததால்  உன் பலத்தை நீ மறந்து போகக்கடவது என்று உமையம்மை சாபம் கொடுத்தாராம். . அனுமன் கெஞ்சிக்  கூத்தாடியவுடன் இராமபிரான் கரம் பட்டவுடன் உன்னுடைய பலம் திரும்பி விடும்  என்று உமா சொன்னாளாம்.  இன்னொரு கதை அனுமன் ரிஷி முனிவர்களின் ஜெப சாதனங்களை உடைத்ததால் அவர்கள் இப்படி சபித்ததாகவும் சொல்லுவர்.

–subham-

Tags- அனுமன் வால்,  சுவையான துணுக்குகள்