அனுமன் வால் பற்றிய சுவையான துணுக்குகள் (Post No.13,668)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,668

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமனின் வால், திரவுபதியின் புடவை போல அற்புதமாக நீண்டு கொண்டே போக்கக்கூடியது என்று ராமாயணங்கள் பாடுகின்றன

ராமாயணங்கள் என்று பன்மையில் சொன்னதற்குக் காரணம் ௩௦௦௦  ராமாயண நூல்கள், கீர்த்தனைகள், பிற நூல் குறிப்புகள் உள்ளன . ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் புதிய தகவல் கிடைக்கிறது .

அனுமனுக்கு ராவணன் சபையில் உட்கார ஆசனம் கொடுக்கப்படவில்லை உடனே அவன் தனது வாலினை  நீளமாக்கி அதைச் சுருட்டி ஆசனம் உண்டாக்கினான் ; இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் பல கோவில்களில் சிற்பமும் ஓவியங்களும் உள்ளன. இந்த அனுமன் இருக்கை விஷயம் பாவார்த்த ராமாயணத்தில் இருக்கிறது.

அனுமனின் வால் பற்றி ஆனந்த ராமாயணம் ஒரு சுவையான செய்தியை அளிக்கிறது . ராவணனின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய ராக்ஷஸ பட்டாளமே வந்தது. ஆனாலும் வால் எரிய மறுத்தது .அனுமனே ஒரு ஐடியா சொன்னான். ராவணனின் பத்து வாய்களால் காற்றினை ஊதினால் தீப்பிடிக்கும்  என்றான் . ராவணன் பூ இவ்வளவுதானா என்று பத்து வாய்களால் ஊதினான் . உடனே தீப்பிடித்தது . ஆனால் அந்த  தீ அங்கே மட்டும் பற்றவில்லை ; ராவணனின் தாடி. மீசை எல்லாம் பரவி அவன் முகத்தைக் கருக்கியது.

இந்தோனேஷிய மொழியில் உள்ள ராமாயணம் , விபீஷணன் விடுத்த எச்சரிக்கையை  எழுத்தில் வடித்துள்ளது . அது என்னவென்றால் இந்தக் குரங்கினைக் கொல்லுங்கள் என்று ராவணன் கட்டளையிட்ட போது, கொல்லாதீர்கள்; குரங்கினால் இலங்கைக்கு ஒரு ஆபத்து வரும் என்று முன்பே சாபம் உள்ளது என்று விபிஷணன் நினைவுபடுத்துகிறான். அதற்குப்  பின்னரே வாலுக்குத் தீ வைக்கும் கட்டளையை ராவணன் பிறப்பிக்கிறான்.

கிருத்திவாஸ ராமாயணம் என்னும் அஸ்ஸாமிய மொழி  ராமாயணம் வால் பற்றிய மிகைப்படுத்திய வருணனையை அளிக்கிறது.  அது ௧௦௦ யோஜனை நீளம் வளர்ந்ததாகவும் அதைத்தூக்க லட்சம் ராக்ஷஸர்கள் வந்ததாகவும் பகர்கிறது .ஆங்கில இலக்கியத்தில் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் நாவல் கும்பகர்ணன் அனுமன் விஷயங்களை கல்லி வரின் மீது ஏற்றிச் சொல்கிறது. இதைத்தான் ஈயடிச்சான் காப்பி என்கிறோம் .

தென் இந்திய மலைவாழ் பழங்குடி மக்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ராக்ஷன் ஒருவன் இரும்ப்புப்பட்டறையில் ஆயு தங்கள் செய்கையில் அனுமன் அங்கு கொதித்துக்கொண்டிருந்த இரும்பினைக் குடிக்கப் போனானாம். ; அப்படியும் அனுமனைத் தடுக்க முடியாததால் அனலாகத்தகித்த இரும்புக்கு குழம்பினை அனுமனின் வாலில் ஊற்றினானாம். அது தீப்பிடிக்கவே அனுமன் இலங்கை முழுதும் தாவிச்சென்று இலங்கையை தீக்கிரையாக்கினானாம். கற்பனைக்கு அளவுதான் உண்டோ !

 இறுதியில் அனுமன் தன்னுடைய வாலில் இருந்த தீயைக் கடலில் முக்கி நடித்ததாக வால்மீகி ரா செப்புகிறது அனால் கிருத்திவாஸ ராமாயணம் மேலும் ஒரு kathaiyaik  கூறுகிறது. தீயை எப்படி அணைப்பது என்று சீதா தேவியை மான் கேட்கவே உனது விசுவரூப வ்வாயில் வைத்தால் aal vaain தீ அவிந்து போகுமே என்றாளாம். அனுமனும் அவ்வாறே செய்ய முகம் karukirraam.  கருகிப்போனதாம் ; எல்லோரும் nakaipparkale  என்று எண்ணி மீண்டும் சீதையிடம் senru அனுமன் kamplaint seyyave  கம்மபாய்ண்ட் பிழை

 செய்யவே கவலைப் படாதே எல்லா குரங்குகளின் mukaththaiyum கறுப்பாக்கிவிடுகிறேன்; யாரும் உன்னைப் பார்த்து நகைக்கம்பமாட்டார்கள் என்று சீதாதேவி மறுமொழி பகnraalனரா

சிலர், அனுமன் நாரதரிடம்  யோஜனை கேட்டதாகவும் அவர்தான் வாய் மூலமாக தீயை அணைக்கும் ‘ஐடியா’வை, முன்  வைத்த தாகவும்  விளம்புவர்.  அனுமன் பலத்தை மறந்தது  பற்றியும் வெவ்வேறு ராமாயணம் வெவ்வேறு கதையை வழங்குகிறது கயிலாயத்தில் சேட்டைகள் செய்ததால்  உன் பலத்தை நீ மறந்து போகக்கடவது என்று உமையம்மை சாபம் கொடுத்தாராம். . அனுமன் கெஞ்சிக்  கூத்தாடியவுடன் இராமபிரான் கரம் பட்டவுடன் உன்னுடைய பலம் திரும்பி விடும்  என்று உமா சொன்னாளாம்.  இன்னொரு கதை அனுமன் ரிஷி முனிவர்களின் ஜெப சாதனங்களை உடைத்ததால் அவர்கள் இப்படி சபித்ததாகவும் சொல்லுவர்.

–subham-

Tags- அனுமன் வால்,  சுவையான துணுக்குகள்

உலகம் முழுதும் ஹனுமான் (Post No.13, 667)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,667

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

தாய்லாந்தில் ராமாயணம்

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் மரகத புத்தர் கோவில் இருக்கிறது.அங்கு  பிரகார சுவர்களில் ராமர், அனுமன் உள்ளனர். தாய் மொழி ராமாயணமான ராமகியன் அடிப்படையில் அவை செதுக்கப்பட்டுள்ளன. இந்த ராமாயணத்தில் பல வினோத விஷயங்கள் காணப்படுகின்றன. சேது பாலம் கட்டும்போது அனுமனுக்கும் என்ஜினீயர் நளனுக்கும் மோதல் ஏற்பட்டதாம். ராமன் அவர்களிடையே சமாதானம் செய்து வைத்தானாம். ராமபிரானை பாதாள லோகத்துக்கு மஹி ராவணன் கடத்திச் சென்றது போல பல புதிய  கதைகள் தாய் ராமாயணத்தில் உண்டு . தனி புஸ்தகமே எழுதும் அளவுக்கு புதுக்கதைகள் உள்ளன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதால் , சுவையூயூட்ட பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அனுமன், நாரதரைச் சந்திக்கும், அனுமன் முகத்தில் அட்டைப் பூச்சி ஒட்டிக்கொள்ளும் சிற்பங்களும் கோவிலில் உள்ளன.

ஜப்பானில் எல்லைத் தெய்வமாக குரங்கு முக தெய்வம் உள்ளது எட்டாம் நூற்றாண்டு முதல் ஷிண்டோ மதக் கோவில்களிலும் இந்த தெய்வம் இருக்கிறது.

திபெத் , லாவோஸ் ஆகிய நாடுகளிலும் ஏழாம் நூற் றா ண்டு முதலே ராமாயணக் கதைகள்  வழக்கில் இருக்கின்றன. மலேசியாவில் தோல் பாவைக்கூத்து ராமாயணம் உள்ளது தென்கிழக்காசிய நாடுகளில் ராமாயணம் இல்லாத இடமே இல்லை. இப்போது கிறிஸ்தவ நாடாகிவிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இரண்டு வகை ராமாயணங்கள் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக சீனாவில் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே ராம  காதை பரவிவிட்டது.

சீனாவில் சன் வோ கிங் sun wukong என்ற அரசருடன் ஹனுமான் தொடர்பு உள்ளது. சிலர் அவர்தான் அனுமன் என்றும் பகர்வர் திபெத்திய புத்த மதம் பின்பற்றும் இடங்களில் அநுமானைக் காணலாம்.

இந்தோனேஷியாவில் சிவ பெருமானின் மகனாக அனுமனை வணங்குகின்றனர் . பதர  குரு என்னும் சிவன் மகனாக அனுமார் வருகிறார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ஹனுமான் டோகா உள்ளது. அரண்மனை இருக்கும் இடத்தில் வாசலுக்கு அருகில் ஒரு அனுமன் சிலை இருக்கிறது.. அதனால் அந்த இடத்துக்கே ஹனுமான் டோகா என்று பெயர்.

இந்துக்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் விஷ்ணு கோவில்களில் அனுமார் வழிபாடும் நடை பெறு கிறது.

கம்போடியாவில் அங்கோர் வாட், , இந்தோனேஷியாவில் ஜாவாவிலுள்ள போரோபுதூர் ஆகிய இடங்களில் இராமாயண சிற்பங்களில் அனுமாரையும் பிற வானரங்களையும் காணலாம். அனுமனின் வீர தீரச்  செயல்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன .

கும்பகோணம் ராமசாமி கோவில் சுவர்களில் ராமாயண சித்திரங்களில் அனுமார் நன்கு வரையப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அனுமார் சிலை !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயரம் கொண்ட அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான அனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை ஆகும்

நியுயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகர் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட அனுமன் சிலையை  நிறுவியுள்ளனர்

2024 ஆகஸ்ட்  15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ விழாவில் ஹெலிகாப்டர் மூலம் சிலைக்கு மலர் தூவி, புனித நீர் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பித்தனர்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் மற்றும் அனுமன் நாமங்களை பக்தியோடு சொல்லி கோஷங்களை எழுப்பினர்.

இந்தியாவிலுள்ள முக்கிய ஹனுமார் கோவில்கள்

தமிழ் நாட்டிலுள்ள முக்கிய அனுமார் சிலைகள்

தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை ஆனது.  ஸ்ரீரங்கம் அருகிலுள்ள  மேலூரில் 37 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் ஆஞ்சநேயருக்கு சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. , கும்பகோணம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி  பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன் கட்டிய கோவில்

 நடிகரும் தீவிர ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவிலை 2021ம் ஆண்டில் கட்டியுள்ளார். நடிகர் அர்ஜுன் கூறுகையில் ” இந்த கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை.ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கும் வேலை 2023ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது.

***

கர்நாடகம் :

பஞ்சமுக அனுமன் சிலை  அனுமன்  குனிகல், தும்கூர் மாவட்டம்; கர்நாடகா     49 மீ ட்டர் ;     161 அடி   உலகின் உயரமான பஞ்சமுக அனுமன் சிலை

***

ஆந்திர பிரதேசம் :

வீர அனுமார் சிலை  அனுமன், விஜயவாடா     ஆந்திரப் பிரதேசம்    41 மீ ட்டர்; 135 அடி   உலகின் இரண்டாவது உயரமான அனுமன் சிலை.

***

மகாராஷ்டிரம் :

நந்துரா அனுமன் சிலை    அனுமன்  நந்துரா, புல்டாணா மாவட்டம், மகாராஷ்டிரம்   32 மீ ட்டர்; 105 அடி  

***

புகழ் பெற்ற ஆஞ்சனேயர் கோவில்கள்

1.ஹனுமங்காதி, அயோத்தி

அயோத்தியில் உள்ள ஹனுமங்காதி கோயில், சரயு நதியின் வலது கரையில் உயரமான மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மக்கள் 76 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு நிறுவப்பட்டுள்ள அனுமன் சிலை 6 அங்குல நீளம் மட்டுமே உள்ளது, இது எப்போதும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

***

2.பாலாஜி ஹனுமான் கோவில், மெஹந்திபூர் (ராஜஸ்தான்)

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மெஹந்திபூர் என்ற இடத்தில், மிகப் பெரிய பாறை இருப்பதாக அறியப்படுகிறது. இது ஸ்ரீ ஹனுமான் என்று நம்பப்படுகிறது. புராணங்களின்படி, சிலையின் காலடியில் ஒரு சிறிய நீர் குளம் உள்ளது, அது ஒருபோதும் வற்றாது என்றும் கூறப்படுகிறது.

***

3.ஹனுமந்தரா, சித்ர  கூடம்

சித்ர  கூடம் அருகே ஹனுமந்திரா என்ற சிறிய இடம் உள்ளது. இங்கு, ஹனுமானின் ஒரு பழைய சிலை பல ஆண்டுகளாக மலைக்கு எதிராக நிற்கிறது மற்றும் ஒரு சிறிய நீர்நிலை இந்த சிலையைத் தொட்டு நதியை சந்திக்கிறது.

***

4.சங்கட மோச்சன் கோவில், காசி/ வாரணாசி  (உ.பி.)

பெனாரஸ் என்பது அனுமனின் பெயருடன் தொடர்புடைய ஒரு பழமையான இடம். சங்கத்மோச்சன் என்று அழைக்கப்படும் இங்குள்ள பிரமாண்டமான ஆலயம் ஹிந்தியில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்தான் ஹனுமான் சாலீஸாவை இயற்றியவர். 

***

5.ஸ்ரீ ஹனுமான் கோவில், ஜாம்நகர் (குஜராத்)

1540 ஆம் ஆண்டில், ஜாம்நகருடன், இந்த ஹனுமான் கோயிலும் நிறுவப்பட்டது. 1964 முதல், ராம துனி இங்கு தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது, அதனால் தான் கின்னஸ் புத்தகத்தில் அதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

***

6.மகாவீர் ஹனுமான் கோவில், பாட்னா (பீகார்)

பாட்னா சந்திப்பிற்கு எதிரே, மகாவீர் கோயில் என்று அழைக்கப்படும் ஹனுமான் கோயில் உள்ளது. வட இந்தியாவில், வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அடுத்தபடியாக, இந்த கோவிலுக்கு அதிக பிரசாதம் கிடைக்கிறது.

***

7.ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி , கும்பகோணம்

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி சன்னதி உள்ளது. ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமியின் முதன்மைக் கடவுள் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி. ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை அவர் தியானித்த இடம் இப்போது பஞ்சமுகி என்று அழைக்கப்படுகிறது, அதில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ பஞ்சமுக அனுமனின் 40 அடி உயர ஒற்றைக்கல் பச்சை கிரானைட் மூர்த்தி தமிழ்நாட்டில் திருவள்ளூரில் நிறுவப்பட்டுள்ளது. பஞ்சமுக ஹனுமான் ஆசிரமம் வெங்கடேச பட்டர் என்ற துறவியால் நிறுவப்பட்டது.

***

8.சலாசர் ஹனுமான் கோவில், சலாசர் (ராஜஸ்தான்)

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், சலாசர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தாடி மற்றும் மீசையுடன் கூடிய அனுமன் சிலை உள்ளது. இந்த அனுமன் சிலை ஒரு விவசாயி வயல்வெளியில் நடந்து சென்றபோது கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது தங்க சிம்மாசனத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

***

9.ஸ்ரீ கஷ்டபஞ்சன ஹனுமான் கோவில், சரங்பூர் (குஜராத்)

குஜராத்தின் சரங்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹனுமான் மந்திர், சாரங்பூர் சுவாமிநாராயண் சம்பிரதாயத்தின் வத்தல் காடியின் கீழ் வருகிறது, மேலும் இது சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது கஸ்டபஞ்சன் (துக்கங்களை நசுக்குபவர்) வடிவில் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனுமன் சிலையை சத்குரு கோபாலானந்த சுவாமி நிறுவினார். சத்குரு கோபாலானந்த ஸ்வாமிகள் அனுமன் சிலையை நிறுவியபோது, அவர் அதை ஒரு தடியால் தொட்டதாகவும், அந்த சிலை உயிர் பெற்று நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கதை இக்கோயிலில் நடைபெறும் நோய் தீர்க்கும் சடங்குக்கான சாசனமாகிவிட்டது. இங்குள்ள அனுமனின் சிலை கைப்பிடி மீசையுடன், ஒரு பெண் அரக்கனை தனது காலடியில் நசுக்கி, பற்களைக் காட்டி, நிற்கும் ஒரு திடமான உருவமாக அமைந்துள்ளது.

***

9.அனுமன் கோவில், அலகாபாத் (உ.பி.)

அலகாபாத் கோட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் அனுமன் சிலை உள்ளது. இந்த அனுமனின் சிலை 20 அடி நீளம் கொண்டது. அலகாபாத்தின் பழைய பெயர் பிரயாகை அல்லது திரிவேணி சங்கமம் ; கங்கை, யமுனை , சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்று சேரும் இடம்; இப்போது சரஸ்வதி இல்லா விடினும் பூமிக்கடியில் ஓடி அது கலப்பதாக ஐதீகம்.

—subham–

tags- உலகம் முழுதும் ஹனுமான், புகழ் பெற்ற, ஆஞ்சனேயர் கோவில்கள்

மஹாநந்தி சிவன் கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 31 (Post.13,666)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,666

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மஹாநந்தி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தில் நந்தியால் அருகில் உள்ளது. நந்தியால் மாவட்டத்திலுள்ள நந்தியால் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த சிவன் கோவில் இயற்கை வனப்புமிக்க சூழ்நிலையில் இருக்கிறது. நல்ல மலை வட்டாரத்தில் மலை அடிவாரத்தில் கோவில் இருப்பது  இயற்கையை ரசிப்போருக்கு விருந்தாக அமைகிறது . நவ நந்துலு என்று ஓன்பது நந்தி ஆலயங்கள் சூழ்ந்த மாவட்டம் என்பதால் நந்தி ஆலயம் = நந்தியால் என்று அழைக்கப்படுகிறது.

சுவாமியின் பெயர் மஹாநந்தீஸ்வரர்.

கோவிலுக்குள் ருத்ர குண்டம் என்ற குளம் இருக்கிறது . ஐந்து நிலத்தடி நீரூற்றுகள் இந்தக் குளத்தை நிரப்புகின்றன. ஸ்படிகம் போல தெளிவாக இருக்கும் தீர்த்தம் ஒரு நந்தியின் வாய் வழியாக தொடர்ந்து வருகிறது. கோவிலைச் சுற்றி விஷ்ணு குண்டம், பிரம்ம குண்டம் என்ற மேலும் இரண்டு இயற்கை நீரூற்றுகள் இருக்கின்றன.

கோவிலுக்குள் உள்ள லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இது லிங்க வடிவில் செதுக்கப்படாத சாளக்கிராமம் ஆகும். இயற்கையில் கிடைத்த இந்த லிங்கத்துக்கு அருகில் உள்ள சந்நிதியில் அன்னை காமேஸ்வரி தரிசனம் தருகிறாள். அவளது திருப்   பத கமலத்திலுள்ள ஸ்ரீ சக்ரத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

கோவிலில் உயர்ந்த கோபுரம் ,கல்யாண மண்டபம் மற்றும் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. 1500 ஆண்டுகளுக்கு முன்னால்  எழுந்த கோவில் இது. ஊத்துங்க போஜன் என்ற மன்னனின் மகன் நந்த இந்தக் கோவிலை எழுப்பிய பின்னர் அவனது வம்சத்தினர் பல அறப்பணிகளைச் செய்தனர். துளுவ வம்சத்தின் முதல் மன்னனான வீர நரசிம்ம ராயன் இந்தக் கோவிலுக்கு பல தானங்களை செய்ததை ஒரு தாமிர சாசனம் செப்புகிறது. முக மண்டபத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுப்பியதை கோவிலில் உள்ள இரும்புத்தூணில் இருக்கும் கல்வெட்டு மூலம் அறிகிறோம். தென்புற வாயிலை1480-ஆம் ஆண்டில் பின்னப்ப செட்டி என்பவர் எழுப்பினார்.

சிற்பச்  சிறப்புகள் – பல்லியும்  பன்றியும்

வராஹ மற்றும் பல்லி சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன . வராஹம் என்னும் பன்றி விஜய நகர மன்னர்களின் சின்னம். கோவிலை ஏழாம் நூற்றாண்டில் நிர்வகித்த சமணர்களின் சின்னம் பல்லி . சாளுக்கிய வம்ச காலை அம்சங்கள் நிறைந்த இடம்.

கோவிலின் 16 கிலோமீட்டர் சுற்றளவில் 9 நந்தி ஆலயங்கள் உள்ளன; பத்ம, நாக, விநாயக, கருட, பிரம்ம, சூர்ய, விஷ்ணு, சோம , சிவ நந்தி ஆலயங்கள்; நந்தியால் என்ற நகரின் பெயரே நந்தி ஆலயம் என்பதன் சுருக்கம் ஆகும். கோவில் ஊற்றுகளிலிருந்து  வரும் நீர் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்ய உதவுகிறது  இங்கு வடநாட்டு போல சிவலிங்கத்தைத்  தொட்டு வழிபட அனுமதி உண்டு; இதுவும் ஒரு சிறப்பு .

மஹா சிவராத்திரி ,சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது  ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்கள் இந்தக் கோவிலையும் தரிசனம் செய்வது வழக்கம்.

கோவில் இயற்கையான சூழ் நிலையில் அமைந்திருப்பதால், பக்தர்களைத் தவிர சுற்றுலாப்பயணிகளும் இங்கே வருவது மற்றோர் சிறப்பு .

–SUBHAM—

TAGS- மஹாநந்தி சிவன் கோவில், ஆந்திரத்தின், 108 புகழ்பெற்ற, கோவில்கள்—Part 31, நந்தியால், 9 நந்தி ஆலயங்கள்

ஐன்ஸ்டீனின் மூளை! – 1 (Post No.13,665)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.665

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐன்ஸ்டீனின் மூளை! – 1 

ச. நாகராஜன் 

உலகின் சிந்தனைப் போக்கையே மாற்றிய சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

அவரது மூளை பற்றிய மர்மம் அவர் இறந்த பிறகு ஆரம்பித்தது. அவரது மூளையை அவரது டாக்டர் ரகசியமாக எடுத்து ஒளித்து வைத்திருந்தார். பின்னால் அது தெரிய வர அதைப் பல துண்டுகளாக்கி பல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அதைத் தந்தார்.

இந்த ஆய்வின மூலம் ஐன்ஸ்டீனின் மேதை பற்றிய மர்மம் விளங்கியது ஒரு புறம் இருக்க, மூளை பற்றிய மர்மத்தின் ஒரு பகுதியும் விளங்கியது! பெர்க்லியில் உள்ள கலிபோர்னியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூளையியல் நிபுணர்  (Neuro Anatomist)  மரியன் டயமண்ட் என்னும் பெண் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதியைத் தன் ஆராய்ச்சிக்காக விரும்பிப் பெற்றார்.

அதை ஆராய்ந்ததில் முக்கிய உண்மை ஒன்று அவரால் அறிய முடிந்தது. தூண்டுதலுக்கு உட்படும்போதெல்லாம் மூளை அதை ஏற்றுச் செயல்படுகிறது என்றும் புதிய சவால்களை ஏற்றுச் செயல்படுகிறது என்றும் புதிய சவால்களை எதிர்கொண்டு தனது ஆற்றலை அதிகப் படுத்திக் கொள்ளும் வலிமை வாய்ந்தது மூளை என்றும் அவர் கண்டுபிடித்தார்.

அறுபதுகளில் மார்க் ரோஸன்வ்ச் என்ற பெர்க்லியைச் சேர்ந்த விஞ்ஞானி, ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைப்பதன் மூலம் அவற்றின் மூளையில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.

இப்படி விசேஷமான சுற்றுப்புற சூழ்நிலை இல்லாத இடங்களில் வாழும் எலிகளை விட நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சியை அடைவதை அவர் கண்டார்.

மூளையைத் தூண்டும் சுற்றுப்புறச் சூழ்நிலை மூளைக்கு அதிக செயல் திறனை அளிக்கிறது!

இந்த வகையில் ஆராய்ச்சியைத் தொடர்ந்த டயமண்ட் 600 நாள் வயதான எலியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். மனிதனுடன் ஒப்பிடுகையில் இது 60 வயதுக்குச் சமமானது. 766 நாள் வாழும் எலியைக் கூட அவர் சோதனைக்கு உட்படுத்தினார். எலிகள் இருக்குமிடத்தில் ஏராளமான பொருள்களை அவர் வைத்தார். இந்தப் பொருள்களால் தூண்டப்பட்ட எலிகளின் மூளை அவை மிக்க வயதானதாக இருந்த போதிலும் கூட அதிக திறனைக் கொண்டதாக மாறியதை அவர் கண்டறிந்தார்.

எலிகள் ஒருபுறம் இருக்க, மனித மூளை பற்றிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஐன்ஸ்டீனின் மூளை பற்றி 1985-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அது கான்ஸாஸில் ஒரு குளிர்பதனப்பெட்டியில் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தது.

டாக்டர் டயமண்டும் அவரது சகாக்களும் இயற்பியலில் ஐன்ஸ்டீன் பிரபலமாவதற்குக் காரணமான மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தங்கள் ஆராய்ச்சிக்காகக் கேட்டுப் பெற்றனர்.

நெர்வ் செல்களுக்கு கை கொடுத்து ஆதரிக்கும் க்ளியர் செல்கள் (ClearCells) ஐன்ஸ்டீனின் மூளையில் அதிகம் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆராய்ச்சி தான் மூளை அமைப்புக்கும் அதன் திறமைக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துக் காட்டும் முதல் ஆராய்ச்சியாகும்.

வயதானாலும் கூட மூளைக்கு ஆற்றல் குறைவு இல்லை என்பது மரியன் டயமண்ட் கண்ட உண்மை.

எலிகளின் மூளைக்கும் ஐன்ஸ்டீனின் மூளைக்கும் முடிச்சுப் போடுவது சற்று அதிகப்படியான செயல் என்று யேல் விரிவுரையாளர் வால்டர் ரிச் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதினாலும் கூட டாக்டர் டயமண்ட் வயதுக்கும் மூளையின் ஆற்றல் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக் கூறுகிறார்.

எந்த வயதிலும் முனைப்போடு கற்க ஆரம்பித்தால் மூளை அதற்கு ஈடு கொடுக்கும்.

ஆனால் பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை நாமே கிழவன் என்று எண்ணி அதன்படி நடக்க ஆரம்பித்தால் மூளையும் கிழடாகவே ஆகி விடுகிறது!

ஆகவே இருபது வயதானாலும் சரி, எழுபது வயதானாலும் சரி மூளை என்று இளமை வாய்ந்தது தான்!

நாம் அதைப் பயன்படுத்தும் விதத்தில் அது திறனைக் காட்டுகிறது!

இளமையின் ஓரத்தில் இருந்து முதுமை வயதைத் தொட்டுப் பார்ப்பவர்கள் இனி கவலை இன்றி மூளைப் பயிற்சியை மேற்கொண்டு அதிக செயல் திறனைப் பெற்று புதியன பயிலலாம்; செயல் திறனைக் கூட்டலாம்!

அது அவர்களுக்கும் நன்மை; சமுதாயத்திற்கும் நன்மை!

இது இறந்த பின்னும் ஐன்ஸ்டீன் தனது மூளை மூலம் உலகிற்குத் தரும் நல்ல செய்தி! 

**

‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 250வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

to be continued………………………….

Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? Tamil Discovery (Post No.13,664)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,664

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Jain saints of Tamil Nadu left us hundreds of poems with didactic messages 1200 years ago. They are collected under the title Naladiyar (naaladiyaar). Since their poems have four lines each it is named Naal= Four, Adi=Line or foot and Aar=honorific suffix.

Jains believed in Karma theory and Rebirth. Like Manu and Tirumular, one of the 18 Siddhas, Jains also predicted future births. Thy found out that the lepers, eunuchs, slaves and beggars were sinners in their previous births.

There has always been a never ending debate on Why some people are born rich and others poor, why some people get cancer and others not even if they smoked through their life, why some good people die sooner than bad people, why some are born handicapped and others are well built, why some people become rich over night and why some leaders and de thrown and executed by bad foreigners.

Hindus, Jains, Sikhs and Buddhists believe in Fate, Karma and Sin and Good merits.

Tamil poems say very interesting thins about Slaves, Beggars, Lepers and Hermaphrodites/eunuchs.

( I have already given a long list of animal births from Manu Smriti and Tirumular; Manikkavasagar and Adi Shakara also said that they were born as human beings after several million births as worms and animals.)

Great Tamil astrologer Kanian Poonkundran of Sangam Age also said that good and bad things happen according to their own Karma (good or bad deeds ); it in  Purananuru verse 192)

Here are Jain Predictions:

1

Punishment of ravishers. Those who, in a former state, without any regard to right, becoming associates of the mean, enjoyed the embraces of beautiful women, and by violence approached their neighbour’s wife, in this state will become eunuchs, and dancing shall earn their bread.

2

Why ignorant men live, while the wise die. Those that know the fruit of varied and profound learning die off, while the unlearned joyously live on. Would you know the cause ? — The unlearned posses within no ‘sap of sapience’; — so death deems then refuse stalks, and takes them not!

3

Why some beg from door to door. 53 Lord of the sea’s cool shore, where amid the wave swans sport, tearing to shreds the Adambu flowers ! When those whose hearts are sore with urgent need stand begging, and wander through the long street, in sight of all, this is the fruit of former deeds.

4

Penalty for imprisoning birds. Their legs in iron bound, as slaves to alien lords they will till the black and barren soil, who snared and kept in cages partridges and quails, that dwell in wilds where beetles hum amid the flowers.

5.

The penalty incurred by crab-eaters. Like fire their palms shall glow, their fingers rot away, who loved in other times on crabs to feed, and broke their joints, what time the guilt of ‘olden deeds’ comes home, and leprosy’s fierce pangs assail

–subham–

Tags-rebirth, slave, leper, eunuch, beggar, Naladiyar, Jain saints, Tamil discovery

நாய் வாலும், நாய்ப் பாலும்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No.13,663)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,663

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

நாய், ஈ, பன்றி, பாம்பு முதலிய விலங்குகள், பூச்சிகளைக் கொண்டு இந்துக்கள் நிறைய பாடம் கற்கிறார்கள்; பாடம் சொல்லித் தருகிறார்கள்.

ராம கிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் பாம்பு பற்றித்தான் அதிக உதாரணங்கள் வருகின்றன.

மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் தன்னை நாய் என்று அறுபது முறைக்கு மேலாகப் பாடியுள்ளார். அவர் மனிதனின் உச்ச  நிலையைத் தொட்டுவிட்டபோதும் நம்மைப் போன்றவர்களை பிரதிநிதித்துவம் காட்டுவதற்கு அப்படிப் பாடியுள்ளார். அவரைப் பார்த்து ஏனைய புலவர்களும், அடியார்களும் கூட  அப்படிப் பாடியுள்ளனர்.

நாயைத்  தமிழர்கள் இழிவான எடுத்துக்கட்டுகளாகவே பயன்படுத்துகின்றனர்  மஹாத்மா காந்தியும் தெருநாய்களை கொன்றுவிடுங்களென்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

One million dogs eaten in South Korea

There are about 1,150 farms, while 1,600 restaurants sell dog meat dishes, according to the agriculture ministry. Activists say as many as 1 million dogs a year are slaughtered in South Korea.19 Jan 2024

நமக்குத்தான் நாய் அசிங்கம்; தென் கொரியர்கள் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள். ஒரு ஆண்டில் பத்து லட்சம் நாய்கள் அவர்களின் வயிற்றுக்குள் போகின்றன; இப்போது புதிய சட்டம் இயற்றி 3 ஆண்டுகளுக்குள் நாய் மாமிசத்தை அறவே கைவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

Starving children in Syria drink dog@s milk.

அருமையான பல உவமைகளை நாலடியார், நீதி வெண்பா

முதலிய நூல்களில் படிக்கலாம்.

மதுரை பல்கலைக்கழகத்தில் மாலை நேரக் கல்லூரியில் நான் இதழியல் JOURNALISM சொல்லிக்கொடுத்தேன்  பத்திரிகைப் படிப்பில் / இதழியலில் முதல் பாடம் எது நியூஸ்? என்பதாகும். மனிதனை நாய் கடித்தால் அது நியூஸ் அல்ல ! ஆனால் மனிதன், நாயைக் கடித்தால் அது பெரிய நியூஸ். சில நேரங்களில் நடிகர் நடிகையரை நாய் கடித்தாலும் நியூஸ்த்தான் ! இது விதி விலக்கு

The phrase “When a dog bites a man, that is not news, because it happens so often. But if a man bites a dog, that is news” is often used in journalism school to illustrate the idea that news is defined as unusual and infrequent events. 

நாலடியார் எழுதிய சமண முனிவர்கள் நாய் நம்மைக் கடிக்கும் அதற்காக யாராவது நாயைக் கடிப்பார்களா என்று கேட்கிறார்கள்.

****

1.நாயைக் கடிப்பவன் உண்டா?

 கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்

பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.– நாலடியார்

     (இ-ள்.) நாய் – , கூர்த்து – கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் – (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் – எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் – அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை – இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் – அயோக்கியர், நீர்த்து அன்றி – குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் – ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் – யோக்கியர், மீட்டு – மறுபடியும், தம் வாயால் – , சொல்பவோ – (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று.

     நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து.

     வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள – இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து – நீரையுடையது, நீர் – சற்குணம், கீழாய – பலவின் பெயர். சொல்ப – பலர்பால் வினைமுற்று; ப – விகுதி. ஒ – எதிர்மறை.

XXXX

 2.பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்

மேவுசிவன் அன்பர்பால் மேவாதே – ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே

தூயவருக் காகுமோ சொல். 63– நீதி வெண்பா

பொருள்

நாயினுடைய  பால் எல்லாம் நாய்க்குத்தான்; தூயவர்களுக்கு அல்ல .அது போல தீயவர்களின் செல்வம் எல்லாம் அடித்து வாங்கும் தீயவர்களுக்கே போய்ச சேரும்; தூயோருக்குக் கிடைக்காது.

****

3.கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலுந் தங்காதே – சன்மமெலும்(பு)

உண்டு சமிக்கும்நாய் ஊண்ஆவின் நெய்யதனை

உண்டு சமிக்குமோ ஓது. 80– நீதி வெண்பா

தோலையும் எலும்பையும் சுவைத்து உண்ணும் நாய்க்கு, பசு நெய்யால் செய்யப்பட இனிப்புகள் பிடிக்குமா? பிடிக்காது. அது போல, தீயோரின் காதில் தர்ம நூல்களிலுள்ள அறிவுரைகள் ஏறாது.

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு &&&& யைத் தின்னத்தான் போகும் என்னும் பழமொழியை இது நினைவு படுத்தும்.

*****

4.குழந்தைகள் = நாய்கள் !!

ஆசையெனும் பாசத்தால் ஆடவர்தஞ் சிந்தைதனை

வீசுமனை யாந்தறியில் வீழ்த்தியே – மாசுபுரி

மாயா மனைவியரா மக்கள் மகவென்னும்

நாயாற் கடிப்பித்தல் நாடு. 88- நீதி வெண்பா

ஆசை எனும் பாசக் கயிற்றால் ஆண்களை  மாயா வேஷப் பெண்கள் இல்வாழ்க்கை எனும் தூணில் கட்டி , குழந்தைகளைப் பெற்று அந்த நாய்களால் கடிக்கச் செய்வதை ஆண்கள் சிந்திப்பார்களாகுக.

*****

5.உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க பசுவின்வால் – பற்றி

நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி

நதிகடத்தல் உண்டோ நவில். 11 —நீதி வெண்பா

பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஆற்று நீரைக் கடக்கலாம். நாயின் வாலைப் பிடித்துக்கொண்டு யாராவது நதியைக் கடப்பார்களா; கடக்கமாட்டார்கள். அது போல , வாழ்க்கை சிறக்க, சுற்றம்  புடைசூழ நல்ல மனைவியுடன் வாழ்வதே சிறந்தது  நாயின் வால் – மனைவி அல்லாத பெண்கள்.

****

 6.வேசியரும் நாயும் வித்நூல் வயித்தயரும்

பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! – பேசிலொரு

காரணந்தான் இன்றியே கண்டவுட னேபகையாம்

காரணந்தான் அப்பிறப்பே காண். 65- நீதி வெண்பா

பொருள்

வேசியர், டாக்டர், , பார்ப்பனர், கோழிகள்  நாய் , சட்ட நூல் ஆகியன காரணமே இல்லாமல் பகைவர் ஆவர். இதற்கு அவர்களது பிறப்பே காரணம்

(இந்தப் பாடலுக்கு பொருள் புரியவில்லை. சிலர் வியாக்கியானம் யூகமே )

—subham—#

tags- நாய், வால் , பால், பிள்ளைகள், நல்ல மனைவி, பசுவின் வால் , ஆற்றைக்கடக்க , நெய்  இனிப்பு , நாலடியார், நீதி வெண்பா 

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! (Post No.13,662)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,662

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

(எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல)

பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மஹாவிஷ்ணு என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசிய சொற்பொழிவினால் அவர் கைது செய்யப்பட்டார். சில பள்ளிக்கூடங்கள் அவரைப் பேச அழைத்ததால்  தலைமை  ஆசிரியைகள் மாற்றப்பட்டுவிட்டனர்.

ஆனால் பாவ புண்ணியம் பற்றியும்  பூர்வ ஜன்ம தீவினைப்பயனால் நோய்கள் வருகின்றன என்பதும் சங்க இலக்கியம் முதல்  பல நூறு தமிழ் நூல்களில் உள்ளன. சம்ஸ்க்ருத நூல்களிலும் அவ்வாறே.

 யார் பன்றியாகப் பிறப்பார்கள் என்று திருமூலர் சொன்னதும், யார் யார் என்ன,என்ன விலங்குளாகப் பிறப்பார்கள் என்று மனு ஸ்ம்ருதி தரும் பட்டியலையும் ஏற்கனவே எனது கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன் .

****

அலிகளாக யார் பிறப்பார்கள் ?

கணியன் பூங்குன்றனார் என்ற ஜோதிடர் புறநானூற்றிலேயே கர்மா தியரியைச் KARMA THEORY சொல்லி, தீதும் நன்றும்  பிறர் தர வாரா; உன்னுடைய கர்மாவுக்குத் தக்கபடியே அமையும் என்று சொல்லிவிட்டார். அவர் பக்கா இந்துஒருவேளை ஹிந்துத்துவாவை தமிழ் நாட்டில் துவக்கிவைத்தவராக இருக்கலாம் . ஏனெனில் இது எல்லாம் மனு நீதி நூலில் உள்ளது

****

புறநானூறு 192

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; KARMA THEORY

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

****

அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட போறவன் அலியாகப் பிறப்பான்!

5. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

     கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை

     வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை

     அலியாகி ஆடிஉண் பார்.

     (இ-ள்.) செம்மை ஒன்று இன்றி – ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் – அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் – திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ – தோளைச் சேரவிரும்பி, உம்மை – முற்பிறப்பில், வலியால் – வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே – பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி – இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் – கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று.

     முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து.

     செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை – உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.

****

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும் !

இந்த விஷயத்தை சமண முனிவர்கள் நாலடியார் என்னும் நூலில் சொல்கிறார்கள்

நாலடியார் பாடல்கள்

123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

     துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்

     அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற

     பழவினை வந்தடைந்தக் கால்.

     (இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று.

     தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.

     “அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்” என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது “உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்” என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.

****

பிச்சைக்காரர்கள் யார் ?

முன் ஜென்மத்தில் பிச்சை இடாதவர்கள் அடுத்த பிறப்பில் பிச்சைக்காரர்களாக பிறக்கிறார்கள்

94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்

     நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்

     கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

     அடாஅ அடுப்பி னவர்.

     (இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் – இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ – உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் – தினந்தோறும், கொடுத்து உண்மின் – யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து – ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் – சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை – முற்பிறப்பில், கொடாதவர் என்பர் – (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று.

     கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம்.

     அடா அடுப்பினவர் – துறவிகள், உம்மை கொடாதவர் – (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி.

     இம்மி – ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் – முற்றும்மை. இயைவ – பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ – இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.

–Subham—

Tags- பிச்சைக்காரர் , அலிகள், குஷ்ட ரோகம், பிறன்மனை, மறுபிறப்பு,  கர்மா,  வினை, நாலடியார், மஹாவிஷ்ணு பேச்சு, நண்டு ,

கேளுங்கள் கொடுக்கப்படும்! (Post No.13,661)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.661

Date uploaded in London – 13 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

கேளுங்கள் கொடுக்கப்படும்! 

ச.நாகராஜன்

 இன்றைய வாழ்க்கை முறையில் எங்கு போனாலும் கேள்விகள்! அம்மா, மகளிடம் கேள்வி! மகள் அப்பாவிடம் கேள்வி! கல்லூரியில் பேராசிரியர்களின் கேள்விகள்! இண்டர்வியூவில் கேள்விகள்!

கேள்விகள் கேட்காமலும் வாழ முடியவில்லை. கேட்பவர்களுக்கு பதில் சொல்லாமலும் வாழ முடியவில்லை. சொல்லப்போனால் நாம் கேட்கும் கேள்விகளிலும் நாம் கூறப் போகும் பதில்களிலும் தான் நமது வெற்றியே அடங்கி இருக்கிறது. இது இன்று ஆரம்பித்த ‘மாடர்ன் டெக்னிக்’ இல்லை.

ரிக் வேத காலத்தில் ரிஷிகள், “ஆஹா! பிரபஞ்சம் எப்படித் தோன்றியது” என்று பிரம்மாண்டமான கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து வேள்வி யுகத்திலேயே கேள்வி யுகம் தொடங்கி விட்டது!

மகாபாரதத்தில் யட்சன் தர்மரைக் கேட்ட கேள்விகளும் அதற்கு தர்மர் கொடுத்த பதில்களும் மாடர்ன் குருமார்கள் உற்று நோக்க வேண்டிய நுட்பமான கேள்வி-பதில் முறை! சிறிய சொற்களால் யட்சன் கேட்ட உயிர் எடுக்கும் அல்லது உயிர் கொடுக்கும் கேள்விகள் அவை.

ஆதி சங்கரர் தனது ப்ர்ச்னோத்தர ரத்ன மாலிகாவில் கொக்கி போன்ற கேள்விகளையும் நறுக்குத் தெறித்தாற் போன்ற பதில்களையும் தந்திருப்பது பிரமிப்பையும் வியப்பையும் தரும்.

இந்த நவீன யுகத்திற்கேற்ப கேள்வி கேட்பதை வாஷிங்டனில் வாழும் வாலெரி என்ற பெண்மணி ஆறு மட்டங்களாக வகுத்து புதிய அணுகுமுறையைத் தருகிறார். இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல அனுமதிக்கும் அவர் தன் பெயரை விட்டு விடக் கூடாது என்று வேண்டுகிறார். (நியாயமான வேண்டுகோள் தானே!)

கேள்விகளின் ஆறு மட்டங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கேள்வி கேட்பதை அலசி ஆராய்வோம்.

1)   எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்; ஆனால் சமமாக அல்ல.

(All Question; but not equally)

சிந்தனை செய்யாமலேயே கேள்வி கேட்பது சுலபம்; ஆனால் கேள்வி கேட்காமல் சிந்தனை செய்ய இயலாது. என்ன, ஏன், எப்படி போன்ற கேள்விகளே சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒரு விஷயத்தைத் தெரியாமல் அறிந்து கொள்ள கேள்வி கேட்பது, அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வி கேட்பது, சில சமயம் மற்றவர்களின் நம்பிக்கைக்குச் சவால் விட்டு கேள்விகளைக் கேட்பது என கேள்விகளைப் பல விதமாகக் கேட்கிறோம். கேள்வி கேட்பதற்கு ஏற்ப விடையும் வருகிறது.

2)   எல்லா கேள்விகளும் சமம் அல்ல!

(All Questions are not equal)

உண்மையான விஷயங்களைத் தரவும், நிலைமையைத் தெளிவு படுத்தவும் கேட்கப்படும் கேள்விகள் அந்த நிமிடம் நாம் அறிய வேண்டுவனவற்றைத் தெளிவாக்குகிறது. ஆனால் எதிர்காலத்தை ஊடுருவி நம்மை விரிவு படுத்திக் கொண்டு,  நாம் அறிய வேண்டுவனவற்றை சிறந்த மேதைகள் கேட்கிறார்கள்.

3)   கேள்வியின் சக்தி

(The Power of Question)

ஒரு கேள்விக்கான இன்றைய பதில் நாளைக்கே பொருத்தமில்லாமல் போகலாம். நமது அறிவின் எல்லையைத் தொட்டுச் சோதிக்கின்றன கேள்விகள். நாம் நினைத்துப் பார்க்க முடிய அளவு சக்தி கேள்விகளுக்கு உண்டு. உதாரணமாக ‘எதிர்கால இயல்’ வல்லுநரான ஜோயல் பார்க்கரின் கேள்வியைப் பார்க்கலாம்.

எந்த ஒன்று செய்வதற்கு முடியாது? செய்ய முடிந்தால் நிலைமையை அடியோடு மாற்றக் கூடியது எது?

சிந்தனையை ஊக்கி விட்டு, கற்க வைத்து, மனதை ஒருமுகமாக ஈடுபடுத்தி வைப்பதே கேள்வியின் சக்தி!

சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிந்தால்.

1)      தேவையான தருணத்தில் அதிக தகவல்களைப் பெற முடியும்.

2)      எது தெரிந்து கொள்ள வேண்டியது, எது தேவையற்றது என்று பாகுபடுத்திப் பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

3)      தகவலைத் தெரிந்து கொண்டு அதைச் சீர் தூக்கிப் பார்த்து உங்களின் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4)      நீங்கள் அறிந்தவற்றின்  மூலம் புதிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

5)      பார்வையை பரந்த அளவில் விரித்துக் கொண்டு புதிய தொடர்புகள், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது ஆறு மட்டங்களில் உள்ள கேள்வி வகைகளைப் பார்ப்போம்.

இப்படிப் பார்க்கும் உத்தி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். உங்களை அருமையாகச் சிந்திக்க வைக்கும். அதிக சக்தியை உங்களுக்குத் தரும்.

இந்தப் புதிய முறை உங்களுக்குச் சரியான வழியைக் காட்டி, உங்களை இயக்கி, உங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும். மறைந்திருக்கும் உங்களின் ஆற்றல் பூரணமாக வெளிப்படுவதால் அதைத் திறமையாக உபயோகப்படுத்தி வெற்றி மேல் வெற்றி பெறலாம்.

1)      முதல் மட்டம் (Reflexive)

நேரடியானது. பதிலுக்குத் தானே இட்டுச் செல்வது. உரையாடலை உடனே முடிக்க வல்லது. இது தான் முதல் வகை. இது தற்போதுள்ள உங்களின் பார்வையை உறுதிப்படுத்துவதாகும். உதாரணத்திற்கு ஒரு கேள்வி:

இந்தப் புதிய வேலை உனக்குப் பிடித்திருக்கிறது, இல்லையா?  இதை அடிப்படை சிந்தனை அல்லது Reflexive  எனலாம்.

2)  இரண்டாவது மட்டம் (Framing)

அடிப்படைத் தகவலை அறியச் செய்வது இந்த வகைக் கேள்விகள்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: எந்த பொஸிஷனுக்கு நீ விண்ணப்பிக்கிறாய்?

இதை உருவாக்குதல் அல்லது Framing  எனலாம்.

3. மூன்றாவது மட்டம் (Planning)

கிடைத்த தகவலை வைத்து தன் கைவசம் உள்ள விஷயத்துடன் இணைத்து தனது வேலையை வெற்றிகரமாக முடிப்பது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: உனது முந்தைய வேலையின் அனுபவம், உனது இந்த வேலைக்கு எப்படி உதவும்?

இதை திட்டமிடல் Planning  எனலாம்.

4)  நான்காவது மட்டம் (Reflective)

கிடைத்த தகவலை ஒரு புதிய வழியில் உபயோகப்படுத்துவது அல்லது ஒரு புதிய நிலைக்குப் பயன்படுத்துவது.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: குறிக்கோளை அடைய உனது தலைமைப் பண்புகளை நீ பயன்படுத்திய சமயத்தை விவரி. அது எப்படி உனக்கு வெற்றியைத் தந்தது? இதை பிரதிபிம்ப சிந்தனா முறை அல்லது Reflective எனலாம்.

5) ஐந்தாவது மட்டம் (Predictive)

பிரச்சினையைத் தீர்க்க படைப்பாற்றலை ஊக்குவித்து, சிந்திப்பது ஐந்தாவது வகை.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உற்பத்திப் பிரிவில் உள்ள தொழிலாளர்களையும் பொருள்களை எடுத்துச் செல்லும் பிரிவில் உள்ளவர்களையும் சேர்த்து விட்டால் அது உன் நிர்வாக உத்தியை எந்த விதத்தில் மாற்றும்?”

இதை முன்கூட்டி உணர்தல் அல்லது Predective எனலாம்.

6)    ஆறாவது மட்டம் (Gap)

வலிமையுடன் கூடிய சிந்தனை மற்றும் கற்பதை ஊக்குவிக்கும்.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி: “உனது வேலையில் முதல் 30 நாட்கள் செய்ய வேண்டிய மூன்று வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதிக மதிப்புடைய எந்த மூன்று செயல்களைத் தேர்ந்தெடுப்பாய்?”

இதை புதிய சிந்தனா முறை அல்லது Gap எனலாம்.

முதலில் ஆறாம் மட்டத்தில் உள்ள கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். பின்னர் அதையும் முதல் மட்டத்தில் உள்ள கேள்விகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிய வரும்!

நீங்கள் கேட்கின்ற கேள்விகளை இனி இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள். அதோடு உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளையும் இந்த ஆறு வகைகளில் பொருத்திப் பாருங்கள்.

கேள்வி கேட்பதில் உள்ள சூட்சுமம் தெரிய வரும்!

கேள்வி கேட்கத் தெரிந்து விட்டால் நீங்கள் தான் இந்த நாட்டு மன்னர்!

ஏனெனில் எப்படிப்பட்டவரையும் உங்களால் சமாளிக்க முடியும்; எப்படிப்பட்ட பதிலையும் உங்களால் அறிவியல் பூர்வமாகக் கொடுக்க முடியும்!

சிரித்துக் கொண்டே இண்டர்வியூக்களை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் அல்லது இண்டர்வியூக்களையே நடத்தலாம்.

பதில் வேண்டுவோருக்கு அனாயாசமாக நீங்கள் சொல்லக் கூடிய மந்திரம் :- “கேளுங்கள், கொடுக்கப்படும்!”

**

 ‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 1-11-2006 அன்று வெளியான கட்டுரை.

Learn Tirumanthiram through Pictures – Part 6 (Post No.13,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,660

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Hare in the Moon

There are many poems in English about the Hare in the Moon or Hare on the Moon. The black spot on the moon has been interpreted as Deer, Old Woman, Hare etc around the world. No one can miss it on a full moon day. Most of the people see only hare in the moon. The oldest reference is coming from the Hinu Scripture Vishnu Sahasranama. It is part of Mahabharata which is at least 5000-year-old. It came from the mouth of Bhisma, the grandest and the most venerable character in the epic. Unless Krishna, both Kauravas and Pandavas saluted him.

Sasa in hare in Sanskrit. Vishu Sahasranama says Lord Vishnu is Sasabindhu (meaning Moon with hare). So moon is worshipped as Vishnu. Throughout 2000 year Sangam Tamil literature we see Moon Worship, particularly crescent moon worship. Crescent moon is decorating the hair of Lord Shiva and many other goddesses.

Earlier to Tirumanthiram of 8th century CE, we find it in Jataka stories of 3rd century BCE and Panchatantra Stories.

*****

Stamp from Japan.

You Can See Lord Only if You Hold Him in Your Heart

“I shall smite the hare in the moon”

Thus saying

A man unsheaths his jewelled sword;

Unto him are they

Who say,

“We the blue-throated Lord will see,

We know the Way;”

Such shall never see,

As in their hearts they hold Him not -Tirumanthiram

 பிறையுள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்

நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1

(புறங்கூறாமை  திருமந்திரம்)

In Tamil Veda Tirukkural and other didactic Tamil works it is described as a black spot. But Tirumular, author of 3000 verse Tiru Manthiram and Naladiyar (naaladiyaar) of Jain saints mentioned the moon and hare.

The hare in the moon is worshipped. Because it is in the bright-beamed moon the very hare in heaven’s lofty fair expanse is worshipped. Though scant their worthiness, men obtain worth who share friendship with those firm as a hill.

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;

குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,

குன்றன்னார் கேண்மை கொளின்.

****

2300 year old Buddhist Jataka Story

The story is from the Jataka Tales which tell the story of the Buddha’s previous lives. In the Śaśa Jataka the hare gives up his body for a staving man. In Jataka Tale 316, a monkey, an otter, a jackal and a rabbit try to find food for beggars on the day of Upwasa. In this story, the rabbit sacrifices himself for God.

—subham—

Tags- Hare in the Moon, Tirumular, Tirumanthiram, Naladiyar , Learn Tirumathiram 6, Jataka Story

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளில் சில ‘ஜோக்’குகளை படிக்கையில் எனக்கு வெடிச் சிரிப்பு வருகிறது . இது நேற்று அல்லது போன வாரம் மட்டும் இல்லை. 1971-ம் ஆண்டில் தினமணி பத்திரிகையில் சப் எடிட்டராக சேர்ந்ததிலிருந்து சிரிக்கிறேன். லண்டனில் இலங்கை கதாசிரியர்கள் எழுதும்  நூல் வெளியீட்டு விழாவில் தலைமை  தாங்கும்போதும் சிரிப்பேன்; ஆனால் வெடிச் சிரிப்பு இல்லை; வெறும் புன்சிரிப்பு மட்டுமே..

துக்ளக் பத்திரிக்கையில் தமிழே இல்லை என்பான் ஒருவன்; இன்னொருவன் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு  ர, ற  வேறுபாடே தெரியாது என்பான்; அவர்கள் கதைக்கும்போது எனக்கு மேலதிக சிரிப்பு வரும்; கூட்டத்தில் இதை எதிர்த்துக் கதைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று கருதி நூலை அங்குரார்ப்பணம் செய்வதை அனுமதிப்பேன்; அடுத்த கூட்டத்தில் வளமைபோல சந்திப்போம்; அப்போது இந்தத் தலைப்பில் (இந்தியத் தமிழா ? இலங்கைத் தமிழா ? எது சிறந்தது ?) என்று  ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யுங்கள். நான் என் பதிலைத் தருகிறேன் என்று சொல்லி தலைமை உரையை  முடித்து விடுவேன். 

மதுரை தினமணி அலுவலகத்தில் 16 ஆண்டுக்  காலம் சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்து பிபிசி என்னை லண்டனுக்கு அழைத்து வந்த பின்னரும் என் ஆராய்ச்சி நிற்கவில்லை. மதுரையில் வாரத்துக்கு ஒரு முறை நைட் ட்யூட்டி வரும்; இரவு 3 மணி வரை உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு நான் ஒருவனே பொ றுப்பு ; கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு டெலிப்ரிண்டரை பார்த்துக்கொண்டே இருப்பேன். பிளாஷ் பிளாஷ் பிளாஷ் பிளாஷ்  என்று டெலெய்ப்ரிண்டர் சப்தம் போட்டாலே ஏதோ முக்கியச் செய்தி வருகிறது என்று பொருள்; உடனே ஓடிச் சென்று அவசரம் அவசரமாக கடைசி செய்தி என்று எழுதிப்போடுவேன் ; விடுதலைப் புலிகள் சென்னை  விமான நிலையத்தில் குண்டு வைத்து 26 பேரைக்கொலை  செய்தபோது தினமணி முதல் பக்கத்தையே அடியோடு மாற்றும் தேவையும் ஏற்பட்டது.

இரவு எட்டு மணியிலிருந்து 3 மணி வரை முக்கியச் செய்தியே வராத போது , திராவிடக் கழக விடுதலை, தி.மு.கவின் முரசொலி பத்திரிக்கைகளை படித்து அதிலுள்ள ஜோக்குகளை அங்குள்ள சகாக்களுடன் பகிர்ந்து கொள்வேன் அப்போதுதான் வெடிச் சிரிப்பு; கருணாநிதியின் இத்யாதி இத்யாதி ஸம்ஸ்க்ருதச் சொற்கள் முதலியவற்றை பத்திரிகையில் UNDERLINE செய்வேன்; அடிக்கோடு போடுவேன் . விடுதலையிலும் முரசொலியிலும் எத்தனை ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்று கணக்குப்போடுவேன் ; நாங்கள் எங்கள் தினமணியை அவர்களுக்கு இலவசமாக அனுப்புவோம். அவர்களும் EXCHANGE COPY    எக்ஸ்சேஞ்  காப்பி என்ற முறையில் எங்களுக்கு முரசொலி, விடுதலை பத்திரிக்கைகளை அனுப்புவார்கள்; ஆபீஸ் பையன் இவைகளை தினமும் கோப்பில் கோர்த்து வைப்பான்.

லண்டனுக்கு என்னை பிபிசி அழைத்துவந்து தமிழோசையில் வேலைக்கு அமர்த்தியபோது இலங்கைவாசிகள், மலேசியாவாசிகள் வருகையில் அவர்களிடமிருந்து வீர கேசரிதமிழ் நேசன் பத்திரிக்கைகளை வாங்கி இதே அடிக்கோடு போடும் வேலையைச் செய்வேன்; லண்டனில் வாரம் தோறும் குமுதம், துக்ளக் முதலிய ன வாங்கி இதே மொழி ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பகுதி நேர வேலை பார்த்த காலத்தில் தினமணி பத்திரிக்கையை வரவழைத்து தினசரி வாசக சாலையைத் தொடங்கினேன். நான் விலை கொடுத்து வாங்கிய பத்திரிக்கைகளையும் படிப்பதற்கு வைப்பேன் இவை அனைத்தும் எனது 50 ஆண்டு மொழி ஆராய்ச்சிக்கு உதவின .

****

ஐயா உங்க சுய புராணம் போதும்/ சப்ஜெக்டுக்கு வாங்க சப்ஜெக்டுக்கு வாங்க ! தலைப்புக்கும் உங்கள் சுய புராணத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. இதோ வந்துவிட்டேன்!

கடந்த சில மாதங்களில் “டமிள் பட்டிரிகைகழில்” இரண்டு துணுக்குகளைப் படித்ததால் இந்தக் கட்டுரை! கிருபானந்த வாரியார், கி.வா.ஜ போன்றோர் இலங்கைத் தமிழ் பற்றி புகழ்ந்த செய்திகள்  அவை; ஒரு கல்யாண வீட்டுக்குப் போனாலோ, விருந்துக்கு அழைத்தாலோ ஏ தாவது இரண்டு நல்லதைச் சொல்லி பாராட்டுவது இந்துக்களின் சம்பிரதாயம் . அதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் சொல்லுவது என்ன வென்றால்……………………..

1.உலகம் முழுதும் உள்ள POPULAR பாப்புலர் தமிழ் நாளேடுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு ஸம்ஸ்க்ருதச் சொற்களை பத்திரிகைகளில் பயன்படுத்துகின்றன சில்லறைப் பயல்கள் நடத்தும் நாளேடுகளைக் கணக்கில் சேர்க்காதீர்கள்;

2.ஒரு மொழியில் பிற மொழிக் கலப்பு இருப்பதைத் தவிர்க்கவே முடியாது.  இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு ஆங்கிலம்; அதில் ஆங்கில சொற்களை விட பிற மொழிச் சொற்களே அதிகம் ! ஆனால் இந்தக் கலப்பு அந்த மொழியின் உருவையே மாற்றி விடக்கூடாது.

3. தமிழில் சர்வகலாசாலை என்று எழுதிவந்ததை இன்று பல்கலைக்கழகம் என்றும், ஜலம் என்று எழுதிவந்ததை இன்று தண்ணீர் என்றும் எழுதுகிறோம்; யாரும் சிரிக்கவில்லை; இவ்வாறு காலேஜ் கல்லூரி ஆனது, கம்பியூட்டர் கணினி ஆனது; வரவேற்கத்தக்கதே; ஆயினும் அத்தனை விஷயங்களையும் தமிழில்தான் எழுத வேண்டும் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றும் ஜெர்மனியை செருமனி என்றும் எழுத வேண்டாம். ஏனெனில் உலகில் தமிழன் ஆங்கிலம் பேசும்போது அதிக தமிழ் ஆக்சென்ட் TAMIL ACCENT வருகிறது. வடக்கத்தி ஆட்களிடம் இது குறைவு.

4. தமிழ் ஒரு குறையுள்ள மொழி. இந்தியாவில் ஸ ஷ ஜ ஹ க்ஷ இல்லாத பழைய மொழி இது ஒன்றுதான்; சம்ஸ்க்ருத மொழி ஒன்றில் மட்டுமே உலகிலுள்ள 95 சதவிகித மொழி உச்சரிப்பைக் கொண்டுவர முடியும். ஜ என்னும் எழுத்து உலகில் எந்தப் பழைய மொழியிலும் இல்லை. ச  என்பது பாரசீகத்தில் இல்லாததால் நம்மை எல்லாம்  ஹிந்து ன்று சொல்லிவிட்டார்கள். தமிழிலும் ச கிடையாதுசம்ஸ்க்ருதத்தில் எ ஒ ழ தவிர எல்லா ஒலிகளும் உண்டு.

அப்படியும் கூட புகழ்பெற்ற HARRYPOTTER ஹாரி/ ஹேரி பாட்டர் உச்சரிப்பை எழுத்தில் கொணர முடியாது. ஆகையால் நம்மவர் வெளி நாடுகளில் பேசும்போது நகைப்புக்குரியவர்கள் ஆகாமல் தடுக்க கம்ப்யூட்டர். மொபைல் போன் போன்றவற்றை அதே மொழியில் புழங்குவது நல்லது.. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களிடையே ஒரு சர்வே நட்த்தினால் நான் சொல்வது சரி என்பதை உணரலாம்.

5.எல்லா பத்திரிக்கைகளின் பெயர்களும் சம்ஸ்க்ருதம் (தின) ஏன் மாற்றவில்லை ?

எல்லா திராவிட கழிசடைகள் பெயரும் சம்ஸ்க்ருதம்; (நிதி) ஏன் மாற்றவில்லை ?

லண்டனில் எனக்கு இலங்கையர்கள், மலேசியர்கள் நண் பர்களாக உள்ளனர்; அவர்களுடன் கதைக்கும்போது நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை காண்கிறேன்.

*****

உங்களுக்கு ஒரு டெஸ்ட் / சோதனை

ஒரே நாளில் வெளியான இலங்கை, இந்திய, மலேசிய பத்திரிக்கைகளை எடுங்கள்; முதல் பக்கச் செய்திகளை மட்டும் பாருங்கள். ஹைலைட்டர் பேனா அல்லது சிவப்பு நிற பேனா மூலம் தமிழ் இல்லாத மொழிச் சொற்களை அடிக்கோடு இடுங்கள் ; எல்லா பாப்புலர் பத்திரிக்கைகளிலும் ஏறத்தாழ ஒரே விகிதத்தில் வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள் .

இன்னும் ஒரு சோதனை

உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பத்து நிமிடம் ரிக்கார்ட் செய்யுங்கள்; அதிசயிக்கத்தக்க அளவுக்கு வெளி மொழிச் சொற்கள் இருப்பதைக்  காண்பீர்கள்!

(நான் எழுதிய இந்தக் கட்டுரைக்கும் அதே கதிதான்! தமிழ் மொழி (???? !!!!!) வாழ்த்து எழுதிய மனோன்மணீய சுந்தரம் பிள்ளை போலத்தான்; அவரைப் பார்த்து சிரிப்பது போல என்னைப் பார்த்தும் சிரிக்கலாம்.)

****

கடைசியாக

நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று ஐந்து  நாட்களுக்கு நால் திசையிலும் பயணம் செய்தேன் ; 5 நாட்களிலும் தினகரன், வீர கேசரி வாங்கிப் படித்தேன்; செய்திகளைவிட நான் ஆகக் கூடிய மேலதிக அவதானம் (கவனம்) செலுத்தியது மொழிப பிரயோகம்தான்./ என் கருத்து சரியே என்பதை அவை காட்டின.

****

முடிவுரை

எல்லா நாளேடுகளும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை, ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகின்றன. அதில் தவறு இல்லை. ஆனால் பாலில் தண்ணீர் கலக்கலாம்; தண்ணீரில் பாலைக் கலக்காதீர்கள் .

இலங்கைத் தமிழ் எந்த விதத்திலும் இந்தியத் தமிழ் மொழியைவிட உயர்ந்தது இல்லை. சில நல்ல பழந் தமிழ்ச் சொற்களை கன்னடம், மலையாளம் , இலங்கை, மலேசியாவில் காணலாம். (எ .கா. அவன், இவன்,உவன் ) அதையே அளவுகோலாகக் கொண்டு அதுதான் சிறந்தது என்று சொல்லுவோரை அரை வேக்காடுகள் என்று கணக்கிற் கொள்ளுங்கள். இதற்கு மேலும் சம்சயம்/ சந்தேகம்/ஐயப்பாடு எழுந்தால் என்னுடன் கதையுங்கள் !

(கதைத்தல்– என்பது வால்மீகி ராமாயணத்தில் அடிக்கடி வரும் ஸம்ஸ்க்ருத வினைச் சொல் என்பது பலருக்கும் தெரியாது !)

******

இன்னும் கொஞ்சம் கதைக்கலாமா ? விளங்குமா ?

லண்டனில் நான் தினமும் பஸ்ஸில் கேட்கும் இலங்கைத் தமிழ் :- எங்க நிக்கற ; இதோ பஸ்ஸில் நிக்கறேன் ; வெம்பிளிலே நிக்கரென் ( ஆனால் பேசும் ஆள் பஸ்ஸில் உட்கார்ந்து இருப்பார்!! நிக்கல்ல !!!)

அவர் அப்பா மோசம் போயிட்டாரு (இறந்து விட்டார்)

நீ வெளிக்கிட்டயா ? இல்ல . வெளிக்கிடல (இந்தியத் தமிழனுக்கு கக்கூஸ் நினைவுக்கு வரும்)

ரொம்ப மணக்குது ? தள்ளிப்போ (நாற்றம் அடிக்குது)

அதான் சொன்னேனே ! குசினி அறைல இருக்கு (போர்ச்சுக்கீசிய சொல்- கிச்சன்- சமையல் அறை)

காலையில் தினமும் பான் (ரொட்டி) சாப்பிடுவேன்

அவர் என்ன பேசிட்டாரு ! (கோபத்தில் என்னை  திட்டிவிட்டார் )

அவர் (சின்னக் குழந்தை) நல்லா கதைக்கிறார் ; பொடியன் ( பெரியவன் ) வரமாட்டான் (குழந்தைகளுக்கு அவர், இவர் போடுவார்கள்; பெரியவனுக்கு அவன், இவன் போடுவார்கள்; இந்தியாவில் அப்படி அல்ல ).

*****

எல்லோரும் கிரியா CREA TAMIL DICTIONARY அகராதி வாங்குங்கள் . சுமார் 17, 000 இலங்கைத் தமிழ் சொற்கள் அதில் உள்ளன. எல்லோரும் சங்கத் தமிழ் சொல்லடைவு வாங்குங்கள் ; சங்க காலத்தில் , 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியத் தமிழன் நல்ல தமிழ் பேசினான் என்பது விளங்கும். (புரியும் என்றால் இந்தியன்; விளங்கும் என்றால்- இலங்கையன் .இயலுமா என்றால் இலங்கையன் .; முடியும் என்றால் இந்தியன்.இம்பெர்சனல் வெர்ப்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது இதையும் கற்பித்தேன் .

நான் 20 ஆண்டுகளுக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது இலங்கைத் தமிழன் கேட்ட முதல் கேள்வி:

நீங்கள் எந்தத் தமிழ் சொல்லிக் கொடுப்பீர்கள் ?

இந்தியத்  தமிழா ? இலங்கைத் தமிழா ?

என் பதில் :


தமிழ் ஒரே தமிழ்தான்; பிரிட்டனில் ஸ்காட்லாந்த்து அயர்லாந்து வேல்ஸ், இங்கிலாந்தில் பேசும் ஆங்கிலத்தில் என்ன வேறு பாடு உண்டோ அது தமிழிலும் உண்டு; எப்படி ஆங்கில எழுத்து ஒரே மாதிரி உலகம் முழுதும் உள்ளதோ அதே போல் தமிழுக்கும் எழுத்து ஒன்றே; கவலைப்படாதீர்கள்; நான் கற்பிப்பது பேச்சுத்  தமிழ் இல் லை; இலக்கியத் தமிழ்; இந்த அ டிப்படையைக்  கற்றால் உலகம் முழுதும் உள்ள தமிழ் உங்களுக்கு விளங்கும் !

–சுபம் —

 இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், கதைக்கிறேன்,